Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தமிழ் - சிங்கள கலவரத்தை தூண்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால்... நமது பக்கத்து நாடே.... முழுமையான் ஏற்பாட்டை சிங்களத்துக்கு செய்து கொடுக்கும். அந்தளவு தமிழ் மக்கள் மீதான எரிச்சலில்.. பக்கத்து நாட்டுக்காரன் இருக்கின்றான்.
  2. கலோ , கலோ... பலாலி, யாழ்ப்பாணத்திலை தானே இருக்கு. மேலை பலாலி எழுதியிருக்குத்தானே... திருப்பி ஒருக்கா, கண்ணை துடைச்சுப் போட்டு பார்க்கிறது. 😂 அரசியல் விட்டு விலகுவதாக அறிக்கை விட்ட அரசியல்வாதிகள், உண்மையிலேயே விலகி இருந்தால்... ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் பாதி கதிரைகள் வெறுமனே இருந்திருக்கும். 😂
  3. ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தின் TEA தலைவர் திரு. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொட மகேஸ்வரன்) யாழ்ப்பாணத்தில் காலமாகி விட்டார். பழகுவதற்கு இனிய நண்பர். மிக எளிமையானவர். ஒரு காலகட்ட வரலாற்று நாயகன். 70 களின் நடுப்பகுதியில் லண்டனில் உயர் கல்வியை இடைநிறுத்தி தேச விடுதலைக்காக தாயகம் நோக்கி திரும்பிய மிகச்சிலரில் ஒருவர். அவரது பங்களிப்பும் ஆரம்ப கால ஆர்வமும் அர்ப்பணிப்புகளும் மகத்தானவை. வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும். துயரம் நிறைந்த சேதி... அஞ்சலி ######## ######## ########## Who is this 'Panagodai' Thambapillai Maheswaran...? Part -4 People's Liberation Organization of Tamil Eelam (PLOTE)'s failed 'Operation Catcus' & Thambapillai's intention for purchase a Maldivian island... இதே போல் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் மாலை தீவில் ஒரு தீவை விலைக்கு வாங்கி பின்தளமாக பயன்படுத்த முடிவு செய்தார். அந்த நேரம் plote மாலை தீவை கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த திட்டம் வைவிடப்பட்டது. இதைவேளை ஆபிரிக்கா நாடு ஒன்றின் பின் தளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது அந்த முயற்சி பயனளிக்கவில்லை. 1986 ம் ஆண்டு நவம்பர் காலப்பகுதியில் விடுதலைபுலிகள் Eprlf அமைப்பை தடை செய்த பின்னர் தமிழீழ இராணுவமும் தடை செய்யப்பட்டது எப்பொழுது சில உறுப்பினகள் விடுதலை புலிகளோடு இணைந்து கொள்கின்றனர். எனையோர் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். Thank for the original writer Alex EraviVarma
  4. சர்வதேச விமான நிலையம் கட்டுவது... என்ற பெயரில், காசை சுருட்ட திட்டம் போடுகின்றார்கள். எத்தனைநாள் தான் டொலரை ஆட்டையை போடாமல் பார்த்துக் கொண்டு இருப்பது. அவங்களுக்கும் கை கடிக்கும் தானே... சிறிய நாட்டுக்கு.... கட்டுநாயக்கா, மத்தள, பலாலி, ஹிங்குரக்கொட என்று, நான்கு சர்வதேச விமான நிலையங்கள். ஜேர்மனியில் கூட... இவ்வளவு இல்லை. ஸ்ரீலங்காவை பார்க்க பொறாமையாக இருக்குது. 😂
  5. "வண்ணத் தேரில் அமர்ந்து வருகின்றான் பார்த்தசாரதி" என்ற பாடல் என நினைக்கின்றேன். முழுமையான பாடல் தெரியவில்லை. அப்போது இது மிகப் பிரபல்யமான பக்திப் பாடல். இந்திராகாந்தி காலத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர் பார்த்தசாரதி (தமிழ் பிராமணர், எமக்கு ஆதரவான கருத்தை கொண்டிருந்தவர்) இலங்கைக்கு பேச்சுவார்த்தைக்கு வருகின்ற காலம் அது. அதன் பின் இந்தப் பாடலை... இலங்கை வானொலியில் ஒலி பரப்பாமல் தடை செய்திருந்தார்கள். பிற் குறிப்பு: மேற் குறிப்பிட்ட தகவல் எனது நினைவில் இருந்து எழுதியவை. தவறுகள் இருக்கலாம். அறிந்தவர்கள் திருத்துவது வரவேற்கப் படுகின்றது.
