Everything posted by தமிழ் சிறி
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு! நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் குஷ்புவின் இராஜினாமாக் கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் குஷ்பு, தி.மு.கவில் இணைந்து பணியாற்றினார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும் குஷ்புவிற்கு பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து குஷ்பு சிக்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395828
-
”முதல்வர் மருந்தகம்” திட்டம் இன்று முதல் ஆரம்பம் – 1000 மருந்தகங்கள் – 3 இலட்சம் மானியம்
”முதல்வர் மருந்தகம்” திட்டம் இன்று முதல் ஆரம்பம் – 1000 மருந்தகங்கள் – 3 இலட்சம் மானியம். சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வருகை தந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா வரவேற்றார். பின்னர் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். குறித்த உரையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிமுகப்படுத்தினார். பொதுப்பெயர் வகை மருந்துகள் (Generic Medicines) மற்றும் பிற மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அவர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இதைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1395838
-
78 வது சுதந்திர தினம் – வளர்ந்த பாரதம் எனும் கருப்பொருளில் கோலாகல கொண்டாட்டம்
78 வது சுதந்திர தினம் – வளர்ந்த பாரதம் எனும் கருப்பொருளில் கோலாகல கொண்டாட்டம். ஜனநாயக இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இந்தியாவை பிரித்தானியர்கள் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பிறகு 78 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் முதல் தேசியக் கொடியை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார். அன்றிருந்து வருடந்தோறும் ஒகஸ்ட் 15 ஆம் திகதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதற்கமைய , இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, கொண்டாட்டங்கள் ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் நடைபெறுகின்றன. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இது அவரது 11 வது சுதந்திர தின உரையாகும். உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என குறித்த உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை நிகழ்த்தியுள்ளார். அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2024/1395781
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இந்துக்களுக்கு எதிரான வன்முறை: கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! “பங்களாதேஷில் மேற்கொள்ளப்பட்ட இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யுனஸ் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனஸ், இந்து ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளார். பங்களாதேஷ் கலவரத்தின்போது வன்முறையாளர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கியதில், இந்து மதஸ்தலங்கள், இந்துக்களின் வீடுகள், வணிக வளாகங்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஷசீனா பதவி விலகியது முதல் பங்களாதேஷில் சிறுபான்மையின மக்கள் மீது 205 தாக்குல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், டாக்காவிலுள்ள தாகேஸ்வரி ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார். இதனையடுத்து இந்து அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் 17 கோடி மக்கள் தொகையில், 8 வீதம் பேர் இந்துக்கள் என்ற நிலையில், அவர்கள் பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் என கருதியே கலவரக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள முகமது யூனுஸ், அனைவரும் சம உரிமைகளை கொண்ட மக்கள் என்றும் மக்களுக்குள் வேறுபாடுகளை உருவாக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் சிதைந்ததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் அவை சரி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். https://athavannews.com/2024/1395634
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
சனம் இவரை கழுவி ஊற்றுவது தெரியாமல், அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார். கடைசியாக தமிழரசு கட்சிக்குள் வந்த சுமந்திரன் தான்… ஓட்டகத்துக்கு ஒதுங்க இடம் கொடுத்த கதையாக, வீட்டை… பிரித்து மேய்ந்து கொண்டு இருக்கிறார். ஒன்றை ஆக்குவது கடினம். அழிப்பது வெகு சுலபம். இந்தக் கூத்துகள்… தமிழ் மக்களை மேலும் பின்னோக்கியே தள்ளும். இது புரியாமல்…. விசர் கூத்து ஆடிக் கொண்டு இருக்கின்றார்.
-
அபிவிருத்தி என்றால் என்ன?
காணி அதிகாரம் தந்தால்… தொல் பொருள் திணைக்களத்தை வைத்து, எப்படி புது விகாரைகளை கட்டுவது. கட்டிய விகாரையை பாதுகாக்க பொலிஸ் அதிகாரம் அவர்களுக்கு வேண்டும்.
-
வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இரும்புக் கம்பியால் அடித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்!
