Everything posted by தமிழ் சிறி
-
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
தலங்கம துப்பாக்கிச்சூடு – கரந்தெனிய சுத்தாவின் வழிநடத்தலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்! தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கார் கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளதுடன் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் கார் காணப்பட்டதாக குறிப்பிட்டனர். இதேவேளை, இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “கரந்தெனிய சுத்தா” எனப்படும் ஜயலத் சில்வா என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளுக்காக ஆஜராகி வந்ததாகவும், பின்னர் அவரது எதிரியான “லோகு பெட்டி” எனப்படும் குற்றவாளியின் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளதுடன் இதன் காரணமாக, கரந்தெனிய சுத்தா தொடர்பான தகவல்களை லோகு பெட்டிக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுத்தாவின் தரப்பினரால் இந்த கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர். இதேவேளை, சம்பவம் தொடர்பாக நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. https://athavannews.com/2026/1464893
-
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு! கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மனைவி ஷெரின் அன்ஜான் ஆகியோருக்கு அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. , கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் தாய்வழி பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, பெற்றோர் ஒப்புதலுடன் குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. குழந்தையின் இதயம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனைக்கும், கல்லீரல் கிம்ஸ் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு பேருக்கு பொருத்தப்பட்டன. கண்கள் கண் வங்கிக்கு தானமாக தரப்பட்டன. மறுவாழ்வு பெற்ற நான்கு பேரின் குடும்பத்தினர் பெண் குழந்தையின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த உடலுறுப்பு தானம் மூலம், கேரளாவின் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவராக குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் மாறியுள்ளார். https://athavannews.com/2026/1464878
-
உக்ரைனுக்கு மாத்திரம் அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
உக்ரைனுக்கு மாத்திரம் அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு! ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம் தருகிறது என உக்ரைன் ஜனாதிபதி வோளடிமீர் ஜெலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே ஜெலனஸ்கி இதனை கூறியுள்ளார். இதேவேளை, அதில் , பேச்சுவார்த்தையில் ரஷ்யா என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை எனவும் ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது முறையல்ல.எனவும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே தொடர்ந்து சமரசம் செய்ய வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டுமா? ஜெனீவாவில் பெப்ரவரி 17,18ம் திகதி நடக்க உள்ள முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது எனவும் ஜெனீவாவில் நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டங்களுக்கு முன்னதாக, ஜனாதிபதி டிரம்பின் தூதர்களுடன் உரையாடியதாகவும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பு குறித்தும் தான் பேசியதாகவும் ஜெலனஸ்கி கூறியுள்ளார். https://athavannews.com/2026/1464860
-
Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்
ஜேர்மனியில் சட்டத்தரணி / நொத்தாரிசு மூலம் உயில் எழுதப்படல் வேண்டும் என நினைக்கின்றேன். Dolmetscher மூலம் மொழிபெயர்ப்பு செய்து கை எழுத்து வைக்கப் பட்ட உயில்…… பிற்காலத்தில் பிள்ளைகள் மூலம் ஒரு பிரச்சினை வந்தால்? நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் என்று சொல்ல முடியாது.
-
தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!
