-
இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்!
யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்! யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர். https://athavannews.com/2025/1457523- யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!
யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்! இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது தலைமை உரையை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் வருடம் நிறைவடைய உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு பொது நிர்வாக உள்நாட்டல்கள அமைத்து மற்றும் ஏனைய அமைச்சுகள் மூலம் கிடைக்கப்பெற்ற நிதிகள் 15 பிரதேச செயலக நீதியாக உரிய முறையில் செலவு செய்யப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்ட அலுவலர்கள் அமையத்தினால் யாழ் மாவட்ட செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 2700.9 மில்லியனில் 2625.2 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சுகள் மூலம் 5368.8 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் 4210.5 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. தீவக வீதிகள் வேலைத் திட்டம் நாட்டிலே ஏற்பட்ட இடர் நிலை காரணமாக உரிய காலப் பகுதியில் நிறைவு செய்யப்படாத நிலையில் அதற்கான நிதியை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆகவே இவ் வருடம் நிறைவடைய இம்மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் இருக்கின்ற நிலையில் தற்போது இடம் பெற்று வரும் வேலைகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாத இறுதி வரை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். Athavan Newsயாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது...இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
சில வேளை அதுதான்…உண்மையாய் இருக்குமோ. 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை ஆரம்பம்! கைத்துப்பாக்கி தொலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்படும் நிலையில், இன்று (28) கம்பஹா நீதவானிடம் ஆஜர்படுத்தப்படுப்படவுள்ளார். https://athavannews.com/2025/1457509- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன். எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்” ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள். இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் அர்ஜுனா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கருவி என்று. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பான சீரியஸான உரையாடல்களை திசை திருப்பி, தனிநபர் தாக்குதல்கள், குழப்பங்கள்,மோதல்கள் போன்றவற்றின் மூலம் முடிவுகளை எடுக்க விடாமல் தடுப்பதுதான் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்ட வேலை என்றும். அந்த வேலையை அவர் திறம்படச் செய்கிறார் என்றும்…. இது ஒரு சதிக் கோட்பாடு.இக்கட்டுரை எப்பொழுதும் சதி,சூழ்ச்சிக் கோட்பாடுகளை எடுத்த எடுப்பில் நம்புவதில்லை. மருத்துவர் அர்ஜுனா யாருடைய கருவி என்பதை விடவும் முக்கியமானது, ஆழமானது எதுவென்றால், அவர் உங்களைக் கோபப்படுத்தும்போது நீங்கள் எப்படிப் பொறுமையாக இருக்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் கோபப்பட்டு அவரைப்போலவே தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களா இல்லையா என்பதுதான்.நீங்கள் கோபப்படுவதன்மூலம் அவரை வெற்றி அடைய வைக்கிறீர்களா இல்லையா என்பதுதான். இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல,அரசு நிர்வாகிகளுக்கு குறிப்பாக அர்ஜுனா அடிக்கடி நோண்டும் மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.அவர் உங்களிடமிருந்து கோபமான பதிலை,எதிர்வினையை எதிர்பார்க்கிறார் என்றால் நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் உங்களுடைய முதிர்ச்சி;பக்குவம். ஏன் அதுதான் உரிய உபாயமும் கூட. ஆனால் கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைப் பார்த்தால் யாரும் நிதானமாக இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் ஆளுநரும் அரச அதிபரும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.