Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தமளிக்கிறது: அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு. தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா, இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் அமுழ்த்தி குளிர்காய விரும்பும் சுயநலத் தரப்புக்களுக்கு வாய்ப்பாக மாறிவிடும் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(09) இடம்பெற்ற தென்னிந்திய திரைப் பிரலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “‘இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசங்களில் இடம்பெறுவது வேதனையளிக்கின்றது. எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்வியலையும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கு எமது புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்ற வேளையில், புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரின் மமுயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவது, மக்கள் நலன் சார்ந்த எமது எதிர்பார்ப்புக்களுக்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும். எமது மக்களை தொடர்ந்தும் அவலங்களுக்குள் அமுழ்த்தி வைத்திருந்து, அதன்மூலம் அரசியல் இலாமீட்ட முனைகின்ற சுயலாப தரப்புக்கள், எமது பிரதேசங்களில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் இல்லை என்ற கருத்தினை பரப்புவதில் கண்ணும் கருத்துமாக செயற்பபட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களின் கருத்துக்களை வலுப்படுத்துவதாக இவ்வாறான சம்பவங்கள் அமைந்து விடும். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது, ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பிற்கும் அதிகமான மக்கள் வருகை தந்தமையும், ஒழுங்குபடுத்தலில் இருந்த குறைபாடுகள் சிலவுமே இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவமானது, இசை நிழச்சியை கண்டுகளிக்கும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த எமது மக்களுக்கும், ஆர்வத்துடன் வருகைதந்த தென்னிந்திய கலைஞர்களுக்கும் அதேபோல் ஏற்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றபோது, தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி செய்வதை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.” என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1369278
  2. யாழ்ப்பாணத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய சிறப்பு ரிக்கற்றுகள். வடக்கன்ஸ் வடக்கன்ஸ். யாழ்ப்பாணத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய சிறப்பு ரிக்கற்றுகள்.
  3. 👇 சமூக வலைத்தளங்களில் வந்த சில பதிவுகள். 👇 இருந்தாலும் நாகரீகமற்ற முறை இளம் காவாலிகள் யாழ்ப்பாணத்தில் அதிகம் என்பதை காட்டியுள்ளது . யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வரமாட்டம் என நடிகர்கள் கூறினார்கள் என்பதற்கு இவர்கள் நடந்தவிதம் நிருபணமாகியதில்.மிகவும் வெட்கப் பட வேண்டிய விடயம். Elam Tamil ############## ################# ############## இசை கலைகளை ரசியுங்கள். ஆனால் கவர்ச்சிக்கு விலை கொடுக்காதீர்கள். இதை "கல்வி ஒழுக்கம்" எ‌ன்று‌ பயன்படுத்தாதீர்கள். எமது புதிய தலைமுறைகளின் எதிர்பார்ப்பை நன்கு அறிந்து கொண்டவர்கள் இவர்கள் என்பதை மிக கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நம்மால் புரிந்து கொள்ளாத முடிய எமது புதிய தலைமுறை உறவுகள். கலவரம் நடந்ததை மிகவும் கவலை அடைய வேண்டும் ஏனென்றால் நல்ல கல்வி ஒழுக்கத்தை கற்றுக் கொண்டவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். ஆனால் கவர்ச்சி நடிகை நடனம் முடிந்த பின் தான் கலவரமே தொடங்கியது. ஏன் இந்த கலவரம். பின்னால் நின்றவர்கள் எல்லாம் முன்னால் வந்தது ?🤔 இன்னும் புரியவில்லை என்றால் நாங்கள் இவர்களைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ள ஒரு கல்வி ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும். நாளும் பொழுதும் விலைவாசி அதிகம் என புலம்பிக் கொண்டு, டெங்கு காய்ச்சல் என்று அலம்பி கொண்டு, இன்று எங்கு வந்து நிற்கிறார்கள் என்று பாருங்கள். விவசாயத்தை மறந்து, வீட்டுத் தோட்டத்தை பாரமென நினைத்த பெற்றோர்கள் அனுப்பி வைத்த பிள்ளைகள் இவர்கள் "இல்லாதவர்கள்" அல்லவா? கஞ்சாவுக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் கலை நிகழ்ச்சி தானே என்று நானும் கொஞ்ச நேரம்பேசாமல் இருந்தேன். ஆனால் அங்கு கஞ்சாவுக்கு துணையாக கவர்ச்சியும் வந்தது. எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லையே முன்னிடத்தில் என்று மனக்கவலை கொண்டே வந்தது கலவரம்🤔 அன்று சொன்ன"கல்வி ஒழுக்கம்"🌿 மறைந்தாலும் அவர் சொன்ன வார்த்தைகளை இன்றும் நினைவில் கொள்வதில் பெருமையாக இருக்கிறது. மறைந்தாலும் இவர் உரையாடல் பெருமையையும் மகிழ்ச்சியையும் இன்றும் தருகிறது. ஆனால் நிகழ்வுகள் பார்வையில் தலைகீழாக இருக்கின்றது, அதனால் மனக்கவலையுடன் இந்தப் பதிவை உங்களுக்கும் தருகிறேன். நன்றி ✍️ Naguleswary Nagalingam
