Everything posted by தமிழ் சிறி
-
பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?
பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய தாய்ப்பாலை…. பெரியவர்கள் குடித்தால், இரத்தம் கக்கி சாவார்கள். 🤮 😎
-
3000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை!
- நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
- சிரிக்கலாம் வாங்க
- யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
👉 https://www.facebook.com/100081012193895/videos/1188583888779689 👈 👆 இவர்கள் செய்த வேலையை பாருங்கள்.- இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
இரத்த தானம் செய்யச் சொல்லி... தொண்டை கிழிய கத்தினாலும், எவனும் அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கிறானுங்க இல்லை. 😂 விந்தணு தானம் என்றவுடன், வரிசை கட்டி நிற்கிறானுங்க. 🤣- இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
இந்தத் தலைப்பிற்கு, பொருத்தமான நகைச்சுவை. 😂 🤣- இயற்கையிலிருந்து ஒரு வேதனையான உண்மை.
🌾இயற்கையிலிருந்து ஒரு வேதனையான உண்மை. 🦂 பிரசவத்திற்குப் பிறகு, ஒரு தாய் தேள் தனது குழந்தைகளைப் பாதுகாக்க முதுகில் சுமந்து செல்கிறது. இந்த நேரத்தில், அது சாப்பிடுவதில்லை, ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அது பலவீனமாகி, தனது குட்டிகள் உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிக்கிறது. குழந்தை தேள்கள் போதுமான அளவு வலிமையாக இருக்கும்போது, அவை தங்கள் தாயை விட்டு வெளியேறி தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடங்குகின்றன. அதற்குள், அவள் பெரும்பாலும் சோர்வடைந்து பாதிக்கப்படக்கூடியவள் - அவர்களுக்காக தன்னை முழுமையாக தியாகம் செய்துவிட்டாள். அமைதியான தியாகத்தின் இந்த உருவம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக என்ன செய்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. நாம் பிறந்த தருணத்திலிருந்து, அவர்கள் நமக்கு எல்லாவற்றையும் தருகிறார்கள் - நேரம், சக்தி, ஆறுதல், கனவுகள் - பதிலுக்கு கொஞ்சம் கேட்கிறார்கள். இருப்பினும், அவர்கள் வயதாகி பலவீனமாகும்போது, பலர் பின்தங்குகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது மறக்கப்படுகிறார்கள். நாம் நமது சொந்த இலக்குகளைத் தொடர்கிறோம், பெரும்பாலும் அவற்றை சாத்தியமாக்கியவர்களை மறந்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கை எப்போதும் முழு வட்டத்தில் வருகிறது. ஒரு நாள், நாமும் அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில் இருப்போம். அவர்களை மதிக்க மிகவும் தாமதமாகும் வரை காத்திருக்க வேண்டாம். அவர்கள் நமக்குக் கொடுத்த அன்பையும் அக்கறையையும் அவர்களுக்குக் கொடுப்போம் - நம்மால் முடியும் வரை. Vincent Raj- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
ராஜபக்ஷ, ரணில் ஆகியோருடன் கூட்டு கட்சிகளில் இருந்த, முன்னாள் வடமத்திய முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தினி சந்திரசேன ஆகியோருக்கு லஞ்ச குற்றசாட்டில் பதினாறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் தண்டனையை அனுபவிக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் இவை. Vaanam.lk- சிரிக்கலாம் வாங்க
- மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டி: யாழில் இருந்து 17 வீரர்கள் பங்கேற்பு
மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டி: யாழில் இருந்து 17 வீரர்கள் பங்கேற்பு. மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை குறித்த விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் 20 விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இன்றைய தினம் புதன்கிழமை கொழும்பு நோக்கி புறப்படுகிறனர். அதன் போது, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந் நிகழ்வில், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர்,சுரேந்திரநாதன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள். வீரர்களுடன் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாவலளர்கள் என 37 பேர் பயணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427232- இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்!
படையினரை குறை சொன்னால்...இங்கு சிலருக்கு பிடிப்பதில்லை. என்ன, கள்ளத் தொடர்போ... யாரறிவர். 😂- இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்தது!
இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்தது! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் நோக்கில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மோடியின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 04ஆம் திகதி மாலை கட்டுநாயக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் மோடி வந்திறங்கவுள்ளதுடன் எதிர்வரும் 6ஆம் திகதி நாடு திரும்பும் வரை கொழும்பு உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந...இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...- 200 ரூபாவுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்
குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்! மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் பெலெஸ்ஸ உணவகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டம் ‘Clean Sri Lanka’ திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் 200 ரூபாய் என்ற குறைந்த விலையில் போசாக்கு நிறைந்த உணவை உண்டு மகிழும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என்பதோடு, இந்த போசாக்கான சமச்சீர் உணவின் செய்முறை அனைத்து அரச மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளமையும் விசேட அம்சமாகும். பொதியிடப்பட்ட தேசிய உணவுகள் மற்றும் போசாக்கான சிற்றூண்டிகளையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, தரமான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது என குறிப்பிட்டார். அதற்காக வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் வர்த்தக சமூகத்தில் அணுகுமுறை ரீதியான மேம்பாட்டை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கில் ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் மொனிகா விஜேரத்ன மற்றும் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறை வர்த்தகர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427138- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில்! தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (ஏப்ரல் 2) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவின் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பிரேரணை தொடர்பான கவலைகள் குறித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இந்த விவகாரம் பல கவலைகளை எழுப்புகிறது என்றார். இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நிலையியற் கட்டளைகளின் கீழ் சில வரம்புகள் இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தப் பிரேரணையைத் தொடர விரும்புவதாகக் கூறினார். https://athavannews.com/2025/1427206- கித்துள், தென்னை மற்றும் பனை கைத்தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு காப்புறுதித் திட்டம்!
கித்துள், தென்னை மற்றும் பனை கைத்தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு காப்புறுதித் திட்டம்! கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய வகையில் திடீர் விபத்து உயிர் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், 5 இலட்சம், 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாய் என்ற காப்புறுதி தொகைகள் மரணம் அல்லது முழுமையான ஊனமுற்ற நிலை ஏற்படும் போது வழங்கப்படும் என கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. மேலும், தற்காலிக ஊனமுற்ற நிலைகளிலும், திடீர் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் இந்த காப்புறுதி பலன்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இக் காப்புறுதி பாதுகாப்பை 2000, 4000 மற்றும் 8000 ரூபாய் போன்ற குறைந்த ஆண்டு பிரீமியம் மட்டங்களின் கீழ் பெறுவதற்கு வாய்ப்பு வழங்குவதற்கு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427222- இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்!
போதைப் பொருளை...ஏன் ஒழிக்க முடியாமல் இருக்கின்றது என்பதற்கு விடை கிடைத்து விட்டது. படையினரே... போதைப் பொருள் கடத்தல், வியாபாரம் செய்யும் போது எப்படி ஒழிப்பது. பாவம் இளைய சமுதாயம். போகின்ற போக்கில்... தென் அமெரிக்க நாடுகள் போல்... போதை மாஃபியாக்கள் இலங்கையிலும் உருவாகுவார்கள்.- வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
அவரின் முழுப்பெயர் எஸ்.எம் ரஞ்சித் சமரகோன் என்று உள்ளது.- 'கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - தமிழகமுதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானம்
கச்சத்தீவு மீட்பு; சட்டமன்றத்தில் ஸ்டாலின் முக்கிய தீர்மானம்! கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார். தீர்மானத்தின்படி, “கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தலைப் பாதுகாப்பதற்கான ஒரே நிரந்தர தீர்வு” என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைத் தணிக்க, கச்சத்தீவைப் பெறுவது மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று தீர்மானம் கூறுகிறது. “மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசை இந்த மாண்புமிகு அவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று தீர்மானத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள நமது மீனவர்கள் அனைவரையும் அவர்களது படகுகளுடன் நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது விடுவிக்க” இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடியை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. அண்மைய மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கடந்த பெப்ரவரியில் 32 சக ஊழியர்கள் கைது செய்யப்பட்டதையும், ஐந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும் தொடர்ந்து, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடங்கினர். இலங்கையின் வடக்கு மன்னார் பகுதிக்கு அருகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்தக் கைதுகள் நடந்தன. இது கடலோர சமூகத்தினரிடையே பரவலான போராட்டங்களைத் தூண்டியது. இதேவேளை, இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும் 11 பேர் மார்ச் 27 அன்று கைது செய்யப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாநிலங்களவையில் அண்மையில் தெரிவித்திருந்தார். அத்துடன், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த நிலைமைக்கு மூல காரணம். 1974 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரைந்தபோது இந்தப் பிரச்சினை தொடங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். Athavan Newsகச்சத்தீவு மீட்பு; சட்டமன்றத்தில் ஸ்டாலின் முக்கிய தீர்மா...கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார். தீர்மானத்தின்படி, "கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய ம...- பல ஆண்டுகளின் பின் ரஷ்யாவின் மிகப்பெரிய இராணுவ அழைப்பு!
