Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பந்துலவுக்கு… “அரகலயவால்” அமைச்சர் பதவி பறி போயிடுமோ என்று பயம் வந்திட்டுது.
  2. எனக்கும் இந்தக் கதையை வாசிக்கும் போது, சம்பந்தரின் நினைவுதான் வந்து போனது. 😂
  3. சம்பந்தரின் அந்திரட்டிக்கு பிறகுதான் அவர் எமலோகம் வருவார் என்று எமதர்மராஜாவிடம் சொல்லி விடுங்கள். அவர் 91 வயது மட்டும் செய்த வேலைக்கு… இங்கை கிழிச்சு தொங்க விட்டுட்டுத்தான் அங்கை அனுப்புவம். 😂
  4. சம்பந்தரின் அந்திரட்டி மட்டும் கிழிச்சு தொங்கவிடுவம் என்று பார்க்க, நீங்கள் இப்பிடி சொல்லுறியள். 😂 எண்டாலும்… அந்திரட்டி மட்டும் கச்சேரி நடக்கும். இல்லாட்டி எங்களின் மனம் ஆறாது. 🤣
  5. சமீபத்தில் ஆதவனில் வந்த செய்தி ஒன்றின் தலையங்கத்தில் மரக்கறிக்கு… மறக்கறி என்று எழுதி இருந்தார்கள். வேறு எந்த இனமும்… தமது தாய் மொழியில் நடத்தும் பத்திரிகைகளில் எழுத்துப் பிழை விட்டு எழுதுவதை கேள்விப் படவில்லை. அப்படி பிழை விட்டு இருந்தாலும்… பெட்டிச் செய்தியில் தவறுக்கு மன்னிப்பு கேட்பார்கள். நம்முடைய ஊடகங்கள் மன்னிப்பு கேட்பதென்றால் தினமும் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.
  6. இனி… இந்திய ஊடகங்களின் அலப்பறையை தாங்க முடியாது. இவ்வளவுக்கும்… கமலா ஹரிஸ் பண்டி இறைச்சி சாப்பிடுகின்ற ஆள். அதை… இந்தியர்கள் வசதியாக மறைத்து விடுவார்கள்.
  7. இந்த அமளியோடை… இந்தியாவை பிரிக்க அலுவல் பார்த்தார்கள் என்றால் எங்களுக்கும் சந்தோசமாய் இருக்கும். 😂 🤣
  8. மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது! பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இன்று ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும், அதன் பின்னர் ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை மேற்கு நாடுகள் உன்னிப்பாகவும், பொறாமையுடனும் கவனித்து வருவதாகவும், ரஷ்ய-இந்திய உறவுகளுக்கு பிரதமர் மோடியின் வருகை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1391398
  9. சம்பந்தரை... எனது பெருந் தலைவர் என்று சொன்னதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். 😎 அப்படி சொல்லும் அளவுக்கு அவர் எள்ளளவும் தகுதியான ஆள் அல்ல. மிகவும் ஏமாந்த, தோல்வி உற்ற அரசியல்வாதி தான்... இரா. சம்பந்தன்.
  10. ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள்-சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிப்பு! அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவேளை இந்த மனுவை பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு அண்மையில் பெயரிடப்பட்டிருந்தது தொழிலதிபர், சி.டி.லெனவவினால் கடந்த புதன்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவில் அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவூட்டும் வரை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இடைகாலத் தடை உத்தரவினைப் பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1391364
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நில்மினி. 🎂 என்றும் நலமுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துகின்றோம். 🙂 @nilmini
  12. யாழில்... சம்பந்தனுக்கு கிடைத்த இறுதி மரியாதையை பார்த்து, சுமந்திரன் தான் செத்தால்... தனது பிரேதத்தை, யாழ்ப்பாணம் கொண்டு போகக் கூடாது என்று நினைத்திருப்பார்.
  13. சம்பந்தர் : “பேசுவம்” - நிலாந்தன். சம்பந்தரின் மரணம் ஈழத்தமிழ்ச் சூழலில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியலின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும். அவருடைய பூதவுடல் யாழ்.நகரப் பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நகரம் வழமைபோல இயங்கியது. அதன் ஒலிபெருக்கிகளில் சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. நகரம் ஏன் துக்கிக்கவில்லை? சமூகவலைத்தளங்களில் ஒருபகுதி அவரை கௌரவமாக அஞ்சலித்தது. இன்னொருபகுதி கேவலமாக நிந்தித்தது. அது தமிழ் அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சியையும் காட்டியது. நவீன தமிழ் அரசியலில் குறிப்பாக சமூக வலைத்தளங்களின் காலத்தில்; மீம்ஸ்களின் காலத்தில், அதிகம் கீழ்த்தரமாக நிந்திக்கப்பட்ட ஒரு தலைவராக சம்மந்தரைக் கூறலாம். அவருடைய இறப்பின் பின் அவரைப்பற்றி வரும் குறிப்புக்கள் பெரும்பாலும் அதைத்தான் காட்டுகின்றன 2009க்கு பின்னரான கொந்தளிப்பான ஒரு மனோநிலையின் விளைவுகளே அவை. இக்கொந்தளிப்பான கூட்டுஉளவியலுக்குத் தலைமைதாங்கி ஈழத்தமிழரசியலை ஒரு புதிய பண்புருமாற்றத்தை நோக்கிச் செலுத்த வேண்டிய தவிர்க்கப்படவியலாத ஒரு பொறுப்பை காலம் அவருடைய கைகளில் கொடுத்தது. ஆனால் அதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை இப்பொழுது அவரை அஞ்சலித்தும் நிந்தித்தும் வரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஈழத் தமிழர்களின் நவீனவரலாற்றில் நீண்டகாலங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர். மற்றவர் சம்பந்தர். இருவருமே ஒப்பீட்டளவில் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை நிர்ணயித்தார்கள். குறிப்பாக சம்பந்தர் 2009க்குப்பின்னிருந்து கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் அரசியலின் தவிர்க்கப்படமுடியாத முதிய தலைவராகக் காணப்பட்டார். அவருக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அவர் ஒரு மூத்த தலைவர். இரண்டாவதாக அவர் கிழக்கை மையமாகக்கொண்டு எழுச்சிபெற்ற தலைவர். மூன்றாவதாக,அவர் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை தீர்மானித்தவர்களில் ஒருவர். அவருடைய நம்பிக்கைகளை பொறுத்தவரை சம்பந்தர் ஆயுதப் போராட்டத்தில் முழுஅளவு ஆதரவாளர் அல்ல. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார். தன்னை சுகாகரித்துக்கொண்டார். ஆனால் அதற்காக அவர் ஆயுதப் போராட்ட வழிமுறையை ஏற்றுக்கொண்டார் என்று பொருள் அல்ல. அதனை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் அவருடைய வழி எதுவென்று தொகுத்துப் பார்த்தால் தெரியவரும். சம்பந்தரின் வழி எது? ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று சிந்தித்தால் அதாவது பிரிவினை அல்லாத வேறு எந்த ஒரு தீர்வைப்பற்றிச் சிந்தித்தாலும் அதற்கு சிங்களமக்களின் சம்மதம் அவசியம் என்று சம்பந்தர் நம்பினார். எனவே சிங்களமக்களை எப்படி அரவணைப்பது?அவர்கள் மனதில் இருக்கும் பகையுணர்வை,அச்சங்களை முற்கற்பிதங்களை எப்படி நீக்குவது?என்றும் அவர் சிந்தித்தார். ஆயுதப் போராட்டம் சிங்களமக்களை பகை நிலைக்குத் தள்ளிவிட்டது என்றும் அவர் நம்பினார். எனவே சிங்கள மக்களை பகை நிலைக்குத் தள்ளாத ஒர் அரசியல் வழியை அவர் கடைப்பிடித்தார். சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது என்று அவர் தீர்மானித்தார். அதை நோக்கியே கட்சியைச் செலுத்தினார். அதனால்தான் முதலில் கஜேந்திரகுமார் அணியை வெளியேவிட்டார். அதனால்தான் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். அதனால்தான் விக்னேஸ்வரனையும் உள்ளே கொண்டுவந்தார். 2015ல்நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தில் சம்பந்தரின் பங்களிப்பு இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட ரணில்-மைத்திரி அரசாங்கம் ஐநாவின் 30/1தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதிக்கான அத்தீர்மானத்தின் பிரகாரம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதன்படி நாடாளுமன்றம் ஒரு சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மந்தர் அதில் முழுமையாக ஒத்துழைத்தார். அதுவரையிலும் இருந்த எல்லா யாப்புகளும் தமிழ்மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை என்பதனால், தமிழ்மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கனவு கண்டார்.அதை நம்பித்தான் தமிழ்மக்களுக்கு ஒவ்வொரு பெருநாளின் போதும் வாக்குறுதிகளை வழங்கினார். அதுமட்டுமல்ல, மன்னாரில் நடந்த “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற ஒரு கருத்தரங்கில், ஆயர்களின் முன்னிலையில்,அவர் அந்த நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதில் உரையாற்றிய நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினேன். மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பு இன்றி,மூன்றாவது தரப்பு ஒன்றின் நெருக்குதல் இன்றி சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பானது, இனப்பிரச்சினையைத் தீர்க்க முன்வராது என்று நான் அந்த உரையில் சுட்டிக்காட்டினேன். ஆனால் சம்பந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தலையை சாய்த்து மண்டைக் கண்ணால் என்னைப் பார்த்தபடி சொன்னார்… “சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்; ஒரு வறட்டு வாதம்” என்று யாப்புருவாக்க முயற்சிகள் ஓர் இடைக்கால வரைபுவரை முன்னேறின. அந்த இடைக்கால வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்தபொழுது அதில் டிலான் பெரேரா ஆற்றிய உரையை இங்கு சுட்டிக்காட்டலாம். அது சம்பந்தரின் அரசியல் வழியை மிகக்கூர்மையாக வெளிப்படுத்தும் ஓர் உரை. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காணவேண்டும். அவரைப்போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் உரையாற்றினார். அதுதான் உண்மை. ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக சம்பந்தர் அடியொட்ட வளைந்து கொடுத்தார். விளைவு என்ன? யாப்புருவாக்க முயற்சிகளை அதன் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே 2018ல் காட்டிக்கொடுத்தார். சம்பந்தரின் கனவு கலைந்தது. அவர் தமிழ் மக்களுக்கு வழங்கிய எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துப்போயின. சிங்கள மக்களுக்கு நம்பிக்கை வரும் வரையிலும் விட்டுக் கொடுப்பதன் மூலம், ஒரு தீர்வைப் பெறலாம் என்ற அவருடைய நம்பிக்கை தோற்கடிக்கப்பட்டது. அந்த நம்பிக்கை மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. அதன் விளைவாக கட்சி அதுவரையிலும் வகித்து வந்த ஏகபோகத்தை இழந்தது. அடுத்த தேர்தலில் கட்சியின் வாக்குகள் சிதறின. அதுமட்டுமல்ல, கட்சியே இப்பொழுது சிதறிவிட்டது. அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் சிதறவில்லை. தமிழரசுக் கட்சியே இரண்டாக உடைந்துவிட்டது. எனவே இப்பொழுது தொகுத்துப்பார்க்கலாம். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் கடந்த 15 ஆண்டுகளிலும் எதைச் சாதித்தார் என்று பட்டியலிடலாம்… முதலாவதாக,சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முற்பட்டு அதில் தோல்விகண்டார். அதாவது வரலாறு அவருக்கு வழங்கிய பெறுமதியான ஆண்டுகளை அவர் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான தமிழரசியலில் பண்புரு மாற்றத்துக்கு தலைமை தாங்க அவரால் முடியவில்லை. இரண்டாவதாக,சிங்கள மக்களுக்கு அதிகம் விட்டுக் கொடுத்ததன்மூலம் அவர் எதையுமே பெற முடியவில்லை. மாறாக, தான் தலைமை தாங்கிய கூட்டின் சிதைவுக்கும் அதனால் காரணமாக அமைந்தார். ஈழத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் அதிக ஆசனங்களை கொண்டிருந்த ஒரு காலத்தில் அந்தக் கூட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் கூட்டு உடைந்துடைந்து சிறுத்துக்கொண்டு வந்து இப்பொழுது தமிழரசுக்கட்சியாக சிறுத்து விட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாக உடைந்துவிட்டது.தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவம் 22 ஆசனங்களில் இருந்து 13ஆசனங்கள் வரையிலும் உடைந்துபோனமை மகா தோல்வி. அதுபோலவே தன்னுடைய சொந்தத் தொகுதியிலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்றுவந்த வாக்குகளை பட்டியலிட்டுப்பார்த்தால் அதில் படிப்படியாக வீழ்ச்சியைக் காணலாம். இப்பொழுதிருக்கும் நிலையில் திருக்கோணமலையில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சி களமிறங்கினால் இம்முறை சம்பந்தர் பெற்ற ஆசனம் அடுத்த முறை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிலசமயம் சம்பந்தரின் அனுதாப வாக்குகள் கிடைக்கக்கூடும். இவ்வாறு,தான் தலைமை தாங்கிய கூட்டுக்குள்ளும் ஒரு தலைவராக தோல்வியடைந்து,தனது சொந்த தேர்தல் தொகுதியில்,தனது தாய்ப்பட்டினத்தில்,தன்னுடைய ஆதரவுத் தளத்தை படிப்படியாகத் தேய விட்டதில் தோல்வியுற்று,தான் அங்கம் வகிக்கும் மூத்த கட்சிக்குள்ளும் ஒரு தலைவராக அவர் தோல்வியடைந்து விட்டார். ஒரு தலைவர் தன் வாரிசுகளாகக் களமிறக்கும் அரசியல்வாதிகள் அந்த தலைவரின் பெயரை வரலாற்றில் ஸ்தாபிப்பவர்களாக அமையவேண்டும். ஆனால் சம்பந்தர் கொண்டு வந்த சுமந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ அவ்வாறு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் சம்பந்தரின் வழி தவறு என்று கூறி அவரிடமிருந்து விலகிச் சென்றார். சுமந்திரன் சம்பந்தரின் பட்டத்து இளவரசர் போல காணப்பட்டார்.ஆனால் கட்சிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பொழுது அவர் சம்பந்தரை பொதுவெளியில் அவமதித்தார். தன்னுடைய வாரிசினாலேயே அவமதிக்கப்படும் ஒரு தலைவராக சம்மந்தர் அவருடைய இறுதிக் காலத்தில் காணப்பட்டார். அவருடைய தாய்க் கட்சி நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டபொழுது அதைத் தடுக்கும் சக்தியற்றவராக அவர் இருந்தார். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பிணக்கு என்று வரும்பொழுது மூத்தவர்கள் அதைத் தீர்த்து வைப்பார்கள். கட்சிக்குள்ளும் அப்படித்தான். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முது தலைவர்கள் பிணக்குகளைத் தீர்த்துவைப்பார்கள். ஆனால் மிக மூத்த தலைவராக அவருடைய சொல்லை அவருடைய வாரிசே கேட்கவில்லை. விளைவாக கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல அவருடைய சொந்த தேர்தல் தொகுதியில் தன்னை மதியாமல் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற பொருள்பட அவர் ஒரு முறைப்பாட்டைச் செய்யுமளவுக்கு பலவீனமாக காணப்பட்டார். சம்பந்தரின் சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை மதிப்பிட இது ஒன்றே போதும்.அவர் தன்னுடைய தாய்க் கட்சியைச் சிதைய விட்ட ஒரு தலைவர். அவரால் எப்படித் தேசத்தைத் திரட்டியிருக்க முடியும்? எனவே சம்பந்தரின் கடந்த சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன? திருகோணமலையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மதகுரு,அவர் ஒரு முக்கியமான சமூக அரசியல் செயற்பாட்டாளர்,சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார், “சம்பந்தர் இறந்தால் அவருடைய கல்லறையில் என்ன வார்தையைப் பொறிக்க வேண்டும்?” என்று. “என்ன வார்த்தை” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார் “பேசுவம்” என்று போடலாம். https://www.nillanthan.com/6813/
  14. சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம். உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்ற படி ஏறியபோதே இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது வாராந்த அரசியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் தமிழரசியலுக்கு தலைமை தாங்கி வழி நடாத்திய சம்பந்தன் காலமாகிவிட்டார். சம்பந்தனைப் போல பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ்த்தலைவர் வேறு எவரும் இல்லை என்று கூறலாம். மரபு வழி தமிழ் அரசியலை விடுத்து இன்னோர் அரசியலை நகர்த்த முனைந்தமையே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகும். அரசியல் போராட்டங்கள் தமிழர் அரசியலின் செல்நெறியை தீர்மானிப்பதற்கு இவரது தலைமைத்துவ காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சம்பந்தன் ஒருபோதும் தன்னை தமிழ்த்தேசியவாதியாக இனங்காட்டியதில்லை. போராட்ட அரசியல்வாதியாகவும் அவர் இருக்கவில்லை. தமிழ்த்தேசிய அரசியலிலோ அல்லது போராட்ட அரசியலிலோ நம்பிக்கை கொண்டவர் என்றும் அவரை கூறி விட முடியாது. தமிழ் மக்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களிலும் இவர் கலந்து கொண்ட வரலாறு கிடையாது. 1961ஆம் ஆண்டு கச்சேரிகளுக்கு முன்னால் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுத்தது. சம்பந்தன் அப்போது ஓர் இளம் சட்டத்தரணியாக கலந்துகொண்டார். போராட்டத்தின் ஒரு கட்டத்தில் படையினர் போராட்டத்தை நசுக்கி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தனர். சம்பந்தனும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே “தனக்கும் இப் போராட்டத்திற்கும் ஒரு தொடர்புமில்லை” என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். எனினும், சம்பந்தனிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சூழலுடன் இசைந்து செல்லும் போக்கை அவர் கடைப்பிடிப்பார். தலைமை பொறுப்பு 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1977 தேர்தலை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரகடனப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் தமிழீழத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர் அல்ல. அதை அவர் நேரடியாகவே பலரிடம் கூறியிருந்தார். குறிப்பாக கிழக்கின் சூழ்நிலைக்கு தமிழீழத் தீர்மானம் பொருத்தமற்றது என்பது அவரது கருத்தாக இருந்தது. எனினும், சூழலுடன் இசைவுற்று 1977ஆம் ஆண்டு தேர்தலில் அவர் முதன் முதலாக திருகோணமலையில் போட்டியிட்டார். வெற்றியும் அடைந்தார். புலிகள் இயக்கத்தையோ, ஆயுதப் போராட்டத்தையோ சம்பந்தன் ஏற்றுக்கொண்டவர் அல்ல. இருந்தபோதும் புலிகளுடன் இணைந்தும் அரசியல் செய்ய தயாரானார். சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார். புலிகள் இயக்கம் சம்பந்தனை விரும்பி இருந்தது என்றும் கூறி விட முடியாது. இயக்கம் ஜோசப்பரராசசிங்கத்தையே தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி வேண்டியது. ஜோசப்பரராசசிங்கம் சம்பந்தனை நியமியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே சம்பந்தன் தலைவராக்கப்பட்டார். இங்கு தான் ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. ஆனந்தசங்கரி சூழலுடன் இசைந்து போகின்ற ஒருவர் அல்லர். புலிகள் இயக்கத்தோடு அவரால் ஒத்துப் போக முடியவில்லை. ஆனந்தசங்கரி இதனால் தூக்கி வீசப்பட்டார். உண்மையில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரத்திற்கு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை ஆனந்தசங்கரியிடமே சென்றது. அடுத்த மூத்த தலைவர் அவராகத்தான் இருந்தார். 