  4. ஹரிஹரனின் இசை நிகழ்வில் பார்வையாளர்கள் மீது கொடூர தாக்குதல்: காலில் விழுவதாக சொன்ன இந்திய பிரபலம் : பாதியில் இடைநிறுத்தம்! நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் மற்றும் நோர்த்; யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது. ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வானது, பின்னர் 25,000, 7,000, 3,000 மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது. முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர். பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அத்துடன் இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுடன் விருந்து அருந்தி புகைப்படம் எடுப்பதற்கு 30,000 ரூபா என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா ஊடக சந்திப்பில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று இசைநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தவேளை இரசிகர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து உள்நுழைந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் சிக்கலுக்குள்ளாகினர். பின்னர் பொலிஸார் மற்றும் volunteer குழுவினரால் இரசிகர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இசை நிகழ்ச்சி இடையிடையே தடைப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது. சரியான திட்டமிடல் இன்மையே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் காசு கொடுத்து ரிக்கெட் வாங்கிய பலர் இருக்கைகள் இல்லாமையினால் அங்கலாய்த்துள்ளனர். நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனை நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களிடம் கூறும்போது அவர்கள், தாங்கள் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்றும், தாங்கள் கல்வி கற்கும் காரணத்தால் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இது குறித்து மேற்பார்வையாளர்களிடம் முறையிடுமாறும் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் அவர்களது இசை நிகழ்ச்சி அதே அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக நடைபெற்றதுடன், அதில் எந்த குழப்பங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1369201
  5. போர்களமாய் காட்சியளிக்கும் முற்றவெளி மைதானம்: 6 பேர் கைது : 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , இலவசமாக இசை நிகழ்வை கண்டு கழித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்து எறிந்துகொண்டு , கட்டண அனுமதி பெற்று , இசை நிகழ்வை கண்டு களித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து , மேடை வரையில் சென்று இடையூறு ஏற்ப்டுத்தியுள்ளனர். அத்துடன் , கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள் , ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள் , பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி அட்டகாசத்திலும் ஈடுபட்டனர். இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு , பொலிஸார் , விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து , இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில ஒரு மணித்தியாலத்திற்குள் அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர். குழப்பங்களுக்கு நிகழ்வின் ஏற்பாடுகளில் உள்ள குறைகளே காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1369204
  6. முற்றவெளிக்கு வந்த ஹரிகரன்; அதிரடியாக தடையை உடைத்து புகுந்த கூட்டம்!!
  7. இந்திய நட்சத்திரங்களினால் ஸ்தம்பித்து போன யாழ் நகரம் ! இலங்கையில் இதுபோல் நடந்ததில்லை !
  8. இனி.... மிஞ்சி இருக்கிற உக்ரேனும் பறி போகப் போகுது. 😂
  9. புதினம் தெரியுமோ? (பட்சி) இரவல் சீலையில கொய்யகம் கட்டுறது தான் இப்ப நல்லா எடுபடுகுது. அப்பிடி இரவல் ஆக்களை யாழ்ப்பாணத்துக்கு வாகனங்களில் அள்ளிக்கட்டிக்கொண்டு வந்து. சுதந்திரதினத்தை 'பெருமெடுப்பில' கொண்டாடினதா ஒரு கஞ்சாக் கும்பல் படம் காட்ட வெளிக்கிட்டது. வாயைத் திறந்தாலே நஞ்சைக் கக்கிற சரத் வீரசேகர மாதிரி அவைக்கு எலும்புத்துண்டு போடுறவையைக் கூட்டிக்கொண்டு வந்து. வீரசிங்கம் ஹோல் முழுக்க சோத்துப்பார்சலுக்கும். ஐயாயிரம் ரூபா காசுக்கும், அரைப்போத்தில் சாராயத்துக்கும் வந்த கும்பலைக் கொண்டு நிறைச்சு 'பாத்தியளே எங்கட பவரை?' எண்டு அந்த எடுபிடிக் கும்பல் தங்களைத் தாங்களே பாராட்டியுமிருக்குது. உங்கட காசு. உங்கட பார்சல், உங்கட சாராயம். என்னவும் செய்திட்டுப் போங்கோ. ஆனால் இப்பிடி வித்தை காட்டுறனெண்ட பேரில இஞ்சையிருக்கிற சனத்துக்கு இடைஞ்சல் குடுக்கிறதுதான் கடும்பிழை. காய்ஞ்சமாடுகள் கம்பில