Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. படைப்பாளிகளுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் – தீபச்செல்வன் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கடிதம்! இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவு வெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறு யுனஸ்கோ மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் ஆகியோருக்கு இலங்கை எழுத்தாளர் தீபச்செல்வன் கடிதங்களை எழுதியுள்ளார். இக் கடிதங்களின் பிரதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஆகியோரிடம் கையளித்தார். குறித்த கடிதத்தில் அவா் மேலும் தொிவித்துள்ளதாவது, “நான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளன். கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட நான், போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகக் கல்வியை முடித்து தற்போது ஒரு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். போர் நடைபெற்ற காலத்தில் அதன் விளைவாக நான் ஒரு எழுத்தாளனாக வெளிப்பட்டேன். போரின் துயரங்களையும் போரில் என்னைச் சார்ந்த சமூகம் எதிர்கொள்ளும் உரிமை மறுப்புக்களையும் எழுத உந்தப்பட்டேன். புகழ், வருமானம் போன்ற நோக்கங்கள் இல்லாமல் மனித உயிர்கள் அழிக்கப்பட்டும் எனது தேசத்தில் இல்லாமல் ஆக்கப்படுபவர்களின் மனசாட்சியாய் இறுதிக்குரலாய் என் எழுத்துகள் வெளிப்பட்டன. “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை“ என்பது 2008ஆம் ஆண்டில் வெளியான என் முதல் கவிதை நூல். உரிமைக்கான போராட்டத்தில் தன் பிள்ளையை இழந்த தாய் அவன் நினைவுகளுக்காக முன்னெடுக்கும் வாழ்வையும் போராட்டத்தையும் பேசுவது நடுகல் என்ற என் முதல் நாவல். போரில் தாய் தந்தையை இழந்து தப்பும் ஒரு குழந்தை எந்தச் சூழலிலும் கல்வியைக் கைவிடாது பல்கலைக்கழகம் சென்று அங்கு மாணவத் தலைவராகிய நிலையில் அரச படைகளால் அவன் கொல்லப்படும் கதையைப் பேசுவது பயங்கரவாதி என்ற என் இரண்டாவது நாவல். பயங்கரவாதி என்ற எனது இரண்டாவது நாவல், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்கிறதா என்ற கோணத்தில் இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்னிடம் கடந்த ஜூன் மாதம் விசாரணையை மேற்கொண்டது. சுமார் இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதற்கு முன்பு நான் தலைமை தாங்கி நடாத்திய ஒரு புத்தக வெளியீட்டிற்காகவும் மூன்று மணிநேரம் விசாரணையை பயங்கரவாத தடுப்ப்ப் பிரிவு மேற்கொண்டது. என் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையானவையா? பிரதான கதாபாத்திரமாக வரும் மாறன் என்பவர் யார்? அவர் எங்குள்ளார் என விசாரணை நடாத்தப்பட்டது. இலங்கையில் கடந்த காலத்தில் பல எழுத்தாளர்கள்இ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தின் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை என்னையும் என் குடும்பத்தினரையும் மாத்திரமின்றி என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடந்த மேலாதிக்கத்திற்கான போர் மற்றும் உரிமைக்கான போராட்டத்தில் சந்தித்த இழப்புக்கள், தியாகங்கள், அனுபவங்கள் குறித்து இலக்கியங்கள் எழுதுவது இந்த தீவின் எதிர்கால அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் அவசியமானது. உலகின் எந்தவொரு தேசத்திலும் எழும் படைப்புக்களும் இலக்கியங்களும் உலக மக்கள் அனைவருக்குமான அறிவு மற்றும் படைப்பாக்கச் சொத்தாகும். அந்த வகையில் வரலாற்றினதும் கடந்த கால கசப்பக்களினதும் விளைவாக எழும் இலக்கியங்களை தடுக்க முற்படுவது அறிவுவெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையுமாகும். பொருளாதார நெருக்கடி போன்ற சூழலிலும் தமிழ் சிறுபான்மை எழுத்தாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இத்தகைய செயற்பாடுகளை தடுக்க தாங்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கைத் தீவின் கலாசார பண்பாட்டு மற்றும் படைப்புக்கள்மீது மிகுந்த மதிப்பும் கரிசனையும் கொண்டுள்ள தங்களின் கவனம் இலங்கைத் தீவில் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதுடன் தமிழ் பேசும் மக்களின் இருப்பையும் சுதந்திரத்தையும் காத்து நிற்கும் என்றும் எதிர்பார்த்து வேண்டி நிற்கின்றேன்” என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396097
  2. சும்மா சொல்லாதீங்க, பாஸ். 😂 குஸ்பு... பார்க்காத புலனாய்வு பிரிவா.... 🤣 நீங்கள்... வர இருக்கும் இந்தியாவின், கனடா தூதுவருக்கே... கோயில் கட்டி, கும்பாபிசேகம் செய்யிற பிளான் போலை இருக்கு. 😂 குஸ்பு.. அங்கை வரக் கூடிய சாத்தியக் கூறுகள், அதிகமாக இருக்கின்ற படியால்... இப்பவே... கோவில் கட்ட, காணி வாங்கிறதுக்கு... காசை சேர்க்க ஆரம்பியுங்கோ... 🤣 குஸ்பு... கனடாவுக்கு வந்தால், பழக்க தோசத்திலை... "இடுப்பை கிள்ளுற" வேலை எல்லாம் செய்யக் கூடாது. பிறகு.. தூதுவரின் இடுப்பை கிள்ளினது என்று, கொட்டை எழுத்தில் செய்தி வந்திடும்.
