Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8742
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவு உமா மகேஸ்வரனிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு உமா மகேஸ்வரனும் ஊர்மிளாவும் பாலியல் ரீதியில் தொடர்பில் உள்ளார்கள் என்று தோழர்கள் தன்னிடம் கூறியபோது பிரபாகரனால் அதனை நம்பமுடியவில்லை. ஆனால், அச்செய்தி உண்மைதான் என்று அறிந்தபோது அவர் மிகவும் கோபமடைந்தார். இயக்கத்தின் தலைவரான ஒருவரே தான் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு கொள்கையினை மீறுவதென்பது பிரபாகரனினால் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு குற்றமாகக் கருதப்பட்டது. உமாவை இயக்கத்திற்குள் கொண்டுவந்து, அவரையே அரசியல்த் தலைவராக உருவாக்குவதில் பிரபாகரன் ஆற்றிய பங்கு அளப்பரியது. பிரபாகரனுக்கெதிரான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட இந்த நகர்வு காரணமாக அமைந்திருந்தது. வெளியார் ஒருவரை இயக்கத்திற்குள் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், அவரையே தலைவராகவும் அமர்த்தியது இயக்கத்திற்குள் இருந்த பல மூத்த உறுப்பினர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. அது பிரபாகரனின் இரண்டாவது பிழை என்று அவர்கள் முணுமுணுத்து வந்திருந்தார்கள். முதலாவது தவறு எதுவென்றால், செட்டி தனபாலசிங்கத்தை புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவராக பிரபாகரன் நியமித்திருந்தது அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. செட்டி வங்கிக்கொள்ளைப் பணத்தைச் சுருட்டிக்கொண்டதுடன், இறுதியில் புலிகள் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கும் உளவாளியாகவும் மாறிப்போனார். செயலில் இறங்கும் போராளிகளை எப்போதுமே மதித்து வந்த பிரபாகரன், செட்டியின் செயல்த்திறனிற்காக அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தார். உமா மகேஸ்வரன் விடுதலைப் போராட்டம் குறித்து முற்றான முற்றான அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையினாலும், அமிர்தலிங்கம் உமாவையும் இயக்கத்திற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டிருந்தமையினாலும் பிராபாகரன் உமாவை இயக்கத்தினுள் சேர்த்திருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவான தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையின் காரியாதரிசியாக இயங்கிவந்த உமா, அமைப்பு வேலைகளில் மிகவும் ஈடுபாட்டுடன் உழைத்து வந்தார். உமா சர்வதேச விடுதலைப் போராட்டங்கள் பற்றி அதிகளவு விடயங்களைத் தெரிந்து வைத்திருந்ததாலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கியதாலும், தன்னை விடவும் 10 வயது அதிகமாக இருந்ததனாலும் பிரபாகரன் அவரை தலைவராக பதவியில் அமர்த்தினார். தன்னைக் காட்டிலும் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக உமா காணப்பட்டதும், அவரே தலைவராக இருக்கத் தகுதியானவர் என்று பிரபாகரன் முடிவெடுத்தமைக்கு இன்னுமொரு காரணம். . 1978 ஆம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டம் ஒன்றிற்கு உமாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த பிரபாகரன், அங்கிருந்தவர்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்த பின்னர், அவரைத் தலைவராக பரிந்துரை செய்வதாகக் கூறினார். உமா கொண்டிருந்த சர்வதேசத் தொடர்புகள் மற்றும் அவரது தொடர்பாடல் ஆற்றல் ஆகியவற்றை இயக்கம் உபயோகித்துக்கொள்ள முடியும் என்று பிரபாகரன் அங்கிருந்தவர்களிடம் கூறினார். புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை தான் முற்றாகக் கடைப்பிடிக்கப்போவதாக உறுதியளித்த உமா, குடும்ப வாழ்க்கை, பாலியலுறவு, மாற்றியக்கங்களுடன் சேர்தல் அல்லது புதிதாக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தல், மதுபானம் புகைப்பிடித்தல் ஆகியவை உட்பட இன்னும் பல விடயங்களை முற்றாகத் தவிர்த்து இலட்சியத்திற்காக உழைப்பேன் என்று அவர் உறுதியளித்தார். உமாவிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு உறுதிப்படுத்தப்பட்டபோது, இயக்கத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுமாறு உமாவிடம் கூறினார் பிரபாகரன். "நீங்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறீர்கள். நீங்களே இயக்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு விடயத்தைச் செய்தீர்களென்றால், மற்றையவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள். நான் கட்டி வளர்க்கும் இயக்கத்தை நீங்கள் அழிக்க நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். ஆகவே உடனடியாக விலகிச் செல்லுங்கள்" என்று உமாவைப் பார்த்து கர்ஜித்தார் பிரபாகரன். ஆனால், உமா மாறவில்லை. தனது எதிரிகள் தனக்கெதிராக சதித்திட்டம் ஒன்றை நடத்திவருவதாகவும், தான் எந்தத் தவறும் இழைக்காததால் , தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப்போவதில்லை என்றும் பிடிவாதம் பிடித்தார். உமாவின் காரணங்களை பிரபாகரன் ஏற்கும் நிலையில் இல்லை. யாழ்க்குடா நாட்டில் வீரதுங்கவின் அட்டூழியங்கள் பெருகிவந்த நிலையில், இயக்கத்தின் மத்திய குழு 1979 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூடியது. அங்கு கூடிய மத்தியகுழு உமாவிடம் இரண்டு தெரிவுகளை முன்வைத்தது, 1. திருமணம் முடியுங்கள் அல்லது 2. தலைமைப் பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்யுங்கள். என்பவையே அவையிரண்டும். ஆனால், உமா இதில் எதனையும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இதனால், உமாவை இயக்கத்திலிருந்து விலக்கும் முடிவினை மத்திய குழு எடுத்தது. மத்திய குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களான பரா, நாகராஜா மற்றும் ஐய்யர் ஆகியோர் உமாவை விலக்கும் முடிவிற்கு ஆதரவாக நின்றார்கள். இயக்கத்தின் தலைவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இயங்கவேண்டும் எனும் பிரபாகரனின் கொள்கையினை அவர்கள் முற்றாக ஆமோதித்தார்கள். "தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது எள்ளளவு சந்தேகம் வரினும், அவர் உடனடியாக விலக வேண்டும்" என்று நாகராஜா வாதாடினார். 1984 ஆம் ஆண்டு, பிரபாகரன் முதன்முதலாக வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்குப் பேட்டியளித்திருந்தார். அந்தச் செய்தியாளரான அனித்தா பிரதாப்பிடம் பேசும்போது "ஒரு புரட்சிகர அமைப்பின் தலைவராக இருப்பவர் தனது அமைப்பின் ஒழுக்கத்திற்கு தன்னை முற்றாக அர்ப்பணித்தவராக இருக்கவேண்டும். தலைவரே அடிப்படை விதிகளையும், கொள்கைகளையும் மீறிச் செயற்படும்போது , இயக்கத்திற்குள் குழப்பகரமான சூழ்நிலை தோன்றுவதோடு, ஈற்றில் அதுவே இயக்கத்தை முற்றாக அழித்து விடும்" என்று கூறினார். மேலும், இயக்கத்திற்குள் உருவான பிரச்சினையினை, தான் புலிகள் இயக்கத்திற்கும், உமா மகேஸ்வரன் எனும் தனிநபருக்கும் இடையிலான வேறுப்பாடக் கருதுவதாகக் கூறினார். "இந்தப் பிரச்சினைக்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது. உமா மகேஸ்வரனே இந்த பிரச்சினையை உருவாக்கினார். இயக்கத்தின் ஒழுக்கக் கோட்ப்பாட்டினை மீறியவர் உமா மகேஸ்வரனே. ஆகவே, ஒழுக்காற்று நடவடிக்கையாக அவரை மத்தியகுழுவினூடாக இயக்கத்திலிருந்து வெளியேற்றினோம். இந்த இயக்கத்தை ஆரம்பித்தவன் என்கிற வகையிலும், உமா மகேஸ்வரனை இயக்கத்திற்குள் கொண்டுவந்தவன் என்கிற வகையிலும், மத்திய குழு எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துவதைத்தவிர எனக்கு வேறு எந்த வழிகளும் இருக்கவில்லை" என்றும் கூறினார் பிரபாகரன். அனித்தா பிரதாப் மேலும், புலிகளின் லண்டன் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, உமா பற்றிய குற்றச்சாட்டுக்கள பற்றி விளக்கமளித்தார் பிரபாகரன். லண்டனில் வசித்துவந்த புலிகளின் உறுப்பினரான கிருஷ்ணனிடம் பேசும்போது, உமா ஈழம் எனும் இலட்சியத்திற்கு தகுதியற்றவர் என்று கூறினார். "ஒழுக்கமற்ற ஒரு தலைவனால், மக்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது" என்று அவர் கூறினார். இதனைக் கேட்டுவிட்டு பின்னர் பேசிய கிருஷ்ணன், "பிரச்சினையினைப்பேசித் தீர்க்கலாம், நான் அன்டன் ராஜாவை உவ்விடம் அனுப்புகிறேன்" என்று பிரபாகரனிடம் கூறியிருக்கிறார். உமா பதவி விலகுவதற்குப் பிடிவாதமாக மறுத்துக்கொண்டே இருந்தார். இது நீண்ட உள் விவாதங்களுக்கு வித்திட்டது. சில மூத்த உறுப்பினர்கள் பிரபாகரன் தொடர்ந்தும் உமாவை வற்புறுத்தத் தேவையில்லை என்று எண்ணம் கொண்டிருந்தனர். சூழ்நிலைகளின் தாக்கத்தால் உமா தவறு செய்திருப்பதால், அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் எண்ணத் தலைப்பட்டனர். ஆனால், பிரபாகரன் அசரவில்லை. "ஒழுக்கம் என்று வரும்போது விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை. எல்லோரும் இயக்க விதிகளை முழுமையாகப் பின்பற்றியே ஆகவேண்டும்" என்று தனது முடிவில் உறுதியாக நின்றார் பிரபாகரன். கிருஷ்ணன் இந்தப் பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வொன்றை எட்டவே விரும்பினார். கிருஷ்ணனும், அன்டன் ராஜாவும் அப்போதுதான் மூன்றாம் உலக விடுதலைப் போராட்ட அமைப்புக்களிடம் தொடர்பினை ஏற்படுத்தி புலிகள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் விழிப்புணர்வினை உருவாக்கும் நடவடிக்கைகளில் லண்டனில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். உமா மகேஸ்வரனையே புலிகளின் தலைவராகவும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர். "நாங்கள் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் போய், எமது தலைவர் இயக்க விதிகளுக்கு முரணாக பாலியல் உறவில் ஈடுபட்டதனால் அவரை விலக்கிவிட்டோம் என்று எம்மால் சொல்ல முடியாது" என்று கிருஷ்ணன் பிரபாகரனிடம் கெஞ்சினார். தாம் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் குறித்து சென்னையில் பிரபாகரனைச் சந்தித்தபோது அன்டன் ராஜா விளங்கப்படுத்தினார். "இது ஒரு பெரிய பிரச்சினையா?" என்று பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார் அன்டன் ராஜா. இதைக் கேட்டதும் கோபமடைந்த பிரபாகரன், "லண்டனில் வாழும் உங்கள் போன்ற ஆட்களுக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இங்கு, எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சினைதான். இயக்கத்தில் சேரும் தமது பெண்பிள்ளைகளை தலைவர்கள் பாலியல் வன்புணர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்தால், எந்தப் பெற்றோராவது தமது பெண்பிள்ளைகளை இயக்கத்திற்கு அனுப்புவார்களா?" என்று ஆவேசத்துடன் அன்டன் ராஜாவைப் பார்த்துக் கேட்டார். ஊர்மிளா என்று அறியப்பட்ட கந்தையா ஊர்மிளாதேவியே புலிகள் இயக்கத்தின் முதலாவது பெண்போராளியாகும். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையில் ஈடுபாட்டுடன் பணிபுரிந்து வந்த ஊர்மிளா, உமாவுடன் நெருங்கிப் பழகிவந்தார். உமாவின் பரிந்துரையின் பேரிலேயே ஊர்மிளா புலிகள் இயக்கத்திற்குள் இணைத்துக்கொள்ளப்பட்டார். அன்டன் ராஜாவை பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னிடம் பேசிய அவர், "பிரபாகரன் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை, நான் லண்டனுக்கே திரும்பிச் சென்றுவிட்டேன்" என்று கூறியிருந்தார். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினையினை தீர்க்கும் தனது முயற்சியை லண்டன் அலுவலகம் கைவிட விரும்பவில்லை. ஆகவே, இன்னொருமுறை முயன்று பார்க்கலாம் என்று கிருஷ்ணன் எண்ணினார். இம்முறை, தன்னுடன் மத்தியஸ்த்தத்திற்கு இன்னுமொருவரையும் அழைத்துச் சென்றார் கிருஷ்ணன். அவர்தான் அன்டன் பாலசிங்கம். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத ரீதியிலான போராட்ட முன்னெடுப்பினை நியாயப்படுத்தி பிரசுரங்களையும், புத்தகங்களையும் பாலசிங்கம் வெளியிட்டு வந்ததனால் பிரபாகரனால் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஆனால், அந்தக் கட்டத்தில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தது. மத்தியகுழுவினரால தன்னை விலக்குவதாக எடுக்கப்பட்ட முடிவினை முற்றாக நிராகரித்திருந்த உமா, பின்னர் தானே புலிகள் இயக்கத்தின் தலைவர் என்றும், தனது இயக்கமே உண்மையான புலிகள் இயக்கம் என்றும் உரிமை கோரத் தொடங்கினார். உமாவின் விசுவாசிகளில் ஒருவரான சுந்தரம் என்று அழைக்கப்பட்ட எஸ் சிவசண்முகமூர்த்தி, புலிகளால் சேமித்துவைக்கப்பட்ட ஆயுதங்களைத் திருடி வேறிடங்களுக்கு மாற்றத் தொடங்கியபோது, உமாவின் உரிமைகோரலுக்கான காரணம் வெளித்தெரியவந்தது. இது பிரபாகரனை மிகவும் சினங்கொள்ள வைத்திருந்தது. உடனே செயலில் இறங்கிய பிரபாகரன் ஏனைய மறைவிடங்களிலிருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்தியதுடன், அவை உமாவின் கைகளுக்குக் கிடைப்பதையும் தவிர்த்துவிட்டார். 1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில், புலிகள் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன், பாலசிங்கத்தையும், அவரது இரண்டாவது மனைவியான அவுஸ்த்திரேலியப் பெண்மணி அடேலையும் அழைத்துக்கொண்டு மும்பாயூடாக சென்னைக்குப் பயணமானார் கிருஷ்ணன். அக்காலத்தில் தமிழ்நாட்டில் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தது. பாலசிங்கம் உள்ளே நுழைவதை மீனாம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகள் அதிகம் விரும்பியிருக்கவில்லை. அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த பேபி சுப்பிரமணியம் தூரத்தில், மக்களுடன் மக்களாக நின்று நடப்பதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு நின்றார். பின்னர் ஒருவாறு சுங்க அலுவல்களை முடித்துக்கொண்டு கிருஷ்ணனுன், பாலசிங்கம் தம்பதிகளும் வாடகை வண்டியொன்றில் ஏறி அவர்களுக்கென்று முன்பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி ஒன்றிற்குச் சென்றனர். மிகவும் அழுக்காக, துப்பரவின்றி, ஒழுகும் மலசலகூடத்தைக் கொண்டிருந்த அந்தச் சிறிய அறையில் பாலசிங்கம் தம்பதிகளைத் தங்கவைத்துவிட்டு கிருஷ்ணன் அவசர அவசரமாகப் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றார்.
