Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் பல நாடுகள் மீது பொருளாதாரப் போருக்கு தயார் ஆனார். குறிப்பாக கனடாவின் அமேரிக்க ஏற்மதி தொடர்பாக அவரின் நிலைப்பாடுகள் உள்நாட்டு பொருட்களின் நுகர்வை அதிகரித்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்தல் என்ற போர்வையில் இருந்தது. இது ஒரு பொருளாதாரப் போர். 440 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் அமேரிக்காவுக்கு செய்யும் கனடாவை நிலைகுலைச் செய்யும் ஒரு முறையாக இதைக் கையாள்வதாக அவர் நினைக்கின்றார். அதே போல் ஏனைய நாடுகள் மீதும் வரிவிதிப்பிற்கான காரணங்களாக அமேரிக்க பொருட்களை தங்களால் விற்க முடிவதில்லை என்று கூறுகின்றார். ஆனால் சர்வதேச வியாபாரத்தை அவ்வாறு கையாள முடியாது. இலங்கையின் மேல் விதிக்கப்பட்டிருக்கும் வரியானது 44% ஆக இருக்கின்றது. எமது அமேரிக்காவுக்கான ஏற்றுமதியும் அமேரிக்காவில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களிக்கான சென்மதி நிலுவை எப்பொழுதும் மறையாகவே உள்ளது. மிக மிக குறைவான இறக்குமதியே செய்யப்படுகிறது. இதுவே ஒரு பிரதான காரணம். இலங்கையின் அமேரிக்காவுக்கான ஏற்றுமதி கிடத்தட்ட 3 பில்லியன்களை டொலர்களை எட்டியுள்ளது. இது மொத்த ஏற்றுமதியில் 20%க்கும் உயர்வாக இருக்கின்றது. ஏற்கனவே 12% இருந்த வரியை 44% ஆக அதிகரித்திருப்பது குறைவான வரியிருக்கும் நாட்டின் பொருட்களின் நுகர்வை அங்கே அதிகரிக்கும். இதனால் எமது ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்படும். பெருவாரியாக எமது ஆடை உற்பத்திகளே அங்கு ஏற்றுமதியாகின்றது. அதற்கான போட்டியி சந்தையில் இலகுவாக அமேரிக்கா தனது தேவையை பூர்த்தி செய்ய முடியும். இலங்கை போன்ற பொருளாதாரத்தில் படிப்படியாக மீட்சியடையும் நாட்டிற்கு ஒரு பேரிடியாக அமையும். மீண்டும் $ பெறுமதி அதிகரிக்கும் பணவீக்கம் தொடரும். வளர்முக நாடுகள் தொடர்பாக எந்தவித அக்கறையும் இல்லாமல் எப்பொழுதும் கொடூரமாக செயற்படும். அதன் ஒரு வடிவம் இது. இதனை கையாள புதிய சந்தை வாய்ப்புகளை நாம் தேட வேண்டும். ஏற்கனவே GSP+ சலுகையில் தான் எமது உற்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்கின்றது. அரசு புதிய முயற்சிகள் புதிய பொருளாதாரக் கொள்கைகள் புதிய உற்பத்தில்கள் என்பவற்றிக்கான ஆரம்பப் படிகளைச் செய்யாமல் எம்மால் மீள முடியாது. Monisha Kokul
  2. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பை வழங்குங்குமாறு கோரிக்கை! இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வர இருக்கிற நிலைமையில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமருக்கான மகஜரொன்றை யாழ் இந்திய தூதரகத்தில் இன்று கையளித்துள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளனர் 2025 சித்திரை மாதம் மூன்றாம் திகதியாகிய இன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் இயங்கும் சிவில் அமைப்புகளின் வலைப்பின்னலான வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆகிய நாம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இந்திய அரசின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம். ஒரு நட்பான அயல் நாடு எனும் வகையில் இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்தியா எப்போதும் உதவிக்கு வருகிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய மாபெரும் பங்களிப்பை நாம் எப்போதும் நன்றியுடன் நினைவிற் கொண்டுள்ளோம். அவ்வாறே, 1980களில் இலங்கையின் தேசியப் பிரச்சினையை திர்ப்பதற்கு நடுவராக இந்தியா ஆற்றிய