Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அனுர கட்சியில் இவர் போட்டியிட்டால்... 100 வீதம் வெல்ல சாத்தியக் கூறுகள் உள்ளன. மதில் மேல் பூனையாக உள்ள தமிழரசு கட்சியினரின், வாக்குகள் அப்படியே இவருக்கு விழும். 😃
  2. ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்தை நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று வாராந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், 2024 செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன் சாட்சிகளைத் திரட்டும் பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாதிருக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1403162
  3. இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! 2024ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசினை பேராசிரியர்களான ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகியோர் தட்டிச்சென்றுள்ளனர். செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காகவே அவர்களுக்கு குறித்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில் உள்ள பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கனடாவில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் கெஃப்ரே இ. கிளிண்டனும் பேராசிரியர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403194
  4. இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ? இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது. அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஏ.கே.மூர்த்தி பேசும்போது, “கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இலங்கை சிறையில் மொட்டை அடித்து அவமானப்படுத்துகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்த தமிழக அரசுக்கு மீனவர்கள் படும் பாடு தெரியவில்லையா? இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வுகாண முன்வர வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். எல்லையில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு சிறைகளிலும் வாடும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். உடமைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரு நாட்டு பிரதிநிதிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டார்கள் அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அழைத்து சென்றனர். https://athavannews.com/2024/1403168
  5. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக 69 வயதில் கடலுக்கு சென்று கடின உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை. சில வேலைகளை ஒரு வயதிற்கு மேல் செய்ய உடல் இடம் கொடுக்காது என்பதால்தான் ஓய்வு கொடுக்கின்றார்கள். கடின உழைப்பாளிகளுக்கும் அரசு ஓய்வூதியம் கொடுக்கக் கூடிய திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்.
  6. ஈழப்பிரியன்.... கீழே உள்ள ஐந்து செய்திகளும், கடந்த மூன்று நாட்களில் தமிழரசு கட்சியில் இருந்து விலகியவர்களின் தலைப்புடன் யாழ். களத்தில் உள்ள செய்திகளே. நிலைமை படு மோசம் போல் தெரிகின்றது. தமிழரசு கட்சி சேடம் இழுக்கும் நிலைமைக்கு வந்து விட்டது. 👇 👇 👇
  7. தமிழரசுக் கட்சியில் இருந்து.... முக்கியமான பலர் வெளியேறிக் கொண்டிருப்பத்தைத்தானே தினமும் பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன. தமிழரசுக் கட்சியில் இருந்த தொண்டர்கள் ஏற்கெனவே இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு கட்சிகளுக்கு சென்று விட்டார்கள். இப்போது அங்கு இருப்பது... சுமந்திரனின் செம்புகளும், அல்லக்கைகளும் மட்டுமே. 😂 🤣
  8. 35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன். களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பலாத்காரம் செய்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான். பின் அவரின் 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்தாக பொலிசார் தெரிவித்தனர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெணின் கணவர் இல்லாத நிலையில் தனது 19 வயது மகள் திருமணம் முடித்து வேறு இடத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றதுடன் தாயார் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றார் என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1403097
  9. சும்முக்கு, காசு வருகுது என்றால்..... புனிதமானது மண்ணாங்கட்டியாவது. 😂 எல்லாம்... திருட்டு கூட்டங்கள். இந்தத் தேர்தலுடன்... பின்னங்கால் பிடரியில் பட... ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். 🤣 💪
  10. அனேகமாக எல்லோரும் மதுபானசாலை அனுமதி பெறவில்லை என்று… தமது சுய விளக்கத்தையும், மறுப்பு அறிக்கையையும் வெளியிட்டு விட்டார்கள். 👍🏽 👏🏻 சுமந்திரனும், சாணக்கியனும் தான்… திருட்டு முழி முழித்துக் கொண்டு “பம்மிக்” கொண்டு இருக்கின்றார்கள். 😂 ஓறிஜினல் சாராய வியாபாரிகள்…. சுமந்திரனும், சாணக்கியனும் தான் போலுள்ளது. 🤣
  11. சென்ற வருடத்தை விட… இந்த வருடம் யானைகளின் உயிரிழப்பு ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும், சிறிய நாட்டிற்கு இது மிக அதிகம்.
