Everything posted by தமிழ் சிறி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
😂 🤣
-
கருத்து படங்கள்
- அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர
- வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை! வர்த்தமானி வெளியீடு!
@குமாரசாமி மைண்ட் வாய்ஸ் : 109 ரூபாய்க்கு, ஒரு போத்தில் கள்ளு கூட வாங்க முடியாதே...- வடக்கு, கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது! -நாமல் ராஜபக்ச.-
வடக்கு, கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது! -நாமல் ராஜபக்ச.- ”வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார். பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது” ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை. மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. வடக்கு கிழக்கையும் இணைக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாடு பிளவடையும் எனவே இந்த நாட்டை பிரிக்க நான் அனுமதிக்கமாட்டேன். வெளிப்படையாக அதனையே கூறுகிறேன். 2015ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி நிறுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்தது நல்லாட்சி அரசாங்கம். எனவே எங்கு நாட்டில் வளர்ச்சி தடைப்பட்டதோ அங்கிருந்து எனது பயணத்தை ஆரம்பிப்பேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எமது பொறுப்பு” இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396492- அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்!
அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்! “எதிர்வரும் ஆண்டு முதல் அரச பணியாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக” நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் தேர்தல் பிரசார பணிகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் போது அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அவர்கள் முன்னிலையாகவில்லை.ஆனால் ஜனாதிபதி பாதகம் ஏற்படாதவாறு பொருளாதார அபிவிருத்தி நோக்கிய பயணத்திற்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளார். கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று அதன்நன்மைகளை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அரச பணியாளர்களின் சம்பளத்தை அடுத்த ஆண்டு முதல் 25 ஆயிரம் ரூபாவாக கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சிறந்த பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே எம்மால் அதனை செய்யமுடிந்தது. அநுரவாலும் சஜித்தாலும் இதனை செய்யமுடியுமா என நான் கேட்கின்றேன். அரச ஊழியர்களின் சம்பளத்தை அவர்களால் இந்த அளவு அதிகரிக்க முடியுமா? வாழ்க்கை செலவினை அதிகரிப்பது எமது நோக்கமல்ல. நாம் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்கமாட்டோம். தேர்தலை இலக்காக கொண்டு நாம் அதனை செய்யவில்லை. நடைமுறையில் செயற்படுத்த இயலுமான விடயங்களையே நாம் கூறுவோம்.அடுத்த ஆண்டு வருமான வரி விலக்குவழங்குவதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகவே எதிர்வரும் தேர்தல் இடம்பெறவுள்ளது. இது தனிநபர் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதல்ல . நாட்டை நெருக்கடிக்கு இட்டுச்செல்லாமல் அபிவிருத்திபாதைக்கு இட்டுச் செல்வதற்கான பயணமாகவே புதிய ஆட்சி அமைய வேண்டும் நெருக்கடியை கண்டு ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதியாகும் கனவில் உள்ளனர்” இவ்வாறு ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396436- வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை! வர்த்தமானி வெளியீடு!
வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை! வர்த்தமானி வெளியீடு! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்வது சட்டவிரோத செயல் என்றும் இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396461- நான் சிலிண்டரைத் தெரிவு செய்தமைக்கு காரணம் இதுதான்!
நான் சிலிண்டரைத் தெரிவு செய்தமைக்கு காரணம் இதுதான்! ”Ask Ranil” நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தார். அந்தவகையில் ” இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்துள்ளீர்கள் ‘யானை’ இல்லாமல் ‘சிலிண்டர்’ தெரிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன?” என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க ”இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன். கட்சி சாராமல் செயற்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசியல் ரீதியாக புதிதாக சிந்திக்க வேண்டும். பல குழுக்களுடன் இணைந்து செயற்பட்டதால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன். சுயேட்சை வேட்பாளர் எந்த சின்னத்தையும் தேர்வு செய்யலாம். இந்த தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானதாகும். அதனால் தான் சிலிண்டரைத் தெரிவு செய்தேன்” இவ்வாறு தெரிவித்திருந்தார். https://athavannews.com/2024/1396471- பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள் அழைப்பு!
பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள் அழைப்பு! கடந்த 2018 ஆம் ஆண்டு 52 நாள் ஆட்சி கவிழப்பு சூழ்ச்சியின்போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அதனை நிராகரித்திருந்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று மாலை மீரிகம நகரில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றுவதில்லை. 2018 ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின் போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அந்த அழைப்பை நான் நிராகரித்திருந்தேன். அந்தப் பிரதமர் பதவிக்காக மக்கள் எனக்கு வாக்கு அளிக்கவில்லை. எனவே சந்தர்ப்பவாத பெருச்சாளித்தன அரசியலை மேம்படுத்தி பதவிகளின் பின்னால் செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. அந்தக் கொள்கையினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை பொறுப்பேற்க்குமாறு கூறிய போதும் அதனை நான் நிராகரித்தேன். அவ்வாறு அந்த சந்தர்ப்பத்தில் சென்று இருந்தால் இந்த நாட்டை சூறையாடி, வளங்களையும் பணத்தையும் திருடிய திருடர்களின் ஒன்றாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். திருடர்களை பாதுகாக்கின்ற வாசல் காவலாளியாகவும் இருந்திருப்பேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புகளின் ஊடாகவும் பணத்துக்காகவும் சோரம் போவதற்கு நான் தயார் இல்லை. எந்த ஒரு பிரபலமான பதவியாக இருந்தாலும் எவ்வாறான முன்மொழிவுகளை முன் வைத்தாலும் பொதுமக்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து விலகி செயல்படபோவதில்லை. சஜித் பிரேமதாச ஆகிய என்னையும் எனது குழுவையும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது. முழு நாடும், மலை போல் இருக்கும் கடனுக்குள் சிக்கி இருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் சுருங்கி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள 220 இலட்சம் மக்களை அந்தத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து அவர்களை வளப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரித்துள்ளார். https://athavannews.com/2024/1396479- காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
நாகப்பட்டினம் -காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் புதிய அறிவிப்பு! நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது இதற்கமைய, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும். https://athavannews.com/2024/1396486- தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம்: வெனிசுலாவில் பதற்றம்
ஈழப்பிரியன்... அவர்கள், குழப்படி ஆட்களா?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர
சிங்களவர்களில் கை வைக்க மாட்டார்கள். ஒரு பேச்சுக்கு சொன்னாலும், விழுகின்ற வாக்கும் புட்டுக் கொண்டு போகும் என்று அவருக்கு தெரியும்.- வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
அனுதாப ஓட்டு எடுக்க முயற்சி பண்ணுகின்றார். அவர் மறியலில்… கையில் தட்டும், அரைக் கால்சாட்டையுடன் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்ற போது வராத அனுதாபம் இதுக்கா வரப் போகுது. 😂- உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
முதலில் இந்தப் படத்தைப் பார்த்தபோது இதன் அர்த்தம் புரியவில்லை... ஒரு சிறிய துவாரத்தில் பாம்பின் வால் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை ஒரு பூனை பார்ப்பதாகவும், அது எலியின் வால் என்று நினைத்துக்கொண்டு வெளியே வரும் வரை அந்த வாலை இழுக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது... . பிறகுதான் புரிந்தது... இந்த புகைப்படம் இத்தாலியின் பிரபல ஓவியர் மார்கோ மெல்கிராட்டியின் படைப்பு, அவரது ஓவியத்தின் பொருள்: "யாருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியாமல், அபாயத்தை தொடுகிறீர்கள், ஏனென்றால் அறியாமை, பணத்தை நோக்கிய தேடல், விரைவான தீர்வுகளை நாடுதல், பொறுமையின்மை போன்ற குணங்களால் இன்று நாம் சூழப்பட்டுள்ளோம்." இன்றைய வேகமான மற்றும் பிஸியான வாழ்க்கையில், நாம் காண்பது உண்மையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே.... நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ?? சுகாதார நிலைமைகளை, நமது ஆரோக்கியத்தை எலியின் வால் என்று நாம் கருதுகிறோம் & சுவருக்குப் பின்னால் இருப்பது உண்மையான நாகப்பாம்பு என்று ஒருபோதும் யூகிக்க மாட்டோம். எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் உடல்நிலையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். நாகப்பாம்பின் வாலை எலி வாலாகக் கருதி விளையாட்டாக இருக்காதீர்கள். எப்போதுமே, வாழ்க்கை முக்கியமானது, ஆரோக்கியம் அதைவிட முக்கியமானது. இந்தப் படத்தை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் முழு படத்தையும் பார்க்க முடியாது. முழுப் படத்தையும் பார்க்க முடிந்தால், நாம் சிறியது என்று நினைப்பது உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். எனவே உங்கள் உடல்நிலையை கவனித்து ஆரோக்கியமாக இருங்கள். Usha Ravikumar- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்
