Everything posted by Thumpalayan
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
தலைவருக்கு பல உண்மைகளை தளபதிகள் கூறவில்லை. “அண்ணை கோவப்படும், ஆமியை அடிச்சு கலைச்சுப்போட்டு சொல்லுவம்” என்பதே அவர்களது நினைப்பாக இருந்தது. இப்படியான சின்னப் புண்ணை வைத்துக் கொண்டிருக்க அது கால் கழட்டும் நிலைக்கு வந்து விட்டது. அதைவிட அவருக்கு நீரிழிவு நோய் வேறு சிரமத்தை கொடுத்தது. தலைவர்ஆயதத்திலே அசையாத நம்பிக்கை உடையவர். சமாதான ஒப்பந்தத்திலே விருப்பமின்றித்தான் கையொப்பம் இட்டார். சமாதான ஒப்பந்தம் இடும்போது புலிகள் மிகப் பலமான நிலையிலே இருந்தார்கள். ஓயாத அலைகள் சண்டையிலே அரியாலை மட்டும் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு கிழமையிலே யாழ்ப்பாணம் விழுந்திருக்கும். ஆமி மந்திகை காம்பிலே ஒரு மல்ரி பரலை நிப்பாட்டிப்போட்டு இரவு பகலாக வெழுத்தார்கள், அப்பிடி இருந்தும் இயக்கம் முன்ஏறிக்கொண்டிருந்தது. யாழ் குடாவில இருந்த 40,000 ஆமியும் முற்றுகைக்குள் அகப்பட்ட நிலை. இந்த நிலையில் தான் இந்தியா தலையிட்டு யுத்த நிறுத்தத்தை அறிவிக்கச் செய்தார்கள். இயக்கத்திற்கு வேறு வழி இருக்கவில்லை.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
மகிந்த சகோதர்கள் போல ரணிலால் முப்படைகளையும் கட்டுப்படுத்த முடியாது. ரணில் மகிந்த கம்பனி போல விடாமல் யுத்தத்தை நடத்தி முடிக்கும் திறன் அற்றவர். ரணில் தந்திரமான ராஜ தந்திரி, கனவான் அரசியல் வாதி. ஆனால் மகிந்த குடும்பம் போன்ற சண்டியன் இல்லை. சில இராஜ தந்திர நகர்வுகள் மூலம் ஆளை மடக்கியிருக்கலாம். அத்துடன் ரணில் தெற்கின் ஆதரவு அற்றவர் அதனால் தான் தமிழர்களின் வாக்கு இல்லாமல் தோற்றார். யுத்தம் ஆரம்பிப்பதை அந்த நேரத்தில் புலிகளும் விரும்பினார்கள். அவர்களது பலம் பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பெரிய விம்பம் ஏற்றப்படுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தை என்ன விலை கொடுத்தும் உடனடியாக பிடிப்பதே அவர்களது திட்டம். முகமாலைப் பகுதிகளில் பல ஆயிரம் மாவீரர்களை இதனால் இழந்தார்கள். பல முனைகளில் ஒரே நேரத்தில் சண்டை தொடங்கும் என அவர்கள் நினைத்தேயிருக்கவில்லை. மன்னாரிலே முன் லைனிலே விடக்கூட போராளிகள் இருக்கவில்லை. ஆமி ஒரு ரவை கூட சுடாமல் சில இடங்களில் முன்னேறியது.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை நெல்லியடியில், மகாவித்தியாலய வீதியில் அலுவலகம் அமைத்திருந்தார்கள். நான் உயர்தரம் படிக்கத்த தொடங்கிய காலத்திலேயே (2003) தனியார் கல்வி நிலையங்களுக்கு இளம்பரிதி, பாப்பா, அமிதாப், லோரன்ஸ் போன்றவர்கள் வந்து கூட்டம் வைப்பார்கள். "இந்த சமாதானம் சர்வதேசத்துக்கு நாங்கள் காட்டும் போக்கு. எங்களைப் பலப்படுத்தவே இந்த நேரத்தை நாங்கள் பாவிக்கிறோம். இதன் பின்னர் இறுதிச்சண்டை வரப்போகுது அதுக்கு நீங்கள் வந்து எங்களுடன் இணையுங்கோ, அதுக்கு முதல் எரிமலைக்கு வந்து மக்கள் பயிற்சி எடுத்து ஆயத்தமாக இருக்க வேணும்" என்ற தொனியிலேயே அந்தக் கூட்டங்கள் இருந்தது. வன்னியிலோ நிலைமை வேறாக இருந்தது. இயக்க உயர் தளபதிகளின் குடும்பங்களுக்கு எப்போதுமே இருந்திராத சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன. பலருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன, தொலைபேசி, மின்சாரம், தொலைக்காட்சி