  2. இன்னொரு சம்பவம். அதுகூட நாய் ஒன்றினால் ஏற்பட்டது. சுவாரசியமில்லை, மிகவும் வேதனையானது. யாழில் எத்தனை பேருக்கு கோண்டாவில் பலாலி வீதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் திசையில், டிப்போச் சந்திக்கு சற்று முன்னர் அமைந்திருந்த முருகேசுவின் தேத்தண்ணிக்கடை தெரியும்? தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தேநீர்க்கடை அது. கடையின் பின்னால் சமையல்க் கூடமும், விறகுகள் கொத்தும் இடமும் அமைக்கப்பட்டிருந்தது. கடையின் பின்பக்க வாயில் எப்போதுமே திறந்திருக்கும். அந்தக் கடைக்காரர்கள் இரு நாய்களை வளர்த்தார்கள். அவை குரைப்பது மிகவும் குறைவு. இராசரத்திணம் ஒழுங்கையால் நடந்துப்போகும் எவரையும் சத்தமின்றி பின்னால் வந்து கடித்துவிடும். அதிலும், பெண் நாய் மிகவும் ஆக்ரோஷமானது. பலமுறை சைக்கிளில் செல்லும்போது எம்மைத் துரத்தியிருக்கின்றன. இந்த நாய்களால் கடிபட்ட பலர் முறையிட்டும் கடைக்காரர் கண்டுகொள்ளவில்லை. எனதுட் தாயார் கோண்டாவில் டிப்போவில் தொடர்பாடல் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர். வீட்டிலிருந்து வேலைக்கு நடந்தே போவார். 1985 ஆம் ஆண்டு, கார்த்திகை இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் மாலை, வேலை முடிந்து வந்துகொண்டிருந்தார். கடையின் பின்புற வாயிற்கதவு திறந்திருக்க, சத்தமின்றி எனது தாயாரின் பின்னால் வந்த நாய்களில் ஒன்று அவரின் முழங்காலிற்கும், பாதத்திற்கும் இடையே ஒரு பகுதியை மிகவும் ஆளமாகக் கவ்விக் கொண்டது. கீழே விழுந்து உதவிகேட்டு எனது தாயார் அழுத சத்தம்கேட்டு கடையிலிருந்தவர்கள் ஓடிவந்து நாயைக் கலைத்துவிட்டு, அவரைத் தூக்கிவிட்டிருக்கிறார்கள். காயத்திற்குக் கட்டுப்போடுக்கொண்டே அவர் டிப்போ வைத்திய அதிகாரியிடம் சென்றிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த அவைத்திய அதிகாரி நாய்க்கடி ஊசியைப் போட மறுத்துவிட்டார். இது நடந்து சரியாக இரு வாரங்களில் எனது தாயார் காலமானார். இடையே பஸ்ஸில் இருந்து தவறி கீழே விழுந்து பஸ்ஸின் படித் தகடு வெட்டிய சம்பவமும் நடந்தது. இன்றுவரை அவர் இறந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை. அவர் இரு நாட்கள் காய்ச்சல் அதிகமாகி படுத்த படுக்கையாகவிருந்தது மட்டுமே ஞாபகமிருக்கிறது.
  3. இந்த கட்டாக்காலி நாய்கள் தொடர்பாக எனக்கும் ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. 1988 ஆம் ஆண்டென்று நினைக்கிறேன். கோண்டாவில் டிப்போவடி வீடு இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டு, தெல்லிப்பழையில் அப்பம்மா வீட்டில் தங்கிருந்தோம். பாடசாலைகள் ஆரம்பித்திருந்த காலம். சித்திரை முதலாம் தவணை பரீட்சைகள் நடக்கத் தொடங்கியிருந்தன. தெல்லிப்பழை, வீமன்காமத்திலிருந்து நானும் தம்பியும் ஒரு சைக்கிளில் யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்குப் போய்வருவது நடந்தது. கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் ஒரு வழிப்பயணம். யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியாலேயே எமது பயணம் நடக்கும். ஒருநாள் காலை பாடசாலை நோக்கி நானும் தம்பியும் போய்க்கொண்டிருக்கும்போது, சுன்னாகம் சந்தியை அடைவதற்குச் சற்று முன், வீதியின் வலது பக்கத்தில் இருந்த வெதுப்பகம் ஒன்றில் பணிபுரிபவர் பழைய பாண்கள் சிலவற்றை வீதியில் நின்ற நாய்களுக்குப் போட்டுக்கொண்டு நின்றார். நாய்களுக்குள் பழைய பாணுக்கு கடிபாடு தொடங்கியது. பாணை முதலில் கவ்விக்கொண்ட நாய், எதுவுமே யோசிக்காது திடீரென்று வீதியின் மற்றைய பக்கத்திற்கு பாய்ந்து ஓடத் தொடங்கியது. நாம் சைக்கிளில் வேகமாக போய்க்கொண்டிருந்த கணம் அது. அந்த நாயும் சரியாக எமது சைக்கிளின் முன்சில்லுக்குள் வந்து விழ, தம்பி சைக்கிளில் இருந்து எகிறி சில மீட்டர்கள் வீதியின் நடுவில் சென்று விழ, எனது கால் சைக்கிள் குறுக்குச் சட்டத்தில் மாட்டுப்பட, சைக்கிளோடு சேர்ந்து நானும் வீதியில் இழுபட்டுக்கொண்டு சில மீட்டர்கள் சென்றேன். தெய்வாதீனமாக வீதியில் வந்த ஏதோவொரு வாகனம் சட்டென்று நின்றுவிட்டதால், நாம் இருவரும் தப்பித்தோம். அதே வெதுப்பகத்திலிருந்த வயோதிபர் ஒருவர் இரத்தம் வழிந்துகொண்டிருந்த எனது இரு முழங்கால்களையும் சுத்தம் செய்து மண்ணெய்யினால் கழுவிவிட்டார். கையில் காசில்லை, வேறு வழியின்றி அந்த வலியுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தோம். பாடசாலையில் கண்டவர்கள் எமது குருதியும், சேறும் தோய்ந்த மேற்சட்டைகளையும், இரத்தம் வழிந்துகொண்டிருந்த கால்களையும் கண்ணுற்றபோது பயந்துவிட்டார்கள். இதன்பின்னர் நடந்தவை எனது வாழ்க்கையை திருப்பிப் போட்டுவிட்ட சில நிகழ்வுகள். அவை வேண்டாம்.
  4. உச்சநீதிமன்றத்தைப் பணியவைத்த ஜெயார் இவையெல்லாவற்றைக் காட்டிலும் உச்சநீதிமன்றத்துடன் ஜெயார் நடந்துகொண்ட விதமே மிகவும் மோசமாகக் காணப்பட்டது. 1978 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜெயார் அமைத்ததிலிருந்தே இந்தப் பிணக்கு உருவானது. இந்த ஆணைக்குழு சிறிமாவையும், அவரது அமைச்சரவையில் முக்கியவராகக் கருதப்பட்ட பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவையும் விசாரிக்கவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் சட்டபூர்வமான தன்மையினைக் கேள்விகேட்டு சிறிமாவோ உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்த அதேநேரம், பீலிக்ஸ் பண்டாரநாயக்கவோ இந்த ஆணைக்குழுவிற்கும் அதன் நீதிபதிகளுக்கும் எதிரான அதிகார வினாப் பேராணைகளை தாக்கல் செய்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் நீதிபதிகளில் ஒருவரான அல்விஸ், ஊழலில் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்ட கொழும்பு நகர மேயரான ஏ எச் எம் பெளசியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டார் என்பதை முன்வைத்து, விசாரணைக் குழுவில் இடம்பெற அல்விஸுக்குத் தகமை கிடையாதென்று வாதிட்டிருந்தார். அல்விஸின் மகனிடமிருந்து பெளசியின் மகளுக்கு கொள்வனவுசெய்யப்பட்ட நிலத்திற்கு பெளசி பணம் செலுத்தியது மற்றும் அல்விஸின் மகனின் வீடொன்றில் வாடகைக்கு பெளசியின் மனைவி அமர்ந்துகொண்டது ஆகிய இரு நடவடிக்கைகளிலும் அல்விஸே பெளசியின் மகன் சார்பில் சட்டத்தரணியாகச் செயலாற்றியிருந்தார். ஏ எச் எம் பெளசி பீலிக்ஸின் வழக்கினை விசாரித்த பிரதம நீதியரசர்களான சமரகோன், விமலரட்ண மற்றும் கொலின் தொம்மே ஆகியோர் அளித்த தீர்ப்பின்படி ஜெயாரின் விசேட ஆணைக்குழுவின் நீதிபதி அல்விஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒரு நீதிபதியாகத் தொழிற்பட தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயார், அல்விஸை நீதியரசர்கள் விமலரட்னணைக்கும், கொலின் தொம்மேக்கும் எதிராக, "தன்மீதான தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கெதிராகத் தீர்ப்பளித்தார்கள்" என்கிற குற்றச்சாட்டுடன் ஜனாதிபதியான தன்னிடம் முறைப்பாட்டு மனுவொன்றினைத் தருமாறு கூறினார். தனது எடுபிடியான காமிணி திசாநாயக்காவைக் கொண்டு பாரளுமன்றத்தில் அல்விஸின் மனுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்மானம் ஒன்றையும் ஜெயார் கொண்டுவந்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பேசும்போது, தான் நீதித்துறைக்கும் சட்டங்களுக்கும் மேலானவர் என்றும், தான் விரும்பியதைச் செய்யும் அதிகாரம் தனக்கிருப்பதாகவும் பேசினார். ஈவிரக்கமற்ற கொலைகாரன் என்று அறியப்பட்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரேமதாச உடுகம்பொல தான் கூறியதுபோலவே செய்யவும் தலைப்பட்டார் ஜெயார். 1982 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுவந்த வேளையில் மதகுருக்களின் குரல் எனும் பெயரில் சில பெளத்த பிக்குகளும், கத்தோலிக்க குருக்களும் எதிர்க்கட்சியின் வேட்பாளரான ஹெக்டர் கொப்பேக்கடுவவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைப்பின் தலைவராக தெரமிடிபொல ரட்னசார தேரோ எனும் பிக்கு கடமையாற்றினார். இந்த அமைப்பால் வெளியிடவென அச்சடித்து வைக்கப்பட்டிருந்த 20,000 துண்டுப்பிரசுரங்களையும், அச்சகத்தையும் இழுத்து மூடினார் பொலீஸ் அத்தியட்சகர் உடுகம்பொல. இதற்கெதிராக உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்த ரட்னசார தேரர், பேச்சுச் சுதந்திரத்தின் மீதான தலையீடு என்று தனது அமைப்பின் துண்டுப்பிரசுரங்கள் பொலீஸாரால் கையகப்படுத்தப்பட்டதைக் குற்றஞ்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடுகம்பொல செயல்ப்பட்ட விதம் பேச்சுச் சுதந்திரத்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு நட்ட ஈடாக 10,000 ரூபாய்களையும், வழக்கிற்கான செலவுகளையும் உடுகம்பொல செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செயற்பட்ட ஜெயார், உடுகம்பொலவை சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வு கொடுத்ததுடன், வழக்கின் இழ்ப்பீட்டுச் செலவுகளை அரசே வழங்கும் என்றும் கூறினார். விவியேன் குணவர்த்தன ஜெயாரின் இந்த செயல், அரசுக்குச் சார்பாக தாம் எதைச் செய்தாலும், அரசு தமக்குப்பின்னால் நிற்கும் எனும் தைரியத்தைப் பொலீஸாருக்குக் கொடுத்திருந்தது. இதன்படி, சரியாக ஒரு வாரத்திற்குப் பின்னர் கொள்ளுப்பிட்டிய பொலீஸார் சட்டத்தை தம் கைகளில் எடுத்துச் செயற்பட்டிருந்தனர். 1982 ஆம் ஆண்டு, பங்குனி 8 ஆம் நாள், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு லங்கா சம சமாஜக் கட்சியின் உறுப்பினர் விவியேன் குணவர்த்தன தலைமையிலான பெண்கள் குழுவினர் கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அமெரிக்க தூதுவராலயத்திற்கு மனுவொன்றைனைக் கையளிக்கச் சென்றிருந்தனர். அது ஒரு அமைதியான ஊர்வலமாகத்தான் இடம்பெற்றிருந்தது. தமது மனுவினை அமெரிக்க உயர்ஸ்த்தானிகரின் பிரதிநிதியிடம் கையளித்துவிட்டு திரும்பும் வழியில் அவர்கள் மேல் பாய்ந்து தாக்குதல் நடத்திய கொள்ளுப்பிட்டிய பொலீஸார், அவர்கள் கொண்டுவந்திருந்த பதாதைகளைப் பறித்து கிழித்தெறிந்தனர். பெண்கள்மீது பொலீஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலைப் படம்பிடித்த புகைப்படக் காரர் ஒருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார். பேரணியில் பொலீஸார் நடந்துகொண்ட விதம் பற்றிப் பேசுவதற்காக விவியேன் கொள்ளுப்பிட்டிய பொலீஸ் நிலையத்திற்குச் சென்றார். பொலீஸ்நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட விவியேன், பொலீஸாரினால் கீழே விழுத்தப்பட்டு கால்களால் உதைக்கப்பட்டார். பின்னர் அவரையும் பொலீஸார் கைதுசெய்திருந்தனர். உச்ச நீதிமன்றில் பொலீஸாரின் அடாவடித்தந்திற்கெதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்தார் விவியேன். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்று, விவியேனின் கைது சட்டத்திற்குப் புறம்பானதென்றும், இழப்பீடாக 2500 ரூபாய்களை பொலீஸார் செலுத்த வேண்டும் என்றும் மேலும் விவியேன் மீதும், பேரணி மீதும் தாக்குதல் நடத்திய பொலீஸார் அனைவரின்மீதும் பொலீஸ் மா அதிபர் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறித் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்று தீர்ப்பளித்த மறுநாளான ஆனி 9 ஆம் திகதி, பேரணி மீது தாக்குதல் நடத்திய பொலீஸ் குழுவின் அதிகாரியான உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஜெயாரின் உத்தரவின் பெயரில் பதவியுர்வு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டு இருநாட்களின் பின்னர், தீர்ப்பினை வழங்கிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளினதும் வீடுகளுக்கு அரச வாகனங்களில் சென்ற காடையர்கள், அவர்களைக் கொல்லப்போவதாக மிரட்டியதுடன், ஆபாசமாகவும் திட்டிவிட்டுச் சென்றனர். காடையர்கள் தமது வீடுகளைச் சுற்றி கோஷமிட்டுக்கொண்டிருக்கும்பொழுது, பொலீஸாரின் உதவியினை நீதிபதிகள் தொலைபேசி மூலம் கேட்க எத்தனித்தபோது, பொலீஸாரின் அனைத்துத் தொலைபேசி இணைப்புக்களும் மெளனமாக காணப்பட்டன. சர்வதேச நீதிபதிகளின் அமைப்பின் தலைவர் போல் சைகிரெட் இந்த பொலீஸ் அத்துமீறல்கள் குறித்தும், நீதித்துறை எதிர்நோக்கியிருந்த அச்சுருத்தல்கள் குறித்தும் ஜெயாரிடம் வினவினார். இதற்குப் பதிலளித்த ஜெயார், இரு பொலீஸ்காரர்களினதும் பதவியுயர்விற்கு தானே பரிந்துரை செய்ததாகவும், நட்ட ஈடுகளை செலுத்தும்படி அரச திறைசேரிக்கு தானே உத்தரவிட்டதாகவும் கூறியதுடன், பொலீஸாரின் மனவுறுதியை நிலைநாட்ட இவை அவசியமாகச் செய்யப்படவேண்டியன என்றும் வாதிட்டிருந்தார். போல் சைகிரெட்டின் கூற்றுப்படி, உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு சரியான பாடமொன்றினைப் புகட்டவேண்டும் என்று ஜெயார் திடசங்கற்பம் பூண்டிருந்ததுடன், தனது நிறைவேற்றதிகாரம் பொருந்திய ஜனாதிபதிப் பதவிக்கு உச்ச நீதிமன்றும், நீதியரசர்களும் அடிபணிந்திருக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்த்தார் என்றும் கூறினார். இந்த நிகழ்வுகளின் அடிப்படையிலிருந்தே தமிழர்கள் மீது ஜெயார் கட்டவிழ்த்து விடவிருக்கும் அக்கிரமங்கள் நோக்கப்படல் வேண்டும். தலைவருடன் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரதாப் ஜெயாரை ஆதரிப்பவர்கள், பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகள் சிலவற்றின் அழுத்தத்தினாலேயே ஜெயார் தமிழருடன் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியதாகியது என்று ஜெயாரின் கொடுங்கோண்மையினை நியாயப்படுத்தி வந்தனர். ஆனால், ஜெயார் குறித்த பிரபாகரனின் கணிப்போ மிகவும் வித்தியாசமானது. 1984 இல் முதன் முதலாக பிரபாகரன் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில், "ஜெயார் தனது விருப்பத்தின்படியே நடக்கிறார். அவரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன. பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகளும், பெளத்த பிக்குகளும் அவருக்குப் பக்கபலமாக பின்னால் நிற்கின்றனர்" என்று அந்தச் செய்தியாளரான அனீட்டா பிரதாப்பிடம் கூறியிருந்தார். மேலும், "ஜெயவர்த்தனா உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால், நான் ஆயுதம் தூக்கவேண்டிய தேவை இருந்திருக்காது " என்றும் அவர் கூறினார். பிரபாகரனின் கணிப்பு எவ்வளவு உண்மையானது என்பது இத்தொடரினைத் தொடர்ந்து படிக்கும்போது தெளிவாகும்.
