Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 2024 நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் தவிர, எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் 1, மற்றும் 4 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேற்கண்ட தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1406438
  2. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு! கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனேடிய அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அரசாங்கம் கனடாவின் முந்தைய குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்து வந்த நிலையில் இந்தக் கருத்து வந்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் படி, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மற்றும் மிரட்டல் அச்சுறுத்தலின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக கனேடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் செவ்வாயன்று (29) நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் பெயரை சூளுரைத்தார் என்றும் தி வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சு இது குறித்து இன்னும் பதில் அறிக்கை வெளியிடவில்லை. சீக்கிய பிரிவினைவாதிகள் காலிஸ்தான் எனப்படும் சுதந்திர தாயகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று கோருகின்றனர். இது தொடர்பில் 1980கள் மற்றும் 1990களில் இந்தியாவில் நடந்த கிளர்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2023 ஆம் ஆண்டு கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதர்களை கனடா ஒக்டோபர் நடுப்பகுதியில் வெளியேற்றியது. கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற இந்தியாவும் உத்தரவிட்டது. ஜூன் 2023 இல் இந்தியாவால் காலிஸ்தானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட கனேடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில், இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா அக்டோபர் 13 அன்று கனடாவால் “ஆர்வமுள்ள நபர்” என்று அறிவிக்கப்பட்டார். https://athavannews.com/2024/1406465
  3. ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு! வடகொரியா சுமார் 10,000 இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை (28) அமெரிக்கா தெரிவித்துள்ளது. பென்டகனின் அண்மைய மதிப்பீடு ரஷ்யாவில் 3,000 வட கொரிய பணியாளர்கள் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. உக்ரேனுடனான போரில் இவர்கள் கிழக்கு ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டலாம், இது ரஷ்ய படைகளை வலுப்படுத்தும் என்றும் பென்டகன் கூறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கையை மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார். இதேவேளை வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், ரஷ்யாவிற்கு வீரர்கள் அனுப்பப்படுவது பற்றிய ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பியோங்யாங் அத்தகைய நடவடிக்கையை எடுத்திருந்தால், அது சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என்று தான் நம்புவதாக கூறினார். https://athavannews.com/2024/1406382
  4. இது, "வந்தால்.... சுல்தான், போனால்.... பக்கிரி" தியரி.
  5. இனியும் காலம் கடந்து விடவில்லை. ”சுன்னத்து” செய்து விட்டு மதம் மாறலாம். 😂 நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. உங்களுடைய பெயர்…. “காதர் 57” 🤣
  6. மேலே... 72 இளம் கன்னிகள் காத்திருக்கின்றார்கள் என்று சொன்னால் கசக்கவா செய்யும். தாராளமாக உயிரை விடலாம்.
  7. புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா! ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது. AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைம் காசிம் (Naim Qassem) ஹெஸ்புல்லாவின் புதிய தலைவராக இருப்பார். செப்டம்பர் மாத இறுதியில் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலால் நஸ்ரலே கொல்லப்பட்டார். லெபனான் மீதான இஸ்ரேலில் அண்மைய தாக்குதல்களில் பல மூத்த ஹெஸ்பொல்லா அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். https://athavannews.com/2024/1406353
  8. அப்படி போடு அருவாளை.... இந்தத் தேர்தலுடன்.. சுத்துமாத்து சுமந்திரனை வெளியேற்றி, தமிழரசுக் கட்சிக்கு, மஞ்சள் தண்ணி தெளித்து தூய்மைப் படுத்த வேண்டும். தந்தை செல்வா... உன்னத நோக்கத்திற்காக ஆரம்பித்த கட்சியை... சுமந்திரன், இனியும் சின்னா பின்னா படுத்துவதை அனுமதிக்க முடியாது. விருப்பம் என்றால், அவர் புது கட்சியை ஆரம்பித்து, தனது சுத்துமாத்தை தொடரலாம். வைத்தியர் அர்ச்சுனா, மேயர் மணிவண்ணன், K.V. தவராசா, அடைக்கலநாதன், சித்தார்த்தன், முன்னாள் விடுதலைப் போராளிகள் என்று ஒவ்வொருவரும் தமது கொள்கைக்கு ஏற்ற மாதிரி தனிக்கட்சி ஆரம்பிக்கும் திறமையும், துணிவும் உள்ள போது... சுமந்திரன்... வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல்... மற்றவனின் கட்சியில் அடாத்தாக ஒட்டிக் கொண்டு இருந்து.. அலப்பறை பண்ணுவது பைத்தியக்காரத்தனம். "கறையான் புற்று எடுக்க... கருநாகம் புகுந்த மாதிரி", சுமந்திரன் தமிழரசு கட்சியில் இனியும் இருப்பதை அனுமதிக்க முடியாது. தமிழரசு கட்சியில் இருந்து... சுமந்திரன் உடனடியாக, அடித்து விரட்டப் பட வேண்டிய ஆள்.
