Everything posted by தமிழ் சிறி
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
யூரோக் கிண்ணத்தை சுவீகரித்த ஸ்பெயின்! ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ணக் காற்பந்துத் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின்அணி 4ஆவது முறையாக யூரோக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் 24 அணிகள் பங்கேற்கும் யூரோக் கிண்ணக் காற்பந்துத் தொடரானது கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமானது. இத் தொடரில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள்இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன. இந்நிலையில் நேற்றைய தினம் பெர்லின் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. இதன்மூலம் 1964, 2008 மற்றும் 2012க்குப் பிறகு, நான்காவது முறையாக ஸ்பெயின் யூரோ காற்பந்து கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. https://athavannews.com/2024/1392258
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஸ்பெயின் நாலாவது தரம் ஐரோப்பா கிண்ணமும், ஒரு முறை உலகக் கிண்ணமும் எடுத்திருக்கு பையன்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஸ்பெயின்... ஐரோப்பா கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஸ்பெயின் 2 - இங்கிலாந்து 1- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஸ்பெயின் 1 - இங்கிலாந்து 1- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஸ்பெயின் 1 - இங்கிலாந்து 0- தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முடிக்கப்பட்ட டெலிவரி பாய்! யார் இந்த ரவுடி திருவேங்கடம்? கணக்கை தொடங்கிய காக்கிகள்!- அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
•அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பா? சில வருடங்களுக்கு முன்னர் பி.பி.சி க்கு பேட்டி கொடுத்த சம்பந்தர் ஐயா “அமிர் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” எனக் கூறியிருந்தார். (1) தமிழ் மக்களுக்கு இன உணர்வை ஊட்டியதில் அமிர்தலிங்கம் பங்கு மறுக்க முடியாதது. ஆனால் அதை அவர் தமிழ் மக்களின் நலன்களுக்காக செய்யவில்லை. மாறாக தனது பதவி நலன்களுக்காகவே செய்தார். (2) சுயாட்சிக் கழக நவரட்ணம் தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தபோது அது தற்கொலைக்கு ஒப்பான தீர்வு என அமிர்தலிங்கம் சாடினார். ஆனால் அதே அமிர்தலிங்கம் தான் தேர்தலில் தோற்றதும் தனது பதவி நலனுக்காக அதே தமிழீழ தீர்வை முன்வைத்தார். (3) ”அடைந்தால் தமிழீழம் இல்லையேல் சுடுகாடு” என இளைஞர்களை உசுப்பேற்றிவிட்ட அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தபோது அதனை ஏற்றார். ஜே.ஆர் “மாவட்ட சபை” வழங்க முன்வந்தபோது அதனை ஏற்றார். இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட மாகாண சபையை ஏற்றார். (4) வடபகுதியில் சாதிப் போராட்டம் நடைபெற்றபோது அமிர்தலிங்கம் உயர்சாதியினர் பக்கமே நின்றார். பாராளுமன்றத்தில் “சங்கானை இன்னொரு சங்காயாக (சீனா) மாறுகின்றது” என தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எதிராக பேசினார். (5) தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவராக (மலையக) தொண்டமான் இருந்தார். ஆனால் அமிர்தலிங்கம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தபோது அதனால் தமது மக்களுக்கு பயன் இல்லை எனக் கூறி தொண்டமான் விலகி சென்றார். (6) ராஜதுரைக்கு தலைமைப் பதவியை வழங்கியிருந்தால் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அமிர்தலிங்கம் தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜதுரைக்கு எதிராக தமிழரசுக்கட்சி சார்பில் காசி ஆனந்தனை போட்டியிட செய்தார். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை குழப்பினார். (7) இலங்கை ராணுவம் தமிழ் மக்களை கொலை மற்றும் பாலியல் வல்லுறவு செய்தபோது அதனைக் கண்டித்த அமிர்தலிங்கம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்தபோது அதனைக் கண்டிக்க மறுத்தார். (😎 இலங்கை அரசு தரப்படுத்தலை அமுல்படுத்தியபோது அதற்கு எதிராக தமிழ் மாணவர்களை போராடும்படி தூண்டிய அமிர்தலிங்கம் தனது மகனுக்கு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு பெற்றார். (9) இந்திரா காந்தி போராளிகளுக்கு பயிற்சி வழங்க முனைந்தபோது அதனை தடுக்க அமிர்தலிங்கம் முனைந்தார். ஆனால் மதுரை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே தனது மகன் ஆயுத இயக்கம் கட்டிய போது அதனை அவர் தடுக்கவில்லை. (10) பல தமிழ் இளைஞர்களை அன்றைய ஜே.