Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வாத்து... குஞ்சாக இருக்கும் போது பிடித்து தின்னுறது. அது வளர்ந்தவுடன் ஏறி இருன்னு சவாரி விடுறது. பூனையாரே... இது என்ன விளையாட்டு. 😂
  2. வைத்தியர் அர்ச்சுனா கைது – 7 ஆம் திகதி வரை விளக்கமறியல். மன்னார் வைத்தியசாலைக்குய் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனா விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனவை மன்னார் நீதவான் நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வைத்தியர் அர்சுனாவை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறி நேற்றைய தினம் மாலை மன்னாருக்கு வைத்தியர் அர்ச்சுனா சென்றிருந்தார். மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர், அங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று இறப்பு தொட்பான விளக்கத்தைக் கேட்டிருந்தார். அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள், விதிமுறைகளை மீறி வைத்தியசாலைக்குள் நுழைய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். பின்னர் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மன்னார் வைத்தியர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் எடுப்பதற்காக வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394616
  3. வைத்தியர் அர்ச்சுனா கைது – 7 ஆம் திகதி வரை விளக்கமறியல். மன்னார் வைத்தியசாலைக்குய் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனா விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனவை மன்னார் நீதவான் நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வைத்தியர் அர்சுனாவை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறி நேற்றைய தினம் மாலை மன்னாருக்கு வைத்தியர் அர்ச்சுனா சென்றிருந்தார். மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர், அங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று இறப்பு தொட்பான விளக்கத்தைக் கேட்டிருந்தார். அங்கு கடமையில் இருந்த வைத்தியர்கள், விதிமுறைகளை மீறி வைத்தியசாலைக்குள் நுழைய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். பின்னர் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக மன்னார் வைத்தியர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் எடுப்பதற்காக வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394616
  4. மருதரை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🥰
  5. முஸ்லிம் என்பது மதமே தவிர, மொழி அல்ல. ஒரு தமிழ் பேசும் வீரன் இறங்கினார் என்பதே... தமிழ் பேசும் ரசிகர்களுக்கு பெருமை கிரிக்கெட் ரசிகன்டா. Muthusamy Navaraja
  6. கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் டொக்டருக்கு நல்லதொரு கடிதம் எழுதி இருக்கிறார். முடிந்தால் படியுங்கள், பின் தெளியுங்கள். Prashanthan Navaratnam ############# ################ ############## ############### டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி. 11.07.2024 அன்புச் சகோதரா! வணக்கம். நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். அப் பிரார்த்தனை உங்களுக்கானது மட்டுமன்று, சாவகச்சேரி மக்களின் நலம்வேண்டியும், யாழ்ப்பாண வைத்தியத்துறையின் நலம் வேண்டியுமாம். யாரும் எதிர்பாராத நிலையில், பெரியதொரு புரட்சியைத் தனிமனிதராய்ச்;; செய்து முடித்திருக்கிறீர்கள். உங்களின் துணிவிற்கு என் வாழ்த்துக்கள்!  நீங்கள் வாய் திறந்து உண்மையை உரைத்த பிறகுதான், நம் மண்ணில் வைத்தியத் துறையினர் சிலர் செய்யும், அட்டூழியங்கள் பற்றி அறிய முடிந்தது. எத்தனை இழிவுகள் ! நினைக்கவே மனம் கூசுகிறது. வெளிப்படையாய் இத்தனை உண்மைகளை நீங்கள் பேசிய பிறகும், மேலிடம் உங்களை அகற்றப் பாடுபடுகிறதே அன்றி, நீங்கள் சொன்னது பற்றி ஆராய முன்வருவதாய்த் தெரியவில்லை. அதிலிருந்தே, நடந்த பாவங்களின் வேர், எதுவரை சென்றிருக்கிறது என்பதை உணர முடிகிறது.  