  5. ஆங்கில மக்களுக்கும், ஸ்கொட்லாந்து மக்களுக்கும், வேல்ஸ் மக்களுக்கும் தாய்மொழி ஆங்கிலம் என்பது தவறான கூற்று. இவை மூன்றும் வெவ்வேறான மொழிகள். ஸ்கொட்லாந்தின் மொழி ஒன்றில் கேலிக் அல்லது ஸ்கொட்ஸ். ஆங்கிலம் திணிக்கப்பட்டது.அவ்வாறே வேல்ஸின் தாய்மொழி செல்டிக், ஆங்கிலம் திணிக்கப்பட்ட மொழி. மூன்றும் வேற்றினங்கள், வெவ்வேறு மொழிகள்.
  6. ஒரே வழித்தோன்றலையும், சரித்திரத்தையும், கலாசாரத்தையும், மொழியினையும் கொண்ட ஒரு பாரிய மக்கள் கூட்டம் ஒரே இனமாக வரையறுக்கப்படுகிறது. இப்படியான இனம் ஒரே நாட்டிற்குள் அடங்கியிருக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தமிழினம் ஒன்றுதான். அது தமிழ்நாட்டில் வாழ்ந்தால் என்ன, தமிழ் ஈழத்தில் வாழ்ந்தால் என்ன, மலேசியாவில் வாழ்ந்தால் என்ன, நாம் அனைவரும் தமிழர் என்கிற இனத்திற்குள் அடங்குகிறோம். எமது அடையாளம் தமிழே அன்றி நாம் வாழும் நாடுகள் அல்ல. வன்னியனின் கேள்விக்கான பதில், ஆம், நாம் உங்களின் தொப்புள்க்கொடி உறவுகள் தான் . இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அரசியல்க் காரணங்களுக்காக தமிழினம் நாடுகள் என்கிற அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். சோழர்களின் அகண்ட ராஜ்ஜியத்தை உருவாக்கும் கனவினை அவர்களின் வழித்தோன்றல்களான ஈழத்தமிழர்கள் அடைய எத்தனிக்கிறார்கள் எனும் ஹிந்திய, சிங்கள அடக்குமுறையாளர்களின் பிரச்சாரத்திற்கு பதிலளிக்க அப்படியொன்றில்லை என்று சிலர் நிறுவ முற்படலாமேயன்றி, நாம் அனைவரும் தமிழர்கள். இதில் வேறுபாடு இல்லை.
  7. தன்னை எதிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்டுதல் தனது ஆட்சியை எதிர்க்கும் எந்தத் தமிழருக்கும் பாடமொன்றினைப் புகட்டவேண்டும் என்று ஜெயார் திடசங்கற்பம் பூண்டிருந்தார். ஜெயவர்த்தனவின் அரசாட்சியின் இலக்கணமே தன்னை எதிர்ப்பவர்களுக்குக் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும் பாடத்தினைப் புகட்டுவதுதான். தன்னை எதிர்த்த தமிழர்களுக்கு, சுதந்திரக் கட்சியினருக்கு, தொழிற்சங்கவாதிகளுக்கு மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு ஜெயாரினால் பாடம் புகட்டப்பட்டது. 1993 இலிருந்து 1994 வரையான காலப்பகுதியில் லங்கா கார்டியன் எனும் ஆங்கிலப் பத்திரிக்கையில் ஆர்டன் என்பவரால் வன்முறைகளையே தனது ஆயுதமாக நம்பி ஜெயவர்த்தன புரிந்த ஆட்சி ஆளமாக அலசப்பட்டிருந்து. தனது அரசியல் எதிரிகளான சுதந்திரக் கட்சியையும், எதிரிகளான தமிழர்களையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் ஜெயவர்த்தனா எவ்வாறு வன்முறைகள் மூலம் அடக்கி ஆண்டார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மக்களின், தொழிற்சங்கங்களின் நீதியான கோரிக்கைகள் கூட ஜெயாரினால் மிகவும் மூர்க்கத்தனமாக வன்முறைகள் கொண்டு அடக்கப்பட்டன. தனது குண்டர்களான ஜாதிக சேவக சங்கமய அமைப்பினரைப் பாவித்து தொழிற்சங்கப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகளை ஏவிவிட்டார். தொழிற்சங்கங்கள் வழமையாக இடதுசாரிகளின் பின்புலத்திலேயே இயங்கிவந்தன. இத்தொழிற்சங்கங்கள் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்காக செயற்பட்டன. ஜெயார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வந்தவுடன் தனது கட்சியின் தொழிற்சங்கமாக ஜாதிக சேவக சங்கம யவை உருவாக்கியதுடன் இதன் தலைவராக பிரபல இனவாதியான சிறில் மத்தியூ நியமிக்கப்பட்டார். இத்தொழிற்சங்கம் சிங்கள தேசியவாத அடிப்படையில் உருவாக்கப்பட்டதுடன் சிங்கள மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவது அதன் முக்கிய நோக்கமாக உருவாக்கப்பட்டது. மகதிர் மொஹம்மட் சிறில் மத்தியூ, மலேசிய அதிபரான மகதிர் மொஹம்மட்டின் பூமி புத்ரா கட்சியின் அடிப்படையினைப் பின்பற்றி ஜாதிக சேவக சங்கமயவை வழிநடத்தினார். மகதிர் மொஹம்மட் ஒரு காலத்தில் எழுதிய தனது சுயசரிதையான "மலே மக்களின் தடுமாற்றம்" எனும் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சுதந்திர வர்த்தகப் பொருளாதாரத்தை ஆதரித்துவந்த மகதிர், தனது நாட்டின் மக்களான மலேயர்களுக்கு ஏனைய இன மக்களைக் காட்டிலும் பொருளாதார நலன்களை அனுபவிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்றும் , வர்த்தகப் போட்டியிலிருந்து மலே மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இஸ்லாம் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும், அம்மதத்தைப் பரப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் அவர் கருதினார். மலே மக்களே மலேசியாவின் பூர்வகுடிகள் என்று அவர் கூறியதுடன், மலே மக்களுக்கு மலேசியாவை விட்டால் வேறு நாடொன்றில்லை என்றும் அவர் வாதிட்டார். மேலும், மலேசியாவில் வாழும் சீனர்கள் சீனாவுக்கும், அங்குவாழும் இந்தியர்கள் இந்தியாவுக்குச் செல்லமுடியும் என்றும் அவர் வாதிட்டார். மகதிர் முகம்மட்டின் பூமி புத்ரா கட்சியின் கொள்கைகள் மலேசியாவைக் காட்டிலும் இலங்கைக்கே பொருந்தும் என்று சிறில் மத்தியூ கூறினார். மலேசியச் சனத்தொகையில் மலே மக்கள் 53 வீதமும், சீனர்கள் 35 வீதமும், தமிழர்கள் 10 வீதத்திற்குச் சற்றுக் குறைந்த எண்ணிக்கைய்லும் வாழ்ந்துவருகின்றனர். ஆனால், இலங்கையிலோ சிங்களவர்கள் 74 வீதமாக இருக்க தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 17 வீதம் மட்டுமே என்று மத்தியூ வாதாடினார். சனத்தொகை எண்ணிக்கையில் தமிழர்கள் மிகவும் குறைந்த இருந்தபோதும் தொழில் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இந்த வீதாசாரத்தைக் காட்டிலும் மிக அதிகமான தாக்கத்தை தமிழர்கள் கொண்டிருப்பதாக மத்தியூ கருதினார். தமிழர்கள் வேண்டுமென்றால் தமிழ்நாட்டிற்குத் திருப்பிச் செல்ல முடியும், ஆனால் சிங்களவர்களுக்கு இலங்கையை விட்டால் வேறு நாடு கிடையாது என்று மத்தியூ வாதாடினார். ஆகவே சிங்களவரின் மேன்மை வன்முறைகளற்ற வழிமுறைகளிலோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ அடைந்தே தீரவேண்டும் என்று அவர் வாதிட்டார். ஜாதிக சேவக சங்கம தனது இனவாத வன்முறைகளுக்காக தனது தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவினை மத்தியூ தயார்ப்படுத்தினார். கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிறி கோத்தாவின் பின்புறத்தில் இருந்த மைதானத்தில் இச்சங்கத்தைச் சேர்ந்த குண்டர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அரச அதிகாரிகளை அச்சுருத்தி வந்த இத்தொழிற்சங்கக் குண்டர்களுக்கு அரசால் வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. பிறின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் ஞானரத் ஒபேசேகர அவர்கள் இத்தொழிற்சங்கக் குண்டர்களின் செயல்ப்பாட்டினை மிகவும் விரிவாக இரு தலைப்புக்களான, "அரசியல் வன்முறைகளும் இலங்கையின் ஜனநாயகத்தின் எதிர்காலமும்" மற்றும் "இலங்கையில் சமூக உரிமைகளுக்கான அமைப்பு" ஆகியவற்றில் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட 35 வன்முறைகளை ஆராய்ந்திருந்தார். சிறி கோத்தா இதனைப் படிக்கும் ஒருவருக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு வந்த வன்முறைக் கலாசாரத்துடனான அரசியல் சூழ்நிலையினை ஓரளவிற்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இச்சூழ்நிலை மேலும் மோசவடைவதை இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றதன் பின்னர், அரச வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அங்குபணிபுரிந்து வந்த எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட கலைஞர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர். ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்திறங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்கள் வாட்களாலும், தடிகளாலும் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். அப்படி விரட்டப்பட்டவர்களில் பிரபல சிங்கள நாடகக் கலைஞர் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. 1978 ஆம் ஆண்டு ஆனி மாதம் 15 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு தமது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்ற காரணத்தினால் துல்கிரிய ஆடைத்தொழிற்சாலை தலைவர்களான நால்வரை சுமார் 400 பேர் அடங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்கள் அடித்து விரட்டியதுடன், அவர்கள் தமது பதவிகளை இராஜினாமச் செய்யும்படியும் வற்புறுத்தப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நான்கு அதிகாரிகள் அவ்விடங்களுக்கு நியமிக்கப்பட்டனர். 1980 ஆம் ஆண்டு ஆடி 4 ஆம் திகதி, மகரகமை ஆசிரியர் கலாசாலையில் வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தில் வந்திறங்கிய ஜாதிக சேவக சங்கமய குண்டர்கள் இறப்பர் நார்களாலும், சைக்கிள் சங்கிலிகளைக் கொண்டும் கடுமையான தாக்குதலை நடத்தினர். பெண் ஆசிரியர்கள் நிலத்தில் இழுத்து வீழ்த்தப்பட்டு அவர்கள் மேல் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது. ஜெயவர்த்தனா எவ்வாறு ஒரு தொழிற்சங்கத்தைப் பயன்படுத்தி இன்னொரு தொழிற்சங்கத்தை வன்முறையால் அடக்கினார் என்பதை ஆர்டன் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஜெயாரினால் கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினால் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து பல தொழிலாளர்களின், குறிப்பாக அரச ஊழியர்களின் சம்பளம் கடுமையான சரிவினைச் சந்தித்தது. ஆகவே, எதிர்க்கட்சியின் ஆதரவு பெற்ற ஒருமித்த தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தொழிலாளிகளுக்கு மாதாந்தம் 300 ரூபாய்கள் சம்பள உயர்வு கோரி அரசுக்கு வேண்டுகோள் ஒன்றினை 1980 ஆம் ஆண்டு பங்குனியில் முன்வைக்கத் தீர்மானித்தது. இதனை வலியுறுத்தி ஆனி 5 ஆம் திகதி அடையாள ஆர்ப்பாட்டமாக அரைநாள் வேலை நிறுத்தத்தில் அது ஈடுபட்டது. இதற்குப் பதிலளிக்க விரும்பிய ஜெயார், தனது கட்சியின் தொழிற்சங்கத்தை ஆனி 5 ஆம் திகதியை கூட்டுறவுக்கான நாளாக அனுஷ்ட்டிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்கப் பணியாளர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே ஜெயார் இதனைச் செய்ததோடு, அன்றைய வன்முறையில் பல எதிர்க்கட்சி தொழிற்சங்க உறுப்பினர்கள் காயமடைந்ததோடு சோமபால எனும் தொழிற்சங்கவாதியும் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். ஆடி 5 ஆம் திகதி இரத்மலானை ரயில்வே தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த 12 ஊழியர்கள் ஆனி 5 ஆம் அன்று பணிக்கு வராமையினால் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். ரயில்வே தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் பேசி சூழ்நிலையினைத் தணிக்க முயற்சித்தன. ஆனால், பிடிவாதமாக பேச மறுத்த நிர்வாகம் தாம் மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தொழிலாளர்களை பதவிநீக்கம் செய்ததாகத் தெரிவித்தது. இதையடுத்து ஆடி 7 ஆம் திகதி ரயில்வே தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களுக்கும் மீளவும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும், தமது சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் கோரினர். இதற்கும் நிர்வாகம் பதிலளிக்காது விடவே, ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆடி 14 ஆம் திகதி பொது வேலை நிறுத்தம் ஒன்று பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்ததுடன், ஆடி 18 வேலை நிறுத்தம் ஆரம்பிக்கும் என்றும் கூறியது. ஜெயவர்த்தன இதற்குப் பதிலளிக்கும் விதமாக அரசு ஆடி 16 அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தை அமுல்ப்படுத்தியது. இதன்படி அரச மற்றும் தனியார் அத்தியாவசிய சேவைகளில் தொழில் புரிபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாதென்றும், அவ்வாறு வேலைநிறுத்தம் செய்தால் அவர்கள் தமது பதவிகளை தாமே இராஜினாமாச் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. ஆனால், தொழிற்சங்கம் கூறியதன்படி வேலை நிறுத்தம் ஆடி 18 ஆரம்பித்தது. அன்றைய தினம் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஜெயார், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் தமது பதவிகளை இழந்துவிட்டதாகவும், எக்காரணம் கொண்டும் அரசு அவர்களை மீளவும் பணிக்குச் சேர்த்துக்கொள்ளாது என்றும் அறிவித்தார். மேலும் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினாலும் கூட, இதனால் எந்தப் பலனும் கிடைக்காது போயிற்று. ஒரு சாதாரண சம்பள உயர்வுக் கோரிக்கை ஜெயாரினால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு, தொழிற்சங்கங்களுக்கும் தனக்குமிடையிலான மோதலாக உருவாக்கப்பட்டு, ஈற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் வேலைநிறுத்தப் போராட்டம் நசுக்கப்பட்டுப் போனது. இவ்வாறே ஜெயார் தனது ஆட்சிக் காலத்தில் தொழிற்சங்கங்களை நசுக்கி வந்திருந்தார். ஜெயாரினால் பணிநீக்கம் செய்யப்பட்ட பல தொழிலாளர்கள் பின்னர் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