நல்லாட்சி (?) அரசாங்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் நெருக்கடிகளை நீர்த்து போக செய்யும் நோக்கில் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) ஒன்றை உருவாக்கினார் இவ்வாறு உருவாக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு (OMP) மேஜர் ஜெனரல் பதவி நிலைக்குரிய இராணுவ அதிகாரி உட்பட ஏழு ஆணையாளர்களை நியமித்தார்கள் அதாவது இராணுவத்தின் Legal Department யின் பணிப்பாளர் நாயகமாக கடைமையாற்றிய மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris என்பவர் குறித்த OMP அலுவலகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார் வடக்கு கிழக்கில் பெரும்தொகையாக அப்பாவி பொதுமக்கள் காணாமலாக்கப்பட்ட 2007-2010 காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவிருந்த மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris இராணுவத்தின் பிரதான சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டிருந்தார் இவ்வாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு விசுவாசமான மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris OMP ற்கு ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டதை சர்வதேச ரீதியாக International Truth and Justice Project (ITJP) உட்பட பலவேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முழுமையாக நிராகரித்து கண்டனம் தெரிவித்தன ஆனால் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் மிக நெருங்கிய சகாவாகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் அரச நிறுவனமான OMP இற்கு இராணுவ அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை ஆதரித்தார் ஜனாதிபதி சட்டத்தரணியான திரு சுமந்திரன் அவர்கள் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் இராணுவத்தால் விசாரிக்கப்பட்டதா, இல்லையென்றால் ஏன் விசாரிக்கப்படவில்லை, யார் அதை விசாரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்கள் என்பது தொடர்பாக OMP இற்கு சாட்சியாளராக (Witness) மட்டுமே மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris வை அழைக்க வேண்டும் என வலியுறுத்தி அவரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும் ஆனால் மிக தெளிவாக OMP ஐயும் அரச அலுவலகமான OMP யில் இராணுவ அதிகாரி நியமனம் செய்யப்பட்டதையும் ஆதரித்தார் விசேடமாக OMP யால் கண்டுபிடிக்கப்படும் விடயங்கள் குற்றவியல் மற்றும் சிவில் சட்ட மீறல் சம்பந்தமான எவ்வித குற்றத்திற்கும் வழிவகுக்காத வகையில் உருவாக்கப்பட்ட போதிலும் இந்த அலுவலகம் நிறுவுவது தொடர்பான சட்டமூலத்தை பாதிக்கப்பட்டோரின் எந்தவிதமான ஆலோசனைகளுமின்றி திரு சுமந்திரன் ஆதரித்தார் இது போதாதென்று OMP ஐ ஆதரித்து... 'வேண்டும் வேண்டும் OMP வேண்டும்' என போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் . குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை கூட சுமந்திரன் ஆட்கள் தாக்கினார்கள் இது மாத்திரமின்றி திரு சுமந்திரன் அவர்கள் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் செல்லப்பிள்ளையாக அதிகாரத்தோடு இருந்த போது தான் செம்மணி புதைகுழி பிரதான சந்தேகநபர் பிரிகேடியர் லலித் ஹேவா உட்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது நாவற்குழியில் 24 க்கு மேற்பட்டவர்களை கடத்தி காணாமலாக்கிய மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் காலம் சென்ற பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவின் தலையீட்டுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திலேயே காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்த பொதுமக்களும் சட்டத்தரணிகளும் தாக்கப்பட்டார்கள் இது போன்ற எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அப்போது அதிகாரம்மிக்க நபராகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் வாய் மூடி அமைதியாகவே இருந்து அத்தனை அத்துமீறல்களுக்கும் ஒத்துழைத்தார் ஆனால் அதே திரு சுமந்திரன் அவர்கள் தற்போது பதவி இழந்த நிலையில் இராணுவமயமாக்கல் பற்றி பேசுகின்றார் கொந்தளிக்கின்றார் உளறுகின்றார் அச்சுறுத்துகின்றார் இனமொன்றின் குரல்
-
தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!