ஆசிரியம், வைத்தியம் என்னும் இரண்டு துறைகளும், தொழில்கள் அன்றாம். அவை தொண்டுகள்! அதனால்த்தான் இவ்விரு துறை சார்ந்தாரையும், தேவை முடிந்த பின்பும் மக்கள் வணங்கி நிற்கின்றனர். அத் தூய துறையில் இருந்து கொண்டு அதனையும் தொழிலாக்கி, பணம் தேட முனைந்த சில ஈனர்களின் இழிவை, உங்களது நெஞ்சத்துணிவால் உலகிற்கு வெளிப்படுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்!  உங்களை மரியாதைக் குறைவாய்த் திட்டியும், ஏன் அடித்தும்கூட, பலர் செய்த மிரட்டல்களையெல்லாம் துச்சமென ஊதித்தள்ளி, அநியாயத்திற்கு எதிராய் நிமிர்ந்து நின்ற உங்களது துணிவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். எத்தனை மிரட்டல்கள். எத்தனை தூற்றுதல்கள். எத்தனை எதிர்ப்புக்கள். அத்தனையையும் கடந்து ஆச்சரியப்படுத்துகிறீர்கள். வியப்பாய் இருக்கிறது!  உண்மையின் வலிமை மெல்லப்பரவி, மக்கள் மனங்களில் படர்ந்து, அவர்களையும் கொதித்தெழ வைத்ததும், உங்களின் பின்னால் கூட வைத்ததும், அதிசயமேயாம்! ஆனாலும் பல தீய கரங்கள் ஒன்றிணைந்து, உங்களை ஒருவிதமாய் அவ்விடத்தை விட்டு அகற்றிவிட்டன.  உங்களது இச் செயல்களால் நான் மகிழ்ச்சியடைகிறேன். போருக்குப் பின்னான யாழ்ப்பாணத்தில் ஒழுக்கம் குறைந்துவிட்டது என்று, பலரும் ‘வெற்று’ ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்த ஒழுக்கயீன வெள்ளத்துக்கும், சத்தியத்தால் அணைகட்ட முடியும் எனக்காட்டியது, நீங்கள் அடைந்த முதல் வெற்றி. எவரது தூண்டுதலும் இன்றி, ஒரு தனி மனிதனுக்காய் இத்தனை மக்கள் கொதித்தெழுந்த வரலாற்றுச் சாதனை, உங்களுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி. இயக்கங்களால்கூட இந்தச் சாதனையைச் செய்யமுடியாமல் போயிற்று என்றுதான் சொல்வேன். அவர்கள் பின்னால் இருந்த ஆயுத பலமும், அதிகார சக்திகளும் உங்களின் செயல்களுக்குப் பின்னால் இருந்திருக்கவில்லை. அதனால்தான் அச்; சாதனையை வரலாற்றுச் சாதனை என்கின்றேன்.  மணிக்கணக்கில் பேசப்படும் உண்மைகளை விட, நிமிடக்கணக்கில் நடைமுறைப்படுத்தப்படும் உண்மைகள் மேலானவை என நிரூபித்து விட்டீர்கள். அதற்காகவும் எனது வாழ்த்துக்கள்!  நண்பனே! உங்களை எதிரிகள் பதவியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டாலும் நீங்கள், அவர்களின் தலைகளின்மேல் ‘அறம்’ என்னும் கூர்வாளைத் தொங்கும்படி செய்துவிட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள். மக்களை மாக்களாக நினைந்து, தம் இஷ்டப்படி இனி அவர்களால் நடக்கமுடியாது. அவர்களின் செயல்களை மக்களின் ஆயிரம் கண்கள் இனிக் கண்காணிக்கப் போகின்றன. திருந்த விருப்பப்படாவிட்டாலும், அவர்கள் திருந்துவதற்கான வழியை வகுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள். அந்த வகையில் உங்களது போராட்டம் வெற்றியாகத்தான் முடிந்திருக்கிறது.  அறம் நோக்கிப் போராடத் தலைப்பட்டால் அவர்களின் பின்னால் மக்கள் தானாக அணி சேர்வார்கள்; என்ற உண்மையை மிகத் தெளிவாக நிலைநிறுத்தி விட்டீர்கள். இது நம் அரசியலாளர்களுக்கும் ஒரு பாடமாகட்டும்!  டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் பேராதனை, 26.07.2024 நண்பா! நான் உங்களுக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தின் மேற் பகுதியை அப்படியே இடையில் விட்டுவிட்டு இலண்டன் செல்ல வேண்டி வந்து விட்டது. பயணத்தால் வந்து, அக் கடிதத்தை முடித்து வெளியிடலாம் என நினைந்திருந்தேன். திரும்பி வந்து பார்த்தால் நிதானமாகத் தொடங்கிய உங்கள் செயல்கள் ‘தறிகெட்டுப’; போய்க்; கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. அதிர்ச்சியடைந்தேன்!. நல்லகாலம் கடிதத்தின் அந்த முதற் பகுதியை, வெளியிடாமல் சென்றதை நினைந்து உள்ளுர மகிழ்ந்து கொண்டேன்.  மக்கள் தந்த உற்சாகத்தால் தடுமாறிப் போனீர்களோ? அல்லது உங்களது இயல்பே இதுதானோ? தெரியவில்லை. வரவரத் தேவையற்ற அறிக்கைகளை நாளுக்குநாள் வெளிப்படுத்தி உங்களது மதிப்பை முடிந்தளவு குறைத்து வருகிறீர்கள். ‘யூடியூபைத’; திறந்தாலே உங்களது சிரித்த (இளித்த) முகத்துடன் கூடிய ஓர் செய்தி தினந்தினம் காத்திருக்கிறது.