Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பிரிட்டனின் ஆட்சிமாற்றம் – தமிழா்களுக்குச் சாதகமாக அமையுமென தமிழ்க்கட்சிகள் நம்பிக்கை! பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் ஆட்சிமாற்றமானது, இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில், எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகருமென எதிா்பாா்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளாா். 14 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் நலனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா். அத்துடன், ஆங்கிலேயர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியபோது, தமிழர்களுக்கான நியாயமானதொரு அதிகாரப்பகிர்வை வழங்காததன் காரணமாக இவ்விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரிலும், அதன் பின்னரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை தொழிற்கட்சியினா் விரைந்து முன்னெடுக்கவேண்டும்’ என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். இதேவேளை, தொழிற்கட்சியைப் போன்றே கொன்சவேட்டிவ் கட்சியும் கடந்த காலங்களில் தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை கொன்சவேட்டிவ் கட்சியும் வழங்கியதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், தொழிற்கட்சியின் வெற்றியினால் மாற்றமொன்று நிகழுமெனில் அது தமிழர்களுக்கு சிறந்த மாற்றமாகவே அமையும் எனவும் அவா் நம்பிக்கை வெளியிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1391217
  2. சாவகச்சேரி வைத்தியசாலையின் நெருக்கடி நிலை – பொதுமக்கள் போராட்டத்தில் குதிப்பு! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றம் மற்றும் அதன் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு கொண்டு வருவதற்கு வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நாளை திங்கட்கிழமை காலை 8 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்மராட்சி மக்கள் துண்டுப்பிரசுரம் மூலம் அறிவித்துள்ளனா். அத்துடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும், சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு கொண்டு வர வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மூன்றாவது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலையில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார். இதன்போது வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாக வைத்திய அத்தியட்சகா் இராமநாதன் அர்ச்சுனா அமைச்சருக்குத் தொிவித்திருந்தாா். அத்துடன், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் மற்றும் ஆளணி வளம் காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தனர். பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாாிகள் தொிவித்துள்ளனா். இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடயத்தில் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகள் மறைந்திருப்பதால், அவற்றிற்கு எதிராக வைத்திய அத்தியட்சகா் இராமநாதன் அர்ச்சுனா முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து சில தரப்பினா் தமது எதிா்ப்பினை வெளிப்படுத்துவதாக சமூக ஆா்வலா்கள் பலா் கருத்து வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1391221
  3. போதையூட்டும் மூலிகைச் செடி – 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை சிறுவன் ஒருவன் அந்த விதைகளை உட்கொண்டபோது அவனுக்கு போதை ஏற்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த பாடசாலை சிறுவன் தான் கல்விகற்கும் அசேலபுரத்திலுள்ள பாடசாலையிலுள்ள சக மாணவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் இந்த விதையை எடுத்துக் கொண்டுவருமாறு அந்த மாணவனிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவதினமான கடந்த வெள்ளிக்கிழமை குறித்த விதையை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவன் சக மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து அவர்கள் அதனை உட்கொண்டதையடுத்து 4 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனா். அவர்களை உடனடியாக அம்புலனஸ் வண்டி வரவழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 6 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் ஒரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவருக்கு எந்த விதமான ஆபத்துக்களும் இல்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார். இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1391243
  4. பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ! இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தள்ளார். அபோபிஸ் [Apophis] என்ற இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2036 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளதால் இந்த பேராபத்து ஏற்படாது என எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகத்தில் மனித குளம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம் என்றாலும் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது எனவும் அசம்பாவிதங்களுக்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதால் நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் சில சமயங்களில் மட்டுமே கணிக்க முடிகின்றதாகவும் ஆபத்துகளை கண்டறிய நாம் இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைவர் சோம்நாத் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1391240
  5. பல மருத்துவ மனைகளிலும், கல்லூரிகளிலும்…. டக்ளஸ் தேவானந்தாவால் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க நியமிக்கப் பட்ட ஊழியர்களே அதிகம் வேலை செய்வதும்… அவர்களால் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் போன்ற சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம். அரசியல்வாதிகள் இப்படியான இடங்களில் மூக்கை நுளைக்காமல் இருந்தால் மட்டுமே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க முடியும். யாழ். இந்துக் கல்லூரியிலும்…. சில அரசியல்வாதிகள் மூக்கை நுளைக்க முற்பட்ட போது தற்போதைய அதிபர் அதற்கு சம்மதிக்காததால் அவரால்… அங்கு சிறந்த சேவையை ஆற்ற முடிகின்றது.