  12. எத்தனை ஏமாற்று செய்திகள் வந்தாலும், ஏமாறுபவர்கள்…. ஏமாந்து கொண்டே இருக்கின்றார்கள். கொஞ்சமாவது மூளையை பாவிக்க வேண்டாமோ…
  13. இவர்… பாராளுமன்றில் பேசியதாக ஒரு செய்தியும் நான் வாசித்ததில்லை. சில வேளை… பாராளுமன்ற “கன்டீனில்” சாப்பிட்டு விட்டு, “நித்தா” கொண்டு விடுவாரோ… 🤣
  14. மாவையின் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று… சத்தியலிங்கம் சொன்னதாக பிறிதொரு செய்தியில் உள்ளது. 🧐 சத்தியலிங்கம்… சுமந்திரனின் செம்புகளில் ஒருவர். இவர் “ஜில்மால் சுத்துமாத்துக்களை சுமந்திரனிடமிருந்து” நன்கு கற்று தேறிய ஒருவர். ஆகவே… இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 😂 எல்லா திருடர்களையும்…. வெளியே அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டுளது. 🤣
  15. புரோக்கோலி… எனக்குப் பிடித்த உணவு. அதனை ஒரு முக்கால் அவியலில் வறை செய்து சாப்பிடும் போது அதன் சுவையே தனி. இப்போ அதன் அறுவடைக் காலம் என்பதால் எங்கும் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றது. இங்கு 500 கிராம் 99 சதம் விற்கின்றார்கள். 🙂
  16. சுமந்திரன் மீது… குற்றம் சாட்டாத தமிழரசு கட்சியினரே இல்லைப் போல் தெரிகிறது. அந்தளவுக்கு… அவர் தனது தான் தோன்றித்தனமான செய்கைகளால் அல்லக்கைகளுக்கு இடம் கொடுத்து கட்சியை கெடுத்து வைத்துள்ளார். வரும் தேர்தலுடன் “கட்டுக்காசும் கிடைக்காமல்” போகப் போற ஆள் தானே…. நல்லாய் ஆடட்டும்.🤣
  17. எப்ப செத்தது என்று சொல்லாதேங்கோ... ஒப்பாரி வைத்து அழுதிடுவார். 🤣
  18. மீண்டும் புளோரிடாவா...? ஈழப்பிரியன். ஒய்வு கொடுக்க அவகாசம் இல்லாமல் தாக்குது.
  19. அமெரிக்காவை உலுக்கிய ஹெலீன் புயல்: 227 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவைத் தாக்கிய ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227 ஆக உயர்வடைந்துள்ளது. கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறி, அமெரிக்காவில் பல இடங்களைத் தாக்கியுள்ளது. ஹெலீன் என்று பெயரிடப்பட்ட குறித்த புயல், கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியது. இதனையடுத்து வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களும் புயல் தாக்கத்திற்கு உள்ளானது. இப் புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்தமையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 227 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1402938
  20. மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு! 2024 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசானது அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய RNA மூலக்கூறுகளின் புதிய வகுப்பைக் கண்டுபிடித்தமைக்காக அவர்கள் இந்த பரிசினை கூட்டாக வென்றனர். வெற்றியாளர்கள் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் £810,000) பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விருது 1901 முதல் உடலியல் அல்லது மருத்துவத்தில் வழங்கப்படும் 115 ஆவது நோபல் பரிசு ஆகும். 2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும், அதைத் தொடர்ந்து வேதியியலுக்கான பரிசு புதன்கிழமையும் அறிவிக்கப்படும். https://athavannews.com/2024/1402922
  21. நீங்கள் நினைத்தபடி படம் சரியாக இருக்கலாம். ஆனால்... அதில் உள்ள செய்தி அவர்களுக்கு பாதகமாக அல்லவா உள்ளது. யாராவது தனது பத்திரிகையில்... தன்னைப் பற்றி எதிர்மறையாக எழுத மாட்டார்கள் தானே. எதற்கும் சில நாள் பொறுத்திருக்க... சாயம் வெளுத்து, சுயம் வெளிப்படும்.
  22. செத்த ஆட்களின் ஆவி.... ஒரு வருசத்துக்கு சுற்றிக் கொண்டு திரியும் என்பது சிலரின் நம்பிக்கை. அந்த வகையில்... சம்பந்தனும் இந்தக் காட்சியை பார்த்து ரசிக்கலாம். தான்... ஆரம்பித்து வைத்ததை, தனது வாரிசு சுமந்திரன் முடித்து வைக்கின்றார் என்று ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்.
  23. அது... சஜித் பிரேமதாச மட்டும் வாசிக்க, "சுமந்திரய" என்ற பெயரில் சிங்களத்தில் வருகுது போலை கிடக்கு. 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.