முதலில் சுத்துமாத்து சுமந்திரன் மீதுதான், நடவடிக்கை எடுக்க வேண்டும். 1.சு*மந்திரனும் சம்பந்தனும் சிறீலங்காவின் சுதந்திர தினத்துக்கு போகவில்லையா? 2.சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்த தமிழர்களை பார்த்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றுசொல்லி கேலி கிண்டல் செய்யவில்லையா? 3.தமிழர்களை அழித்த இராணுவத்தின் வெற்றி விழாவிற்கு பொப்பி மலருடன் போகவில்லையா? 4.சம்பந்தனுடன் நின்று சிங்ககொடியை தூக்கி ஆட்டி காட்டவில்லையா? 5.சு*மந்திரன் தமிழ் மக்களை சந்திக்க வரும்போது Stf பாதுகாப்பு புடைசூழ வரவில்லையா? 6.தமிழரசு கட்சி தமிழர் மீது யுத்தம் செய்த பொன்சேகாவை ஆதரித்து வாக்கு கேட்கவில்லையா? 7.சு*மந்திரன் வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனை செயற்படவிடாமல் செய்ய சீவிகே சயந்தன் போன்றவர்களை பயன்படுத்தி விக்னேஸ்வரனை முடக்கவில்லையா? 8.சு*மந்திரன் யுத்த குற்ற விசாரனையை நீர்த்து போக செய்யவில்லையா? சு*மந்திரன் இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்லவில்லையா? 9.சு*மந்திரன் புலிகள் முஸ்லீம்களை இனச்சுத்தீகரிப்பு செய்தார்கள் என்றுசொல்லவில்லையா? 10.சு*மந்திரன் சிங்கள அரச தலைவர்களுடன் தேனீலவு கொண்டாடவில்லையா? 11.சு*மந்திரன் ஏக்கிய ராஜ்ஜியவை வைத்து அது சமஸ்டி தான் என்று சொல்ல வில்லையா? 12.சு*மந்திரன் கடந்த பொது தேர்தலில் தான் வெல்வதற்காக கட்சிக்காக செயல்பட்ட வாக்கு அதிகம் பெறக்கூடிய வேட்பாளர்களை தவிர்த்து தனது அடியாட்களை மட்டும் தேர்தலில் போட்டியிட வைக்கவில்லையா? 13.சு*மந்திரன் தனக்கு புலிகளின் போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்று சொல்லவில்லையா? 14.சு*மந்திரன் சிறீதரனுடன் சேர்ந்து தனக்கான வாக்குகளை சேகரிக்கவில்லையா? 15.தமிழரசு கட்சியின் தலைவராக உட்கட்சி தேர்தல் மூலம் வென்ற. சிறீதரனை சு*மந்திரன் தனது பினாமிகள் மூலம் சட்ட சாவாலுக்கு உட்படுத்தி முடக்கவில்லையா ? 16.கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற தமிழ் பொது வேட்பாள் அரியநேத்திரனை நிராகரித்து சஜித்திற்கு வாக்கு சேகரிக்கவில்லையா? 17.புலிகள் கூடாது ஆனால் புலிகளால் உருவாக்ப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சு*மந்திரன் தேர்தல் கேட்டு வெல்லவில்லையா? 18.மகிந்தவின் கட்சியில் இருந்த மகிந்தவின் விசுவாசி சாணக்கியனை தமிழரசு கட்சியில் சேர்க்கவில்லையா? 19.வலுவாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை தனது அரசியல் வெற்றிகளுக்காக உடைக்கவில்லையா சு*மந்திரன்? 20.தேர்தல்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று கூறிய சு*மந்திரன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்காக தனது வெற்றியை உறுதிப்படுத்த தேர்தலில் தோற்றவர்களை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கவில்லையா? 21.கடந்த பாராளுமன்ற தேர்ரலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட சு*மந்திரன் தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவிலே தனது கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்ட சு*மந்திரன் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் ஆக போட்டியிட முயற்சிப்பது சரியானதா? 22.தமிழின விரோதியும் தமிழரை காட்டி கொடுத்து கடத்தி கப்பம் வாங்கி படுகொலை செய்த தீவுப்பகுதியில் வைத்து மாவை சேனாதிராஜா சிவாஜிலிங்கம் போன்றவர்களை அடித்து மண்டை உடைத்து காலை முறித்த ட*க்ளசிடம் மாநகர சபையில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்கவில்லையா? 23.சு*மந்திரன் போலி முகநூல் கணக்கு வைத்து அவதூறு செய்யவில்லையா? 24.சு*மந்திரன், க*பி வித்தியாதரனுக்கு பணம் கொடுத்து கா*லைக்கதிரில் தனது புகழ் பாடி எழுத சொல்ல வில்லையா? 25.சு*மந்திரன் தான் தனது சிறுவயதில் இருந்தே சிங்களவர்களுடன் வாழ்வதையிட்டு பெருமையாக நினைக்கிறேன் என்று சொல்லவில்லையா? 26.சு*மந்திரன் தனது பிள்ளைகளுக்கு சிங்களவர்களை திருமணம் செய்து வைக்கவில்லையா? 27.சு*மந்திரன் தமிழரசு கட்சியின் பிரதி பொதுச்செயளாளர் ஆக சுத்துமாத்து செய்து பின்கதவால் வந்தாரா இல்லையா? 28. சு*மந்திரன் கிளிநொச்சியில் தமிழரசு கட்சிக்கு எதிராக சிறீதரனுக்கு எதிராக வண்டில் சின்னத்தில் தனது ஆட்களை தேர்தல் கேட்க நிறுத்தவில்லையா. Roy Roy ##################################### எல்லாம் பதவி பறிபோனதால் வந்த சுடலை ஞானமோ அல்லது சந்தர்ப்பவாதமோ? எப்படி ரணில் காலத்தில்... ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தில் வேட்டி கட்டிக் கொண்டு ஜோடியாக போயிருந்து கொண்டு மக்களால் நிராகரிக்கபட்டவர்கள் கறுப்பு நாளாக அனுஸ்டிக்கிறார்கள் என்று கொச்சை படுத்தி விட்டு, பின்பு தேர்தலில் தோற்ற பின்... கறுப்பு நாளாக நாடகம் ஆடிய சுத்துமாத்து சுமந்திரன். Tharan Kulam ##################################### அதுமட்டுமா... இராணுவ தளபதி சரத்துக்கு வாக்களிக்கும்படி, தமிழ் மக்களிடம் பிரச்சாரம் செய்த ஒருவர் தான் சுமந்திரன். Allai Sri ##################################### மற்றவர்களை முட்டாகள் என, சுமி எண்ணிக் கொள்கின்றார் போலும்.. கடந்த 16 வருடங்களாக சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பை பாதுகாத்தே வந்துள்ளார். இன்று தான் சிறிதரனின் நடவடிக்கைதான் தான் சிங்கள தேசத்தின் இராணுவமயமாக்கம் என்பதை கண்டு கொண்டார். Tholar Velan
-
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
கொழும்பை அண்மித்த அக்குரேகொடவில் துப்பாக்கி சூடு இளம் தம்பதி உயிரழப்பு.. தலங்கம, அகுரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக இன்று (13) பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சட்டத்தரணி கரன்தெனிய சுத்த என்ற குற்றவாளியின் நீதமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என்பதும் பிக் பட்டி என்ற குற்றவாளிக்கு தனது வாடிக்கையாளரின் தகவலை வழங்கியதற்காக கரந்தெனிய சுத்தாவே கொலை செய்ததாக பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது. பிடிகலாவைச் சேர்ந்த மல்வாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Rks Arulmolithevan
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ரசனிக்கு... கட்டிய கோயிலில், சிவராத்திரி சிறப்பு பூஜை செய்த ரசிகர். காணொளி: 👉 https://www.facebook.com/reel/2564899520615829 👈
-
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
இரட்டை கொலை. சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல். தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற இரட்டை மனிதக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இக்குற்றத்தைச் செய்த துப்பாக்கிதாரிகள் ஹோமாகம, பொத்துஅராவ வீதி, அத்துருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர ஆகிய பகுதிகள் ஊடாகப் பயணித்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று (13) மாலை வேளையில் மேற்கூறிய பாதைகளில் பயணித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டேஷ் கேமராக்களில், சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் EP KI-7738 இலக்கத்தைக் கொண்ட கார் பயணிக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, நேற்று மாலை இப்பகுதிகளில் பயணித்த வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், தமது வாகனக் கெமராக்களைச் சோதித்து, குறித்த கார் தொடர்பான காட்சிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அக்குரேகொட பகுதியிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில், காரினுள் இருந்த தம்பதியினர் மீது மற்றுமொரு காரில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இக்கொலைச் சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 10 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: மேல் மாகாண தெற்கு பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர்: 071 8598008 பணிப்பாளர் / மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு: 071 8592279 https://athavannews.com/2026/1464821
-
கருத்து படங்கள்
- ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில்
ஒலிம்பிக் விளையாடப் போற ஆட்கள்... கட்டில் விளையாட்டிலும் ஈடுபடுகிறார்களோ... ஹ்ம்ம்..... நடக்கட்டும்.- தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு! தலங்கம -அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464739 #################### ############################ அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு. அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கார் ஒன்றில் வந்த குழுவினர் ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர். இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர். https://athavannews.com/2026/1464783- இரசித்த.... புகைப்படங்கள்.
- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
- கருத்து படங்கள்
- உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ! கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் C 76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (12) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் நீதிமன்றங்களை நிறுவும் பணிகளை இன்று (12) நேரில் கண்காணித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதேபோல், முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றங்களை நிறுவுவதற்காகப் பொறுப்பேற்கப்பட்ட ஏனைய வாசஸ்தலங்களிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக வழங்குமாறு அவர் குறிப்பிட்டார். ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளைச் செயற்படுத்தி, வழக்குக் காரியங்களை விரைவுபடுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்ட நான்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் தற்காலிக அடிப்படையில் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2026/1464601- எகிப்து பிரமிட் கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள்!
எகிப்து பிரமிட் கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள்! எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட கல்லறைகளில் இருந்து தமிழ்-பிராமி, பிராகிருதத்தில் பொறிக்கப்பட்ட 30 கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், இது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கும் மத்திய கிழக்கு நாடான எகிப்துக்கும் இடையிலான பண்டைய வர்த்தக தொடர்புகளுக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது. 6 கல்லறைகளில் காணப்படும் கல்வெட்டுகளில், 20 தமிழ் மொழியிலும், மீதமுள்ள 10 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழியிலும் உள்ளதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எகிப்துக்கு, அதன் பண்டைய தலைநகரான தீபஸுக்குள் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்குக்கு கி.பி 1 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மசாலாப் பொருள்கள் மற்றும் பிற பொருள்களை வர்த்தகம் செய்வதற்காகச் சென்றதாகக் குறிக்கிறது. தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை ஏற்பாடு செய்த தமிழ் கல்வெட்டு குறித்த சர்வதேச மாநாட்டில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரான்சின் பாரிஸில் உள்ள பேராசிரியர் சார்லோட் ஷ்மிட் ஆகியோர் இந்தத் தகவலை வெளியிட்டனர். ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் – வர கண்ட’ (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது. ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகவும் அமைந்திருக்கிறது. https://athavannews.com/2026/1464623- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அல்லைப்பிட்டியில் பொலிஸாரினால் சிறுவன் ஒருவன் சு*ட்டு கொ*ல்லப்பட்டமையை... நியாயப்படுத்த இராணுவ புலனாய்வார்கள் முதல் சமூக மயப்படாத ஜேவிபி உறுப்பினர்கள் வரை பலரும் முயற்சிக்கின்றார்கள். இராணுவ புலனாய்வாளன்... அருண் சித்தார்த், பொலிஸ் அதிகாரிகளை நியாயப்படுத்த கொ*ல்லப்பட்ட சிறுவன் போ*தைப்பொருள் பாவனையாளன் என வெளியிட்ட அறிக்கையை Capital TV வெளியிட்டு இருக்கின்றது. இதில் இருக்கும் உண்மை பொய்களுக்கு அப்பால் 2017-ம் ஆண்டு, காக்கைத்தீவு பகுதியில், க*ஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட (யாழ்ப்பாண MC நீதிமன்றம் வழக்கு இலக்கம் 292/17) புலனாய்வாளன் அருண் சித்தார்த்துக்கு இருக்கும் வாழும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ? திரு ரணில் விக்கிரமசிங்கே அதிகாரத்திலிருந்து போது 1,000 kg 'குஷ்' ரக போ*தை