Everything posted by தமிழ் சிறி
-
புல்லை வெட்டுங்கோ
வழக்கம் போல்... பொய் வாக்குறுதிகளுடன் நடக்கும் தேர்தல். ஏமாந்த மக்கள்... மீண்டும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். வேறு வழி...? நல்ல தொரு கவிதைக்கு நன்றி ரசோதரன். கவிதையின் முடிவு அருமை. 😂
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
இவர் அனுர கட்சியில்... யாழ்ப்பாணம் / கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இங்கு பலரும், தாய்லாந்து மசாஜுக்கு இரகசியமாக போய் வந்தது தெரிய வந்துள்ளதால்... அவர்களுக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று, பிலிப்பைன்ஸ் மசாஜுக்கு "ரிக்கற்" போட்டுள்ளோம். அவர்களுக்கும், அனுபவம் புதுசா... இருக்கட்டுமன். 😂 🤣
-
கருத்து படங்கள்
- நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024: உத்தமர்களாகக் கட்டியெழுப்பப்படும் வேட்பாளர்கள்! நிலாந்தன்.
நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024: உத்தமர்களாகக் கட்டியெழுப்பப்படும் வேட்பாளர்கள்! நிலாந்தன். சுமந்திரன் ஒரு பிரச்சாரக் காணொளியில் கூறுகிறார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியை தானும் சாணக்கியனும்தான் வெற்றிபெற வைத்ததாக.அதற்கு சிவாஜிலிங்கத்தின் அறிக்கை ஒன்றை ஆதாரமாக காட்டுகிறார். ஏனையவர்கள் அந்த பேரணிக்குள் பின்னர் வந்து ஒட்டிக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார். சுமந்திரனின் பிரச்சார காணொளிகளைக் கேட்கும் எவருக்கும் அவரைவிட உத்தமர் இல்லை என்ற ஒரு தோற்றம்தான் கிடைக்கும். அவர் எவ்வளவு காணிகளை விடுவித்தார்? எவ்வளவு கைதிகளை விடுவித்தார்? எந்தெந்த ராஜதந்திரிகளை சந்தித்தார்?எப்படியெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்தார்? அதை எப்படி அவருடைய எதிரிகள் வேறுவிதமாக வியாக்கியானம் செய்தார்கள்? என்றெல்லாம் அந்த காணொளிகள் கூறுகின்றன. பிரச்சார காணொளிகளுக்கூடாக யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கும் ஒரு தமிழ் வாக்காளர் சுமந்திரன் ஒரு நீதியான, சுத்தமான அரசியல்வாதி என்ற முடிவுக்குத்தான் வருவார். தமிழ் மக்களுக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்த ஒருவர்,தமிழ் மக்களுக்காக இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்த ஒருவர்,அரங்கில் உள்ள அரசியல்வாதிகள் அநேகமானவர்களைவிட புத்திசாலியான,சட்டப்புலமைமிக்க ஒருவர்,அவர்தான் என்ற முடிவுக்கு வருவார்கள். ஏனென்றால் அந்த காணொளிகள் அப்படித்தான் அவரை கதாநாயகனாக, உத்தமராகக் கட்டமைக்கின்றன. அப்படித்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் காணொளிகளை தொகுத்துப் பார்த்தால் அங்கேயும் அந்த கட்சியை விட வேறு யாரும் தியாகம் செய்ததில்லை என்ற ஒரு தோற்றம் கிடைக்கும். கடந்த 15 ஆண்டுகளில் அதிகமாக தியாகம் செய்த ஒரு கட்சி அதுதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். அதிகமாக போராடிய ஒரு கட்சி, துணிந்து போலிசாரோடும் புலனாய்வுத் துறையோடும் மோதிய ஒரு கட்சி, வீரமான கட்சி அதுதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அநேகமாக கோழைகள், போராடாதவர்கள், ஒத்தோடிகள், துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், இந்தியாவின் ஏஜென்ட்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். ஆயுதப் போராட்டத்தின் ஒரே ஏகபோக வாரிசு அந்தக் கட்சிதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். எனைய