Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்! திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1462483
  2. தமிழரசு கட்சியின்…. மாகாணசபை முதலமைச்சராக, சுமந்திரனின் பெயரை போட்டால்…. அனுரா கட்சியில் இருந்து, வட மாகாணத்திற்கு ஒரு முதலமைச்சர் வருவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. இது நிச்சயம் நடக்கும்.
  3. சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களே... நல்ல ஒரு பகிர்விற்கு நன்றி.
  4. 2024´ம் ஆண்டு, 31´ம் திகதி ஒக்ரோபர் மாதம்... அச்சுவேலி – வசாவிளான் வீதியை, திறக்கப் போகின்றார்கள் என்று உள்ளூர் கிராமசேவகர் மூலம் அறிந்த சுமந்திரன், முதல் நாள் மாலை மூடியிருந்த பாதை முன் நின்று இராணுவத்தினருடன் படம் எடுத்து, தான் சொல்லித்தான் திறந்தது என்று அடுத்த நாள் பத்திரிகைகளுக்கு படத்துடன் "பீலா" விட்டு.. பொங்கல் பொங்கி தின்ற காட்சியை இன்னும் நாம் மறக்கவில்லை. 😂 இவர் 15 வருடமாக பாராளுமன்றத்தில்... மைத்திரி, ரணிலுடன் தேன்நிலவில் இருந்த போது.... கேட்காமல், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாத நிலையில்... அனுராவிடம் வீதியை விடுவிக்கக் சொல்லி கேட்கிறாராம். விடுவித்தவுடன்.... தான் சொல்லித்தான் விடுவித்ததாக... சுத்துமாத்து ஈன அரசியல் செய்கிறார். பவானந்த ராஜாவுக்கு முதலே... சுத்துமாத்து சுமந்திரன், இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்து காட்டி விட்டார். 🤣
  5. ஒரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள். அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அப்படி மகிழ்வுடன் அவர்கள் வாழ என்ன ரகசியம் என அறியும் ஆவலுடன், பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர். ஒரு பத்திரிக்கையாளர் "நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள். அதன் ரகசியம் என்ன?" என்று கேட்டார். அந்த கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு, "திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம். ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம். நான் அமர்ந்த குதிரை அருமையானது. அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்ந்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது. அப்படி சென்று கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது.. எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, 'இது உனக்கு முதல் தடவை' என்றாள்.. மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவாக சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது.. அமைதியாக எழுந்த என் மனைவி, 'இது உனக்கு இரண்டாவது தடவை.." என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்... அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்... நான் உடனே பதற்றமாய் என் மனைவியைப் பாத்து, அந்த பாவப்பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே.. ஏன் இந்த கொலைவெறி என்று உரக்கக் கத்தினேன்.. உடனே, அவள் அமைதியாக, இது உனக்கு முதல் முறை என்றாள் அவ்வளவு தான் அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்".. என்றார். யானை
  6. மாவைக்கு முதல் செத்த... "தீபாவளி நாயகன்" சம்பந்தனுக்கு, ஏன் இன்னும் சிலை வைக்கவில்லை. 🤣
  7. சுத்துமாத்து சுமந்திரனுக்கு… அழைப்பு கொடுக்கவில்லையா. 😂
  8. ஈழப் போராட்டத்தை... வல்லரசு நாடுகள் நசுக்கும் போதும், கொத்துக் குண்டுகளை வீசும் போதும்... நேரடியாக ஐ.நா. தனது பிரத்தியேக சற்றலைட் மூலம் பார்த்துக் கொண்டு இருந்ததை "நியூயோர்க் ரைம்ஸ்" அம்பலப் படுத்திய பின்பும்... பாதிக்கப் பட்ட அந்தத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க முன் வராத ஐ.நா. அமைப்பு உலகத்திற்கே தேவையில்லாத கையாலாகாத அமைப்பு. இருப்பதை... விட தொலைந்து போவதே மேல். 🤬 ஐ.நா. இதுவரை... புடுங்கின ஆணியே போதும். 😂 இனி... ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். மூடிட்டு கிளம்புங்க. நீங்கள் "மிக்சர்" சாப்பிடுவதற்கு ஒரு சபை தேவையில்லை.