1970ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஒத்துப்போகாததன் காரணமாகவே சம்பந்தனிடம் தலைமை பாத்திரம் சென்றது. இதனால் தான் ஆனந்தசங்கரி அதிஸ்டம் இல்லாத மனிதர் என்று கூறுவதுண்டு. தன்னிடமிருந்த தலைமை பாத்திரத்தை பறித்தவர் சம்பந்தன் என்ற கோபம் ஆனந்தசங்கரியிடம் இன்று வரை உண்டு. சம்பந்தன் 1977ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் செயற்பாட்டாலும் சுமார் 32 வருடங்கள் துணை பாத்திரத்தையே ஆற்ற முடிந்தது. தலைமை பாத்திரத்தை ஆற்ற முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 2009ஆம் ஆண்டே அவருக்கு கிடைத்தது. தலைமை பாத்திரம் தனக்கு கிடைத்தவுடன் தனக்கேயுரிய அரசியலை அவர் முன்னெடுக்க தொடங்கினார். சுதந்திர தினம் அந்த அரசியல் என்பது இணக்க அரசியலே. இந்த அரசியல் தமிழ் அரசியலின் மரபு வழி பாரம்பரியத்திற்கு முரணானது. ஆனாலும், சந்தர்ப்பம் அறிந்து துணிந்து அதனை முன்னெடுத்தார். அவரது இணக்க அரசியலும் கட்டம் கட்டமாக இடம்பெற்றது. முதலில் தான் இணக்க அரசியலுக்கு தயார் என்பதை சைகைகள் மூலம் வெளிப்படுத்தினார். தமிழ் அரசியல் பாரம்பரியத்திற்கு முரணாக யாழ்ப்பாணத்தில் வைத்தே சிங்கக் கொடியை அசைத்துக் காட்டினார். சிங்கக் கொடி தொடர்பான தமிழரசு கட்சியின் நிராகரிப்பு சிங்கக் கொடி உருவான காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து புறக்கணித்த கொடி என்பது இதற்கு காரணமாக அமைந்தது. தமிழ் தேசியவாதம் முனைப்படைந்த 70களில் தமிழ் பிரதேசங்களில் சிங்கக் கொடி ஏற்றுவதே துரோகமாக கருதப்பட்டது. சுதந்திர தினத்தை பொறுத்தவரையிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட்டது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசிற்கு கிடைத்த லைசன்சே சுதந்திரம் என கருதப்பட்டது. இதனால் சுதந்திர தினம் வருடம் தோறும் கரிநாளாகவே அனுஸ்டிக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலையில் சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி கட்ட முற்பட்டமையினாலேயே திருமலை நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார். மைத்திரிக்கு ஆதரவு தமிழ் அரசியல் மரபுக்கு மாறாக சம்பந்தன் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதுவும் இணக்க அரசியலுக்கான ஒரு சைகை தான். பிரிக்கப்பட முடியாத இலங்கை என்ற கோசத்தையும் முன்வைத்து பிரிவினைக்கு எதிரானவன் என்ற தோற்றத்தையும் வெளிப்படுத்தினார். நல்லாட்சி காலத்தில் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்க முனைந்தார். இது விடயத்தில் குறைந்த பிசாசுடன் கூட்டுச் சேருதல் என்பது அவரது கொள்கையாக இருந்தது. மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். இதன்போது ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட சந்திரிகா முன்வந்த போதும் அதனை நிராகரித்தார். “மனரீதியான ஒப்பந்தமாக இருக்கட்டும்” என கூறினார். சந்திரிகா “இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டபடியால் தான் ஒப்பந்தத்தை நிராகரிக்கின்றீர்களா?” என கேட்டபோது “மனரீதியாக இசைவு தான் முக்கியம” என குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் இவரது ஒத்துழைப்புக்கு பிரதி உபகாரமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்கியது. அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆளும் கட்சியின் தலைவராகவே இருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வலிந்து தோள் கொடுத்து அரசாங்கத்தை பாதுகாத்தார். பொறுப்பு கூறல் விடயத்திலும் அரசாங்கத்தை பிணையெடுக்க முற்பட்டார். ஜெனிவாவில் அரசை பாதுகாக்கும் செயற்பாட்டையே அன்றைய காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது. “சர்வதேச விசாரணை முடிந்து விட்டது” என்கின்ற சுமந்திரனின் புகழ்பெற்ற வாசகமும் இக்காலத்திலேயே வெளிவந்தது. அரசியல் யாப்பு மூலமாக தீர்வு என்பதிலும் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். நல்லாட்சி கால புதிய யாப்பு முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சிக்குட்பட்ட தீர்வு யோசனைக்கும் இணக்கம் தெரிவித்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும். பொங்கலுக்கு தீர்வு வந்துவிடும் எனவும் கூறிக் கொண்டிருந்தார். நல்லிணக்க அரசியலின் இரண்டாம் கட்டத்தில் கட்சியை அதற்கேற்ற வகையில் மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த முதலாவது அம்பு தான் புலி நீக்க அரசியல். இணக்க அரசியல் புலி நீக்க அரசியலை செய்யாமல் தென்னிலங்கை தரப்பை திருப்திபடுத்த முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதன் அடிப்படையில் புலிசார்பு அரசியல்வாதிகள் என கருதப்பட்ட புலிகளினால் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்ட கஜேந்திரனையும், பத்மினி சிதம்பரநாதனையும் கூட்டமைப்பிலிருந்து நீக்கினார். இது விடயத்தில் கஜேந்திரகுமாரை நீக்குவது சம்பந்தனின் நோக்கமாக இருக்கவில்லை. சர்வதேச விவகாரங்களை கையாள்வதற்கு கஜேந்திரகுமார் பொருத்தமாக இருப்பார் என்பதே அவரது கருத்தாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை ஒதுக்குவது தன்னை பலவீனமாக்கும் எனவும் அவர் கருதி இருக்கலாம். ஆனால் சம்பந்தனின் இணக்க அரசியலோடு கஜேந்திரகுமாருக்கு உடன்பாடு இருக்காததினால் அவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார். சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலுக்கான முதல் அடி கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்தினாலேயே நிகழ்ந்தது. இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்பிற்கு ஒரு தலைமை கிடைத்தது. எனினும், அத்தலைமை தனக்குரிய இடத்தை பிடிக்க 10 வருடங்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது என்பது வேறு கதை. கஜேந்திரகுமார் இல்லாததினால் அவ்விடத்திற்கு சுமந்திரன் இறக்குமதி செய்யப்பட்டார். உண்மையில் சம்பந்தனின் அசல்வாரிசு சுமந்திரன் தான். விக்னேஸ்வரனும் இதன் அடிப்படையிலேயே இறக்கப்பட்டார். எனினும், அவர் சம்பந்தனோடு ஒத்துழைக்கவில்லை. சுமந்திரன் சம்பந்தனின் இணக்க அரசியலில் ஒரு படி மேலானவர் என கூறலாம். தென்னிலங்கை அரசியல் சம்பந்தன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் அதற்கு மேலாக தென்னிலங்கை அரசியலை முன்னெடுக்க முனையவில்லை. சுமந்திரன் தென்னிலங்கை அரசியலை முன்னெடுப்பதையே தனது பிரதான அரசியல் செயற்பாடாக வரித்துக் கொண்டார். இதனால், சம்பந்தன் பெருந்தேசியவாதத்தின் முதுகு தடவும் அரசியலை தேர்ந்தெடுத்தார் என கூறிவிட முடியாது. அதேவேளை, மலையக அரசியல், முஸ்லிம் அரசியல் போல பெருந்தேசியவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலை கரைக்கவும் முற்படவில்லை. ஒருவகையில் சம்பந்தன் பின்பற்றிய இணக்க அரசியலை கனவான் இணக்க அரசியல் என கூறலாம். சம்பந்தன் தனது அரசியலில் மிகவும் உறுதியாக இருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியினதும் ஜனநாயக கட்டமைப்புகள் தனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதியமையால் அதையெல்லாம் மீறினார். எல்லாவற்றிலும் தனி ஓட்டத்தையே மேற்கொண்டார். கூட்டமைப்பாகவோ, தமிழரசு கட்சியாகவோ ஓட முன் வரவில்லை. பல சந்தர்ப்பங்களில் கூட்டு முடிவுகளை நிராகரித்து தனித்தே முடிவுகளை எடுத்தார். மூத்த தலைவர் என்ற வகையில் அவருக்கு பெரிய எதிர்ப்புகள் ஆரம்பத்தில் வராதது அவரது தனி ஓட்டத்திற்கு சாதகமாக அமைந்தது. பிற்காலத்தில் சுமந்திரன் தனி ஓட்டம் ஓடுவதற்கு இவரே வழிகளை திறந்து விட்டார் என கூறலாம். மோடியின் அழைப்பு இணக்க அரசியலின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் தமிழ் தேசிய நீக்க அரசியல். சிங்கக் கொடி அசைப்பு, சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளல், எதிர்ப்பு அரசியலை கைவிடல், தாயகம் , தேசியம் , சுய நிர்ணயம் என்கின்ற அடிப்படை கோசங்களை கைவிடல் என்பன இதன் அடிப்படையிலேயே எழுச்சி அடைந்தன. மொத்தத்தில் தமிழ் அரசியலில் பாரம்பரியத்தையே மாற்றி அமைக்க முற்பட்டார் எனலாம். இதன் ஒரு வெளிப்பாடாக இந்தியாவுடனான உறவுகளையும் கைவிட்டார். இந்திய பிரதமர் மோடி அழைத்தும் இந்தியாவிற்கு செல்ல அவர் முன் வரவில்லை. இந்திய சார்பு நிலை பெருந்தேசியவாதத்தை சினப்படுத்தும் என அவர் கருதி இருக்கலாம். பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு , தமிழின எதிர்ப்பு என்கின்ற தூண்களில் கட்டமைக்கப்பட்டது என்பது அவருக்கு நன்றாக தெரியும். தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக இந்தியா எதுவும் செய்யும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை. இந்தியாவில் தங்கி இருப்பதை முழுமையாகவே தவிர்த்துக் கொண்டார். 13ஆவது திருத்தம் தனது வசிப்பிடத்தையும் முழுமையாகவே இலங்கைக்கு மாற்றினார். இணக்க அரசியல் என்பது பரஸ்பரம் இரு பக்கம் சார்ந்த அரசியல். அது பரஸ்பரம் வெற்றி என்ற கோட்பாட்டை கொண்டது. பரஸ்பர முயற்சிகளையும் விட்டுக் கொடுப்புகளையும் வேண்டி நிற்பது. இங்குதான் சம்பந்தனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. தென்னிலங்கை தரப்பு அவரது முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை. அது தொடர்பான ஆத்மார்த்தமான அரசியல் விருப்பம் தென்னிலங்கையிடம் இருக்கவில்லை. குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விருப்பு கூட அதனிடம் இருக்கவில்லை. மறுபக்கத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. தனது சொந்த மாவட்டத்திலேயே ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த சம்பந்தனால் முடியவில்லை. கன்னியா வெந்நீரூற்றில் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்ததை தவிர வேறு எவற்றையும் செய்ய அவரால் முடியவில்லை. இறுதியில் விளைவுகள் அகமட்டத்தில் பாரதூரமாக இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது கண்ணுக்கு முன்னாலேயே சிதைவடைந்தது. இந்த சோகம் காய்வதற்கு முன்னர் சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியும் சிதைவுற்றது. பெருந்தலைவராக இருந்தும் சொந்த கட்சி நீதிமன்ற படி ஏறுவதை இவரால் தடுக்க முடியவில்லை. அவர் பல தடவை மன்றாடிக் கேட்ட போதும் அவரால் வளர்க்கப்பட்ட சுமந்திரன் அவரது மார்பிலேயே குத்தினார். உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை. தனது சொந்த கட்சி நீதிமன்றப் படி ஏறியபோதே இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம்” என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/yodhilingam-spoke-about-sampanthan-1720254684?itm_source=article
  15. சம்பந்தர்... தூக்கிய, சிங்கக் கொடியை கூட, சம்பந்தரின் பிரேதத்துக்கு போர்த்த.. சிங்களம் முன்வரவில்லை. அங்குதான்... சிங்களவன் ஒற்றுமையாக நிற்கிறான். நம்முடையதுகள்தான்.... நண்டுகள் மாதிரி, காலை வாரிக்கொண்டு திரியுதுகள். 😎
  16. சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன். யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது கட்சியின் முதுபெரும் தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக் கணக்கானவர்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் ஏற்பாட்டாளர்கள் சிந்திக்கவில்லை? உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த கட்சிக்காரர்களும் உட்பட ஒரு தொகுதி கட்சித் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலே அங்கே ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு வந்திருக்கலாம். அஞ்சலி நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு அருகே யாழ் மத்திய கல்லூரி வழமை போல இயங்கியது.மண்டபத்தில் ஒலித்த சோக கீதத்தைத் தாண்டி பள்ளிக்கூடப் பிள்ளைகளின் இரைச்சல் கேட்டது.யாழ் நகரம் வழமை போல இயங்கியது.கடைகள் பூட்டப்படவில்லை; நகரத்தின் விளம்பர ஒலிபெருக்கிகளில் வளமை போல சினிமா பாடல்கள் ஒலித்தன.சோக கீதம் ஒலிக்கவில்லை. நகரத்தில் துக்கத்தின் சாயலைக் காண முடியவில்லை. சம்பந்தரின் பூத உடல் பலாலி விமான நிலையத்திலிருந்து தந்தை செல்வா கலையரங்கை நோக்கி வந்த வழி நெடுக மக்கள் திரண்டு நின்று துக்கத்தை வெளிப்படுத்தவில்லை. அப் பூதவுடலை யாழ்ப்பாணத்திலிருந்து வழியனுப்பி வைத்த பொழுதும் மக்கள் திரண்டு நின்று வணக்கம் செய்யவில்லை. ஆனால் தந்தை செல்வாவின் பூதவுடல் தெல்லிப்பளையிலிருந்து முற்ற வெளியை நோக்கி வந்த பொழுது வழிநெடுக மக்கள் திரண்டு நின்றார்கள். சில இடங்களில் சில கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலம் நீண்டு சென்றதாகத் தகவல். அது ஒரு தேசிய துக்க நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டது. மக்கள் தன்னியல்பாக செல்வாவை தந்தை என்று அழைத்தார்கள்.தன்னியல்பாக ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதி ஊர்வலத்தில் திரண்டார்கள். ஆனால் சம்பந்தருக்கு அது நடக்கவில்லை. ஏன் ? ஈழத் தமிழர்களின் நவீன அரசியலில் மிக நீண்ட காலம், இறக்கும்வரை பதவியில் இருந்த ஒரு தலைவர் அவர். தமிழ் மக்களின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற திருக்கோணமலையின் பிரதிநிதி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டம், ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய மிதவாத அரசியல் ஆகிய மூன்று கட்டங்களையும் தொடுக்கும் மூத்த அரசியல்வாதி. எல்லாவற்றையும் விட முக்கியமாக கிழக்கில் இருந்து எழுச்சி பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதிக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அஞ்சலி செய்யாதது ஏன்? ஏனென்றால், சம்பந்தர் இறக்கும்பொழுது ஏறக்குறைய தோல்வியுற்ற ஒரு தலைவராகவே இறந்தார். சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு முன்னப்பொழுதையும் விட அதிகம் விட்டுக்கொடுப்பதன் மூலம் ஒரு தீர்வைப் பெறலாம் என்று அவர் கற்பனை செய்தார். அதில் தோல்வியடைந்தார். எனவே அவரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புத்தான். ஆயுத மோதல்களுக்கு பின்வந்த மிதவாத அரசியலின் தலைவரான அவர் நீட்டிய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கத் தயாராக இருந்திருந்தால். சம்பந்தரின் வழி வெற்றி பெற்றிருக்கும்.ஆனால் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு ராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. அதைவிட முக்கியமாக அது அரசியல் வெற்றியாக மாற்றப்பட முடியாத ஓர் இனப்படுகொலை.ராஜபக்சக்கள் அந்த வெற்றியை ஒரு கட்சியின் அடித்தளமாக மாற்றினார்கள்.அதன் மூலம் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கினார்கள். யுத்த வெற்றிவாதம் எனப்படுவது சம்பந்தருடைய விட்டுக் கொடுக்கும் அரசியலுக்கு எதிரானது.யுத்த வெற்றிவாதமானது தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது சம்பந்தர் மட்டும் தனிக்குரலில் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்; பிரிக்கப்படாத இலங்கைக்குள் ; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆயுத மோதல்களுக்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த அப்படிப்பட்ட ஒரு தலைவரை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு உரிய முக்கியத்துவம் கொடுத்து பொருத்தமான விதத்தில் கையாளத் தவறியது. அவருடைய விட்டுக் கொடுப்புகளுக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் வீடு அவர் இறக்கும்வரை வழங்கப்பட்டது. அந்த வீட்டை ஏற்றுக்கொண்டதன் மூலமும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஸ்தானத்தை இழந்த பின்னரும் அந்த வீட்டை விடாது வைத்துக் கொண்டிருந்ததன் மூலமும் சம்பந்தர் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் குறைத்துக் கொண்டார். இப்படிப் பார்த்தால் சம்பந்தரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புதான். இந்த விடயத்தில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நம்புமளவுக்கு சம்பந்தர் ஏமாளியாக இருந்தாரா என்ற கேள்வி எழும். அல்லது அவர் தன் சொந்த மக்களின் போருக்கு பின்னரான கூட்டு உளவியலை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு தலைவராக இருந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது விளங்கிக் கொண்ட போதிலும் அதற்கு விரோதமாக செயல்பட்டவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? அதனால்தான் அவருடைய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்த பொழுது மக்கள் அதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வரவில்லையா ? இரண்டாவதாக, அவரை தோற்கடித்தது, அவருடைய அரசியல் வாரிசுகள். யாரை தன்னுடைய பட்டத்து இளவரசர்போல வளர்த்தாரோ, அவரே சம்பந்தரைக் குறித்து பொதுவெளியில் விமர்சிக்க தொடங்கினார். அவர் மற்றொரு வாரிசாக இறக்கிய விக்னேஸ்வரன் அவருக்கு எதிராகத் திரும்பினார்.தனது சொந்த தேர்தல் தொகுதியில், திருக்கோணமலையில் தன்னுடைய வாரிசாக அவர் யாரை இறக்கினாரோ, அவர் தனக்குத் தெரியாமல் நியமனங்களைச் செய்கிறார் என்று புலம்பும் ஒரு நிலைமை ஏற்பட்டது. அதாவது தன் மிக நீண்ட அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பந்தர் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே மதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின் பின் கட்சி இரண்டாக உடைந்தது. கட்சிக்காரர்களே கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். தனது தாய்க் கட்சி உடைந்த போதும், அந்தக் கட்சியை கட்சிக்காரர்களே நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்திய பொழுதும், அதைத் தடுக்கும் சக்தியற்றவராக, கையாலாகாத ஒரு தலைவராக, சம்மந்தர் காட்சியளித்தார். அதாவது அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய கண் முன்னாலேயே அவருடைய தாய்க் கட்சி உடைக்கப்படுவதையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதையும் கையாலாகாதவராக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர் தோற்கடிக்கப்பட்டிருந்தார். சம்பந்தரை அவருடைய வாரிசுகளே தோற்கடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் அவருடைய அஞ்சலி நிகழ்விலும் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை தோற்கடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒர் அரசியல் தலைவரின் அஞ்சலி நிகழ்வு என்பதும் ஓர் அரசியல் நிகழ்வுதான். அதை அதற்குரிய கால முக்கியத்துவத்தோடு விளங்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கட்சிக்காரர்கள் செய்யத் தவறினார்கள்.