எந்த ஒரு கட்சிக்கும் அவ்வாறு உரிமை கோரத் தகுதி இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். குத்துவிளக்கு கூட்டணி அதாவது சங்கு கூட்டணி ஜனாதிபதித் தேர்தலில் சங்கு பெற்ற வெற்றிகளின் தொடர்ச்சியாக தன்னைக் கட்டமைக்க முற்படுகின்றது. சங்குச் சினத்தை ஜனாதிபதித் தேர்தலில் முன்நிறுத்திய பொதுக் கட்டமைப்பும் இப்பொழுது சங்கை முன்னிறுத்தும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுதான் என்ற மயக்கத்தை சராசரி வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் சங்குக்கு கிடைத்த வெற்றிகளை தமக்கும் மடைமாற்றலாம் என்று அந்தக் கூட்டணி நம்புவதாகத் தெரிகிறது. அந்தக் கூட்டணிக்குள் போட்டியிடும் சசிகலா தன்னை, கொல்லப்பட்ட கணவனின் வாரிசாக முன்வைக்கின்றார். சங்குச் சின்னத்தின் கீழ் மற்றொரு பெண் வன்னியில் போட்டியிடுகிறார். முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவராகிய அவர் போரில் ஒரு காலை இழந்தவர். புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பலர் அவருக்காக கடுமையாக உழைக்கின்றார்கள்.ஆயுதப் போராட்டத்தின் வாரிசாக அவர் தன்னை கட்டமைக்கின்றார். தமிழரசுக் கட்சி, முன்னணி, சங்கு கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளையும் தவிர்த்து ஏனைய கட்சிகளின் பிரச்சாரக் காணொளிகளைப் பார்த்தால் அங்கேயும் அப்படித்தான் உருப்பெருக்கப்பட்ட கதாநாயகத்தனமான தோற்றங்கள் கிடைக்கும். மணிவண்ணன் நவீன தேசியம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துகின்றார். அவருடைய அணி அவரைக் குறித்து கட்டியெழுப்பும் சித்திரமும் பிரம்மாண்டமானது. கட்சிகளைத் தவிர்த்து சுயேச்சைகளைப் பார்த்தால், அங்கேயும் பிரச்சாரக் களம் அப்படித்தான்.மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த தவராசா பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எத்தனை பேரை தான் விடுதலை செய்திருக்கிறார் என்று பட்டியலிடுகிறார்.அவருடைய சுயேச்சை குழுவை சேர்ந்த சரவணபவன் ஐங்கரநேசன் போன்றவர்களும் தாங்கள் தமிழ்த் தேசியத்துக்கு இதுவரை செய்த பங்களிப்பை பட்டியலிடுகிறார்கள். மற்றொரு சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த அர்ஜுனா தன்னை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்புகிறார். சாவகச்சேரியில் தான் தொடக்கிய கலகம் தன்னை அந்தளவுக்கு பிரபல்யப்படுத்தியிருக்கிறது என்றும் நம்புகிறார். அண்மை நாட்களாக அவர் தன் வாயாலே கெடுகிறார். யூடியூபர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பலூன் அவர். அவருடைய சின்னம் ஊசி. அந்த ஊசியே அந்த பலூனை உடைக்கும் ஒரு நிலை. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வெளியே அங்கஜன்,பிள்ளையான் போன்றவர்களும் பிரச்சாரக் காணொளிகளை வெளியிடுகிறார்கள். பிள்ளையான் தன்னை கிழக்கின் மீட்பராகக் காட்டுகிறார்.அவரை பிரச்சாரப்படுத்தும் காணொளிகள் எல்லாவற்றிலும் அவர் கிழக்கிற்கு செய்த நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன. வடக்கில் அங்கஜன் ஒப்பீட்டளவில் எல்லாரையும்விட அதிகமாக செலவழிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.அவருடைய பிரச்சார காணொளிகளும் அவரை கதாநாயகராகக் கட்டமைப்பவை. வன்னியில் எமில் காந்தனின் சுயேச்சை குழு போட்டியிடுகிறது. அங்கேயும் காசு தாராளமாக அள்ளி வீசப்படுவதாக ஓர் அவதானிப்பு உண்டு. இவ்வாறாக தமிழர் தாயகத்தில் கட்சிகளும் சுயேச்சைகளும் பிரச்சார காணொளிகளை அதிகமாக வெளியிடுகின்றன.