Everything posted by ரஞ்சித்
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 8, மார்ச் மாதம், 2004 என்னை வீட்டுக்காவலில் புலிகள் வைத்திருப்பதாக கருணா கூறிவருவது முழுப்பொய் - திருகோணமலைத் தளபதி பதுமன் அஷோஷியேட்டட் பிரஸ் எனும் செய்திச் சேவைக்குப் பேட்டியளித்த திருகோணமலை மாவட்டத் தளபதி கேணல் பதுமன், தன்னை புலிகள் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக துரோகி கருணா கூறிவருவது பொய்யான தகவல் என்றும், நகைப்புக்கிடமானதென்றும் கூறினார். அவர் கிளிநொச்சியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபொழுது பி பி சி செய்திச்சேவைக்கு கருணா கூறிய பொய்களை முற்றாக நிராகரித்தார். இப்பேட்டியின்போது பதுமனுடன், தமிழ்ச்செல்வன், கரிகாலன், ரமேஷ், ராம், கெளசல்யன் ஆகியோரும் உடனிருந்தனர். கருணாவின் துரோக நாடகம்பற்றிக் கருத்துக்கூறிய கிழக்கின் தளபதிகள் கிழக்கில் இருக்கும் போராளிகளை நிச்சயம் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் தமிழ்த்தேசிய தலைமைக்கும் , தாயகவிடுதலைப் போராட்டத்திற்கு துணையாக இருப்பார்கள் என்றும் உறுதியளித்தனர். "எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு தனிப்பட்ட துரோகியின் செயல் தமிழ்ச் சமூகத்தினை பிரிக்கவோ, தேசியத்தின் குறிக்கோளினை உடைக்கவோ அனுமதியளிக்கப்போவதில்லை" என்றும் அவர்கள் உறுதிபடக் கூறினர்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 8, மார்ச் மாதம், 2004 மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயரும் அவரது குழுவும் புலிகளின் தலைவர்களைச் சந்திக்கிறார்கள். மட்டு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் மட்டக்களப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான தமிழ்ச்செல்வன், சிறப்புத்தளபதி ரமேஷ் மற்றும் கரிகாலன் ஆகியோரை வன்னியில் சந்தித்தார்கள். கிழக்கிலிருந்து வருகைதந்திருந்த இக்குழுவிற்கு கருணாவை இயக்கத்திலிருந்து அகற்றவேண்டிய தேவை ஏற்பட்டதற்கான காரணங்களை தமிழ்ச்செல்வனும் கிழக்கின் தளபதிகளும் எடுத்துரைத்தனர். அவர்கள் மேலும் இதுபற்றிக் கூறுகையில் தனது முறைகேடுகளையும், இச்சைகளையும் மறைப்பதற்காக கருணா மக்களையும் போராட்டத்தினையும் காட்டிக்கொடுத்து, பிரதேசவாதம் எனும் நச்சுவிதையினை தமிழ்ச் சமூகத்தினுள் விதைக்கமுற்படுவதாகவும் கூறினர். தொடர்ந்தும் கருத்துக்கூறிய அவர்கள், கருணாவுக்கெதிரான நடவடிக்கைகள் கிழக்கின் பொதுமக்களோ, போராளிகளோ எவ்விதத்திலும் பாதிப்படையாவண்ணம் மிக அவதானத்னத்துடன் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். புலிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த ஆயர் தலைமையிலான குழு, இப்பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு வேண்டிக்கொண்டது.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் ..... தனது தவறுகளுக்காகவும், முறைகேடான நடத்தைகளுக்காகவும் தலைமையினால் இயக்கதிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று அஞ்சிய கருணா நேரடியாக தலைமையைச் சந்திப்பதைத் தவிர்த்தார் - தளபதி ரமேஷ் ஐ பி சி செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில், தளபதி ரமேஷ் இயக்கத்திலிருந்து பிரிந்து தனியே இயங்குவதற்கான முடிவு கருணாவினாலேயே எடுக்கப்பட்டதென்றும், பல முக்கிய தளபதிகளும் பிரமுகர்களும் கூறிய அறிவுரைகளைக் கருணா ஏற்கமறுத்ததாகவும் அவர் கூறினார். இன்று கிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலை கருணா எனும் தனிமனிதரால், தனது முறைகேடுகளை மறைப்பதற்காக அவரால் ஆடப்படும் நாடகம் என்றும், இதற்காக அப்பாவிப் போராளிகளையும் கிழக்கு மக்களையும் அவர் பகடைக்காய்களாகப் பாவிக்கப் பின்னிற்கவில்லையென்றும் கூறினார். தனது இந்த முடிவுபற்றி மூத்த தளபதிகளிடனோ, கிழக்குவாழ் மக்களுடனோ கலந்தாலோசிக்காத கருணா, இறுதிவரை இப்பிரச்சனை குறித்து தலைவருடன் பேச மறுத்துவிட்டார் என்றும் கூறினார். தான் உட்பட, ராம், பிரபா, கெளசல்யன், கரிகாலன், வாமன் ஆகிய பலர் கருணாவின் இந்த முடிவு தொடர்பாக அவருடன் பேசியதாகவும், தேசியத் தலைவருடன் இதுபற்றிப் பேசி நிலைமையினைச் சுமூகமாகத் தீர்த்துவைக்க தாம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் கருணா தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். தமது அறிவுரைகளை விடாப்பிடியாக ஏற்கமறுத்த கருணா, தலைமையிடமிருந்து வந்த அனைத்துக் கட்டளைகளையும் ஏற்கமறுத்ததுடன், தனது நடவடிக்கைகளுக்காக தான் இயக்கத்திலிருந்து அகற்றப்படலாம் என்று அவர் அச்சமுற்றிருந்தார் என்றும் கூறினார். "அவர் இப்போது தனது தவறுகளை மறைக்க தமிழர்களைப் பிரதேச ரீதியாகப் பிரிக்கும் உளரீதியான புரட்டுக்களையும், புனைவுகளையும் கொட்டிவருவதுடன் கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றும் முகமாக