அவர்கள் வாயைத் திறக்க விரும்பவில்லை. அவர்கள் அரச ஊழியர்கள். அரசியல்வாதிகளின் சண்டைகளுக்குள் வாயை கொடுத்து பதவியை கெடுத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆளுநரும் அரச அதிபரும் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, சில சமயங்களில் சிரிப்பையும் அடக்கிக் கொண்டு, சென் பௌத்த ஞானிகள் போல சாட்சிகளாக இருக்கிறார்கள். அப்படி நமது அரசியல்வாதிகளும் இருந்தால் என்ன?அரசாங்கம் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை குழப்புவதற்காகத்தான் இப்படிப்பட்ட வேலைகளை பின்னிருந்து ஊக்கிவிக்கின்றது என்று கூறுவோமாக இருந்தால், அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் தொடர்பாக தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு முடிவுக்கு வரலாம்.அதை மக்களுக்கு வெளிப்படுத்தலாம்.அதை அரசாங்கத்துக்கு ஒரு முறைப்பாடாகத் தெரியப்படுத்தலாம். இங்கு பிரச்சினையாக இருப்பது அர்ச்சுனா மட்டுமல்ல.அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்.”இப்படிப்பட்ட குழப்பங்கள், கோளாறுகள் சிங்களப் பகுதிகளில் இல்லை.குறிப்பாக யாழ்ப்பாணத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்தான் இவை காணப்படுகின்றன…” என்று கூறிய ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகி ஒருவர்,அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குள் யாருடைய கமராவை அனுமதிப்பது என்ற முடிவை எடுப்பதன்மூலம் இந்தக் குழப்பங்களை உடனடியாகத் தடுக்கலாம் என்று. ஆனால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மட்டுமல்ல,ஆளுநரும் அடிக்கடி அரச ஊழியர்களை,நிர்வாகிகளைக் குற்றம் சாட்டுகிறார்.சில சமயங்களில் எச்சரிக்கின்றார்.இதன் மூலம் “தமிழ் அரச நிர்வாகிகளில்தான் தவறு உண்டு, அரசாங்கத்தில் இல்லை”என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாகக் கட்டி எழுப்பப்படுகிறது. ஆளுநர் யார்? அவர் அரசாங்கத்தின் பிரதிநிதி.அவர் தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி தனக்குக் கீழே வேலை செய்யும் நிர்வாகிகளை மாற்றலாம் தண்டிக்கலாம்.ஆனால் அவர் அப்படிச் செய்வதை விடவும் அதிகமாக அரச நிர்வாகிகளைக் குறை கூறுகிறார் என்பதுதான் கடந்த பல மாத கால அவதானிப்பு ஆகும். இவ்வாறு தமிழ் அதிகாரிகளை தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளோடு மோத விடுவது;தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு இடையே மோதிக் கொள்வது; தங்களுடைய அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் கூட்டங்களை தமிழ் மக்கள் நகைச்சுவை காட்சிகளாகப் பார்ப்பது….போன்றவற்றின் மூலம் தமிழ் அரசியலின் சீரியஸைக் குறைத்து அதை ஒரு பகிடியாக்கி விடுவது என்பது ஒரு நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியும். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் குழப்பப்படுவதற்கு அல்லது கோமாளிக் கூத்துகளாக மாற்றப்படுவதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம் ஏற்கனவே இக்கட்டுரையில் கூறப்பட்டது போல அரசாங்கத்தின் சூதான ஒரு நிகழ்ச்சி நிரல். இரண்டாவது காரணம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவர்களின் ஆளுமை குறைவு. மூன்றாவது காரணம்,அர்ஜுனாவும் உட்பட சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நாகரீகத்தைப் பேணாமை. நான்காவது காரணம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குள் கமராக்கள் அனுமதிக்கப்படுவது.அல்லது அங்கே நடக்கும் விவாதங்களை சில ஊடகவியலாளர்கள் வணிக நோக்கு நிலையில் இருந்து கையாள்வது. இதில் முதலாவதாகக் கூறப்படுவது ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு.ஆனாலும் தமிழர்களைத் தமிழர்களோடும் மோத விடுவதன்மூலம் தமிழ்த் தேசிய அரசியலை மதிப்பிறக்கம் செய்ய விரும்புகின்றவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சிலரை அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ கையாள முடியும் என்ற சந்தேகம் பலமாக உண்டு. அரசாங்கத்தின் சதி சூழ்ச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால்,அவ்வாறு அரசாங்கத்தால் கையாளப் படத்தக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உண்டு என்பது தமிழ் அரசியல் வீழ்ச்சியைக் காட்டுவது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையான முதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் இல்லை என்பதுதான் இங்கு முதலாவது காரணம்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆளுமை எதுவென்பதல்ல இங்கு பிரச்சனை.