  6. எலியை, விடுகின்றவர்தான்... பெண்ணின் உண்மையான கணவர். 😂
  7. இங்கு சில வைத்தியர்கள்.... 14 மணித்தியாலம் கூட தொடர்ந்து வேலை செய்கின்றார்கள். அவர்கள் வைத்தியப் படிப்பு படிக்கும் போதே, பணி செய்யும் நோக்கத்துடன்தான் மருத்துவ கல்வியை ஆரம்பிக்கின்றார்கள். அதனால்.. அவர்கள் தமது கடமையை தமது மருத்துவமனைக்கும், மக்களுக்கும் சிரித்த முகத்துடன் சேவையாற்றுகின்றார்கள். ஆனால் ஆசிய நாடுகளில்... மருத்துவராகியவுடன் பணம் சம்பாதிப்பதே அவர்கள் முதன்மையான நோக்கமாக உள்ளதை பல இடங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
  8. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு! ஜனாதிபதித் தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் செயற்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்கள் சட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காது சில அதிகாரிகள் செயற்படுவதால் அங்கு மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜனாதிபதித் தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படக்கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1392853
  9. ஆடி மாதம்... அறிவிப்பை வெளியிட, "பொன்ஸ்" தயங்குகின்றார் போலுள்ளது. 😂
  10. நாங்கள் இருந்த காலத்தில் வைத்தியரை சார் என்று கூப்பிட்டதில்லை. "டொக்ரர்" என்றே மரியாதையாக அழைத்துக் கொள்வார்கள். இலங்கையில் ஆசிரியரைத் தவிர வேறு இடங்களில் மிகக் குறைவாகவே சார் பாவிப்பார்கள். தமிழ்நாட்டில்.... ஒவ்வொரு இரண்டாவது சொல்லிலும் சார், சார்... என்று சொல்லி வெறுப்பேத்துவார்கள். இந்த "சார்" வியாதி... "சுமந்திரன் சார்" என்று அவரின் செம்புகள்... அழைக்கத் தொடங்கியதில் இருந்து, நம்மூரிலும் ஆரம்பித்துள்ளது என நினைக்கின்றேன். 😡 இந்த அரசியல்வாதிகளலால்... ஊருக்கு ஒரு நன்மையையும் இல்லை. 😗 மாறாக கெடுதலே அதிகம். 🤕 @பெருமாள்
  11. சில மாதங்களுக்கு முன்... அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த கப்பல் ஒன்றும் பாலத்துடன் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இப்ப... இந்த விபத்து நடந்திருக்கு. கள்ள அரசியல்வாதிகளும், பிக்குகளும் உள்ள நாட்டிற்கு வரும் கப்பல் எல்லாம் கவிழுது. 😂
  12. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் பொருள் தேடி வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் பொருள் தேடி அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும் இதில் நாட்டினைக்கெடுத்து நன்மையை அழிக்க நினைத்தால் எவர்க்கும் அழிவாகும் நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் அல்லதை நினைப்பது அழிவாற்றல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
  13. ஒரு நாளைக்கு... 3 கோடி வீதம் செலவு செய்தாலும், அம்பானியின் சொத்து கரைய 932 ஆண்டுகள் ஆகுமாம்.
