Everything posted by தமிழ் சிறி
-
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
- மாவீரர் தினத்தால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்; சிறிதரனிடம் மன்னிப்புக்கோரிய அமைச்சர் பிமல்
மாவீரர் நாட்களில் கூட்டத்தினை வைக்காமல், வேறொரு தினத்தில் கூட்டத்தினை வைக்க.. மற்றைய கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது நல்ல ஒரு மாற்றம். 👍🏽- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இந்தப் படத்தை… “போட்டோ ஷொப்” என்று சொல்லி ஒரு குறூப் உருட்டிக் கொண்டு வருவார்கள், பையன். 😂 உருட்டுபவர்கள்…. “கை” உழையும் மட்டும், நல்லாய் உருட்டட்டும். 🤣- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
பையா… படத்தைப் பார்த்த ஆட்கள், மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள் போலுள்ளது. 😂 🤣- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
கன பேருக்கு... வயிறு பத்தி எரிந்து, காதால்... புகை கக்கப் போகுது. 😂 🤣- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
உண்மைதான்... வெளி உலக பிரச்சினைகளை சமாளிக்க, அந்த இனத்தவனை போட்டு.. பிரச்சினையை அடங்கச் செய்வதில் சிங்களவன் கெட்டிக்காரன்.- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
ஓ.... பயங்கரமாக விலை சரிந்துள்ளது.- சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
உண்மைதான்... உலகம் எங்கும் இவர்களால் பல்வேறு பிரச்சினைகள். எங்கும் இவர்களது சனத்தொகை அளவு கணக்கு இல்லாமல் எகிறிக் கொண்டுள்ளது. இங்குள்ள ஆஸ்பத்திரி... பிள்ளை பெறும் பகுதி 60% முஸ்லீம் பெண்களால் நிரம்பி இருக்கும்.- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
நெத்தலி சாதாரண நாட்களில் என்ன விலை. நமக்கு... கணவாய், நண்டு என்றால்.. மூன்று தரம் சோறு போட்டு சாப்பிடுவேன். 😂- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
முஸ்லீம் அமைச்சர் நியமிக்கப் படாததற்கு..முகநூலில் ஒரு இஸ்லாமியர்.... "கிடைக்க வேண்டியது... கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல், பிந்தி கிடைத்தால்... அது அரசாங்கம் தமக்கு போடும்.. பிச்சை" என்று சொன்னார். அவர்களுக்கு இனி கொடுத்தாலும் திருப்திப் பட மாட்டார்கள் போலுள்ளது. 😂- சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
இந்த... புட்டும் தேங்காய்ப்பூவும் கதை... இராசதுரை காலத்தில் இருந்து கேட்டு கிழக்கை பெருமளவு இழந்து விட்டோம்.- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
அப்பா திருகோணமலையில் வேலை செய்த காலங்களில், விடுமுறைக்கு செல்வதுண்டு. அந்தக் கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக கரைக்கு வரும். அந்த வகையில்.. கிழக்கு கடற்கரையின் அச்சத்தை புரிந்து கொள்கின்றேன்.- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
தனிக்காட்டு ராஜா... உங்களை மீண்டும், யாழ். களத்தில் காண்பது மகிழ்ச்சி. 🙂 தொடர்ந்து காணாமல் போகாமல், இடைக்கிடையாவது வந்து கொஞ்சம் எழுதுங்கள்.- பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை - அங்கஜன் இராமநாதன்
சீச்சீ ... இந்தப் பழம் புளிக்கும். அப்ப ஏன், தேர்தலில் நின்றவர்.- யாழ். சுழிபுரத்தில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்!
இது... மழை விட்டும், தூவானம் விடவில்லை என்ற மாதிரி... யாரோ ஒரு "அப்பிரண்டீஸ்" கஞ்சா வெறி முறியாமல், வாளை தூக்கி விலாசம் காட்ட வெளிக்கிட்டு, அம்பிட்டுப் போச்சுது என நினைக்கின்றேன்.- சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
நான் ஊரில் போய் இருந்தாலும்... இந்த மொக்கு மனிசி மாதிரி... காசை அலுமாரியில் அடுக்கி வைக்க மாட்டேன். எனது ஊர் அலுமாரியில்... ஒரு சோடி சாரமும், ஒரு சோடி கால் சட்டையும், இரண்டு சோடி சேர்ட் மட்டுமே இருக்கும். வளவுக்குள் கால் வைக்கிறவனின்... ஈரல் குலையை புடுங்கி எடுக்க, வீட்டுக்கு வெளியில்... இரண்டு அல்சேஷன் நாய் நிற்கும். 😂 🤣- சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
அந்த மனிசி... ஏன் அந்தக் காசை கொண்டு வீட்டு அலுமாரியில் வைத்தது. காத்தான்குடியையும்... சுவிஸ் போல ஒழுக்கமான இடம் என நினைத்து விட்டது போலுள்ளது. இவ்வளவு காலமும் சுவிஸில் வேலை செய்தும், உலக அறிவு... ஹ்ஹும். மனிசியின் 34 வருட உழைப்புக்கு நாமம் போட்டு விட்டார்கள்.- சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
நன்கு தெரிந்தவர்கள்... (ஆளை வைத்து) செய்த களவு போலுள்ளது.- பிரதி சபாநாயகராக முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு!