வகிபாகத்தையும் நினைவிற் கொண்டுள்ளோம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது குறிப்பீட்ட சில உரிமைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மாகாண ஆட்சி வழங்கப்பட்டது அத்துடன் தமிழ் மொழியானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அலுவல்கள் மற்றும் நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. மேலும் மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு மேன்முறையீட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமானது, தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதுமாகும். எனினும், 13வது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த மக்களுக்கு இறையாண்மை உரிமைகளுடன் கூடிய நிலையான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவில்லை. இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியானவர் தனது மீயுயர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண ஆட்சியை செயலிழக்க செய்ய முடியும் என்பது இந்த மாகாண ஆட்சி முறைமையின் இன்ளொரு மட்டுப்படுத்தலாகும். ஒரு தூரதிஷ்டவசமான நிகழ்வாக, இலங்கையின் உச்ச நீதிமன்றமானது 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பாவது “செல்லுபடியற்றதும் சட்டவிரோதமானதும்” எனப் பிரகடனப்படுத்தியது. இது இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அரசியல் பின்னடைவாகும். 13 வது திருத்த சட்டம் இலங்கையின் அரசியல் அமைப்பில் உளிவாங்கப்பட்டு 35 வருடங்கள் கடந்துவிட்டவ இந்த இடைப்பட்ட காலத்தில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று, 2009ஆம் ஆண்டு முடிவற்றது. போரின் போதும் போர் முடிவுற உடனடிக் கால கட்டத்திலும் பொது மக்கள் மீது பாரதூரமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பயிர்வை உறுதிப்படுத்தாததுடன் இராணுவமயமாக்கலையும், சிங்கள் காலணித்துவத்தையும், பௌத்தமயமாக்கலையும் விரிவாக்கினர் அத்துடன் தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமை மற்றும் கலாசார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. எமது கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபலங்களின் அடிப்படையில், 13வது திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறையானது நிலைபேறானதல்ல எந்த நேரத்திலும் இலங்கை அரசானது மாகாண அதிகாரத்தை மீளப்பெற முடியும். எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையே எமக்கு கௌரமமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை உறுதிப்படுத்தக் கூடிய நிலைபேறான ஒரே முறைமை என்று திடமாக நம்புகிறோம். அந்தவகையில் தங்களுக்கு நல்வரவு கூறுவதுடன் இலங்கைக்கான தங்களின் உத்தியோகபூர்வ வருகையை நாம் உலர்வாக கௌரவிப்பதுடன், இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுந்த தங்களின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு இந்த பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கிறோம் என்றுன் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது. https://athavannews.com/2025/1427280
  3. வெளிநாட்டு நிதி பெற்று... சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கஸ்ரகாலம் தொடங்கி விட்டது. வெளிநாட்டு நிதியில் உல்லாச வாழ்க்கை வாழும், இன்னும் பல ஆயிரக் காணக்கானவர்கள் இருப்பார்கள் என நினைக்கின்றேன். அவர்களையும் தேடிப் பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாவப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை மோசடி செய்வதைப்போல் இழிய செயல் வேறு எதுவும் இல்லை.