  14. உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்... "உங்களைவாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு .. ஃபெமி கூறினார்: "நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்." 1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை. 2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது. 3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை. 4. இறுதிக்காலத்தில் தான் யதார்த்தமாக என் நண்பன் அவனுக்கு தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க சொன்னான், சுமார் 200 குழந்தைகள். என் நண்பனே கேட்டதற்காக நானும் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன். ஆனால் நண்பனோ நானும் அவனுடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினான். சரி நானும் மனமாறுதலுக்காக அவருடன் சென்றேன். அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். அப்போது அந்த குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர். அவர்களின் ஆனந்தத்தை என்னால் விவரிக்கவே முடியவில்லை... அது எனக்குள் ஏதோ சொல்லமுடியாத அற்புதத்தை உணர்ந்தேன். எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிகசெல்லமாக பிடித்து கொண்டது, நான் சிரித்து கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து கொண்டே விடாமல் இறுக பிடித்து கொண்டது நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா? இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது. அந்த குழந்தை கூறியது இது தான்: ‌"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அந்த சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது... தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்.... பழமையும் புதுமையும்
  15. 22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ‘6 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ‘5 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சின் செயலாளருக்கு நேற்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392818
  16. டிரம்புக்கு... காதிலை சுட்டதன் பின்னணியில் ஈரான் இருக்குது என்று சொல்லும் உலகத்தில், புட்டினை இதில் கோத்து விடுவதில் ஆச்சரியம் இல்லை. 😂 🤣
  17. ‘கத்திரிக்காய் கலர்ல ஒரு புடவை வாங்கிட்டு வாங்க'னு பொண்டாட்டி சொன்னா... புடவைக்கடைக்குள் நுழைய போன கணவன், எதுக்கும் கத்திரிக்காய் என்ன கலர்ன்னு ஒரு தடவை நல்லா பார்த்திட்டு போயிடுவோம்னு பக்கத்து மார்கெட்டுல நுழைஞ்சான்... இப்ப அவன் நிலமையை கொஞ்சம் யோசிங்க.!!
  18. உலகில் தானே தன், அடிப்படை கட்டமைப்பை அழிக்கும் ஒரே இனம்.தமிழனே... Arul Vinayagamoorthy
  19. அரசியல் வாதிகள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய சட்டமூலம். (அவசியம் என்றும் இதனை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை) தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து பெறும் வேலைத் திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை என்றும் எனவே அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில்; இயற்றப்பட வேண்டும் என தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுவதாகவும் அதனால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு நாட்டில் புதிய சட்டம் ஒன்று அவசியம் என்றும் இதனை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் நாட்டிலுள்ள 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்றும் தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1392804
  20. யுத்த காலத்தில் கூட பாடசாலைகள் மூடப்படவில்லை – மனுஷ நாணயக்கார. கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் போது, பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை எனவும், யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்” எனவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்துகம பொது விளையாட்டரங்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற களுத்துறை மாவட்டத்துக்கான ” ஜயகமு ஸ்ரீலங்கா” மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ” இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவதை வீரமாக கருதுகின்றனர் எனவும், இதன் மூலம் அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் அமைச்சர் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். https://athavannews.com/2024/1392812
  21. கர்ப்பிணி தாய்மார்களிடையே வேகமாக பரவும் நோய். கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உதித்த புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயின்றி வாழ்வதற்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்க்கரை உணவுகளை குறைத்து, அதிக காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ள உணவில் கவனம் செலுத்தி, ஒருவருக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம், குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், கழுத்துப் பகுதியில் கருமை, முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் காணப்பட்டால் நீரிழிவு நோய் பரிசோதனையை செய்வது அவசியம் எனவும் நீரிழிவு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உதித்த புளுகஹபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1392815
  22. அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ் அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 39 வயதுடைய ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ், அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்த பிரித்தானியா தான் அணு ஆயுதம் பெறும் இஸ்லாமிய நாடு என முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக பிரித்தானியா இருந்து வரும் நிலையில் ஜேடி வேன்ஸின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரித்தானியாவின் துணை பிரதமர் ஏஞ்சலா ராய்னர் (Angela Rayner), இது போன்று குற்றச்சாட்டுகளை சுமத்துவது வேன்சுக்கு வழக்கம் என விமர்ச்சித்துள்ளார். https://athavannews.com/2024/1392693
  23. சிடு மூஞ்சி மற்றும் மூலக்கொதி உள்ள ஆட்கள்.... இப்போது யாழுக்கு வருவது குறைவு என நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.