விழுந்தமாதிரி பஸ்ஸில ஏறிவந்த ஆக்களுக்கு என்ன செய்யிறது எண்டு தெரியேலை. அதுகள் கண்டபடி கத்திக்குளறிக்கொண்டு றோட்டை அடைச்சபடி அலையத் தொடங்கிட்டுதுகள். அதைவிட உந்த வாள்வெட்டு, கஞ்சா கடத்தல் செய்யிற கோஷ்டியும் மோட்டார் சைக்கிள்ள வந்து பெரிசாக் ஹோர்ண் அடிச்சபடியே றோட்டு முழுக்க ஓடுறதும், அதால போய்வாற சனத்துக்கு முன்னால போய் திடீ ரெண்டு மோட்டார் சைக்கிளை வெட்டி எடுக்கிறதுமா பெரும் கூத்துக் காட்டிச்சினம். அதைவிட இன்னொரு விசயம் நடந்தது. தமிழ்ச்சனம் தான் இந்தச்சுதந்திரதினத்தை மனப் பூர்வமாக் கொண்டாடுகினமாம் எண்டு காட்டுறதுக்காக ஒரு பத்துப்பதினைஞ்சு சின்னப்பெடியளுக்கு பச்சை நிறத்தில வேட்டியைத் தாறு பாய்ச்சிக் சுட்டி, காவடி ஆட விட்டவை. அந்தப் பெடியளுக்கு பதினைஞ்சு வயதுக்குள்ளதான் இருக்கும். அதுகளுக்கு காவடி எண்ட பேரில பெரிய கம்பியில செய்த அலகு குத்திப்போட்டு உந்த வெயிலுக்க நார்றோட்டுல ஆடப்பண்ணிக் கொண்டுதான் வந்தவை. சிலர் தங்களுக்கு பவர் இருக்கெண்டு மேலிடத்துக்கு காட்டி, காசு வாங்கிறதுக்காக இப்பிடிச் சின்னப்பிள்ளையளை கம்பியால வாயில குத்துறதும், கொளுத்திறவெயிலுக்க செருப்புமில்லாம நடத்திக்கூட்டிக் கொண்டு வாறதும் கடும் சிறுவர் துஷ்பிரயோகம். ஆனால் இதுகளையும் பிடிக்கவேண்டிய பொலிஸ் காரரே இந்தப் பேரணிக்கு பாதுகாப்புக் குடுக் கேக்க,அவைக்கு எதிரா ஆர்தான் முறைப்பாடு குடுக்க முன்னுக்கு வருவினம்? இப்பிடி பிள்ளை யளை வதைச்சு. இரவல் ஆக்களை இறக்கி சுதந்திரதினம் கொண்டாடுறதுக்குப் பதிலா நாலுசனத்துக்கு ஏதும் உதவிப்பொருள் குடுத்தி ருந்தாலும் புண்ணியமாப் போயிருக்கும். இப் பிடிச் சொந்தக்காசிலையே சூனியம் வைச்சு சுதந்திரத்தினத்தை கெடுத்துட்டினமே. (06.02.2024 உதயன் பத்திரிகை) #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #புதினம்
  10. யாழில் தமன்னா! நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் ஆகியோர் இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1369129
  11. 196 குழந்தைகள் பிறப்பு : சிறையில் பெண்கள் கர்ப்பமாகும் எண்ணிக்கை அதிகரிப்பு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறைச்சாலை காவலில் உள்ள பெண் கைதிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாக கொல்கத்தா உயர்நீதி மன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய , சிறைச்சாலையில் 196 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி கொல்கத்தா உயர் நீதிமன்றில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பெண்கள் சிறைச்சாலையில் ஆண்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1369099
  12. தென்னிந்திய பிரபலங்களை முற்றுகையிடுவோம்! யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா, எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நண்பகல் புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞனர்களான சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை குறித்த கலைஞர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு நபரொருவருக்கு தலா 30,000 ரூபாய் அறவிடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விளம்பரத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் போதே மு.தம்பிராசா, இவ்வாறு எச்சரித்துள்ளார். https://athavannews.com/2024/1368992
  13. யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்! பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நண்பகல் புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞனர்களான சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368978
  14. யாழில் தரிசு நிலத்தில் அறுவடை! யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் நெல் வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் இன்று அறுவடை மேற்கொள்ளபட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட திருவடிநிலை மீள் குடியேற்ற பகுதியில் உள்ள குகன் குல சங்கத்தினருக்கு உரித்தான காணிமில் 60ஏக்கர் தரிசு நிலக் காணி சுழிபுரம்மேற்கு வாழ் பொதுமக்கள் ,புலம்பெயர்தேசத்தவர்கள் ,கலைமகள் விளையாட்டு கழகத்தினரால் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியானது நெல்வயலாக மாற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் அறுவடை முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் புலம்பெயர் தேச உறவுகள் சார்பில் முத்தையா ஞானவேல் ,வனிதா ரவீந்திரன்,பசுமை புரட்சி திட்ட குழுவினர்களான நாராயணன் சபாரத்தினம்,சைலசுதா, கனகசபை ரவீந்திரன் ,சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினர்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1368915

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.