ஆர் அரசு கைது செய்தபோது அவர்களை விடுவிக்க அமிர்தலிங்கம் முனையவில்லை. ஆனால் தனது மகனின் கடிதத்தை கொண்டு சென்ற தனது உறவினர் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதும் உடனே ஜே. ஆர் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுவித்தார். அந்த உறவினர் எந்த வழக்கும் இன்றி உடனே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மலேசியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். (11) யாழப்பாணத்தில் தேர்தலில் தோல்வியுற்ற அமிர்தலிங்கம் அம்பாறையில் இருந்து தெரிவு செய்யப்பட விரும்பினார். ஆனால் அங்கும் அவர் தோல்வியுற்றார். இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அவர் கொல்லப்பட்டார். அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால், • தமிழீழம் கிடைத்திருக்காது. ஏனெனில் அவர் தமிழீழ கோரிக்கையை எப்போதோ கைவிட்டுவிட்டார். • முள்ளிவாய்க்கால் அவலத்தையும் அவர் தடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் உயிரோடு இருந்த காலத்திலே இந்திய ராணுவ அழிப்பை தடுக்காதவர் மட்டுமல்ல அதை கண்டிக்க கூட முன்வராதவர். • தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்திருக்காது. சம்பந்தர் ஐயாவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்திருக்காது. எனவே அமிர்தலிங்கம் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல.! குறிப்பு- புலிகளுக்கு பின்னால் பைல் கட்டை தூக்கி திரிந்த காலத்தில் அமிர் இறப்பு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சம்பந்தர் ஐயா கூறவில்லை. இப்போது அந்த சம்பந்தர் ஐயா இறந்த பின்பு சம்பந்தர் ஐயா மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சுமந்திரன் கூறுகின்றார். தோழர் பாலன்- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
பையன்.... தூரத்தில் இருந்து, துப்பாக்கியால் சுட்டு எல்லாம் ட்ராமா செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ட்ராமா செய்திருந்தாலும்... இப்போதைக்கு, ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும். அப்படி எவரும் நீங்கள் நினைத்தமாதிரி எழுதியாக தெரியவில்ல. உண்மைச் சம்பவம் போலதான் தெரிகின்றது. ட்ரம்ப்... மயிரிழையில் உயிர் தப்பியதாகவே நான் கருதுகின்றேன். ஒருவனுக்கு ஆயுள் நல்ல பலமாக இருந்தால், எந்த உயிர் ஆபத்தில் இருந்தும் தப்பி விடுவார்கள்.- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
துப்பாக்கி சூடு நடந்த பொழுது எடுத்த காணொளி.- Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
துப்பாக்கி சூடு நடந்த பொழுது எடுத்த காணொளி.- Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
குமாரசாமி அண்ணே... செலன்ஸ்கியின் நிலைமை "அரசனை நம்பி, புட்டினை (புருசனை) கைவிட்ட" நிலைமையாய் போயிட்டுது. இன்னும் காலம் கடந்து விடவில்லை... புட்டின் திறந்த சமாதானக் கதவுகள் இன்னும் திறந்தே இருக்கு. பேசாமல் ஒற்றுமையாக போனால்... மிஞ்சின மிச்ச சொச்சத்தையும் காப்பாற்றலாம். இல்லாட்டி... நவம்பர் அமெரிக்க தேர்தலுக்கு பிறகு, ட்ரம்ப் வந்து முழு உக்கிரைனையும் "கிளீன் " பண்ணி விட்டுடுவார்.- Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
நிச்சயமாக ட்ரம்ப் பெரும் ஆபத்தில் இருந்து, மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவர் ஆட்சிக் காலத்தில், உலகத்திற்கு செய்த நன்மைகளே அவரை காப்பாத்தி இருக்கு. ட்ரம்ப் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று நலமடைய வேண்டுவதுடன். அவரின் எதிர் வேட்பாளர்... பைடனை, மண் கவ்வ வைக்க வேண்டும். 😂- சம்பந்தர் காலமானார்
கடந்த பாராளுமன்ற தேர்தலில், யாழ் மத்திய கல்லூரியில் வைத்து சுமந்திரன் வென்றதாக அறிவித்த போதும்... அவரை வாழ்த்துவதற்குப் பதிலாக... "கள்ளா, கள்ளா" என்று கூப்பிட்டு அவமானப் படுத்தியதுதான் நினைவிற்கு வருகின்றது. ஆசிய நாட்டு தேர்தல்களில்... தில்லுமுல்லுகள் அதிகம்.- ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை!
ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை! ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும், அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தொிவித்துள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”ட்ரம்ப் மீதான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதை அனுமதிக்க முடியாது. இலங்கையிலும் தேர்தல் நெருங்கி வருவதால் எமது எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், கடந்த வாரம் நிதிக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வீசா நடைமுறைகளில் முன்னெடுக்கப்பட்ட மாற்றங்களில் 140 நாடுகளில் தொழிற்பட்டு வரும் நிறுவனமான VFS எனும் நிறுவனத்தின் பெயரை முன்னிலைப்படுத்திக் கொண்டு வேறு கம்பனிகள் மூலம் இதை முன்கொண்டு செல்கின்றனர். இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபா வருமானம் இல்லாது போகிறது. வீசா நடைமுறைகள் குறித்து கேட்டறிய நிதிக் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது முதல் தடவையில் அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை. இது ஓரு வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் நடவடிக்கையாக பார்க்க வேண்டும். அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களையும், நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும். அரச அனுமதி இல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல், கேள்வி மனு இல்லாமல் இந்த கம்பனிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1392189- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
ஒரு மருத்துவரும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்! சமூக வலைத்தளங்களின் காலத்தில், யுடியுப்களின் காலத்தில் ஒருபுறம் செய்திக்கும் வதந்திக்கும் இடையிலான வித்தியாசம் சுருங்கிகொண்டே போகிறது. இன்னொருபுறம் ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ருசுப்படுத்தத் தேவையான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன, மக்கள் மயப்பட்டுள்ளன.உண்மையை உறுதிப்படுத்தத் தேவையான வாய்ப்புகள் அதிகம் மக்கள் மயப்பட் டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,வதந்தியை விட உண்மை அதிகம் ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. ஏன் ? ஏனென்றால், சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதிகமதிகம் பொதுப் புத்திக்கு கிட்டே வருகின்றன.பொதுப் புத்தியானது எப்பொழுதும் விஞ்ஞான பூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. எனவே பொதுப் புத்தியை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் யுடியுப்களிகளும் சமூகவலைத்தளங்களும் சுடச்சுட செய்திகளை வழங்கும்.இது பாரம்பரிய ஊடகத்துறையில் இருக்கும் தணிக்கை,சுய தணிக்கை, சமூகப் பொறுப்பு எல்லாவற்றையுமே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்து கூறும் சுதந்திரத்தை தகவல் புரட்சி வழங்கியிருக்கிறது. இதனால் இணைய இணைப்பு இருந்தால் யாரும் எதையும் கூறலாம் என்ற நிலை தோன்றுவிட்டது.தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிக் கருத்துக்கூறும் சுதந்திரம் ஆபத்தானது. அது நிபுணர்களை சமூக வலைத்தளங்களில் இருந்தும் சமூக ஊடகங்களில் இருந்தும் வெளித்தள்ளுகின்றது.நிபுணர்களும் துறை சார்ந்த வல்லுநர்களும் சமூக வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அமைதியாக விலகிச் செல்கிறார்கள்.அந்த வெற்றிடத்தை மந்தர்கள் நிரப்புகிறார்கள். ஊடகங்களுக்கு குறிப்பாக சமூக வலைத்தள ஊடகங்களுக்கு சர்ச்சைகள் தேவை. அவை செய்திப் பசியோடு காத்திருக்கின்றன.அதனால் அவை சர்ச்சைகளைத் தேடித் திரிகின்றன. இவ்வாறு சர்ச்சைகளுக்காகக் காத்திருக்கின்ற, சர்ச்சைகளை சுடச்சுட பரிமாறுகின்ற ஒரு சமூக ஊடகச் சூழலுக்குள் ஒரு மருத்துவர் நேரலையில் தோன்றினார். அவர் அவ்வாறு தோன்றியதே ஒரு சர்ச்சை. ஏனென்றால் தமிழ் சமூகத்தில் மருத்துவர்கள் தங்களுக்கு என்று பவித்திரமான ஒரு ஸ்தானத்தை எப்பொழுதும் பாதுகாத்துக் கொள்வார்கள்.அந்த பவித்திரமான ஸ்தானத்தை விட்டு வெளியே வருவது குறைவு. விதிவிலக்காக சாவகச்சேரி ஆஸ்பத்திரியின் முன்னாள் அத்தியட்சகர் மருத்துவர் அர்ஜுனா மற்றும் கண்டாவளையில் ஒரு பெண் மருத்துவர் போன்றவர்கள் சர்ச்சைகளுக்குள் வருகிறார்கள். சமூக ஊடகங்களில் அதிகம் “வைரல்” ஆகிறார்கள். மருத்துவர் அர்ஜுனா ஒரு நேரலைப் பிரியர் என்று தெரிகிறது. அவர் எப்பொழுதும் நேரலையில் தோன்றுகிறார்.