Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி
மை பிரண்ட் சேப் அடிக்குது சார் !!!- இரசித்த.... புகைப்படங்கள்.
- ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1380064- கருத்து படங்கள்
- ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்! தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார். மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார். அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார். https://athavannews.com/2024/1379985- நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்- விமல் வீரவன்ச!
நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்- விமல் வீரவன்ச! ‘மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே’ நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அங்கு அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். “தீவிரமயமாக்கல் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக வன்முறையைப் பயன்படுத்துவதை ஆதரிப்பது அல்லது எளிதாக்குவது உட்பட, தீவிரவாத நம்பிக்கை முறையைப் பின்பற்றும் செயல்முறையாக பொதுவாக வரையறுக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் என்பது அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைவதற்காக பொதுமக்களை இலக்காகக் கொண்ட வன்முறை செயல்முறையாகும். அவர்களுக்கு மற்ற பிரிவினரோ, பிற மதத்தினரோ, பிற இனத்தவர்களோ நண்பர்கள் தேவையில்லை.. அந்த வகையில் தீவிரவாதிகளாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அத்துடன் இந்த தீவிரவாத செயல்களால் முதலில் பாதிக்கப்படுவது கத்தோலிக்கர்கள் அல்ல என்றும், முஸ்லிம்கள் மக்கள்தான் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார். மேலும் முஸ்லிம்களை தாக்குவதைத் தடுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, புலனாய்வு அமைப்புகளை நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற கொடூரமான படுகொலை நடந்திருக்காது என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1379920- கருத்து படங்கள்
- தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்!
தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846- ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல்! இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிர் நீத்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். பொன்னாலையில் நேற்று மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன்னாலை வெண்கரம் இலவச படிப்பகத்தில் மாலை நான்கு மணியளவில் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான பொன்ராசா தலைமையில் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் பொன்ராசா, வெண்கரம் படிப்பகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர் ரூபனின் உறவினர்கள், பொன்னாலை பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379842- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை
வடையை…. 800 ரூபாய்க்கும், கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கும் விற்று டொலரை சேமிக்கலாம் என்றால் வெள்ளைக்காரன் வீடியோ எடுத்து நாறடிக்கின்றான். 😂- உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு: 15,000 கோடி ரூபா பெறுமதி.
தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி………. 😂- உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு: 15,000 கோடி ரூபா பெறுமதி.
உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு: 15,000 கோடி ரூபா பெறுமதி. உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இதன் பெறுமதி சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதிரியானது இயற்கையான ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது. கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தினகல் வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின் மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும். அதேவேளை பல இரத்தினங்கள் மற்றும் கொருண்டம் இனங்களின் படிகங்கள் பல்வேறு இரத்தினங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படுகின்றன. அதேவேளை கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆசியாவின் ராணி” என அழைக்கப்பட்ட சுமார் 310 கிலோ எடை இரத்தினம் கல் ஒன்று இரத்தின புரியில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய இயற்கையான கொருண்டம் நீல சபையர் அது என கூறப்பட்ட நிலையில் தற்போது 802 கிலோ எடை இரத்தினக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2024/04/blog-post_349.html- இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை!
நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்று எனக்குத் தெரியும். 😂 "பாம்பின் கால், பாம்பு அறியும்." 🤣- இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை!
அட... இவ்வளவு நாளும் வேலை செய்து கொண்டா இருந்தவர். 😮 நமக்கு தெரியாமல் போச்சே.... 🤣- ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் திறப்பு!
- கருத்து படங்கள்
- ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
- ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் திறப்பு!
ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் திறப்பு! கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள (ITC ரத்னதீப) அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும் இரண்டாவது கட்டிடம் 50 அடுக்குமாடி குடியிருப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் ஒரு பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். https://athavannews.com/2024/1379719- யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!
யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது! யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தே கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லுமாறு அறிவிப்பொன்றும் கொக்குவில் புகையிரத நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379741Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி