Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நாட்டில்... சிங்களவனுக்கு ஒரு சட்டம், தமிழனுக்கு ஒரு சட்டம். இவர்... தமிழர் என்ற படியால் கைது செய்திருக்கின்றார்கள். சிங்களவன் என்றால்... பதவி உயர்வு கொடுத்திருப்பார்கள்.
  2. இதுதான்... ஆபத்தான பாறை மீன். நாம் சாப்பிடும் பாரை மீனை, பாறை மீன் என்று குழப்பி அடிக்கும் பத்திரிகையாளர்களை நினைக்க கடும் கோபம் ஏற்படுகின்றது. அடி முட்டாளுகள். இது...நாம் சாப்பிடும் பாரை மீன்.
  3. தமிழ் கடவுள்/காவலாளிகள் இல்லாமல் போனபிறகு, திருகோணமலையில்.. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் திணைக்கள கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது சிறீமலை நீலியம்மன் சைவ கோயில் முழுமையாக சிதைக்கப்பட்டு அங்கு 'பாசன பப்பாத ராஜமஹா' என்கின்ற விகாரையை உருவாக்கி இருக்கின்றார்கள் குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு அதே இடத்தில "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள் அரிசிமலையில் தமிழ் நிலங்களில் 'ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரை' (Asiri Kanda Purana Rajamaha Viharaya) கட்டப்பட்டு இருக்கின்றது. தென்னமரவடி கந்தசாமி மலை வழிபாடு தடைசெய்யப்பட்டு அங்கு பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. 64ஆம் கட்டை (பச்சனூர் மலை) விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டுப்பட்டு வருகின்றது. பெரியகுளம் பகுதி தமிழர் நிலங்களில் பொரலுகந்த ராஜமகா விகாரை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. ராஜவந்தான் மலை கோயில் விக்கிரகங்கள் தோண்டியெறிப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. மூதூர் சூடைக்­குடா மத்­த­ளம்­மலை சூழலில் பௌத்த தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள். இந்தவகையில் திருகோணமலையில் 74ற்கு மேற்பட்ட பிரதேசங்களை பௌத்த மதத்திற்குரிய தொல்லியல் இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள். இதுபோதாதென்று திருக்கோணேஸ்வரம் கோயில் சூழல் முழுமையாக சிங்கள மயப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இந்த கோயில் கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என உரிமை கோருகின்றார்கள். இங்கு வியாபாரம் செய்வதற்காக இரத்தினபுரியிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள். திரியாய், மற்றும் தென்னமரவடியில் பல ஆயிரக்கணக்கான வயல் காணிகளில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக விவசாயம் தடைசெய்யப்பட்டு இருக்கின்றது. திரியாய் கிராமத்தில் மட்டும் 1,000 ஏக்கர் வயலில் விவசாயம்செய்ய விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் 2,712 ஏக்கர் காணியை அரச திணைக்களங்கள் உரிமை கோரி இருக்கின்றது. இதில் மூன்று புதிய பௌத்த விகாரைகளும் ஒரு பழைய பௌத்த விகாரையும் அமைக்கப்பட்டு அவற்றுக்கு 809 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல கங்குவேலி கிராமத்தில் 500ஏக்கர் வயல் நிலங்கள் சிங்களவரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இங்கு கங்குவேலி குளத்தை சூழ சிங்களவர்கள் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் 2,500 ஏக்கர் நிலப்பகுதி பானமுர திலகவன்ச என்கிற பிக்குவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் 11 இடங்களில் 340.33 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் 7 பௌத்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இங்கு 30க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும் வணக்கஸ்தலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஏற்கனவே இந்த பகுதியில் 23இடங்களில் பௌத்த கட்டுமானங்கள் முழுமை பெற்று இருக்கின்றன. மேற்படி பானமுர திலகவன்ச என்கிற பிக்கு அரிசிமலை என்கிற பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கின்றார். இங்கு 500 ஏக்கர் காணி அரசாங்கத்தால் பௌத்த பிக்குகளுக்கு இங்கு வழங்கப்பட்டு இருந்தது. அதேபோன்று அரிசிமலையுள்ள 500 ஏக்கர் காட்டு பகுதியும் பௌத்த தொல்லியலுக்குரிய இடமாக பிரகடனம் செய்யப்பட்டு இருக்கின்றது. தென்னைமரவாடி திரியாய் ,குரும்பைசிட்டு, புல்மோட்டை போன்ற இடங்களில் உள்ள 11இடங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான நிலங்கள் அரச நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தென்னைமரவாடி தமிழ் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு (10 ஆம் கட்டை ) இரண்டு சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்கபபட்டு இருக்கின்றன இவ்வாறு கன்னியா, குச்சவெளி , கும்புறுப்பிட்டி, சாம்பல்தீவு, சம்பூர், மத்தளமலை, கல்லடி மலைநீலியம்மன், இலங்கைத்துறை முகத்துவாரம் என பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை மாவட்டம் சீரழிந்து வருகின்றது. மேற்படி அவலங்களை அரசியல்ரீதியாக வலுமையாக எதிர்க்கொள்ள கூடிய தமிழ் ஆளுமைகளை அரசியல் மற்றும் சிவில் பொதுவெளியில் அடையாளம் காணாமல் திருகோணமலையை யாராலும் காப்பாற்ற முடியாது. Tharmalingam Kamaraj ·
  4. பாறை.... மீன் என்பது பிழை. பாரை மீன் என்றே சொல்வார்கள். அதுதான் சரி. வீரகேசரி... அண்மையில் தமிழை பிழையாக எழுதிக் கொண்டு வருகின்றமை கண்டனத்துக்குரியது. வருகின்ற இளைய தலைமுறைக்கு... சரியான தமிழ் சொற்களை, பத்திரிகைகள் எழுத வேண்டும். தமிழ் தெரியாத பத்திரிகையாளர்களை வேலையை விட்டு தூக்க வேண்டும். எந்த இனமும்... தமது தாய் மொழியில் வரும் பத்திரிகைகளில் எழுத்துப் பிழை விடுவதை விரும்ப மாட்டாது. ஆனால் தமிழ் இனத்தில் இந்த எழுத்துப் பிழைகளை எவரும் சுட்டிக் காட்டுவதும் இல்லை, பத்திரிகைகள் அது சம்பந்தமாக மன்னிப்பு கேட்பதும் இல்லை என்ற அசமந்தப் போக்கே காணப்படுகின்றமை வெட்கக்கேடு.
  5. வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு! தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்‍ (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதி அளிக்காது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனிடையே, அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நியூசிலாந்து பெண் சுற்றுலாப் பயணி, இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில உள்ளூர் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு, தங்கள் வாகனங்களை வாடகைக்கு விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் கூறியுள்ளார். அத்தகைய நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். https://athavannews.com/2025/1453390
  6. வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு! வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வெளிநாட்டு பிரஜைக்கு ஒரு மாத காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு முன்பு 2,000 ரூபாவாக இருந்த கட்டணம் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் மற்றும் இரண்டு மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 21,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் மற்றும் 6 மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கும் மேலாகவும் 12 மாதங்கள் வரையிலும் ஒரு வெளிநாட்டு பிரஜைக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான கட்டணம் 45,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, வெளிநாட்டுப் பிரஜைக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகவும். மேலும், சாரதி அனுமதிப் பத்திரம் தொலைவடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அதன் நகலை வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகும். மேலும், இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் இலங்கைப் பிரஜைக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான கட்டணம் 3,300 ரூபாவில் இருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு, புதிய அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவிலிருந்து 60,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453330
  7. A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: யாழில் வரலாற்று சம்பவம். இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதிக்கான (பல்தேர்வு வினா) விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. நெல்லியடியின் பிரபல பாடசாலையொன்றில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் உயிரியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டது. 21 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி, முறைப்படி விடைத்தாள்களைக் கையளித்துள்ளனர். இந்த விடைத்தாள்கள் அன்றைய தினமே உரிய பாதுகாப்புகளுடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக்குறைவு காரணமாக, அவை உடனடியாக அனுப்பப்படவில்லை. மூன்று நாட்களின் பின்னர் சென்று பார்த்தபோதே, காகிதாதிகளுடன் சேர்த்து அவை கட்டப்பட்டு, அனுப்பப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. தவறு நிகழ்ந்ததால், தற்போது அந்த விடைத்தாள்களை திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில், குறிப்பாக உயிரியல் போன்ற பாடங்களில், ஒரு சில புள்ளிகள் கூட மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிலையில், தொடர்புடைய 21 மாணவர்களும் பெருமளவில் புள்ளிகளை இழக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் இத்தனை ஆண்டுகால கல்வி வாழ்க்கையையும் அர்த்தமற்றதாக மாற்றியுள்ளதுடன், மாணவர்களை உச்சக்கட்ட மன அழுத்தத்துக்குள்ளும் தள்ளியுள்ளது. இந்த விடயம் கல்வித் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட உடனேயே, அந்தப் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கவனக்குறைவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1453370
  8. சோகமான செய்தி. இனியாவது ஆனந்த சுதாகரனின் வயது வந்த பிள்ளைகளை பராமரிப்பு இன்றி தனியே விடாமல், தந்தையை விடுதலை செய்து... பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
  9. இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை! நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை புதன்கிழமை 10 முறை வெடித்து, பாரிய சாம்பல் புகைகளை வான் நோக்கி வெளியிட்டது. பாறையின் சரிவுகளில் 13 கிலோ மீற்றர் வரை எரிமலைக் குழம்புகள் வழிந்தோடியதைத் தொடர்ந்து எச்சரிக்கை நிலை மிக உயர்ந்த அளவில் பராமரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், கிழக்கு ஜாவாவின் மீட்பு நிறுவனம் வெளியேற்றத்திற்கு உதவ நூற்றுக் கணக்கான பணியாளர்களை அனுப்பியது. எரிமலைக்கு அருகில் வசிக்கும் 956 பேர் ஏற்கனவே பாடசாலைகள், மசூதிகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3,676 மீற்றர் உயரமுள்ள செமெரு எரிமலை, இந்தோனேசியாவில் உள்ள சுமார் 130 செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றாகும். இது இறுதியாக 2021 டிசம்பர் மாதம் வெடித்தது, இதன்போது குறைந்தது 51 பேர் உயிரிழந்துடன், அருகிலுள்ள கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டிருந்தன. https://athavannews.com/2025/1453381
  10. நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல். நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரையும், பாடசாலைப் பிள்ளைகளையும் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கெப்பி மாநிலத்தின் உயர்நிலை பாடசாலை விடுதியில் இருந்து (17) அதிகாலையில் சுமார் 25 மாணவிகளை ஆயுதம் ஏந்திய குழுவொன்று கடத்தி சென்றுள்ளது. இச்சமயம் பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் அங்குள்ள பாதுகாவலரை சுட்டுக்கொன்றுள்ளனர். இக்கடத்தலுக்கு நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த நைஜீரிய பாதுகாப்புப் படையினர் அருகிலுள்ள காடுகள் உள்ளிட்ட பதுங்குமிடங்களில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1453360
  11. அன்புள்ள... நியூசிலாந்து அக்காச்சிக்கு, 🙂 அடுத்த முறை, நம்மூருக்கு வரும் போது, துடை தெரிய... "மினி ஸ்கேர்ட்" போடாமல், முஸ்லீம் பெண்கள் மாதிரி, முழு உடம்பையும் மூடி "பர்தா" போட்டுக் கொண்டு வாருங்கள். இப்ப... நம்ம ஊரு, ரொம்ப கெட்டுப் போச்சுதுங்க. 😂
  12. நாமல், போலியாக எடுத்த பட்டத்திற்கு.... கறுப்பு கோட்டு வாங்கி, அப்பாவிடமும், அம்மாவிடமும் ஆசிர்வாதமும், முத்தமும் வாங்கியதெல்லாம் வீணாய் போய் விட்டதா. 😂