தன்னுடைய எல்லா விவகாரங்களையும் மக்களுக்கு நேரடியாக சமர்ப்பிக்கின்றார். அதில் ஓர் அப்பாவித்தனம் உண்டு. சாகச உணர்வு உண்டு.தன்னை கதாநாயகனாக கட்டிஎழுப்பும் ஆசையுண்டு.ஒரு மருத்துவர் அப்படி நேரலையில் தோன்றுவது தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை வித்தியாசமானது. அதனால் அர்ஜுனா வைரல் ஆனார். அர்ஜுனா ஒரு ஆஸ்பத்திரியின் அத்தியட்சகராக இருந்தவர் என்ற அடிப்படையில்,தான் வேலை செய்த சிஸ்டத்துக்குள் இருந்த குளறுபடிகளை வெளியே கொண்டு வருகிறார்.அவர் சிஸ்டத்தை அம்பலப்படுத்துகின்றார். உள் வீட்டு விஷயங்களை அவர் வெளியே கொட்டக்கொட்ட அவருக்கு ஆதரவு பெருகியது. அவருடைய முகநூல் கணக்கைத் தொடர்வோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எப்பொழுது தாண்டி விட்டது. அவரும் அதை ரசிக்கிறார். அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றார். அவர் ஒரு விதிவிலக்கு. தான் வேலை செய்யும் சிஸ்டத்தையே பகிரங்கமாக விமர்சித்தது, அதிலும் பேர் சொல்லி விமர்சித்தது, அதனால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தொடர்ச்சியாக நேரலையில் நிற்பது, மக்களை சிஸ்டத்துக்கு எதிராகத் திரளச் செய்தது….போன்ற பல விடயங்களிலும் அவர் வழமையான மருத்துவர்களுக்குள்ள குணத்தோடு இல்லை. விதிவிலக்காகக் காணப்படுகிறார். அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் பாரதூரமானவை. அவர் முன்வைக்கும் விமர்சனங்களும் பாரதூரமானவை. உயிர்களோடு தொடர்புடையவை, ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை, மருத்துவத்துறை சார் பொறுப்புக் கூறலோடு தொடர்புடையவை. அந்தக் கேள்விகள் சரியா பிழையா என்று இக்கட்டுரை ஆராயப் போவதில்லை. ஆனால் மருத்துவத் துறை சார் பொறுப்பு மிக்கவர்கள் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் இதுவரையிலும் பதில் சொல்லவில்லை. அர்ஜூனா செய்வது சரியா பிழையா என்பதுவும் தனியாக விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் ஒரு கலகத்தைத் தொடக்கி விட்டார். அந்த கலகம் மக்களைக் கவர்ந்திருக்கிறது. மக்களை வீதிக்குக் கொண்டு வந்திருக்கிறது. சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட மக்களின் எண்ணிக்கையானது சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானது. மக்கள் ஏன் அவ்வாறு திரண்டார்கள்?அர்ஜுனாவை நம்பித் திரண்டார்களா? இல்லை. மக்கள் மத்தியில் ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்து பதில் சொல்லப்படாத கேள்விகள் இருந்தன. அச்சங்கள் இருந்தன. குறிப்பாக தனியார் மருத்துவத் துறை தொடர்பில் ஆழமான வெறுப்பு இருக்கின்றது. இவ்வாறு மக்களின் பொது மனோநிலையில் மண்டிக் கிடந்த கோபம், பயம், சந்தேகம், வெறுப்பு,கையாலாகத்தனம் போன்ற எல்லாவற்றினதும் பிரதிநிதியாக அர்ஜுனா தோன்றினார்.அதனால்தான் மக்கள் ஆஸ்பத்திரிக்கு முன் திரண்டார்கள். அர்ஜுனாவை எதிர்ப்பவர்கள்,அவருடைய தனிப்பட்ட சுபாவத்தை விமர்சிப்பவர்கள்,அவருடைய நடத்தைகளை விமர்சிப்பவர்கள், ஒரு விடயத்தை இங்கு தொகுத்துப் பார்க்க வேண்டும்.மக்கள் வெற்றிடத்தில் இருந்து திரண்டு வரவில்லை. மக்களுடைய அடி மனதில் மண்டிக்கிடந்த வெறுப்புத்தான் சந்தேகம்தான் அவ்வாறு திரளக் காரணம்.அதை சமூக ஊடகங்களும் யு டியுப்களும் பரவலாக்கின,பலப்படுத்தின. அர்ஜுனாவின் கலகம் வெடித்தெழுந்த பின்னணியில் அது தொடர்பில் முதலில் கருத்துக் கூறாத மருத்துவர் சத்தியமூர்த்தி,சில நாட்கள் கழித்து ஒரு பதிவை முகநூலில் போட்டார்.அதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் பதில் வினை ஆற்றியிருந்தார்கள்.அதில் பெருந்தொகையானவை வெறுப்பும் எதிர்ப்பும் மிக்கவை. மருத்துவர் சத்தியமூர்த்தியை ஆதரித்து, அவரைப் பாதுகாத்து வந்த குறிப்புகள் மிகக் குறைவு. இது எதைக் காட்டுகின்றது? மருத்துவத்துறை சார்ந்து சாதாரண மக்கள் மத்தியில் சந்தேகங்களும் பயங்களும் அதிருப்தியும் உண்டு என்பதைத்தான் அது காட்டுகின்றது. தனியார் மருத்துவத் துறையின் வளர்ச்சியும் அரச மருத்துவமனைகளில் நிகழும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் மேற்கண்ட அதிருப்திகளுக்குக் காரணமாக இருக்கலாம். சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மையை விட வதந்திகள் அதிகம் பரவுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.