போன்ற வசதிகள் கிடைத்தது. புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களால் பல பரிசுகளும் கிடைத்தது. மிக நீண்ட வருடங்கள் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மூச்சு விட சந்தர்ப்பம் கிடைத்தது. தலைவர் வைக்கும் கிழமை கூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. தலைவருக்கும், வரும் புலம்பெயர் முக்கியஸ்தர்களுடனும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் செலவிடவே நேரம் போதவில்லை. இந்த கால கட்டத்தில் தான் KP இடம் இருந்து வெளிநாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு காஸ்ட்ரோவிடம் கொடுக்கப்பட்டது. அவர்களால் ஒரு கிரேனைட் ஐக்கூட வன்னிக்குள் கொண்டு சென்று இறக்க முடியவில்லை. கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்தும் எல்லாமே மூழ்கடிக்கப்பட்டன. பலர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் வலையில் சிக்கினார்கள். வெளிநாடுகளை வெட்டி ஓடிக்கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு இது எப்படி போகப்போகிறது என தெரிந்திருந்தது. ஒரு கட்ட சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர் சமஸ்டிக்கு ஓம் என்று போட்டு வந்த பின்னரே அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வனால் பாலசிங்கத்தார் போல செயற்பட முடியவில்லை. இதே காலத்தில் கருணாவின் பிரிவும் தொடங்கி இயக்கத்தை கூறு போட்டது. பல சண்டைகளில் துணிந்து முன்னேறி அடித்து நொறுக்கும் ஜெயந்தன் படையணி பல பாகங்களாக உடைந்தது. பால்றாஜ் அண்ணையையும் புற்றுநோய் கொண்டு போனது. யாழ்மாவட்டத்தில் இருந்த போராளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். கிளைமோர், கிரேனைட், பிஸ்டல் என பல விடயங்களை உயர்தர மாணவர்களை கொண்டே செய்வித்தார்கள். ஹாட்லி காம்ப் கூட இப்படியான விதத்திலே அடித்து உடைக்கப்பட்டது. தேவையே இல்லாத ஆணியான மாவிலாறை மூடி அவர்களுக்கு கொஞ்சமும் வசதியற்ற தொப்பிகல காட்டிலே சண்டையை ஆரம்பித்து ஆரம்பத்திலேயே பின்வாங்கத் தொடங்கினார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் முடியுமட்டும் இது நிக்கவில்லை. பல அரசியல் கொலைகள், தெற்குப் பகுதி தற்கொலைத் தாக்குதல்கள் குறிப்பாக 2006 இல் கதிர்காமரின் சினைப்பர் சூடு போன்றவை சர்வதேசத்திடம் இருந்து வந்திருக்க கூடிய கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் ஆகிவிட்டிருந்தது. இயக்கமோ, சர்வதேசம் உதவும், ஏதாவது ஒரு நாடு தலையிடும் என நம்பியிருந்தார்கள். ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களில் உறுதியான சர்தேச உறவுகளை வளர்க்க தவறி விட்டார்கள். ஆயுத ரீதியில் தங்களை கட்டமைத்தது போல அரசியல் ரீதியில் வளர்க்கவே இல்லை. இருபது வயது இளைஜன் பத்து வயசு பிள்ளையின் உள வளர்ச்சியுடன் இருப்பது போன்ற நிலை. 