Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஆடு மேய்த்துக்ககொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் – 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் வீதி ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரும் பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர். கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரை பிடித்த பொலிஸார் விபத்து தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என வலியுறுத்தி உடல்களை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் கிராம மக்களுடன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். https://athavannews.com/2024/1410141
  2. உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்! உலகின் மிக வயதான மனிதர் ஜோன் டினிஸ்வுட் (John Tinniswood) தனது 112 வயதில் உயிரிழந்தார் என்று கின்னஸ் உலக சாதனைகள் செவ்வாயன்று (26) தெரிவித்தன. இவர் இரண்டு உலகப் போர்கள் மற்றும் இரண்டு உலகளாவிய தொற்றுநோய்களிலிருந்து உயிர் தப்பியுள்ளார். புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்கிய அதே ஆண்டில் பிறந்த டினிஸ்வுட், வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்ட் நகரில் உள்ள தனது பராமரிப்பு இல்லத்தில் தனது கடைசி மூச்சை விடுத்தார். டின்னிஸ்வுட் ஆகஸ்ட் 1912 இல் லிவர்பூலில் பிறந்தார், 1942 இல் திருமணம் செய்து கொண்டார், இரண்டாம் உலகப் போருக்கு மத்தியில் அவர் ரோயல் ஆர்மி பே கார்ப்ஸின் ஒரு பகுதியாக இருந்தார். பின்னர் அவர் எண்ணெய் துறையில் கணக்காளராக பணிபுரிந்து 60 வயதில் ஓய்வு பெற்றார். அவரது குடும்ப உறுப்பினர்களில் அவரது மகள், நான்கு பேரக்குழந்தைகள் மற்றும் மூன்று கொள்ளு பேரக்குழந்தைகள் இருந்தனர். இவரது மனைவி 1986 இல் காலமானார். மறைந்த ராணி எலிசபெத், அவருக்கு 100 வயதை எட்டியதிலிருந்து 2022 இல் இறக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் டினிஸ்வுடுக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை அனுப்பி உள்ளார். https://athavannews.com/2024/1410118
  3. புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை! ”தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை” என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சு அதிகாரங்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர் போன்ற பதவிகளை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட இனங்கள், மதங்கள் அல்லது சாதிகள் அன்றி, ஒட்டுமொத்த இலங்கை தேசத்துக்கும் சேவை செய்வதை மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். தற்போதைய நிலைமையை இனம் அல்லது மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று நாம் முஸ்லிம் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். ஒன்றிணைந்த இலங்கை தேசம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிய அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த அணுகுமுறையானது பிரச்சினைகளை மிகவும் திறம்பட கையாள்வதற்கு எமக்கு இடமளிக்கும்” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409988
  4. உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு! -நளிந்த ஜயதிஸ்ஸ யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூர அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது என்பதுடன், தடைகளை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களை நினைவுக்கூர அரசாங்கம் அனுமதித்துள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளதாவது” 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கம் வெளியிட்டிருந்த வர்த்தமானியின் பிரகாரமே செயற்படுவோம். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெளிவாகக் கூறியுள்ளார். பயங்கரவாத அமைப்பையோ அல்லது அதன் உறுப்பினர்களை நினைவுக்கூரவோ இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறவில்லை. குறித்த வர்த்தமானியின் பிரகாரம் பயங்கரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளையோ அல்லது அதன் உறுப்பினர்களையோ நினைவுக்கூர முடியாது. அதேபோன்று குறித்த அமைப்புகளுக்காக நிதி சேகரித்தல், பிரச்சாரம் செய்தல், ஒருங்கிணைத்தல், கொடிகளை பயன்படுத்தல், சின்னங்களை பயன்படுத்தல், பாடல்களை பயன்படுத்தல் என அனைத்து விடயங்களும் இதன் ஊடாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணிகளின் பிரகாரம்தான் அரசாங்கம் செயல்படும். இந்த விடயத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிகவும் தெளிவாக ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால், உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கு தடையை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியில்லை” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409984
  5. எச்சரிக்கை; இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்! தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (27) சூறாவளியாக மேலும் வலுவடையும். இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை, பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தீவின் ஏனைய இடங்களிலும் மழை பெய்யும். சில இடங்களில் 75 மி. மீக்கு மேல் பலத்த மழை பதிவாகலாம். வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காற்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் வீசும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர்களாக காணப்படும். மேலும், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். கடல் நிலை நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் (சுமார் 2.5-3.0 மீ) உயரம் (இது நிலப்பரப்புக்கானது அல்ல) அதிகரிக்கலாம். மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அண்மித்த கடற்பரப்புகளில் அலைகள் சீற்றம் காரணமாக எழுச்சியுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். இதனால், கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினரும் இதனால் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2024/1410022