அவரைப் பெருந்தலைவர் என்று அழைத்த கட்சிக்காரர்களே அந்த அஞ்சலி நிகழ்வை பிரம்மாண்டமானதாக ஒழுங்குபடுத்தத் தவறினார்கள். அல்லது அவர்களால் அவ்வாறு ஒழுங்குபடுத்த முடியாத அளவுக்கு மக்களின் கூட்டு மனோநிலை இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா? அதனால் யாழ்ப்பாணத்தில் அந்த சாவீடு சோர்ந்து போன ஒரு சா வீடாகக் காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தில்,சம்பந்தரின் அஞ்சலி நிகழ்விலும் அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய வாரிசுகளும் அவருடைய விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்களும் அவர் இறந்த பின்னரும் அவரைத் தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்லலாமா? https://athavannews.com/2024/1391210
  17. தமிழ் மக்களிடம்.... சம்பந்தன் தோற்றதும், ஈழ மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்ததற்கு காரணமும் மேலே மேற்கோள் காட்டிய இடத்தில் இருந்து தான் ஆரம்பமாகின்றது. தந்தை செல்வா கூறியது போல்... தமிழ் மக்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். அத்தனை முள்ளமாரி வேலைகளையும் செய்து விட்டுப் போனவர்தான் சம்பந்தன்.
  18. இல்லாவிட்டடால்... அவர்கள் தமிழர்கள் என்று சொல்ல எந்த அத்தாட்சியும் இல்லாமல் போய்விடும். பொதுச் சேவை செய்கிறவன் மேல் சேறு அடித்து, அதனை செய்ய விடாமல் தடுக்க எவ்வளவு முனைப்பு காட்டுகின்றார்கள்.
  19. சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன். யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது கட்சியின் முதுபெரும் தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக் கணக்கானவர்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் ஏற்பாட்டாளர்கள் சிந்திக்கவில்லை? உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த கட்சிக்காரர்களும் உட்பட ஒரு தொகுதி கட்சித் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலே அங்கே ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு வந்திருக்கலாம். அஞ்சலி நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு அருகே யாழ் மத்திய கல்லூரி வழமை போல இயங்கியது.மண்டபத்தில் ஒலித்த சோக கீதத்தைத் தாண்டி பள்ளிக்கூடப் பிள்ளைகளின் இரைச்சல் கேட்டது.யாழ் நகரம் வழமை போல இயங்கியது.கடைகள் பூட்டப்படவில்லை; நகரத்தின் விளம்பர ஒலிபெருக்கிகளில் வளமை போல சினிமா பாடல்கள் ஒலித்தன.சோக கீதம் ஒலிக்கவில்லை. நகரத்தில் துக்கத்தின் சாயலைக் காண முடியவில்லை. சம்பந்தரின் பூத உடல் பலாலி விமான நிலையத்திலிருந்து தந்தை செல்வா கலையரங்கை நோக்கி வந்த வழி நெடுக மக்கள் திரண்டு நின்று துக்கத்தை வெளிப்படுத்தவில்லை. அப் பூதவுடலை யாழ்ப்பாணத்திலிருந்து வழியனுப்பி வைத்த பொழுதும் மக்கள் திரண்டு நின்று வணக்கம் செய்யவில்லை. ஆனால் தந்தை செல்வாவின் பூதவுடல் தெல்லிப்பளையிலிருந்து முற்ற வெளியை நோக்கி வந்த பொழுது வழிநெடுக மக்கள் திரண்டு நின்றார்கள். சில இடங்களில் சில கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலம் நீண்டு சென்றதாகத் தகவல். அது ஒரு தேசிய துக்க நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டது. மக்கள் தன்னியல்பாக செல்வாவை தந்தை என்று அழைத்தார்கள்.தன்னியல்பாக ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதி ஊர்வலத்தில் திரண்டார்கள். ஆனால் சம்பந்தருக்கு அது நடக்கவில்லை. ஏன் ? ஈழத் தமிழர்களின் நவீன அரசியலில் மிக நீண்ட காலம், இறக்கும்வரை பதவியில் இருந்த ஒரு தலைவர் அவர். தமிழ் மக்களின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற திருக்கோணமலையின் பிரதிநிதி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டம், ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய மிதவாத அரசியல் ஆகிய மூன்று கட்டங்களையும் தொடுக்கும் மூத்த அரசியல்வாதி. எல்லாவற்றையும் விட முக்கியமாக கிழக்கில் இருந்து எழுச்சி பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதிக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அஞ்சலி செய்யாதது ஏன்? ஏனென்றால், சம்பந்தர் இறக்கும்பொழுது ஏறக்குறைய தோல்வியுற்ற ஒரு தலைவராகவே இறந்தார். சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு முன்னப்பொழுதையும் விட அதிகம் விட்டுக்கொடுப்பதன் மூலம் ஒரு தீர்வைப் பெறலாம் என்று அவர் கற்பனை செய்தார். அதில் தோல்வியடைந்தார். எனவே அவரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புத்தான். ஆயுத மோதல்களுக்கு பின்வந்த மிதவாத அரசியலின் தலைவரான அவர் நீட்டிய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கத் தயாராக இருந்திருந்தால். சம்பந்தரின் வழி வெற்றி பெற்றிருக்கும்.ஆனால் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு ராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. அதைவிட முக்கியமாக அது அரசியல் வெற்றியாக மாற்றப்பட முடியாத ஓர் இனப்படுகொலை.ராஜபக்சக்கள் அந்த வெற்றியை ஒரு கட்சியின் அடித்தளமாக மாற்றினார்கள்.அதன் மூலம் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கினார்கள். யுத்த வெற்றிவாதம் எனப்படுவது சம்பந்தருடைய விட்டுக் கொடுக்கும் அரசியலுக்கு எதிரானது.