Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
என்னையும் ஒரு நல்லவனாக, மானஸ்தனாக நினைத்து இருக்கும் சுவியருக்கு நன்றி. அடுத்த கட்டுரை வரும் மட்டும், ஜாலியாக இருப்போம்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சிங்களக் கடசிகளுக்குள் பிரிவினையை இவர் செய்வதால், இப்போ... சிங்களவர்களும், அவரை நரி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். 😂
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
ஜனாதிபதித் தோ்தல் – தமிழ் பொது வேட்பாளரின் பெயா் அறிவிப்பு! வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களும் இறுதிப் பட்டியலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395099
-
மரண தண்டனையில் இருந்து எமில் ரஞ்சன் விடுவிப்பு!
மரண தண்டனையில் இருந்து எமில் ரஞ்சன் விடுவிப்பு! வெலிக்கடை சிறைச்சாலையில், கைதிகளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு, வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவரை விடுவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகத்தின்போது, 27 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். எனினும், 8 கைதிகள் கொல்லப்பட்டமைக்கான சாட்சிகள் மட்டுமே கிடைத்திருந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவா, சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியான இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவ ஆகியோர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி இந்த வழக்கில், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தோடு, வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருந்தார். கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆரச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமே இந்த தீர்ப்பை அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி லமாஹேவா உயர்நீதிமன்றித்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வானது, கொழும்பு மேல்நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவரை விடுவித்து இன்று தீர்ப்பளித்தது. https://athavannews.com/2024/1395118
-
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை! ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான நிலநடுக்கங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1395117
-
முகமட் சியாம் என்ற வர்த்தகர் படுகொலை - முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபரின் மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்
மிருசுவில் என, சரியான தகவல் வழங்கியமைக்கு நன்றி ஏராளன்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆஹா…. இனித்தான் “கிளைமாக்ஸ்” இருக்கு. 😂 🤣
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
- கருத்து படங்கள்
- ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
எனது வெற்றியானது நாட்டின் வெற்றியாகும் -நாமல் ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றியீட்டினால் அது தனது தனிப்பட்ட வெற்றி அல்ல எனவும் , அது நாட்டின் வெற்றியாகவே கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது ” கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். நெருக்கடியான சந்தர்ப்பங்களிலேயே முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் .தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக வெற்றிபெறும். இது தேர்தலில் எனது தனிப்பட்ட வெற்றியல்ல. கட்சியின் ஏகோபித்த வெற்றியாகும்.தேர்தலில் நெருக்கடிக்கு மத்தியில் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களையும் மீண்டும் எம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எமது கட்சியின் கொள்கை திட்டம் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. கட்சியின் வெற்றியானது நாட்டின் வெற்றியாகும். தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்” இவ்வாறு நாமல் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395048- நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு! வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய தேரில் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது. அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது இதேவேளை நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395096- முகமட் சியாம் என்ற வர்த்தகர் படுகொலை - முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபரின் மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்
மீசாலையில்... சிறுவர்கள் உட்பட 14 பேரை சுட்டுக் கொன்ற இராணுவத்தினனை அடையாளம் கண்டு கைது சிறையில் அடைக்கப் பட்ட போதும்... ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் வெளியே வந்த கொடுமையை என்ன வென்று சொல்வது. இவற்றுக்கெல்லாம்.. உங்களிடம் நீதியும், தீர்ப்பும் இல்லையா... 😡- முகமட் சியாம் என்ற வர்த்தகர் படுகொலை - முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபரின் மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்
தினேஷ் சாப்டர் என்ற தமிழ் கோடீஸ்வர வர்த்தகரின் கொலைக்கு எப்போ நீதி கிடைக்கும். இந்த நாட்டில்... சிங்களவனுக்கு ஒரு நீதி, முஸ்லீமுக்கு ஒரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதி. உங்களுடைய நாடு, பாழ் பட்டுப் போனதுக்கு இதுக்கும் ஒரு காரணம்.- ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் பாதுகாக்க மாட்டேன் - ஜனாதிபதி ரணில்
இவ்வளவு காலமும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது... மகிந்த உட்பட ஊழல் செய்த அரசியல்வாதிகளை என்ன செய்தீர்கள். மக்களை முட்டாளாக்குவதில் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றுதான். பைத்தியக்காரங்கள். 😡- கவாய் (Hawaii)பயணம்.
