Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி, ஒலிம்பிக் போட்டி நடந்த அதே பாரிஸ் நகரில் இப்போது நடந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா எட்டுப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது. இது இந்தியா 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வென்ற மொத்தப் பதக்கங்களை விட அதிகம். அது மட்டுமல்ல, இப்போது பதக்கப் பட்டியலில் பதினைந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இது இன்னும் முன்னேறலாம். இந்தியா தனது 2024 ஒலிம்பிக்கை 71வது இடத்தில் நிறைவு செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நமது பிள்ளைகளை ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கிறார்களோ இல்லையோ இந்தப் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க நாம் ஊக்குவிக்க வேண்டும். அங்கே வலிக்கிறது, இங்கே வலிக்கிறது என்று சொல்லிவிட்டு சாதாரண உடற்பயிற்சிகளைக் கூட செய்யாமல் இருப்பவர்களுக்கு பாராலிம்பிக் வீரர்கள் மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள். ஏதேதோ பிரச்னைகள், அழுத்தங்கள் என்ற மனநிலையோடுதான் கால்களை மட்டுமே பயன்படுத்தி அம்பு எய்யும் ஷீத்தல் தேவியின் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் பயன்படுத்தி அம்பு எய்பவர்களோடு சரி சமமாகப் போட்டி போடும் ஷீத்தலின் வயது வெறும் பதினேழுதான். ஆனால் 10, 9 என்ற புள்ளிகளை விட குறைவாக ஒரு அம்பு கூட செல்லவில்லை. பாராலிம்பிக் இருபாலருக்குமான அம்பு எய்தும் போட்டியில் ஷீத்தல் வெண்கலம் வென்றாள். அந்த அறிவிப்பு வந்தபோது அனைவரும் மகிழ்ந்து கொண்டாட அவள் கண்கள் கலங்குகின்றன. துடைத்துக் கொள்ள நீளும் கைகள் இல்லை அவளுக்கு. கலங்கத் தொடங்கிவிட்ட என் கண்களை துடைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நானெல்லாம் பிரச்னை என்று சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவன் என்பதை ஷீத்தல் மட்டுமல்ல பாராலிம்பிக்கில் போட்டியிடும் ஒவ்வொரு வீரனும் வீராங்கனையும் எனக்கு உணர்த்தி விட்டார்கள். வீரம் என்பது முதலில் நம்மை வெல்வது. நம் மனம், உடல் தரும் தடங்கலைத் தாண்டி போட்டிக்கு வந்து நிற்பது. அதற்குப் பிறகுதான் வெற்றி தோல்வி எல்லாம். பாராலிம்பிக் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகிறது. தவறாமல் பாருங்கள். Shan Karuppusamy 03-09-24
  2. விசுகு... சரியாக சொன்னீர்கள். நாங்கள் செய்யவும் மாட்டம், செய்யுறவனையும்.. கேலியும், நையாண்டியும் சொல்லிக் கொண்டு இருப்பம்.
  3. பாரிஸ் பாரா ஒலிம்பிக் Badminton போட்டியில்... தமிழ் நாட்டை சேர்ந்த நித்திய ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே நடந்த Badminton போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி வெள்ளியும், மணிஷா வெண்கலமும் வென்றுள்ளனர். இம்முறை நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில்... பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் தமிழர்களுக்கு பாராட்டுக்கள். 🙂
  4. அட... இஸ்ரேலுக்கு கோவம் வந்திட்டுது. 😂 பிரித்தானியாவின் உள்நாட்டு அலுவலில் தலையிடும் அளவுக்கு, இஸ்ரேல் செல்லப் பிள்ளை எண்டால் பாருங்கோவன். 🤣 எல்லாம்... ஸ்ரீலங்காவிடம் பழகின பழக்கமாக இருக்கும். 😃
  5. தமிழ் கார்டியன்... tribute என்ற சொல்லை ஏன் பாவித்தது என்று தெரியவில்லை. இத்தாலிய மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யும் போது ஏற்பட்ட தவறாகவும் இருக்கலாம். நமக்கு... குழம்பு ருசியாக இருந்தால், சரிதானே.... 😂 🤣
  6. இந்த மீம்ஸை தயாரிப்பவர்கள்... முஸ்லீம்கள். நான் பார்த்த அளவில், அவர்களில் பெரும்பாலானோர்... ரணிலையும், அனுரவையும் ஆதரிக்கின்றார்கள். சஜித்தை ஆதரித்து வந்த மீம்ஸ் ஒன்றையும் இதுவரை காணவில்லை. நம்ம @தனிக்காட்டு ராஜாவும் (முனிவர்) மீம்ஸ் தயாரிக்கின்றார். மேலுள்ளது தனிக்காட்டு ராஜா தயாரித்தது.