பொருள் கடத்திய Capital TV உரிமையாளர் திரு வின்சேந்திரராஜன் அவர்களின் மகனுக்கு இருக்கும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ? குடி போ*தையில் வாகனத்தை மோதி பெண் மற்றும் குழந்தையை காயப்படுத்திய ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அசோகா ரன்வாலா (முன்னாள் சபாநாயகர்) விற்கு இருக்கும் வாழும் உரிமை ஒரு 17 வயது சிறுவனுக்கு இருக்க கூடாதா ? இது போதாதாதென்று மறுபுறம் குறித்த சிறுவனை கள்ள மாடு கடத்துபவன் என Narrative set பண்ண ஜேவிபி தரப்பு முயற்சிக்கின்றது. மட்டக்களப்பில் மாதவனை மயிலத்தமடுவை ஆக்கிரமித்து நீதிமன்ற உத்தரவுகளை மீறி நுற்றுக்கணக்கான மாடுகளை சிங்கள குடியேற்றவாசிகள் சு*ட்டு கொ*ன்று இருக்கின்றார்கள். ஜேவிபி அதிகாரத்தில் ஒரு வருடம் கடந்து விட்ட பின்னரும் கூட இந்த தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வாதார நெருக்கடிக்கு தீர்வு இல்லை. இந்த அவலங்கள் பற்றியெல்லாம் பேசாத ஜேவிபி புத்திசாலிகள் நேற்றும் இன்றும் பசு மாடுகளுக்காக உருகின்றார்கள். நூற்றுக்கணக்கான மாடுகளை கொ*ன்று மட்டக்களப்பு 1000 ற்கு மேற்பட்ட பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த சிங்கள குடியேற்றவாசிகள் மீது நீட்டப்படாத துப்பாக்கிகள் வெறும் 17 வயது சிறுவன் மீது கள்ள மாடு கடத்துபவன் என்கின்ற பெயரில் நீட்டப்பட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இங்கே கொல்லப்பட்ட சிறுவன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கூடாது என யாரும் சொல்ல வில்லை. அவர்கள் போதை வியாபாரிகளாகவோ அல்லது , மாடு கடத்துபவர்களாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவதில் எந்த தவறும் இல்லை. குறிப்பாக நிறை மாத பசு மாடுகளை திருட்டு தனமாக கொன்று கடத்துபவர்களாக இருந்தால் மன்னித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இங்கு பொலிஸ் தொழிலுக்குரிய நெறிமுறைகளிற்கு மாறாக எழுந்தமனாக ஒரு சிறுவனை சு*ட்டு கொ*ன்று இருப்பதே கேள்விக்கு உட்படுத்த படுகின்றது. குறிப்பாக பல இடங்களில் சமூக குற்றவாளிகளுக்கு துணை நின்று பாதுகாக்கின்ற பொலிஸ் 17 வயது சிறுவனை சுட்டு கொன்றது தான் சர்ச்சையாகி இருக்கின்றது. தங்களுடைய தேவைகளுக்காக ரவுடி தனங்களில் ஈடுபடும் அருண் சித்தார்த்தின் ஆவா குழு உட்பட பெரும்பாலான சமூக விரோத குழுக்களை வளர்த்து விடும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை பாதுகாத்து கொண்டு ஒரு சிறுவனை சு*ட்டு கொ*ன்று நியாயம் பேச முடியாது. அதாவது போதை பொருள் வியாபாரிகளுக்கு அரணாக இருக்கும் கடற்படை கட்டமைப்புகளை பாதுகாத்து கொண்டு, வாகனத்தை நிறுத்தவில்லை என்கின்ற ஒற்றை காரணத்திற்காக ஒரு சிறுவனை சு*ட்டு கொன்று விட்டு அவன் போ*தை பொருள் பாவித்த (?) ஆள் என சப்பை காரணங்களை சொல்ல முடியாது. இனமொன்றின் குரல்- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொ*லை - மர்ம முடிச்சுகள் அவிழுமா? காணொளி: 👉 https://www.facebook.com/reel/2224159248112226 👈- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதிடுவோர் கவனத்துக்கு.. இலங்கையில் பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட ரீதியான நீதி கிடைத்த அல்லது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட சில முக்கிய உதாரணங்களை முதலில் குறிப்பிடுகிறேன். 