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமை எதுவென்பதுதான் இங்கு முதல் பிரச்சினை. தமிழ்த் தேசிய அரசியல் அவ்வாறு சீரழிந்து போனதுக்கு எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களை தோற்கடிப்பது வெளித் தரப்புகள் என்பதை விடவும், தமிழ்த் தரப்பே என்பதுதான் உண்மை. தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்று அழைத்துக் கொண்டாலும், நடைமுறையில் அவர்கள் ஒரு தேசமாக இருக்கிறார்களா என்ற பாரதூரமான கேள்வியை இங்கே எழுப்ப வேண்டும். ஒரு தேசத்துக்குரிய கூட்டுணர்வோ சகோதரத்துவமோ தமிழ் மக்கள் மத்தியில் உண்டா? ஒருவர் மற்றவரை துரோகியாக்குவது; ஒருவர் மற்றவருக்கு “பார்” பட்டம் சுட்டுவது;ஒருவர் மற்றவரை வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் முகவர் என்று முத்திரை குத்துவது; ஒரு கட்சிக்குள்ளேயே இரு குழுக்கள் பிரிந்து நின்று ஒன்று மற்றதை அவதூறு செய்வது; யாராவது சமூகத்தில் மினுங்கிக் கொண்டு எழுந்தால், யாராவது சமூகத்துக்கு நல்லதைச் செய்ய முயற்சித்தால், அல்லது நல்லதை சொல்ல முயற்சித்தால்,அவரைச் சந்தேகிப்பது;அவரை அவதூறு செய்வது;வசை பாடுவது; சிறுமைப்படுத்துவது… இப்படியே தமிழ் மக்கள் ஒருவர் மற்றவரை நம்பாமல், ஒருவர் மற்றவரை சந்தேகித்து, ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கி, ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்திச் சீரழிய,தமிழ் சமூகத்தில் யாருமே கதாநாயகர்களாக எழ முடியாமல் போய்விட்டது. தாங்கள் வாக்களித்த தலைவர்களையே ஒரு சமூகம் சந்தேகிக்கின்றது; அவதூறு செய்கிறது என்று சொன்னால்,அது அந்த சமூகத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.தான் வாக்களித்த ஒரு தலைவரைப் பார்த்து ஒரு சமூகம் சிரிக்கிறது என்று சொன்னால் அந்தச் சமூகம் தன்னுணர்வை,கூருணர்வை இழந்து வருகிறது என்று பொருள்.இவ்வாறு தமிழர்கள் ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கிக் கொண்டிருக்க,யாருமே கதாநாயகர்களாக எழமுடியாத தோல்விகரமான ஒரு வெற்றிடத்தில்,தென்னிலங்கையிலிருந்து அனுர குமார திஸநாயக்க கதாநாயகராக இறக்கப்படுகிறார்.தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் அவர் நாயக நடை போடுகிறார். அனுரவைப் போல நாயக வலம் வரும் தமிழ்த் தலைவர் யாராவது உண்டா? ஏன் இல்லாமல் போனது? எல்லாத் தோல்விகளுக்கும் எதிரியைப் பழி செல்வதும்,சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்வதும் ஒரு வழக்கமாகப் போய்விட்டது. நாங்கள் எங்கே பிழை விட்டோம்? நாங்கள் எங்கே தேசமாக இல்லாமல் போனோம்? என்பதனை தமிழ்த் தரப்பு தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். இது தமிழ் மக்கள் தங்களை தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம். சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிகளையும் திட்டிக் கொண்டிருப்பதனால் பிரச்சனை தீராது.உள்ளதில் பெரிய கட்சி கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் ஏற்பட்ட தோல்வி காட்டுகிறது.ஒரு தேசமாகத் திரட்டப்படாத மக்கள் சிதறிக் கொண்டே போகிறார்கள்.சிரிப்புக்கிடமாகி விட்டார்கள். அடுத்த ஆண்டாவது தமிழ் மக்கள் தங்களைப் பார்த்து தாங்களே சிரிக்காத ஒரு ஆண்டாக மலராதா? https://athavannews.com/2025/1457504- யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!
யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்! யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான கேள்வியின் போது பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம் பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற வழக்கு இடம்பெறுகின்ற காரணத்தினால் வழக்கு நிறைவடையாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் குறித்த நிதியை கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பில் கட்டுவதற்குரிய உத்தரவு கிடைக்குமாயின் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் அல்லாவிட்டால் மாற்றுக்காணி ஒன்றை தேர்வு செய்து உள்ள விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1457475- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