யுத்த வெற்றிவாதமானது தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது சம்பந்தர் மட்டும் தனிக்குரலில் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்; பிரிக்கப்படாத இலங்கைக்குள் ; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆயுத மோதல்களுக்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த அப்படிப்பட்ட ஒரு தலைவரை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு உரிய முக்கியத்துவம் கொடுத்து பொருத்தமான விதத்தில் கையாளத் தவறியது. அவருடைய விட்டுக் கொடுப்புகளுக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் வீடு அவர் இறக்கும்வரை வழங்கப்பட்டது. அந்த வீட்டை ஏற்றுக்கொண்டதன் மூலமும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஸ்தானத்தை இழந்த பின்னரும் அந்த வீட்டை விடாது வைத்துக் கொண்டிருந்ததன் மூலமும் சம்பந்தர் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் குறைத்துக் கொண்டார். இப்படிப் பார்த்தால் சம்பந்தரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புதான். இந்த விடயத்தில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நம்புமளவுக்கு சம்பந்தர் ஏமாளியாக இருந்தாரா என்ற கேள்வி எழும். அல்லது அவர் தன் சொந்த மக்களின் போருக்கு பின்னரான கூட்டு உளவியலை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு தலைவராக இருந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது விளங்கிக் கொண்ட போதிலும் அதற்கு விரோதமாக செயல்பட்டவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? அதனால்தான் அவருடைய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்த பொழுது மக்கள் அதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வரவில்லையா ? இரண்டாவதாக, அவரை தோற்கடித்தது, அவருடைய அரசியல் வாரிசுகள். யாரை தன்னுடைய பட்டத்து இளவரசர்போல வளர்த்தாரோ, அவரே சம்பந்தரைக் குறித்து பொதுவெளியில் விமர்சிக்க தொடங்கினார். அவர் மற்றொரு வாரிசாக இறக்கிய விக்னேஸ்வரன் அவருக்கு எதிராகத் திரும்பினார்.தனது சொந்த தேர்தல் தொகுதியில், திருக்கோணமலையில் தன்னுடைய வாரிசாக அவர் யாரை இறக்கினாரோ, அவர் தனக்குத் தெரியாமல் நியமனங்களைச் செய்கிறார் என்று புலம்பும் ஒரு நிலைமை ஏற்பட்டது. அதாவது தன் மிக நீண்ட அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பந்தர் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே மதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின் பின் கட்சி இரண்டாக உடைந்தது. கட்சிக்காரர்களே கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். தனது தாய்க் கட்சி உடைந்த போதும், அந்தக் கட்சியை கட்சிக்காரர்களே நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்திய பொழுதும், அதைத் தடுக்கும் சக்தியற்றவராக, கையாலாகாத ஒரு தலைவராக, சம்மந்தர் காட்சியளித்தார். அதாவது அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய கண் முன்னாலேயே அவருடைய தாய்க் கட்சி உடைக்கப்படுவதையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதையும் கையாலாகாதவராக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர் தோற்கடிக்கப்பட்டிருந்தார். சம்பந்தரை அவருடைய வாரிசுகளே தோற்கடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் அவருடைய அஞ்சலி நிகழ்விலும் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை தோற்கடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒர் அரசியல் தலைவரின் அஞ்சலி நிகழ்வு என்பதும் ஓர் அரசியல் நிகழ்வுதான். அதை அதற்குரிய கால முக்கியத்துவத்தோடு விளங்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கட்சிக்காரர்கள் செய்யத் தவறினார்கள்.அவரைப் பெருந்தலைவர் என்று அழைத்த கட்சிக்காரர்களே அந்த அஞ்சலி நிகழ்வை பிரம்மாண்டமானதாக ஒழுங்குபடுத்தத் தவறினார்கள். அல்லது அவர்களால் அவ்வாறு ஒழுங்குபடுத்த முடியாத அளவுக்கு மக்களின் கூட்டு மனோநிலை இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா? அதனால் யாழ்ப்பாணத்தில் அந்த சாவீடு சோர்ந்து போன ஒரு சா வீடாகக் காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தில்,சம்பந்தரின் அஞ்சலி நிகழ்விலும் அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய வாரிசுகளும் அவருடைய விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்களும் அவர் இறந்த பின்னரும் அவரைத் தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்லலாமா? https://athavannews.com/2024/1391210
  20. பிரிட்டனின் ஆட்சிமாற்றம் – தமிழா்களுக்குச் சாதகமாக அமையுமென தமிழ்க்கட்சிகள் நம்பிக்கை! பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் ஆட்சிமாற்றமானது, இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில், எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகருமென எதிா்பாா்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளாா். 14 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் நலனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா். அத்துடன், ஆங்கிலேயர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியபோது, தமிழர்களுக்கான நியாயமானதொரு அதிகாரப்பகிர்வை வழங்காததன் காரணமாக இவ்விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரிலும், அதன் பின்னரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை தொழிற்கட்சியினா் விரைந்து முன்னெடுக்கவேண்டும்’ என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். இதேவேளை, தொழிற்கட்சியைப் போன்றே கொன்சவேட்டிவ் கட்சியும் கடந்த காலங்களில் தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை கொன்சவேட்டிவ் கட்சியும் வழங்கியதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், தொழிற்கட்சியின் வெற்றியினால் மாற்றமொன்று நிகழுமெனில் அது தமிழர்களுக்கு சிறந்த மாற்றமாகவே அமையும் எனவும் அவா் நம்பிக்கை வெளியிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1391217

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.