  4. பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்தார் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர்! சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தி சந்திரசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்தது. . மேலும், பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுள்ளது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427287
  5. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் 22 பேர் மீது சிஐடி விசாரணை! 2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை தொடங்கியுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட கண்டுபிடிப்புகள், சம்பந்தப்பட்ட நபர்கள் பல்வேறு அளவுகளில் 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிதியைப் பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதைக் கண்டறிய தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன. அதன்படி, நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதிக் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விவரங்களைப் பெறுவதற்கு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திடம் நேற்று (2) சிஐடி அதிகாரிகள் உத்தரவு கோரியிருந்தாகவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1427254
  6. அமெரிக்க புதிய வரி முறை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு நியமனம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெபர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது. இன்னிலையில் கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளதுடன் பங்களாதேஷூக்கு 37 சதவீதமும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும், இந்தியாவிற்கு 26 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://athavannews.com/2025/1427284
  7. உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அப்டேட்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சுமார் 700,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்களுக்கான விண்ணப்ப செயல்முறை மார்ச் 3 தொடங்கி மார்ச் 17 ஆம் திகதி நிறைவடைந்தது. இதற்கிடையில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் குறித்த தகவல்களைத் தொகுக்கும் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்காத பொது அதிகாரிகள் உடனடியாக அவ்வாறு செய்யுமாறு தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். அத்தகைய அதிகாரிகள் தங்கள் தகவல்களை, தங்கள் நிறுவனத் தலைவரின் பரிந்துரைகளுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் – என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1427269
  8. பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது! களுத்துறை, கமகொட பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், களுத்துறையின் தோடங்கொட மற்றும் கொங்கொட பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், மற்றொரு பெற்றோல் குண்டு, இரண்டு மொபைல் போன்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலை நடத்துவதற்காக இருவரும் 5000 ரூபா ஒப்பந்தத்தைப் பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இருவரும் 2025 மார்ச் 29 அன்று களுத்துறையில் உள்ள ஒரு வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசித் தாக்கினர். இந்த விபத்தில் 28 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்தார். சம்பவத்தில் காயமடைந்த 06 வயது சிறுவன் ஒருவன் சில நாட்களுக்குப் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427272
  9. தாய்லாந்து, இலங்கைக்கான பயணத்திற்கு முன் மோடியின் அறிக்கை! இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்துக்கு முன்னதாக பாங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) தாய்லாந்து புறப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 26% தள்ளுபடி பரஸ்பர வரிகளை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் மோடி இந்த விஜயம் அமைந்திருந்தது. மோடிக்கும் வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் மொஹமட் யூனுஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அல்லது சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்து தாய்லாந்து பயணத்தின் போது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இந்தப் பயணத்தைத் திட்டமிடுவது குறித்து நன்கு அறிந்தவர்கள், முறையான சந்திப்பு சாத்தியமில்லை என்று முன்னதாகவே கூறியிருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக வங்கதேசத் தரப்பு ஒரு சந்திப்புக்கு வலுவான அழுத்தத்தை அளித்து வருகிறது. தனது புறப்பாட்டிற்கு முன்னதாக ஒரு அறிக்கையில் மோடி, இந்தப் பயணங்கள் கடந்த காலத்தின் அஸ்திவாரங்களை உருவாக்கி, பரந்த பிராந்தியத்தின் நலனுக்காக இந்தியாவின் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்த பங்களிக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில் தாய்லாந்துக்கு பயணம் செய்வதாக அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய மேம்பாடு, இணைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மன்றமாக பிம்ஸ்டெக் உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவின் வடகிழக்கு பகுதி பிம்ஸ்டெக்கின் மையத்தில் அமைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட மோடி, குழுவின் தலைவர்களைச் சந்தித்து “எங்கள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உற்பத்தி ரீதியாக” ஈடுபடுவேன் என்றார். 