அத்துடன்...கோவிலுக்கு, கறுப்புக் கண்ணாடியும் போட்டுக் கொண்டு வந்திருக்குது.- அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர
அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர நான் தேர்தலில் வெற்றிபெற்றால், மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அனுராதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ரணில் விக்கிரமசிங்க என்னை அவமதித்து பேசினார். அநுர இதற்கு பதிலளியுங்கள் என ரணில் கூறும் பொழுது அவரது வார்த்தை தவறியதை அனைவரும் அவதானித்திருந்தனர். மேலும் நாங்கள் அவரை அவமதிக்க விரும்பவில்லை. தேசிய மக்கள் சக்தியில் இருந்து இந்த நாட்டை ஆள்வதற்கு யார் இருக்கின்றனர் என ரணில் உட்பட அனைவரும் கேட்கின்றனர். ஏனைய கட்சிகளிலும் யார் இருக்கின்றனர்? நான் ஒரு பதில் தருகிறேன். மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள, சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற அர்ஜுன மகேந்திரா இலங்கைக்கு அழைத்து வரப்படுவார். மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தான் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு ஆலோசனை வழங்கியதாக கோப் குழுவிடம் அர்ஜூன மகேந்திர பதில் அளித்தார். அர்ஜுனன் மகேந்திரனை அழைத்து வருவதே எனது முக்கிய வேலை. இதை வாய்வார்த்தையில் கூறாது செயலில் காண்பிக்க விரும்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396387- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தல்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தல்! இந்தியா – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அடுத்த மாதம் 3 ஆம், 10 ஆம் மற்றும் அக்டோபர் முதலாம் திகதி என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அக்டோபர் 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளதுடன், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட போவதாக பாஜக அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1396362- தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம்: வெனிசுலாவில் பதற்றம்
தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம்: வெனிசுலாவில் பதற்றம். வெனிசுலாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வெனிசுலா தலைநகரில் அதிகளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் சர்ச்சைக்குரிய வெற்றிக்கு எதிராக வெனிசுலா முழுவதும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மக்களுடன் இணைந்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களுடன் இணைந்து போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் வெனிசுலா தலைநகரில் இருந்து வெளியேறப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டுள்ளார். மக்களை திரட்டி நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள மதுரோவின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொலிஸாரும் இராணுவமும் சம்பவ இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் வெனிசுலாவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற நிலையில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் 51.02 வீத வாக்குகளை மதுரோ பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளர் 44.02 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. எனினும் வாக்குகளை எண்ணுவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருந்தது. மேலும் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்காத நிலையில் மதுரோவுக்கு ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396391- கருத்து படங்கள்
- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்! தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டை அடி பாதாளத்துக்குள் தள்ளிய ராஜபக்ஷாகளுக்கு பிரதான பாதுகாவலராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருந்து வருகிறார். நான் இந்த ஜனாதிபதி கதிரைக்கு மக்களின் வாக்குகளாலே தெரிவு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் உரிமையாளராக அன்றி தற்காலிக பொறுப்பாளராக பொது மக்களின் சேவகனாக இருந்து திருடர்களால் திருடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பேன்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396322- விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்
வந்தவர்களும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாத ஊத்தைவாளிகள் தானே.- இரசித்த.... புகைப்படங்கள்.
யாராய் இருக்கும். சில வேளை நம்ம @வீரப் பையன்26 கிரிக்கெட் பார்க்கிறாரோ… 😂 - அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.