- இது தேவைதானா? ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதனை மறந்து போகாதீர்கள்!. எங்கள் மண்ணில் தொடங்கப்படுகிற போராட்டங்கள் எல்லாம், நெறிப்படுத்துவார் இன்றி வீழ்ந்து போவதுதான் விதியோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.  தற்போது தொடர்கிற உங்களது முயற்சிகளெல்லாம் சத்தியத்திற்கான போராட்டமாகத் தெரியவில்லை. அவை உங்களை நீங்களே ஓர் ‘ஹீரோ’ வாக்க முயலும் முயற்சியாகவே தெரிகின்றன. உங்களைப் பற்றி நீங்களே பெருமையாக அலட்டிக் கொள்ளும் விடயங்கள் கேட்பவர்களை வெட்கப்பட வைப்பதோடு அல்லாமல், உங்கள் தனி மனித ஒழுக்கத்தைப் பற்றியும் ஐயப்பட வைக்கின்றன. செய்திப் பசியோடு திரிகின்ற ஊடகநிறுவனங்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ள, நக்கலும், நையாண்டியுமாய் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், அவற்றுக்கு நீங்கள் வழங்கும் பேட்டிகளால் பலருக்கும் உங்களது மனநிலை பற்றிய ஓர் ஐயப்பாடு தோன்றியிருக்கிறது. உங்களை “ஹீரோ”வாக்க நினைந்து, அநீயாயத்திற்கு “கொமேடியன்” ஆகிப் போய் நிற்கிறீர்கள். உங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வந்த மக்கள் இன்று நாணித் தலைகுனிந்து நிற்கின்றனர்.  வீரியத்தைவிடக் காரியம்தான் முக்கியமானது என்பார்கள். தற்போதைய உங்களது செயல்களிலோ காரியத்தை விட வீரியம் தான் மேல் ஓங்கி நிற்கிறது. எதிரிகளுக்கு எதிரான தற்போதைய உங்களது சில செயல்களில், தேவையற்ற பரபரப்பும், பகைமூட்டிப் பார்க்கும் செயலும், வெற்றிக்காக, எல்லைகள் கடந்து செல்ல முயலும் தன்மையும், தலை தூக்கி இருப்பது தெளிவாய்த் தெரிகிறது. எதிரிகளைப் பகை வயப்படுத்துவதை விட, அவர்களை அறவயப்படுத்துவதே சிறந்தது. இப்போது உங்களுக்கு அந்த நோக்கம் இருப்பதாய்த் தெரியவில்லை.  நீங்கள் உண்மை நோக்கிப் போராடுபவரானால், உங்களது செயல்களில் இத்தனை தடுமாற்றங்கள் வர நியாயமில்லை. நோக்கம் மட்டுமல்ல, செயலும் சரியாக இருக்கவேண்டும் என, நினைப்பவர்கள் தான் தமிழர்கள். அண்மையில் வெளிவந்த, ‘அரசியலில் குதிப்பேன்!’; என்ற உங்களது அறிக்கையிலிருந்து உங்கள் செயல்கள் மட்டுமல்ல, நோக்கமும் தவறென்றே நினைக்க வேண்டியிருக்கின்றது. அதிசயமாய் நிகழ்ந்த ஓர் அற்புத எழுச்சியை, உங்களது புகழ் விருப்புக்காக இழந்து போனீர்கள். வருத்தப்படுகிறேன்.  வலிமையானவர்களின் பிழைகளை வெளிப்படுத்தக்கூடாது என்ற கட்சியைச் சேர்ந்தவனல்ல நான். ஆனால் மக்கள் மன்று, வெளிப்படுத்துபவர்களின் தூய்மையையும் மனதில் கொண்டுதான், வெளிப்படுத்தப்படும் விடயங்களை ஏற்கும் என்பது நிச்சயம். அபூர்வமாகக் கிடைத்த ஓர் நல்ல வாய்ப்பை இழந்து நிற்கிறீர்கள். உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” இலங்கை ஜெயராஜ் Kambavarithy Ilankai Jeyaraj
  7. மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம். இதிகாச சிறப்பு பெற்ற கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக மக்கள் அலைக்கு மத்தியில், அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வெளிவீதி பஞ்சமுக விநாயர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள்,ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர். தேர் உற்சவத்தின்போது இரண்டு பருந்துகள் தேரினை வலம்வந்த காட்சி அற்புத காட்சியாக இங்கு பதிவுசெய்யப்பட்டது. இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது. அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக்கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது. இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளத்தில் நடைபெறவுள்ளது. https://athavannews.com/2024/1394568
  8. அமெரிக்காவில் இருந்து பிள்ளை அனுப்பிய முந்திரி பருப்பு என்று… கிழவி சொல்லும் போதே, பொலிஸ்காரன் உசாராகி இருக்க வேணும். 😂 ஹ்ம்ம்…. விதி. 🤣
