Everything posted by தமிழ் சிறி
-
2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு!
2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு! 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் (TVK) இன்று (04) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக – பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. TVK இன் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது குறித்தும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். https://athavannews.com/2025/1438055
-
ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா!
ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா! ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை (03) மாறியுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து முறையான நற்சான்றிதழ்களைப் பெற்றதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் உற்பத்தித் திறன் கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பை வளர்க்கும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு, இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று கூறியது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர். அப்போதிருந்து, அவர்கள் சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறார்கள். அதேநேரத்தில் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான நிபந்தனைகளையும் அவர்கள் அமுல்படுத்துகிறார்கள். இதுவரை எந்த நாடும் தாலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், அந்தக் குழு பல நாடுகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் சில இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பெரும்பாலும் பெண்கள் மீதான அதன் கட்டுப்பாடுகள் காரணமாக தாலிபான் அரசாங்கம் உலக அரங்கில் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 1996 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்ததை விட, தாலிபான்கள் ஆரம்பத்தில் மிகவும் மிதமான ஆட்சியை முன்னெடுப்பதாக உறுதியளித்த போதிலும், 2021 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தொடங்கினர். பெண்கள் பெரும்பாலான வேலைகள் மற்றும் பொது இடங்களில், பூங்காக்கள், குளியலறைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை நிலைநிறுத்த தலிபான்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஏப்ரல் மாதம் தலிபான்கள் மீதான தடையை நீக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438028
-
Free America Weekend: ட்ரம்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
Free America Weekend: ட்ரம்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்! அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஜுலை 4 ஆம் திகதியான இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் “Free America Weekend” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்து பேரணிகள், பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் கொள்கைகள் மக்கள் சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நியூயோர்க், சான் பிரான்சிஸ்கோ, டெக்சாஸ், புளோரிடா போன்ற நகரங்களில் மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். குறித்த போராட்டமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438018
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற மாதிரி, ஊருக்குப் போக முதல்... அங்கு உள்ள ஆளும் கட்சிக் காரருக்கு ஐஸ் வைத்து விட்டுப் போனால் தான்... தற்செயலாக ஏதும் நடந்தாலும் பிணை எடுக்க வருவாங்கள். இல்லாவிடில் நாலாம் மாடியில் கொண்டு போய் வைத்து.. மொங்கிப் போட்டு, வெட்டித் தாட்டுப் போடுவாங்கள் பாவிகள். ஏற்கெனவே ஊரில் வாள் வெட்டு கோஸ்ட்டி முதுகிலை வாளை செருகிக் கொண்டு பறந்து திரிகிறாங்கள். அதுக்காகத்தான் வில்லங்கம் இல்லாமல் போய்... கொத்து ரொட்டி, அப்பம், தோசை, கூழ், இளநி என்று ஆசைப் பட்டதுகளை சாப்பிட்டு விட்டு கம்மென்று வந்து விட வேணும். 😂 இனி அனுரா, ஜேர்மனிக்கு வந்தால்... கறுப்புக் கொடியும், அழுகின தக்காளிப் பழமும்தான் வரவேற்கும். 🤣
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
உங்கடை பாஸ்போட்டிலை... கியூபா விசா, கைலாசா விசா எல்லாம் குத்தி இருக்கு. என்ன அலுவலாக அந்த நாடுகளுக்கு எல்லாம் போனீங்கள். 😜
-
வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை! வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையஙகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் சுட்டிக் காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதனை தாம் மாநகர எல்லைக்குள் நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையத்தை நடத்த முடியாது என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் 10 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கும் இடங்களில் மாணவிகள் மாற்றும் மாணவர்களுக்கான மலசல கூட வசதி, குடிநீர் வசதி என்பன இருக்க வேண்டும் எனவும், அதனை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437983
-
கருத்து படங்கள்
- சுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது!
சுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது! 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒரு டிரில்லியன் ரூபாவையும் விஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கம் நிர்ணயித்த முழு ஆண்டு இலக்கை (ரூ.2.115 டிரில்லியன்) நாங்கள் தாண்டிவிடுவோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார். Athavan Newsசுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது!2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒரு டிரில்லியன் ரூபாவையும் விஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்...- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
துப்பாக்கிச் சூட்டில் கணேமுல்ல சஞ்ஜீவவின் நெருங்கிய சகா உயிரிழப்பு! ராகமை, படுவத்தை பகுதியில் நேற்றிரவு (03) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவின் நெருங்கிய நண்பரான “ஆர்மி உபுல்” என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பாதிக்கப்பட்ட நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான போட்டியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து ராகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437976- போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
அஜித்தின் பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல். சிவகங்கை அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற 28 வயதான காவலாளி, பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அஜித்தின் பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் ” அஜித்குமாரின் உடலில், 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில், 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன. ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும், அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன் மண்டையோட்டில் அடியும், மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்தது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால், ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது. தரையில் இழுத்துச்சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது பொலிஸார் அடிக்கும் போது தற்காத்துக் கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். தொடர்ந்து, பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437996- ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்!
ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, அமெரிக்க காங்கிரஸ் வியாழக்கிழமை (03) அவரது 4.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வரி குறைப்புக்கள் மற்றும் செலவுக் குறைப்புகளுக்கான ஒரு பெரிய சட்டமூலத்தை நிறைவேற்றியது. குடியரசுக் கட்சி தலைமையிலான சபை இந்த சட்டமூலத்தை 218–214 என்ற குறுகிய வாக்குகளில் நிறைவேற்றி கையொப்பமிட அவருக்கு அனுப்பியது. இந்த வாக்கெடுப்பு, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவருக்குக் கிடைத்த ஒரு பெரிய சட்டமன்ற வெற்றியைக் குறிக்கிறது. அவரது குடியேற்ற ஒடுக்குமுறைக்கு நிதியைப் பெறுதல், அவரது 2017 வரி குறைப்புகளை நிரந்தரமாக்குதல் மற்றும் 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் உறுதியளித்த புதிய வரிச் சலுகைகளை வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும். இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (04) மாலை 5 மணிக்கு சட்டமூலத்தில் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், ஒரு பெரிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது ஒரு வரலாற்று சாதனை, இது இந்த நாட்டை ரொக்கெட் வேத்தில் முன்னேக்கி கொண்டு செல்லப்போகிறது, இது மிகவும் சிறப்பாக இருக்கும் – என்று கூறினார். பெரிய அழகான சட்டமூலம் 800க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த சட்டம், ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது. ‘பெரிய அழகான சட்டமூலம்’ என்று அழைக்கப்படும் ட்ரம்பின் புதிய வரி மற்றும் செலவின சட்டமூலம், நிரந்தர வரி குறைப்புகளுடன் கூட்டாட்சி செலவினங்களில், குறிப்பாக பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் பெரும் ஊக்கங்களை இணைத்து, சமூகப் பாதுகாப்பு வலைத் திட்டங்களை சீர் செய்யும் ஒரு விரிவான சட்டமன்றத் தொகுப்பாகும். இந்த சட்டமூலத்தின் மையத்தில், 2017 ட்ரம்ப் சகாப்த வரி குறைப்புகளை நிரந்தரமாக்குவதற்கான உந்துதல் உள்ளது. ஏனெனில் அவை தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியாக உள்ளன. நீட்டிக்கப்பட்ட வரிச் சலுகைகளுடன், இந்த சட்டமூலம் எல்லைப் பாதுகாப்பு, இராணுவம் மற்றும் எரிசக்தி திட்டங்களுக்கான நிதியை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த சட்டமூலத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று 350 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எல்லை மற்றும் தேசிய பாதுகாப்புத் திட்டம். இதில் அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவரை விரிவுபடுத்த 46 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 100,000 புலம்பெயர்ந்தோர் தடுப்புப் படுக்கைகளுக்கு 45 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் குடியேற்ற அமுலாக்கத்திற்கான ஒரு அதிரடிப் பணியமர்த்தல் என்பன உள்ளடங்கும். அதேநேரம், இந்த சட்டமூலும் சமூகப் பாதுகாப்பு சலுகைகள் மீதான வரிகளை இரத்து செய்யவில்லை. https://athavannews.com/2025/1437997- சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
நேற்று புன்னாலைக்கட்டுவனில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சுன்னாகத்தில் விபத்தில் சிக்குண்டு அகால மரணமடைந்தார்கள். இந்த இளைஞரும் புன்னாலைக்கட்டுவனில் இருந்து சுன்னாகம் வந்து நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமாகி உள்ளார்.- யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!
நேற்று புன்னாலைக்கட்டுவனில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சுன்னாகத்தில் விபத்தில் சிக்குண்டு அகால மரணமடைந்தார்கள். இந்த இளைஞரும் புன்னாலைக்கட்டுவனில் இருந்து சுன்னாகம் வந்து நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமாகி உள்ளார்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
🟥 இரு இளைஞர்கள் உயிரிழப்பு! புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், இன்று பிற்பகல் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் கந்தரோடையை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 🕯️ இளம் உயிர்கள் பிரிந்தது வேதனை! ⚠️ இளைஞர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியம் எனும் செய்தியையும் இந்த விபத்து எடுத்துக்காட்டுகிறது. புதிய விடியல் யாழ்ப்பாணம்- ஐரோப்பாவை திணற வைக்கும் வெப்ப அலை - அதிகரிக்கும் உயிரிழப்பு.