உங்களது ஹவாய் பயணக் கட்டுரை, படங்களுடன் மிகவும் சிறப்பாக உள்ளது. 👍 தொடர்ந்து வாசிக்க மிகவும் ஆவலாக உள்ளோம்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
நம்ம கச்ச தீவு மாதிரி 5 அல்லது 6 தீவு கூட்டம் தான் இந்த நாடு. ஏறத்தாழ 6 லட்சம் குடி மக்களை கொண்ட நாடு... தங்க பதக்கம் 😍😍😍 140 கோடி கொண்ட நாடு ஹிந்தி!!!! பாணி பூரி, இரயில்வே சாய்.... நாடு முழுக்க தேசபக்தர்கள்... தங்க பதக்கம் நகி ஹே... தங்கமெல்லாம் குஜராத்தி கடையில தான் அடகு வச்சு இருக்கிறோம் 😃😃 குகன் அருமைநாட்டார்- ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா அமைப்பு!
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா அமைப்பு! எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்துத் தெரிவிக்கையில் ” அடுத்த ஜனாதிபதி யார் என்பதை மக்களே தீர்மானிக்கவுள்ளனர். ஆனால் மக்கள் அதனை தீர்மானிப்பதற்கு பொதுவான கொள்கை ஒன்று அறிவிக்கப்படவேண்டும். தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இதனை அறிவிக்கவேண்டும். இதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம். எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பாரிய அளவிலான மாநாடு ஒன்றை நாம் ஏற்பாடு செய்யவுள்ளோம். இந்த மாநாட்டினை அரசியல் செல்வாக்கு இல்லாத 5 ஆயிரம் பௌத்த பிக்குகளின் பங்களிப்புடன் நடத்தவுள்ளோம். இந்த நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் பல அரசியல் தலைவர்கள் தற்களுக்கு ஏற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டே இந்த நாட்டை ஆண்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவர்களது கொள்கைகளை மகாசங்கரத்தினத்திடம் தனித்தனியாக முன்வைக்க வேண்டும். நாட்டு மக்கள் அரசியலமைப்பு திருத்ததினை எதிர்பார்க்கவில்லை. நாட்டில் புதிய சட்டங்களையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், பொருளாதார முன்னோற்றம் போன்ற அன்றாட பிரச்சனைகளுக்கான தீர்வையே எதிர்பார்க்கின்றனர். எனவே, புதிய ஜனாதிபதி தொடர்பில் மக்கள் கருத்தறியும் தீர்மானத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுவான கொள்கையொன்று அவசியம். இதனை நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணைந்து அறிவிக்கவேண்டும். இந்த புதிய தீர்மானத்தினை பொதுபலசேனா அமைப்பு எடுத்துள்ளது” இவ்வாறு கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395020- சிரிக்கலாம் வாங்க
நடமாடும் சிக்னல். 😂- வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!
குறுகிய காலத்தில்… பாராளுமன்றத்தில் இருந்து விளக்கமறியல் வரை.. பல்வேறு விதமான பல அனுபவங்களை பெற்று விட்டார். இனி… நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால்…. வெற்றிதான்.- வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!
அர்ச்சுனாவின் விளக்க மறியல்… அவருக்கு இன்னும் அதிக அனுதாபிகளை பெற்றுக் கொடுத்துள்ளது போல் தெரிகின்றது. மன்னார் பொலிசாரும், நீதிமன்றமும்… அர்ச்சுனாவுக்கு அனுதாப அலையை பெற்றுக் கொடுத்துள்ளதால், அவர்களுக்கும் நன்றி. 😂 🤣- ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
இருக்கும்… இருக்கும். 😁 உண்மையில் நாமலின்ரை ஆள்… அங்கஜன் தான். 😂 ஆனால் அவர் இப்ப… ரணிலின்ரை கூடாரத்துக்குள்ளை இருக்கிறார். 🤣 அங்கஜனும், டக்ளசும்… போகாத இடம் இல்லை. 😂🤣- ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
கீத் நாத் காசிலிங்கம் இவ்வளவு நாளும் எங்கை இருந்தவர்? 😂 இப்பதான் இவரின் பெயரை கேள்விப் படுகின்றேன். 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.