Everything posted by தமிழ் சிறி
-
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான ஐ.நா சபையின் தீர்மானம் - புறக்கணித்தது இந்தியா
இந்த வாக்கெடுப்பில்... ஸ்ரீலங்கா எந்தப் பக்கம் நின்றது என்று அறிய ஆவலாக இருக்கு.
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
“கடுகு சிறிது என்றாலும், காரம் பெரிது” என்று சொல்வார்கள். 😂
-
போல் சத்தியநேசன் காலமானார்.
ஈழப் போர் நடக்கும் காலங்களில் இவரின் பெயரை சமூக ஊடகங்கள் வாயிலாக பலமுறை கேள்விப் பட்டுள்ளேன். அவரின் படம் இருந்தால் இணைத்து விடுங்கள்.
-
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!!
இருக்கின்றதை இன்னும் பிரிக்காமல்… விட்டுக் கொடுப்புடன் செயல்பட தமிழரசுக் கட்சி முன் வரவேண்டும். அதற்கு தடையாக சுமந்திரன் இருந்தால்… சுமந்திரனை தூக்கி வெளியே போடுங்கள். சம்பந்தனின் சாவுடன்… ஒரு நல்ல விசயம் நடந்ததாக இருக்கட்டும்.
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தர் செய்த வேலைக்கு… எப்படி நிம்மதியான சாவு வரும். கடைசியில்… சுமந்திரனாலும் அவமானப் படுத்தப்பட்டு, பிரேதம் யாழ்ப்பாணம் வந்தும் அவமானப் பட்டுத்தான் போக வேண்டும் என்ற விதி இருந்திருக்கு. அங்கு தான்… கர்மா வேலை செய்திருக்கு.
-
சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
கைது செய்பவர்கள்… அரச வாகனத்தில் கைது செய்யாமல், தனியார் வாகனத்தில் கைது செய்து தமது முட்டாள் தனத்தை காட்டி உள்ளார்கள்.
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
ஆள் கடத்தலுக்கு… அனுபவம் காணாது போலை இருக்கு. 🤣 வாறவங்கள் தங்களுடன் மூட்டைப் பூச்சியையும் கடத்திக் கொண்டு வந்தால், அவங்களும் என்ன செய்யிறது… பாவங்கள். 😂 இனி சிறையில் இருந்து மூட்டைப் பூச்சி கடி வாங்கப் போகிறார்கள். 🤣
-
சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
தி.மு.க. ஆட்சியில்… சாட்டை துரை முருகன் நான்கைந்து தடவைக்கு மேல் கைது செய்திருப்பதை பார்க்க… சாட்டையின் விமர்சனங்களை தாங்க முடியாமல் எரிச்சலில் கைது பண்ணியது போல் தெரிகின்றது. சாட்டைக்கு தி.மு.க. புது வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
மருந்து அடிக்கிறவர்கள் வரும் போது, இவர்கள் ஏன் நிலத்தில் படுத்து இருந்தவர்கள். பிடிபட வேண்டும் என்று விதி இருந்தால்… பொலிஸ் தான் பிடிக்க வேண்டும் என்று இல்லை. மருந்து அடிக்கிறவர்களும் பிடிக்கலாம்.
-
போல் சத்தியநேசன் காலமானார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
அதானி குழுமத்தின் மன்னார் பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் குறித்த எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை - அரசாங்கம்
உண்மையாகவா… கேட்கவே உடம்பெல்லாம் புல்லரிக்குது. 😂 அடுத்த தீபாவளிக்கு முயற்சி பண்ணி பார்ப்போம். 😛 🤪 😜 🤣
-
இந்தியர்கள் கல்வியை விட திருமணத்திற்கே அதிகம் செலவிடுகின்றனர் – 10 கோடி என ஆய்வில் தகவல்
“வீட்டை கட்டிப் பார், திருமணத்தை செய்து பார்” என்ற பழமொழி 100 வீதம் உண்மை.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
படத்தைப் பார்த்தவுடன் உலக யுத்தம் வரும் என்று விளங்கி விட்டது. கடலை போடும் போது… கவனமாக போட வேணும் என்று, புட்டினுக்கு தெரியாது போலுள்ளது. 😂
-
இந்தியர்கள் கல்வியை விட திருமணத்திற்கே அதிகம் செலவிடுகின்றனர் – 10 கோடி என ஆய்வில் தகவல்
உலகம் எங்கும் திருமணச் செலவு கொரோனாவுக்குப் பின் இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. உணவு, உடை, திருமண மண்டபம் என்று 100 பேருடன் சாதாரணமாக ஒரு திருமணத்தை செய்யவே 15,000 ஐரோவை தாண்டி விடும். நகையையும் சேர்த்தால் 25,000 ஐரோ நிச்சயம். பிற் குறிப்பு: சீதன கணக்கை மேலே சேர்க்கவில்லை. 🤣