  6. ஆறு திருமுருகனின் மகளிர் இல்லத்துக்கு எதிராக கம்பு சுற்றிய ஆட்கள் எல்லாரும் வரிசையாக வரவும். வேடிக்கை என்னவென்றால்… ஈழம், சைவம் என்றால் "அலர்ஜி" உள்ள பெரும்பாலானவர்கள்தான் இங்கும் கம்பு சுற்றியது கவனிக்கத்தக்கது.
  7. எனக்கும், துருக்கி தோற்றது பயங்கர சந்தோசம். 😁 ஜேர்மனிக்கு கிடைக்காதது, துருக்கிக்கும் கிடைக்கக் கூடாது. 🤣
  8. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்.
  9. நைஜீரியாவில், கதவைத் திறப்பவருக்கு.... இன்னும் ஒருவர் கதவு திறக்கும் காட்சி. 😂
  10. நெதர்லாந்தில் இருந்து 35 மோப்ப நாய்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் நேற்று (5) வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நாய்கள் நெதர்லாந்திலிருந்து நேற்று (5) அதிகாலை 02.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நாய்களின் மொத்த மதிப்பு 5 கோடியே 80 இலட்சம் ரூபா ஆகும். இந்த நாய்களில் 21 பெண் நாய்களும் 14 ஆண் நாய்களும் உள்ளன. இந்த நாய்களை ஏற்றுக்கொள்வதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு வருகை தந்தார். இந்த நாய்கள் விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாய்களின் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1391195
  11. பாம்புக்கு... சவுக்காரம் போட்டு குளிக்க வார்க்கலாமா? 😂
  12. முதலில்... பொது வேட்பளாராக தான் போட்டி போடப் போறன் என்றார். இப்போ தேர்தலை பின் போடுவது நல்லது என்கிறார். இடையிலும்... ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக சில அறிக்கைகள் விட்டது போல உள்ளது. இவர்களுக்கு... நிரந்தர கொள்கைகள் எதுவும் இல்லையா...? மக்களை பைத்தியக்காரர் ஆக்குவது என்றே.. முடிவெடுத்து விட்டார்களா.
  13. மூன்று நாட்களுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்க்கப்பட்ட இஸ்ரேல் பெண். திருமலையில் காணாமல் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டிலிருந்து திருகோணமலைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி, கடந்த 26ம் திகதியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மூன்று நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த வெளிநாட்டு பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பெண் தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனும்திக்கப்பட்டிருந்தார். மருத்துவ பரிசோதனையின் பின்னர், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. https://athavannews.com/2024/1391154
  14. கதிர்காம கந்தனின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பம். வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று (06) முதல் தினமும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளுடனான ஊர்வலம் நடைபெறவுள்ளதுடன், 21ஆம் திகதி இறுதிப் பெருவிழா நடைபெறவுள்ளது. பின், 22ம் திகதி காலை, மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவத்தையடுத்து , உற்சவம் இனிதே நிறைவடையும். திருவிழாக் காலங்களில் கதிர்காமத்துக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொது வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட ஆணையாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பக்தர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதுடன், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. https://athavannews.com/2024/1391151
  15. அப்படி ஒன்று இருந்திருந்தால், முன்பே சொல்லி இருப்பார்கள் தானே...😁 சம்பந்தர், பகலிலும் நித்திரை குளிசை போட்டுட்டு இருக்கிற ஆள். 😂
  16. ஜேர்மனி 1 - ஸ்பெயின் 2 ஸ்பெயின்... கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
  17. பிடியாணை அப்படியே இருக்கின்றது. சட்டங்கள் எல்லாம் ஏழை, பாளைகளுக்கே. அரசியல்வாதிகளுக்கு அல்ல.
  18. ஜேர்மனி 1 - ஸ்பெயின் 1 88´வது நிமிடத்தில் ஜேர்மனி ஒரு கோல் அடித்தது.
  19. சகோதரி உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள். ஈழ மக்கள் பிரச்சினையையும், உங்கள் கட்சியிலும் பாராளுமன்றிலும் எடுத்து சொல்லுங்கள்.
  20. ஐரோப்பிய நேரம் மாலை ஆறு மணிக்கு... ஜேர்மனியும், ஸ்பெயினும் ஸ்ருட்கார்ட் (Stuttgart) விளையாட்டு மைதானத்தில்... கால் இறுதி ஆட்டம் விளையாட இருக்கின்றது. ஜேர்மனி வெற்றி பெற, முற்கூட்டிய ❤️ வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.