Everything posted by தமிழ் சிறி
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
யாழ். அல்லைப்பிட்டியில் சிறுவன் படுகொ*லை - மர்ம முடிச்சுகள் அவிழுமா? காணொளி: 👉 https://www.facebook.com/reel/2224159248112226 👈
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதிடுவோர் கவனத்துக்கு.. இலங்கையில் பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட ரீதியான நீதி கிடைத்த அல்லது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட சில முக்கிய உதாரணங்களை முதலில் குறிப்பிடுகிறேன். 1. நாரம்மல துப்பாக்கிச் சூடு (2024) நாரம்மல பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதாகக் கூறப்பட்ட லொறி மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தச்சர் ஒருவர் (K.A. Roshantha Kumarasiri) உயிரிழந்தார். January 18, 2024 ⚖️ நீதிமன்ற நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஆகியோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். ⚖️ உடனடி நஷ்டஈடு: சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா (10 இலட்சம்) நஷ்டஈட்டுச் காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். ⚖️ உயர் நீதிமன்றத்தில் வழக்கு: உயிரிழந்தவரின் மனைவி காமனி ரூபிகா பிரியங்கனி, தனது கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (FR) மனுவைத் தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசினால் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ⚖️ வழக்கின் தற்போதைய நிலை: இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக முன்னிலையாகப் போவதில்லை எனச் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த வழக்குத்தவணை April 4, 2026. --------------------------------------------------- 2. ரம்புக்கனை சம்பவம் (2022): எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் (Chaminda Lakshan) கொல்லப்பட்டார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையில், பொலிஸார் தேவையற்ற மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. ⚖️ துப்பாக்கிச் சூட்டில் இறந்த 41 வயதுடைய சமிந்த லக்ஷனின் மனைவி மற்றும் சம்பவத்தில் காயமடைந்த பலரால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் (SC) 28-07-2025 அனுமதி அளித்தது. அடுத்த வழக்குத்தவணை February 27, 2026. ⚖️ கேகாலை நீதிவான் நீதிமன்றில் இவ்வழக்கு குற்றவியல் வழக்காகவும் விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து போலீசார்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு. பொலிஸ் அதிகாரிகள் சார்பில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன. --------------------------------------------------------------- இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட இத்தகைய வழக்கு 1. ரதுபஸ்வல துப்பாக்கிச் சூடு (Rathupaswala Shooting) 2013 ஆம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரிப் போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். பல வருட போராட்டத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மே மாதம், இதற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஒருவருக்கும் மற்றுமொரு சிப்பாய்க்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இது இராணுவத்தினர் சிவில் கடமைகளின் போது அத்துமீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. --------------------------------------------------------------- நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் மேற்கோள் காட்டும் சட்டப்பிரிவுகள்: ⚖️ இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் (Code of Criminal Procedure Act) பிரிவு 23: Arrest how made. கைது செய்யப்படுவதை ஒருவர் பலமாக எதிர்க்கும் போது மட்டுமே பலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்படாத ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்தும் உரிமையை இந்தப் பிரிவில் உள்ள எதுவும் வழங்காது. ⚖️ Constitution CHAPTER III, FUNDAMENTAL RIGHTS Article 11: எவரும் சித்திரவதைக்கு அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படக் கூடாது. Article 13 (1) : சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர வேறு எந்த நபரையும் கைது செய்யக்கூடாது. Article 13 (4) சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தவிர, எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாது. ------------------------------------------------------------------- ⚖️ சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களின்படி, உயிர்ச்சேதம் விளைவிக்காத வகையில் எச்சரிக்கை விடுத்து, பிற வழிகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட வேண்டும். நிராயுதபாணியான ஒருவரைச் சுடுவது சட்டப்படி குற்றமாகும். சுருக்கமாகக் கூறினால், மார்ச் 28, 2010 தேதியிட்ட IGP சுற்றறிக்கை 843 இன் படி, காவல்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது தடைசெய்யப்படவில்லை, நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவைப்பட்டால் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. என்றபோதிலும்... சாதாரண சூழ்நிலையில் கட்டளையை மீறி ஓடும் ஒருவரைக் கொல்லும் அதிகாரம் இராணுவத்திற்கும் இல்லை.. பொலிசாருக்கும் இல்லை. அவ்வாறு செய்வது கொலைக்கு சமமான குற்றமாகக் கருதப்படவே வாய்ப்புள்ளது. இவை அனைத்தும், பொலிஸார் வாகனத்தின் டயர்களை நோக்கிச் சுடுவதன் மூலம் வாகனத்தை நிறுத்த முயற்சிக்கலாமே தவிர, ஓட்டுநரை அல்லது பயணிகளைக் குறிவைத்துச் சுடுவது சட்டவிரோதமானது என்பதை வலியுறுத்துகின்றன. ஆகவே, நிற்காமல் போனால் ஆளுக்கு சுடலாம்தானே? - என வாதம் செய்வதானது ஒரு சட்டமீறல் செயலை தடுக்க, மற்றுமொரு சட்டமீறல் செயலை தெரிவு செய்வதையே ஊக்குவிக்கும். எடுத்ததும் சுடவும், நெற்றிப் பொட்டில் சுட வேண்டும் என்றெல்லாம்... விருப்பம் கொள்வதற்கு நீங்களொன்றும் ஆயுதப் புரட்சி நாட்டில் வாழவில்லை. சட்ட உருவாக்கத்துக்கான தேர்தல்களில் வாக்களித்து சட்ட ஆட்சி நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதால் சட்ட மீறல்கள் குறித்து பேசுவதே சரியானது. நம்ம யாழ்ப்பாணம்
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
எண்பது வீதமான எம்மவர்களும், ஊடகம் நடத்துபவர்களும்.... நேரில் பார்த்த மாதிரி... போதை வஸ்து கடத்துபவன். வாள் வெட்டுக்காரன், மாட்டு கள்ளன் என்றெல்லாம் எழுதி பொலிஸ்காரனுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்க... அனுரா கட்சியின் அனுதாபிகள் போல் தெரிகின்றது. ஸ்ரீலங்கா பொலிஸ், இராணுவம் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு.. கொல்லப் பட்ட அந்தச் சிறுவன் மீது அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருப்பதை பார்க்க... தமிழர் மத்தியில் உண்மையான செய்திகளை எதிர்பார்ப்பது கடினம் போலுள்ளது.
-
கருத்து படங்கள்
- ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!
ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது! போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் அருந்தியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பேருந்து ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 170 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு அண்மித்த காலம் இந்த பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர். வழி இலக்கம் 120 (கெஸ்பேவ – புறக்கோட்டை), வழி இலக்கம் 255 (கல்கிஸ்ஸ – கொட்டாவை), வழி இலக்கம் 162 (பிலியந்தலை – பண்டாரகம), வழி இலக்கம் 341 (பிலியந்தலை – மஹரகம), வழி இலக்கம் 341/2 (கரதியன ஊடாக – மஹரகம), வழி இலக்கம் 342 (பிலியந்தலை – கொட்டாவை), வழி இலக்கம் 157 (கஹபொல – பிலியந்தலை) மற்றும் வழி இலக்கம் 157/1 (பிலியந்தலை – மாகந்தன) ஆகிய மார்க்கங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1464464- இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு
சுமந்திரனின்... ராஜதந்திரம் எல்லாம் வீணாகி விட்டதே. 😂 சுத்துமாத்துக்கு, "அல்வா" கொடுத்து விட்டார்கள். 🤣- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்! அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து ‘பொலிஸாரை கைது செய்து எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது’ என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது. https://athavannews.com/2026/1464472- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் கண்ணீர் அஞ்சலி பதாகை. 09.11.2008ஆம் ஆண்டே பிறந்துள்ளான். வாற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயது. தற்போது 17வயது + ஆக 19 வயது என இன்றைக்கு அறிக்கை விட்டதும் பொய்யா ?? Sriramachandaran Mayutharan- இரசித்த.... புகைப்படங்கள்.
- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
"வாகனத்தை பொக்ஸ் அடிச்சு தான் வெடி வைச்சு இருக்கிறாங்க ?" தீவகத்தில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த வாகனத்தை அல்லைப்பிட்டி பகுதியில் நின்ற பொலிஸார் மறிச்சு இருக்கிறாங்க. வாகனம் நிற்காது தொடர்ந்து பயணித்துள்ளது. அது தொடர்பில் மண்டைதீவு பொலிஸ் காவலரனுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உஷார் நிலையில் இருந்ததும். வந்த வாகனம் மண்டைதீவில் பொலிஸார் உசார் என்றதும் , மீண்டும் அல்லைப்பிட்டி பக்கம் வாகனத்தை திருப்பி செல்ல முற்பட்டுள்ளனர். அந்த நேரம் அல்லைப்பிட்டியில் இருந்து வாகனத்தை துரத்தி வந்த பொலிஸ் குழு வாகனத்தை நோக்கி சூட்டுள்ளனர். அதோடு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. (சம்பவம் நடந்தது யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில்) வாகனத்தினுள் உள்ளவர்கள் தமக்கு ஒரு துப்பாக்கி சூட்டு சத்தமே கேட்டதாகவும். அதோடு வாகனத்தை வீதியோரமாக நிறுத்தியதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பொலிஸ் தரப்பு தகவலின் அடிப்படையில் ஒரு கைத்துப்பாக்கி சூடும் , ஏகே துப்பாக்கி சூடு 08ம் நடத்தப்பட்டதாக படம் 1 :- வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் உள்ள காயம். அது முன் பக்கத்தால் ஏதோ ஒரு பொருள் தாக்கியுள்ளது (?) உள்பக்கத்தால் வந்த சன்னம் ஏதேனும் தாக்கி இருந்தால் கண்ணாடியில் உள்ள ஓட்டை வெளிப்பக்கம் தள்ளி இருக்கும். முன் பக்கத்தால் ஏதோ ஒரு பொருள் தாக்கி இருக்கலாம் படம் 2 :- நின்ற வாகனத்தின் பின் பக்க கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டு இருக்கலாம். ஏனெனில் கண்ணாடி சிதறல்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது. படம் 3 :- துருப்பிடித்த வாள் படம் 4 :- வீதியில் படிந்துள்ள இரத்த கறை வாகனம் இரத்த வடிய வடிய சில தூரம் பயணித்து இருக்கலாம்.. படம் 5 ;- வாகனத்தின் பின் பக்க கண்ணாடி உடைவு. இது துப்பாக்கி சூட்டால் ஏற்பட்ட உடைவு போன்று இல்லை. இந்த கண்ணாடி உடைவு துண்டுகள் தான் படம் 2 இல் வீதியில் சிதறி இருக்கும் கண்ணாடி துண்டுகள், நின்ற வாகனத்தின் கண்ணாடி அடித்து உடைத்து இருந்தாலே , அவ்வாறு காணப்படும். படம் 6 :- துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான வாகனம் நின்ற இடம். அதில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் , பொலித்தீன் பையில் சாணகம் காணப்பட்டுள்ளது. படம் 7 ;- பொலித்தீன் பையில் காணப்படும் சாணகம் படம் 8 :- சம்பவம் இடம்பெற்ற பகுதி. சிவத்த வட்டத்திற்குள் இருப்பது தான் பேருந்து நிலையம். அதற்கு அருகில் தான் பொலித்தீன் பைக்குள் சாணகம் இருந்தது. படம் 09 :- மண்டைதீவு பொலிஸ் காவலரண். அங்கு வீதி தடைகள் தயார் நிலையில், மண்டைதீவு பொலிஸ் காவலரணில் 24 மணி நேரமும் பொலிஸார் கடமையில் இருப்பார்கள் ஏதேனும் சம்பவம் என்றால் வீதி தடைகளை வீதிக்கு உடனே இழுத்து விடுவார்கள். அதற்கு ஏதுவாக சில்லுகள் எல்லாம் பூட்டப்பட்டுள்ளன. இப்படி நிறைய விடயங்கள் இருக்கு. இருக்கட்டும். கைதானவர்கள் தொடர்பில் பலரும் முன் வைக்கும் குற்றச்சாட்டு " மாட்டு கள்ளர்" பொலிஸார் நேற்றைய தினம் நீதிமன்றில் கைதான இருவரையும் முற்படுத்திய வேளை அவர்களுக்கு முற்குற்றம் உள்ளதாக தெரிவிக்கவில்லை. உயிரிழந்த சிறுவனுக்கும் இருந்ததாக தெரிவிக்கவில்லை விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவருக்கும் பிணை கோரி இன்றைய தினம் புதன்கிழமை சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்த போதிலும் , பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸார் உயிரிழந்த மற்றும் விளக்கமறியலில் இருந்த இருவருக்கும் எதிராக எந்தவொரு முற்குற்றங்கள் இருந்ததாகவும் மன்றில் தெரிவிக்கவில்லை. அத்தோடு , பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு முற்குற்றம் இருப்பது தொடர்பில் எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை. அதை விட சம்பவம் இடம்பெற்ற வேளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்தில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பொலிஸ் குழுவில் ஒருவராக இருந்துள்ளார். அவரது உத்தரவிலையே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பில் முதல் கட்டமாக குறைந்த பட்சம், பொலிஸ் விசேட விசாரணை குழு ஒன்று அமைத்து , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும். விசாரணைங்களில் தலையீடு இருக்க கூடாது என்பதற்காக சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவை இடை நிறுத்தியோ , வேறு பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்தோ விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும். ஊர்காவற்துறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி இருக்க முடியாது. பிறிதொரு விசேட பொலிஸ் குழுவே விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். ஏனெனில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட பொலிஸ் குழுவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் காணப்படுவதனால் , அந்த பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் எவ்வளவு தூரம் நியாயமாக இருக்க முடியும் ?? ஆ.. அப்புறம் வாகனத்தின் பின் சீட் எங்கே என கேட்டதற்கு , உமையாள்புரத்தில் வயல் உள்ளதாம், அங்கிருந்து நெல் மூட்டை ஏற்றி வர ஏதுவாக கழட்டி வைச்சது என வாகனத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். வாகனம் கூட ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளனர். Sriramachandaran Mayutharan- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள், வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என வாகனத்தில் இருந்த சிறிய தந்தை தெரிவித்துள்ளார். பொலீசாரே... துப்பாக்கிச் சூடு நடாத்தி சிறுவனை கொன்று, மற்றையவர்களை கைது பண்ணிய பின்... யாரும் அவ்விடத்தில் இல்லாத நிலையில், அந்த வாகனத்த்துள்... சாணகம், கயிறு , வாள் போன்ற்வற்றை கொண்டு போய் வைத்து.. அவர்களை மாட்டுக் கள்ளர் என நிறுவ பார்க்கிறார்கள். இலங்கை போலீசார்.. வழக்குகலாய் திசை திருப்பி தாம் தப்புவது இது முதல் முறையல்ல.- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
பொலிஸார் வாகனத்தை மறித்த போது... நிற்காமல் போயிருந்தால், பின்னுக்கு இருந்துதான் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பார்கள். அப்படியிருக்க... சிறுவனின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, மூளையை தாக்கியமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் கொலை செய்து விட்டு இப்போ... தமக்கு சாதகமாக இச் சம்பவத்தை திசை திருப்புகின்றார்கள்.- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அல்லைப்பிட்டி சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை! யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றைய தினம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து , பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. இதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும் , கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்கு படுத்தி தருவதாக கூறியதால் , அவரை ஏற்ற சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர். அத்துடன், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை ஓடியதாகவும் , தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்ட போது வாகனத்தை வழங்கிய நிலையில் வாகனத்தை ஓட்டி சென்ற வேளை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார் அவ்வேளை மண்டைதீவு பொலிஸ் காவலரணில் நின்ற பொலிஸார் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த பொலிஸார் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார். பின்னர் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விட்டனர். வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். அதேவேளை , குறித்த நபர்கள் தீவகத்தில் சட்டவிரோதமாக மாடுகளை பிடித்து இறைச்சியாக்கும் கும்பல்களுடன் தொடர்பு என சமூக வலைத்தளங்களில் செய்திகளை பலரும் பதிவிட்டு வரும் நிலையில் , கைதான இருவர் மற்றும் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் முன்னர் குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்தாக பொலிஸார் நீதிமன்றில் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளைய தினம் வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464397- எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!
கியூபாவில் எரிசக்தி முடக்கம். கியூபாவில் நிலவும் கடுமையான எரிசக்தி நெருக்கடி மற்றும் விமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு தமது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கியூபாவின் சர்வதேச விமான நிலையங்களில் கடந்த 10 ஆம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரை விமான எரிபொருள் கிடைக்காது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளது.இந்த நிலையில், ஏர் கனடா, ஏர் டிரான்சாட் மற்றும் வெஸ்ட்ஜெட் போன்ற முன்னணி சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. இதன் விளைவாக கியூபாவில் சிக்கியுள்ள சுமார் 3,000 பயணிகளை மீட்பதற்காக ஏர் கனடா நிறுவனம் வெற்று விமானங்களை அனுப்பி வருகின்றது. வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு விடுக்கப்பட்ட வர்த்தக வரி மிரட்டல்கள் காரணமாக, டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து கியூபாவிற்கான எண்ணெய் விநியோகம் முற்றாக முடங்கியுள்ளது.இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க கியூபா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அரசு நிறுவனங்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை, வங்கி வேலை நேரக் குறைப்பு மற்றும் எரிபொருள் விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. அடிப்படைச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது. https://athavannews.com/2026/1464388- எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!
எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வந்தது. இதற்கு ஈடாக, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை அளித்து வந்தது. இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது. இதையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் சந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிறுத்தினார். மேலும், கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், கியூபாவில் விமானம் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அசாதாரணமான நிலைமையை சமாளிக்க அலுவலகங்கள், பாடசாலை மற்றும் பல்கலைகளை கியூபா அரசு 4 நாட்களுக்கு மூடியுள்ளது. அமெரிக்காவின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் கியூபாவின் எரிசக்தி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக, ரஷ்யா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், கியூபாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமும், அமெரிக்க வரிகளுக்கு அஞ்சாமல் கியூபாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இதவேளை ஐக்கிய நாடுகள், பொதுசெயலரும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1464329- கருத்து படங்கள்
- முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!
முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு ஜனவரி 14 ஆம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், வழக்கை மீளாய்வு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வரை ஒத்திவைக்க முடிவு செய்தது. https://athavannews.com/2026/1464258- மணிப்பூரில் தொடரும் கலவரம். 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
மணிப்பூரில் தொடரும் கலவரம். 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு! மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து பா.ஜ.க அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நிலவிய நிலையில் கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில் புது பா.ஜ.க அரசு பதவியேற்றது. இந்நிலையில் மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்துக்குள் புகுந்த கும்பலொன்று தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரொருவரை தாக்கி, வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதுடன் குறித்த கிராமத்தில் இன்று (10) அதிகாலை துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தபோதிலம் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. தொடர்ந்து உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464098- அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் – விளக்கம் கோரியுள்ள ஐ. நா. சபை.
அமெரிக்கா எப்போது நிலுவைத் தொகையை வழங்கும் – விளக்கம் கோரியுள்ள ஐ. நா. சபை. தாமதமாகி வரும் நிலுவைத் தொகைக்கு, அமெரிக்கா எப்போதுஇ எவ்வளவு தொகையை வழங்கும் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விளக்கம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. சீர்திருத்தங்களை வலியுறுத்தி அமெரிக்கா தனது நிலுவைத் தொகையை வழங்க தாமதித்து வருவதால், வரும் ஜூலை மாதத்திற்குள் ஐநா-வின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மொத்த நிலுவைத் தொகையில் சுமார் 95 சதவீதத்தை அமெரிக்காவே வழங்க வேண்டியுள்ளது. சாதாரண பட்ஜெட் 2.19 பில்லியன் டொலர், அமைதி காப்புப் பணிகள் 2.4 பில்லியன் டொலர், ஐநா தீர்ப்பாயங்கள் 43.6 மில்லியன் டொலர்இ சுமார் 4.6 பில்லியன் டொலர் ஆகும். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், கடந்த 2025-ஆம் ஆண்டில் ஐநா-வின் சாதாரண வரவு செலவு திட்டத்துக்கு எவ்வித நிதியையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா சபை தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும், தேவையற்ற பிரிவுகளை நீக்கிவிட்டு அடிப்படைப் பணிகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம்அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் ஐநா தூதர் மைக் வால்ட்ஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், நாங்கள் மிகப்பெரிய தொகையை முன்பணமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால்இ ஐநா சபை மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் இன்னும் வேகமெடுக்க வேண்டும். இது ஒருவகையான கட்டுப்பாடான அன்பு போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார். குறைந்தது 55 நாடுகள் ஏற்கனவே தங்களது 2026-ஆம் ஆண்டுக்கான பங்களிப்பை முழுமையாகச் செலுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் தாமதம் ஐக்கிய நாடுகள் சபையை பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நிதிப் பற்றாக்குறையால் சுமார் 2,681 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. ஊழியர்களின் ஊதியம் மற்றும் அத்தியாவசிய நிர்வாகச் செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக ஐநா ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையெழுத்திட்ட சட்டமூலம் மூலம் ஒன்றில் ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு வழங்க 3.1 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் எவ்வளவு தொகை ஐநா-விற்கு எப்போது கொடுக்கப்படும் என்பதில் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை https://athavannews.com/2026/1464140- நோய் வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு
நோய் வாய்ப்பட்ட பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்ட தனது பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த பெண்ணொருவர் மீது, விலங்கு வதை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இப்பெண் வளர்த்து வந்த பூனைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பூனையை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். பூனையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குத் தற்காலிக சிகிச்சையளித்ததுடன், பூனையால் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பூனையின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவை சிகிச்சை ஒன்று அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளார். சிகிச்சையின்றி வீடு திரும்பிய அந்தப் பூனை அடுத்த நாளே உயிரிழந்துள்ளது. பூனையின் உயிரிழப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு எதிராக விலங்குவதை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சைக்காக 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் (Swiss Francs) செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் இலங்கை பெறுமதி சுமார் 402, 082 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464143- கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!
கனடாவில் பயங்கரம் : துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு! கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை நடத்திய சந்தேக நபரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தைப் பாதுகாப்பிற்குள் கொண்டுவந்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. https://athavannews.com/2026/1464244- SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!
தமிழரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில், இருக்கும் ஏழு பேரில்... இரண்டு பேர் மட்டுமே வாயை திறப்பார்கள். மற்ற ஐந்து பேரும்... கொட்டாவி விடக் கூட, வாயை திறக்காமல், பம்மிக் கொண்டு இருப்பார்கள். 😂 பாராளுமன்றத்தில் வாயை திறப்பவர்கள்... ஸ்ரீதரனும், சாணக்கியனும் மட்டுமே. ஸ்ரீதரன் பாடசாலை அதிபராக இருந்த படியால், அவர் பள்ளிக்கூடம் போயிருப்பார். பள்ளிக்கூடம் போகாத ஆள்... சாணக்கியனாகத்தான் இருக்கும். 🤣- SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!
SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி! இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கூமாங்குளம் அலகரை வீதியினை புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தேர்தலிற்காக வீதியினை செய்து தரவில்லை, மாறாக மக்களின் போக்குவரத்திற்காகவே செய்துதரவுள்ளோம். நாம் கிராமிய வீதி அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளோம். இவ்வமைப்பானது குறித்த வீதி உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை பார்வையிடுவதே பிரதான பணியாக இருக்கும். எனவே இக்கிராமத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் விரைவாக அவ்வமைப்பை உருவாக்கவும். மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளையே நாம் அமைக்கின்றோம். முப்பது வருடம் யுத்தத்திலே பாதிப்படைந்த மக்கள் என்ற ரீதியில் வடமாகாணத்திற்கு ஜனாதிபதி அதிகளவான நிதியினை ஒதுக்கியுள்ளார். டித்வா புயலினை காரணமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை நாம் கூறியிருக்கலாம். ஏழை எளிய மக்களிற்கு உதவி செய்வதற்காகவே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசினை அமைத்துள்ளோம். மேலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக செய்து வருகின்றோம். திருட்டு, கொள்ளை, மோசடிகளை இல்லாது அழிப்பதாக அரசியல் ரீதியாக தெரிவித்திருந்தோம். இவ்வாறான மோசடிகளில் நூறு வீதம் அரசோ, அரச அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஈடுபடவில்லை. இருந்தாலும் கூட எதிர்க்கட்சித்தலைவர் நாடாளுமன்றத்தில் பல போலியான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றார். இது தொடர்பாக எங்களுக்கு எதிராக வழக்கோ அல்லது பிரேரணையோ கொண்டு வாருங்கள் என தெரிவித்தோம், ஆனால் எதையும் அவர் செய்யவில்லை. குறிப்பாக நாடாளுமன்றத்தில் கூறும் பொய்களிற்கு நாம் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நாம் மோசடி மற்றும் வீன் விரயத்தை இல்லாது ஒழிப்போம். குறிப்பாக கடந்த காலங்களில் ஒரு நிகழ்விற்கு அதிகளவான செலவு மேற்கொள்ளப்படும். ஆனால் நாம் அவ்வாறான செலவுகளை குறைத்து மிச்சப்படுத்தியுள்ளோம். மேலும் கடந்த காலங்களிலே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது உறவுகள் அனைவருக்கும் வேலையை பெற்றுக்கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வழங்கவில்லை. கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ் ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டனர். இவ்வீதியானது 550 இலட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு செய்து கேள்வி கோரல் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம். குறித்த ஒப்பந்தத்தை 385 இலட்சம் ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தகாரர் எடுத்துள்ளார். இதன் மூலமாக 165 இலட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம். மொட்டுக்கட்சி அரசோ அல்லது SJP அரசாங்கமாக இருந்திருந்தால் குறித்த 165 இலட்சம் ரூபாயும் பைகளிற்குள் சென்றிருக்கும். இதேபோன்று வடக்கு மாகாண சபையிலும் பெரிய மாற்றமென்பதற்கு இல்லை. குறிப்பாக கடந்த மாகாண சபையிலே இரு அமைச்சர்களை வடமாகாண முதலமைச்சர் நீக்கியிருந்தார். இனவாதம் இல்லாத அரசினை உருவாக்குவோம் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். நீங்கள் தமிழர் என்பதால் இந்த அரசினால் அநீதி இழைக்கப்பட்டு உள்ளதா என கேட்கிறேன். பல வருட காலமாக இந்நாட்டிலே ஒரு பிரச்சனை ஒன்று இருக்கின்றது என்று எங்களுக்கு தெரியும். அதனை தீர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பெரும்பாலான பிரச்சினைகள் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் என்ற ரீதியில் இல்லை. குறிப்பாக பணம் இருந்தால் மூவினத்தவர்களும் சந்தோசமாக உள்ளனர். ஆனால் பணம் இல்லை எனின் இது கஷ்டமாகும். வாக்குறிதி வழங்கிய விடயங்களை ஒவ்வொன்றாக அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ள வேண்டும். கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்தோம், அதனை