சாத்தான், இலங்கையிலேயே…. போர் நடந்த காலத்திலும் சரி, அதற்குப் பின் வந்த காலங்களிலும்… அதிக ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சராக இருந்தவர் ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ் என நினைக்கின்றேன். 1) சந்திரிக்கா. 2) மகிந்த. 3) மகிந்த. (இரண்டாம் முறை) 4) மைத்திரி. 5) கோத்தா. 6) ரணில். மேலே உள்ள தரவுகள் பிழை என்றால்…. சுட்டிக் காட்டவும்.- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் யாழ்பல்கலைக் கழக மாணவர் ஒருவரின் பதிவிலிருந்து….. THUGS’ LIFE EPRLF இயக்கம் இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வடக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவத்தோடு(IPKF) மீளவும் பிரசன்மாகியிருந்தது. ஒவ்வொரு பிரதான சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. EPRLF இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீளவும் வந்திறங்கினர். புலிகளை அழித்து இந்தியாவின் உதவியோடு ஈழத்தைக் கைப்பற்றுவோம் என EPRLF இன் தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் அறிக்கைவிடுக்கிறார். யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து EPRLF இராணுவம் செயற்பட்டது. EPRLF குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே EPRLF தன்னை அறிமுகப்படுத்தியது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்ற அனைத்தும் இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான வகையில் நிறைவேற்றப்பட்டன. தேசியப் போராட்டம், வர்க்கப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற அழகான வார்த்தைகளை உச்சரித்த EPRLF இயக்கம் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்க ஆரம்பித்தது. 1988 ஆம் நடுப்பகுதில் EPRLF மக்கள் மீதான பல முனைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. குறிப்பாகப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கைதுகள் உச்சத்தைத் தொட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்வதென்பதே பாதுகாபற்றதாக இருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புச் சார்பாக ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டோம். 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தலைமையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் நான் தங்கியிருந்தேன். விடுதிக்கு நேர் எதிராக அமைந்திருந்த தொழில் நுட்பக் கல்லூரி தேர்தல் சாவடியாகப் பயன்படுத்தப்பட்டது. விடுதிக்குப் பின்புறமிருந்து தேர்தல் சாவடியை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் விடுதியைச் சுற்றிவளைத்தனர். தெருவில் நடமாடிய ஒவ்வொருவரையும் எழுந்தமானமாகத் தாக்கினர். விடுதியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரவில்லை என்பதை விடுதியைச் சுற்றிவளைத்திருந்த இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு என்னை அவர்களிடம் சென்று பேசுமாறு மாணவர்கள் முடிவெடுத்தனர். அவர்களிடம் பேசச் சென்ற போது நான் தேர்தல் சாவடியிலிருந்த இராணுவத் தளபதியிடம் பேசுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன். பஞ்சாபிக் காரரான அவரது முன்னால் சென்ற போது எனது மேலங்கியில் எண்ணைப் படிவு காணப்படுவதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது நானாக இருக்க வேண்டுமென முடிவெடுக்கிறார். என்னை தீர விசாரிக்குமாறு சில இராணுவத்தினரிடம் அனுப்பி வைக்கிறார். அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு இராணுவத்தினர் ஒரு மேசையுடன் இணைத்து என்னைக் கட்டிவைத்துவிட்டு மிருகத் தனமாக அடிக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக எனக்கு அடி விழுகிறது. இறுதியில் நான் மயக்கமடைந்து விட்டேன். மயக்கம் தெளிந்த போது எனக்கு சிறிதளவு நீர் அருந்த அனுமதித்தார்கள். தேர்தல் முடிவடைந்திருந்தது. இராணுவத்தினர் முகாமிற்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். எனது கைகளை இறுகக்கட்டி இராணுவ வாகனத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். சேகர் என்ற தமிழ் அதிகாரி அங்கு வருகிறார். என்னைப் புலியா எனக் கேட்கிறார். இல்லை என்றதும் தனது சப்பாத்துக் கால்களால் எனது முதுகில் உதைகிறார். சில நிமிடங்கள் நினைவிழந்த நிலையில் மருதானாமடம் பிரிவைச் சேர்ந்தா இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றப்படுகிறேன். அங்கு என்னை ஒப்ப்டைத்தவர் சேகர். அந்த அணியின் பொறுப்பதிகாரிக்கு நான் புலிகள் சார்ந்தவன் என்று கூறியே ஒப்படைக்கப்படுகிறேன். மருதனாமடம் முகாமிற்கு அவர்கள் என்னைக் கொண்டு செல்லும் வரைக்கும் ஏறத்தாழ 10 நிமிட நேரமாக பலர் அங்கும் இங்குமாகத் தாக்குதல் நடத்தினர். சிகரட் புகைத்துக்கொண்டிருந்த இராணுவதினர் ஒருவர் என் மீதே அதனை அணைக்கிறார். பல தடவைகள் உரத்து அலறியும் எந்தப் பயனும் இல்லை. எல்லாமே மரத்துப் போனது போன்ற உணர்வு. இறுதியாக முகாமை அடைந்ததும் அங்கு இராணுவ வண்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்த எனது கால்களைப் பிடித்து இழுத்ததில் எனது தலை அடிபட விழுந்ததில் மற்றொரு தடவை நினைவிழக்கிறேன். நான் விழித்துக்கொண்ட போது என்னைச் சுற்றிப் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் EPRLF உறுப்பினர்கள். எனக்குத் தெரிந்த ஒருவரையும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு சிலர் குடி போதையில் இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எல்லோருமே என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர். அங்கிருந்த EPRLF உறுப்பினர் ஒருவர் நான் இந்திய இராணுவத்திற்கு எதிராகச் செயற்படுவது தனக்குத் தெரியும் என்கிறார். உடனடியாகவே கேள்விகள் நிறுத்தப்பட்டு சாரமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர். தமக்குத் தெரிந்த சித்திரவதை முறைமகள் அனைத்தையும் கையாள்கின்றனர். ஒரு புலி உறுப்பினரையாவது காட்டிக்கொடுக்காவிட்டல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகின்றனர். எனக்கு முன்னமே தெரிந்த EPRLF உறுப்பினர் அங்கிருந்து செல்லும் போது எனது முதுகில் வில்லுக் கத்தியால் கீறிவிட்டு மறு நாள் வரைக்கு இது இரத்தம் சொட்டப் போதுமானது எனக் கூறிவிட்டு அகன்று செல்கின்றார். மருதனாமடம் முகாம் வழமையாகக் கைதிகளைத் தடுத்துவைப்பதற்கான முகாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை. முகாமில் என்னைத் தவிர வேறு கைதிகளைக் காணமுடியவில்லை. இரவு நெடு நேரமாக கிணற்றிற்கு அருகிலிருந்த மரத்தோடு என்னைக் கட்டிவைத்திருந்தனர். நள்ளிரவு இருக்கலாம் ஒரு இந்திய இராணுவத்தினர் எனக்கு அருக்கில் வந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவந்து தந்த பின்னர் முகாமின் பின்புறதில் இருந்த மலசல கூடத்திற்குப் பின்புறம் காணப்பட்ட அறையில் அடைத்துவிட்டனர். இரவு உறங்கியதாக நினைவில்லை. அதிகாலையில் உறங்க முற்பட்ட வேளையில் சற்று உணவோடு அறைக்குள் எனைத் தள்ளிய இராணுவ சிப்பாய் வருகின்றார். சற்றுப் பின்னதாக இரண்டு EPRLF பிரதான உறுப்பினர்கள் வருகின்றனர். ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தங்கன் என்ற மானிப்பாயைச் சேர்ந்தவர். மற்றவர் பிரதீப் என்பவர். நீ எப்போது புலியில் சேர்ந்தாய் என்று கேட்டவாறே தங்கன் என்னைச் சாரமாரியாகத் தாக்குகிறார். கிணற்றிற்கு அருகில் அழைத்துச்சென்ற அவர்கள் நீர் நிரம்பிய ஒரு வாளிக்குள் எனது தலையை அமிழ்த்துகின்றனர். நான் மூச்சுத்திணறும் வரைக்கும் நீருக்குள் எனது தலையை வைத்திருக்கின்றனர். என்னிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாமையால் அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்குதல்களைத் தொடர்கின்றனர். அப்போது தமிழ்ப் பேசும் இந்திய இராணுவ அதிகாரி சேகர் அங்கு வருகின்றார். தனது பங்கிற்கு அறையின் மூலையில் உட்காரவைக்கப்பட்டிருந்த என்னை கால்களால் உதைக்கிறார். என்னை இங்கு வைத்து விசாரணை செய்தால் உண்மை சொல்லப்போவதில்லை என்றும் மானிப்பாயில் உள்ள விசேட சித்திரவதை முகாமிற்கு என்னை அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறுகின்றனர். அங்கே மின்சாரம் பாய்ச்சும் உபகரணங்கள் உட்பட பல சித்திரவதைக் கருவிகள் இருப்பதாகவும் நான் எப்படியும் உண்மை சொல்வேன் என்றும் பேசிக்கொள்கின்றனர். அதன் பின்னர் வெளியே