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நடத்தவிருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) செயல்பாடுகளை இந்தியா முடக்கியதால், பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு தளமாக வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் மீது கவனம் செலுத்தியுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி பாங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் போது கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக மோடி ஷினவத்ரா மற்றும் தாய்லாந்து தலைமையுடனும் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். பிம்ஸ்டெக் தலைவர்களுக்காக தாய்லாந்து பிரதமர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்பதற்கு முன்பு இன்று மாலை ஷினவத்ராவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். வெள்ளிக்கிழமை (04) நடைபெறும் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, மோடி தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்னை சந்திப்பார். மோடியின் இலங்கை விஜயம் மோடி வெள்ளிக்கிழமை மாலை தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார். கடந்த டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து இந்தப் பயணம் நடைபெறுகிறது. இந்த பயணம் குறித்து பதிவிட்டுள்ள மோடி, பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்ப்பது’ என்ற கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், நமது பகிரப்பட்ட நோக்கங்களை அடைவதற்கான கூடுதல் வழிகாட்டுதலை வழங்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று மோடி கூறினார். இந்த விஜயத்தின் போது இந்தியாவும் இலங்கையும் 10 ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1980களின் பிற்பகுதியில் தீவு நாட்டின் உள்நாட்டுப் போரின் போது இந்திய அமைதி காக்கும் படை (IPKF) தலையீட்டிற்குப் பிறகு முதல் முறையாக பாதுகாப்பு ஒத்துழைப்பைப் புதுப்பிப்பதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் அடங்கும். https://athavannews.com/2025/1427260
  10. ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிவு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை கடுமையாக்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (03) சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் 3% வரை சரிந்தன. இது முதலீட்டாளர்கள் உலகளாவிய வர்த்தகப் போரை ஏற்படுத்தும் என்றும், இது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும் மற்றும் எரிபொருள் தேவையை மட்டுப்படுத்தும் என்றும் கவலைப்படுகிறார்கள். பிரெண்ட் மசகு எண்ணெய் (BCO) $73 க்கும் கீழே சரிந்தது, அதே நேரத்தில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் (WTI) $70 க்கும் கீழே சரிந்தது. மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர், பிரெண்ட் மசகு எண்ணெய் விலை $1.82 அல்லது 2.43% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு 73.13 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் $1.84 அல்லது 2.57% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு $69.87 ஆக இருந்தது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10% குறைந்தபட்ச வரியை ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்தார். பல நாடுகளின் பொருட்களுக்கு மிக அதிக வரிகளுடன், பணவீக்கத்தை அதிகரித்து அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க அச்சுறுத்தும் உலகளாவிய வர்த்தகப் போரை அதிக அளவில் தொடங்கியுள்ளார். https://athavannews.com/2025/1427278
  11. ஜப்பானின் கியூஷுவில் நிலநடுக்கம்! ஜப்பானின் கியூஷுவில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (02) இரவு 07.34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உயிர் மற்றும் சொத்து இழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன. சாலைகள் விரிசல் அடைந்தன,நிலநடுக்கத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதற்கிடையில், நிலநடுக்க நிவாரண முயற்சிகளை அனுமதிக்க மியான்மரின் ஆளும் இராணுவம் ஏப்ரல் 22 வரை நாட்டின் உள்நாட்டுப் போரில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஜப்பானைப் பொறுத்தவரை, அந்நாடு அதிக நில அதிர்வு மண்டலத்தில் உள்ளது. மேலும் பசுபிக் கடற்கரையில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தும், நூற்றுக்கணக்கான கட்டிடங்களை இடிந்து விழும் மற்றும் சுமார் 300,000 மக்களைக் கொல்லக்கூடும் என்று ஜப்பான் அரசாங்க அறிக்கை திங்களன்று தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. https://athavannews.com/2025/1427247