எல்லாப் பிரச்சார காணொளிகளும் வேட்பாளர்களை சினிமாத் தனமாக கதாநாயக பிம்பங்களாக கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன. ஆனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தல் களத்தில் கட்சிகளோ சுயேச்சை குழுக்களோ பெருங்கூட்டங்களை ஒழுங்குபடுத்தவில்லை. டிஜிட்டல் புரோமோஷன் மட்டும் தமக்குப் போதும் என்று அவர்கள் நம்புகிறார்களா? சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியுபர்களின் காலத்தில் டிஜிட்டல் புரோமோஷனுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.அனுர ஜனாதிபதி தேர்தலின்போது அதிகம் டிஜிட்டல் புரமோஷனில் ஆர்வம் காட்டினார். குறிப்பாக தமிழ் வாக்காளர்களை கவரும் நோக்கத்தோடு தேசிய மக்கள் சக்தி உருவாக்கிய காணொளிகளில் அனுர ஒரு கதாநாயகனாகக் கட்டமைக்கப்பட்டார். பிரபல சினிமாப் பாடல்களை பின்னணியில் ஒலிக்க, அனுர வாகனத்தை விட்டு இறங்குவது, நடப்பது, கையசைப்பது, குழந்தைகளை பெண்களை நெருங்கி வந்து கதைப்பது போன்ற எல்லாவற்றிலும் அவரை ஒரு கதாநாயகனாக கட்டமைக்கும் விதத்தில் அந்த காணொளிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அனுரவின் உடல் மொழி, உடல் அசைவுகள் அந்தப் பாடல்களுக்கும் இசைக்கும் பொருத்தமாக இருக்கின்றன என்பதனை இங்கு ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் சில தமிழ்க் கட்சி அரசியல்வாதிகள் வெளியிடும் காணொளிகளில், பின்னணியில் ஒலிக்கும் பாடல் வரிகளுக்கும் இசையின் எழுச்சிக்கும் தோதாக அவர்களுடைய உடல் மொழி காணப்படவில்லை. யாழ் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சிக்குள் வேட்பாளராக நிற்கும் ஒரு பெண் முன்பு பொங்கு தமிழில் ஈடுபட்டவர். தன்னை பொங்குதமிழின் வாரிசாகவும் அவர் முன்னிறுத்துகிறார்.அவருக்குரிய பிரச்சார காணொளிகளில் அவர் தனக்கென்று பாடல்களைத் தயாரித்திருப்பதாகத் தெரிகிறது. மேற்கண்ட பிரச்சாரக் காணொளிகள் பெரும்பாலானவை அந்தந்த கட்சி அல்லது அந்தந்த சுயேட்சைகள் காசு கொடுத்து உருவாக்கியவை. ஆனால் இந்த விடயத்தில் கொழும்பு போன்ற மாநகரங்களில் காணப்படும் வளர்ச்சிகள் தமிழ்ப் பகுதிகளில் இல்லை. மாநகரங்களில் விளம்பரம் ஒரு பெருந்துறையாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அங்கெல்லாம் விளம்பரத்துக்கு என்று பெரிய நிறுவனங்கள் உண்டு.அவை விளம்பரத்தை அதற்குரிய கலைப் பெறுமதியோடு வடிவமைப்பவை. அதற்காக கோடிக்கணக்காக பணம் வாங்குபவை. தொழிற்துறை வளர்ந்த மாநகரங்களில் விளம்பரம் கோடிகள் புரளும் ஒரு தொழில்துறை. தெற்கில் பெரும்பாலான பிரதான கட்சிகள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தொழிற்சார் விளம்பர நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. அதற்காக கோடிக்கணக்காக செலவழிக்கின்றன. அந்த நிறுவனங்கள் தேர்தல் பிரச்சாரத்தை கலைத் தாக்கத்தோடும் சராசரி வாக்காளர்களைச் சென்றடையக்கூடிய வியாபார உத்திகளோடும் தயாரிக்கின்றன. அந்தப் பிரச்சார காணொளிகளுக்கு கலைப் பெறுமதியும் உண்டு சந்தைப் பெருமதியும் உண்டு. ஆனால் தமிழ் காணொளிகள் பலவற்றில் அவ்வாறு கலைப் பெறுமதியைக் காண முடியவில்லை. ஏனென்றால் தமிழ்ப் பகுதிகளில் விளம்பரம் ஒரு கலையாகவும் தொழிலாகவும் வளரவில்லை.இந்தப் பற்றாக்குறையை தமிழ் கட்சிகளின் விளம்பரப் பிரச்சாரக் காணொளிகளில் காணக்கூடியதாக உள்ளது. தமிழ்க் கட்சிகள் அதிகம் டிஜிட்டல் புரோமோஷனில் ஆர்வம் காட்டும் ஒரு தேர்தல் களமாக இது காணப்படுகிறது. அதேசமயம் அந்த பிரச்சார விளம்பர காணொளிகளில் தொழில்சார் பற்றாக்குறைகளையும் அழகியல் குறைபாடுகளையும் காணமுடிகிறது. அதற்கு விளம்பரம் ஒரு தொழில்துறையாக தமிழ் மக்கள் மத்தியில் வளராததும் ஒரு காரணம். அரசியல் பிரச்சார நடவடிக்கைகளில் மட்டுமல்ல, அரசியலில் ஏனைனய விடையப் பரப்புகளிலும் உரிய தொழில்சார் திறன்களைப் பெற்றுக் கொள்வதில் தமிழ்க் கட்சிகள் எந்தளவுக்கு ஆர்வமாக காணப்படுகின்றன என்ற கேள்வி இங்கு முக்கியம். அரசியலை ஓர் அறிவியல் ஒழுக்கமாக விளங்கி வைத்திருந்திருந்தால்,பயின்றிருந்திருந்தால்,தமிழ்க் கட்சிகள் தமிழரசியலை இந்தளவுக்கு சீரழிவான ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்காது. இவ்வளவு சுயேச்சைகள் களத்தில் தோன்றும் ஒரு நிலைமையும் ஏற்பட்டிருக்காது. ஏனென்றால் தமிழ்க் கட்சிகளின் தோல்விதான் இம்முறை தேர்தல் களத்தில் சுயேச்சைகள் அதிகம் பெருகுவதற்கு பிரதான காரணம் ஆகும். https://athavannews.com/2024/1407954- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
தமிழ்ப் பகுதிகளில் இயங்கும் காவல் நிலையங்களில்... சுன்னாகம் காவல் நிலையம் இதற்கு முன்பும் பொதுமக்களுக்கு எதிராக, பலமுறை மிக மோசமான நடவடிக்கைளை சட்டத்தை மீறி செயல்பட்டமை செய்திகளாக வெளிவந்தது. இதனை முடிவிற்கு கொண்டு வர அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு தடவை, இரு தடவை என்றால்... கடந்து போய் விடலாம். தொடர்ந்தும் இதே நிலை நீடிப்பது கண்டனத்துக்குரியது. இவர்கள் தமிழர்களை, தமது அடிமைகளாக நினைத்து செயல் படுவது போல் தெரிகின்றது.- ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமானங்கள் இரத்து!
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமானங்கள் இரத்து! பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தேசிய விமான நிறுவமான, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் விமானத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீர் செய்வதற்கு தமது குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வழக்கமான விமான பயண அட்டவணையை விரைந்து மீட்டெடுக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இவ்வாறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் ஹோட்டல் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரம், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி கூறியுள்ள நிறுவனம், இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மன்னிப்பும் கோருவதாக குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2024/1407965- கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா! இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் உயர் படிப்புக்கான விசாக்களை விரைவாகப் பெற அனுமதிக்கும் இந்த விசா திட்டத்தின் நிறுத்தமானது இந்தியா உட்பட சர்வதேசத்திலுள்ள மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எஸ்.டி.எஸ் விசா திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 3 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, கனடாவில் 4,27,000 இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407971 ########### ############ ############## ############## தீபாவளி, ஓணம் பண்டிகை... எல்லாத்தையும், கனடா வீதிகளை மறித்து வெடி கொளுத்தி கொண்டாடியதன் பலனை.. அறுவடை செய்கிறார்கள்.- கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா!
கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா! இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் உயர் படிப்புக்கான விசாக்களை விரைவாகப் பெற அனுமதிக்கும் இந்த விசா திட்டத்தின் நிறுத்தமானது இந்தியா உட்பட சர்வதேசத்திலுள்ள மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எஸ்.டி.எஸ் விசா திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 3 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, கனடாவில் 4,27,000 இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407971- மறைந்தார் டெல்லிகணேஷ்
நல்ல ஒரு குணசித்திர நடிகர். அவரின் நடிப்பில், மெல்லிய நகைச்சுவையும் இடையே கலந்திருக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்.- மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
அடேங்கப்பா… சுமந்திரனுக்கு பிரதம மந்திரி ஆசையும் இருக்குது. 😂- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
படம்(1) ஒன்றில் இருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் ஊடகவியலாளர் ஒருவர் பெற்ற கிளிநொச்சியில் Bar புதிதாக திறந்தவர்களின் தரவு. படம்(2) இரண்டில் இருப்பது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட தரவை போலியாக சிறீ சேரின் கடித தலைப்பில் இடைச்செருகி வைத்திருப்பது. சிறீ சேரை வீழ்த்த இப்படி கேவலமான வேலையை சுமந்திரன் தரப்பு செய்யும் என்று முதலே அனைவருக்கும் தெரியும். இந்த போலி தகவலை முகநூலில் பதிவிட்டு பரப்பும் நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இயலாதவர்களின் கடைசி ஆயுதம் போலி செய்திகளை பரப்புதல். Siva Paran- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
சுப்ரமணிய பிரபா செய்தது குற்றமே. Edit ✍️ செய்யும் போது மண்டை மேல உள்ள கொண்டையை மறந்திட்டாய். பார் பெமிற் விடயம் தொடர்பில் குறித்த அணி edit செய்யும் போது விடப்பட்டவை. 1)சித்தார்தன் சிறிதரன் இருவரது பெயரை போட்ட நீ, சிறிதரனின் கடித தலைப்பை பயன்படுத்தினாயே அதிலே மாட்டியுள்ளாய் 2)ஒரு கடிதத்தில் இலக்கம் போடப் பட்டதில் இடையில் இருந்து ஆரம்பிக்கிறது. யாரை வெல்ல வேண்டும் என நினைத்து நீங்கள் பதிவிடுகிறீர்களோ அவரே உங்களால் தோற்கடிக்கப்படுவார். ஒருவரது கடித தலைப்பு மற்றும் உத்தியோக முத்திரை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். (சுயபுத்தியில் இயங்க வேண்டும்.) Kilinochchi Podiyan- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன் , @நந்தி உங்களையும்... யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள இன்னும் நான்கு நாட்களே அவகாசம் உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் இன்றே ஒரு கலந்து கொள்ளுங்கள். ஒரு மணித்தியாலத்துக்கு குறைவான நேரத்தில் எல்லாவற்றுக்கும் உங்களால் பதிலளிக்க முடியும். உதவி தேவைப்படுகின்றவர்கள் தாராளமாக கேளுங்கள். உங்களுக்கு வழிகாட்ட மற்றைய பல உறவுகள் தயாராக இருக்கின்றார்கள். இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை. இந்த இரு விடுமுறை நாட்களையும் ஓய்வாக இருந்து போட்டியில் கலந்து கொள்ள அரிய சந்தர்ப்பம். தவற விடாதீர்கள்.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அப்ப உங்களுக்கு... விமான சீட்டுடன், பிலிப்பைன்ஸுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டேலில், ஒரு வருசம் தங்கி நிற்க விருப்பம் என்றால்... அந்தப் பரிசையும் வழங்க காத்திருக்கின்றோம். 😂- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
சுப்பிரமணிய பிரபா... ஸ்ரீதரனுடன் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த போது எடுத்த படம்.- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