வாசலுக்குச் சென்று அங்கு சித்திரவதைச் செய்யப்படும் போது இறந்துபோன ஒருவரைப்பற்றியும் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த உப நிலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை நாகரீகமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேந்தவர் என்கிறார். நான் உண்மையில் புலி இயக்கத்தைச் சார்ந்தவனா என்று கேட்கிறார். நான் நடந்தவற்றை விபரிக்கிறேன். அவர் சித்திரவதை முகாமில் நடப்பவற்றை விபரிக்கிறார். கைகளில் நகங்களைப் பிடுங்குவார்கள், கண்களில் ஊசி ஏற்றுவார்கள் என்று மனித நாகரீகங்கள் கேட்டிராத பல சித்திரவதைகளைப் பற்றிக் கூறுகின்றார். அவர் கூறும் போதே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் நாள் இரவு EPRLF உறுப்பினர் கீறிய கத்திக்காயம் மேலும் வலித்தது. யாராவது எனக்குத் தெரிந்த பல்கலைகழகப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்களை மட்டும் கூறினால் என்னை இங்கிருந்து விடுதலை செய்துவிடுவதாகக் கூறினார். வெள்ளிக்கிளமை விடுமுறை நாளொன்றில் கைது செய்யப்படிருந்தேன். அன்று சனி. இன்னும் ஒரு ஞாயிறு கழிந்தால் திங்கள் பல்கலைக் கழகத்தில் போராட ஆரம்பித்துவிடுவார்கள். போராட்டம் ஆரம்பித்தபின்னர் அடிகாயங்களோடு என்னை விடுதலை செய்ய மாட்டார்கள். ஒன்றில் கொலை செய்துவிடுவார்கள் அல்லது சித்திரவதை முகாமில் நீண்டகாலம் வைத்திருப்பார்கள் என்கிறார். பல்கலைக் கழகதிலிருந்து சிலர் அணுகியதாகவும் இராணுவ அதிகாரிகள் நான் கைதானதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். கைதானதை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத காரணத்தால் கொலை செய்து அழித்துவிடுவது இலகுவானது என்கிறார். அவரோடு ஒத்துழைத்தால் விடுதலைக்காக ஆவன செய்வதாகக் கூறுகிறார். எனக்குத் யாரையும் தெரியாது என்று மீண்டும் கூறியதும் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார். மதிய உணவு தரப்பட்டதாக நினைவு. மாலை வேளையில் தங்கன் மீண்டும் என்னை வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். ஞாயிறு மாலை சித்திரவதை முகாமில் சந்திப்பதாகக் கூறினார். சில மணி நேரங்களின் பின்னர் அதே உப நிலை இராணுவ அதிகாரி வருகின்றார். புலிகளின் ஒரு உறுப்பினரை காட்டிக்கொடுத்த பின்னர் விடுதலையாகி வெளியில் சென்று தமக்குத் தகவல் தருமாறு செயற்பட்டால் உடனடியாகவே விடுதலை செய்வதாகக் கூறுகிறார். தவிர, நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருப்பதால் ஏனைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அனுப்பத் தயாரில்லை என்றும் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்த அடிப்படையில் விடுதலை செய்யலாம் அல்லது சித்திரவதை முகாமிற்கு அனுப்ப வேண்டியதாக இருக்கும் என்கிறார். நான் இப்போது பேச ஆரம்பிக்கிறேன், “உங்களுடைய நாட்டில் வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றபோது மக்கள் ஆதரவு இருந்ததைப் போன்றே இப்போதும் புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் புலிகள் தலைமறைவு அமைப்பு. மக்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் இப்போது அங்கே இப்போது தலைமறைவாகிவிட்டார்கள். காட்டிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஆனால் நீங்கள் அப்பாவிகளைத் தாக்கினால் அவர்கள் புலிகளோடு இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்” என்பன போன்ற விடயங்களைக் கூறுகிறேன். ஆமோதிப்பது போன்று தலையசைத்துவிட்டுச் செல்கிறார். அவரை மீண்டும் நான் காணவில்லை. அன்று இரவு சித்திரவதைகள் குறைந்திருந்தன. மறு நாள் ஞாயிறு, மதியம் அளவில் முகாமின் முன்னரங்கில் காவலுக்கு நின்றிருந்த இராணுவத்தோடு என்னை நிறுத்தி வைத்தனர். தெருவால் புலி உறுப்பினர்கள் சென்றால் காட்டிக்கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். துப்பாக்கியோடு ஒரு இராணுவச் சிப்பாய் தெருவில் போகிறவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட என்னைத் தாக்குவார். பொழுது சாய்ந்ததும் மறுபடி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். EPRLF உறுப்பினர்கள் வந்தார்கள். மானிப்பாய் முகாமிலிருந்து பிரதீப்பும் வந்திருந்தார். “*நல்ல தமிழ்” *மட்டும் தான் “தோழர்” பேசினார். வெளியே ஒடிச்சென்று பெரிய தடி ஒன்றைக் கொண்டுவந்து தாக்கியது நினைவிருக்கிறது. ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்துவிட்டேன். கண்விழித்த் போது யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் வந்து ஏதோ ஹிந்தியில் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. திட்டியபடி பல தடவை முகத்தில் அறைந்தார். அவர்கள் கூறியபடி சித்திரவதை முகாமிற்கு நான் கூட்டிச் செல்லப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. மறு நாள் அதிகாலை அடி உதை எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது. சித்திரவதை முகாமிற்குக் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இராணுவ உடுப்பை அணிந்து கொள்ளுமாறும் ஒரு அதிகாரி உடை, தொப்பி ஆகியவற்றுடன் வந்தார். மதியத்திற்குச் சற்றுப்பின்னர், இராணுவ உடையுடன், பின்பக்கம் திறந்த இராணுவ வண்டியில் ஏற்றப்படுகிறேன். சித்திரவதை முகாமிற்குச் செல்லும் வழியில் எனது மானிப்பாய் வீட்டைச் சோதனையிடப் போவதாகச் சொல்கிறார்கள். வீட்டிற்குச் செல்லும் வழியில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக உளவாளிகள் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாகச் பொறுப்பதிகாரி சொல்கிறார். எனது வீட்டிற்குச் செல்லும் வழியில் கடை ஒன்றின் அருகில் சற்று மறைவான இடமொன்றில் என்னையும் இன்னொரு இராணுவ அதிகாரியை காவலுக்கும் நிறுத்திவிட்டு வீட்டைச் சோதனையிடச் செல்கிறார்கள். அவ்வேளையில் எனது வீட்டில் எனது ஆசிரியராகவிருந்த கலாநிதி சிறீதரன், பேராசிரியை ரஜனி திரணகம உட்பட உறவினர்கள், நண்பர்கள் பலர் “காணாமல்போன” என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததை பின்னதாக அறியக் கூடியதாக இருந்தது. அங்கு சென்ற இந்திய இராணுவத்தினர் தாங்கள் என்னைக் கைது செய்யவில்லை என்றும், வீட்டில் ஒளிந்திருக்கிறேனா எனச் சோதனையிட வந்ததாகவும் கூறியிருந்தனர். எனக்குக் காவலுக்கு நின்றிருந்த இராணுவச் சிப்பாய் அருகிலிருந்த கடைக்கு பீடி வாங்குவதற்காகச் செல்கிறார். அவ்வேளையில் எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெருவால் நடந்து செல்கிறார். அவரை நான் சைகை காட்டி அழைத்ததும் என்னை நோக்கி வருகிறார். அடி விழுந்ததில் முகம் முழுவதும் வீக்கமடைந்திருந்ததால், கூர்க்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அழைப்பதாகக் கருதியே அவர் என்னை அணுகியதாக பின்னதாக அவர் என்னிடம் கூறியிருந்தார். அருகில் வந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் என்னுடன் ஏதும் பேசாமல் உடனடியாகவே மறுபக்கம் திரும்பிச் சென்று எனது வீட்டில் விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். வீட்டில் இருந்த அனைவரும் கடையை நோக்கி ஓடிச் செல்ல, நிலமையைப் புரிந்துகொண்ட இந்திய இராணுவத்தினர் அவசர அவசரமாக வாகனத்தை நோக்கி விரைந்து அதனைச் செலுத்த ஆரம்பித்தனர். வாகனத்தின் பின்னால் எனது குடும்பத்தினர் ,மற்றும் அவர்களுடனிருந்த பேராசியர்கள் ஓடிவருவதைக் காணக்கூடியதாக இருந்தது. இப்போது நான் முகாமில் உயிரோடு வைக்கப்பட்டிருப்பதைப் பலர் சாட்சியாகக் கண்டிருக்கிறார்கள். இராணுவ வாகனம் இடையில் நிறுத்தப்பட்டு யாரையோ தொடர்பு கொள்கிறார்கள். இப்போது அவர்களது திட்டம் மாறியிருக்க வேண்டும். மருதனாமடம் முகாமிற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறேன். அன்று மாலைவரை எனக்கு யாரும் அடிக்கவில்லை. அன்று இரவிற்குள் எனது வீட்டார், ரஜனி திரணகம போன்றோர் பல அதிகாரிகளைச் சந்தித்து EPRLF செயலாளர் பத்மனாபாவையும் சந்திக்கின்றனர். அன்று இரவே விடுதலை செய்யப்படுகிறேன். காயங்கள் குணமாகும் வரை வெளியே வரக்கூடாது, பத்திரிகைகளில் படம் வரக்கூடாது, என்ற எச்சரிக்கையின் பின்னர் எனதுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறேன். * வைமன் வீதி முகாமில் நான் சந்தித்த வாசு இப்போது கே.