Everything posted by தமிழ் சிறி
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
விசுகர்... அவர்கள் பஞ்ச பாண்டவர்கள். 😂 🤣
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
-
கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஒரு கொத்து ரொட்டி இரண்டு லட்சமாம்.- கருத்து படங்கள்
- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
- ராமன், ரஹ்மான் சர்ச்சை: எவரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்! - உலமா கட்சித் தலைவர் அப்துல் மஜீத்.-
ராமன், ரஹ்மான் சர்ச்சை: எவரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்! - உலமா கட்சித் தலைவர் அப்துல் மஜீத்.- ”சில வருடங்களுக்கு முன் உலமா கட்சித்தலைவர் என்ற வகையில் தன்னால் கூறப்பட்ட ராமன், ரஹ்மான் கருத்துக்கள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக” முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய மதத்தை பொறுத்த வரை முதல் மனிதன் ஆதம் ஒரு முஸ்லிமாகவே வாழ்ந்தார் என்பதால் உலகில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்தோரும் சகோதரர்களே ஆவர். இதனால் ஆதிகால முஸ்லிம்களின் சிறிய கதைகள் பின்னாளில் பெரும் கற்பனை காவியங்களாக மாறியுள்ளன என்பதே எனது நம்பிக்கை. இந்த வகையில்தான் நான் மேற்படி கருத்துக்களை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ரஹ்மான் என்பது இறைவனின் திருப்பெயர்களில் ஒன்று என்பதால் அதனோடு ஒருவரை இணைப்பது இறைவனை அவமதிக்கும் செயல் என நான் மதிக்கும், ஒருவர் எனக்கு வருத்தத்துடன் கூறியதால் நான் தெரிவித்த கருத்து அவரது மனதை மிகவும் காயப்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்துகொண்டேன். மக்களை எமாற்றும், இனவாத, லஞ்சம் வாங்கும், மோசமான மனிதர்களின் உள்ளங்களை விட நல்லவர்கள் மனது புண்படும் என்றால் அதனை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் ரஹ்மானோடு ராமனை இணைத்து கருத்து சொன்னமைக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban- கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630- கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!
கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652- மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659- பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம்
பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube) போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656- மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!
அவரின் இறுதி உரை. 👇 //என் இறுதி பயணத்தை தயார்படுத்தி உள்ளேன், நான் இப்போது எனது கடைசி இறுதி பயணத்தை தயார் செய்துள்ளேன். இப்போது, நம் மதத்தின்படி, இறப்பதற்கு முன் மெழுகுவர்த்தியைக் கொடுக்கலாம். எனது உடலை தூக்கிக் கொண்டு செல்லும் சவப்பெட்டியை இலட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து வாங்காமல் அந்தப் பணத்தில் ஏழைப் பிள்ளைகளுக்கு புத்தகம் கொப்பி உணவு என்பனவற்றை வாங்கி தருமாறு கூறியுள்ளேன். எனது மயானத்திற்கு வருபவர்கள் யாரும் அழுது கொண்டு என் பின்னால் வர மாட்டார்கள். அதற்காக நான் ஒரு பாடலை எழுதியுள்ளேன். பழகிய பாதையில் இன்றும் செல்கின்றேன் ஆனாலும் வேறு பயணம்.அதிகமான மக்கள் என் பின்னால் வருகின்றார்கள் நான் தனியாக செல்கின்றேன் என்று நினைத்து. எப்பொழுதுமே எனது பாரத்தை உனது தோளில் இறக்கி வைக்கவில்லை மகனே. கூடுதலான பாரமாக இருந்தால் பூமியில் வைக்கவும் உனது தோல் வலிக்கும் என் மகனே. எமது தோட்டத்தின் பக்கத்தில் உள்ள குளத்தின் அருகில் எனக்கான இறுதிக் குழியை நானே அமைத்து வைத்துள்ளேன் என் சிறிய மகனே.. என்னை விட்டு செல்லும்போது உனது அம்மாவின் மருந்து பற்றுச் சீட்டை மறக்காமல் சென்று கொடுத்து விடு என் மகனே.. எனது பெரிய மகன் ஏற்கனவே இறந்து விட்டான் என் தனிமைக்கு அவன் அங்கு இருப்பான் அவன் என்னை பார்த்துக் கொள்வான் நீ என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம். எனது ஆசை சாதாரண ஏழையைப் போல் என்னை நல்லடக்கம் செய்ய வேண்டும். அதை விட்டு மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தாரை போல் மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை சீரழித்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்து இறப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. நான் தேடியது நான் உழைத்தது என் அரசியல் பயணம் இறுதி வரை ஏழை மக்களுக்காகவே இது நான் எனது சுயநினைவோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சென்று வருகின்றேன். நான் நேசிப்பது என்னை நேசிப்பது ஏழை மக்கள். எனது மூச்சிலும் பேச்சிலும் ஏழை மக்களின் நினைவோடு உயிர் பிரிவேன்.// Translation by Paul ✍️✍️- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நன்றி. நிச்சயமாக பாஞ்ச் அண்ணைக்கு சொல்லி விடுகின்றேன். 🙂- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இருதய அறுவைச் சிகிச்சையின் பின்... முன்பு போல் எழுத முடியவில்லை என்று சொன்னார். இடைக்கிடை யாழை மேலோட்டமாக பார்ப்பதாகவும் தெரிவித்தார். நீங்களும், ஈழப்பிரியனும் விசாரித்ததாக சொல்கின்றேன் நிழலி. 🙂- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
பாஞ்ச்... பேரப் பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.- முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
ஈழப்பிரியன்... சுகாதார அமைச்சில் இருந்து 679 வாகனங்கள் காணாமல் போயிருக்கும் போது ஆடு காணாமல் போவது சின்ன விசயம் போலுள்ளது. இனி மற்ற அமைச்சுக்களிலும் கணக்கு எடுத்தால்.... குத்து விளக்கில்தான் கனக்குப் பார்க்க வேண்டும்.ஏற்கெனவே... கோத்தா காலத்திலும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பல வாகனங்கள் காணாமல் போனதாக செய்தி வந்திருந்தது.- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
பாஞ்ச் அண்ணை சென்ற மாதம் யாழ்ப்பாணம் போய் வந்தவர். அவர் சொன்னார்... கடையில் பொருட்கள் வாங்க நின்றால், சிலர் வந்து குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கித் தரும்படி கையை பிடித்து கெஞ்சுவார்களாம். பார்க்க பெரும் பரிதாபமாக இருக்குமாம். அவர்களில் இருவகை உண்டாம். சிலர் வறுமையில் வேறு வழி இல்லாமல் கேட்பவர்கள். மற்றவர்கள் வாங்கிக் கொடுத்த பொருளை கொண்டு போய் வேறு இடங்களில் பாதி விலைக்கு விற்று விட்டு அந்தக் காசில் போதை ஏற்றுவார்கள் என்றார். இதனால்... யாருக்கு கொடுப்பது, யாரை தவிர்ப்பது என்று அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார். அதனால்.... உண்மையான வறியவர்களும் பாதிக்கப் படுகின்றார்களாம்.- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
முன்பை விட, இப்போ ஏமாற்றுபவர்கள் இன்னும் அதிகமாகி உள்ளதாக பலர் சொல்கிறார்கள்.- முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
கள்ளன்... பேராசை பிடித்து, அம்பிட்டுப் போனார். பிடிபடாமல் விட்டிருந்தால்... அவ்வளவு ஆடுகளையும் கொழும்புக்கு கொண்டு பொய்ய கொத்து ரொட்டி போட்டு விற்றிருப்பாங்கள்.- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அந்த முஸ்லீம் கடைக்காரர், அல்லா பாத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லித்தான் 1350 கொத்து ரொட்டியை, 1900 ருபாய்க்கு விற்க முயற்சி பண்ணினவர்.- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை மிரட்டிய விவகாரம்: கைது செய்யப்பட்டவருக்குப் பிணை. வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த உணவகத்தின் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு அளுத்கடை பகுதியிலுள்ள உணவு ஒன்றிற்கு வருகை தந்திருந்த வெளிநாட்டவர் அச்சுறுத்தப்படுவதைப் போன்ற காணொளி நேற்யைதினம் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். https://athavannews.com/2024/1378587 - சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.