Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கடல் மட்டம் உயர்வு – நீாில் மூழ்கப் போகும் சென்னையின் ஒரு பகுதி! 2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட அறிக்கையை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விற்காக இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையிலிருந்து 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் சென்னை மற்றும் மும்பை நகரங்களே முதன்மை நகரங்களாக பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2040 ஆம் ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியின் குறிப்பிட்ட பகுதிகள் 7.29 சதவிகிதம் வரையில் நீரில் மூழ்கும் எனவும், 2060 ஆம் ஆண்டில் 9.65 சதவிகிதம் ஆகவும், 2080 ஆம் ஆண்டில் 15.11 சதவிகிதம் என நீர்மூழ்கும் இந்தப் பரப்பு அதிகரிக்க கூடும் எனவும் அந்த ஆய்வரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத் திடல், அசோகச் சக்கர நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் முதலான பகுதிகளில் கடல் மட்டம் உயரும் அபாயமுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1987 முதல் 2021 வரையான காலப்பகுதியில் சென்னையின்; கடல் மட்டம் 0.679 சென்றி மீற்றர் வரை உயர்ந்துள்ளதாகவும், வருடாந்திர உயர்வு 0.066 சென்றி மீற்றர் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரியவந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மும்பையில் அதிகபட்ச கடல் மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடியிலுள்ள தொழிற்பேட்டைப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நகரமயமாக்கல், கடற்கரையில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் காரணமாக தாழ்வான கடலோர பகுதிகள் கடல் மட்ட உயர்வால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1394705
  2. வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு! இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பா.ஜ.க 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார். அத்துடன், தலைமைத் தேர்தல் ஆணைக்குழு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிபரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 சதவீதம் வித்தியாசம் உள்ளதாகவும், இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகள் எனவும் வோட் பார் டெமாக்ரசி என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஒடிஸா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 12.5 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளதாகவும் இலட்சத்தீவு உள்ளிட்ட சில இடங்களில் 25 சதவீதம் வரையிலும் வித்தியாசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வோட் ஃபார் டெமாக்ரசி என்ற அமைப்பு பா.ஜ.க வெற்றி பெற்ற 79 தொகுதிகளை குறிப்பாக அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் முதல் கட்டத்தின் இறுதி புள்ளிவிபரங்களை வெளியிட தேர்தல் ஆணைக்குழு 11 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் 2 ஆவது கட்டத்திற்கு 6 நாட்கள் மற்றும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு 4 முதல் 5 நாட்கள் எடுத்துக்கொண்டதுடன், இது தேர்தல் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1394730
  3. லங்காஸ்ரீயில் இவரின் மரண அறிவித்தலை காணவில்லை என்ற படியால், ஆள் இன்னும் இருக்கிறார். 😂
  4. இந்திய அணியின்.. தோல்விக்கான காரணம் என்ன? இலங்கை அணி, வென்றது தான். 😂 🤣 Aravinth Subramanium
  5. ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது!!! ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரே ஒரு வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக 70,000 ஆணுறைகள் பாவித்துத் தீர்க்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் போகப் போக விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறைகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக, 2012 இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கின் போது, சுமார் 100,000 க்கும் மேற்பட்ட ஆணுறைகள் தேவைப்பட்டன. தற்போது 2024 ல் பாரிஸ் நகரில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் கிராமங்களில் 300,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. Follow On WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaTYF6cKAwEdCSa8cq2J @Kandiah57 அண்ணை சில நாடுகள் தங்கப் பதக்கம் எடுக்காததற்கு இதுக்கும் ஒரு காரணமாக இருக்குமோ. 😂
  6. யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது! யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை படுமோசமாகச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தொிவித்துள்ளனா். குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன், உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதனையடுத்து குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கொண்டு சென்றுள்ளார். பின்னா் குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலையே குழந்தை இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தெல்லிப்பளை பொலிஸார் குழந்தையின் தாயாரை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1394724
  7. நிபந்தனைகளின் அடிப்படையில் சஜித்திற்கு ஆதரவு – முஸ்லிம் காங்கிரஸ்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் உயர்பீட கூட்டம் இன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இன்று நாம் நீண்டநேரம் கலந்துரையாடினோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக 3 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடவுள்ளோம். அவ்வாறு நிபந்தனைகளுககு உட்பட்டு ஐக்கிய மக்கள் கூட்டணியினக் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு எமது கட்சியின் உயர்பீட கூட்டத்தில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நான் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடவுள்ளேன். எனவே எதிர்வரும் ஜனாதிபித தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றியடையச் செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவை வழங்கும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1394751
  8. திருத்திய... தகவலுக்கு, நன்றி நியாயம். 👍
  9. தமிழர் ஒருவர் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் எடுத்தவரா…? நான் இதுவரை அறியவில்லை. மகிழ்ச்சியான செய்தி. அவரைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய ஆவலாக உள்ளேன்.
  10. தமிழ் சினிமாவில்…. கொலை வெறி, இரத்தக் களரி மட்டுமல்ல… வில்லங்கத்துக்கு திணிப்பது மாதிரி…. கூட்டமாக இருந்து மது அருந்தும் காட்சிகளும் தேவை இல்லாத இடங்களில் கூட… அளவுக்கு அதிகமாகவே காட்டுகின்றார்கள். இதனை பார்ப்பவர்கள் தம்மை அறியாமலேயே மது பாவனைக்கும், புகைத்தலுக்கும் உந்தி தள்ளப் படுகின்றார்கள். அரசியல்வாதிகள் நடத்தும் அவர்களின், மது தொழிற்சாலைக்கு… இந்த வில்லங்க மது பாவனை காட்சிகள், இலவச விளம்பரம் கொடுப்பதாகவே சந்தேகிக்கப் படுகின்றது. சினிமா படங்களை தணிக்கை செய்யும் குழு ஒன்று உள்ளது தானே… அவர்கள் என்ன செய்கின்றார்கள். அவர்களும்… அரசியல்வாதிகளால் விலைக்கு வாங்கப் பட்டு விட்டார்களா. இவற்றை கட்டுப் படுத்தாமல்… சமூகத்தில் கொலை, கொள்ளை, ஒழுக்கம் சீர் கெட்டுப் போய் விட்டது என்று கூக்குரல் இடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
  11. புலம்பெயர்ஸ்…. ஓட்டுப் போட்டா ஶ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவு செய்யப் படுகிறார். 😂
  12. ஒரு நரி தன்னை இந்தக் காட்டிற்கு தலைவனாக தேர்வு செய்தால்... இலவசமாக கம்பளி தருவேன் என்றதாம். அதற்கு... சுத்துமாத்தும், ஓம் என்று தலையாட்டியதாம். 😂 🤣
  13. தென்னிலங்கைக்காகக் காத்திருப்பது! நிலாந்தன். தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை தீர்மானிக்கும் சக்தியாக வரக்கூடிய வாய்ப்பு ஜனாதிபதித் தேர்தலில் உண்டு என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. தூதரகங்களுடான சந்திப்புகளின் போது தமிழ் அரசியல்வாதிகளுக்கு அது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த தென்னிலங்கை வேட்பாளர் வெற்றி வாய்ப்புகளை அதிகமாகக் கொண்டிருப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பு. நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்கவும் அப்படித்தான் நம்புகிறார் போலும். தென்னிலங்கையை யார் ஆள்வது என்பதனை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் ஒரு அரசியல் சூழல் இந்த முறை மட்டும்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதல்ல. கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் அது ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்த யாப்புச் சதிப் புரட்சியின் போதும் அப்படி ஒரு நிலைமை காணப்பட்டது. யாப்புச் சதிப் புரட்சியில் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தது தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள்தான். அவ்வாறு சிறிய தேசிய இனங்கள் ஒரு பெரிய தேசிய இனத்தின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் நிலை வரக்கூடாது என்று ராஜபக்சங்கள் நன்கு திட்டமிட்டு உழைத்ததன் விளைவுதான் அதையடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலில் அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பம் பெற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆகும். எனினும் மறுபடியும் இப்பொழுது,ஜனாதிபதியைத் தமிழ் மக்கள் தீர்மானிக்கும் ஒரு கட்டம் வந்திருக்கின்றதா? அப்படியென்றால் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும்? அல்லது தமிழ் மக்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படும் தேர்தல் களத்தில் தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும்? தமிழ் மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்கள் தங்களை நோக்கி மேலும் இறங்கி வரும் விதத்தில் தம்மை மேலும் பலப்படுத்த வேண்டும். அதே சமயம்,தென்னிலங்கை வேட்பாளர்கள் தமிழ் மக்களை நோக்கி இறங்கி வர வேண்டும். அதற்குப் பின்வரும் காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, அதுதான் பெரிய இனம். ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் இனம். அரசுடைய தரப்பு. எனவே அதுதான் முதலில் அரசற்ற தரப்பை நோக்கி வரவேண்டும். இரண்டாவது,அதுதான் ஒடுக்கிய இனம். கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்களை ஒடுக்கியதும் இன அழிப்பு செய்ததும் அவர்கள்தான். எனவே அதற்குரிய பரிகாரமாக அவர்கள்தான் இறங்கி வர வேண்டும். சாதாரணமாக ஒரு வியாபாரத்தில் பேரம் என்று வரும் பொழுது யாருடைய உதவி தேவைப்படுகிறதோ அவர்களை நோக்கி உதவி கேட்கும் தரப்புத்தான் இறங்கி வர வேண்டும். எனவே தென்னிலங்கை வேட்பாளர்கள்தான் தமிழ் மக்களை நோக்கி இறங்கி வந்து தாங்கள் என்ன தர முடியும் என்பதனை தெளிவாகக் கூற வேண்டும்.