மிகவும் தவறாக, துரோகத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்". "இவரது இந்தச் செயற்பாடுகள் அவரை இயக்கத்திலிருந்தும் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேற்றுவதைத் தவிர தலைமைக்கு வேறு எந்த முடிவினையும் விட்டுவைக்கவில்லை". "தனது தவறான நடவடிக்கைகளாலும், முறைகேடான நடத்தைகளினாலும் இயக்கத்திலிருந்து விரட்டப்படலாம் என்று அஞ்சிய கருணா தலைவரை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார். புலிகளியக்கத்தின் கட்டுக்கோப்பும், ஒழுக்கமும், தனிமனித ஒழுக்கமும் நீங்கள் அறியாததல்ல. நாம் இயக்கத்தில் இணையும்போதே இக்கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படிவோம் என்று உறுதியெடுத்துக்கொள்கிறோம். இந்த நிலையில் தலைமையின் கட்டளைகளை ஏற்கமறுப்பதும், தலைமைக்கெதிராகச் செயற்படுவதும் ஏற்றுக்கொள்ளமுடியாத குற்றமாகும்". "கிழக்குமாகாணத் தமிழர்கள் போராட்டத்திற்கு அளப்பரிய பங்களிப்பினைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எமது தேசியத்தலைவர் மீது அளப்பரிய நம்பிக்கையினைக் கொண்டுள்ளார்கள். கிழக்குவாழ் மக்களும் பெருமளவு போராளிகளும் இச்சிக்கல் தொடர்பாகத் தலைவருடன் பேசி சுமூகமான தீர்வொன்றினைப் பெறவே விரும்பினார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி தலைவருடன் பேசி இப்பிரச்சினையினைச் சுமூகமாகத் தீர்க்கவே நாம் முயல்கிறோம்". "தலைவர் எமக்கிட்ட கட்டளையின் பிரகாரம் கிழக்கின் மக்களுக்கோ அல்லது போராளிகளுக்கோ எதுவித தீங்கும் ஏற்படாது இச்சிக்கலைத் தீர்ப்போம். கருணா தன் பங்கிற்கு மிலேச்சத்தனமான பொய்களைக் கட்டவிழ்த்து விட்டாலும் இன்று மக்கள் அவரை விட்டு மிக விரைவாக வெளியேறிவருகிறார்கள்". "கருணா எனும் தனிமனிதரால் ஏற்படுத்தப்பட்ட இந்த துரோக நாடகத்தில் அப்பாவிகளோ போராளிகளோ பாதிக்கப்படாவண்ணம் அவருக்கான தண்டனையினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மிக அவ்தானமாகத் திட்டமிட்டு அதன் சில படிகளை இப்போது முன்னெடுத்துவருகிறோம்". "கருணாவின் துரோக நாடகம்பற்றிய விளக்கத்தினை நாம் கிழக்கு மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். இன்று மக்கள் அவரின் உண்மையான முகத்தினைக் கண்டறிந்துவிட்டார்கள். அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமும் கருணாதான் என்பதை ஏற்றுக்கொள்வதோடு, தேசியத் தலைவர்மீதான முழுநம்பிக்கையினையும் வெளிப்படுத்திவருகிறார்கள்". "கிழக்கு மகாணத்திற்கு சரியான பிரதிநித்துவம் தரப்படவில்லை என்று கருணா கூறுவது மிகப்பெரிய பொய். மத்திய குழுவில் முக்கிய அங்கத்தவரான அவர் தலைவருக்கு அடுத்த படியில் உள்ள ஒருவர். அதுமட்டுமல்லாமல் எமது நிர்வாகத்துறையின் தலைவராக இருப்பது புதியவன் எனப்படும் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த ஒரு போராளியே. இவர்போன்ற பல கிழக்குமாகாணப் போராளிகள் இயக்கத்தின் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். கருணா உண்மையிலேயே கிழக்கு மாகாணத்திற்கு சரியான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று எண்ணியிருந்தால் ஏன் அவர் இறுதிவரை தலைவருடன் இதுபற்றிக் கலந்துரையாடியிருக்கவில்லை?" "நாம் புலம்பெயர் தமிழருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எமது தலைவரின் கரத்தைப் பலப்படுத்த எமக்கு உற்றதுணையாக இருங்கள். கிழக்கு மாகாண மக்களை எம்முடன் இன்னும் அதிகமாக ஒருங்கிணைத்து எமது இயக்கத்தை நாம் பலப்படுத்துவோம். இந்தப் பிரச்சினையால் நாம் துவண்டுபோகாது எமது தாயகத்தை மீட்டெடுக்கும் உறுதியில் நிலைத்திருப்போம்". என்றும் அவர் மேலும் கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் ..... தனது துரோகத்தினையும், தனது தவறுகளையும் மறைக்கவே கருணா மிகவும் தவறான குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார்- கரிகாலன் ஐ பி சி தமிழ்ச்சேவைக்கு வன்னியிலிருந்து கரிகாலன் வழங்கிய செவ்வியில் தனது துரோகத்தினையும், தான் விட்ட பல தவறுகளையும் மறைக்கவே கருணா மிகவும் தவறான , ஏற்கமுடியாத பொய்களை சர்வதேச செய்திநிறுவனங்களிடம் தெரிவித்து வருகிறார் என்று கூறினார். உலகத் தமிழரின் முன்னால் தனது முகத்திரை கிழிக்கப்பட்டு, துரோகியெனும் அடையாளம் சூட்டப்படுவதைத் தடுக்க இவ்வாறான பொய்களைக் கூறி வருகிறார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார். கரிகாலம் மேலும் கூறுகையில், கருணாவின் துரோகத்தினால் தம்மீது பூசப்பட்டிருக்கும் இழிச்சொல்லை மிகவிரைவில் துடைத்தழித்துவிட்டு கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழ்த்தேசியத்திற்கான தமது அசைக்கமுடியாத ஆதரவினை மீண்டும் நிரூபிப்பார்கள் என்றும் கூறினார். அவர் மேலும் பேசும்பொழுது, தற்போதுவரை கருணாவின் துரோகத்தினை மன்னித்து அவரது தவறுகளை மறந்து ஏற்றுக்கொள்ள தேசியத் தலைவர் தயாராகவே இருக்கிறார் என்றும் கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் ..... துரோகி கருணாவின் ஆதரவாளர்கள் வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம் கருணா எனும் துரோகிக்கெதிரான ராணுவ நடவடிக்கையொன்றினை அவனுக்குக் கீழிருந்த தளபதிகளும் போராளிகளும் திட்டமிட்டு வருகையில், கருணாவின் ஆதரவாளர்கள் மட்டக்களப்பு நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருக்கிறார்கள். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் புதிய நிலை தொடர்பாக விளக்குவதற்கு அம்மாவட்டங்களின் முக்கிய தளபதி ஒருவர் வன்னியை வந்தடைந்தார். ரமணன் மற்றும் ராம் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி வருவதான முடிவினை அவரின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமணன் எடுத்ததனால், கிழக்கினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கமுடியும் என்ற கருணாவின் கனவில் பாரிய இடிவிழுந்திருப்பதாக வன்னியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கருணாவின் ஆதரவாளர்கள் வாழைச்சேனையில் தேசியத் தலைவரின் கொடும்பாவியினை எரித்ததுடன், கருணாவை விட்டு விலகிச் சென்ற ஏனைய தளபதிகளினது கொடும்பாவிகளை எரித்தனர். இவ்வாறான தமிழ்த் தேசியத் தலைமைக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்று திருக்கோவில் பிரதேசத்திலும் கருணாவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது. கிழக்குப் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் அங்குள்ள நிலைமைபற்றிக் கருத்துக்கூறுகையில் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த கருணா ஆதரவாளர்கள் அங்கிருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கு அச்சுருத்தல் விடுத்ததாகவும், பதட்டமான சூழ்நிலை ஒன்று உருவாகிவருவதாகவும், உயிருக்குப் பயந்து பெருமளவு வடமாகாண மாணவர்கள் பல்கலைக் கழகத்தினைவிட்டு தற்போது வெளியேறிவருவதாகவும் தெரிவித்தார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
பொல்பொட் எனும் சர்வாதிகாரக் கொலைகாரனுக்கு நிகரானவர் கருணா - கரிகாலன் தெரிவிப்பு "மக்கள்மேல் தொடர்ச்சியாக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, பொறுப்பின்றி நடந்துகொள்வாராக இருந்தால், தமிழர்களின் வரலாற்றில் கருணா பொல்பொட் போன்ற சர்வாதிகாரியாகவே பார்க்கப்படுவார்" என்று மட்டக்களப்பிலிருந்து வன்னியை வந்தடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் கரிகாலன் தெரிவித்தார். மேலும், கிழக்கு மாகாணத்தின் புலிகளின் பல முக்கிய தளபதிகளும், பிரமுகர்களும் தலைமையுடன் கிழக்கில் நடந்த விடயங்களை விளக்கும் முகமாக வன்னியினை வந்தடைந்திருக்கிறார்கள். வன்னியில் கருணாவின் எதேச்சாத்திகார முடிவினையும் நடவடிக்கைகளையும் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய கரிகாலன், கருணாவின் துரோகத்தின் பின்னால் வெளிச்சக்திகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதென்றும் கூறினார். "புலிகள் இயக்கத்திலிருந்து பிரியும் தனது துரோக எண்ணத்தினை அவர் தானாகவே டுத்துக்கொண்டார். இதுபற்றி அவர் கிழக்கின் தளபதிகளிடமோ, அரசியல்த்துறையினரிடமோ கலந்தாலோசித்திருக்கவில்லை. தனது முடிவினை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கிழக்கின் தளபதிகளையும், முக்கியஸ்த்தர்களையும் பயமுறுத்திவருகிறார், ஆனால் அவரது எண்ணம் நிறைவேறப்போவதில்லை". "இன்று கிழக்கில் எந்தத் தமிழரும் எமது தேசியத்தலைவரின் தலைமையினை நிராகரிக்கப்போவதில்லை. இதை நான் இங்கு உறுதிபடக் கூற விரும்புகிறேன். அண்மையில் கிழக்கில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் எமது தேசியத் தலைவரின் படத்தினைத் தாங்கி வந்ததோடு, புலிகளே தமிழர்கள், தமிழர்களே புலிகள் எனும் கோஷத்தினையும் மிகத் தெளிவாக முன்வைத்து தேசியத் த்லைமைக்கான தமது ஆதரவினையும், தாயக விடுதலைக்கான தமது உறுதியாத நிலைப்பாட்டினையும் எடுத்தியம்பியிருந்தார்கள்" என்றும் கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாள் 5 : 7 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 "நாம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை மிகுந்த அவதானத்துடன் கையாள்கிறோம்" - தளபதி ரமேஷ் கருணாவின் பிரச்சினையினைத் தீர்க்கும் எமது நடவடிக்கைகளில் மக்களுகோ, போராளிகளுக்கோ இழப்புக்கள் ஏற்படாதுவண்ணம் இப்பிரச்சினையினைக் கையாளுமாறு எமது தேசியத் தலைவர் கேட்டிருக்கிறார். இதற்கான திட்டங்களை மிகுந்த அவதானத்துடன் நாம் தீட்டி வருகிறோம். இத்திடத்தின் பிரகாரம் நாம் நடவடிக்கைகளிலும் இறங்கிடிருக்கிறோம். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு சென்று எமது செயற்பாடுகளை வழமைபோல முன்னெடுக்கவிருக்கிறோம் என்று விசேட தளபதி ரமேஷ் தெரிவித்தார் "கருணாவினது பிரச்சினை தனிப்பட்டது. கருணாவைத் தவிர மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களும் போராளிகளும் எமது தலைவருக்குப் பின்னாலேயே நிற்கிறார்கள். எந்தப் பிரச்சினையென்றாலும் தலைவருடன் பேசித் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். நாம் கருணாவிடம் அவரது பிரச்சினை தொடர்பாக தலைவருடன் பேசுமாறு பலமுறைக் கேட்டிருந்தோம். ஆனால், அவர் அவற்றை உதாசீனம் செய்ததோடு, எம்மையும் தலைவரிடம் இதுபற்றிப் போய் பேசவதையும் தடுத்துவிட்டார்". "மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத் தமிழ்மக்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அளப்பரிய தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள். எமது இலச்சியத்தினை அடையும் நோக்கில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். எமது போராட்டம் பிரதேசவாதம் பேசும் பிரிவினைவாதிகளால் தோற்கடிக்கப்படுவதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அவர்கள் எம்முடன் சகலவிதத்திலும் ஒத்துழைப்பு நல்கிவருகிறார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாள் 4 : 6 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 புலிகளியக்கத்திலிருந்து கருணா அகற்றப்படுதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்ட செய்தியில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தளபதியான கருணா இயக்கத்திலிருந்து நீக்கப்படுவதாகவும், அவர் இயக்கத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் அகற்றப்படுவதாகவும் அறிவிக்கின்றது. தமிழீழ தேசியத் தலைமை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு ரமேஷ் அவர்களை விசேட தளபதியாகவும், ராம் அவர்களைத் தளபதியாகவும், பிரபா அவர்களைப் பிரதித் தளபதியாகவும், கெளசல்யன் அவர்களை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்த் துறைப்பொறுப்பாளராகவும் நியமித்திருப்பதாக அவர்களது விசேட செய்திக்குறிப்பு மேலும் சொல்கிறது. "மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கு புலிகளின் தளபதியாகவிருந்த கருணா என்பவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நச்சுச் சக்திகளினால் தூண்டப்பட்டு, தமிழினத்திற்கெதிராகவும், தமிழ்த் தேசிய தலைமைக்கெதிராகவும் மிகத் துரோகத்தனத்துடன் செயற்பட்டு, எமது தேசிய விடுதலை இயக்கத்தினைத் துண்டாட முனைந்திருக்கிறார். அவருக்குக் கீழ் செயற்பட்ட தளபதிகளும், பிரிவுத் தளபதிகளும் கருணாவின் இந்தத் துரோகத்தனத்தினை விமர்சிக்கமுடியாமலும், அவருடன் இருந்து அதனை எதிர்க்கமுடியாத நிலையிலும், அவருக்குக் கீழ் இனிமேல் செயற்படப்போவதில்லை எனும் முடிவினை எடுத்திருப்பதுடன், தமிழீழ தேசியத்தலைமையிடம் இதுபற்றி விளக்கமும் அளித்திருக்கின்றனர். இவற்றின் அடிப்படையில் கருணா இயக்கத்தின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும், பதவிகளிலிருந்து உடனடியாக அகற்றப்படுகிறார்" என்றும் அவ்வறிக்கை மேலும் சொல்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கருணாவின் துரோகத்தினால் பாதிப்பில்லை - தமிழ்ச்செல்வன் புலிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் புலிகளியக்கம் சமாதான பேச்சுவார்த்தைகளிலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் தொடர்ந்தும் இதயசுத்தியுடன் செயற்படும் என்றும், துரோகம் இழைத்தவர்கள் தமது தவறினை உணரும் பட்சத்தில் தேசியத்தலைவர் நிச்சயமாக அவர்களுக்கு மன்னிப்பளிப்பார் என்றும் தெரிவித்தார். தமிழ்ச்செல்வனுடன் இந்த பேட்டியில் கலந்துகொண்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஷ் கருத்துக் கூறுகையில், "மட்டக்களப்பில் நடந்த பிரச்சினை தனி ஒருவரால் ஏற்படுத்தப்பட்டது. இயக்கத்திலிருந்து வெளியேற அவர் எடுத்த முடிவு அவரது சொந்த முடிவு. இதுபற்றி அவர் ஒருபோதும் தலைமைத்துவத்திடம் பேசியிருக்கவில்லை. தளபதிகளோ, போராளிகளோ கருணா எடுத்த முடிவினை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாள் 3 : 5 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 "உங்களின் கட்டளையின் கீழ் எங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்" - பிரபாகரனுக்கு கருணா பகிரங்கக் கடிதம் நாங்கள் இயக்கத்திலிருந்து பிரிந்துபோகும் முடிவினை எடுக்கவில்லை, உங்களுக்கு எதிராகப் போராடும் எண்ணமும் எமக்கில்லை. மக்களின் அவலங்கள் குறித்து உங்களோடு பேசாமல் விடுவதன் மூலம் ஏற்படக்கூடிய வரலாற்றுத் தவற்றினை நான் விட விரும்பவில்லை. இங்கிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் நலன்களில் உண்மையாக உங்களுக்கு அக்கறையிருந்தால், எங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்" என்று தமிழ் அலை பத்திரிக்கையில் அவர் குறிப்பிடுகிறார். "புலிகள் இயக்கத்தின் ஏனைய நிர்வாக அமைப்புக்களுக்கு இருக்கும் சுதந்திரத்திற்கு எந்தவிதத்திலும் குறையாத நிர்வாகச் சுதந்திரத்தினை கிழக்கு மாகாணத்திற்குத் தரவேண்டும், இன்றைய இக்கட்டான நிலையில நான் தென் தமிழீழ மக்களுக்கான நலன்கள் பற்றியே கவனமெடுப்பேன், அவர்களுக்காகவே எனது உயிரையும் கொடுப்பேன், இதற்கு எவர் குறுக்கே வந்தாலும் நான் எதிர்ப்பேன்" என்று கூறிய கருணா, "உங்களின் நேரடியான கட்டளைகளின் கீழ் நான் பயணிக்கத் தயார் ஆனால், வேறு எந்த பிரதி தலைமைகளுக்கோ தளபதிகளுக்கோ நான் அடிபணியப்போவதில்லை" என்றும் அவர் கூறுகிறார். "எமது பிரச்சினைகளை நாம் தீர்க்கமுயன்றுகொண்டிருக்கிறோம்" - மட்டக்களப்பு ராணுவத் தளபதி ரமேஷ் கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்பாக நாம் எமது தேசியத் தலைவருடன் விலாவாரியாக கலந்தாலோசித்திருக்கிறோம். இப்பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இப்பிரச்சினை தொடர்பான விபரங்களை எமது தலைவர் மிக விரைவில் தமிழ்மக்களுக்கும், உலகிற்கும் அறியத்தருவார்" என்று கருணாவின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகளின் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பானவருமான கேணல் ரமேஷ் தெரிவித்தார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாள் 2 : 4 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 மட்டக்களப்பு புலிகள் தமது நிலையினை மீள உறுதிப்படுத்துகிறார்கள். "நாம் எமது இலச்சியத்தினை நோக்கிப் பயணிப்போம். எமது தேசியத் தலைவரின் கட்டளையின் கீழும், எமது எமது தளபதி கருணாவின் வழிநடத்துதலின் கீழும் இனிச் செயற்படுவோம்" என்று கருணாவின் மூத்த தளபதிகளில் ஒருவர் கிழக்கு மாகாண புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொக்கட்டிச்சோலையிலிருந்து வெளிவரும் உள்ளூர் இதழான தமிழ் அலையில் பேசுகிறார். "நாம் புலிகள் இயக்கத்திலிருந்து பிர்ந்துபோகும் முடிவினை இதுவரை எடுக்கவில்லை. ஆனால், நாம் பிரிந்து இயங்கினால் வரும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கிருக்கும் அச்சத்தையும், அமைதியின்மையினையும் நாம் அறிவோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ஒரு துரோகத்தின் நாட்காட்டி தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது. எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. எமது வீர வரலாற்றின் ஒவ்வொரு எழுச்சியின்போதும் அல்லது அவ்வரலாற்றின் வீழ்ச்சிகளின்பொழுதும் இந்தச் சாபம் விடாது எம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது. வரலாற்றில் தனது சொந்த இனத்தையே தனது நலன்களுக்காகவும், இச்சைகளுக்காகவும் காட்டிக்கொடுத்து, எதிரியுடன் சேர்ந்து நின்றே தனது இனத்தைக் கருவறுத்து, சொந்த இனம் அழிவதில் இன்புற்ற பல சாபங்களைத் தமிழினம் கண்டதுடன், இப்பிறப்புக்கள் பற்றிய சரியான பதிவினையும் எமது வரலாற்றில் பதிவுசெய்தே வந்திருக்கிறது. இவ்வாறு தமிழினத்திற்கெதிராக எதிரியுடன் சேர்ந்து செயற்பட்ட துரோகிகளின் வரலாறு சரித்திரத்தில் நிச்சயம் பதியப்படவேண்டும் என்பதுடன், இத்துரோகங்களால் எமதினம் பட்ட அவலங்கள் தொடர்ந்து பேசப்படுவதும் அவசியமாகிறது. அந்தவகையில், கடந்த 15 அல்லது 16 வருடங்களுக்கு முன்னர் தமிழினம் இவ்வாறான மிகப்பெரிய துரோகம் ஒன்றிற்கு முகம் கொடுத்தது. தனது இச்சைகளுக்காகவும், நலனுக்காகவும் மட்டுமே தனது இனத்தையும், அவ்வினத்தின் சுந்தந்திர விடுதலைப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்து, பலவீனமாக்கி, ஈற்றில் அப்போராட்டமும் லட்சக்கணக்கான மக்களும் அழிக்கப்பட தானும் நேரடியாகக் காரணமாகவிருந்த ஒருவனது துரோகம் பற்றிய எனது புரிதலையும், நான் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட விடயங்களையும் இங்கே பதிய நினைக்கிறேன். துரோகிகளை வரலாற்று நாயகர்களாகவும், உதாரண புருஷர்களாகவும் காட்ட முனையும் முனைப்புகள் வரலாற்றில் இத்துரோகிகளுக்கு வெள்ளையடித்து, அவர்களது துரோகத்தினை நியாயப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபடுவதால், இத்துரோகிகள் பற்றி நாம் தொடர்ந்து பேசுவதும், அந்தத் துரோகங்கள் பற்றித் தொடர்ந்து பதிவிடுவதும் அவசியமாகிறது. ஏனென்றால், இத்துரோகங்கள் மன்னிக்கப்படமுடியாத, மறக்கப்படமுடியாத, இனியொரு தடவை நடக்கக் கூடாத வெறுக்கப்படவேண்டிய நிகழ்வுகள் ஆகும். துரோகத்தின் நாள் 1 : 3 ஆம் திகதி மார்ச் மாதம், 2004 கேணல் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பேச்சாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் புலிகள் இயக்கத்தினுள் பிளவுகள் இல்லை. நாம் எமது தலைவரின் நேரடிக் கட்டளையின்கீழ்த்தான் இனிமேல் செயற்படுவோம் என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகள் இனிமேல் தலைவரின் நேரடிக் கட்டளைகளுக்கு மட்டுமே செவிசாய்ப்பதாகவும், இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இனிச் செயற்படப் போவதாகவும் கூறுகிறார்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
https://postimg.cc/9rtHZgkK தம்பி மரணித்து இன்றுடன் 20 ஆண்டுகள். நேற்று நடந்ததுபோன்ற உணர்வு.