  3. கனடாவை… ஶ்ரீலங்கா, நல்லாய் வெருட்டிப் போட்டுது. இனியும் கனடா பிரதமரை… பொங்கல் விழாவுக்கு வேட்டி கட்டவும், கொத்து ரொட்டி சாப்பிடவும் கூப்பிடுவீங்களா… 😂
  4. ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய இலங்கையின் முக்கிய துடுபாட்ட வீரர். கடந்த எல்.பி.எல். போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில். எதிர்காலத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து பயன்பாடு ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான இவ்வாறான அறிக்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாக திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/trapped-in-doping-niroshan-digwell-1723812072
  5. சிறந்த இணையத்தளத்துக்கான விருதினைத் தனதாக்கிய Vigo.lk lk domain Registry 2024 ஆம் ஆண்டிற்கான BestWeb.lk விருது வழங்கும் விழாவில் Vigo.lk இணையத்தளமும் விருது ஒன்றை தன்வசப்படுத்தியது. Cinnamon Grand ஹொட்டலில் 14ஆம் திகதி (14.08.2024) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அதன் நிறுவுநர் சபாநாயகம் விதுசகன் விருதினை பெற்றுக்கொண்டார். இதன்படி, Fashion and Lifestyle பிரிவில் இலங்கையின் மிகச்சிறந்த இணையத்தளத்துக்கான விருது Vigo.lk இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவின் கீழ் பல இணையத்தளங்கள் போட்டியிட்ட போதும் முதலாம் கட்டமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்களின் அதிக வாக்குகளை Vigo.lk பெற்றிருந்தது. இதனையடுத்து, சுயாதீன நடுவர்களால் இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்பட்டு அதில் அதிகபடியான புள்ளிகளை பெற்று Vigo.lk இணையம் மகுடம் சூடியது. கிழக்கு மாகாண மட்டக்களப்பில் இருந்து நாடுபூராகவும் இயங்கும் ஓர் வியாபார இணையத்தளமானது இவ் விருதினைப் பெற்றுக் கொள்வது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது. விருதினை பெற்றுக்கொண்ட Vigo.lk நிறுவுநர் விதுசகன் கருத்து தெரிவிக்கையில்” எமது இணையத்தளம் ஊடாக உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகின்றோம். எமது Vigo.lk இணையத்தளத்தின் மூலம் நவீன விற்பனை செய்யும் அனைத்து ஆடைவகைகளும் எமது தனித்துவமான ஆடை வடிவமைப்பில் முழுவதுமாக தேர்ச்சி பெற்ற வடிவமைப்பாளர்களைக் கொண்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம். மட்டக்களப்பை மையமாக கொண்டு இலங்கை மாத்திரமின்றி உலகலாவிய ரீதியில் எமது சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் தலைநகரில் எமது நிறுவனத்தின் காட்சியறையினைத் திறந்து வைப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். குறுகிய காலத்தில் எங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை மக்கள் தந்து இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த விருதே சான்றாகவுள்ளது. எமக்கு இந்த விருது கிடைப்பதற்கு பல்வேறு வழிகளில் உதவிய அனைத்து நல்உள்ளங்களுங்கும் நன்றி” என அவா் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1395994
  6. உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் இலங்கை இராணுவத்தினர் 05 பேர் கைது! ரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேவேளை உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1396119
  7. குஸ்பு, செய்த சேவைக்கு... அவரை ஒரு மாநிலத்தின் ஆளுநராகவோ, அல்லது... வெளி நாட்டு தூதுவராகவோ, பா.ஜ. க. அரசு நியமிக்க வேண்டும். அண்ணாமலை சார்... இந்த விஷயத்தை, மோடி ஜீ காதில் போட்டு விட வேண்டும்.
  8. அடேங்கப்பா… என்ன மாதிரி எல்லாம் முடிச்சு போடுகிறார்கள். 😂
  9. பெடியனுக்கு…. ஜட்டியில் இவ்வளவு காதல் இருப்பதை பார்த்தால், பக்கத்து வீட்டுக்காரர் கொடியில் காயப் போடும்… ஜட்டியையும் அபேஸ் பண்ணி விடுவான் போலை கிடக்கு. 😂
  10. யாருடைய மண்ணில்… யாருக்கு, அஞ்சலி செலுத்துவது. 😡 இவர்களால் அந்த மண்ணில் வாழ்ந்த பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, இந்திய அரசு ஒரு கண்டனம், ஒரு அஞ்சலியாவது செலுத்தியதா? 😡 வந்திட்டாங்கள்… தாங்கள் ஒரு ஆட்கள் என்று… 😡
  11. நேற்று முன்தினம் பிறந்தநாளை கொண்டாடிய @குமாரசாமி அண்ணைக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதமாக வாழ்த்து தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். 🙏 நோய், நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்துகின்றோம்.