ஆனால் இங்கு பிரச்சனை அவையல்ல. மக்கள் மத்தியில் ஆழமான சந்தேகங்களும் கோபமும் உண்டு என்பதுதான் பிரச்சினை.அதை மருத்துவத் துறை எதிர் கொள்ள வேண்டும். அதற்கு பதில் கூற வேண்டும். அரச மருத்துவமனைகளை தமிழ் கிராம மக்கள் தர்மாஸ்பத்திரி என்று அழைப்பார்கள்.ஏனென்றால் அங்கே மருந்தும் சிகிச்சையும் தர்மமாக வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையில். ஆனால் மெய்யான பொருளில் அவை தர்மாஸ்பத்திரிகள் அல்ல. அங்கு வேலை செய்யும் எல்லாருக்குமே சம்பளம் வழங்கப்படுகிறது. இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன. யாரும் இலவசமாகத் தொண்டு புரியவில்லை. அது மட்டுமல்ல அங்கு இலவசமாகத் தரப்படும் மருந்தும் சிகிச்சையும் கூட மக்களிடம் சேகரித்த வரிப்பணம்தான். அதாவது மக்கள் அரசாங்கத்துக்கு கொடுத்த வரிதான் இலவச சிகிச்சையாக இலவச மருந்தாக இலவச கல்வியாக திருப்பி வழங்கப்படுகிறது. மேற்கத்திய வளர்ச்சி அடைந்த முதலாளித்துவங்களில் அது நலன்புரி அரசு என்ற வெற்றிகரமான ஒரு சிஸ்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கேயோ சாதாரண மக்கள் அதனை அரசாங்கம் தங்களுக்குச் செய்யும் தர்மமாக கருதுகிறார்கள். இவ்வாறு அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகம்,தர்மாஸ்பத்திரிகள் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மமாக நடக்கவில்லை என்று கருதும் பொழுதே விமர்சனங்கள் எழுதுகின்றன.இதில் தனியார் மருத்துவத் துறை தொடர்பான விமர்சனங்களும் அடங்கும். அர்ஜுனாவின் கலகத்தை பொதுமக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்?அர்ஜுனா எழுப்பிய கேள்விகள் ஏன் பொதுமக்களை ஆஸ்பத்திரிக்கு முன் கொண்டு வந்து நிறுத்தின? இந்த விடயத்தில் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் அர்ஜுனாவின் விடயத்தை விவகாரம் ஆக்கியதில் அதிகம் பங்களிப்பு செய்ததாக ஒரு அவதானிப்பு உண்டு. ஊடகங்களில் அந்த உள்ளூராட்சி சபை உறுப்பினரும் இடைக்கிடை தோன்றினார்.அவர் போலீசாரல் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பு நூற்றுக்கணத்தில் திரண்ட மக்களை அவர் மட்டும் அழைத்துக் கொண்டு வரவில்லை. மாறாக மக்களிடம் ஏற்கனவே உள்ளுறைந்து காணப்பட்ட கேள்விகள்,சந்தேகங்கள்,கோபங்கள் என்பவற்றின் விளைவாகத்தான் மக்கள் அங்கே வந்தார்கள்.சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதனை பரபரப்பாக சுடச்சுட வழங்கின. அதனால் மக்கள் வீதிக்கு வந்தார்கள். அதாவது மக்கள் அவ்வாறு திரளும் அளவுக்கு மக்கள் மத்தியில் விடை கிடைக்காத கேள்விகளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் சந்தேகங்களும் தனியார் மருத்துவத்துறை தொடர்பாக பயங்களும் வெறுப்பும் உண்டு என்று பொருள்.அர்ஜுனா அவ்வாறு ஏற்கனவே மக்கள் மத்தியில் பரவலாக காணப்பட்ட அதிருப்தி,வெறுப்பு,சந்தேகம் போன்றவற்றுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கினார். அப்படிப் பார்த்தால் அர்ஜுனா ஒரு சிறு கலகத்தைச் செய்திருக்கிறார்.ஆனால்,அந்தக் கலகத்தை ஒரு சமூக மாற்றத்துக்கான தொடக்கப் பொறியாக மாற்றத் தேவையான பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் உண்டா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அவர் அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் அமைந்திருந்தது. அதில் அவர் ஏன் அடிக்கடி நேரலையில் தோன்றினார் என்பதற்கு விடை கிடைக்கின்றது. அந்த நேர்காணல் முழுவதிலும் அவர் தன்னுடைய முதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஒரு விளையாட்டுப் பிள்ளைபோல, சாகச உணர்வு நிரம்பியவராக, ஒரு விதத்தில் பொறுப்பற்றவராக,கருத்துக்களைத் தெரிவித்தார்.சமூக ஊடகச் சூழலுக்குள் அளவுக்கு மிஞ்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு கலகக்காரராகவே அவர் அதில் தோன்றினார். இந்த நேர்காணல் அவர் மீதான விமர்சனங்களை பலப்படுத்தக் கூடியது. சமூக ஊடகச் சூழலில் சிலசமயம் இன்றைய செய்தி நாளைய குப்பை. அர்ஜுனா கேட்ட கேள்விகளும் அவ்வாறு நாளைக்கு குப்பை ஆகிவிடக்கூடாது. https://athavannews.com/2024/1392182- சம்பந்தர் காலமானார்
சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட மக்களின் எண்ணிக்கையானது சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானது. - நிலாந்தன்! -- ஒரு மருத்துவரும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்!
