Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம். முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆகவும், தொகுதிப் படி ரூ.90,000-த்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும், அலுவலகப் படி ரூ.30,000-த்தில் இருந்து ரூ.90,000 ஆகவும் தினப்படி ரூ.1,800-த்தில் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.80,000-த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.78,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும். சபாநாயகரின் சம்பளம் ரூ.80,000த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும் துணை சபாநாயகரின் சம்பளம் ரூ.75,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும். முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகப் பொறுப்பேற்பவர்களின் அடிப்படை ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.36,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் திருத்தப்படும். அதே சமயம் எம்.எல்.ஏ.க்களுக்கான தண்ணீர் மற்றும் மின்சார மானியம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426788
  2. மோடியின் விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையின் தலையீட்டுக்கு பின்னர் கைச்சாத்திடப்படும் முதலாவது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமாகும் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் தொடர்பான உடன்படிக்கையும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு, வலுசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2025/1426799
  3. நாளை முதல் ஆனையிறவு பெயருடன் உப்பு பாக்கெட் விற்பனையாகவுள்ளது. Selvakumar Natkunasingam
  4. வளர்க்கின்ற நாய்க்கும்... விடுப்பு பார்க்கின்ற ஆசை இருக்கும்தானே... 🤣
  5. 👉 https://www.facebook.com/reel/512168525081568 👈 👉 https://www.facebook.com/reel/648162494606562 👈 👉 https://www.facebook.com/reel/2049533672207735 👈 👆 நேற்று தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.
  6. இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு. மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளன. ஆகக்குறைந்தது புவிநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வு செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இல்லையேல் 2004ம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று ஒரு புவிநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்க முடியாது என்பது உண்மை. என மேலும் தெரிவித்துள்ளார் https://athavannews.com/2025/1426796
  7. மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1002 ஆக உயர்வு. மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 1002 பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நில அதிர்வில் 2,376பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளதுடன் , உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐயம் நிலவுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த நிலநடுக்கம் தாய்லாந்தையும் தாக்கியதால் தலைநகர் பெங்கொக்கில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாய்லாந்தில் நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த நாட்டு நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரில் நில அதிர்வில் சிக்குண்டு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உதவும் வகையில் இரத்த தானம் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்திலாந்திக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அத்திலாந்திக் பெருங்கடலில் 6.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் 4.2 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஜூர்மிலிருந்து தென்கிழக்கே 24 கிலோ மீற்றர் தொலைவில் 226.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேதவிபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது இந்நிலையில், மியன்மார் நில அதிர்வை அடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக சீனா மீட்பு குழுவொன்றை அனுப்பியுள்ளது. இந்த மீட்பு குழுவில் வைத்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 37 பேர் கொண்ட சீன மீட்பு குழு இன்று மியன்மாரை சென்றடையவுள்ளது. மியன்மாருக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை உணவு , போர்வைகள் , மருந்து , மின்பிறப்பாக்கி என 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா மியன்மாரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பியுள்ளது. இந்திய விமானப்படை விமானம் மூலம் 15 டன் நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு வெளியுறவுத்துறை அனுப்பி வைத்தது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப்படையின் C17 விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்திலிருந்து மியான்மருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் கூடாரங்கள், போர்வைகள், உணவு, தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதார கருவிகள், சூரிய விளக்குகள், அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக்குழுவும் செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426785
  8. விஜய் தணிகாசலத்திற்கு… வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
  9. இலங்கை என்றால்... திரையில் பேசும் மொழி உச்சரிப்புகள், படப்பிடிப்பு நடத்திய இடங்கள், உடை அலங்காரங்கள், இசை... என்று ஒரு சில விடயங்களை உன்னிப்பாக கவனிக்க ஆசை.
  10. இரத்தம் நன்றாக அங்கு ஓடுவதற்கு... என்ன செய்ய வேண்டும். 😂
  11. படத்தில்... நகைச்சுவைக்காக இந்த விடயத்தை எடுத்துள்ளார்கள். நீங்கள் பயப்படாதேங்கோ நிழலி. 😂 நான் சாதாரணமாக படம் பார்ப்பது குறைவு. ஆனால்... இந்தப் படத்தின் விமர்சனத்தை பார்த்தவுடன், கட்டாயம் பார்க்க வேண்டும் போல் உள்ளது. அத்துடன் அது... இலங்கை படம். ஆசையை தூண்டி விட்டுள்ளது. 🙂 அல்வாயன், இன்று படம் பார்த்தால்... கட்டாயம் உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள்.
  12. அல்வாயன் குறிப்பிடுவது பம்பாய் மிட்டாசு அல்லது ஜவ்வு மிட்டாய். அது ஒரு தடியில் சுற்றப்பட்டு ஈரப்பதமாக... கடினமான பாணி போல் இருக்கும். நிலாமதி அக்காவும், ஈழப்பிரியனும் குறிப்பிடுவது... தும்பு மிட்டாஸ். தும்பு போல் இருக்கும் இனிப்பு. இரண்டுக்கும் மூலப் பொருள் ஒன்று என நினைக்கின்றேன். ஆனால்... செய்முறை வித்தியாசமாக இருக்கலாம்.
  13. உப்பு, முட்டை... போன்றவற்றையே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து சாப்பிடும் நாட்டில்... மரக் கரண்டியை இறக்குமதி செய்வது, அவ்வளவு வெட்கக் கேடான விடயம் அல்ல. 😂 🤣
  14. குடிக்கும் நீரையே... காசுக்கு விற்கும் நிலை வந்து விட்டது என்றால்... காப்பரேட் கம்பனிகளின் செல்வாக்கை பாருங்கள். எமது தாத்தாவோ, பாட்டியோ... தண்ணீரை, விலைக்கு விற்பார்கள் என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். எதிர்காலத்தில்... சுவாசிக்கும் காற்றும் காசுக்கு வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
  15. என்ன விசயம்...? 🤔 இந்தப் பக்கம்.... @ஈழப்பிரியன் , @விசுகு, @நிழலி, @Kandiah57, @குமாரசாமி, @alvayan, @putthan, @நந்தன் ஒருவரையும் காணவில்லை. எல்லோரும் திருந்தி விட்டார்களா. 😂 அல்லது... வயது மூப்பு அடைந்து விட்டார்களா. 🤣
  16. ஆயிரம் புடுங்குப்பாடு இருந்தாலும்.... நாம் பிறந்த நாடு... நமது நாடுதானே. 😂 🤣
  17. விஜய் ... போக வேண்டிய துராம், நிறைய உள்ளது. 😂 எடுத்தவுடன் எல்லோரும்... எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாதுதானே. 🤣
  18. இப்போ கொஞ்சம் தளர்த்தி உள்ளார்களாம். அதுகும்... முன்பு பயிரிட்டவர்களுக்கு மட்டுமே அந்த அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று முகநூலில் ஒருவர் தெரிவித்து இருந்தார். இது நல்லது என்றே நினைக்கின்றேன். அந்த மண்ணுக்கே உரிய பாரம்பரிய பயிர்களை முற்றாக அழிய விடாமல் பாதுகாக்கப் படுவது நல்லது. குரோஷியா நண்பர் ஒருவர் தமது நாட்டில்... அரசாங்கம், சிகரெட் கொம்பனிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு... உள்ளூரில் புகையிலை பயிரிடுவதை தடை செய்து விட்டார்களாம். இப்போ... தமது நாட்டின் பாரம்பரிய புகையிலை கன்றுகள் முற்றாக அழிந்து விட்டது என்று கவலைப் பட்டார்.
  19. தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், மதுபானசாலை முறைகேடு தொடர்பாக தீர்மானம், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றம்,மீனவர்கள் போராட்டத்திற்கு தீர்வு: அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இலங்கை தமிழர் பிரச்சினைக்க்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும், கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும், கூட்டணி அமைப்பு, கட்சியை வழிநடத்துவது தொடர்பாக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயின் பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர். இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றியிருந்தார். டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள். அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம். இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும். எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் என தனது உரையில் கூறினார். https://athavannews.com/2025/1426754
  20. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு; பிரதான சந்தேக நபர் அடையாளம்! அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர் சந்தேக நபரை அடையாளம் கண்டார். அனுராதபுரம் தலைமை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (28) அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. மார்ச் 10 ஆம் திகதி சந்தேக நபரால் கத்தி முனையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பிற்குள் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நபர் பெண் மருத்துவரின் மொபைல் போனுடன் தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் கல்னேவ பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட மொபைல் போனை பின்தொடர்வதன் மூலம் காவல்துறையினர் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ ஊழியர்கள் ஒரு அடையாள வேலைநிறுத்தத்தையும் மேற்கண்டிருந்தனர். https://athavannews.com/2025/1426772

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.