ஐரோப்பாவை திணற வைக்கும் வெப்ப அலை - அதிகரிக்கும் உயிரிழப்பு. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அதிக வெப்பநிலையாக 46 செல்சியஸ் பதிவானது. ஐரோப்பா முழுவதும் வீசும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தெற்கு ஸ்பெயினும் ஒன்று. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் சில நாடுகள் 40 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன. போர்ச்சுகல், குரோஷியா மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இத்தாலியில் வெப்ப அலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நாடு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஹூட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பார்சிலோனாவில் சனிக்கிழமை வெப்பம் அதிகமாக இருந்தபோது, சாலை துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய ஒரு பெண் உயிரிழந்தார். ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்னியா, ஹங்கேரி, செர்பியா, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆம்பர் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆம்பர் எச்சரிக்கை என்பது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்க கூடிய கடுமையான வானிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறிக்கும் எச்சரிக்கையாகும். BBC News தமிழ்- ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
மாத கட்டணம் 15,000 ரூபா (Light use: 12,000 per month) கொஞ்சம் ஓவர் தான், தொடக்க கட்டணமும் மிக அதிகம் 118,000 ரூபா 🙂 இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை - அறிவித்தார் இலோன் மாஸ்க் ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும். இலங்கைக்கான குடியிருப்பு தொகுப்பின் விலை மாதத்திற்கு ரூ. 15,000 ஆகும், மேலும் தேவையான வன்பொருளுக்கு ரூ. 118,000 கூடுதல் செலவாகும். இந்தத் தொகுப்பு வரம்பற்ற செயற்கைக்கோள் இணையத்தை வழங்குகிறது, இருப்பினும் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. Selvakumar Natkunasingam- போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
- போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
- சிரிக்கலாம் வாங்க
- செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!
செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்! தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த பிரிவுகள் மேற்கண்ட அறிவிப்பினால் பாதிக்கப்படும் என்பதை மைக்ரோசாப்ட் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமிங் பிரிவு இதனால் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக மிகப்பெரிய தரவு மையங்களில் $80 பில்லியன் (£68.6 பில்லியன்) செலவிடுகிறது. இந்த குறைப்புகள் மைக்ரோசாப்டின் 228,000-க்கும் மேற்பட்ட உலகளாவிய பணியாளர்களில் 4%-க்கு சமமாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மூன்று சுற்று பணிநீக்கங்களைத் மைக்ரோசாப்ட் தொடங்கியுள்ளது. இதில் மே மாதத்தில் 6,000 பணியிடங்களைக் குறைப்பதாகக் கூறியது அடங்கும். அண்மைய ஆண்டுகளில், பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, மைக்ரோசாப்ட் தரவு மையங்கள் மற்றும் சிப்களில் முதலீடு செய்வது உட்பட AI ஐ வளர்ப்பதில் தனது வணிகத்தை மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1437917- கருத்து படங்கள்
- ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
- செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு
- இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா! இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இருதரப்பு சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான சக்திவாய்ந்த ஊக்கியாக இந்த திட்டம் செயல்படும். மலேசியாவின் சுறுசுறப்பான நகரங்கள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் வளமான கலாச்சார சலுகைகள் ஆகியவற்றின் வசீகரம் பல இலங்கையர்களுக்கு மறுக்க முடியாதது. இதையொட்டி, மலேசிய சுற்றுலா அதிகாரிகள் இலங்கையிலிருந்து அதிகமான பயணிகளை வரவேற்க ஆர்வமாக உள்ளனர். மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்பு மூத்த பணிப்பாளர் நுவால் ஃபாதிலா கு அஸ்மி, இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ஆதரிக்கும் விரிவான திட்டங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயமும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும், இது ஒரு சரியான நேரத்தில் மற்றும் மூலோபாய முன்னேற்ற நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சி நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகரிக்க இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறையான இராஜதந்திர கோரிக்கையை அஸ்மி ஊக்குவித்தார். தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மீட்சிக்கு சேவை செய்யும் வகையில் பயணக் கொள்கையை மறுவடிவமைப்பதற்கான பரந்த மலேசிய உத்தியை அவரது கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதேவேளை, மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்புப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுல்ஹெல்மி மொஹமட், 2024 ஆம் ஆண்டில் 58,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மலேசியாவிற்கு வருகை தந்ததாகவும், இது 2019 உடன் ஒப்பிடும்போது 122% அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் எடுத்துரைத்தார். https://athavannews.com/2025/1437880Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சுங்க வருவாய் ரூ.1 டிரில்லியனை விஞ்சியது!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.