  8. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி புலிகளுக்காக பணம் சேர்க்கிறதென்றும், சிவசிதம்பரத்தின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு வெளிநாடுகளிலிருந்து தமிழ் மக்கள் பணம் அனுப்பிவருகிறார்கள் என்றும் சங்கர் ராஜி சிவசிதம்பரத்திற்கு அனுப்பிவைத்த பணத்தைக் காட்டி அரசாங்கம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது. ஈழம் எனும் தனிநாட்டினை உருவாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு உதவும்படி புலம்பெயர் தமிழ் மக்களிடம் அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் இணைந்து எழுதிய கடிதம் ஒன்றும் அரசாங்கத்திடம் சிக்கியிருந்தது. இக்கடிதத்தினையும் வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கெதிரான பிரச்சாரத்தினை அரசாங்கம் முடுக்கிவிட்டிருந்தது. 1979 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி எழுதப்பட்ட இக்கடிதம் புலம்பெயர் தமிழர்களை நோக்கி பின்வரும் வேண்டுகோளினை முன்வைத்திருந்தது, அன்பான நண்பர்களே, எமது விடுதலைப் போராட்டம் முக்கியமான தருணம் ஒன்றை அடைந்திருக்கும் வேளையில் தாயகத்திலும், சர்வதேச நாடுகளின் தலைநகரங்களிலும் வாழ்ந்துவரும் ஒவ்வொரு தமிழரும் தமது பங்கினை செய்யவேண்டிய தேவை வந்திருக்கிறது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஈழத்தமிழர்கள் இதுவரை செய்துவந்த முயற்சிகள் போல், இன்னும் பல விடயங்களில் அவர்கள் செயற்பட முடியும் என்றும், எமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சுதந்திரத்திற்காகவும், எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் அரச செயற்பாடுகளில் திட்டமிட்ட வகையில் புகுத்தப்பட்டிருக்கும் புறக்கணிப்பிற்கு எதிராகவும் சர்வதேச அளவில் தொடர்ந்தும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். லண்டனில் இருந்து இயங்கிவரும் எமது சகோதரகள் இதுவரை காலமும் எடுத்துவந்த தம்மாலான முயற்சிகளுக்கு நாம் நன்றிகூறும் அதேவேளை, எமது புலம்பெயர் தமிழர் சமூகம் குழுக்களாகப் பிரிந்து இயங்குவதையும், தனிமனிதர்களுக்கிடையிலான பிணக்குகளால் பிரிந்து நின்று செயற்படுவதையும் பார்த்துக் கவலையடைகிறோம். எமக்கு முன்னால் நடந்த சரித்திரம் எமக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. நாம் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும், முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளும் எமக்குள் ஒற்றுமையின்மையால் எமக்குக் கிடைக்கவேண்டிய சுதந்திரம் கைநழுவிப் போவதற்குக் காரணமாக அமைந்தது என்பதையும் பார்த்திருக்கிறோம். நாம் இன்று தாயகத்திலும் இதனைக் காண்கிறோம். பலமான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இன்று இந்த ஐக்கியத்தின் அவசியத்தை வேண்டி நிற்கிறது. இந்த வேண்டுகோளினை புலம்பெயர்ந்து வாழும் எமது சகோதர்களிடம் மிகவும் தாழ்மையாக முன்வைக்கிறோம். சரியான திசையில் முன்னெடுத்து வைக்கப்பட்ட எமது முயற்சிகளில் ஒன்றாக ஈழ விடுதலை அமைப்பு மற்றும் தமிழர் விடுதலைப் பரணி ஆகிய அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து முடிவுகளை எடுப்பதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரூடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்வந்திருக்கின்றன. தனிநபர்களாகவும், குழுக்களாகவும் ஈழம் எனும் பொது இலட்சியம் நோக்கிச் செயற்படும் அனைவரையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் சேர்ந்து செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது ஜனநாயக ரீதியில் செயற்படும் என்று நாம் நம்புவதுடன், அனைவரும் தமது கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரமும், சுதந்திரமான முறையில் கருத்துக்களை விவாதித்து கருத்தொருமைப்பாட்டிற்கு வரும் வழிமுறைகளையும் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். நாம் பலதரப்பட்ட, கடுமையான கடைமைகளையும் சவால்களையும் எதிர்நோக்கி நிற்கிறோம். எமது இலட்சியமான விடுதலை நோக்கிய பயணம் மிக நீளமானது. அதனை அடைவதற்கு எம்மிடம் இருக்கும் வளங்கள் மிகவும் குறைந்தவை. எம்மிடமிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும், பொன்னான நேரத்தையும் எமக்கிடையே வரும் தனிப்பட்ட பிரச்சினைகளில் செலவழிக்காதிருப்போமாக. எம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, எமது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடாக எமது பணிகளை முன்னெடுப்போமாக. இக்கடித்தத்தை கைப்பற்றிக்கொண்ட அரசாங்கம், இதனை வைத்து அமிர்தலிங்கத்தையும், சிவசிதம்பரத்தையும் அச்சுருத்தி அடிபணியவைத்து, மாவட்ட சபைகளுக்கான சட்டவாக்கல் நடவடிக்கைகளுக்கு அவர்களை உடன்பட வைப்பதன் மூலம் சர்வதேசத்தில் தமிழர்களை தனது அரசு அரவணைத்து நடப்பதாக பிரச்சாரப்படுத்தலாம் என்று எண்ணியது. அதேவேளை போராளி அமைப்புக்களுக்குள் , குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் சில உள்முறண்பாடுகள் உருவாவதையும் அரசாங்கம் அறிந்துகொண்டது. யாழ்க்குடாநாட்டில் வீரதுங்கவால் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான படுகொலைகளும், சித்திரவதைகளும் போராளி அமைப்புக்கள் மீது கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தன. பாதுகாப்பான மறைவிடங்களுக்கான தேடலும், உணவினைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. போராளி அமைப்புக்களுக்கு உற்ற துணையான இருந்த ஆதரவாளர்களும் தற்போது உதவுவதற்கு அஞ்சினர். இவ்வைகையான அழுத்தங்கள் போராளி அமைப்புக்களின் தலைமைப்பீடங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை உருவாக்கத் தொடங்கின. ஆவணியில் இடம்பெற்ற புலிகளின் மத்திய குழுக் கூட்டத்திலும் இந்த கருத்து வேறுபாடுகள் தலைக்காட்டத் தொடங்கின. உமா மகேஸ்வரன் தலைமையிலான பெரும்பான்மையான மத்திய குழு உறுப்பினர்கள் பிரபாகரனை இரு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விமர்சித்திருந்தனர். முதலாவது இயக்கத்தின் கட்டமைப்பு, இரண்டாவது போராட்ட வழிமுறை. இரத்திணசபாபதி கடந்தவருடம் முன்வைத்திருந்த அதேவகையான கருத்துக்களையே இம்முறை மத்தியகுழு உறுப்பினர்களும் முன்வைத்தனர். அவர்களைப்பொறுத்தவரை இயக்கத்தின் கட்டமைப்பு மக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இப்படிச் செய்வதன் மூலம் இராணுவத்தினர் போராளிகளைக் கண்டுபிடிப்பதைக் கடிணமாக்கிவிடலாம் என்று அவர்கள் வாதாடினர். மறைந்திருந்து தாக்கிவிட்டு மறையும் உத்தி, தலைமைப்பீடத்தை இராணுவத்தினரின் இலக்காக மாற்றிவிடும் என்று அவர்கள் கூறினர். ஆனால், பிரபாகரன் தனது வழிமுறையில் தீர்மானமாக இருந்தார். மக்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கும் போராட்டம் என்பது மக்களின் பின்னால் ஒளிந்திருந்து நடத்தும் போராட்டமாகும் என்று அவர் கூறினார். ஆகவே, வெற்றிகரமான விடுதலைப் போராட்டம் மக்களின் பின்னால் ஒளிந்து நின்று நடப்பதிலிருந்து வெளியேறி நடைபெறவேண்டும் என்று அவர் வாதிட்டார். மிகவும் சிக்கலான தாக்குதல்களுக்கான பொறுப்பினை தலைவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் அவர்களின் பின்னால் ஒன்றுதிரண்டு துணைநின்றால் போதுமானது என்றும் அவர் கூறினார். இந்தத் தருணத்தில் தான் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான பிணக்கு ஆரம்பித்தது. இப்பிணக்கின் அடிப்படை போராட்டத்தில் கோட்பாடுகளிலிருந்தே ஆரம்பமானது. உமாமகேஸ்வரன் மார்க்ஸிய கோட்பாடுகளைக் கொண்டிருந்தவேளை பிரபாகரன் தேசியவாத நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். உமா மகேஸ்வரன் தத்துவார்த்த ரீதியில் கருத்துக்களை முன்வைத்தாலும், அவற்றை முன்வைக்கும்போது மற்றையவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வாதாடும் மனோநிலையினைக் கொண்டிருந்தார். தனது கருத்துக்களை மற்றையவர்கள் மீது திணிக்க அவர் முயன்றார். பிரபாகரனோ யதார்த்தவாதியாக இருந்ததுடன், மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க ஆர்வம் காட்டியிருந்தார். மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்து ஏற்றுக்கொள்வதிலும் பிரபாகரன் தன்னை ஒரு சிறந்த தலைவராக வெளிப்படுத்தியிருந்தார். இயக்கத்தின் இரு பிரதான தலைவர்களுக்கிடையே இருந்த இந்த முரண்பாடான நிலைப்பாடு இயல்பாகவே இயக்கத்திற்குள் பிளவினை உருவாக்கக் காரணமாகியது. ஆனாலும், புலிகள் இயக்கத்திலிருந்து உமாமகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் இயக்கத்தின் ஒழுக்க விதிகளுக்கு முரணாக உமா மகேஸ்வரன் நடந்துகொண்டதால் உருவானது. புலிகளின் களையெடுத்தல் தொடர்பான உரிமை கோரலினை தட்டச்சுச் செய்த ஊர்மிளா எனும் பெண்ணுடன் உமா மகேஸ்வரன் வைத்திருந்த பாலியல் ரீதியான தொடர்பே இதற்கான ஒற்றைக் காரணமாக அமைந்தது. உமா மகேஸ்வரன் அரசாங்கத்தால் முடுக்கிவிடப்பட்டிருந்த பயங்கரவாத நடவடிக்கைகளும், புலிகளின் தலைமைப் பீடத்திற்குள் உருவாகியிருந்த கருத்து முரண்பாடும், போராளி அமைப்புக்களின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடையத் தொடங்கியிருந்தமையும் யாழ்க்குடா நாட்டில் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் தொய்வினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே மார்கழி 31 ஆம் திகதி வீரதுங்க, அரச படைகளின் தளபதியான ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பிவைத்த செய்தியில் தனக்கு இடப்பட்ட ஆணையான பயங்கரவாதத்தை முற்றாக அழித்தலை தான் செவ்வணே செய்து முடித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதனைக் கொண்டாடும் முகமால கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்திருந்த "ரொக் ஹவுஸ்" எனப்படும் உல்லாச விடுதியில் பாரிய களியாட்ட நிகழ்வொன்றினை ஒழுங்குசெய்தார் வீரதுங்க. அவரின் வெற்றியை பாராட்டும் விதமாக ஜெயாரும் இந்த களியாட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்தார். வீரதுங்கவினால் ஈட்டப்பட்ட வெற்றிக்குச் சன்மானமாக அப்போது பதவியிலிருந்த இராணுவத் தளபதி டெனிஸ் பெரேரா ஓய்வுபெறும்பொழுது, வீரதுங்கவே இராணுவத்தளபதியாக நியமிக்கப்படுவார் என்று ஜெயவர்த்தன அறிவித்தார். ஆனால், அனுபவத்திலும், தகமை அடிப்படையிலும், ஏனைய இராணுவத் தளபதிகளால் பரிந்துரை செய்யப்பட்டவருமான ஜஸ்டஸ் ரொட்ரிகோ எனப்படும் தளபதிக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இராணுவத் தளபதி எனும் தகமையினை உதாசீனம் செய்த ஜெயார், தனது மருமகனான "காளைமாடு" வீரதுங்கவுக்கு வழங்க முடிவுசெய்தார். இலங்கையின் ராணுவத்தின் சரித்திரத்தில் அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்பட்ட முதலாவது இராணுவ பதவியுயர்வு நிகழ்வு இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. வீரதுங்கவை இராணுவத் தளபதியாக நியமித்ததன் மூலம் இராணுவத்தின் மீதும், பொலீஸார் மீதும் தான் கொண்டிருந்த அதிகாரத்தினை மேலும் பலப்படுத்திக்கொண்டார் ஜெயவர்த்தன. இராணுவத் தளபதி வீரதுங்க ஜெயவர்த்தனவின் மருமகன் என்பதும், பொலீஸ் மா அதிபர் அனா செனிவிரட்ண வீரதுங்கவின் மைத்துனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
  9. இதனோடு நேரடியாகத் தொடர்பில்லாவிட்டாலும் கூட நேற்று பார்த்த விவரணம் ஒன்றில் வந்ததனால் இதனைப் பகிர்கிறேன். 2014 பங்குனி மாதத் தொடக்கத்தில் புட்டினின் ஆக்கிரமிப்புப் படைகள் உக்ரேனின் கிரிமியாப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. உலகின் அனைத்துச் செய்திச் சேவைகள் மற்றும் மக்களின் மனங்களிலும் இந்த ஆக்கிரமிப்பு கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. தன் ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்ப புட்டின் ஒரு காரியத்தைச் செய்தார். அதுதான் மலேசியன் ஏயர் லைன் எம் எச் 370 ஐ காணாமல்ப் போகப்பண்ணினார் என்று ஒரு கோட்பாடு கூறப்பட்டிருக்கிறது. குறித்த விமானத்தில் பயணித்த மூன்று ரஸ்ஸியர்களில் இருவர் செயற்கையாக விமானத்தில் களேபரத்தை ஏற்படுத்த, அந்தச் சந்தர்ப்பத்தில் மூன்றாவது ரஸ்ஸியர் விமானத்தின் அடிப்பகுதியில் இருக்கும் கணினி அறைக்குச் சென்று விமானத்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், விமானம் தனது திசையினை மாற்றி, தெற்கு நோக்கிச் செல்வதாக கணிணிக்கு தகவல் கொடுத்துவிட்டு விமானக் கண்கானிப்பு நிலைகளிலிருந்து விமானத்தை மறைத்துவிட்டார் என்றும், ஆனால் உண்மையாகவே விமானம் வடக்கு நோக்கிச் சென்று ரஸ்ஸியச் சார்பு நாடான உஸ்பெக்கிஸ்த்தானில் தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை தெற்கு நோக்கிச் சென்றதாகப் போக்குக் காட்டிய விமானத்தின் பயணப்பாதையினை உண்மையென்று நிரூபிப்பதற்கு தென் இந்துசமுத்திரத்தின் சில நாடுகளில் ரஸ்ஸியாவே வேண்டுமென்று சிதைந்த விமான உதிரிப்பாகங்களை விதைத்துவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. புட்டின் எதிர்பார்த்ததுபோலவே, கிரிமியா மீதான அவரின் ஆக்கிரமிப்பு சர்வதேசத்தின் பார்வையிலிருந்து மறைந்துபோக, மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தின் காணாமற்போன செய்தி பல மாதங்களாக சர்வதேசச் செய்திச் சேவைகளை ஆக்கிரமித்துக்கொண்டது. னெட்பிலிக்ஸ் வைத்திருப்போர் இதனை பார்க்கலாம். இது எனது சதிக் கோட்பாடல்ல.