  12. தோ்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை – அமைச்சர் கீதா வருத்தம்! ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் கூட பெண்களுக்கு உரிய இடமும் சமமான இடமும் வழங்கப்பட வேண்டும் என கட்சித் தலைவர்கள் பெருமையுடன் கூறினாலும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டில் பெண் உரிமைகள் தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்களும் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும், இம்முறை பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது எனவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395964
  13. தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை – விக்கினேஸ்வரன் கவலை! தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா.அரியேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பொது வேட்பாளரான பா.அரியேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் சிந்திக்காமல் தமிழ் மக்கள் சார்பில் சிந்திக்க வேண்டும் என்பதுடன், இதற்கான கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களின் அடையாளமாக பா.அரியேந்திரனை 89 கட்சி தரப்பினர் தேர்ந்தெடுத்துள்ளார்கள் எனவும், இனி அவரை பற்றியோ, அவரின் கட்சி பற்றியோ பேசுவது அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றதாக வெளிப்படையாக தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு சிறுபான்மை தரப்பினர் இதனை தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே இவர்கள் தமது முரண்பாடுகளை விட்டு விட்டு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395961
  14. கடந்த 15 ஆண்டுகளில் திரு. ரணில் விக்ரமசிங்க 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார். திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான்.... நாவற்குழி சிங்கள குடியேற்றம் சட்ட பூர்வமாக்கப்பட்டது. வவுனியா வடக்கு கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்கள் சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றபட்டன. வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. மன்னார் முசலிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது. ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுர ஆக்கப்பட்டன. குறிப்பாக சிலோன் தியேட்டர்,டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது. கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது. நாயாறு கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது. ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது. கொக்குத்தொடுவாய்,புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் - முகத்துவாரம், சாலை ஆகிய 5 பல இடங்களில் பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர். சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 .இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50 இற்கு மேற்பட்ட பொலநறுவை, அம்பாறையை சேர்ந்த பண வசதி படைத்த சிங்கள விவசாயிகள் பண்ணைகள் அமைக்க காணி வழங்கப்பட்டது. மேற்படி திட்டமிட்டட் குடியேற்றங்களுக்கு மேலாக, இக் காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் பிக்குகளால் மிக பல ஆயிரக்கணக்கான நிலங்கள், விவசாய காணிகள், மேய்ச்சல் தரைகள், நீர் நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இப்போதும் சிலர் மீட்பராக சித்தரிக்கின்றார்கள். இனமொன்றின் குரல்
  15. ஜட்டியில்... ஒரு பட்டம். 😂 பெடியனுக்கு... என்ன, பிரச்சினையோ... யாரறிவார். 🤣
  16. பெண்களின் வாக்கு வங்கியை வைத்து அரசியல் செய்கின்றார்கள். இதனால்... மனித உழைப்பு எவ்வளவு வீணாகின்றது, அதனால் அரசுக்கு எவ்வளவு நட்டம் என்பதை முட்டாள் அரசியல்வாதிகள் சிந்திப்பதே இல்லை. அல்லது அதனைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லை என்றே நினைக்கின்றேன்.
  17. ஆண்களுக்கு... மாதவிடாய் பிரச்சினை இல்லையே. அவர்களுக்கு ஏன், லீவு கொடுக்க வேண்டும். தகுந்த காரணம் சொன்னால்... பாராளுமன்றத்தில் இதை கேட்டுப் பார்க்கலாம்.
  18. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு" - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.-
  19. மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – உடன் அமுலுக்கு வரும் சட்டம். ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது எனவும் குறிப்பிடடுள்ளார். அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் ஒடிசாவும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395924
  20. அதுதானே…. 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். இவருக்கு மட்டும் சங்கு கிடைத்தது, தற்செயலான செயலாக தெரியவில்லை.
  21. ஓ…. நீங்கள், அப்பிடியும் இருக்குமோ… என்று யோசிக்கின்றீர்களா. 😂 நான் கண்ட காட்சியை… மேலே என்னுடன் வசிக்கும் நண்பனிடம் அடுத்த நாள் சொல்ல, உடனே தன்னை எழுப்பி ஏன் சொல்லவில்லை என்று செல்லமாக கடிந்து கொண்டான். 🤣 உண்மை…. ஏற்கெனவே ஐரோப்பா ஆபத்தான கட்டத்தை நெருங்கி விட்டது. 🥺

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.