  12. பயண விதிமுறையை திருத்திய பிரித்தானியா! பிரித்தானிய அரசாங்கம் தனது பயண விதிமுறைகளை புதிப்பித்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து செல்லும் ஐரோப்பிய பயணிகளுக்கு புதன்கிழமை (03) முதல், புதிய ஆன்லைன் நுழைவு அனுமதி (Online Entry Permit)அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நுழைவு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, கண்டத்திலிருந்து வரும் பயணிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. புதிய ஆன்லைன் நுழைவு அனுமதி, இங்கிலாந்தின் எல்லை அமைப்பை நவீனமயமாக்கும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் தேவை உடனடியாக அமலுக்கு வந்தாலும், பல மாதங்கள் நீடிக்கும் இடையகக் காலம் பயணிகளை புதிய முறைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள அனுமதிக்கும். புதிய ஆன்லைன் நுழைவு அனுமதி திட்டத்தின்படி, இங்கிலாந்துக்குள் நுழைய விசா தேவையில்லாத அனைத்து பயணிகளும் 10 பவுண்டுகள் (12 யூரோக்கள்) செலவில் பயணத்திற்கு முந்தைய அனுதமியை ஆன்லைனில் வாங்க வேண்டும். இது ஏப்ரல் 9 முதல் 16 பவுண்டுகளாக உயரும். அயர்லாந்து குடிமக்கள் இதில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்த விதிமுறை முதன்முதலில் கடந்த ஆண்டு ஐரோப்பியர் அல்லாத நாட்டினருக்கு விரிவுபடுத்தப்பட்டது, இதில் அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் பயணிகள் அடங்குவர். https://athavannews.com/2025/1427275
  13. உலக நாடுகளை நடுங்கச் செய்யும் ட்ரம்பின் புதிய வரி; இலங்கை பொருட்களுக்கு 44% வரி! அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10% குறைந்தபட்ச வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (02) அறிவித்தார். இதன் மூலம் அவர், பல நாடுகளின் பொருட்களுக்கு மிக அதிக வரிகளுடன், பணவீக்கத்தை அதிகரித்து அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் அச்சுறுத்தலான உலகளாவிய வர்த்தகப் போரை அதிக அளவில் தொடங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக அதிக வரி விகிதங்களுடன் தங்களை இணைத்துக் கொண்ட பல நீண்டகால அமெரிக்க நட்பு நாடுகளிடமிருந்து குழப்பமான கண்டனத்தைப் பெற்ற இந்த கடுமையான வரிகள், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருளாதாரத்தைச் சுற்றி புதிய தடைகளை எழுப்புவதாக உறுதியளிக்கின்றன. இது உலகளாவிய ஒழுங்கை வடிவமைத்த பல தசாப்த கால வர்த்தக தாராளமயமாக்கலை மாற்றியமைக்கிறது. இதனால், வர்த்தக பங்காளிகள் தாங்களாகவே எதிர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது துவிச்சக்கர வண்டிகள் முதல் வைன் வரை அனைத்திற்கும் வியத்தகு முறையில் அதிக விலைகளுக்கு வழிவகுக்கும். இந்த வரி விதிப்பினை விமர்சித்துள்ள அமெரிக்க திறைசேரியின் தலைவர் ஸ்காட் பெசென்ட், ஏனைய நாடுகளை பழிவாங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். இது குறித்து CNN செய்திச் சேவையிடம் பேசிய அவர், “இது எங்கு செல்கிறது என்று பார்ப்போம், ஏனென்றால் நீங்கள் (ட்ரம்ப்) பழிவாங்கினால், அதுதான் நமக்கும் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்,எதையும் அவசரமாகச் செய்வது புத்திசாலித்தனம் அல்ல,” என்று கூறினார். பங்குச் சந்தைகள் கட்டணங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்று என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். இந்த அறிவிப்புக்குப் பின்னர் பங்குச் சந்தைகள் சரிந்தன. வியாழக்கிழமை (03) ஆரம்ப வர்த்தகத்தில் ஜப்பானின் நிக்கேய் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவை எட்டியது. அதே நேரத்தில், அதிகரித்து வரும் வர்த்தகப் போர் குறித்த நிச்சயமற்ற தன்மையால் பல வாரங்களாக நிலையற்ற வர்த்தகத்தைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து அமெரிக்க பங்குகள் கிட்டத்தட்ட 5 டிரில்லியன் டொலர் மதிப்பை அழித்துவிட்டன. ட்ரம்பின் இந்த அறிவிப்பினால், 20% வரியை விட சீன இறக்குமதிகள் மீது 34% வரி விதிக்கப்படுவதுடன், மொத்த புதிய வரி 54% ஆக அதிகரிக்கும். 