Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பருத்துறை - தொண்டமானாறு வீதியையும் செப்பனிட்டு தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம். 😜 😁
  2. நிலம்... இன்னும் கொஞ்சம் கூட நடுங்கி, நாலு கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால், உலக நாடுகளிடம் பல மில்லியன் டொலர்களை கறந்து... ஆயிரம் விகாரைகளை கட்டி இருக்கலாம். 😂 -ஸ்ரீலங்கா மைண்ட் வாய்ஸ்.- 🤣
  3. இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்! அனுராதபுரத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி அனுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1392491
  4. ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா! ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் இழங்கைத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸில் வசித்துவரும் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார். நேற்று மாலை 6.00 மணியளவில் தர்ஷன் செல்வராஜாவிடம் ஒலிம்பிக் தீபம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் அதனை ஏந்தி சுமார் 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் பரிஸ் நகரில் கடந்த வருடம் இடம்பெற்ற பாண் தயாரிப்புப் போட்டியில் முதலிடம் பெற்றிருந்தார். இதனையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392433
  5. தமிழ் என்று அந்தச் சிறுவன் சொன்னது, பெருமையாக உள்ளது. பலருக்கு கேள்வியே புரியாமல் சம்பந்தம் இல்லாத பதில்களை சொன்னது சிரிப்பாக இருந்தது. ஒரு கிழவி... "Happy Birthday" என்றும், மற்றது ஒன்று.. "அமெரிக்கா" என்றும், இன்னுமொன்று "Michal Jordan" என்றும் சொல்லுது. இதுகள் எல்லாம்... பள்ளிக்கூட பக்கமே போகவில்லையா. உலகத்துக்கு பாரமான சனங்கள். 😂
  6. இம்ரானின் கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம் ஆண்டு தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தார். இதனைத் தொடர்ந்து, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான்கானையும் அவரது தலைமையிலான கட்சியையும் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. எனினும், தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு அதிகபட்சமாக 93 இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த நிலையிலேயே இந்தக் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392370
  7. கென்யாவின் 42 பெண்களின் சடலங்கள் மீட்பு! கென்யாவின் நைரோபிக்கு அருகிலுள்ள கல்குவாரி ஒன்றில் அதிகளவான பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர் தெரிவிக்கையில் மனைவி உட்பட 42 பெண்களைக் கொன்று சடலங்களை அந்த இடத்தில் வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்களுடையது என நம்பப்படும் பல்வேறு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1392420
  8. அட... "சான்விச் மசாச்" ஆ..... புதுசா இருக்கு. 😂 அதை தாய்லாந்து பெண்கள் செய்வார்களா... அல்லது தடி மாடுகள் செய்வார்களா. 🤣
  9. நீங்கள் சொல்ல முதல்… பிற்சேர்க்கையாக சேர்த்து விட்டேன். 😂🤣
  10. அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂 நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. 🤣
  11. வேறு ஒரு திரியில்… @ரசோதரன் குறிப்பிட்ட மாதிரி, “ஶ்ரீலங்கா அமைச்சர்கள், காலையில் எழுந்து Good Morning சொல்வது போல்….. ஆளுக்கு ஒரு திட்டமும், அறிக்கையும் விட்டு விட்டு அதை அவர்களே மறந்து விடுவார்களாம்.” ஜனாதிபதி கூட விதிவிலக்கல்ல. 😂 நடந்து கொண்டிருக்கும் சாவகச்சேரி மருத்துவமனை பிரச்சினையிலும்… மீன்பிடித்துறை அமைச்சர், சுகாதாரத்துறையான மருத்துவமனை விடயத்தில் “கட்டைப் பஞ்சாயத்து” செய்து கொண்டிருப்பதும் இந்த வகையானதுதான். 🤣
  12. "மசாஜ்" செய்ய மட்டும்... ஒருக்கால் போகலாம் என்று இருக்கின்றேன். நீங்கள் தாய்லாந்தைப் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள். 😍 முன்பு போயிருக்கின்றீர்களா. 🤣
  13. சஜித்… 13’வது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்துவேன் என்று சிங்களப் பகுதியில் நின்று சொல்வாரா.
  14. தாய்லாந்து… “மசாஜ்” செய்வதற்கு நல்ல நாடு என்று சொல்கிறார்கள்.
  15. சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் பதற்றநிலை – ஒருவர் கைது! யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தையடுத்து ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த வைத்தியருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுக்கூடி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது. இந்நிலையில் 08ஆம் திகதி , நீண்ட இழுபறியின் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்ற வைத்தியர் அருச்சுனா, தான் விடுமுறையில் தான் செல்வதாகவும் மீண்டும் வருவேன் எனவும் கூறிச் சென்றார். வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதனை அடுத்து மறுநாள் 09ஆம் திகதி வடமாகாண சுகாதார திணைக்களத்தால் , வைத்தியர் கே. ரஜீவ் புதிய பதில் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு,பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சென்ற தான் விடுமுறை முடிய மீண்டும் வந்துள்ளேன் என முன்னாள் பதில் அத்தியட்சகர், பதில் அத்தியட்சகருக்கு உரிய அறையில் அமர்ந்துள்ளார். இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால் , பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரை வரவேற்க சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக மக்கள் கூடிய வேளை பொலிஸார் மக்களை வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் போது, நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1392271

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.