தற்போது ஆரம்பித்துள்ளோம். இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சியில் ஒருவரே அப்படி இருக்கின்றார், மற்றவர்கள் கொஞ்சம் பரவாயில்லை. நாம் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த விடயத்தில் இவர்கள் மேற்கொண்ட செயலினால் தரம் 06 இற்கான வகுப்பினை இவ்வருடம் ஆரம்பிக்க முடியாமல் போய்விட்டது. இருந்த போதும் நாம் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஆரம்பித்தோம். நாம் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசினை அமைத்துள்ளோம். கடந்ந நாட்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் ஜனாதிபதிக்கும் அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அவர்களை ஆசிரியர்களாக உற்வாங்குவதற்கான பிரமானத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலே படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள காணிகளை தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் சம்மதத்துடன் மீளவும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம். 60 மாதங்கள் பணியாற்றுவதற்காக எமது அரசாங்கம் அமைக்கப்பட்டுள் ளது. கடந்த காலங்களிலே அரசாங்கங்கள் வழங்கிய நிதியை விட தற்போது டித்வா சூறாவளியால பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான நிதியினை வழங்கியுள்ளோம். குறிப்பாக எமது அரசாங்கத்தினால் பணத்தினை மிதப்படுத்தியமையாலே வழங்க முடிந்தது. மேலும் வறுமைக்குட்பட்ட மக்களின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய ஜனாதிபதி இருப்பதனால் இது நடந்தது. குறிப்பாக டித்வா புயலில் அழிவடைந்த வீடுகளிற்கு ஐம்பது இலட்சம் வழங்கவுள்ளார் என்பதை எங்களால் கூட நம்ப முடியாது இருந்தது. ஒரு வீட்டினை மட்டும் உள்ளவர்களின் வீடுகள் அழிவடையும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று எங்களிற்கு புரியும். இது வவுனியாவில் ஒரு வீடு, கொழும்பில் ஒரு வீடு மற்றும் இலண்டனில் ஒரு வீடு இருப்பவர்களிற்கு தெரியாது. இதன் காரணமாகவே அழிவடைந்த வீட்டிற்கு ஐம்பது இலட்சம் ரூபாவும், அதற்கு மேலேயும் வழங்குவதற்கு தீர்மானித்தோம். மேலும் டித்வா சூறாவளி காலத்திலேயே சம்பளத்தையும் அதிகரித்திருந்தோம். அத்தோடு மலையக தொழ்லாளர்களுக்கு 200 ரூபாய் அரசாங்கம் வழங்கியதன் ஊடாகவே 1700 ரூபாய் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக எங்களுடைய நாட்டை நாங்கள் தான் கட்டியெழுப்ப முடியும் மாறாக வேறு யாரும் அதனை செய்ய முடியாது. இலங்கையை கட்டியெழுப்ப யாருமே பெரிய அளவில் உதவி செய்ய போவதில்லை. சில நாடுகள் குறிப்பிட்டளவு நிதியினை வழங்கிய போதும் முழு நாட்டையும் கட்டியெழுப்ப போதுமானதாக இருக்காது. நீங்கள் அனைவரும் இணைந்து 75 வருடகால மோசடியான அரசினை இல்லாது செய்துள்ளீர்கள். அத்தோடு நான்கு திசையை உள்ளடக்கிய நல்ல கட்டமைப்பை கொண்ட அரசாங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள். அதிகளவான மக்கள் எங்கள் அரசின் மீது ஆர்வமாக உள்ளனர். ஆனால் இவ் அரசை யார் எதிர்க்கின்றனர். குறிப்பாக கடந்த காலத்தை போல் சௌகரியமாக இருக்க முடியாத ராஜபக்ஷக்கள், ஐக்கிய மக்கள் சக்தியினரே. குறிப்பாக ஒரு குடும்பமே ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள் அது தற்போது முடியாது உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதோடு எங்களையும் பேசுகின்றார்கள். இவ்வாறானவர்களிற்கு உடந்தையாக இருந்த சிறு தொகை அதிகாரிகளும் எதிர்க்கின்றனர். இருந்த போதும் இனவாதம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எமக்கு எதிராக இல்லை. கொழும்பு, காலியிலும், பருத்தித்துறையிலும் இருந்து வலைப்பந்து விளையாட்டு போல் இனவாத விளையாட்டை விளையாடுவார்கள். இதன் மூலமாக அவர்களிற்கு ஒரு செய்தி உள்ளதுடன், அவர்களிடம் ஏமாந்து வாக்கும் போடப்படும். தெற்கில் இனவாதம் இல்லாமல், வடக்கிலும் இனவாதம் இருக்காது. ராஜபக்ஷ சரியான பசியுடன் உள்ளார். அவர்களின் உணவு இல்லை. கம்மன்பில, வீரவன்ச ஆகியோருக்கு இனவாத உணவு