  9. எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை – கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத். சமூக ஊடகங்களில் ஏனைய நாடுகளிடம் பணம் பெற்றதாகவும் , புதிய நாணயத்தாள்களை அச்சிட்டதாகவும் வெளியிட்ட கருத்தை அமைச்சரவை முழுமையாக புறக்கணித்துள்ளது. இன்று நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். புதிய அமைச்சரவை அமைக்கப்பெற்றதில் இருந்து எந்த நாட்டில் இருந்தும் கடனை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் , நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1406281
  10. இந்தச் செய்தியை கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது கந்தப்பு. விஜய்… தனது அரசியல் பிரவேசத்தின் முக்கியமான தமிழ்த்தாய் வாழ்த்திற்கும், கழகப் பாடலை எழுதவும் ஈழத்து கலைஞர்களை பயன் படுத்திக் கொண்டமை எமக்கு பெருமை சேர்க்கும் விடயம்.
  11. ஸ்ரீதரன், வென்றாலும் பரவாயில்லை. 🙂 சுமந்திரன்... கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டும், அம்புட்டுத்தான். 😂 பஞ்சாயத்து... முடிந்தது, எல்லாம் ஓடு. 🤣
  12. பாஞ்ச் அண்ணை…. பேரனுக்கு, நீங்கள் இங்கு வந்த காரணத்தை மறைக்காமல் சொல்லி விடுவதே நல்லது. எப்படியோ அவரின் பதின்ம வயதுகளில்… அவருக்கு உண்மை நிலவரம் தெரிய வரும் போது… தனது தாத்தா பொய் சொல்லி விட்டார் என்று அவரை கவலைப் பட வைக்க வேண்டாம்.
  13. அல்வாயன்... நிச்சயமாக உதவி செய்வேன். எந்த இடத்தில் உதவி தேவை என்று சொல்லுங்கள். ஆரம்பத்தில் முதலாவதாக கந்தப்பு எழுதிய கேள்விக் கொத்தை நீங்கள் பதில் எழுதும் பெட்டியில் பதிந்து விட்டு.. ஒவ்வொன்றாக, நிதானமாக பதில் எழுதிக் கொண்டு வர பெரிய பிரச்சினை இல்லை. அதுகும் நீங்கள் அண்மையில் ஊரில் நின்று விட்டு வந்ததால்... கள நிலைமை எங்களை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும். ஆகவே... தயங்காமல் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
  14. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்! -உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் குறித்த அறிக்கையை இன்று (28) வெளியிடவுள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த அறிக்கையினை கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று முற்பகல் 10 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1406091
  15. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – அலி கமேனி! இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி (Ayatollah Seyyed Ali Khamenei), இஸ்ரேலின் சனிக்கிழமை (26) தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று சூசகமாகத் தெரிவித்தார். அத்துடன், ஈரானின் சக்தியையும் உறுதியையும் இஸ்ரேலை உணரச் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் இராணுவ வீரர்களின் குடும்பங்களுடன் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற சந்திப்பின் போது உரையாற்றிய அவர், ஈரானிய தேசத்தின் இந்த சக்தியையும் உறுதியையும் சியோனிச (யூத தேசிய இயக்கம்) ஆட்சிக்கு எவ்வாறு தெரிவிப்பது என்பது நமது அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும். இஸ்ரேலின் தீய செயலை மிகைப்படுத்தப்படவோ அல்லது குறைத்து மதிப்பிடப்படவோ கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். இஸ்ரேலிய போர் விமானங்கள் சனிக்கிழமை அதிகாலை ஈராக்கின் வான்வெளியில் இருந்து ஈரானின் பாதுகாப்பு ரேடார்களை நோக்கி நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசியது. தாக்குதல்களில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டன. எனினும், இதன்போது ஈரான் இராணுவத்தில் பணியாற்றிய நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரஜை ஒருவர் உயிரிழந்திருந்தார். ஒக்டோபர் 1 ஆம் திகதி சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவியதற்கு பதில் தாக்குதல் இதுவென இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளி வந்துள்ள அயதுல்லா காமேனியின் கருத்துக்கள், காசாவில் சியோனிச ஆட்சி செய்த கொடூரமான அட்டூழியங்களை கண்டித்து, பத்தாயிரம் குழந்தைகள்/சிறுவர்கள் மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களின் தியாகத்தை மிகக் கொடூரமான போர்க்குற்றங்களின் அடையாளமாக எடுத்துக் காட்டியது. https://athavannews.com/2024/1406080

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.