  10. மக்கள் வாழிடங்களிடையே அமைக்கப்பட்ட சித்திரவதைகளின் தலைமைக் காரியாலயம் வீரதுங்கவின் பயங்கரவாதத்தின் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டு முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டது. தனக்கு மிகவும் நெருக்கமான, தமிழர் எதிர்ப்பு மனோபாவம் கொண்ட சில அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு, யாழ்நகரின் இதயப்பகுதிகளில் ஒன்றான சுண்டுக்குளி பழைய பூங்காவில் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பீடத்தை அமைத்தார் "காளைமாடு" வீரதுங்க. 1979 ஆம் ஆண்டின் ஆடி மாதம் , மூன்றாம் வாரத்தில் இந்தச் சித்திரவதைக் கூடம் வீரதுங்கவினால் அமைக்கப்பட்டது. இப்பகுதியின் பாதுகாப்புக் கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்டதுடன், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கென்று அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, இப்பகுதிக்குள் வந்துசெல்வோர் அவதானிக்கப்பட்டு வந்ததுடன் அனுமதியும் கடுப்படுத்தப்பட்டது. ஒருகாலத்தில் அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளராகக் கடமையாற்றிய முனசிங்கவுடன் செய்தியாளன் என்கிற வகையில் நான் அவ்வப்போது சில விடயங்கள் குறித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பலாலியில் இயங்கிவந்த இராணுவப் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளராக பணிபுரிந்த முனசிங்க இந்த விசேட அடையாள அட்டை குறித்துக் கூறுகையில், "மூன்று விதமான அடையாள அட்டைகள் அப்பகுதியில் வசித்துவந்த மக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டன. சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் இவை விநியோகிக்கப்பட்டன. சிவப்பு நிற அடையாள அட்டைகளை வைத்திருப்போர் சுதந்திரமாக இப்பகுதிக்குள் வந்து செல்ல முடியும். இவர்கள் ராணுவ தலைமைப் பீடத்திற்குள்ளும், பழைய பூங்கா சித்திரவதைக் கூடத்திற்குள்ளும் சுதந்திரமாகச் சென்றுவர முடியும். வெள்ளை அடையாள அட்டை வைத்திருப்போர், தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இருக்கும் இரண்டாம் நிலை காவலரண் வரையே செல்ல முடியும். இந்தத் தலைமைக் காரியாலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரித்தானிய அரச பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமாக விளங்கியிருந்தது" என்று கூறினார்.. பழைய பூங்காவின் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியனின் சிலை முனசிங்க வடமாகாணத்திற்கான இராணுவ அதிகாரிகளின் உதவித் தலைவராகவும், இராணுவத்தின் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றிய மூத்த தளபதி. உளவுப்பிரிவிற்கு பச்சை அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. இதுபற்றி முனசிங்க தனது புத்தகம் ஒன்றில் இவ்வாறு கூறுகிறார், ஒரு ராணுவ வீரனின் பார்வையிலிருந்து : "எனக்கு பச்சை அடையாள அட்டையொன்று வழங்கப்பட்டிருந்தது. அதனைப் பாவித்து, பிரதான வாயிலின் உட்பக்கமாக அமைந்திருந்த ராணுவக் காவலரண் வரையே செல்லமுடியும். இதற்கப்பால் செல்லவேண்டுமென்றால் நியமனம் ஒன்றை முன்பதிவு செய்தபின்னரே செல்ல முடியும்". "1979 இல், இராணுவத் தலைமையகம் இப்பகுதியில் அமைக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்களை கைதுசெய்து விசாரணைக்கு இழுத்துவந்தோம். அவர்கள் அனைவருமே விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு விடயம் மட்டும் எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது, யாழ்ப்பாணத்து மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்துவந்தார்கள். பழைய பூங்காவில் நடக்கும் கொடூரமான சித்திரவதைகள் பற்றி அவர்கள் தமக்குள் பேசிவந்தார்கள். இரவானதும் இப்பகுதியின் தெருக்கள் வெறிச்சோடி விட்டிருக்கும்". ஆனால், முனசிங்கவிற்கு அங்கு நடந்தவைபற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடிய அந்தக் கொடூரமான மாதங்களான ஆடி முதல் மார்கழி வரையான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார். வட மாகாண ஒட்டுமொத்தத் தளபதி வீரதுங்க மற்றும் வடமாகாண ராணுவத் தளபதி ரணதுங்க ஆகியோரின் கீழ் முனசிங்க அக்காலப்பகுதியில் செயற்பட்டு வந்தார். மேலும், இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவத்தின் விசேட பிரிவொன்றும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவை தனது திட்டத்திற்கு முழுமையாக வீரதுங்க பயன்படுத்திக்கொண்டார். கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டதுடன், இராணுவத்தினர் மிகக்கொடூரமாக போராளிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இந்தத் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டு, யாழ்ப்பாணத்து வீதிகள் வீசியெறியப்பட்டனர். இந்த சித்திரவதை முன்னெடுப்புக்கள் போராளிகள் மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தன. 1979 ஆம் ஆண்டி முதல் அரைப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் குட்டிமணியும், தங்கத்துரையுமே என்று அரசு நம்பியதால், அவர்களே வீரதுங்கவின் பிரதான இலக்காக இருந்தார்கள் என்று முனசிங்க கூறுகிறார். மார்கழி 5 ஆம் திகதி இடம்பெற்ற தின்னைவேலி வங்கிக் கொள்ளையின் பின்னர் பிரபாகரன் சற்று அமைதியாகிவிட்டிருந்தார். தனது கெரில்லா அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டியெழுப்பும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். வவுனியா பூந்த்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது பயிற்சி முகாமில் தங்கியிருந்த பிரபாகரன் ஆயுதங்களைச் சேகரிப்பதிலும் தனது போராளிகளுக்கு பயிற்சியளிப்பதிலும் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். அதைவிடவும் அவருக்கு மேலும் சில பிரச்சினைகள் இருந்தன. முதலாவது ஈரோஸ் அமைப்புடனான பிணக்கு. சங்கர் ராஜீ நான் முன்னர் இத்தொடரில் குறிப்பிட்டது போல, ஈரோஸ் அமைப்பு லெபனானில் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்துடன் பயிற்சி தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தது. ஆகவே, ஆக்காலப் பகுதியில் ,செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகியவையும் இந்தப் பயிற்சிகள் மூலம் பலன் பெறவேண்டும் என்று ஈரோஸ் அமைப்பு விரும்பியிருந்தது. வன்னியில் தங்கியிருந்த அருளர் மற்று சங்கர் ராஜீ ஆகிய ஈரோஸ் முக்கியஸ்த்தர்கள் பிரபாகரனிடமும் உமா மகேஸ்வரனிடமும் லெபனான் பயிற்சிகள் குறித்துப் பேசி அவர்களின் விருப்பத்தினையும் பெற்றிருந்தனர். புலிகளின் மத்திய குழு இதுபற்றிக் கலந்தாலோசித்து, முதலாவதாக லெபனான் பயிற்சிக்குச் செல்வதற்கு உமா மகேஸ்வரனையும், விஜேந்திராவையும் தெரிவு செய்தது. இவர்களுக்கான பயிற்சிகள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் மேலும் சில போராளிகளை அனுப்பி வைக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். மேலும், இந்தப் பயிற்சிகள் மூலம் ஆயுதங்களைத் தருவிப்பதற்கான வழியொன்றும் தமக்குக் கிடைக்கும் என்று பிரபாகரன் எண்ணினார். ஆகவே, லெபனான் பயிற்சிக்காக ஈரோஸ் அமைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாய்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார். சுமார் மூன்று மாதகால லெபனான் பயிற்சியை முடித்துக்கொண்டு உமா மகேஸ்வரனும், விஜேந்திராவும் நாடு திரும்பியிருந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட பயிற்சி அவர்களுக்குத் திருப்தியைத் தந்திருக்கவில்லை. லெபனானில் நடைபெற்ற சண்டைகளில் அவர்கள் பங்கேற்க விடப்படவில்லை என்பதுடன், புதிய ரக ஆயுதங்களைக் கையாளவும் அனுமதிக்கப்படவில்லை. "பெரும்பாலான நேரங்களில் நாம் முகாமில் தூங்கினோம், பெரிதாக எதனையும் கற்றுக்கொள்ளவில்லை" என்று அவர்கள் கூறினார்கள். இதனை மத்தியகுழுவில் உமாமகேஸ்வரன் முறைப்பாடாக முன்வைத்தார். அவர்கள் எந்த ஆயுதங்களையும் தம்முடன் கொண்டுவந்திருக்கவுமில்லை. பணவிடயத்தில் மிகவும் கண்டிப்பானவராக விளங்கிய பிரபாகரன், ஈறோஸ் அமைப்பினரை அழைத்து, பயிற்சி ஒப்பந்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்ததுடன் மீதிப்பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறும் கேட்டார். ஈரோஸ் அமைப்பு அப்பணத்தை முற்றாகச் செலவழித்திருந்ததுடன், அதனை மீளச் செலுத்தும் முகாந்திரங்களும் அதற்கு இருக்கவில்லை. அனால், பிரபாகரன் விடாப்பிடியாக மீதிப்பணத்தினைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுக்கவே, அவருக்கும் ஈரோஸ் அமைப்பின் சங்கர் ராஜீக்கும் இடையே பிணக்கொன்று உருவாகியது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சங்கர் ராஜீ ஏமாற்றிவிட்டதாக பிரபாகரன் கருதியதால், புலிகளின் மத்திய குழுவின் முன்னால் வந்து ஈரோஸ் பக்க நியாயத்தைக் கூறவேண்டும் என்று சங்கர் ராஜீயை அவர் கேட்டார். ஆனால், சங்கர் ராஜி இதனை முற்றாக நிராகரித்து விட்டார். ராஜி இதுதொடர்பாக என்னிடம் பின்னர் பேசும்போது, "பிரபாகரன் இந்தப் பிரச்சினையை அமிர்தலிங்கத்திடம் கொண்டுபோனார். அமிர்தலிங்கம் ஒரு இணக்கப்பட்டை ஏற்படுத்தினார். நான் 285 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் பணத்தை சிவசிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தேன்" என்று கூறினார்.
  11. உக்ரேனில் ரஸ்ஸிய அரசப்படைகளுடன் சேர்ந்து போரிடும் வக்னர் கூலிப்படை பற்றிய செய்திக்குறிப்பொன்று கண்ணில்ப் பட்டது. இக்கூலிப்படைக்கு ரஸ்ஸியச் சிறைகளில் பல குற்றங்களுக்காக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கிரிமினல்கள் சேர்க்கப்பட்டு வருவதாக அக்குறிப்புச் சொல்லியது. உடனே எனது ஞாபகத்திற்கு வந்தது ஒன்றுதான். தமிழர் தாயகத்தில், 1960 கள் முதல், தொடர்ந்து நடைபெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களான கல்லோயா, மணலாறு, வவுனியா தெற்கு, பதவியா ஆகிய பகுதிகளில் தென்னிலங்கைச் சிறச்சாலைகளில் தடுது வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளே குடியேற்றப்பட்டதுடன், தமிழர் மீதான வன்முறைகளில் இவர்களே அதிகம் பாவிக்கப்பட்டும் வந்தார்கள். அத்துடன் 1983 இனப்படுகொலை, 2000 ஆண்டின் பிந்துனுவெவ சிறைச்சாலைப் படுகொலைகள் உட்பட பல படுகொலைகளில் இந்த சிங்களக் குற்றவாளிகளையே சிங்கள ஆக்கிரமிப்பு அரசு பாவித்திருக்கிறது. உக்ரேனில் நடப்பதையும், ஈழத்தில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம் என்று சப்பைக் கட்டுக் கட்டும் மேதாவிகளுக்கு இந்த ஒப்பீடு சமர்ப்பணம்.
  12. ஓ, அதுவா? சிலவேளைகளில் சிலருடன் விவாதம் செய்வதில் பயனில்லை என்று ஒதுங்கிவிடுவேன். அது, தாம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் நினைத்தால், அது எனது தவறல்ல. ஆனால், எமது போராட்டம் அழிக்கப்பட்டது சரியானதுதான் என்று இதுவரை தேசியவாத வேஷம் போட்டவர்கள் நிறுவ முயலும்போது, அதனை இல்லையென்று வாதிக்க, எழுதுவதைத்தவிர வேறு வழியில்லை. உங்களின் கருத்துக்களை வாசிக்கிறேன். தனியாக நின்று களமாடுகிறீர்கள். உங்களின் நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகள்.
  13. ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக எமது போராட்டம் அழிக்கப்பட்டதைச் சரியென்று வாதிடும் நிலையில் சிலர் இப்போது இருக்கிறார்கள். நீங்களும் அந்தத் தவற்றைச் செய்யவேண்டாம்.
  14. இதுபற்றி யாழ் இதுவரையில் ஏன் எதுவும் செய்யவில்லை இணையவன்? அதிமேதகு புட்டின் என்று வீம்பிற்காகவோ, எதிர்க்கருத்தாளர்களைச் சீண்டவோ அல்லது கருத்து வறட்சியினாலோ ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார் என்றால் அது நிச்சயம் தடுக்கப்பட வேண்டும்.
  15. அப்படி புலிகள் எந்த நாட்டுடன் கள்ள உறவை வைத்திருக்க விரும்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் கூறியபடியே ஏதோ ஒரு நாட்டுடன் புலிகள் கள்ள உறவு வைத்திருந்ததர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஆகவே இந்தியா எம்மை அழித்தது சரிதான் என்கிறீர்களா? நீங்கள் எப்போதிருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு அப்பாற் சென்று, அதனை அழிக்கத் துணைபோனவர்களின் பக்கம் நின்று நாம் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் நிலைக்கு வந்தீர்கள்? உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும், ஈழத்தில் இந்தியா செய்ததையும் சரியென்று வாதிடும் ஒருவரால் எவ்வாறு தேசியத்தலைவர்பற்றியும், போராட்டம் பற்றியும் போகிற போக்கில் "ரஸ்ஸியாவை விட தலைவரும் போராட்டமும் முக்கியம்" என்று ஒற்றைவரியில் தனது இயலாமையினை கூற முடிகிறது? போராட்டம் பற்றிய சரியான நிலைப்பாடும், தெளிவும் இருந்தால் இப்படி இரண்டு தோணியில் கால்வைத்துக்கொண்டு, தேவைக்கேற்ப ஒற்றைக்காலில் நிற்கவேண்டிய தேவையிருக்காது. இதில் உள்ள வேதனை என்னவென்றால், இதுவரை காலமும் தேசியத்திற்குச் சார்பாகப் பேசுவதாக தம்மை காட்டிக்கொண்ட பலர் இன்று எமது போராட்டம் அழிக்கப்பட்டதற்கான காரணங்களைத் தேடித்தேடி இணைத்துவருவதுடன், அவ்வாறு அழிக்கப்பட்டதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ராஜீவைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். கதிர்காமரைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இந்தியாவை மீறிச் செயற்பட முயன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இப்படியே புலிகளையும், தலைவரையும் எதிர்ப்பக்கம் நின்று சாடும் நீங்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும்? ஸ்கோர் கேட்டு ஆயுதப் போராட்டத்தின் பின்னால் செல்பவர்களுக்கு அதன் நியாயத்தன்மையும், தேவையும் புரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது இன்னும்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
  16. இதற்குள் இன்னொரு புது வேடிக்கையும் நடக்கிறது. ரஸ்ஸியாவை நியாயப்படுத்த, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கும் சந்தடி சாக்கில் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியா தனது பாதுகாப்பிற்காக புலிகளை அழித்தது சரியென்று வாதிடுமளவிற்கு புட்டின் விசுவாசம் கொடிகட்டிப் பறக்கிறது. அதையும் எப்படிச் செய்கிறார்கள் என்றால், "இலங்கைக்குள் இந்தியாவை மீறி ஒருத்தரும் வாலாட்ட ஏலாது, சொல்லிப்போட்டன்" என்று கூறிக்கொண்டே புலிகள் அழிக்கப்பட்டது சரியென்று நிறுவ முயல்வது தெரிகிறது. அதுசரி, இவ்வளவுகாலமும் தமிழ்த்தேசியத் தூண் என்று போட்ட வேஷம் எல்லாம் இனி என்னத்துக்கு? வெளிப்படையாகச் சொல்லலாமே, ரஸ்ஸியாவின் பாதுகாப்பிற்காக உக்ரேன் அழிக்கப்படுவது எவ்வளவு நியாயமோ அதேயளவு நியாயமானது இந்தியாவின் பாதுகாப்பிற்காக ஈழப்போராட்டம் அழிக்கப்பட்டது என்று? ஆனால், அதைத்தான் செய்யமாட்டார்களே? அதற்குத்தான் "உக்ரேன் வேற, ஈழப்போராட்டம் வேற" என்று "தக்காளிச் சட்டினியும், இரத்தமும்" கதை வைத்திருக்கிறார்கள். சிரிப்போ சிரிப்பு !
  17. எனக்குள் இருக்கும் கேள்வி என்னவென்றால், உக்ரேன் ரஸ்ஸியாவுடன் போரிடாமல் மண்டியிட்டு, தனது நாட்டை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் , ரஸ்ஸியாவினால் இன்று அழிக்கப்படவேண்டிய தேவை இருக்காது என்றால், நாம் ஏன் 1970 களில் இருந்து எமது நட்டைக் காக்கவும், இனத்தை அழிவிலிருந்து காக்கவும் ஆயுதப்போராட்டம் செய்தோம்? இன்றைக்கு உக்ரேன் அழிவது உக்ரேனின் முடிவினால்த்தான் என்று கூறினால், நாம் அழிவதும் எமது முடிவினால்த்தனே? அப்படியானால் நாமும் சிங்களவர்கள் எம்மை ஆக்கிரமிக்க விட்டுவிட்டு பேசாமல் இருந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? 1977 ஆம் ஆண்டு ஆவணி மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து நாடெங்கிலும் பரவிய தமிழருக்கெதிரான வன்முறையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பல மில்லியன் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. லட்சக்கணக்கான தமிழர்கள் வட கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள். ஆனால், இந்த வன்முறைகளை விசாரித்த, ஜெயாரினால் அமர்த்தப்பட்ட அவரது விசிவாசி , நீதிபதி சன்சொனி, "பெரும்பான்மையின மக்களை கோபப்படுத்தியதன் விளைவாகவே தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆகவே தமிழர்களின் அழிவுகளுக்கு அவர்களே பொறுப்பெடுக்கவேண்டும்" என்று கூறினார். இதே கருத்தைத்தான் இன்று ரஸ்ஸியாவை ஆதரிக்கும் மேதாவிகள் கூறுகின்றனர். சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஹிட்லரின் படைகள் பிரான்சுக்குள் நுழைந்தபோது, பிரான்ஸ் சண்டையிடாமல் சரணடைந்தது போல உக்ரேன் செய்திருந்தால், உக்ரேன் அழிந்திருக்காது என்று கூறும் மேதைகள், இலங்கை ராணுவம் முன்னேறும்போது புலிகளும் பின்வாங்கிச் சென்றிருந்தால் முள்ளிவாய்க்காலும் ஏற்பட்டிருக்காது என்று சொல்லத் தயங்குவது ஏன்? தமது பித்தலாட்டங்களை நியாயப்படுத்துவதற்கு , "உக்ரேனையும், ஈழப்போராட்டத்தையும் ஒப்பிட வேண்டாம்" என்று வியாக்கியானம் வேறு செய்துகொண்டு தொடர்கிறார்கள், சகிக்க முடியவில்லை!
