Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சம்பந்தன்.... சுமந்திரனை கட்சியில் சேர்த்த நன்றிக் கடனையும் மறந்து, சம்பந்தனின் பதவிக்கு, ஆப்பு அடித்தவர்தான் சுமந்திரன். அது மட்டும் அல்லாது... சம்பந்தனின் அந்திமக் காலத்தில், அவருக்கு இல்லாத தொல்லைகளை... மறை முகமாக தனது ஆட்கள் மூலம் செய்து சம்பந்தனின் உயிர் போக, ஒரு வகையில் காரணமாக இருந்ததும் சுமந்திரன்தான். சென்ற வருடம் சம்பந்தர், இந்த வருடம் மாவை, வாற வருஷம் சி***ம் என்று ஊரில் சொல்கிறார்கள். சுமந்திரன்...இந்தக் கட்சியில் இருந்து எல்லோரின் உயிரையும் பறித்துக் கொண்டு இருக்கும் எருமை வாகனத்தின் சொந்தக்காரன்.
  2. 50,000 டொலர் சரியான குறைவு. இன்னும் கூட கேட்டு வாங்க வேணும். 😂
  3. மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்! மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த கௌரவ சேனாதிராஜா அவர்கள், இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட அதே வேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை நாடாளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது. அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய என பிரார்த்திக்கிறேன் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1419203
  4. பங்களாதேஷ் கடற்படையின் போர் கப்பல், ஸ்ரீலங்காவுக்கு, மீன் பிடிக்க வந்திருக்குமோ.... 😂 🤣
  5. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்! புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 14 இலட்சத்து 45,549 பேரின் பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் தயாரித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை இதில் உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1419181
  6. சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்: பலாலியில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன்பு போய் இப்பவே ஒரு போட்டோ எடுத்து வைக்க வேணும். அதனை முழுமையாக விடுவித்த பின் நம்ம சனத்தின்ரை காதிலை பூ வைத்து அறிக்கை விட பிரயோசனப் படும். ஆனால்... என்ன செய்தாலும், சனம் எனக்கு வோட்டு போட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதை நினைக்கத்தான் விசராய் கிடக்குது.
  7. @Kavi arunasalam, @வாலி, @பாலபத்ர ஓணாண்டி ....... அரியநேந்திரனுக்கு சிங்களப் படை பாதுகாப்பு கொடுத்ததற்கு துள்ளிக் குதித்த... சுமந்திரனுக்கு முட்டுக் கொடுக்கும் சிலரை இந்தப் பக்கம் காணவில்லை. வரிசையாக வந்து, உங்களின் ஆளுக்கு... முட்டுக் கொடுத்து விட்டுப் போகவும். 😎 உங்களுடைய வாய்.... எப்பிடி, வடை சுடுகுது... என்று பார்க்க ஆவலாக உள்ளேன்.
  8. இப்போ... மாவையரின் செத்த வீட்டுப் பக்கம், சுமந்திரனை, தலை வைத்தும் படுக்கக் கூடாது என்று, மாவையர் வீட்டில் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளது. அதனை திசை திருப்பி... தன்பக்கம் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்க்க, ஊசிப் போன அறிக்கைகளை வெளியிட்டு, தனது இருப்பை காட்டிக் கொள்கிறார். இவரின் சுத்துமாத்துக்கள் எல்லாம் பல் இளித்து கனகாலம் ஆகிவிட்டது. அது புரியாமல், தானும் ஒரு ஆள் எண்டு... முதுகெலும்பு, மீன் முள்ளு என்று அறிக்கை விடுகிறாராம்.