ஒரு மருத்துவரும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்! சமூக வலைத்தளங்களின் காலத்தில், யுடியுப்களின் காலத்தில் ஒருபுறம் செய்திக்கும் வதந்திக்கும் இடையிலான வித்தியாசம் சுருங்கிகொண்டே போகிறது. இன்னொருபுறம் ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ருசுப்படுத்தத் தேவையான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன, மக்கள் மயப்பட்டுள்ளன.உண்மையை உறுதிப்படுத்தத் தேவையான வாய்ப்புகள் அதிகம் மக்கள் மயப்பட் டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,வதந்தியை விட உண்மை அதிகம் ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. ஏன் ? ஏனென்றால், சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதிகமதிகம் பொதுப் புத்திக்கு கிட்டே வருகின்றன.பொதுப் புத்தியானது எப்பொழுதும் விஞ்ஞான பூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. எனவே பொதுப் புத்தியை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் யுடியுப்களிகளும் சமூகவலைத்தளங்களும் சுடச்சுட செய்திகளை வழங்கும்.இது பாரம்பரிய ஊடகத்துறையில் இருக்கும் தணிக்கை,சுய தணிக்கை, சமூகப் பொறுப்பு எல்லாவற்றையுமே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்து கூறும் சுதந்திரத்தை தகவல் புரட்சி வழங்கியிருக்கிறது. இதனால் இணைய இணைப்பு இருந்தால் யாரும் எதையும் கூறலாம் என்ற நிலை தோன்றுவிட்டது.தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிக் கருத்துக்கூறும் சுதந்திரம் ஆபத்தானது. அது நிபுணர்களை சமூக வலைத்தளங்களில் இருந்தும் சமூக ஊடகங்களில் இருந்தும் வெளித்தள்ளுகின்றது.நிபுணர்களும் துறை சார்ந்த வல்லுநர்களும் சமூக வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அமைதியாக விலகிச் செல்கிறார்கள்.அந்த வெற்றிடத்தை மந்தர்கள் நிரப்புகிறார்கள். ஊடகங்களுக்கு குறிப்பாக சமூக வலைத்தள ஊடகங்களுக்கு சர்ச்சைகள் தேவை. அவை செய்திப் பசியோடு காத்திருக்கின்றன.அதனால் அவை சர்ச்சைகளைத் தேடித் திரிகின்றன. இவ்வாறு சர்ச்சைகளுக்காகக் காத்திருக்கின்ற, சர்ச்சைகளை சுடச்சுட பரிமாறுகின்ற ஒரு சமூக ஊடகச் சூழலுக்குள் ஒரு மருத்துவர் நேரலையில் தோன்றினார். அவர் அவ்வாறு தோன்றியதே ஒரு சர்ச்சை. ஏனென்றால் தமிழ் சமூகத்தில் மருத்துவர்கள் தங்களுக்கு என்று பவித்திரமான ஒரு ஸ்தானத்தை எப்பொழுதும் பாதுகாத்துக் கொள்வார்கள்.அந்த பவித்திரமான ஸ்தானத்தை விட்டு வெளியே வருவது குறைவு. விதிவிலக்காக சாவகச்சேரி ஆஸ்பத்திரியின் முன்னாள் அத்தியட்சகர் மருத்துவர் அர்ஜுனா மற்றும் கண்டாவளையில் ஒரு பெண் மருத்துவர் போன்றவர்கள் சர்ச்சைகளுக்குள் வருகிறார்கள். சமூக ஊடகங்களில் அதிகம் “வைரல்” ஆகிறார்கள். மருத்துவர் அர்ஜுனா ஒரு நேரலைப் பிரியர் என்று தெரிகிறது. அவர் எப்பொழுதும் நேரலையில் தோன்றுகிறார்.தன்னுடைய எல்லா விவகாரங்களையும் மக்களுக்கு நேரடியாக சமர்ப்பிக்கின்றார். அதில் ஓர் அப்பாவித்தனம் உண்டு. சாகச உணர்வு உண்டு.தன்னை கதாநாயகனாக கட்டிஎழுப்பும் ஆசையுண்டு.ஒரு மருத்துவர் அப்படி நேரலையில் தோன்றுவது தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை வித்தியாசமானது. அதனால் அர்ஜுனா வைரல் ஆனார். அர்ஜுனா ஒரு ஆஸ்பத்திரியின் அத்தியட்சகராக இருந்தவர் என்ற அடிப்படையில்,தான் வேலை செய்த சிஸ்டத்துக்குள் இருந்த குளறுபடிகளை வெளியே கொண்டு வருகிறார்.அவர் சிஸ்டத்தை அம்பலப்படுத்துகின்றார். உள் வீட்டு விஷயங்களை அவர் வெளியே கொட்டக்கொட்ட அவருக்கு ஆதரவு பெருகியது. அவருடைய முகநூல் கணக்கைத் தொடர்வோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எப்பொழுது தாண்டி விட்டது. அவரும் அதை ரசிக்கிறார். அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றார். அவர் ஒரு விதிவிலக்கு. தான் வேலை செய்யும் சிஸ்டத்தையே பகிரங்கமாக விமர்சித்தது, அதிலும் பேர் சொல்லி விமர்சித்தது, அதனால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தொடர்ச்சியாக நேரலையில் நிற்பது, மக்களை சிஸ்டத்துக்கு எதிராகத் திரளச் செய்தது….