அண்மை வாரங்களாக தென்னிலங்கை வேட்பாளர்கள் தமிழ் அரசியல்வாதிகளை வீடு வரை வந்து சந்திக்கின்றார்கள்.இக்கட்டுரை எழுதப்படுகையில் ரணில் யாழ்ப்பாணத்தில் நிற்கிறார். ஆனால் அவ்வாறு தமிழர்களை நோக்கி வரும் யாருமே தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையூட்டும் வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்பதுதான் இலங்கைதீவின் துயரம்.தாங்கள் எதைத் தர முடியும் என்பதனை அவர்கள் வெளிப்படையாக முதலில் கூற வேண்டும். கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் உடன்படிக்கைகள் முறிக்கப்பட்ட அனுபவம் தமிழ் மக்களுக்கு உண்டு. அவ்வாறு உடன்படிக்கைகள் முறிக்கப்படும் பொழுதெல்லாம் முதற் பலியாவது தமிழ் மக்கள்தான். அதுமட்டுமல்ல இலங்கைத் தீவில் இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பெரும்பாலானவற்றை முதலில் குழப்பியது தென்னிலங்கைத் தரப்புகள்தான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் மட்டும்தான் சமாதான முயற்சிகள் சில தமிழ்த் தரப்பால் குழப்பப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு.ஆனால் அதற்கு முன்னும் பின்னும் சமாதான முயற்சிகளைக் குழப்பியது முழுக்க முழுக்க அரசு தரப்புதான். கடந்த 2015ல் ஆட்சி மாற்றத்தின் பொழுது தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களித்தார்கள். ஆனால் மைத்திரி தனக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு துரோகம் செய்தார். தென்னிலங்கை தரப்புக்களால் ஏமாற்றப்பட்ட ஆகப்பிந்திய அனுபவம் அது. இந்த அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், யாருக்கு தமிழ் மக்கள் தேவையோ அவர்கள் தமிழ் மக்களை நோக்கி இறங்கி வரட்டும். அவர்கள் தாங்கள் தமிழ் மக்களுக்கு எதைத் தரக்கூடும் என்பதனை முதலில் வெளிப்படையாக மேசையில் வைக்கட்டும். அதன்பின் மூன்றாவது தரப்புக்களின் மேற்பார்வையோடு ஒரு உடன்படிக்கைக்கு தயாரா என்பதை தெரியப்படுத்தட்டும். நிச்சயமாக எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் அதற்குத் தயாராக இருக்க மாட்டார். மனோ கணேசன் சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சிகள் வைத்துக் கூறியதுபோல தமிழ் மக்களோடு ஓர் உடன்பாட்டுக்கு வரும் தென்னிலங்கை வேட்பாளர் 100 தமிழ் வாக்குகளைப் பெறலாம். ஆனால் அவர் தெற்கில் ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்பதுதான் இப்பொழுதும் இலங்கைத் தீவின் மிகக் குரூரமான அரசியல் யதார்த்தம். இலங்கைத் தீவில் இதுவரையிலுமான எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இன ஒடுக்கு முறைகள் தொடர்பில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதில்லை. குறைந்தபட்சம் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்தியதும் இல்லை. முள்ளிவாய்க்காலில்,நினைவிடத்தில் ஒரு பூவைக்கூட வைக்காத அரசியல்வாதிகள். சில ஆண்டுகளுக்கு முன் தெற்கில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை முன்னடத்திய அமைப்புகள் அவ்வாறு அஞ்சலி செலுத்தியிருக்கின்றன. அவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது தேர்தல் கேட்கின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களின் தோழமைத் தரப்புகள். ஆனால் பெரும்பான்மைக்குள் சிறுபான்மை. அண்மையில் காலமாகிய விக்கிரமபாகு கருணாரத்தினவைப் போல அவர்களும் பெரும்பான்மைக்குள் சிறுபான்மை. அவர்களில் சில தரப்புகள் இப்பொழுது உருவாக்கியிருக்கும் தேர்தல் கூட்டுக்கள் தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்கவேண்டிய கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.ஆனால் அந்தத் தன்னெழுச்சிப் போராட்டங்களை ஆதரித்த தமிழ் அரசியல்வாதிகள் எவருமே அத்தகைய தரப்புகளோடு இதுவரையிலும் எந்த ஒரு உடன்படிக்கைக்கும் வந்ததாகத் தெரியவில்லை.மாறாக ஒப்பீட்டுளவில் வெற்றி பெறக்கூடிய பிரதான தென்னிலங்கை வேட்பாளர்கள் எப்பொழுது தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவார்கள் என்று காத்திருப்பதாகவே தோன்றுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சம்பந்தரும் இவ்வாறுதான் காலத்தைக் கடத்தினார். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அந்தக் கட்சி இப்பொழுது இரண்டாக உடைந்து நிற்கிறது.ஒரு பகுதி தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றது. இன்னொரு பகுதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. ஆனால் தேர்தல் அறிக்கைகளுக்காக காத்திருக்கும் பகுதி தெளிவாக முன்வந்து பொது வேட்பாளரை எதிர்க்கின்றது. கட்சி என்ன முடிவை எடுத்தாலும் தான் தனது முடிவில் உறுதியாக இருக்கப் போவதாக பகிரங்கமாக அறிவிக்கின்றது. அதாவது கட்சியின் உத்தியோகபூர்வ முடிவை மீறுவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றது. ஆனால் கட்சியோ முடிவெடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது உள்ளதில் பெரிய கட்சி முடிவெடுக்க முடியாத ஒரு நிலை.மேலும் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கும் ஒரு நிலை. மற்றொரு கட்சி பரிஸ்கரிக்கின்றது. ஏழு கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை முன்வைக்கின்றன. இந்நிலையில் தென்னிலங்கை வேட்பாளர்கள் யாரோடு பேச வருவார்கள்? யார் தங்களை பலசாலிகளாகக் கட்டி எழுப்புகின்றார்களோ, யாரோடு தமிழ் மக்கள் நிற்கின்றார்களோ, யார் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலையை தோற்றுவிக்கப் போகிறார்களோ, அவர்கள்தான் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். அதன் பொருள் தமிழ் பொது வேட்பாளர் தென்னிலங்கை வேட்பாளர்களோடு இரண்டாவது விருப்பது தெரிவு வாக்குக் குறித்துப் பேரம் பேசுவார் என்பதல்ல. https://athavannews.com/2024/1394656
  14. எமது ஆட்சியின் கீழ் திருட்டுக்கு இடமில்லை – எதிர்கட்சி தலைவர். எமது அரசாங்கத்தின் கீழ் திருட்டுக்கு இடமில்லை எனவும் அவ்வாறானவர்களை மன்னிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (03) நடைபெற்ற ரணவிரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு போர்வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திருட்டு, மோசடி, பொய், நிதிப் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் வேலைத்திட்டத்தின் முன்னோடிகளாக மாறுமாறு கூறினார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், திருடர்களைப் பிடிக்கவும், திருடர்களை விரட்டவும், திருடப்பட்ட பொருட்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் பாரிய மனிதாபிமானப் பணியின் ஒரு அங்கமாக மாறுவதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார். https://athavannews.com/2024/1394644
  15. அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – ஜனாதிபதி. இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டிருப்பதால் தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும், அதனால் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேந்நு நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். “செழிப்பான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஒருபோதும் மறக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். நிதிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் இவ்வருடம் நிதி ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிரியர் சேவையில் புதியவர்களை இணைத்துக் கொள்வதற்கு அடுத்த வருடம் மேலதிக நிதியை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். சுயதொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு நிவாரணத்துடன் கூடிய கடன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் இணைந்து இளைஞர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இளைஞர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி அவர்களின் தகவல்களை கேட்டறிந்துகொண்டதோடு சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இளைஞரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் அனுபவத்தைப் பொருட்படுத்தாமல் தனியார் துறை தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யுமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுப்பதாகவும் உறுதியளித்தார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுரேன் ராகவன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1394641

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.