-
சம்பந்தர் காலமானார்
ஈழப்பிரியன்… இந்தப் பதிவு போட்டு பத்து மணித்தியாலம் ஆகியும் @Kandiah57 அண்ணையை இந்தப் பக்கம் காணவில்லை. சிலவேளை அவரின் மனைவியின் கண்ணில் இந்தப் பதிவு பட்டுவிட்டது போல் இருக்கு. 🤣 பென்சன் எடுத்த வயசிலை… பாவம், நல்ல சாத்துப்படி நடந்திருக்கு. 😂
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தருக்கு அடுத்து சங்கரியாரை கிழித்து தொங்க விட இப்பவே… “ஹோம் வேர்க்” செய்து வையுங்கள் தமிழன்பன். 😂
-
மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள்; விலைகளை குறைத்து மகிழ்விக்க வேண்டும் - சாமர சம்பத் வலியுறுத்தல்
நான் அனேகமாக நாளை வந்து விடுவேன் என நினைக்கின்றேன். எனக்கும், @வீரப் பையன்26 க்கும் ஆளுக்கொரு எண்ணைப் போத்திலை ரெடி பண்ணி வையுங்கோ. 🤣
-
மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள்; விலைகளை குறைத்து மகிழ்விக்க வேண்டும் - சாமர சம்பத் வலியுறுத்தல்
இதுக்கெல்லாம் கோடு போட்டுக் கொடுத்தது நம்ம சம்பந்தர் ஐயா தான். 😂 பிற் குறிப்பு: விசுகர்… நீங்கள், அந்தத் திரியை அணைய விடாமல் பார்த்துக் கொள்ள வேணும். 😁 எண்ணை ஊத்துறது உங்கள் பொறுப்பு. ஓகே…. 🤣
-
இரசித்த.... புகைப்படங்கள்.
காணொளி தெரியவில்லை ஈழப்பிரியன்.
-
நாட்டில் புதிய பொருளாதார, அரசியலமைப்பைக் கட்டியெழுப்ப மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது - ஜனாதிபதி
ஶ்ரீலங்கா தேரர்கள்… உலகத்திலேயே உதவாக்கரை மனிதர்கள். இவர்களின் மனங்களில் இனவாதம் இருக்கும் மட்டும் நாடு இன்னும் அதல பாதாளத்திற்குத்தான் போகும். அவர்களுக்கு அரசாங்கம் வளைந்து கொடுத்து இடம் கொடுத்துவிட்டு இப்ப புலம்பி பயன் இல்லை. அனுபவியுங்கள்.
-
மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள்; விலைகளை குறைத்து மகிழ்விக்க வேண்டும் - சாமர சம்பத் வலியுறுத்தல்
ஆக… மது அருந்துவதற்கும், மனைவிதான் காரணம். 😂 நல்ல அமைச்சர், நல்ல கண்டுபிடிப்பு. 🤣 அமைச்சர் தன்னுடைய வீட்டுப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் போட்டுடைத்து விட்டார். 😁
-
அதானி குழுமத்தின் மன்னார் பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் குறித்த எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை - அரசாங்கம்
சுற்றுச் சூழலைப் பற்றி இங்கு அரசு கவலைப் படவில்லை. இந்திய நிறுவனத்தை திருப்திப் படுத்துவதிலேயே அரசாங்கம் முனைப்பு காட்டுகின்றது. தீவுப்குதி, மன்னார், திருகோணமலை, பூநகரி என்று தமிழர் வாழும் பகுதிகளையே குறி வைத்து கெடுப்பது ஏன்? போய்…. சிங்களவர் பகுதிகளில் உங்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுதானே… அவன் ஒற்றுமையாக எதிர்ப்பான் என்ற பயமா…. நமக்கு வாய்த்த அரசியல் வாதிகளால் எத்தனை துன்பத்தை அனுபவிக்க வேண்டி உள்ளது.
-
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!!
நல்ல புடுங்குப்பாடு… சம்பந்தர் செத்த பின்பும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற புத்தி இவர்களுக்கு வரவில்லை. தமிழனை நடுத்தெருவில் நிறுத்தாமல் இவர்கள் ஓய மாட்டார்கள் போலுள்ளது.
-
தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து
பாரிய தீ விபத்து என்று போட்டிருக்கின்றார்கள். எத்தனை புத்தகம் எரிந்தது என்றும் போட்டிருக்கலாம். அவர்கள் எரித்த யாழ்ப்பாண நூலகத்திற்கு, அதுகும் ஈடாகினால் தான்… கணக்கு நேராகும்.
-
தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து
முன்னை இட்ட தீ, முப்புரத்திலே… பின்னை இட்ட தீ, தென் இலங்கையிலே. - பட்டினத்தார்.-