போன்ற பல விடயங்களிலும் அவர் வழமையான மருத்துவர்களுக்குள்ள குணத்தோடு இல்லை. விதிவிலக்காகக் காணப்படுகிறார். அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் பாரதூரமானவை. அவர் முன்வைக்கும் விமர்சனங்களும் பாரதூரமானவை. உயிர்களோடு தொடர்புடையவை, ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை, மருத்துவத்துறை சார் பொறுப்புக் கூறலோடு தொடர்புடையவை. அந்தக் கேள்விகள் சரியா பிழையா என்று இக்கட்டுரை ஆராயப் போவதில்லை. ஆனால் மருத்துவத் துறை சார் பொறுப்பு மிக்கவர்கள் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் இதுவரையிலும் பதில் சொல்லவில்லை. அர்ஜூனா செய்வது சரியா பிழையா என்பதுவும் தனியாக விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் ஒரு கலகத்தைத் தொடக்கி விட்டார். அந்த கலகம் மக்களைக் கவர்ந்திருக்கிறது. மக்களை வீதிக்குக் கொண்டு வந்திருக்கிறது. சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு முன் திரண்ட மக்களின் எண்ணிக்கையானது சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானது. மக்கள் ஏன் அவ்வாறு திரண்டார்கள்?அர்ஜுனாவை நம்பித் திரண்டார்களா? இல்லை. மக்கள் மத்தியில் ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்து பதில் சொல்லப்படாத கேள்விகள் இருந்தன. அச்சங்கள் இருந்தன. குறிப்பாக தனியார் மருத்துவத் துறை தொடர்பில் ஆழமான வெறுப்பு இருக்கின்றது. இவ்வாறு மக்களின் பொது மனோநிலையில் மண்டிக் கிடந்த கோபம், பயம், சந்தேகம், வெறுப்பு,கையாலாகத்தனம் போன்ற எல்லாவற்றினதும் பிரதிநிதியாக அர்ஜுனா தோன்றினார்.அதனால்தான் மக்கள் ஆஸ்பத்திரிக்கு முன் திரண்டார்கள். அர்ஜுனாவை எதிர்ப்பவர்கள்,அவருடைய தனிப்பட்ட சுபாவத்தை விமர்சிப்பவர்கள்,அவருடைய நடத்தைகளை விமர்சிப்பவர்கள், ஒரு விடயத்தை இங்கு தொகுத்துப் பார்க்க வேண்டும்.மக்கள் வெற்றிடத்தில் இருந்து திரண்டு வரவில்லை. மக்களுடைய அடி மனதில் மண்டிக்கிடந்த வெறுப்புத்தான் சந்தேகம்தான் அவ்வாறு திரளக் காரணம்.அதை சமூக ஊடகங்களும் யு டியுப்களும் பரவலாக்கின,பலப்படுத்தின. அர்ஜுனாவின் கலகம் வெடித்தெழுந்த பின்னணியில் அது தொடர்பில் முதலில் கருத்துக் கூறாத மருத்துவர் சத்தியமூர்த்தி,சில நாட்கள் கழித்து ஒரு பதிவை முகநூலில் போட்டார்.அதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் பதில் வினை ஆற்றியிருந்தார்கள்.அதில் பெருந்தொகையானவை வெறுப்பும் எதிர்ப்பும் மிக்கவை. மருத்துவர் சத்தியமூர்த்தியை ஆதரித்து, அவரைப் பாதுகாத்து வந்த குறிப்புகள் மிகக் குறைவு. இது எதைக் காட்டுகின்றது? மருத்துவத்துறை சார்ந்து சாதாரண மக்கள் மத்தியில் சந்தேகங்களும் பயங்களும் அதிருப்தியும் உண்டு என்பதைத்தான் அது காட்டுகின்றது. தனியார் மருத்துவத் துறையின் வளர்ச்சியும் அரச மருத்துவமனைகளில் நிகழும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் மேற்கண்ட அதிருப்திகளுக்குக் காரணமாக இருக்கலாம். சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மையை விட வதந்திகள் அதிகம் பரவுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.ஆனால் இங்கு பிரச்சனை அவையல்ல. மக்கள் மத்தியில் ஆழமான சந்தேகங்களும் கோபமும் உண்டு என்பதுதான் பிரச்சினை.அதை மருத்துவத் துறை எதிர் கொள்ள வேண்டும். அதற்கு பதில் கூற வேண்டும். அரச மருத்துவமனைகளை தமிழ் கிராம மக்கள் தர்மாஸ்பத்திரி என்று அழைப்பார்கள்.ஏனென்றால் அங்கே மருந்தும் சிகிச்சையும் தர்மமாக வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையில். ஆனால் மெய்யான பொருளில் அவை தர்மாஸ்பத்திரிகள் அல்ல. அங்கு வேலை செய்யும் எல்லாருக்குமே சம்பளம் வழங்கப்படுகிறது. இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன. யாரும் இலவசமாகத் தொண்டு புரியவில்லை. அது மட்டுமல்ல அங்கு இலவசமாகத் தரப்படும் மருந்தும் சிகிச்சையும் கூட மக்களிடம் சேகரித்த வரிப்பணம்தான். அதாவது மக்கள் அரசாங்கத்துக்கு கொடுத்த வரிதான் இலவச சிகிச்சையாக இலவச மருந்தாக இலவச கல்வியாக திருப்பி வழங்கப்படுகிறது. மேற்கத்திய வளர்ச்சி அடைந்த முதலாளித்துவங்களில் அது நலன்புரி அரசு என்ற வெற்றிகரமான ஒரு சிஸ்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கேயோ சாதாரண மக்கள் அதனை அரசாங்கம் தங்களுக்குச் செய்யும் தர்மமாக கருதுகிறார்கள். இவ்வாறு அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகம்,தர்மாஸ்பத்திரிகள் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மமாக நடக்கவில்லை என்று கருதும் பொழுதே விமர்சனங்கள் எழுதுகின்றன.