9/11 பின்னர் மாறி விட்ட பூகோள அரசியல் ஆயுத நிலைமைகளை தலைவர் சரியாக எடை போட்டிருக்கவில்லை. தொழில் நுட்ப ரீதியில் அவர்களின் வளர்ச்சி இலங்கை அரசின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதிக் காலங்களில் கட்டாய ஆட் சேர்ப்பு, வரிகள் போன்ற காரணங்களால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போனார்கள். மகிந்தவிடம் மிகப்பெரும் தொகை பணத்தை வாங்கி ரணிலை புறக்கணித்தார்கள். ரணில் வெண்டிருந்தால் இயக்கம் இப்பவும் இருக்கும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கோசான் நீங்கள் ஒரு சிறந்த கருத்தாளர் ஆனால் NPP யையும் அனுரவையும் போட்டு வாங்குகிறீர்கள். எனக்கு உண்மையிலேயே JVP யை பிடித்ததில்லை, குறிப்பாக வீரவன்சவின் முகத்தை பார்த்தாலே கோவம் வரும். இந்த ஜனாதிபதி தேர்தல் ஆரம்பித்ததில இருந்து எங்கட ஹாட்லி சீனியர் ஒருத்தர் திசைகாட்டி சப்போர்ட். அவரின் முகநூலிலே அவரின் பதிவுகளுடன் கண்டபடி சண்டை பிடித்திருக்கிறேன். ஆனால் போகப்போக இந்த NPP பழைய JVP யில் இருந்து வேறுபட்டு தெரிகிறார்கள். தமிழர்களிடம், இருந்த தெரிவுகளில் NPP மட்டுமே சிறந்த தெரிவு. 2005 ஆம் ஆண்டு, நான் A/L படித்துக்கொண்டிருந்தேன். சமாதான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இயக்கம் அந்த மிகமுக்கிய ஜனாதிபதி தேர்தலில் ரணிலை புறக்கணித்து மகிந்தவை ஜனாதிபதியாக்கினார்கள். இதற்காக மகிந்த பெருமளவு பணத்தையும் கொடுத்திருந்தார். இறுதியில் நடந்தது என்ன. போராட்டமும் அழிந்து மக்களும் அழிந்ததுதான் மிச்சம். தனித் தமிழீழம் தற்போதைய சூழலில் ஒரு போதுமே சாத்தியப்படாத ஒன்று. தலைவர் காலத்தில் நடக்காதது எக்காலத்திலும் நடக்காது. அதைவிட ஒரு மாகாண சபையையே நிர்வகிக்கத் தெரியாத விக்கி மாதிரியினாவர்கள் இருக்கும்போது யாரை நம்பி பொறுப்பைக் கொடுப்பது. ஒரு அரசியல் கட்சியையே ஒழுங்காக ஒற்றுமையாக நிர்வகிக்க முடியாதவர்கள். வைத்தியர் அருச்சுனா அருந்தப்பிலே வென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 17 வாக்குகளால். இவரால் எதுவுமே ஆகப்போவதில்லை. வாய்ச்சொல்லில் வீரர். இவரின் கட்சி ஒரு ஊடக சந்திப்பைக் கூட உருப்படியாக நடத்த முடியாதவர்கள். இவரின் மனநிலை எந்த நாள் எப்பிடி இருக்கும் என்று யாராலுமே சொல்ல ஏலாது. மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாதவர். இப்படியானவர்கள் இருக்கும்போது தமிழர்கள் NPP யை தெரிவு செய்ததில் என்ன பிழை?
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
அண்ணை, வன்னிக்குள் மாட்டுப்பட்ட சில ஆயிரம் மக்களை போராட விட்டு விட்டு வெளியால ஒடி வேற யாரை குறை சொல்ல முடியும்? புலம்பெயர் மக்கள் தங்கட மகனயோ/மகளயொ முன் லைனில ஆயுதத்தொட விட ஆயத்தமா?
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அனுரவை எதிர்பதால் என்ன லாபம்? சில விடயங்களுக்கு நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கும். சர்வதெசம் என்று ஒருநடவடிகையும் எடுக்கப் போவதில்லை. எமக்கு கடந்த காலத்தில் வாழ்வது பிடித்த விடயம்.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
இந்த சனம் மட்டுமல்ல பருத்தித்துறையில உள்ள கனபேர் இப்ப NPP பக்கம் மாறி விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் கணிசமான வாக்குகள் போய்விட்டது. பழைய JVP அனுபவங்களாள் நான் உட்பட அனுரவை விரும்பவில்லை. ஆனால் சாதாரண குடும்பத்தில் பிறந்து இனவாதத்தை கையில் எடுக்காமல் ஐனாதிபதியாவது லேசுப்பட்ட விடயமில்லை. நல்லதே நடக்கும் என நம்புவோம்.
-
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் அகற்றம் - அடுத்தது என்ன?