20% வரியை எதிர்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 24% வரிக்கு இலக்காகக் கொண்ட ஜப்பான் உட்பட அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் இதில் இருந்து தப்பவில்லை. அடிப்படை வரி விகிதங்கள் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும், மேலும் அதிக பரஸ்பர வரி விகிதங்கள் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும். ஃபிட்ச் ரேட்டிங்ஸின் அமெரிக்க ஆராய்ச்சித் தலைவரின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் வெறும் 2.5% ஆக இருந்த அமெரிக்க இறக்குமதி வரி விகிதம் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் 22% ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் இரண்டு பெரிய வர்த்தக பங்காளிகளான கனடா மற்றும் மெக்சிகோ ஏற்கனவே பல பொருட்களுக்கு 25% வரிகளை எதிர்கொள்கின்றன. எனினும், புதன்கிழமை அறிவிப்பிலிருந்து கூடுதல் வரிகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. சில குடியரசுக் கட்சியினர் கூட ட்ரம்பின் ஆக்ரோஷமான வர்த்தகக் கொள்கை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். புதன்கிழமை அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள், செனட் 51-48 என்ற வாக்குகளுடன் ட்ரம்பின் கனேடிய வரிகளை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்தை அங்கீகரித்தது. ஒரு சில குடியரசுக் கட்சியினர் ஜனாதிபதியுடன் முறித்துக் கொண்டனர். இருப்பினும், குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம் சாத்தியமில்லை என்று கருதப்பட்டது. எனினும், ட்ரம்பின் உயர்மட்ட பொருளாதார நிபுணர் ஸ்டீபன் மிரான் புதன்கிழமை ஃபாக்ஸ் பிசினஸிடம், இந்த கட்டணங்கள் சில ஆரம்ப இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அமெரிக்காவிற்கு நீண்ட காலத்திற்கு பயனளிக்க வேலை செய்யும் என்று கூறினார். வெள்ளை மாளிகையின் தகவலின்படி, தாமிரம், மருந்துகள், குறைக்கடத்திகள், மரங்கள், தங்கம் மற்றும் அமெரிக்காவில் கிடைக்காத சில கனிமங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு பரஸ்பர வரிகள் பொருந்தாது. எவ்வாறெனினும், ட்ரம்பின் இந்த வரித் தொகை, கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து நடைமுறையில் உள்ள வர்த்தக ஏற்பாடுகளை நம்பியிருந்த நிதிச் சந்தைகள் மற்றும் வணிகங்களை உலுக்கியுள்ளது. இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத வரி புதிய வரிவிதிப்பு அமைப்பு அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீத நிலையான விகிதத்தை அறிமுகப்படுத்துகிறது. பல முக்கிய வர்த்தக கூட்டாளிகளுக்கு அதிக விகிதங்களைப் பயன்படுத்துகிறது. 49 சதவீதத்தில், கம்போடியா மிக உயர்ந்த வரியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து வியட்நாம் 46 சதவீதமும், இலங்கை 44 சதவீதமும், சீனா 34 சதவீதமும் உள்ளன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத “தள்ளுபடி செய்யப்பட்ட பரஸ்பர வரியை” ட்ரம்ப் அறிவித்தார். இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி இடமாக அமெரிக்கா தொடர்ந்து விளங்கி, மொத்த வணிக ஏற்றுமதியில் 23% பங்களிப்பை வழங்கியது. 2024 ஆம் ஆண்டில் இலங்கையுடனான அமெரிக்காவின் மொத்தப் பொருட்களின் வர்த்தகம் 3.4 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கான அமெரிக்கப் பொருட்களின் ஏற்றுமதி 368.2 மில்லியன் டொலராக இருந்தது, இது 2023 ஐ விட 4.9 சதவீதம் (17.1 மில்லியன் டொலர்) அதிகமாகும். இலங்கையிலிருந்து அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 3.0 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது 2023 ஐ விட 6.1 சதவீதம் (173.5 மில்லியன் டொலர்) அதிகமாகும். இலங்கையுடனான அமெரிக்கப் பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறை 2024 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது 2023 ஐ விட 6.3 சதவீதம் (156.4 மில்லியன் டொலர்) அதிகமாகும். https://athavannews.com/2025/1427257
  14. கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும், இரண்டரை வயது சிறுமிக்கு, இது எப்படி சாத்தியம் என்ற ஆச்சரியமும் ஏற்படுகின்றது. இது சம்பந்தமாக விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் வரவேற்கப் படுகின்றன.
  15. புதிய அரசின் ஆட்சியில் ஓரளவாவது நீதி கிடைக்கும் என்று பார்த்தால்… அந்த நம்பிக்கை மெல்ல வலு இழந்து வருகின்றது. நேற்று ஒரு அமைச்சர்…. அரசியல் கைதிகளுக்கு, பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்வது சாத்தியம் அற்ற விடயம் என தெரிவித்தார். சில காலத்துக்கு முன்… இன்னுமொரு அமைச்சர், தற்போது அரசியல் கைதிகளே இல்லை என்றார்.
  16. கிருஷ்ணா மறியலில் இருக்க வேண்டிய ஆள். அவனுக்கு 10 வருசம், கடூழிய சிறை கொடுக்கப் பட வேண்டும். ஊரான் பணத்தில்… உல்லாசம் அனுபவித்தவனை, மறியலில் வைத்து நொங்கு எடுக்க வேண்டும். 😂
  17. பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய தாய்ப்பாலை…. பெரியவர்கள் குடித்தால், இரத்தம் கக்கி சாவார்கள். 🤮 😎
  18. 👉 https://www.facebook.com/100081012193895/videos/1188583888779689 👈 👆 இவர்கள் செய்த வேலையை பாருங்கள்.
  19. இரத்த தானம் செய்யச் சொல்லி... தொண்டை கிழிய கத்தினாலும், எவனும் அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கிறானுங்க இல்லை. 😂 விந்தணு தானம் என்றவுடன், வரிசை கட்டி நிற்கிறானுங்க. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.