  13. புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல். ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் புத்தர் சிலையை அப்புறப்படுத்திய நடவடிக்கையைக் கண்டித்ததுடன், உடனே அதனை அங்கே நிறுவிட வேண்டுமென கொக்கரித்துள்ளனர். அதனையடுத்து மீண்டும் அதேசிலையை அதே இடத்தில் நிறுவியுள்ளனர். இடதுசாரி பாரம்பரியத்தைச் சார்ந்தவர்களென காட்டிக் கொள்ளும் ஜேவிபி அரசு , வழக்கமான ‘சிங்கள பேரினவாத அரசு’ தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. இந்த அடாவடி ஆதிக்கப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என அந்த கட்சியின் நிறுவுனர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழர்களின் தாயகமான ஈழமண்ணில் கலாச்சார படையெடுப்பை நடத்தும் ஒரு வடிவமாக ஆங்காங்கே கவுதம புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கைகளில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மண்ணை சிங்களமயப் படுத்துவதையும் பௌத்த மயப்படுத்துவதையும் ஒரு செயல்திட்டமாக வரையறுத்துத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வலதுசாரிகள் மட்டுமின்றி இடதுசாரிகளும் அதனைத் தொடரும் நிலை உள்ளது. இதன்மூலம், ஜனாதிபதி அநுர திசாநாயக்கவும் கடந்தகால ஜனாதிபதிகளைப் போலவே இலங்கை தீவைச் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியதாக நம்புகிறார் என அறியமுடிகிறது. இதற்கு அவர்களின் அரசியலமைப்புச் சட்டம்தான் வழிவகுக்கிறது. சிங்கள – பௌத்த -பெரும்பான்மைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை ஆட்சி நிர்வாகத்தைக் கொண்டதாகவும், தமிழினத்தை ஒடுக்குவதற்கான பேரினவாதக் கூறுகளைக் கொண்டதாகவும் அரசமைப்புச் சட்டம் இருப்பதே இதற்கு காரணமாகும். அதிபர் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அரசு விரைவில் புதியதொரு அரசமைப்புச் சட்டத்தை யாத்திட திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலையில், தமிழ்மக்களின் நலன்கருதி இலங்கை தேசத்துக்கான ஆட்சி நிர்வாகத்தில் ‘கூட்டாட்சி’ (சமஷ்டி) நிர்வாக முறையை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. ஏற்கனவே, தமிழர்களின் தரப்பாக நின்று இந்திய ஒன்றிய அரசு, ‘இந்திய -இலங்கை ஒப்பந்தந்தை’ ஏற்படுத்திய வரலாறு உள்ளது. இன்னும் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திட வேண்டுமென சிங்கள ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டிய ‘தார்மீகப் பொறுப்பு’ இந்திய ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அந்த வகையில், புதிய அரசியல் யாப்பில் தமிழ்த் தேசிய இனத்துக்கான முழுமுற்றான ‘தன்னாட்சி அதிகாரத்தை’ வழங்குவதற்குரிய வாய்ப்பை உருவாக்கிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழ் மக்கள் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழ் மக்களின் ஒரு சாரார் கடந்த காலங்களில் பௌத்த மதத்தைச் சார்ந்தும் வாழ்ந்தார்கள். தமிழில் உள்ள மணிமேகலை, குண்டலகேசி போன்ற காப்பியங்கள் இதற்கான சான்றுகள் ஆகும். ஆனால், கௌதம புத்தரின் போதனைகளுக்கு எதிராக, பௌத்த தர்மத்துக்கு முற்றிலும் விரோதமாக, கௌதம புத்தரையே இழிவுபடுத்துவதுபோன்று தமிழர்களை ஆக்கிரமிக்கும் ஒரு கருவியாக பௌத்தத்தைப் பயன்படுத்துவதையே தமிழ் மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அண்மையில், நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தபோது ஈழத்தின் களநிலையை என்னால் உணர முடிந்தது. யுத்தத்தின்போது நேரடியாகவே இனவழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்கள், இப்போதும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிடப்பட்ட வகையில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது. எனவே, புதிய அரசமைப்பில் தமிழர்களுக்கான இறைமையுடன் கூடிய ‘சமஷ்டியை’ உறுதி செய்வதே இத்தகைய ஆக்கிரமிப்புகளிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் அவர்களை விடுதலை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453295
  14. ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் நடாளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன் ஞா.ஸ்ரீநேசன் எஸ் ஸ்ரீதரன் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் அரசியல்தீர்வு மாகாண சபை தேர்தல் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் ஆட்சிப்பொறுப்பெடுத்து ஆண்டொன்று நிறைவடைந்தும் நிறைவேற்றப்படாதிருக்கும் நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தனது மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்திருந்தது. அதனையடுத்து தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை குறித்து நேரடியாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றை கடந்த செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் அனுப்பியிருந்தனர்.அதேநேரம், சிவஞானம் சிறிதரனும், இராசமாணிக்கம் சாணக்கினும் ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே இன்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது . https://athavannews.com/2025/1453284