“Hindu Tamil“ நல்லாய் இரு நாட்டு தமிழ் மீனவர்களையும் கோத்து விடுகின்றது. எல்லை தாண்டி வரும் மீனவர்களை கண்காணிக்க இலங்கை கடற்படை உள்ள போது.. இலங்கை தமிழ் மீனவர்களை, வேண்டும் என்றே இதற்குள் இழுப்பது போலுள்ளது. முதலில்… “ஹிண்டு தமிழ்” எல்லை தாண்டி மீன் பிடிப்பது குற்றம் என்று ஒரு கட்டுரை எழுதி… அங்குள்ள மீனவர் கண்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சுமந்திரன் விட்ட “றீல்” அப்பிடி. 😂
-
அபிவிருத்தி என்றால் என்ன?
அபிவிருத்தி என்றால் என்ன? எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை. உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி அடைய முடியும் என சிலர் நம்புகிறார்கள்? றோட்டு போடுவது, சிலருக்கு வேலை வாய்ப்பு பெறுவதுதான் அபிவிருத்தி என்றால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இவை எல்லாம் கிடைத்தனவே. பேசாமல் அவர்களின் கீழ் அடிமையாக இருந்திருக்கலாமே? அபிவிருத்தி முக்கியமே. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகாரம் வேண்டும். எனவே அதிகாரப் பரவலாக்கம் செய்யாதவரை தமிழ் பிரதேசம் ஒருபோதும் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. 1948வரை ஆங்கிலேயர் மட்டுமே எம்மை ஆக்கிரமித்து சுரண்டினார்கள். இப்போது வடக்கு கிழக்கில் இந்தியா சுரண்டுகிறது. தெற்கில் சீனா சுரண்டுகிறது. இதற்கிடையில் தன்னுடன் ஒப்பந்தம் செய் என்று அமெரிக்கா மிரட்டுகிறது. கடன் சுமையோ வருடா வருடம் அதிகரிக்கிறது. பெற்ற கடனுக்குரிய வட்டியைக் கட்டுவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசு இருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்தால் அபிவிருத்தி அடைய முடியும் என பதவி வெறி பிடித்த சுயநலவாதிகளைவிட வேறு யார் நினைப்பார்கள்? தோழர் பாலன்
-
பனிக்கரடி தாக்கி ஆர்க்டிக் ரேடார் தளத்தின் ஊழியர் உயிரிழப்பு
நம் ஊரில்.. யானை தாக்கி மரணம் என்ற மாதிரி... அவங்க ஊரிலை, பனிக்கரடி. 😂 விலங்குகளின் வாழ்விடத்திற்குள் போய் நின்று கொண்டு, அது தாக்குது என்றால்... என்ன நியாயம் சார் இது. 🤣
-
சிரிக்கலாம் வாங்க
நான்.. மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள்... மாம்பழம் வேண்டும் என்றாள். 😂
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அரசியலமைப்பில் திருத்தம் செய்வது என்றால்... மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ரணில் வெற்றி பெற வேண்டும் என்பது, சுமந்திரனுக்கு தெரியாமல் இருப்பது, ஆச்சரியமாக உள்ளது. 😂 இல்லாவிடில்... தெரிந்து செய்யும் சுத்துமாத்தில் இதுவும் ஒன்றா... 🤣
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
ஆஹா... இது, புது பழமொழியாய் இருக்கு. வேறு ஒரு காட்டு விலங்கின் பெயரைத்தான் சொல்வார்கள். 😂 ஓஹோ.... உங்களுக்கு, அந்தக் காட்டு விலங்கின் பெயரை, இவருடன் ஒப்பிட விருப்பம் இல்லை, என்னும் நல்ல மனதை புரிந்து கொள்கின்றேன். 🤣
-
யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும் - ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை
ஆனந்த சங்கரியால் முடக்கப் பட்ட உதயசூரியன் சின்னம் போல், தமிழரசு கட்சியின் வீட்டு சின்னமும்... விரைவில் ஒருவரால் முடக்கப்படும். யதார்த்த அரசியலை புரியாது, மறுத்தான் அரசியல் செய்து கொண்டிருக்கும் சைக்கிள் சின்னமும் விரைவில் காணாமல் போகும். முதலில்... 🏡 வீடு காணாமல் போன பின்தான்... 🚲 சைக்கிள் காணாமல் போகும். ஏனெனில்.. வீட்டை ஏலம் போட, ஒருத்தர் தீயாய் வேலை செய்கிறார். 😂
-
இந்தியாவிடம் இருந்து அண்டை நாடுகள் விலகிச் செல்கின்றனவா? என்ன காரணம்?
