Everything posted by தமிழ் சிறி
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
அப்ப… வாற வருசமும் போற ஐடியா இருக்கு. 😂 🤣
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
நீங்கள், அந்தக் கடைக்குள் போக முதல்… மக்கள் இப்படி “குறுகுறு” என்று பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லையா. 😂 வெளியே வரும் போது.. உங்கள் மனநிலை எப்படி இருந்தது. 🤣
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
கந்தையா அண்ணை…. ஊகங்களாக வரும் செய்திகளுக்கு எல்லாம், பதில் சொல்லி மினைக்கெடுவது சரியாக இராது. ஆனால்… இந்தியர்கள் மட்டுமல்ல பொதுவாக ஆசியர்கள் போகின்ற நாடுகளில் எல்லாம் அங்குள்ள மக்களுக்கு தமது கலாச்சாரத்தை காட்டுகின்றோம் என்ற போர்வையில்… எரிச்சலூட்டும் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. ஆபிரிக்கர்கள் கூட இந்த அளவுக்கு மோசமாக நடப்பது இல்லை.
-
உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான அவசர உதவிகளை வழங்க தயாராகும் பைடன்
அணையப் போகிற விளக்கு… பிரகாசமாய் எரியுமாம். 😂
-
கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது
படத்தைப் பார்க்க…. டில்லி, ஷங்காய் போன்ற மாசு அடைந்த நகரம் போல் கொழும்பு தெரிகின்றது. தொழிற்சாலைகள், வாகனங்கள் மூலம் காற்று மாசு படுவதை தீவிரமாக கண்காணித்து எடுக்க வேண்டிய வழிமுறைகளை கடைப்பிடிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். நகரம் இப்படி மாசு பட்டுப் போனால்… மக்கள்தான் நோயாளிகள் ஆவார்கள். ஆரோக்கியமில்லாத மக்களும் அரசுக்கு சுமை என்பதை மறக்கக் கூடாது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ஓம்... சமாதானப் புறா பறக்கும். நீங்கள் அதை பிடித்து, கறி வைத்து தின்னப் படாது. 😂
-
ரணில் உணவகமொன்றை ஆரம்பிக்கப்போகிறார் என நினைத்தேன் - தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அனுர
நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க, 16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
-
நண்பர் எனக் கூறி ட்ரம்புக்கு மோடி வாழ்த்து!
கனடாவில் உள்ள ஒரு கடற்கரையில்.... மலசலம் கழித்து விட்டு, மண்ணால் மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
//கஸ்தூரி என்ன பேசினாலும் எமோசன் ஆகாத, இல்லேனா நாம தெலுங்கு கூட்டம் என்று தெரிந்திடும்.// மூடிக்கிட்டு இரு... மூமென்ட். 😂 🤣
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல் பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
-
மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்
மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல். பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
வட-கிழக்கு மாவட்டங்களில் மட்டும் ஏன் இந்த நிலை? யாழ்ப்பாணம்-கிளிநொச்சி: 44 கட்சிகள்/குழுக்கள் 396 வேட்பாளர்கள் 6 ஆசனங்கள் வன்னி: 47 குழுக்கள் 423 வேட்பாளர்கள் 6 ஆசனங்கள் திருகோணமலை: 31 குழுக்கள் 217 வேட்பாளர்கள் 4 ஆசனங்கள் மட்டக்களப்பு: 56 குழுக்கள் 448 வேட்பாளர்கள் 5 ஆசனங்கள் அம்பாறை: 72 குழுக்கள் 720 வேட்பாளர்கள் 7 ஆசனங்கள் நாட்டில் வேறு எந்த மாவட்டங்களிலும் இந்த நிலை இல்லை. Malaravan Uthayaseelan
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வட-கிழக்கு மாவட்டங்களில் மட்டும் ஏன் இந்த நிலை? யாழ்ப்பாணம்-கிளிநொச்சி: 44 கட்சிகள்/குழுக்கள் 396 வேட்பாளர்கள் 6 ஆசனங்கள் வன்னி: 47 குழுக்கள் 423 வேட்பாளர்கள் 6 ஆசனங்கள் திருகோணமலை: 31 குழுக்கள் 217 வேட்பாளர்கள் 4 ஆசனங்கள் மட்டக்களப்பு: 56 குழுக்கள் 448 வேட்பாளர்கள் 5 ஆசனங்கள் அம்பாறை: 72 குழுக்கள் 720 வேட்பாளர்கள் 7 ஆசனங்கள் நாட்டில் வேறு எந்த மாவட்டங்களிலும் இந்த நிலை இல்லை. Malaravan Uthayaseelan
-
இலங்கைக்கு தங்க விருது.