  6. ஓமந்தை ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது! யாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஏ-9 பிரதான வீதியில் ஓமந்தை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். சாரதிகள் வாகன சாரதிகள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம், மன்னார் வீதிகளின் ஊடாக யாழ்ப்பாணத்தை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1410045
  7. மோசமான வானிலையால் திருப்பி விடப்பட்ட ஆறு விமானங்கள்! மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று இரவு தரையிறங்கவிருந்த 06 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மூன்று விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. மீதமுள்ள மூன்று விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. https://athavannews.com/2024/1410036
  8. அடுத்த 12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம். வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பெங்கல் புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை வருகிற முதலாம் திகதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது 650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், 2,198 மில்லியன் கன அடி இருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1410056
  9. இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது. ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்து கடந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டை அதிகமானது. அடிக்கடி இஸ்ரேல் தாக்குவதும், ஹிஸ்புல்லா பதில் தாக்குதல் நடத்துவதுமாக இருந்தது. இந்த நிலையில்தான் இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன. இதற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இஸ்ரேல் அரசின் கீழ் இயங்கி வரும் அதிக அதிகாரம் படைத்த பாதுகாப்பு கேபினட் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமல் படுத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில் “லெபனானில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து போர் நிறுத்த நாட்கள் நீடிப்பது அமையும். நாங்கள் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம். எதாவது மீறல் நடைபெற்றால் பதிலடி கொடுப்போம். பெற்றி பெறும் வரை நாங்கள் ஒன்றுபட்டு இருப்போம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இலங்கை நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1410059
  10. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை! நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அதன்படி இன்று முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து நாளை மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1409987
  11. கிரீன்லாந்து பனிக்கட்டிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம தளம்! கிரீன்லாந்தின் பனிப்பாறைக்கு அடியில் புதைந்துள்ள விசித்திரமான ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, சாட் கிரீன் மற்றும் அவரது குழுவினர் கிரீன்லாந்ன் பனிப்பாறைக்கு அடியில்1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த தளம் ஆர்க்டிக்கில் இருந்து அணு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் சோதனை தளமாக செயல்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு ஆய்வுப் பயணத்தின் போது, ரேடார் கருவிகளைச் சுமந்து சென்ற விமானம் கிரீன்லாந்தின் பனிக்கட்டியின் ஆழத்தையும் அதன் கீழே உள்ள பாறை அடுக்குகளையும் வரைபடமாக்கியது. இதன்போதே, இதுஉறைந்த தீவின் மேற்பரப்பில் இருந்து 100 அடிக்கு கீழே புதைந்தருந்த நிலையில் பனிப்போர் கால இராணுவ தளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முகாம் 21 சுரங்கப்பாதைகளால் ஆனது, மொத்தம் 9,800 அடி நீளம் கொண்டது. இது அணு ஏவுகணைகளை வைப்பதற்கு பனிக்கு அடியில் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இது சோவியத் யூனியனை குறிவைக்கக்கூடிய ஒரு மொபைல் ஏவுகணை அமைப்பை உருவாக்கியது. இருப்பினும், பனிக்கட்டியின் நிலையற்ற தன்மை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை, மேலும் அது இறுதியில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். https://athavannews.com/2024/1409977
  12. பையனுக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎉 🎁 வாழ்க வளமுடன். 🙂
  13. நாங்கள்... யாழ்ப்பாண மண்ணையே தெரிந்திராத, பியதாசவுக்கு வாக்களிக்கும் போது... அவர்கள் ஹேமசந்திரவுக்கு வாக்களிக்கட்டுமன். 😂 பழிக்குப் பழி... வாங்கிட்டோமில்ல. ஆங்... 🤣
  14. தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. ஓம். மேலுள்ள செய்தியும், நீங்கள் கூறியதைத்தான்... சொல்கின்றது. அப்படி செய்தாலும் தாயகத்தில் இருந்து பெரிய எதிர்ப்பு வராது என நினைக்கின்றேன். எங்களுடைய தமிழ் கட்சிகள்... அந்த அளவுக்கு காரியத்தை கெடுத்து வைத்துள்ளார்கள். அத்துடன் எங்களுடைய "யூ - ரியூப்" தம்பிமாரும், அந்த மாதிரி அனுரா அரசுக்கு முட்டுக் கொடுப்பார்கள். ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலின் போது... சில "யூ - ரியூப்" தளங்களுக்கு 250,000 ரூபாய் வரை கொடுக்கப் பட்டதாக சில செய்திகள் உலாவியது.