பருத்தித்துறை - பி பி சி தமிழ் வேணுமெண்டு செய்யுறாங்களோ 😡
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
உண்மையில் ஏன் இந்த அசமந்தம்? நான் அவுசில் பாவிக்கும் ஒரு app (வருடாந்தம் $25 million AUD revenue) சில மாற்றங்களுடன் (இலங்கை ஊபரில் ஆட்டோ போல) இலங்கையில் சிறப்பாக வளர்க்க முடியும் என்ற எண்ணத்தில் என்னோட படித்தவர்களின் வட்ஸப் குரூப்பில் சில கேள்விகள், அபிப்பிராயங்கள் கேட்டேன் (UI எப்பிடி வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் பெற). நக்கல் கேள்விகளும், விசர் கதைகளும் தவிர ஆக்கபூர்வமான எதுவித உரையாடலும் இல்லை (மில்லியன் கணக்கில் அப்பை உருவாக்கி விக்கலாம் எண்டு சொன்ன பின்னரும்). பேசாமல் WSO2 அல்லது Virtusa விடம் கொடுத்துவிடலாம் என்று இப்ப யோசிக்கிறன். இன்னொரு நண்பன், UK யில் படித்தவன் Web design, digital marketing நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். சிறிய சிறிய வேலைகளை பிடித்து தாறதாக சொல்லியிருக்கிறேன். இனி அவனின் கெட்டித்தனம்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எங்களுக்கு பழகிய சூழலாக இருப்பதால் உங்களுக்கு feeling healthy யாக இருப்பதில் வியப்பில்லை. அதோட வேலை டென்சன், காசு டென்ஷனுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பச்சைப் பசேல் என்ற ரம்மியமான இயற்கை, அழகிய கடற்கரைகள், உறவுகள், கோயில் திருவிழாக்கள் என்பன மனசை இலகுவாக்க கூடியன. அதேவேளை கண்ட இடத்திலும் குப்பை, வாகன கோர்ன் சத்தம், ஆட்களை ஆக்கள் நெருக்கியடிக்கும் வரிசைகள், ஊழியர்களின் அசமந்தம், நீதி ஒழுங்கின்மை என்பன BP யை எகிற வைப்பன. படங்கள் அருமை - நன்றி
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக்தியை தாறது. கொஞ்ச நாளைக்கு "முன் லைனிலே, பொசிசன் எடுத்து நிக்கப்போறன் - ஓவர்" ஒருகாலத்தில் (மைத்திரி வந்த போது) கொழும்பில் போய் இருப்பது (ஊரில் இருக்க முடியுமா தெரியவில்லை) திட்டமாக இருந்தது. கோத்தபாயவின் வருகை, கொரோனாவின் தாக்கம், பொருளாதார நெருக்கடி இதனால் முடிந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு ஓடியதால் தற்போது வந்திருக்கும் Brain Drain போய் இருக்கும் எண்ணத்தை வெகுவாக பாதித்துள்ளது. இப்பத்தான் 38ஆவது வயசு நடப்பதால் பென்சன் எடுக்கும் காலம் பத்தி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பொருளாதார ரீதியில் சிறு உற்பத்தி ஏற்றுமதிகளோட மட்டுமில்லாமல் தகவல் நுட்பத் துறை சார்பான ஏற்றுமதிகளை எமது பக்கங்களில் ஊக்குவிப்பது தான் இப்போதைக்கு நாங்கள் லடயஸ்பொறா டமில்ஸ் செய்ய வேண்டியது/செய்யக் கூடியது. ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலை வாங்குவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு எனது நண்பன் ஒருவன் ஒரு சுயதொழில் செய்தார். அவரின் operations ஐ பாத்தவுடனேயே அதில் பல குறைபாடுகளை கண்டு பிடித்துவிட்டேன். இந்த இந்த மாதிரி செய், இத ட்ரை பண்ணு இன்னும் லாபத்தில ஓடும் எண்டு சொன்ன போது உதெல்லாம் வெளிநாட்டுக்குத்தான் சரி, எங்கட ஆக்களுக்கு உதுகள செய்ய பஞ்சி எண்டு சொல்லிப் போட்டான். ரெண்டு வாரியத்தில அவனிண்ட லாபத்தை விட கால்வாசி சம்பளத்தில அரச வேலை வந்தவுடனேயே பிஸினசையும் மூடிப்போட்டு இருக்கிறார். அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள். பொருளாதார இறுக்கத்தின் பின்னர் எனது நண்பர்களில் பல்கலை போன 90% எஞ்சினியர்/டொக்டர் ஊரிலே இல்லை. இருப்பவர்கள் ஆங்கில அறிவு போதாமையால் போகமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை. நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய் மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நான் நினச்சன் கொன்ராக் எண்டா இரவு பகலா வேலை நடக்கும் எண்டு. ஊருக்க