  15. நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி! ஸ்ரீலங்கா பொதுஜனர பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, 2009 ஆம் ஆண்டில் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் இருப்பினும் அவர் சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ இங்கிலாந்தில் இருந்து சட்டப் பட்டம் பெற்ற விதம், அவரது சான்றிதழ் மற்றும் சட்டக் கல்லூரியில் இணைவது தொடர்பான தகவல்கள் பல வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார். அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட பட்டம், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட சட்ட பட்டம் மற்றும் அதன் சான்றிதழ் பற்றி சமூக ஊடகங்களில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் புலனாய்வு ஊடகவியலாளரான நிர்மலா கண்ணங்கர இந்த விடயம் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டன் நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும் சட்ட பட்ட சான்றிதழை , முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பட்டப்பின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டனில் பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று சுய அடிப்படையில் பதவி விலகியுள்ளார். இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு உள்நுழைவதாயின் போட்டிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை பெற்றிருக்க வேண்டும். சிடி யுனிவர்சிடி ஒப் லன்டண் நிறுவனம் 2009.10.15 ஆம் திகதி தான் இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக்கல்வியை தொடர்வதற்கு 2009.09.25 ஆம் திகதி விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்த திகதியன்றே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவரது சட்ட பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. எனவே, நாடளுமன்றத்தின் கௌரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://athavannews.com/2025/1453262
  16. சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு! மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு! 16 .11.2025 ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புப் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கத்துடன் சுடர்,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நிகழ்வுகளாக வணக்கப்பாடல்கள், கவிவணக்கம், நினைவுரை, எழுச்சி நடனங்கள் போன்றன இடம்பெற்றன. சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் திரு:திருநிலவன் அவர்கள் ஆற்றினார்.
நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி கையேற்றப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு, எமுது தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. https://athavannews.com/2025/1453299
  17. தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு! தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1453164
  18. ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை! தெற்கு ஜப்பானிய கடலோர நகரமான ஒரு பகுதியில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் எரிந்தும் இன்னும் முழுமையாக அணையவில்லை என்று தேசிய தீயணைப்பு நிறுவனம் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது. டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 770 கிமீ (478 மைல்) தொலைவில் உள்ள ஒய்டா நகரின் சாகனோசெக்கி மாவட்டத்தில் சுமார் 175 குடியிருப்பாளர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5:40 மணியளவில் (0840 GMT) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரகால தங்குமிடத்திற்கு ஓடிவிட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1453180

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.