Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு! செவனகல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 40 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது ஆயிரம் மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1406603
  2. 200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது! 200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் குழுவொன்று செவநகர நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. வீட்டின் முன்றலில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் மறைத்து வைத்திருந்த 53 கிலோ 65 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அந்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த வருடம் 30 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஓமல்பகே தம்மிக்க சமன்குமாரவின் சகோதரி என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1406681
  3. உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தில்லை. 💐 வாழ்க வளமுடன். 🙏 சுய சரிதை போல் எழுதிய கவிதை மிக அழகு. 👍🏽
  4. இந்த ஹாலோவீன் அலங்காரத்தை அகற்றுமாறு அக்கம் பக்கத்தினர் காவல் துறையிடம் முறைப்பாடு. ரொம்ப பயந்தவர்களாக இருப்பாங்களோ... 😂
  5. ஹ்ம்ம்... தீபாவளி நேரம் இப்படி ஒரு கோரச் சம்பவம். தொழில் போட்டி என்றால், கொலை செய்து தான் அதனை தீர்க்க வேண்டுமா? இனி மறியலில் இருந்து என்ன செய்யப் போகின்றார்கள். கொலை செய்யப் பட்டவர்கள் குடும்பமும், கொலை செய்தவர்கள் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்து விட்டதே.
  6. கிருபன் ஜீ யும் பருத்தித்துறை, சுமந்திரனும் பருத்தித்துறை. 😍 ஊர்ப் பாசத்தில் சுமந்திரன் வெல்வார் என்று போட்டு வீணாக ஒரு புள்ளியை இழக்கப் போகின்றார். 😂 சுமந்திரன் பாராளுமன்றம் போவார்✔️. ஆனால் மக்கள் வாக்களித்து நேரடியாக பாராளுமன்றம் போக முடியாமல்... சுமந்திரன் பின் கதவால், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போகக் கூடிய நிலைமையே தற்போது உள்ளது என கருதுகின்றேன். 🤣 கந்தப்புவின் கேள்வியும்... நேரடியாக பாராளுமன்றம் போகின்றவர்களை பற்றித்தான் அமைந்துள்ளது. அதனை கவனித்தீர்களோ தெரியவில்லை.
  7. ரணில்.... நைசாக, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் "மூமென்ட்". 😂
  8. முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து குறித்து ரணில் கேள்வி! முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அரசாங்கம் நீக்கியதன் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சந்திரிக்காவின் கணவரின் கொலையுடன் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தொடர்புபட்டுள்ளது. அவருக்கும் குண்டுவெடிப்பினால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்காக மட்டுமே நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளோம். அதேநேரம், மகிந்த ராஜபக்ஷ, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்தமை வேறு விடயம், எனினும் அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமையினை கருத்திற் கொண்டு அவரின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். தமக்கு எவ்வித சலுகைகளும் தேவையில்லை எனவும், எனினும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். https://athavannews.com/2024/1406596
  9. தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  10. இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்! போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. அதன் முதல் விமானமானது நேற்றைய தினம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA)வந்தடைந்தது. விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அதற்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சி மூலம் அதில் பயணம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1406590
  11. பெரும் அரசியல் சாணக்கியர்கள் எல்லாரும் ஜேர்மனியில்தான் வசிக்கின்றார்கள். 😂 இன்னும்... கலந்து கொள்வார்கள். 🤣
  12. ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி! தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என மக்களிடம் கேட்டுகொள்கிறேன். கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம், ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோம். பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. அநீதி,வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம். அவ்வறான, இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இந்தத் தீபாவளியில், வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற நமது எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியமாகும். தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என பிரார்த்திப்பதோடு இலங்கைவாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றார். https://athavannews.com/2024/1406558
  13. மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை. மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரான சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், அங்குள்ள இலங்கையர் யாருக்காவது நாட்டுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக அங்கு தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்தும் தூதரங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்ற தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவுதம் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனானில் 7 ஆயிரம் பேர் வரையான இலங்கையர்கள் உள்ளார்கள் என்றும், இந்த வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதிவரை ஆயிரத்து 116 பேர் லெபனானுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது அங்கு இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக லெபனானுக்கான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தொழில் பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை சீராகும் வரை தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்புவதையும் நிறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அதேநேரம், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் கடந்த காலங்களில் அறிமுகப்பட்டுள்ளதாகவும் அது, தொழில் அமைச்சுடன் இணைந்தே இது செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1406575
  14. சில சினிமாக்கள்… இடை வேளைக்குப் பிறகுதான் தூள் கிளப்பும். 🤣
  15. அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும்.... தங்களுடைய ஆட்கள் இறந்ததற்கு அனுதாபமோ, கண்டனமோ தெரிவிக்க முடியாத... தொண்டையில்... முள்ளு சிக்கின மாதிரியான வலு இக்கட்டான நிலைமை. 😂 "ஊமை குத்து" என்று இதைத்தான் சொல்வார்கள். 🤣 ஜேர்மனியில் காணொளி தெரிகின்றது நுணா. ஒலி மட்டும் கேட்கவில்லை.
  16. தெரியாத கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால்... கூச்சப் படாமல் கேளுங்கள். 😂 உங்களுக்கு விரிவான விளக்கம் தர காத்திருக்கின்றோம். 🤣
  17. 72 பேர் வேணும் என்றால், நோவை பார்க்க ஏலாதுதானே. 😃 நோவுக்கு... Pain relief குளிசைகள் போட்டு சமாளிக்க ஏலாதா. 😂 பத்து நாள் தானே... பக்கெண்டு போயிடும். 🤣
  18. ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நடத்தை தொடர்பில் விசாரணை. ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் கேள்விக்குரிய நடத்தை மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் அரசியல் நியமனங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். போகொல்லாகம தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும், குறுகிய காலத்தில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு நபரையும் அரசாங்கம் பாதுகாக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1406407

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.