1. நாரம்மல துப்பாக்கிச் சூடு (2024) நாரம்மல பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதாகக் கூறப்பட்ட லொறி மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தச்சர் ஒருவர் (K.A. Roshantha Kumarasiri) உயிரிழந்தார். January 18, 2024 ⚖️ நீதிமன்ற நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஆகியோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். ⚖️ உடனடி நஷ்டஈடு: சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா (10 இலட்சம்) நஷ்டஈட்டுச் காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். ⚖️ உயர் நீதிமன்றத்தில் வழக்கு: உயிரிழந்தவரின் மனைவி காமனி ரூபிகா பிரியங்கனி, தனது கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (FR) மனுவைத் தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசினால் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ⚖️ வழக்கின் தற்போதைய நிலை: இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக முன்னிலையாகப் போவதில்லை எனச் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த வழக்குத்தவணை April 4, 2026. --------------------------------------------------- 2. ரம்புக்கனை சம்பவம் (2022): எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (Chaminda Lakshan) கொல்லப்பட்டார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையில், பொலிஸார் தேவையற்ற மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. ⚖️ துப்பாக்கிச் சூட்டில் இறந்த 41 வயதுடைய சமிந்த லக்ஷனின் மனைவி மற்றும் சம்பவத்தில் காயமடைந்த பலரால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் (SC) 28-07-2025 அனுமதி அளித்தது. அடுத்த வழக்குத்தவணை February 27, 2026. ⚖️ கேகாலை நீதிவான் நீதிமன்றில் இவ்வழக்கு குற்றவியல் வழக்காகவும் விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து போலீசார்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு. பொலிஸ் அதிகாரிகள் சார்பில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன. --------------------------------------------------------------- இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட இத்தகைய வழக்கு 1. ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு (Rathupaswala Shooting) 2013 ஆம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரிப் போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். பல வருட போராட்டத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மே மாதம், இதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவருக்கும் மற்றுமொரு சிப்பாய்க்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இது இராணுவத்தினர் சிவில் கடமைகளின் போது அத்துமீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. --------------------------------------------------------------- நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் மேற்கோள் காட்டும் சட்டப்பிரிவுகள்: ⚖️ இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் (Code of Criminal Procedure Act) பிரிவு 23: Arrest how made. கைது செய்யப்படுவதை ஒருவர் பலமாக எதிர்க்கும் போது மட்டுமே பலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்படாத ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்தும் உரிமையை இந்தப் பிரிவில் உள்ள எதுவும் வழங்காது. ⚖️ Constitution CHAPTER III, FUNDAMENTAL RIGHTS Article 11: எவரும் சித்திரவதைக்கு அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படக் கூடாது. Article 13 (1) : சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர வேறு எந்த நபரையும் கைது செய்யக்கூடாது. Article 13 (4) சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தவிர, எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாது. ------------------------------------------------------------------- ⚖️ சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களின்படி, உயிர்ச்சேதம் விளைவிக்காத வகையில் எச்சரிக்கை விடுத்து, பிற வழிகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட வேண்டும். நிராயுதபாணியான ஒருவரைச் சுடுவது சட்டப்படி குற்றமாகும். சுருக்கமாகக் கூறினால், மார்ச் 28, 2010 தேதியிட்ட IGP சுற்றறிக்கை 843 இன் படி, காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது தடைசெய்யப்படவில்லை, நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவைப்பட்டால் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. என்றபோதிலும்... சாதாரண சூழ்நிலையில் கட்டளையை மீறி ஓடும் ஒருவரைக் கொல்லும் அதிகாரம் இராணுவத்திற்கும் இல்லை.. பொலிசாருக்கும் இல்லை. அவ்வாறு செய்வது கொலைக்கு சமமான குற்றமாகக் கருதப்படவே வாய்ப்புள்ளது. இவை அனைத்தும், பொலிஸார் வாகனத்தின் டயர்களை நோக்கிச் சுடுவதன் மூலம் வாகனத்தை நிறுத்த முயற்சிக்கலாமே தவிர, ஓட்டுநரை அல்லது பயணிகளைக் குறிவைத்துச் சுடுவது சட்டவிரோதமானது என்பதை வலியுறுத்துகின்றன. ஆகவே, நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதம் செய்வதானது ஒரு சட்டமீறல் செயலை தடுக்க, மற்றுமொரு சட்டமீறல் செயலை தெரிவு செய்வதையே ஊக்குவிக்கும். எடுத்ததும் சுடவும், நெற்றிப் பொட்டில் சுட வேண்டும் என்றெல்லாம்... விருப்பம் கொள்வதற்கு நீங்களொன்றும் ஆயுதப் புரட்சி நாட்டில் வாழவில்லை. சட்ட உருவாக்கத்துக்கான தேர்தல்களில் வாக்களித்து சட்ட ஆட்சி நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதால் சட்ட மீறல்கள் குறித்து பேசுவதே சரியானது. நம்ம யாழ்ப்பாணம்- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
எண்பது வீதமான எம்மவர்களும், ஊடகம் நடத்துபவர்களும்.... நேரில் பார்த்த மாதிரி... போதை வஸ்து கடத்துபவன். வாள் வெட்டுக்காரன், மாட்டு கள்ளன் என்றெல்லாம் எழுதி பொலிஸ்காரனுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்க... அனுரா கட்சியின் அனுதாபிகள் போல் தெரிகின்றது. ஸ்ரீலங்கா பொலிஸ், இராணுவம் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு.. கொல்லப் பட்ட அந்தச் சிறுவன் மீது அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருப்பதை பார்க்க... தமிழர் மத்தியில் உண்மையான செய்திகளை எதிர்பார்ப்பது கடினம் போலுள்ளது.- கருத்து படங்கள்
- ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!
ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது! போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் அருந்தியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பேருந்து ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 170 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு அண்மித்த காலம் இந்த பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர். வழி இலக்கம் 120 (கெஸ்பேவ – புறக்கோட்டை), வழி இலக்கம் 255 (கல்கிஸ்ஸ – கொட்டாவை), வழி இலக்கம் 162 (பிலியந்தலை – பண்டாரகம), வழி இலக்கம் 341 (பிலியந்தலை – மஹரகம), வழி இலக்கம் 341/2 (கரதியன ஊடாக – மஹரகம), வழி இலக்கம் 342 (பிலியந்தலை – கொட்டாவை), வழி இலக்கம் 157 (கஹபொல – பிலியந்தலை) மற்றும் வழி இலக்கம் 157/1 (பிலியந்தலை – மாகந்தன) ஆகிய மார்க்கங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1464464- இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு
சுமந்திரனின்... ராஜதந்திரம் எல்லாம் வீணாகி விட்டதே. 😂 சுத்துமாத்துக்கு, "அல்வா" கொடுத்து விட்டார்கள். 🤣- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்! அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து ‘பொலிஸாரை கைது செய்து எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது’ என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது. https://athavannews.com/2026/1464472 - ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.