  18. சித்திரவதைக் கூடமாக மாறிய யாழ்ப்பாணக் குடாநாடு செயலில் இறங்கிய அரச பயங்கரவாதம் 1979 ஆம் ஆண்டு ஆடி 13 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் முதன் முதலாக அரச பயங்கரவாதத்தின் முழு வீச்சினையும் கண்டுகொண்டது. நள்ளிரவு வேளை இலக்கத்தகடற்ற இரு வாகனங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிளம்பின. இவ்வாகானங்களில் அவசரப்பட்டு ஏறிக்கொண்ட பொலீஸ் குழுவொன்று தனது கொலை வேட்டைக்காக பயணித்துக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண நகருக்கு வெளியே இருந்த நவாலி எனும் சிற்றூரை நோக்கி பிரிட்டிஷ் தயாரிப்பான ஏ - 40 கார்வண்டியொன்று மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. மற்றைய ஜீப் வண்டி யாழ்நகரின் எல்லையில் அமைந்திருந்த, நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட முடமாவடி நோக்கி விரைந்துகொண்டிருந்தது. இன்பம் மற்றும் செல்வம் ஆகிய பெயர்களைக் கொண்ட இரு இளைஞர்களின் வீட்டின் முன்னால் அந்த ஏ - 40 கார் நின்றது. அந்தக் காரிலிருந்து திடு திடுப்பென்று மூன்று பொலீஸ்காரர்கள் காக்கிக் காற்சட்டையும், வெண்ணிற டீ சேர்ர்ட்டுக்களும் அணிந்தபடி இறங்கினர். அந்த இளைஞர்கள் இருவரும் துரையப்பாவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தவர்கள். ஆனால், அவர்களை மேலும் விசாரிக்கவேண்டும் என்று கூறி மூன்று பொலீஸ் குண்டர்களும் அவர்களை தமது காரில் இழுத்து ஏற்றினார்கள். பின்னர் அதே பகுதியில் வாழ்ந்துவந்த பாலேந்திரா எனும் இளைஞரையும் அவர்கள் இழுத்து ஏற்றிக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடாநாடு ஜீப் வண்டியில் சென்ற பொலீஸார் முதலில் ஆயுர்வேதக் கல்லூரியில் பயின்றுவந்த இந்திரராஜா எனும் இளைஞரை அவரது வீடு அமைந்திருந்த நல்லூர், பருத்தித்துறை வீதி, இரண்டாம் ஒழுங்கைப் பகுதியில் வைத்து கைதுசெய்து வண்டியில் ஏற்றிக்கொண்டனர். அங்கிருந்து கிளம்பிய அந்தப் பொலீஸ் குழு பின்னர் முடமாவடியில் வாழ்ந்துவந்த தபாலதிபரான செல்வதுரையின் வீட்டிற்குச் சென்றது. பொலீஸாரிடம் பேசிய செல்வதுரை தனது இரு மகன்களான ராஜேஸ்வரனும், பரமேஸ்வரனும் சாவகச்சேரிப் பகுதியில் அவர்களது மனைவிமார்களின் வீட்டில் வசித்து வருவதாகக் கூறினார். அந்த சகோதரர்கள் இருவரும் சோதிடரான சந்திரசேகரத்தின் இரு மகள்களை மணமுடித்திருந்தனர். மறுநாள் காலை பண்ணைப் பாலத்தினருகில் உருக்குலைந்த நிலையில் 27 வயது நிரம்பிய இன்பம் எனப்படு விஸ்வஜோதி இரத்திணம் மற்றும் 29 வயது நிரம்பிய செல்வம் எனப்படும் செல்வரட்ணம் ஆகியோரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அவர்களின் உடல்களில் கடுமையான சித்திரைவதைக் காயங்களும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் காணப்பட்டன. அவர்களின் மண்டையோடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. இந்திரராஜா மூன்று நாட்களுக்குப் பின்னர் யாழ் வைத்தியசாலையில் பொலீஸார் கையளிக்கப்பட்ட பின்னர் இறந்துபோனார். அவரது உடலில் இருந்த காயங்கள் அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதைப் பறைசாற்றியது. அவசரகாலச் சட்டத்தின்படி பொலீஸாராலும், இராணுவத்தாலும் கொல்லப்படும் நபர்களின் மரணம் தொடர்பாக எவரும் விசாரிக்கமுடியாது என்கிற கட்டுப்பாடு இருந்தபோதிலும், யாழ் வைத்தியசாலை அதிகாரிகள், பொலீஸாரால் கடுமையான சித்திரவதைகளின் பின் சுட்டும் அடித்தும் கொல்லப்பட்ட இன்பம், செல்வம் மற்றும் இந்திரராஜா ஆகியோரின் மரண விசாரணைகளைச் செய்திருந்தனர். யாழ்ப்பாண நீதவான் இந்திரராசாவின் மரணம் தொடர்பாக 1980 ஆம் ஆண்டு தை 8 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில், "உடலில் ஏற்பட்ட பல காயங்களின் விளைவாகவும் அதிர்ச்சியின் காரணமாகவும் இந்திரராசவுக்கு கடுமையான இரத்தப் போக்கும் , இருதயச் செயலிழப்பும், சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டிருப்பதால் மரணமடைந்திருக்கிறார். பொலீஸாரின் கடுமையான தாக்குதல்களாலேயே இவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்று தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறியிருந்தார். ஏனைய இரு இளைஞர்களான இன்பம், செல்வம் ஆகியோரின் மரண விசாரணை அறிக்கைகளும் இதனையே கூறின. அன்று நள்ளிரவு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ஏனைய மூன்று இளைஞர்களான ஆர்.பாலேந்திரா, எஸ்.ராஜேஸ்வரன், எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் தடயங்களின்றி காணாமலாக்கப்பட்டனர். வடமாகாணத்திலிருந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் பட்டியலில் பாலேந்திராவின் பெயர் இன்னமும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இக்கொலைகள் நடைபெற்று சரியாக இரு நாட்களின் பின்னர் வீரதுங்க யாழ்ப்பாணம் சென்று வடமாகாண இராணுவத் தளபதியாக பொறுப்பெடுத்துக்கொண்டார். தனது நியமனம் கிடைத்த நாளே தனது பிறந்தநாள் என்பதால், அந்நாளில் பதவியேற்பதைத் தவிர்த்துவிட்டார். தனது நியமனத்தையும், பிறந்தநாளையும் வெகு விமர்சையாக அவர் கொண்டாடினார். வீரதுங்க யாழ்ப்பாணத்திற்குச் சென்று பொறுப்பெடுத்தவுடன், தமிழ் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள் பலமடங்கு அதிகரித்தன. போராளிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். போராளிகள் என்று காட்டிக்கொடுக்கப்பட்ட பல இளைஞர்கள் கொல்லப்பட்டு யாழ்ப்பாணமெங்கும் பொதுமக்களின் கண்களில் படும்படி வீசியெறியப்பட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரின் விசாரணை என்பது "சித்திரவதைகளின் பின்னர் கொன்றுவிடுவதே" என்று ஆகிப்போனது. பலநூற்றுக்கணக்கான இளைஞர்கள் இக்காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் பழைய பூங்காவின் பிற்பகுதியில் இராணுவக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றினை அப்பகுதி மக்கள் சித்திரவதைக் கூடாரங்கள் என்றே அழைத்துவந்தனர். பத்திரிக்கையாளர்களிடமும், மனிதவுரிமை அமைப்புக்களிடமும் பேசிய சுண்டுக்குளிப் பகுதி மக்கள் இரவுவேளைகளில் இந்த கூடாரங்கள் இருக்கும் பகுதியில் இருந்து அழுகுரல்களும், ஓலங்களும் தொடர்ச்சியாகக் கேட்டு வந்ததாகவும், தமிழ் இளைஞர்கள் வலியினால் துடி துடித்துக் கதறுவதை தாம் பலமுறை கேட்டதாகவும் கூறியிருந்தனர். இந்த அவலங்களால் தாம் மிகுந்த அச்சமுற்று இரவுகளைக் கழித்து வருவதாகவும் கூறினர். யாழ்ப்பாணத்து மக்கள் ஒவ்வொரு காலைகளிலும் உருக்குலைக்கப்பட்ட நிலையில் கொன்று எறியப்பட்ட தமது இளைஞர்களின் உடல்களைக் கண்டனர். யாழ்ப்பாண மக்களை அச்சுருத்தி பணியவைக்கவே இந்தக் கொலைகளை இராணுவத்தினர் செய்துவந்தனர். உருக்குலைக்கப்பட்டு கிடந்த தமிழ் இளைஞர்களின் உடல்களை வெளிப்படையாக பொதுமக்களின் பார்வைக்கு வைத்ததன் மூலம் இராணுவம் தமிழ் மக்களுக்கு கூறிய செய்தி, "போராளி அமைக்களில் இணைந்தாலோ அல்லது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாலோ உங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்பதுதான். பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வீசி எறியப்பட்ட உடல்கள் அனைத்துமே இறந்திருக்கவில்லை. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டைக்கு முன்னால் இருந்து யாழ் சிறைச்சாலை காவலர்களால் கண்டெடுக்கப்பட்டு யாழ்வைத்தியசாலையில் கையளிக்கப்பட்ட ஜெயெந்திரனின் உடலில் இன்னமும் உயிர் இருந்தது. அவர் இன்னமும் கஷ்ட்டப்பட்டு சுவாசித்துக்கொண்டிருந்தார். அவரைப் பரிசோதித்த வைத்தியர் ஜெயெந்திரன் இறக்கவில்லை என்பதனை உறுதிப்படுத்தினார். உடுவில் பகுதியிலிருந்து இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட ஜெயெந்திரன், மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் அதுலத் முதலியின் விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளிக்கும் வரை உயிரோடு இருந்தார். அதுலத் முதலியின் விசாரணைக் குழு ஆடி 13 ஆம் திகதி காணமலாக்கப்பட்ட 6 இளைஞர்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. பொலீஸாரின் கொடூரங்கள் பற்றி அதுலத் முதலியின் குழுவின் முன்னால் சாட்சியமளித்த இன்னொருவர் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த நகைத் தொழிலாளரான மதியாபரணம் என்பவர். நடுத்தர வயது கொண்டிருந்த மதியாபரணம் அவர்கள் துப்பாக்கிகளைத் திருத்துவதற்கான சட்டரீதியான அனுமதிப் பத்திரத்தைக் கொண்டிருந்தவர். ஆனைக்கோட்டைப் பொலீஸ் நிலையத்தின் துப்பாக்கிகளை அவர் பழுதுபார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்த பொலீஸ் அதிகாரிகளை அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஒருநாள் இரவு, அவரது நண்பரான சந்திரன் என்பவர் தனது நண்பர் ஒருவரின் பொலீஸாருடனான பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதற்கு உதவிநாடி மதியாபரணத்தைச் சந்திக்க வந்திருந்தார். மூவரும் பொலீஸ்நிலையம் நோக்கிச் சென்றபின், சந்திரன் தனது சைக்கிளில் வெளியே காத்துநிற்க மதியாபரணமும், சந்திரனின் நண்பரும் உள்ளே சென்றனர். மதியாபரணமும் சந்திரனின் நண்பரும் தமது வேலை முடிந்து பொலீஸ்நிலையத்திற்கு வெளியே வந்தபோது அங்கே சந்திரனைக் காணவில்லை. அவரது உடல் மறுநாள் செம்மணி சுடலையின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. மதியாபரணம் இதனை மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடமும் அதிகாரிகளிடமும் கூறினார். அவரைப் பழிவாங்க நினைத்த பொலீஸார், அவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து, அவர் தொடர்ந்தும் தமது அக்கிரமங்கள் பற்றிப் பேசுவதைத் தடுத்தனர். பொலீஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஒருநாள் இரவு தமது ஜீப் வண்டி பழுதடைந்துவிட்டதனால், மதியாபரணத்தை தமது ஜீப் வண்டியத் தள்ளுமாறு பொலீஸார் கேட்டனர். அப்போது ஜீப்பின் பின்பகுதியில் நான்கு உடல்களை அவர் கண்டார். அவற்றுள் ஒன்று ராஜேஸ்வரனுடையது. ஆனால், அவர் இன்னமும் இறந்திருக்கவில்லை. அவரை தனது மடியில் தூக்கிவைத்து காப்பற்ற மதியாபரணம் முனைந்தவேளையில், அவரது மடியிலேயே ராஜேஸ்வரனின் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவத்தை மதியாபரணம் அதுலத் முதலியின் ஆணைக்குழுவின் முன்னால் கூறினார். அவர் தொடர்ந்தும் சாட்சியமளிகையில், காணமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்களை பொலீஸார் யாழ்ப்பாணம் கேரதீவுச் சாலையின் பகுதியொன்றில் புதைத்ததாகக் கூறினார். "பொலீஸார், தமிழ் இளைஞர்களின் உடல்களை வீதியின் அருகில் புதைத்துக்கொண்டிருக்கையில், நேரதாமதத்தினால் யாழ்ப்பாணம் - கேரதீவு பேரூந்து அவ்வழியால் வந்துகொண்டிருந்தது. பேரூந்திலிருந்த மக்கள் அனைவரும் வெளியே தலைகளை நீட்டி பொலீஸார் இளைஞர்களைப் புதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். இதனால் கொதிப்படைந்த பொலீஸார் என்னை அங்கேயே விட்டு விட்டு அவசரத்துடன் கிளம்பிச் சென்றார்கள்" என்று அதுலத் முதலியின் குழுவின் முன்னால் கூறினார். ஆனால் மதியாபரணத்தின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் என்று ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆகவே, இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதே பொலீஸாரிடம் ஆணைக்குழு கேட்டுக்கொண்டது. இந்த ஆணைக்குழுவின் முக்கிய தோல்வி, ராஜேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரது காணாமற்போதல்கள் பற்றிய அவர்களது மாமனாரான சந்திரசேகரத்தின் வாக்குமூலத்தை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள மறுத்ததுதான். அவர்களின் தந்தையாரான செல்வதுரையின் வாக்குமூலத்தினை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டாலும் கூட, அவரது பிள்ளைகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டது சாவகச்சேரியிலிருந்த அவர்களது மாமனாரின் வீட்டில் இருந்துதான் என்பதும், இதற்கு அவர்களது மாமனாரே கண்ணால் கண்ட சாட்சியம் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆணைக்குழு முன்னால் சந்திரசேகரம் வாக்குமூலமளிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வேண்டுமென்றே தடுக்கப்பட்டன. சாவகச்சேரிப் பாராளுமன்ற உறுப்பினரான வி.என். நவரட்ணத்தை சந்திரசேகரம் இதுகுறித்து உதவுமாறு கோரி அணுகியபோது, "இது என்னுடைய பிரச்சினையில்லை, நான் தலையிட முடியாது" என்று கூறி கையை விரித்துவிட்டார். அதுலத் முதலியின் ஆணைக்குழுவில் சிவசிதம்பரம் ஒரு உறுப்பினராக இருந்தபோதும் ஜெயாருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு உருவாகி வந்த நட்பைப் பாதித்து விடும் என்பதனால சந்திரசேகரத்தின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளவைக்க எந்த முயற்சியிலும் அவர் ஈடுபட விரும்பவில்லை.