இலங்கைக்கு தங்க விருது. 2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த தரப்படுத்தலில் இலங்கை 8வது இடத்தில் இருந்தது. இலங்கையை Most Desirable Island பெயரிடுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்திய பெருங்கடலின் முத்து என்ற வகையில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள புராதன இடங்கள் குறிப்பாக சிகிரியா, தம்புள்ள குகைகள், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை புராதன இடிபாடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகை விருதுகளில், இரண்டாவது இடத்தை தாய்வானும், மூன்றாவது இடத்தை போர்ட்டோ ரிகோவும் பெற்றுள்ளது. சர்வதேச ரீதியாக 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தரப்படுத்தலுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1407698
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
ஓகே...ஓகே... மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை வளவன். 😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நீங்கள் கூறியபடி நடக்கவும் சாத்தியங்கள் உண்டு. அப்படி ஒரு இடம்தான், வெல்வார்கள் என்றால்... ஒரு கேவலமான அவமானம் மகிந்த குடும்பத்திற்கு ஏற்படும். போர் வெற்றி என்ற அவர்களின் விம்பம்.. எல்லாம், நொருங்கிப் போகும்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
என்ன... ராஜபக்ச கட்சிக்கு, ஒரு இடமா? 😲 முன்னொரு காலத்திலை... இரண்டு ஜனாதிபதிகளையும், பிரதம மந்திரிகளையும், 25 அமைச்சர்களையும் நாட்டுக்கு தந்த குடும்பம் ஐயா அது. 😂 அதுக்கு இப்ப ஒரு இடமா? ரொம்ப அநியாயமாய் இருக்கே. 🤣 கோசான்... அந்த ஒரு இடமும், யாருக்கு என்று நீங்களே... சொல்லி விடுங்கள். 😂
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
வளவனுக்கு ஜேர்மனி நல்ல அத்துப்படி போலை இருக்கு. 😂 நீங்கள் ஜேர்மனியிலா வசிக்கின்றீர்கள்.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
உண்மைதான். இந்த இந்தியர்களால் விரைவில்... எமக்கும் அடி விழும் போலை இருக்கு.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான். 🤣
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
இன்று திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும்... ராசவன்னியரின் மகனுக்கும், மருமகளுக்கும்... இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் 🙏
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
வளவன்... இப்போ இங்குள்ள Pizza கடைகள், Taxi கள் எல்லாம் வட இந்தியர்களின் ஆதிக்கம்தான். அவர்களின் கொண்டாட்டம் இல்லாத பொது இடங்களில் கூட... பெண்கள், ஆண்கள் அதிக இந்திய உடைகளில் திரிவதை பார்க்க மற்றவனுக்கு எரிச்சலாக இருக்கும். பர்தா போடும் இஸ்லாமியர்களை எவ்வளவு வெறுத்தார்களோ.. அதே நிலைமை... இந்திய எதிர்ப்பு என்ற வடிவில், எங்களையும் பாதிக்கும் எனும் போது கவலையாகத்தான் உள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அமெரிக்கா துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் (JD Vance) வேன்ஸ். அவரின் மனைவி ஆந்திராவை சேர்ந்த உஷா சிலிக்குரி. கமலா... இல்லையெண்டால், விமலா. 😂 🤣 சில பின்னுட்டங்கள்.... சேதுராமன். தென்மாப்பட்டு சேதுராமன் தென்மாப்பட்டு இப்ப கஸ்தூரி சொன்னுது நிஜம்தானே. காத்தமுத்து கம்ப்யூட்டா் கோர்ஸ் கமலா ஹாரிசும் தெலுங்கு பிராமின்தான்ணே.
-
கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
கனடாவின் விடுமுறை இல்லாத தினத்தில்... இவர்கள் வீதியில் வெடி கொழுத்தி கொண்டாடுவது, மற்றைய மக்களுக்கு மிகவும் இடைஞ்சலானது. கண்டிக்கத்தக்க செயல். ஜேர்மனியில் வருடப் பிறப்பை அண்மித்த மூன்று நாட்கள் மட்டுமே வெடி கொழுத்த அனுமதி. நத்தார் பண்டிகைக்கும் வெடி கொழுத்துவதில்லை. மற்றைய நாட்களில் கடைகளில் கூட விற்க முடியாது. அப்படி யாரும்... தமது இருப்பில் உள்ள வெடிகளை கொழுத்தினால் காவல் துறையின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆசியர்கள்.... தமக்கு வாழ்வு தந்த மற்றைய நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
-
நண்பர் எனக் கூறி ட்ரம்புக்கு மோடி வாழ்த்து!
இந்தப் படத்தில்... சிவப்பு கட்டத்தில் உள்ளவர் செய்யும் வேலை, வட இந்தியர்களுக்கே பிரத்தியேகமானது. 😂