  9. மைத்திரி, ரணில் ஆகியோர் ஜனாதிபதிகளாக இருக்கும் போது... பின்கதவால் சென்று அவர்களை சந்திக்கும் அளவிற்கு நட்பாக இருந்த, சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... அப்போது இவற்றை கேட்டு சவால் விட, சுமந்திரனின், முதுகெலும்புதான்.... கூனிக் குறுகி வளைந்து இருந்தது. 😂
  10. மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி! யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க , மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினார் மாவை சேனாதிராசா நேற்று முன்தினம் புதன்கிழமை காலமானார். அதன்படி அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேரில் சென்று மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதேவேளை மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419159
  11. மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி! யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க , மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினார் மாவை சேனாதிராசா நேற்று முன்தினம் புதன்கிழமை காலமானார். அதன்படி அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேரில் சென்று மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதேவேளை மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419159
  12. மாவை சேனாதிராஜா மரணம்: இரங்கல் தெரிவித்தார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச. மறைந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மறைவிற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச தெரிவித்துள்ளார். இதேவேளை அன்னாரின் மறைவிற்கு கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்களது அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1418924
  13. திருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை அழகிக்கு இரண்டாமிடம். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில்(Mrs. world) இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae வென்றுள்ளதுடன் தாய்லாந்தைச் சேர்ந்த Ploy Panperm மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற திருமணமான இலங்கை அழகிப் போட்டியில் இஷாதி அமந்தா முடிசூட்டப்பட்டதுடன் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419150
  14. மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு வடமாகாண ஆளுநர் இரங்கல்! தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர் மாவை சேனாதிராசா என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் ‘தமிழ் மக்களை நீண்டகாலம் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான சோ.சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தமிழ் மக்களுக்கான தியாகம் என்பன அரசியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன. யாழ். மாவட்டச் செயலராக நான் முன்னர் பணியாற்றிய காலத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், தமிழ் சமூகத்துக்காக ஆற்றிய பணிகள் அளப்பரியன. வலி. வடக்கின் மீள்குடியமர்வு மற்றும் அந்தப் பிரதேசத்தின் உயர்வுக்காக அவர் செய்த சேவைகளை அருகிலிருந்து பார்த்திருக்கின்றேன். காலம் முழுவதையும் இந்த மக்களுக்காகவே செலவிட்ட ஒருவரை இன்று இழந்து நிற்கின்றோம். வடக்கு மாகாண மக்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1419117
  15. யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்! யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர் இதேவேளை இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபனுக்கு வழங்கியுள்ளார் மேலும் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலும், பிற்பகல் 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் இரு சிநேகபூர்வ சந்திப்புகளிலிலும் ஜனாதிபதி இணைந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419128
  16. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விபத்து; விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் புதன்கிழமை (29) இரவு வொஷிங்டன் டி.சி.க்கு அருகே இராணுவ ஹெலிகொப்டருடன் மோதி, பொடோமாக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழன் (30) மாலை நிலவரப்படி, பொடோமேக் ஆற்றில் இருந்து குறைந்தது 40 உடல்கள் மீட்கப்பட்டதாக சட்ட அமலாக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி CNN மற்றும் CBS செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, விபத்தில் சிக்கிய எவரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று வொஷிங்டன் டிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 உடல்கள் மீட்கப்பட்டதாக சட்ட அமலாக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி CNN மற்றும் CBS செய்திகள் தெரிவித்தன. அதேநேரம், விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து கருப்பு பெட்டிகள் எனப்படும் விமான தரவு பதிவுகள் மற்றும் காக்பிட் குரல் பதிவுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று ஆதாரங்களை மேற்கொள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கருப்பு பெட்டிகள் விமானத்தில் என்ன தவறு நடந்திருக்கலாம் என்பதற்கான தடயங்களை வழங்க உதவும். விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய ஆய்வகத்தில் கருப்பு பெட்டி ஆதாரங்கள் பகுப்பாய்வு செய்யப்படும். புதன்கிழமை (29) இரவு வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து விமானம் குளிர்ச்சியான பொடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. விபத்து குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான பணியமர்த்தலின் தரம் குறைக்கப்பட்டது பேரழிவிற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர் கூட்டத்தில் வியாழக்கிழமை (30) உரையாற்றும் போதே ட்ரம்ப் இந்த கருத்தினை முன்வைத்தார். https://athavannews.com/2025/1419110
  17. இன்றைய இந்தக் கூட்டத்தில், அர்ச்சுனா இராமநாதன் கலந்து கொள்ளவில்லையா. 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.