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சுவியர்... அளவுக்கு மிஞ்சிப் போனால், பாரளுமன்ற அமர்வுகளில் மாதக்கணக்கில் கலந்து கொள்ள முடியாமல் தடை செய்து விடுவார்கள். பிறகு... யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் நின்றுதான் பேட்டி கொடுக்க வேண்டும்.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கோசான்... நல்ல பிள்ளை. நீங்களே திரியை ஆரம்பியுங்கள். தமிழ் மக்களின் நன்மை கருதி, கட்டாயம் அர்சுனாவிற்கு ஒரு திறந்த மடல் எழுத வேண்டியது... அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்... அந்தாள் விசர் கூத்தாட சந்தர்ப்பம் அதிகம். ஊரில் உள்ளவர்கள் அச்சம் காரணமாக அவரின் செய்கையை, கட்டுப்படுத்துவார்கள் என நான் நினைக்கவில்லை. அதனை ஊர் மக்கள் சார்பாக, யாழ். களத்தில் உள்ள நாம் தான் செய்ய வேண்டும். ஒருவரும் அவரின் செய்கையை விமர்சிக்காத பட்சத்தில்... அவர் தான் செய்வது சரி என்று நினைத்து தொடரவே செய்வார். ஆனபடியால்... அவருக்கு ஒரு திறந்த மடல் அவசியம்.- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நீங்கள், சொல்லுறதை பார்த்தால்... உப சபாநாயகர் என்பது, 99´வது இடத்திற்கு வரும் போல் உள்ளதே.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அவர் என்னவாவது செய்யட்டும் என்று கடந்து போய் விட முடியாது. இவர் கோமாளிக் குத்து ஆடினால், இவர் நல்ல விடயங்களுக்கு குரல் கொடுக்கும் போது கூட... எடு படாமல் போய்விடும். வடக்கு மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர், பண்பானவராக இருக்க வேண்டும். அந்த மக்களின் மானத்தை காப்பாற்ற வேண்டும். பாராளுமன்றத்தில் கோமாளிக் கூத்து ஆடினால்... தமிழ்நாட்டின் செல்லூர் ராஜீவாகவோ, டெல்லியின் சுப்பிரமணியசாமியாகவோ மாற அதிக காலம் இல்லை.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இவரின் கட்சியில் உள்ள மயூரன் சிறந்த தெரிவு. ஆனால்.... எம் இனத்தில், நல்லவர்களுக்கு காலம் இல்லையே. ஓ.... இது வேறை நடந்திருக்கா... 😡- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இவரை ஆரம்பத்தில் சாவகச்சேரியில், மன்னாரில் பாதிக்கப் பட்ட மக்களுக்காக போராட வெளிக்கிட்ட போது... தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வந்த, படித்த இளையவர் என நினைத்து பெருமைப் பட்டேன். ஆனால்... போகப் போக இவரின் கோமாளிக் கூத்துக்கள் அதிகரித்து விட்டது. ஓகே... இதுவரை தேர்தலுக்கு முன் நடந்தவை... தன்னை பிரபல்யமாக்கவும், வாக்கு வங்கியை அதிகரிக்கவும் செய்த தந்திரங்கள் என்று கடந்து போனாலும்... இனி... அவர் மக்களால் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதி. அந்த மக்களின் கௌரவத்தை இவர் காப்பாற்ற வேண்டும். இவர் செய்யும் ஒவ்வொரு தவறும்... ஒட்டு மொத்த வடக்கு மக்களை பாதிக்கும் என்பதை இவர் உணர்ந்து திருந்த வேண்டும். இல்லையேல் மாறாத அவமானத்தை தமிழ் இனம் சந்திக்கும். - மாவீரர் தினத்தால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்; சிறிதரனிடம் மன்னிப்புக்கோரிய அமைச்சர் பிமல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.