  9. சிங்களவன் திருந்தி விட்டான் போலை இருக்கு. 😂 தேர்தலுக்கு முன்னர் செய்தால்… குடியா முழுகிப் போகும். 🤣
  10. கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது! வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். https://battinaatham.net/?p=76246
  11. சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் ரத்து. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் உள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் இலங்கைக் கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய மீனவர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளமை சர்வதேசக் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1394460
  12. காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட தீர்மானம். ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு தரவும் மேலும் உயிருடன் இருக்கும் இரண்டு மீனவர்களையும் எந்தவிதம்மான வழக்கும் இடாதபடி தாயகம் கொண்டு வர வலியுறுத்தி இன்று முதல் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 400ற்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை படகு மீது மோதியதில் படகு மூழ்கியது. அதிலிருந்து நான்கு மீனவர்கள் உயிரை காப்பாற்ற கடலில் குதித்துள்ளனர் இதில் இரண்டு மீனவர்களை மீட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதன் பின் மலைச்சாமி என்ற மீனவர் சடலமாக மீட்க்கப்பட்டார். இலங்கை கடற்படை செயலை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். எனினும் ,அதிகாரியோடு நடந்த பேச்சு வார்த்தையால் போராட்டம் கை விடப்பட்டது இதனைத் தொடர்ந்து இன்று மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காலவரையற்ற போராடட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394505
  13. விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை ? – சுகாதார அமைச்சு. எதிர்வரும் ஜனவரி முதல், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உணவு சில நோய்களை குணப்படுத்தும் என்ற பிரச்சாரம் தவறானது என சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதி பணிப்பாளர் தெரிவித்தார். ஒருவர் வருடத்திற்கு 150 கிலோவுக்கும் அதிகமான அரிசியை உண்பதாகவும், வாரத்திற்கு 2.8 கிலோ உண்பதாகவும், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற உணவுகளால் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1394451
  14. ஜனாதிபதி இன்று யாழுக்கு விஜயம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கவுள்ளது வைத்த பின்னர் , தொடர்ந்து ஜனாதிபதி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் – தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திற்கு விசேட விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இன்று இந்த நிலையத்தை திறந்து வைத்தார். யாழ்ப்பாண மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு கடல் நீரை குடிநீராக்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீர்ப்பாசன மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் விசேட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1394509 @Maruthankerny
  15. உயிரிழந்த இந்திய மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு! நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினரின் படகொன்றுடன் மோதியதில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அறிக்கையொன்றின் மூலம் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தூதரங்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் மேலும் பல மீனவர்களை இழக்க நேரிடும் என்றும் தனது அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1394446

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.