  16. மஹிந்தவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் (2005-2010 ) மகிந்தவின் கீழ் அமைச்சரவையில் முழு அமைச்சர்களாக இருந்த முஸ்லீம் பா.உ. கள்* 1.ALM.அதாஉல்லா 2.ரிசாட் பதியுதீன் 3.றஊப் ஹகீம் (தபால்) 4.பேரியல் அஸ்றப் 5.AHM.பெளசி 6M.H.முஹம்மட் *Deputy -பிரதி அமைச்சர்கள்* 1.Basheer 2.Husain bahaila 3.MIM.Hizbullah 4.abdul Majeed 5.Cader (காதர் ஹாஜ்யார் கண்டி) 6.Faizer Mushthafa மகிந்தவின் 2 வது ஆட்சிக்காலத்தில் (2010-2015) மகிந்தயோடு அமைச்சரவையில் இருந்தவரகள். 1.AHM.பெளசி 2.றஊப் ஹகீம் (நீதி) 3ALM.அதாஉல்லா 4.ரிசாட் பதியுதீன் 5.Abdul Cader கண்டி 6.Abdul haleem கண்டி 7.Basheer segudawuth பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள், 1.பைசர் முஸ்தபா 2.ஹிஸ்புல்லா 3.அமீர் அலி 4.ஹசன் அலி 5.பசீர் சேகுதாவூத்
  17. அஞ்சான் உம்மாவும், முஹம்மட் முசம்மிலும்... கட்சி மாறி இருக்காவிட்டால் தான் அதிசயம். ஆட்சியில் இல்லாத கட்சியில் குந்தி இருப்பது... அவர்களுக்கு நரக வேதனையாக இருக்கும். நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியாதோ... இவர்கள் கட்சி மாறுவதும் தடுக்க முடியாதது. 😂
  18. எனகுத் தெரிந்த ஒருவர், * * * * குமார் என்று முடியும் தனது பெயரை, * * * * குமார என்று மாற்றி வைத்தார். அதற்குப் பிறகு அவருக்கு, வாழ்க்கையில் ஒரே ஏறு முகம் தான். தனது பதவியில் உச்சத்தை தொடும் மட்டும் சென்றார். 😂
  19. திருகோணமலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி சார்பாக தேர்தெடுக்கப் பட்ட அருண் ஹேமச்சந்திர என்ற தமிழர்... வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக பதவி ஏற்றார். இவர் பிரதி அமைச்சர் என்றாலும்... ஓரு கனமான அமைச்சிற்குத்தான் நியமிக்கப் பட்டுள் ளார். இவரது தந்தை யாழ்.மத்திய கல்லுரியில் கல்வி கற்றவர். அவர் ஒரு வைத்தியர்.
  20. திருகோணமலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி சார்பாக தேர்தெடுக்கப் பட்ட அருண் ஹேமச்சந்திர என்ற தமிழர்... வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக பதவி ஏற்றார். இவரது தந்தை யாழ்.மத்திய கல்லுரியில் கல்வி கற்றவர். அவர் ஒரு வைத்தியர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.