நீங்கள்... முன் ஜாக்கிரதை முத்தண்ணா. 🤣 கிட்டப் போய்... அசிங்கப் படுவதை விட, தூர நிற்பது நல்லது. 😂- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
ஆமாம்.... அவரேதான். கிருபன் ஜீ . நீங்கள் நல்ல நினைவு வைத்துள்ளீர்கள். நான் அதற்கிடையில் அந்தச் சம்பவத்தை மறந்து விட்டேன். 😂- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
👆 சுப்ரமணிய பிரபா என்பவர்தான் (படத்தில் இடதுபுறம் இருப்பவர்), போலியான ஆவணங்கள் தயாரித்து முகநூலில் வெளியிட்டவர். (வலது பக்கம் இருப்பவர் சுமந்திரன்) இவர் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி மாறிக் கொண்டே இருப்பார். இம்முறை... கிளிநொச்சியில், சஜித் கட்சியின் சார்பில் போட்டியிடும் புலி எதிர்ப்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு... ஆதாரம் இல்லாத பொய் பிரட்டுக்களை எல்லாம், மற்றைய கட்சியினர் மேல் கூறிக் கொண்டு ஊத்தை அரசியல் செய்து கொண்டு திரிகிறான்(ர்) போனமுறை சுமந்திரன் ஆதரவாளராக இருந்தவர். இவரின் தகப்பனும் வேறொரு கட்சியின் உள்ளூர் அரசியல்வாதிதான். முகநூலில் இவரை... @நிழலி, @விசுகு, @ஈழப்பிரியன், @குமாரசாமி, @பெருமாள், @தனிக்காட்டு ராஜா, @நந்தன் ஆகியோர் நன்கு அறிந்து இருப்பார்கள் என நினைக்கின்றேன்.- மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
சுமந்திரன் தான்... சொன்ன வாக்கில் உறுதியாக இருப்பார் என்றால் வரவேற்கத்தக்கது. ஆனால்... அவரின் கடந்த கால செயல்கள், அப்படியாக தெரியவில்லை. அடிக்கடி... தான் கூறியதையே, வார்த்தை ஜாலங்களால் மாற்றிக் கதைக்கும் சுபாவம் உடையவராகவே அவரை அடையாளப் படுத்தி உள்ளது. வாய் சுத்தம் இல்லாத, பொய் பேசும் மனிதன்தான் சுமந்திரன். கொழும்பில் ஒரு கதையும், வடக்கில் ஒரு கதையும் கதைத்து... மக்களை ஏமாற்றும் நபர்தான் இவர். மைத்திரி ஆட்சியில், இவர்கள் அரசுடன் ஒட்டி உறவாடிக் கொண்டு இருக்கும் போது... அந்த அரசு தமிழர்களுக்கு தீர்வு வழங்கவில்லை என்றால்... அரசியலில் இருந்தே விலகி விடுவேன் என்று அறிக்கை விட்டவர் தான் சுமந்திரன். மைத்திரி அரசும் ஒரு தீர்வும் கொடுக்காமல் போன பின்பும்... இன்னும் பிலாக்காய்ப் பால் மாதிரி, ஒட்டிக் கொண்டு இருப்பதை பார்க்கவே... இவர் எவ்வளவு சுத்துமாத்து பொய்யன் என்று விளங்கும். தாயக மக்களே... சுமந்திரனை அரசியலில் இருந்து அகற்ற, அவருக்கு வாக்குப் போடாதீர்கள். 🙏 நீங்கள் வாக்குப் போடாவிட்டால் அவராகவே விலகிச் செல்வதாக சுய வாக்குமூலம் தந்துள்ளார். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். 😂- கருத்து படங்கள்
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
🥇 🏆 🎁 முதலாவது பரிசு… யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில்… "பத்து கோடி ரூபாய்" பெறுமானமுள்ள “பார் பெர்மிட்” வழங்கப்படும். 😂 இன்றே… போட்டியில் கலந்து கொண்டு, அரிய பரிசை வெல்லுங்கள். 🤣- சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
இது என்ன… மதுரைக்கு வந்த சோதனை. 😂 அந்தளக்கு சுமந்திரன், எல்லாப் பக்கத்தாலையும் கேலிக் கூத்தாகிப் போனார். 🤣- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அக்னியஷ்த்ரா… எல்லோருக்கும் இம்முறை தலை சுற்றும் நிலைதான். அப்படி இருந்தும்… தமது கணிப்பு எப்படி இருக்கும் என்று பார்க்க கலந்து கொள்கின்றார்கள். நிச்சயம் நீங்களும் கலந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் எதிர் பார்க்கின்றோம்.- கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
நான் வாசித்த அளவில்.. திருமலையில் வீடும், சங்கும்தான் சேர்ந்து போட்டியிடுகின்றது. சைக்கிள் தனியே போட்டியிடுக்கின்றது போலுள்ளது. - நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024: உத்தமர்களாகக் கட்டியெழுப்பப்படும் வேட்பாளர்கள்! நிலாந்தன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.