  9. இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்! இலங்கை பொலிஸ் சேவையில் சுமார் 32,000 அதிகாரிகள் தற்போது தேவையான எண்ணிக்கையை விடக் குறைவான எண்ணிக்கையில் கடமைகளைச் செய்து வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றங்களைத் தீர்ப்பதில் காவல்துறை குற்றப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள கைரேகை அதிகாரிகள், குற்றப் பகுப்பாய்வு அதிகாரிகள் மற்றும் தடயவியல் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொழும்பில் இன்று (30) காலை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், 2026 ஆம் ஆண்டில் 2,500 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெற உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மேலும் 2,700 அதிகாரிகள் ஓய்வு பெறவும் உள்ளனர். எனவே, நிலைமையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இலங்கை காவல்துறையில் 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். https://athavannews.com/2026/1462356
  10. 193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ். அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் நிறைவேற்ற வேண்டும். அல்லது உடனடி நிதிச் சரிவைத் தடுக்க, உறுப்பு நாடுகள் நமது நிதி விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடிதத்தில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடவில்லை. ஐ.நா.வுக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா தற்போது ஐ.நா.வின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்திற்கு 2.16 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க வேண்டும். மேலும் இந்த ஆண்டுக்கு 767 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க வேண்டியுள்ளது. வெனிசுலா 38 மில்லியன்டொலர் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது வெனிசுலா பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளது. அமெரிக்கா 2025 இறுதியில் 1.568 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது. இது 2024-ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு என அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1462420
  11. கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கோல்டன் (Coltan) கனிமத்தை வழங்கும் முக்கிய சுரங்கமாக கருதப்படும் ருபாயா (Rubaya) சுரங்கத்திலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது. உலகிற்குத் தேவையான கோல்டன் கனிமத்தில் சுமார் 15% இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சுரங்கம் 2024 ஆம் ஆண்டிலிருந்து AFC/M23 எனப்படும் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. https://athavannews.com/2026/1462423
  12. முடியல. 😂 🤣 இவர்கள்… முத்த வெளியில், தமது பட்டுக் கச்சேரியை வைத்து எமது விருந்தோம்பலை… முழுமையாக அனுபவித்து செல்ல வேண்டும். 😂 தமன்னாவின் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு…. கனடா இந்திரனின் பேச்சு, மூச்சை காண இல்லை. தலையில் துண்டு போட வைத்து விட்டார்கள் போலுள்ளது. 🤣
  13. இவர் பாராளுமன்ற உறுப்பினராகி, இரண்டு ஆண்டுகளின் பின்... காகம் இருக்க, பனம் பழம் விழட்டும் என்ற ரீதியில்... இப்போதான், முதன் முதலாக வாயை திறந்திருக்கின்றார். 😂 அதை... "ஆஃப்" பண்ணிப் போடாதீங்க, பிறகு அவர்.. மீண்டும் கோமாவிற்கு போய் விடுவார். 🤣
  14. பார்க்க பையன் ஏதோ பாடசாலை record note எழுதுற மாதிரி தானே தெரியுது.. ஆனா அதான் இல்லை. பதிவு திருமணத்துக்கு, கையெழுத்து போடுறார்... மாப்பிள்ளை. 😂
  15. விருந்தோம்பல் என்றாலே... ஸ்ரீலங்கா தமிழர்கள்தான். -அனுராதா ஸ்ரீராம்.- காணொளி: 👉 https://www.facebook.com/reel/828034240196477 👈 இன்று மாலை 7 மணிக்கு இடம்பெறவிருக்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்காக யாழ் வந்திறங்கிய உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்.
  16. சுமார் 60 சதவீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். அவர்களில் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் 53 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விபத்துக்களில் சுமார் 50 சதவீதமானவற்றிற்கு சாரதிகளே காரணம் என தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்தும் தமது சாரதிகள் குறித்து பஸ் சங்கங்கள் அதிகளவில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2026/1462376
  17. நான்கு பெண்களுடன்... உல்லாசமாக இருந்த, அந்த 17 வயது மாணவனின் படங்கள்... அவனது நண்பன் மூலமே, சமூக வலைத்தளங்களில் பரவியதாக சொல்லப் படுகின்றது. அந்த நான்கு பெண்களில் மூவர் பாடசாலை ஆசிரியர்கள், மற்றவர்... வேறு ஒரு மாணவனின் தாயாராம். 😵 மேலுள்ள படத்தில்... யார் அந்த, தாய் என்று தெரியவில்லை.
  18. அனுரவுக்கு தெரியாமல்.... சில இரண்டாம் கட்ட தாதாக்கள், ஊரில் பதுங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.
  19. இவர்களுக்கு... வயது போய் விட்டது என்பதால், பக்தைகளின் பாதுகாப்புக்கு, "கியாரண்டி" கொடுக்கலாம். 🤣
  20. சுவியர், குமாரசாமி அண்ணைக்கு.. கொழும்பில் நிறைய, நிழல் உலக தாதாக்களை தெரியும். ஆதலால்... அவர் அடி வாங்க சந்தர்ப்பமே இல்லை. 😂
  21. மூன்றாம் இடத்தைப் பிடித்த முஸ்லீம் பெண் யூசூப் சபீனாவுக்கு வாழ்த்துகள். இவர் மொட்டாக்கு போடவில்லை என்று, இலங்கை தலிபான்கள் கதறப் போகிறார்கள். 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.