பி இன் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானிய முகவர்…பிரித்தானியாவில் வசிக்கும் புலி எதிர்ப்பாளர். கலாநிதி சிறீ மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், ஜெரோம் சில காலங்களின் பின்னர் மாரடைப்பால் மரணித்துவிட்டார், கிருபன் பிரான்சில் வசிக்கிறார், பிரதீப் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதாகக் கூறுகிறார்கள். நான் மீண்டும் எழுத்துக்களோடு பிரித்தானியத் தெருக்களில். Naveen Nava, Rahulan Nadarajah @ரஞ்சித் , @நன்னிச் சோழன்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு இருக்கின்றார் சர்வதேச போதை கடத்தல் மன்னன் மாகந்துர மதுஷ்வுடன் ஆயுத பரிமாற்றங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியாளர்களால் கொ*ல்லப்பட்ட ஜேவிபியின் மூத்த உறுப்பினர் திருமதி மாலினி சமரசிங்கே என்பவரின் மகனான சமரசிங்க ஆராச்சிகே மதுஷ் லக்சித (மாகந்துர மதுஷ்) இலங்கையில் சர்வ வல்லமை பொருந்திய நபராகவிருந்த பாதாள உலக பேர்வழியாவர் திரு மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாகவிருந்த போது 2019 ஆம் ஆண்டு பெப்ரவர் மாதம் 4 ஆம் திகதி டுபாயில் நடைபெற்ற அவரின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கைது செயயப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார் பின்னர் கோத்தபாயா ராஜபக்சே ஜனாதிபதியாகவிருந்த போது Encounter முறையில் சிறையிலிருந்து அழைத்து செல்லப்பட்டு பொலிஸ் அதிகாரிகளால் சு*ட்டு கொ*ல்லப்பட்டிருந்தார் இலங்கையின் தென்னிலங்கையின் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர உட்பட 80 ற்கு மேற்பட்ட அரசியல் வாதிகள், வர்த்தகர்கள் உட்பட பலரோடு நெருங்கிய தொடர்புகளை பேணிய மாகந்துர மதுஷ் திரு மைத்திரிபால சிறிசேனா அவர்களை கொ*ல்ல முயற்சித்ததாகவும் சொல்லப்படுகின்றது இந்த கொ*லை மூலம் மாகந்துர மதுஷ் வசமிருந்த இலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் போதை வர்த்தக வலையமைப்பு தொடர்பான பல்வேறு தகவல்கள் மறைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது அந்தவகையில் இராணுவ ஒட்டுக்குழுவாக இயங்கிய டக்ளஸ் தேவானந்தா பாதாள உலகத்தை சேர்ந்த மாகந்துர மதுஷ்வுடன் இணைந்து இயங்கியமை புதிய விடயமல்ல தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் முஸ்லிம் ஆயுத ஒட்டுக்குழுக்களையும் பாதாள உலக குழுக்களையும் இணைத்தே இயக்கி வந்தார்கள் குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு கைமாற்றப்பட்டு இருக்கின்றது அதே போல கருணா பிளவின் போது இராணுவம் வசம் வந்த ஆயுதங்களும் பாதாள உலக குழுக்களுக்கு கைமாற்றப்பட்டு இருக்கின்றது கிழக்கு மாகாணத்தில் வாழைசேனையில் கருணா பிள்ளையான் குழுக்கள் மூலம் முஸ்லிம் மற்றும் பாதாள உலக குழுக்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு இருந்தது கடந்த காலங்களில் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களில் கூட பாதாள உலக குழுக்களுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கின்றன குறிப்பாக முஸ்லிம் அமைச்சராகவிருந்த தற்போதைய மாநகர சபை முதல்வர் ஒருவரின் வாகனத்தில் கூட பாதாள உலக குழுக்களுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கின்றது இந்த அட்டூழியங்களை அரச இராணுவ புலனாய்வு கட்டமைப்புகளே ஒருங்கிணைத்தன . அதாவது ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தோடு அரச இராணுவ புலனாய்வு கட்டமைப்புகளே இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்வதற்கு இவர்களை பயன்படுத்தினார்கள் அதன் அடிப்படையில் தான் மாமனிதர் ரவிராஜ் படுகொலை முதல் மாமனிதர் குமார் பொன்னம்பலம் வரையான பல்வேறு கொ*லைகளில் இராணுவம், ஒட்டுக்குழுக்கள் மட்டுமின்றி பாதாள உலக குழுக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட்டன ஆனால் தற்போது தமிழ் முஸ்லிம் ஆயுத ஒட்டுக்குழுக்களின் தேவைகள் பொதுவில் முடிவடைந்த நிலையில் இராணுவத்தால் இயக்கப்பட்ட தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தா முதல் பிள்ளையான் வரையான இராணுவ ஒட்டு குழு கூலிகளுக்கு கணக்கு தீர்க்கப்படுகின்றது ஆனால் இவர்களை இயக்கிய தரப்புகள் தொடர்ந்தும் மிக தெளிவாக பாதுகாப்பக வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் அவர்கள் புதிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களை பயன்படுத்தி சமூக நிர்வாக மட்ட குழப்பங்களில் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார்கள். இனமொன்றின் குரல்- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.