  19. தமிழர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் லலித் அதுலத் முதலியின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இத்தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் எனும் சொற்பதத்திற்கான விளக்கம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்துச் சட்டத்தின் படி பயங்கரவாதம் எனும் சொல்லிற்கு பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது, "அரசியல் ரீதியிலான முடிவுகளை நோக்கி நடத்தப்படும் வன்முறைகள்". இலங்கை உருவாக்கிய 1979 இல் உருவாக்கிய சட்டம் முன்னர் உருவாக்கப்பட்ட சட்டத்திற்கான திருத்தங்கள் என்று மட்டுமே கூறியிருந்தது. இச்சட்டத்தின்படி குற்றங்களும் தண்டனைகளும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டிருந்தன, தமிழ் மக்கள் மேல் குரூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்த இந்தச் சட்டத்தின் சில பகுதிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், 1. ஒரு குறித்த நபருக்கு மரணத்தை விளவிக்கும் அல்லது ஒரு குறித்த நபரைக் கடத்தும் அல்லது ஒரு குறித்த நபர் மீது தாக்குதலை நடத்தும் எந்த ஒரு நபரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின்படி மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 2. ஒரு குற்றத்திற்கான சாட்சியாக இருக்கும் ஒரு நபரை கொல்லும் அல்லது கடத்திச் செல்லும் அல்லது அந்தச் சாட்சி மீது தாக்குதல் நடத்தும் எவரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 3. ஒரு குறித்த நபருக்கு அச்சுருத்தல் விடுப்பது அல்லது சாட்சியொன்றிற்கு அச்சுருத்தல் விடுப்பது, அரச சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, திணைக்களங்கள், பொதுமக்கள் கூட்டுத்தாபனங்கள், வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது, அல்லது இந்த அரச சொத்துக்களைக் கையாடுவது, சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆயுதங்களை, தோட்டாக்களை, வெடிமருந்துகளை, அவற்றின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வது அல்லது தயாரிப்பது மற்றும் இவற்றினைப் பாவிப்பது அல்லது பாவிப்பதற்கு உத்தேசித்திருப்பது , பாதுகாப்புப் பகுதியொன்றில் ஆயுதங்களை, வெடிபொருட்களை, உதிரிப்பாகங்களை வைத்திருப்பது, அவற்றைப் பாவிப்பது அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது, 4. இனங்கள், மதங்கள், சமூகங்களுக்கெதிரான வார்த்தைகளை, சொற்களை, பிரசுரங்களை இனங்களுக்கிடையே பகைமையினை வளர்க்கும்படி பாவிப்பது, அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது 5. சட்டத்திற்குப் புறம்பான வகையில் பெருந்தெருக்கள், வீதிகள், பொதுமக்கள் பாவிக்கும் சொத்துக்களில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட ஏனைய அறிவித்தல்களை அழிப்பது, மாற்றம் செய்வது, சேதப்படுத்துவது, 6. குற்றச்சாட்டிற்குள்ளான ஒரு நபரை மறைத்துவைப்பது அல்லது அவர கைதுசெய்யப்படுவதைத் தடுப்பது அல்லது கைது நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிப்பது, ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடும் எந்த ஒருவரும் இச்சட்டத்தின்படி தண்டணைக்குள்ளாவார். 7. இவ்வாறு குற்றவாளிகளால் இலக்குவைக்கப்படும் குடிமக்கள் நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ, அமைச்சர்களாகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, உள்ளூர் அதிகாரிகளாகவோ, இராணுவம் மற்றும் பொலீஸ் உறுப்பினர்களாகவோ, சட்டத்துறையில் செயலாற்றுபவர்களாகவோ இருப்பர். இதற்குத் தண்டனையாக மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 8. சட்டத்தின் பகுதி 2 மற்றும் பகுதி 3 இன் அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். இந்த குற்றவாளியால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் முறையற்றவை என்று பிரகடணப்படுத்தப்படும். 9. ஒரு நபர் குற்றமொன்றைச் செய்யவிருக்கிறார். அல்லது குற்றத்தைச் செய்துவிட்டார் என்று தெரிந்தும் அதனை மறைத்தல், அவரது நகர்வுகளை அதிகாரிகளுக்கு வழங்க மறுத்தல், குற்றவாளியினது மறைவிடங்கள் பற்றிய தகவல்களை வழங்க மறுத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஏழு வருடங்களுக்கு உட்பட்ட வகையில் சிறைத்தண்டனை வழங்கப்படும். 10. மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடும் தனிநபரோ, அமைப்போ, நிறுவனமோ இதேவகையான தண்டனைக்கு உள்ளாகும். தமிழ் மக்களை இலக்குவைத்தே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, இச்சட்டத்தினை எதிர்க்க முன்வராமல் மெளனம் காக்கத் திட்டமிட்டது. முன்னணியினருக்கு தனது மகிழ்வான முகத்தை அப்போது காட்டிக்கொண்டிருந்த ஜெயவர்த்தனவைக் கோபப்பபடுத்திப் பார்க்க முன்னணியின் எந்த உறுப்பினரும் தயாராக இருக்கவில்லை. இச்சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பதை விடுத்து, விவாதத்தில் கலந்துகொள்ளாது விடுவதன் மூலம் ஜெயாரை சாந்தப்படுத்திய முன்னணியினர், தமிழ் இளைஞர்களைச் சாந்தப்படுத்த இச்சட்டத்தினை விமர்சித்து அறிக்கையொன்றினை மட்டும் வெளியிட்டனர். மேலும், தமது கட்சியின் மத்திய குழுவில்க் கூட இச்சட்டம் பற்றிய விவாதங்களை நடத்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை மறுத்துவிட்டது. ஆனால், பாராளுமன்றத்தில் இச்சட்டத்தினை எதிர்க்கட்சியாகவிருந்த சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களித்தது. வெறும் 8 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த அக்கட்சியினால் இச்சட்டத்தினைத் தடுத்து நிறுத்தவியலாமல்ப் போய்விட்டது. இந்தக் கொடூரமான சட்டம் நாட்டிலிருந்த மனிதவுரிமைகள் செயற்ப்பாட்டாளர்களினதும், பல நீதிபதிகளினதும் கண்டனத்திற்குள்ளானது. கண்டனத்துக்குள்ளாக்கப்பட்ட இச்சட்டத்தின் சில பகுதிகளாவன, 1. பொலீஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சியமாகப் பாவிக்கப்படக்கூடியன. 2. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வைத்திருந்த எந்தப் பொருளும், ஆவணமும் அவருக்கெதிராக சாட்சியமாகப் பாவிக்கப்படும். 3. ஒருவர் குற்றவாளியாக இருக்கலாம் என்று அமைச்சர் சந்தேகப்படுமிடத்து, அந்த நபர் குறைந்தது 18 மாதங்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட முடியும்.
  20. ஜெயவர்த்தனவிடம் அடைக்கலமாகிப்போன அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழருக்கான சுயநிர்ணய உரிமையினை மார்க்ஸிச - லெனினிஸக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கவேண்டும் அல்லது வேண்டாம் என்கிற பாரிய சர்ச்சையொன்று தமிழ் மற்றும் சிங்கள இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. சிங்கள இடதுசாரிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்குத் தகுதியுடையவர்கள் ஆனபோதும் கூட நாட்டைப் பிரித்து தனியான நாடொன்றினை உருவாக்கும் நிலைப்பாட்டை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாலசிங்கம் தனது இரண்டாவது பிரசுரத்தில் இவ்வாறு எழுதினார், "சோசலிசத் தமிழீழம் நோக்கி". அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் என்கிற வகையில் தமிழர்கள் பிரிந்துசெல்வதற்கு உரித்துடையவர்கள் என்று அவர் எழுதினார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகத்தின் பிரதியொன்று பிரபாகரனுக்கும் கிடைத்தது. பாலசிங்கம் எழுதிய இப்புத்தகத்தை பிரபாகரன் படித்தபோது அதன்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக "சுதந்திர வேட்கை" எனும் புத்தகத்தில் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். பாலசிங்கத்தின் தாத்துவார்த்த ரீதியிலான ஆய்வுகள் லண்டனில் இயங்கிவந்த புலிகளின் செயற்பாட்டாளர்களான கிரிஷ்ணன், ஆர் ராமச்சந்திரன் (அன்டன் ராஜா) ஆகியோருடன் அன்டன் பாலசிங்கம் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. பாலசிங்கத்தை அடிக்கடி சந்தித்துக்கொண்ட இவர்கள், புலிகளின் செயற்பாடுகள் குறித்து அவருக்குத் தொடர்ச்சியாக அறிவூட்டியும் வந்தார்கள். அத்துடன் தமது அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு பாலசிங்கத்தின் உதவியினையும் நாடத் தொடங்கினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை, உலக இளைஞர் மாநாட்டில் தமிழரின் போராட்டம் தொடர்பான அறிக்கையொன்றினை வெளியிடத் தீர்மானித்தது. இதற்கு பாலசிங்கத்தின் உதவியை உமா மகேஸ்வரன் நாடினார். பாலசிங்கம் எழுதிய அந்த அறிக்கை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜேர்மனிய, போத்தூகேய மற்றும் தமிழ் மொழி ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகியது. இந்த அறிக்கை, மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்துலகப் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. போரும் சமாதானமும் விளையாட்டு புலிகளை சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்தும் உமா மகேஸ்வரனின் திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுவதில் சிக்கல்கள் தோன்றியது. 1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் இலங்கையில் தோன்றியிருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாக அமைந்தைருந்தது. காளைமாடு - வீரதுங்க எதிர்க்கட்சியினருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சேர்ந்தால் தமிழருக்கெதிரான இன்னொரு வன்முறைக் கலவரத்தை உருவாக்குவேன் என்று அச்சுருத்தி, அந்த முயற்சியைத் தவிடு பொடியாக்கியிருந்த ஜெயவர்த்தன, தனது போர் விளையாட்டுக்களை முன்னெடுப்பதில் உறுதியுடன் செயற்படத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு ஆடியில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அவர் நடைமுறைப்படுத்தினார். இந்தச் சட்டம் பாராளுமன்றத்தால் ஆடி 20 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வடமாகாணத்திலிருந்து தீவிரவாதத்தை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற கட்டளையுடன் தனது மருமகனான, "காளை மாடு" என்றழைக்கப்பட்ட திஸ்ஸ வீரதுங்கவை வடமாகாணத்திற்கான இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக அவர் ஆடி 14 இல் நியமித்தார். ஜெயவர்த்தன, காளைமாட்டு வீரதுங்கவிற்கு இட்ட ஆணை இவ்வாறு கூறியிருந்தது "தீவிரவாதத்தையும், அதன் அனைத்து விதமான வடிவங்களையும் இந்த நாட்டிலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து, நாட்டின் அனைத்துச் சட்டங்களின் பிரகாரம் முற்றாக அழித்தொழிப்பதற்கு நீர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறீர். இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் அனைத்து மக்களையும் உமது இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உம்மால் மேற்கொள்ளப்படும் இந்த பயங்கரவாத அழிப்பு நடவடிக்கை 1979 ஆம் ஆண்டு மார்கழி 31 ஆம் திகதிக்குள் முற்றுப்பெறவேண்டும்". வீரதுங்கவின் இராணுவ நடவடிக்கைக்கு ஏதுவாக ஆடி 12 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் சரத்து 14 இனைப் பாவித்து அவசரகால நிலைமையினை ஜெயவர்த்தன பிரகடணப்படுத்தினார். இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகத்திற்கிடமான எவரையும் உடனேயே சுட்டுக் கொல்லும் அதிகாரமும், அவர்களது உடல்களை விசாரணையின்றி எரித்துவிடும் அதிகாரமும் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டது. பொலீஸாரினதும், இராணுவத்தினதும் மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்குவதாகக் கணிக்கப்பட்ட சுமார் 200 போராளிகளுக்கெதிராகவே ஜெயவர்த்தனவின் இந்த இராணுவ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. தமிழ் பொலீஸ் பரிசோதகர் குருசாமியின் இழப்பிற்குப் பின் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த பொலீஸ் உளவுப்பிரிவு சரிவைச் சந்தித்திருந்தது. அதேவேளை, பலாலி இராணுவ முகாமில் கப்டன் முனசிங்க தலைமையில் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் புலநாய்வுப் பிரிவு செயற்படும் நிலைக்கு வந்திருந்ததுடன், அப்பிரிவு யாழ்ப்பாண இராணுவத் தளபதி பிரிகேடியர் ரணதுங்கவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கத் தொடங்கியது. இராணுவம் முறுக்கேற்றப்பட்ட நிலையிலும், அந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சட்டப் பாதுகாப்புக்கள் பலமாக இடப்பட்ட நிலையிலும், ராணுவ தீர்வில் வெகு இறுமாப்புடன் இருந்த ஜெயவர்த்தன, தனது கவனத்தை அரசியல்க் களம் நோக்கித் திருப்பத் தொடங்கினார். தன்னால் அடிபணியவைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும், அவரது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தொடர்ந்தும் தமிழருக்கெதிரான கலவரம் பற்றி அச்சத்தில் வைத்திருக்க தனது பிரதமரான ரணசிங்க பிரேமதாசாவை ஜெயவர்த்தன பாவித்தார். இந்தச் செய்தியை பதியும்படி நான் பணிக்கப்பட்டிருந்தேன். நான் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பல சந்திப்புக்களில் கலந்துகொண்டேன். அவர்கள் மிகுந்த பதற்றத்துடனும், அதேவேளை கவலையுடனும் காணப்பட்டார்கள். "தமிழர்களால் இனியொரு இனக்கலவரத்தைச் சந்திக்க முடியாது" என்று அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பக் கூறினார்கள். இனங்களுக்கிடையிலான பதற்றநிலையினைத் தவிர்ப்பதற்கு இருபகுதியினரும் இணைந்து சில நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பிரேமதாச முன்னணியினரிடம் ஆலோசனை கூறினார். அதற்கு உடனடியாகவே அமிர்தலிங்கம் ஒப்புக்கொண்டார். பாராளுமன்றத்தின் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் பின்னர் பிரேமதாசவுடன் இணைந்து அறிக்கையொன்றினை முன்னணியினர் தயாரித்தனர். நாட்டு மக்களிடம் முன்வைக்கப்பட்ட அந்த வேண்டுகோள் இப்படிக் கேட்டிருந்தது, "நாம் இந்த நாட்டு மக்களிடம் வேண்டுவது யாதெனில், தீய சக்திகளின் வதந்திகளாலும், நடவடிக்கைகளாலும் ஆட்கொள்ளப்பட்டு விடாது, அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான். பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைத்து அரசியல், மதத் தலைவர்கள், சமூக சேவைகள் அமைப்புக்கள் ஆகியோரிடமும் நாம் மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும், சட்டம் ஒழுங்கினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த தம்மாலான சகலதையும் செய்யவேண்டும் என்றும், தமது தேர்தல்த் தொகுதிகள், கிராமங்கள் மட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுத்து மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவதைத் தடுக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" "தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கி மக்கள் மீது இனரீதியான வன்முறைகளை ஏவிவிடக் காத்திருப்போரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் நாம் எம்மாலான சகலதையும் செய்வோம் என்று உறுதியெடுக்கிறோம்". "எமது நாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் சமாதான ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று திடமாக நம்பும் அதேவேளை, அரசியல் லாபத்திற்காக சில விஷமிகள் விரித்துவரும் வலையில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" "நாகரீகமடைந்த மக்கள் கூட்டம் என்கிற வகையில், எமக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை சமாதான வழிகளில் எம்மால் தீர்த்துக்கொள்ள எமது மதங்களோடு இணைந்த பாரம்பரியங்கள் எமக்கு எப்போதும் துணைநிற்கும் என்பதை நாம் சர்வதேசத்திற்குப் பாடமாக எடுத்துக் கூறுவோம்". இந்த ஒருங்கிணைந்த வேண்டுகோளிற்கே ஒரு அரசியல்க் காரணம் இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜெயவர்த்தன முயன்று வந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த ஆடி 19 ஆம் திகதி, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உருவாக்கம் பற்றிக் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்கும் அழைப்பு விடுத்தார் ஜெயவர்த்தன. இந்த அழைப்பினை உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள, எதிர்க்கட்சியோ அழைப்பை நிராகரித்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனது அழைப்பிற்குச் சாதகமாகப் பதிலளித்ததையடுத்து, அதற்குப் பிரதிபலனாக ஜெயார் சில விடயங்களைச் செய்யப்போவதாக அறிவித்தார். வவுனியாவில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக வாழும் மூன்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அநுராதபுரம் மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தனது முடிவினை நடைமுறைப்படுத்தப்போவதில்லை எனும் அறிவிப்பு மற்றும் லலித் அத்துலத் முதலி தலைமையில் உருவாக்கப்படும் பாராளுமன்றத் தெரிவிக்குழுவினூடாக யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை செய்யப்போவதாக ஜெயவர்த்தன முன்னணியினரிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவை எப்படியாவது மகிழ்வித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தாம் அதுவரை பகிஷ்கரித்து வந்த பாராளுமன்ற அமர்வுகளில் இனிக் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்தது. தனது போர் விளையாட்டு வெற்றிபெற்று வருவது கண்டு பூரிப்படைந்த ஜெயவர்த்தன, தமிழர்களுக்கு நீதிவழங்கத் தான் தயாராக இருப்பதாகவும், பேராசிரியர் ஏ.ஜே.வில்சனுடனான தனது கலந்துரையாடல்களின் அடிப்படியில் மாவட்ட அதிகார சபைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமிக்கப்போவதாகவும் அறிவித்தார். இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் ஏ.ஜே. விஜேகோனும், ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி. ஏ.ஜே. வில்சன், கலாநிதி. ஜே.ஏ.எல். குரே, கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் ஏ.சி.எம்.அமீர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இது ஜெயவர்த்தனவின் மிகச்சிறந்த தந்திர நகர்வாகக் கருதப்பட்டது. இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக அவர் வரிந்துகொண்டார். இதன்மூதல் தமிழ்ப் போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நிரந்தரப் பிரிவை அவர் உருவாக்கினார். இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முற்றான தோல்வியையும் அவர் உறுதிப்படுத்தினார்.