-
ஈழத்தமிழர் அரசியல்
இங்கு சிலருக்கு நான் கூறப்போகும் கருத்து ஆத்திரத்தினையும், வெறுப்பினையும் உருவாக்கலாம். அதற்காக நான் அதுபற்றிப் பேசாமல் இருக்கவும் முடியாது. தமிழர் முன்னாலிருக்கும் தெரிவுகள் என்னவென்று ஆராயத் தொடங்கியபின்னர், எல்லாத்தெரிவுகளும் மேசைக்குக் கொண்டுவரப்படவேண்டும். தனியான நாடொன்றினை சண்டைபிடித்தாவது உருவாக்குவது முதல், முழு இன அடையாளத்தையும் இழந்து சிங்கள பெளத்த இனத்தினுள் சங்கமமாகிப்போவது வரையிலான அனைத்து வழிகளையும் பார்த்துவிடலாம். அந்தவகையில் நான் கூற விரும்புவதும், முன்வைக்க விரும்புவதும் இதனைத்தான். 1. தமிழகத்தில் சீமானின் எழுச்சிக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம், அவரது வெற்றியினை உறுதிப்படுத்துவது. எமது தாயகத்தில் சேடையிழுக்கும் தமிழ்த் தேசிய அரசியலினை மீண்டும் மீள எழுப்பி, எழுச்சியுறவைத்து, சிங்களப் பேய்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் முழுத்தமிழினத்தையும் ஒன்றிணைப்பதெனும் இமாலய சிக்கலுடன் ஒப்பிடும்பொழுது, தமிழகத்தில் தமிழ்த் தேசிய சக்திகளின் எழுச்சியும் பலம்பெறுதலும் சாத்தியமானதும், நடைமுறையில் நிகழ்ந்துவருவதுமாகும். 2. தமிழகத்தில் பலமடையும் தமிழ்த் தேசிய சக்திகளின் உதவியோடு மத்தியில் உள்ள அரசினை தமிழர் விடயத்தில் சாதகமான போக்கினைக் கடைப்பிடிக்க அழுத்துவது. இவ்வழுத்தம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்துவதுமுதல், வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினை அதிகாரம் மிக்க பிராந்தியமாக உருவாக்குவதை வரை அமைவது. 3. அரசியல் ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களுக்கு இலங்கை மசியாதவிடத்து, தமிழகத்தினைத் தளமாக வைத்து ஆயுதப் போராட்டம் ஒன்றினை இயக்குவது. உடனே எல்லோரும் வந்து எனது பிள்ளைகளைப் போராட அனுப்பு என்று கேட்கமுதல், இவ்வாறானதொரு முடிவுநோக்கித் தமிழினம் எதிர்காலத்தில் தள்ளப்படுமா இல்லையா என்பதைச் சிந்தியுங்கள்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
இந்த வகையிலான தேடல்கள் எமக்கு எந்தவிதத்தில் உதவப் போகின்றது கோஷான்? நாம் எந்த மனித அமைப்பிலிருந்து வந்திருந்தாலும்கூட, இன்று தமிழர்கள் எனும் இப்போதிருக்கும் நிலையினை அடைந்திருக்கிறோம். ஆகவே, இங்கிருந்துதான் எமது விடுதலைக்கான பயணமே ஆரம்பிக்கப்படவேண்டும். இதை விடுத்து, எமது தோலினதோ அல்லது முக எலும்புகளின் உருவ அமைப்பினதோ தோற்றப்பட்டை வைத்து எமது அடிகளைக் கண்டுபிடிப்பதென்பதோ அல்லது, தமிழினம் இதற்கு முன்னர் எவ்வாறான இன மரத்திலிருந்து வந்ததென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதோ இன்றிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தமிழினத்தை விடுவிக்க எப்படி உதவப்போகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
எமது விடுதலைக்கான அகிம்சை வழியிலான போரட்டங்களும், அரசியல் ரீதியிலான முன்னெடுப்புக்களும், கட்டாயப்படுத்தி முடித்துவைக்கப்பட்ட ஆயுத ரீதியிலான போராட்டமும் இதுவரையில் எமக்கு காத்திரமான விடுதலையினைப் பெற்றுத்தரவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் உருண்டோடிய 72 வருடங்களில் நாம் இதுவரை எதனையும் அடையவில்லை, மாறாக இருந்தவற்றையும் இழந்துவருகிறோம். 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசியத்தின் கோரிக்கைகளைப் போலவோ அல்லது அதனைக் காட்டிலும் வீரியமான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய மனோநிலையில் தமிழர்களோ அல்லது அதற்கான சூழ்நிலையோ இருப்பதாகத் தெரிகிறதா? 77 ஆம் ஆண்டிற்குப்பின்னரான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தாயக விடுதலைப் போராட்ட எழுச்சியினைப் போன்று இன்னொரு எழுச்சியினை உருவாக்குதல் இப்போதைக்குச் சாத்தியமா? கடந்த 72 ஆண்டுகளில் சிறுகச் சிறுக முடுக்கிவிடப்பட்ட எமது விடுதலைக்கான அரசியலை, மீண்டும் செய்வதென்பது இன்னும் எத்தனை தசாப்த்தங்களை தனக்குள் இழுத்துவிடப்போகிறது? நியாயமான தீர்வொன்றிற்காக தமிழினம் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கப்போகின்றது? தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல்மயப்படுத்தல்களும், தேசிய ரீதியிலான முன்னெடுப்புக்களும் நிச்சயமாக ஒரு தீர்வினை கொண்டுவரும் என்றதற்கும் என்ன நம்பிக்கை இருக்கிறது? எமது இனத்தையும், மொழியினையும், கலாசாரத் தொன்மையினையும், தாயகத்தினையும் முற்றாகக் கபளீகரம்செய்யக் காத்திருக்கும் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து காப்பதற்கு எமக்கான பலம் ஒன்று அவசியம். அது இன்றிருக்கும் அரசியல் செயற்பாடுகளாலோ அல்லது சமரசம் செய்யும் முயற்சிகளாலோ நிச்சயம் செய்ய முடியாதது. அப்படிப்பட்ட பலம் ஒன்றினை எப்படி உருவாக்கலாம் என்பதுபற்றியும் தமிழினம் சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
நல்ல யோசனை. முதலில் மாதிரி வினாக் கொத்தொன்றினை யாழ்க்களத்தில் உருவாக்கி, இங்கிருப்போரின் கருத்தினை அறிந்தால் என்ன?