இந்தியாவின்... ஊத்தைவாளி வெளியுறவுக் கொள்கைதான் காரணம். ஊரில் உள்ள அரை லூசனுகள் எல்லாம், அங்கைதான் இருக்கிறாங்கள்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
எலான் மஸ்குக்கு... இருக்கின்ற தொழில் காணாது என்று, இங்கையும் வந்து, மற்றவனின் பிழைப்பில் மண் அள்ளிப் போடப் பார்க்கிறா(ன்)ர். 😂
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
எப்படியோ.... தமிழரசு கட்சி, இரண்டாக பிரியத்தான் போகின்றது. அதற்கு... அத்திவாரம் போட்டது சம்பந்தனும், சுமந்திரனும். 😎 நேற்று நடந்த கூட்டத்தில் கூட குழப்பம் விளைவித்தது, சுமந்திரனின்.. அல்லக்கைகள் என செய்தியில் கூறப்பட்டுள்ளது. 😡 இனியும் சுமந்திரனை தமிழரசு கட்சியில் வைத்திருந்து கொண்டு தினமும்... ஒவ்வொரு பிரச்சினைகளை சகித்துக் கொண்டு இருப்பதை விட... கௌரவமாக... அவரை கட்சியில் இருந்து விடுவிப்பதே, சரியான அணுகு முறையாக இருக்கும். 😂
-
ஜம்மு காஷ்மீரில் பதற்றம்! இராணுவ அதிகாரி படுகொலை!
ஜம்மு காஷ்மீரில் பதற்றம்! இராணுவ அதிகாரி படுகொலை! ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று காலை இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த இராணுவ அதிகாரியைப் படுகொலை செய்த 4 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாகத் தேடிவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1395697
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
சித்தப்பா... இதிலை எங்கை Sign வைக்கிறது. 😂 🤣
-
கருத்து படங்கள்
- நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்!
- ஜனாதிபதித் தேர்தல் – ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமைச்சர் பவித்ரா ஆதரவு!
- கனடாவில் இந்துக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடிய ஏனைய மதத்தவர்கள்!
கனடாவில் இந்துக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடிய ஏனைய மதத்தவர்கள்! பங்களாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் நடைபெற்ற போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர். கடந்த வாரத்தில் பங்களாதேசில் மாணவர்கள் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் குறித்த மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்துக்களின் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. பங்களாதேசில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலகில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கனடாவில் டோரோன்டோவில் இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர் . இந்த போராட்டத்தில் இந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் என பல்வேறு மதத்தினரும் இணைந்து பங்கேற்றுள்ளனர். இதேவேளை பங்களாதேசில் உள்ள இந்துக்களை காப்பாற்ற அந்நாட்டு இடைக்கால அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கனடா அரசு உயர் அதிகாரிகளிடம் மனு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395581- நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்!
தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்திற்கான வர்த்தமானி வெளியீடு! தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1,350 என்றும், குறித்த சம்பளம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியக் கொடுப்பனவுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக உற்பத்தித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகையாக 350 ரூபா வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுகள் தொடர்பிலான ஆட்சேபனைகள் மற்றும் ஆட்சேபனைக்கான காரணங்களின் அறிக்கையுடன் எதிர்வரும் 28ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் தமக்கு அனுப்பி வைக்குமாறும் சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1395590- செஞ்சோலை நினைவுகள் - நேசிப்புக்குரிய குழந்தைகள்
ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட... செஞ்சோலை குழந்தைகளுக்கு, நினைவு வணக்கங்கள். 🙏 - நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.