இல்லாமல் மெலிந்துள்ளனர். அமைச்சு பதவி இன்றி வாக்குகள் இன்றி தற்போது இவர்கள் இனவாதம் எங்குள்ளது என தேடுகின்றனர். இவர்களை போன்றவர்களே யாழிலும் உள்ளதுடன், அவர்களிற்கு அமைச்சு பதவி இல்லாமல் போய்விட்டது. அத்தோடு வடக்கில் உள்ள இவர்களும் இனவாதத்தை தேடி திரிகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு இனவாத உணவை வழக்கம்போவது இல்லை. அவர்களிற்கு இரண்டை தெரிவதற்கான சந்தர்ப்பம் தற்போது உள்ளது. ஒன்று இனவாதம் இல்லாமல் அப்படியே இல்லாமல் போவது. இரண்டாவது இந்த நாட்டிலே ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து பயணிக்கத்தக்க வகையில் அவர்கள் செய்வதன் மூலம் அவர்கள் தப்பிக்கொள்வார்கள். தற்போது இனவாத செயற்பாட்டை தேடுபவர்கள் இரு பக்கமும் இருந்து குரைக்கின்றனர் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1464113- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடு நடாத்தப் பட்ட பின்... வாகனத்தின் காணொளி: 👉 https://www.facebook.com/reel/1508123317691140 👈 Reborn Visu Ranjith Guna ஓடும் போது சுட்டிருந்தால் வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கும்!!!! ############ Reegan Devadas இந்த வானம் நிறுத்தி வைக்கப்பட்டதை பார்க்கும் போது... தேவையின் அடிப்படையில் செய்யப்பட்ட கொலை ############### Kogi Kogi சிறுவனை சுட்டுக் கொல்லவா போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது 😡😡😡😡- குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!
“நானா” வின், காணொளி: 📽️👉 https://www.facebook.com/reel/905203261910665 👈 “Creepy Camera man” என அழைக்கப்படும் இவரது பெயர் முஹம்மது அஸ்கார் முஹம்மது-ராசிக் (Mohamed Askar Mohamed-Razik). 45 வயதான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அண்மையில் கனடாவின் டொராண்டோ நகரில் இவர் செய்த காரியங்கள் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அச்சுறுத்தி வந்த முஹம்மது அஸ்கார் ராசிக் என்பவரின் அட்டகாசங்களுக்கு ஒருவழியாக கனடா காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. "சமூக வலைதளப் பிரபலம்" என்கிற போர்வையில் இவர் செய்த அநாகரீகச் செயல்கள் தற்போது உலகறிய வந்துள்ளன. இவரது வீடியோக்களைப் பார்த்த எவருக்கும் ஒன்று தெளிவாகத் தெரியும், இவர் ஒரு சாதாரண படைப்பாளி அல்ல. ஆள் ஒரு மோசமான நபர் என்பது…. பொது இடங்களில் செல்லும் பெண்களை வழிமறிப்பது, அவர்களை வம்புக்கு இழுப்பது, மற்றும் அவர்கள் பயப்படும் வரை கேமராவை முகத்திற்கு நேரே பிடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இவரின் வாடிக்கை. இவரது வன்முறை கலந்த அணுகுமுறை மற்றும் இவர் பெண்களிடம் காட்டிய ஆக்ரோஷம் பலரை பொது இடங்களில் அச்சத்துடன் நடமாட வைத்தது. “வீடியோ எடுக்க வேண்டாம்" என்று பெண்கள் மறுத்த பிறகும், ஒரு நிழலைப் போல பின்தொடர்ந்து துன்புறுத்துவதை ஒரு ‘மிகவும் அனுபவித்து’ செய்து வந்துள்ளார். பல நாட்களாக இவரை ஏன் யாரும் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது கனடா காவல்துறை இவரை 'Criminal Harassment' (குற்றவியல் துன்புறுத்தல்) பிரிவில் கைது செய்துள்ளது. இனி சட்டத்தின் பிடியில் இருந்து “மைனர் மாப்பிளை” தப்புவது இனி கடினம். "இலங்கையர்" என்ற அடையாளத்தோடு இவர் செய்த இந்த அருவருப்பான காரியங்கள், உலகெங்கிலும் வாழும் கண்ணியமான இலங்கை மக்களுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளது. இவரைப் போன்ற ஒரு தனிநபரின் வக்கிரமான குணத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை கூற முடியாது. ஆனால், இவரைப் போன்றவர்கள் சமூகத்தின் பெயரால் உலவுவதை அனுமதிக்கக்கூடாது என்பதில் இலங்கைச் சகோதரர்கள் உறுதியாக உள்ளோம். காவல்துறை இவருக்கு உரிய தண்டனையை வழங்கும் என நம்புவோம். அதே சமயம், சமூக ரீதியாக இவரைப் போன்றவர்களைப் புறக்கணிப்பதன் மூலமே எமது சமூகத்தின் கண்ணியத்தை நாம் நிலைநாட்ட முடியும். Mukinthan Thurairajasingham - ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.