  7. தெரியாத பேயை விட… தெரிஞ்ச பேய் நல்லது என நினைத்துள்ளார் போலுள்ளது. 😂
  8. யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் அமைக்கப்படும். - சஜித் பிரேமதாச.-
  9. பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார். ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத்தாலிக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். கணேசமூர்த்தி, ஈழத் தமிழ் பெற்றோருக்கு 1999 இல் ரோமில் பிறந்தார். பதினெட்டு வயதில், அவருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது, இது தசை பலவீனம் மற்றும் கால்கள் மற்றும் கைகளில் உள்ள உணர்ச்சி மாற்றங்களால் வகைப்படுத்தப்படுகிறது. வீழ்ச்சிக்குப் பிறகு 2019 இல் அவரது உடல்நிலை மோசமடைந்தது, ரோமில் உள்ள சாண்டா லூசியா மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவர் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார், அதற்கு முன் கள நிகழ்வுகளுக்குச் சென்றார். 2023 இல், அவர் ஷாட் புட் F55 மற்றும் வட்டு எறிதல் F54-55 பிரிவுகளில் இத்தாலிய பாராலிம்பிக் சாம்பியனானார். ஒரு வருடம் கழித்து, கணேசமூர்த்தி பாராலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமானார் - அவரது மூன்றாவது சர்வதேசப் போட்டி மட்டுமே - மற்றும் சிறந்த செயல்திறனுடன் தங்கத்தை கைப்பற்றினார். வரும் நாட்களில் ஈட்டி எறிதலிலும் கலந்து கொண்டு தனது சாதனைகளுக்கு மேலும் ஒரு பதக்கம் சேர்க்கும் நம்பிக்கையில் உள்ளார். இத்தாலிய நிருபர்களுடனான அவரது வெற்றிக்குப் பிந்தைய நேர்காணல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது, கணேஷமூர்த்தி அவரது குடும்பத்தினருக்கும் "வீட்டில் இருக்கும் மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்" அஞ்சலி செலுத்தினார். https://www.tamilguardian.com/content/italian-tamil-smashes-world-record-three-times-take-gold-paralympics
  10. பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார். ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத்தாலிக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். கணேசமூர்த்தி, ஈழத் தமிழ் பெற்றோருக்கு 1999 இல் ரோமில் பிறந்தார். பதினெட்டு வயதில், அவருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது, இது தசை பலவீனம் மற்றும் கால்கள் மற்றும் கைகளில் உள்ள உணர்ச்சி மாற்றங்களால் வகைப்படுத்தப்படுகிறது. வீழ்ச்சிக்குப் பிறகு 2019 இல் அவரது உடல்நிலை மோசமடைந்தது, ரோமில் உள்ள சாண்டா லூசியா மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவர் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார், அதற்கு முன் கள நிகழ்வுகளுக்குச் சென்றார். 2023 இல், அவர் ஷாட் புட் F55 மற்றும் வட்டு எறிதல் F54-55 பிரிவுகளில் இத்தாலிய பாராலிம்பிக் சாம்பியனானார். ஒரு வருடம் கழித்து, கணேசமூர்த்தி பாராலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமானார் - அவரது மூன்றாவது சர்வதேசப் போட்டி மட்டுமே - மற்றும் சிறந்த செயல்திறனுடன் தங்கத்தை கைப்பற்றினார். வரும் நாட்களில் ஈட்டி எறிதலிலும் கலந்து கொண்டு தனது சாதனைகளுக்கு மேலும் ஒரு பதக்கம் சேர்க்கும் நம்பிக்கையில் உள்ளார். இத்தாலிய நிருபர்களுடனான அவரது வெற்றிக்குப் பிந்தைய நேர்காணல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது, கணேஷமூர்த்தி அவரது குடும்பத்தினருக்கும் "வீட்டில் இருக்கும் மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்" அஞ்சலி செலுத்தினார். https://www.tamilguardian.com/content/italian-tamil-smashes-world-record-three-times-take-gold-paralympics
  11. பாவி போற இடமெல்லாம்... பள்ளமும், திட்டியும் என்று பெரியவங்க சொல்வாய்ங்க. 😂
  12. கருத்துக் கணிப்புக்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவு! ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவ்வாறானவர்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1397921