ரண்டு மூண்டு வீடு கொன்ராக்கில சிங்கள ஆக்களிட்ட குடுத்து கட்டுப்பட்டது. அவங்கள் வந்து ஒரு வீட்ட வாடைக்கு எடுத்து கட கட எண்டு கட்டி முடிச்சிட்டாங்கள். வாகனத்த யோசிச்சு எடுங்கோ. காசு திரும்ப வராது எண்டு நினைச்சுப் போடுங்கோ. மற்றது மோட்டச்சைக்கிள் வாகனம் ஓடுறது வலு கவனம். றோட் றூல்ஸ் ஒருத்தருக்கும் வடிவா தெரியாது, தெரிஞ்சாலும் கடைப்பிடிக்கிறேல்ல. வாகனத்தால அடிச்சு ஆரும் செத்தால் கேம் ஓவர் றிமாண்டுக்க தூக்கிப் போட்டிடுவாங்கள். மற்றது பொலிஸ் மறிக்கேக்க என்ன தான் பிழை விடாட்டிக்கும் கொஞ்சம் இறங்கி வந்து கதைச்சா அலுப்படிக்காம விடுவாங்கள். அவங்கள் அலுப்பு குடுக்க வெளிக்கிடாங்களோ நோண்டிக்கொண்டு நிப்பாங்கள். நான் இலங்கை IC இலங்கை லைசன்ஸ், அதுவும் இருவது வரியப் பழய சாமான், சோ படு லோக்கல், மற்றது சிங்களம் ஓரளவு தெரியும்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அவனே தான். யாழில முகத்தைக் காட்டி பல வரியமக்கா.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஒரு காலத்தில் குறிப்பாக 2018-19 காலப்பகுதியில் நான் கொழும்பில்/ஊரில் போய் இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தேன். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் (எனது துறை அல்ல) வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து WSO2, Virtusa போன்ற பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களையும் சந்தித்திருந்தேன். ஆனால் கொரோனோ வந்த பின்னர் எல்லாம் கிடப்பில் போட்டாச்சு. ஊரிலே காணி வாங்கியதுக்கு வாழ்த்துகள். செலவோட செலவா மதிலக் கட்டி விடுங்கோ, இல்லாட்டிக்கு பிற்காலத்தில கன தலையிடி வரும். காணி வேலைளுக்கு கொன்ராக் மாதிரி குடுத்து செய்விக்கேலாதோ? ஸ்கூட்டி ஓடுறது கவனம். சின்னக் கார் நல்லது ஆனால் ஆரையும் நம்பி குடுத்தியளோ, அவளவுதான். ஊரில் அப்பா அம்மா இருப்பதால் 2009 23 லச்சத்துக்கு இதை எடுத்து விட்டன். டீசல் வாகனம், றைவர் தவிர ஏழு பேர் சாமான்களோட வசதியா போகலாம். நான் போய் நிக்கும் ஒரு மாசத்துக்கு திறப்பு என்ட கையில என்டது வாங்கேக்க போட்ட கொன்டிசன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சகரா அக்கா செய்தது பாராட்ட வேண்டிய விசயம். செவிடைப் பொத்தி போட்டிருந்தால் இன்னும் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும். கண்ட கண்ட காவாலியளிண்ட சேட்டை ஊரில கூடீட்டு. 2018 அதை இந்திர விழா போன போது
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
யாழ் வந்து கனகாலம். இடைக்கிடை வாசிப்பதோடு சரி. சுமே அக்காவின் தொடரை விடாமல் வாசிச்சு முடிச்சாச்சு. சுவாரசியம் குறையாமல் நேரம் மினக்கெட்டு எழுதுவது இலக்கு இல்லை பச்சை குத்தெலம கிடக்கு. நிர்வாகம் கொஞ்சம் உதவி செய்யுங்கப்பா.
-
சென்னை மெட்ரோ ரயில்...
நல்ல விசயம் சந்தோசம். அந்தரத்தில போற சாமான், சென்னை விமான நிலையம் போல கழன்று விழாட்டிக்கு இன்னும் நல்லது, கையோட தமிழக அரசு சென்னை விமான நிலையத்தில உருப்படியான மலசல கூடங்களையும் அமைத்து பராமரிக்க வேண்டும். யார் யார் எத்தினை கோடியை சுட்டு சுவிஸ் பாங்கில போட்டாங்களோ .....
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
நான் யாழின் நெடு நாள் வாசகன். கடந்த வருடத்தில் தான் நானும் உறுபினராக இணைந்து கருத்து எழுத வேண்டும் எண்ட ஆசை ஏற்பட்டது. ஆனால் இப்போது தான் அதற்குரிய நேரம் கிடைத்துள்ளது. இது தான் எனது முதல் பதிவு, ஆகவே நான் எதாவது தவறு வேடும் பட்சத்தில் கள உறவுகளாகிய நீங்கள் எனக்கு கை கொடுத்து உதவி செய்வீர்கள் என நம்புறன். நான் தற்போது கூகிள் மூலமான மொழி பெயர்பியின் உதவயுடனேயே கருத்து எழுதுகிறன். மற்றைய முறை எனக்கு விளங்கவில்லை. யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்ய முடயுமா?