பல ஆண்டுகளின் பின் ரஷ்யாவின் மிகப்பெரிய இராணுவ அழைப்பு! ரஷ்யா தனது இராணுவத்தின் அளவை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 18-30 வயதுடைய 160,000 ஆண்களுக்கு படையில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இது 2011க்குப் பின்னரான ரஷ்யாவின் அதிகபட்ச எண்ணிக்கையிலான கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆகும். ரஷ்யா வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கட்டாய இராணுவ சேவைக்கு அழைப்பு விடுக்கிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, அதிகபட்ச வயதை 27 இலிருந்து 30 ஆக உயர்த்துவதன் மூலம், கட்டாய இராணுவ சேவைக்கு கிடைக்கக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இளைஞர்கள் தபால் மூலம் வழங்கப்படும் அழைப்பு அறிவிப்புகளுடன், அரசு சேவை வலைத்தளமான Gosuslugi இல் அறிவிப்புகளைப் பெறுவார்கள். மொஸ்கோவில், mos.ru நகர வலைத்தளம் வழியாக ஏப்ரல் 1 ஆம் திகதி ஏற்கனவே அழைப்புகள் அனுப்பப்பட்டதாக செய்திகள் வந்தன. ரஷ்யா தனது இராணுவத்தின் ஒட்டுமொத்த அளவை கிட்டத்தட்ட 2.39 மில்லியனாகவும், செயலில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையை 1.5 மில்லியனாகவும் அதிகரிக்க வேண்டும் என்று புட்டின் கூறிய பல மாதங்களுக்குப் பின்னர், ஒரு வருட இராணுவ சேவைக்கான வசந்த கால அழைப்பு வந்தது. இது வரும் மூன்று ஆண்டுகளில் 180,000 அதிகரிப்பாகும். இந்த அழைப்புக்கு மத்தியில், உக்ரேனில் போரிட புதிய கட்டாயப் படைவீரர்கள் அனுப்பப்பட மாட்டார்கள் என்று ரஷ்யாவின் துணை அட்மிரல் விளாடிமிர் சிம்லியான்ஸ்கி கூறினார். இருப்பினும், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளில் நடக்கும் மோதலில் கட்டாய இராணுவச் சேவையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், முழு அளவிலான போரின் ஆரம்ப மாதங்களில் அவர்கள் உக்ரேனில் சண்டையிட அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. 2022 பெப்ரவரியில் உக்ரேனைக் கைப்பற்ற படைகளுக்கு உத்தரவிட்டதிலிருந்து புட்டின் இராணுவத்தின் அளவை மூன்று முறை அதிகரித்துள்ளார். உக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்த போதிலும் மோதல்கள் மும்முரமாக அரங்கேறி வருகின்றன. செவ்வாய்க்கிழமை (01) தெற்கு நகரமான கெர்சனில் உள்ள ஒரு மின் நிலையத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் 45,000 மக்களை மின்சாரம் இல்லாமல் தவிக்கச் செய்ததாக உக்ரேன் கூறியது. உக்ரைனுடனான அமெரிக்காவின் மத்தியஸ்த போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்த போதிலும், உக்ரேனின் எரிசக்தி வசதிகளைத் தாக்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறது. அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மொஸ்கோ மீறியதை மறுக்க வெளிப்படையாக முயற்சிக்கும் வகையில், உக்ரேனிய ட்ரோன்கள் இடைநிறுத்தப்படுவதற்கான சிறிய அறிகுறியுடன் தாக்குதல்களை நடத்தியதாக புட்டினிடம் கூறியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1427159- நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
ஏப்பிரல் 1´ம் திகதி என்றால்... சின்ராசு பாடத் தொடங்கி விடுவான். 🤣- 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.