  13. ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் – திகதி அறிவிப்பு. ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு ஜனாதிபதி வேட்பாளர்களின் பங்கேற்புடன் இந்த விவாதத்தின் முதல் சுற்று எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும் என்றும், இந்த விவாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் சுமார் 12 வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் மார்ச் 12 இயக்கம் அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் நாள் விவாதத்தில் சஜித் பிரேமதாச, நாமல் ரஜக்ஷ, திலித் ஜயவீர, பாக்கிய செல்வம் அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்கவுள்ளதை மார்ச் 12 இயக்கத்தின் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1397971
  14. தனக்குத்தானே வேட்டு வைத்த தமிழரசுக்கட்சி – சிறிகாந்தா! ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழினத்தின் சுதந்திரத்தையும், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் தேசிய கட்டமைப்பாக நாம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அரியநேந்திரனை களமிறக்கியுள்ளோம். தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திஸநாயக்க மற்றும் நாமல் ராஜபக்சே ஆகிய நால்வரும் ஒற்றையாட்சி சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பவர்கள். சஜித் பிரேமதாச ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று தீர்வு காணுவதாக மூச்சு கூட விடவில்லை. 13ஆம் திருத்தத்தை பற்றி பேசி இருக்கிறார். புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்தும் வரையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இணைப்பாட்சி பற்றியோ ஒற்றையாட்சி பற்றியோ எங்கேயும் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் தான் தமிழரசு கட்சியினர் அவசரமாகக் கூடி சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர். இதன் மூலம் தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கு எதனை சொல்லுகிறார்கள் என்பதனை தான் நாங்கள் கேட்கிறோம். இதுவரை காலமும் ஒற்றையாட்சிக்குள் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து அரசியல் ரீதியாக போராடி வரும் நிலையில், ஒற்றையாட்சியின் வழி நடக்கும் சஜித் பிரேமதசாவை ஆதரித்துள்ளார்கள். இவர்களின் நோக்கம் என்ன ? ஆகவே மக்கள் தமிழரசு கட்சியின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்” என என். சிறிகாந்தா மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1397950
  15. சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொலை-சந்தேக நபர் கைது! அமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 378 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1397951
  16. நல்ல ஒரு தகவலுக்கு நன்றி ஏராளன். ஆக... உலக சாதனையை இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து, தங்கம், வெள்ளி என முறியடித்து இருக்கின்றார்கள். பாராட்டுக்கள்.
  17. மூன்று வருடங்களில், ஊழலை முழுமையாக ஒழிப்பேன். - நாமல் ராஜபக்ச. - அடிப்படை சம்பளத்தை 57,500 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். - சஜித் பிரேமதாச.-
  18. இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா! இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை பிரித்தாணியா நிறுத்தி வைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தாணியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் 30 உரிமங்களை இடைநிறுத்த பிரித்தாணியா முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார். அதன்படி போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1397905
  19. மற்றையது Alliance. Indigo & Alliance தினமும் இயக்கப் படுகின்றது என்று இணையம் வாயிலாக அறிய முடிகின்றது. @ஈழப்பிரியன், @பெருமாள்
  20. “இன்டிகோ” என்ற நிறுவனம், தனது முதலாவது விமான சேவையை சென்னை - யாழ்ப்பாணத்துக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து இருந்தது. முன்பு இயங்கிக் கொண்டு இருந்தது வேறு விமான சேவை என நினைக்கின்றேன். இப்போது… இரண்டு விமான சேவைகள் நடைபெறுகின்றன போலுள்ளது.
  21. இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு என்ற தீர்மானம் என்பது ஏகமனதான தீர்மானம் இல்லை. - கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா. -
  22. இலங்கை தமிழரசு கட்சி, சஜித்திற்கு ஆதரவு என்ற தீர்மானம் என்பது ஏகமனதான தீர்மானம் இல்லை. - கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா. -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.