  21. உக்ரேன் அழிக்கப்பட்டது உக்ரேனின் குற்றம், ஏனென்றால் உக்ரேன் தான் தன்னை ரஸ்ஸியா அழிக்கும்படி ஆசைப்பட்டது. அதேபோல், ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதும் ஈழத்தமிழனின் குற்றம். இலங்கையும் இந்தியாவும் தம்மை அழிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது அவர்கள் தான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிரபாகரா?? என்று எழுதுமளவிற்கு இறங்கியிருக்கிறோம். இந்தியாவின் பாதுகாப்பிற்கு புலிகள் அழிக்கப்படவேண்டும் என்றும் எழுதிய அதே போலித்தேசியவாதிகள் தான் இன்றும் முள்ளிவாய்க்காலில் முடியவேண்டும் என்று ஆசைப்பட்டது ஈழத்தமிழர்கள் என்று எழுதுகிறார்கள். ஆக, இன்று உலகில் அழிக்கப்படும் இனங்கள் எல்லாம் அவர்களின் ஆசையினால்த்தான் அழிக்கப்படுகிறார்கள். அழிப்பவன் மேல் எந்தக் குற்றமும் இல்லை. அதை நீங்கள் இணைத்துவிடக்கூடாதென்பதற்காக ஒருவர் அவசரப்பட்டு, தானே இணைத்து, அதனையும் சரியென்று வாதாட, இன்னொருவர் படத்தை இணைக்க விரும்புவோருக்கு என்று விழித்து, "மக்களும் தான் கொல்லப்பட்டார்கள்" என்று ஜால்றா அடிக்கிறார். தாம் கக்கியதையே அள்ளி மீள வாயில் போடுமளவிற்குச் சில விசுவாசிகள் வந்திருக்கிறார்கள்.
  22. பாலா அண்ணா இந்த இளைஞர் விழா நிகழ்வினைத் தமக்குச் சாதகமாகப் பாவித்த புலிகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய துண்டுப்பிரசுரங்களை அங்கு வந்திருந்த வேறு நாட்டு இளைஞர்களிடம் விநியோகித்தனர். இந்தத் துண்டுப் பிரசுரம் அன்டன் ஸ்டனிஸ்லோஸ் பாலசிங்கம் எனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனால் வெளிநாடொன்றில் வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் வீரகேசரி பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும் பின்னர் கொழும்பில் இயங்கிவந்த பிரித்தானியாவின் உயர்ஸ்த்தானிகராலயத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டு வந்தவர் அன்டன் பாலசிங்கம். பின்னர் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் காலத்தில் அவரது துணைவியார் கடுமையான சிறுநீரகக் கோளாறினால் மரணமானார். அதன்பிறகு, அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்த தாதியான அடேலை பாலசிங்கம் மணமுடித்தார். இவர்கள் இருவரும் லண்டன் பலகலைக் கழகத்தில் சமூகவியல் கற்கை நெறிக்கான காலத்தில் சந்தித்திருந்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம், தனிநாடொன்றினை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை, 1977 ஆம் ஆண்டுத் தேர்தல், அதன்பின்னரான தமிழர் மீதான வன்முறைகள், புலிகளின் வெளிப்படுத்தல், அவ்ரோ விமானம் மீதான தாக்குதல் ஆகிய விடயங்கள் லண்டனில் வாழ்ந்துவந்த பல தமிழ் இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்க , அவர்கள் 33 வயது நிரம்பிய, தமது பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவரான பாலாவைச் சூழ்ந்துகொண்டு ஊர் நிலவரங்கள் பற்றிப் பேசத் தொடங்கினர். அந்த இளைஞர்களில் ஒருவரான ஞானசேகரன் தமிழர்களின் பிரச்சினை குறித்து கட்டுரை ஒன்றை வரையும்படி பாலாவைக் கேட்டார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பாலா செய்தார். பாலா எழுதிய துண்டுப்பிரசுரம் இப்படிக் கூறியது, "தமிழ்த் தேசியப்பிரச்சினை தொடர்பாக". பாலசிங்கத்தின் இந்த முயற்சி அவரை லண்டனில் வாழ்ந்துவந்த புலிகளியக்க தொடர்பாளர்கள் மற்றும் ஈரோஸ், டி.எல்.ஒ ஆகிய ஏனைய அமைப்பின் செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கத்தை ஏற்படுத்த உதவியது.
  23. கியூபாவிற்குச் சென்ற புலிகள் போராளி அமைப்புக்களின் முக்கியஸ்த்தர்கள் அமிர்தலிங்கத்தின் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து வந்த நிகழ்வுகள் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னரும் நடந்தது. இந்தப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுள் பிரபாகரனே அனைவராலும் அதிகம் நேசிக்கப்பட்டார். மங்கயற்கரசி என்னிடம் ஒருமுறை பேசும்போது "பிரபாகரன் எங்களின் மகன்களில் ஒருவராக எங்களுக்குத் தெரிந்தார்" என்று கூறினார். " அவர் எமது வீட்டிற்கு வரும்போதெல்லாம் நான் அவர் விரும்பி உண்ணும் கோழிக்கறியைச் சமைப்பேன். அவர் எம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது எனது மகன்களை முத்தமிடுவது போல அவரையும் முத்தமிட்டே அனுப்பிவைப்பேன்" என்று அவர் கூறினார். அமிர்தலிங்கத்தின் பிரத்தியேக காரியாதிரிசியான ஆர். பேரின்பநாயகம் பேசும்போது, பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரைச் சந்திக்கச் செல்லும்போது அவருக்குப் பிடித்தமான கோழி இறைச்சிப் பொறியலை மங்கையற்கரசி எடுத்துச் செல்வது வழமை என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் வெள்ளிவிழா கொழும்பில் 2003 ஆம் ஆண்டு ஆவணி 24 ஆம் திகதி நடைபெற்றபோது பேசிய மங்கையற்கரசி பிரபாகரன் மீது தான் வைத்திருந்த பாசம் குறித்துப் பேசத் தவறவில்லை. அமிர்தலிங்கமும் பிரபாகரனை மிகவும் அன்புடனேயே நடத்தி வந்தார். பதிலுக்கு பிரபாகரன் அமிர்தலிங்கத்தைப் பெரிதும் மதித்து நடந்துவந்தார். 1981 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவின் மாவட்ட சபை மந்திரிப்பொறுப்புக்கள் எனும் பொறிக்குள் அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் விழும்வரை இந்த உறவு மாறாமலேயே இருந்து வந்தது. அமிர்தலிங்கத்தைப் பலப்படுத்துவதன்மூலம் பிரபாகரனைப் பலவீனமாக்குவதற்குப் பதிலாக, ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்தைப் பலவீனப்படுத்தி பிரபாகரனைப் பலப்படுத்தியிருந்தார். இதுவே இலங்கையின் சரித்திரத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதுபற்றிய தகவல்கள் இனிவரும் அத்தியாயங்களில் பேசப்படும். கியூபா நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, கியூபாவிற்குச் சென்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் புலிகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். 1979 ஆம் ஆண்டு கியூபாவின் ஹவானாவில் உலக மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான விழா நடந்திருந்தது. இந்த விழாவிற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்விப்பட்ட உமா மகேஸ்வரன் அமிர்தலிங்கத்தை அணுகி இக்குழுவில் புலிகள் அமைப்பின் மூன்று உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார். 1977 ஆம் ஆண்டு புலிகளுக்கும் முன்னணிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒப்பந்தம் ஒன்றிற்கு அமைவாக முன்னணியின் அரசியல்த் தலைமையின் கீழ் இரகசிய ஆயுத அமைப்பாக புலிகள் இயங்குவார்கள் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேசத்து விடுதலை அமைப்புக்களிடமிருந்து பணம் முதலான உதவிகளைப் புலிகள் பெற்றுக்கொள்ள அமிர்தலிங்கம் உதவ ஒத்துக்கொண்டதாகவும் தெரியவருகிறது. ஆகவே, இவ்வாறான் இளைஞர் நிகழ்வொன்றிற்குச் செல்வதன் மூலம் ஏனைய கெரில்லா அமைப்புக்களின் பரிட்சயமும் தமக்கு ஏற்படும் என்று உமா அமிர்தலிங்கத்திடம் கூறியிருக்கிறார். இதுபற்றி பின்னர் நடந்த விசாரணைகளில் அரசை ஏமாற்றி புலிகளையும் தமது தூதுக்குழுவில் முன்னணியினர் அனுப்பியிருந்தனர் என்று பொலீஸார் குற்றஞ்சாட்டியுமிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளின் இந்த வேண்டுகோளினை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்டார். மாவை சேனாதிராஜாவை தமது தூதுக்குழுவின் இளைஞர் அமைப்பின் தலைவராகவும் காசி ஆனந்தனை தமிழர் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளின் தலைவராகவும் அமிர்தலிங்கம் நியமித்தார். தூதுக்குழுவின் ஏனைய மூன்று இடங்களையும் சிங்கநாயகம், சாந்தன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நிரப்பினர். இது முன்னணிக்குள் சில கசப்புணர்வுகளை ஏற்படுத்தி விட்டிருந்தது. முன்னனியின் பிரதிநிதியாக இந்த நிகழ்விற்குச் செல்ல விரும்பிய வண்ணை ஆனந்தனுக்கு புலிகள் தமது குழுவில் இடம்பெற்றது மகிழ்வைக் கொடுக்கவில்லை. ஹவானாவில் இடம்பெற்ற விழா நிகழ்வின் போது காசி ஆனந்தன் தமிழில் கவிதை ஒன்றைப் படித்தார், பலமான சொண்டுகள் கொண்ட பறவைகள் நாங்கள் நாம் பாடுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம் அழகான சிறகுகள் கொண்ட பறவைகள் நாங்கள் ஆனால் பறப்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம் கூண்டில் அடைக்கப்பட்ட அடிமைகள் நாங்கள்
  24. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் இடம்பெற்ற புலிகளின் உறுப்பினர்கள் தமிழ் ஆயுத அமைப்புகளோடு அமிர்தலிங்கத்திற்குத் தொடர்பிருக்கிறது என்கிற சன்சொனியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை. பாதுகாப்பு அமைச்சிற்கு பொலீஸார் வழங்கிய தகவல்களில் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க யாழ்ப்பாணத்திலிருந்த அவரது வீட்டிற்கு பிரபாகரன், உமா மகேஸ்வரன் மற்றும் தங்கத்துரை ஆகியோர் வந்து சென்றிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 1974 முதல் 1980 வரையான காலப்பகுதியில் வழக்கப்பட்ட இவ்வாறான தகவல்கள் ஜெயவர்த்தன நிலையத்தில் இன்றுவரை இருக்கிறது. ஜெயவர்த்தனவின் குடும்பத்துடன் நெருக்கமான ஒருவரின் உதவியோடு இந்தத் தகவல்களைப் படிக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்திருந்தது. புரட்சிசெய்யத் துடிக்கும் இளைஞர்களுடன் எப்போதுமே தொடர்பைப் பேணவேண்டும் என்பது தந்தை செல்வாவினால் அமிர்தலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட பணியாகும். தமிழர்களின் அரசியலின் தந்தை என்று அறியப்பட்ட தந்தை செல்வா ஆயுத அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆயுத அமைப்புக்களின் விமர்சனங்கள், விருப்பு வெறுப்புக்களை உள்வாங்கி தமது கொள்கைகளிலும், செயற்பாட்டு முறைகளிலும் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று தந்தை செல்வா விரும்பியிருந்தார். இளைஞர்களை வழிநடத்த அமிர்தலிங்கம், ராஜதுரை மற்றும் நவரட்ணம் ஆகியோரை செல்வா அமர்த்தினார். திருக்கோணேஸ்வரம் ஆலயம் புலிப்படை எனும் அமைப்பு 1961 ஆம் ஆண்டு, தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கும் முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஒரு அரச ஊழியர் உட்பட 20 பேர்வரையான இளைஞர்கள் புலிப்படையினை உருவாக்கியிருந்தார்கள். 1961 ஆம் ஆண்டு ஆவணி 12 ஆம் திகதி புலிப்படையின் உறுப்பினர்கள் சரித்திரைப் பழமை வாய்ந்த திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் கூடினர். காலை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அக்குழுவினர் மலைக்குச் சென்று, தனியான தமிழ் தாய்நாடொன்றிற்காகப் போராடுவது என்று சபதம் எடுத்துக்கொண்டனர். 1961 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வை சிறிமாவோ தனது இராணுவத்தைக் கொண்டு கலைத்தமையே இந்தக்குழுவினர் தனிநாடு நோக்கிப் பயணிக்கும் தேவையினை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் புலிப்படை மீன்பிடிக்காகவும், ஆயுதங்களைக் கொண்டுவருவதற்காகவும் ஒரு கப்பற் கம்பெனியொன்றை உருவாக்கியிருந்தது. சில துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததுடன், மாணவர் மன்றங்கள் சிலவற்றையும் ஏற்படுத்திவிட்டு செயலற்றுப்போனது. இந்தக் குழுவின் செயற்பாடுகளை அமிர்தலிங்கமும், நவரட்ணமும் அவதானித்து வந்தபோதும், அவர்களின் செயற்பாடுகளில் தலையிட்டிருக்கவில்லை. பொலீஸாரும் இக்குழுவினரின் இருப்புக் குறித்து அதிக ஆர்வம் காட்டியிருக்கவில்லை. தமிழ் இளைஞர்கள் தம்மை மீளவும் ஒழுங்குபடுத்திய நிகழ்வு 1970 இல் இடம்பெற்றது. தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு 1972 இல் தமிழ் இளைஞர் பேரவையாக மாற்றங்கண்டது. இந்த அமைப்பினை அமிர்தலிங்கமும், நவரட்ணமும் நெருங்கி அவதானித்து வந்ததுடன், இந்த அமைப்பினரும் அமிர்தலிங்கத்தை தமது "தளபதி" என்று கருதி வந்தனர். இளைஞர்கள் தமது விமர்சனங்களைப் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என்றும், தமது உணர்வுகளுக்கு அது வடிகாலாக அமையும் என்று அமிர்தலிங்கம் அவர்களிடம் கூறிவந்தார். ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வந்தாலும், நிலமை கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆனால், இந்த செயற்பாடுகளை அரசு இனவாதப் புரட்சி என்று கருதியதாலும், அதனை அடக்க பொலீஸாரையும், இராணுவத்தினரையும் முடுக்கி விட்டதாலும் நிலைமை மாறத் தொடங்கியது. தமிழ் இளைஞர் பேரவையினரைத் தேடி வேட்டையாடிய பொலீஸார் அவர்களில் 42 பேரைக் கைது செய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவருமே பிற்காலத்தில் ஆயுதப் போராளிகளாக மாற்றம்பெற்றனர். தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன், பாலக்குமார். பத்மநாபா, வரதராஜப் பெருமாள், சிறி சபாரட்ணம் ஆகியோர் அமிர்தலிங்கத்தை மதித்து வந்ததுடன், அவர் சொல்வதையும் கேட்டு வந்தனர்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.