இதில் தனியார் மருத்துவத் துறை தொடர்பான விமர்சனங்களும் அடங்கும். அர்ஜுனாவின் கலகத்தை பொதுமக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்?அர்ஜுனா எழுப்பிய கேள்விகள் ஏன் பொதுமக்களை ஆஸ்பத்திரிக்கு முன் கொண்டு வந்து நிறுத்தின? இந்த விடயத்தில் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் அர்ஜுனாவின் விடயத்தை விவகாரம் ஆக்கியதில் அதிகம் பங்களிப்பு செய்ததாக ஒரு அவதானிப்பு உண்டு. ஊடகங்களில் அந்த உள்ளூராட்சி சபை உறுப்பினரும் இடைக்கிடை தோன்றினார்.அவர் போலீசாரல் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பு நூற்றுக்கணத்தில் திரண்ட மக்களை அவர் மட்டும் அழைத்துக் கொண்டு வரவில்லை. மாறாக மக்களிடம் ஏற்கனவே உள்ளுறைந்து காணப்பட்ட கேள்விகள்,சந்தேகங்கள்,கோபங்கள் என்பவற்றின் விளைவாகத்தான் மக்கள் அங்கே வந்தார்கள்.சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதனை பரபரப்பாக சுடச்சுட வழங்கின. அதனால் மக்கள் வீதிக்கு வந்தார்கள். அதாவது மக்கள் அவ்வாறு திரளும் அளவுக்கு மக்கள் மத்தியில் விடை கிடைக்காத கேள்விகளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் சந்தேகங்களும் தனியார் மருத்துவத்துறை தொடர்பாக பயங்களும் வெறுப்பும் உண்டு என்று பொருள்.அர்ஜுனா அவ்வாறு ஏற்கனவே மக்கள் மத்தியில் பரவலாக காணப்பட்ட அதிருப்தி,வெறுப்பு,சந்தேகம் போன்றவற்றுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கினார். அப்படிப் பார்த்தால் அர்ஜுனா ஒரு சிறு கலகத்தைச் செய்திருக்கிறார்.ஆனால்,அந்தக் கலகத்தை ஒரு சமூக மாற்றத்துக்கான தொடக்கப் பொறியாக மாற்றத் தேவையான பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் உண்டா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அவர் அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் அமைந்திருந்தது. அதில் அவர் ஏன் அடிக்கடி நேரலையில் தோன்றினார் என்பதற்கு விடை கிடைக்கின்றது. அந்த நேர்காணல் முழுவதிலும் அவர் தன்னுடைய முதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஒரு விளையாட்டுப் பிள்ளைபோல, சாகச உணர்வு நிரம்பியவராக, ஒரு விதத்தில் பொறுப்பற்றவராக,கருத்துக்களைத் தெரிவித்தார்.சமூக ஊடகச் சூழலுக்குள் அளவுக்கு மிஞ்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு கலகக்காரராகவே அவர் அதில் தோன்றினார். இந்த நேர்காணல் அவர் மீதான விமர்சனங்களை பலப்படுத்தக் கூடியது. சமூக ஊடகச் சூழலில் சிலசமயம் இன்றைய செய்தி நாளைய குப்பை. அர்ஜுனா கேட்ட கேள்விகளும் அவ்வாறு நாளைக்கு குப்பை ஆகிவிடக்கூடாது. https://athavannews.com/2024/1392182- தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – சிறிதரன் பங்கேற்பு!
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – சிறிதரன் பங்கேற்பு! தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடாத்த ஏற்பாடாகியுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜுலை 21 ம் மதியம் 3 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1392168- Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு : ஜோ பைடன் – பராக் ஒபாமா கண்டனம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை, அந் நாட்டின் உளவுத்துறை உறுதி செய்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு இலக்கான டொனால்ட் ட்ரம் பாதுகாவலர்களின் உதவியுடன் மேடையில் இருந்து வெளியேறியதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், பட்லர் நகரில், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்போது, தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்ப் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அமெரிக்க பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392160- கார் திருட்டின் தலைநகரமாக மாறிய கனடா; நிமிடங்களில் தப்பிச் செல்லும் திருடர்கள் - ஏன் தடுக்க முடியவில்லை?
நீங்கள் சொன்னது நியாயம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. உங்களது குசும்பை ரசித்தேன் அம்புட்டுத்தான். 😂- கருத்து படங்கள்
- Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
நாலு ஆங்கில ஊடகங்களில் இருந்து வெட்டி, ஒட்ட நேரம் எடுக்கும்தானே.... 😂- Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
நன்றி யாயினி. - யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.