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
உண்மைதான் அண்ணோய். ஆனால், அது சிங்களவர்களுடன் வாழலாம் என்பதைவிட, சலுகைகளுக்காகவென்று இருக்கலாம் என்பதுதான் எனது எண்ணம். சலுகைகள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்று பார்க்கப்படலாம். ஆனால் என்ன, இதை எழுதும்போது ஸ்டான்லி அண்மையில் எழுதிய ஒரு பதிவு ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. அதில், தந்தை செல்வா கிழக்கிற்கான தனது விஜயம் ஒன்றின்போது தமிழ்த்தேசியத்துடன் சேர்ந்து , பேரினவாதத்திற்கு எதிராக பயணிக்கலாம் என்று கேட்டபோது கிழக்கின் தலைவர்களில் ஒருவரான நல்லையா "வடக்கின் நிலைமையும் கிழக்கின் நிலைமையும் வேறுவேறானவை, எங்களை எங்கள் பாட்டில் விட்டுவிடுங்கள், நாங்கள் சிங்களவருடன் எமது சோலியைப் பார்த்துக்கொள்கிறோம்" என்று கேட்டுக்கொண்டதாக எழுதியிருந்தார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களின் கவலை நியாயமானது. ஆனால், இது பிள்ளையானின் செயலாளர் ராஜபக்ஷேக்களுக்குத் தாம் வழங்கும் ஆதரவினை நியாயப்படுத்த எழுதிய ஒரு கருத்தாகவே எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். ஒட்டுமொத்த தென் தமிழீழ மக்களினது கருத்தாக இது இருக்காதென்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
ஈழத்தமிழருக்கு முன்னால் இன்றிருக்கும் அரசியல்த் தெரிவுகள் என்னவென்று கேட்டிருந்தீர்களென்றால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், பெரிய வேறுபாடில்லை. ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பார்த்தால் பின்வருபவை எனக்குத் தெரிகின்றன. 1. தமிழருக்கான சரியான தலைமைத்துவம் இன்மை. 2. தமிழ் அரசியல் தலைமைகளின் பிளவும், மொத்த இனத்தினையும் பிரதிநித்துவம் செய்வதில் ஏற்பட்டிருக்கும் தோல்வியும். 3. தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவான சக்திகளின் எழுச்சி. 4. நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலைக்கான நீதியின்மை. 5. தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் எமது தாயகம். 6. எமது தாயகத்தில் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து நிற்கு சிங்கள இனக்கொலை ராணுவம். 7. விடுவிக்கப்படாமலிருக்கும் தமிழ் அரசியல்க் கைதிகள். 8. நிரந்தரமாக தமது வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்டிருக்கும் தமிழர்கள். 9. தமிழ்த் தேசிய அரசியல் செல்வாக்கின் வீழ்ச்சியும், சிங்களப் பேரினவாத அரசியலின் ஊடுருவலும். 10. தமிழரின் விடுதலைக்கெதிரான தொடர்ச்சியான எதிர்ப்பு அரசியலையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவரும் இந்தியா. 11. வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் தமிழர் தாயகம். 12. தமிழர்களை பிரதேச ரீதியப் பிரித்தாள்வதில் பேரினவாதம் காட்டும் மும்முரமும், அது இன்று அடைந்திருக்கும் வெற்றியும். 13. திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்பட்டுவரும் இளைய தமிழ்ச் சமுதாயம். இவற்றினை விடவும் இன்னும் பல காரணிகள் இருக்கலாம். மற்றையவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். இவற்றினை எதிர்த்து அரசியல் செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை இனி யோசிக்கலாம்.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அருமையான படங்கள். தீயணைப்பு வீரரின் செயல்கள் போற்றுதற்குரியவை. அவர்கள்மேல் நீங்கள் வைத்திருக்கும் அபிமானம் புரிகிறது. அதுசரி, தீ பரவக்கூடிய இடத்திலா இருக்கிறீர்கள், துணிச்சல்தான் !!! நீங்களிணைக்கும் படங்கள் எல்லாம் ஏதோவொரு பயணத்தில் எடுக்கப்பட்டவைபோலத் தோன்றுகின்றனவே? அடிக்கடி சுற்றுலா செல்வீர்களோ?
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
https://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. அவன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சீச்சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று விட்டுவிட வேண்டியதுதான். இதற்குப்போய் யாராச்சும் கவலைப்படுவார்களா?
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கண்களை நம்பாதே, அது உன்னை ஏமாற்றும்!!! இது நான் கண்டது!!!
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அதே கண்களா அல்லது வேறு இரு கண்களா?
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நீங்கள் சொல்லவருவது புரிகிறது................கடந்தகாலங்களை கழற்றிவைத்துவிட்டு எழுந்து வாருங்கள். ஒருகட்டத்தில் இறந்தகாலச் சுமைகளே நீங்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுத்துவிடும்........ ஏதோ சொல்லவேண்டும்போலத் தோன்றிற்று..அவ்வளவுதான். அது தென்னையின் தவறில்லையே? சுற்றமும் சூழலும் இப்படி அமைந்ததற்குத் தென்னையை நோவானேன்?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்குப் பிடித்த சோகப் பாடல்களில் இதுவும் ஒன்று. இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனது மனதில் வருவது நாதன். 1989 என்று நினைக்கிறேன். இந்திய ராணுவம் எமது தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலம். நான் மட்டக்களப்பில் தங்கியிருந்த மாணவர் விடுதியில், சமையல் வேலைக்கு இருந்த அம்மா விற்கு கூட ஒத்தாசை புரிவதற்கென்று நாதன் எனும் இளைஞர் ஒருவரும் தங்கியிருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எப்போதும் அவர் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்திருக்கும். சிறியதாக நாங்கள் விடும் பகிடிக்கும் சேட்டைகளுக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார். இதனாலேயே, அனைவருக்கும் அவர் நாதன் அண்ணாவாகிப் போனார். மட்டக்களப்புச் சந்தைக்குப் போய் விடுதிக்கும் மரக்கறி, மீன் இறைச்சி வாங்குவதிலிருந்து, விடுதி முகாமையாளருக்கு வீரகேசரி வாங்குவதுவரை நாதனே எல்லாம். இப்படி அடிக்கடி கடைகளுக்குப் போய்வந்துகொண்டிருந்த நாதனுக்கும் காதல் மலர்ந்தது. எமது விடுதிக்கு அருகில் இருந்த "தயா" கடை எனும் ஒரு சிறிய பலசரக்குக் கடைக்கு அடிக்கடி போக ஆரம்பித்திருந்தார். இவரை அடிக்கடி அந்தக் கடைப் பக்கம் கண்ட விடுதி மாணவர்கள் இதுபற்றிக் கேட்டபோது சிரித்தே சமாளித்து விடுவார். எமது விடுதியின் ஒரு ஓரத்தில் நாதனின் அறை இருந்தது. பத்திரிக்கை படிக்க, கதைப்புத்தகம் வாசிக்க, பாட்டுக் கேட்கவென்று எப்போதாவது அவரது அறைக்குப் போய்வருவேன். பழைய, பொத்தல் விழுந்த மரக் கட்டில். ஓட்டைப் பாய், பழைய அழுக்கேறிய தலையணை, கயிற்றுக் கொடியில் தொங்கும் நாதன் அண்ணாவின் இரு பழைய சேர்ட்டுக்களும், காற்சட்டைகளும். ஓரத்தில் இருந்த காகிதத்திலான சூட்கேஸ்..இவைதான் அவரது சொத்துக்கள். அமைதியும், ஏழ்மையும் குடிகொண்டிருந்த அவரது அறைக்குப் போகும்போதே மனதில் ஒருவித சோகம் சேர்ந்துவிடும். அப்படியொருநாள் நான் அங்கே சென்றபோது, நாதன் அழுதுகொண்டிருந்தார். ஏனென்று புரியவில்லை. சிறிது நேரம் அவரருகில் இருந்துவிட்டு எழுந்துவர எத்தனிக்கும்போது, அவரது காதல் பற்றிச் சொன்னார். தயா கடை உரிமையாளரின் மகள் மீதான தனது ஒருதலைக் காதல் பற்றியும், தனது காதலை தனது ஏழ்மையைக் காரணம் காட்டி நிராகரித்தது பற்றியும் சொன்னார். அவரருகிலிருந்த ரேடியோவில் ஒரு பாட்டு....முதலாவது முறை கேட்டபோதே நெஞ்சை அள்ளிக் கொன்றுவிட்ட அந்தப்பாட்டு.... "ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்....." பாடலைக் கேட்டவுடன் நாதன் அண்ணாவுக்காக அழவேண்டும் போல இருந்தது. எதுவும் பேசத் தோன்றாமல் எழுந்துவந்துவிட்டேன். சில மாதங்களில் இந்திய ராணுவத்தின் கூலிப்படைகளான த்ரீ ஸ்டார் காரர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் நாதன் அண்ணாவை மட்டக்களப்பு சந்தையில் வைத்துப் பிடித்துச் சென்றார்கள். அதன்பின் அவரை நான் காணவில்லை. 1990 இல் ஒருநாள் எங்களைப் பார்க்க விடுதிக்கு வந்திருந்தார். நன்றாக உடுத்தி, மினுங்கும் சப்பாத்துடன் அவரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய ராணுவ முகாமிலிருந்து அனுமதி கேட்டு வந்ததாகச் சொன்னார். "தயா கடைக்குப் போய் இன்று அவளைப் பார்த்துக் கேட்கப் போகிறேன், இன்று என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்" என்றுவிட்டுப் போய்விட்டார். அதன்பிறகு அவரை நிரந்தரமாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சிறிது நாட்களில் அவரது காதலிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தது. இந்திய ராணுவம் வெளியேறத்தொடங்கியிருக்க, தமிழ்த் தேசிய ராணுவம் மீதான தாக்குதல்களைப் புலிகள் தொடங்கியிருந்தனர். அம்பாறை எல்லையிலிருந்த தமிழ்த் தேசிய ராணுவத்தின் முகாமைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றியதாகச் செய்திகள் படித்தேன், அப்போதுதான் நாதன் அண்ணாவும் அங்கேயிருப்பது நினைவிற்கு வந்தது. அவர் என்ன ஆனார் என்பதுபற்றி அன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இன்றும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாதன் அண்ணாவின் அந்தச் சிரித்த முகம் மனதில் வந்துபோகும். காதலில் தோற்றவர்களுக்கும், ஒருதலையாகவே காதலித்து வாழ்பவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம், நாதன் அண்ணா உற்பட !