Everything posted by தமிழ் சிறி
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன். செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது. ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான நடவடிக்கையானது பொறுப்புக் கூறத் தொடர்பில் அரசாங்கம் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. பகிரங்க சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்பதும் இந்த உள்நோக்கத்தை கொண்டதுதான். செம்மணியில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டியெழுப்புவதன் மூலம் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது என்ற தனது நிலைப்பாட்டை கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின் அரசாங்கம் அதிகம் உற்சாகமடைந்திருப்பதாகத் தெரிகிறது. கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் அரசாங்கத்தின் ஓர் அலகு போல செயல்படுகின்றது என்ற பொருள்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வரும் ஒரு பின்னணிக்குள், அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் முடிவுகளை தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய விதத்தில் அரசாங்கம் திட்டமிட்டு உழைக்கின்றது என்பதைத்தான் செம்மணி விசாரணைகளில் அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகின்றது? முதலாவதாக செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதற்கும் அந்த விடயத்தில் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உதவக்கூடிய விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு;தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உண்டு; தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கு உண்டு. நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் உரிய முறைப்படி திரட்டி,உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்கூடாக முன்னெடுப்பதுதான். இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் குடிமக்கள் அமைப்புகளிடமும் நீண்ட கால அடிப்படையிலான பரந்தகன்ற,வேலைத் திட்டம் ஏதாவது உண்டா? குறிப்பாக ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவதற்கும் அப்பால் பரிகார நீதியை நோக்கி நிலைமைகளை புத்திசாலித்தனமாக நகர்த்தக்கூடிய வழி வரைபடம் ஏதாவது உண்டா ? இந்த விடயத்தில் முன்கை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டியது பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.2015 இலிருந்து 2018 வரையிலும் அக்கட்சி நிலைமாறு கால நீதியின் பங்காளியாக செயற்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் நிலைமாறு கால நீதியை நிராகரித்து பரிகார நீதியைக் கோரினார்கள். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதை சட்டத்துறை சார்ந்த வார்த்தைகளில் சொன்னால் நிலை மாறு கால நீதிக்கானது. தமிழரசுக் கட்சி காலகட்டத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயல்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஐநாவோடும் இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயல்பட்டார்கள். நிலைமாறு கால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிசோதனை செய்தோம். அந்தப் பரிசோதனை தோற்றுப் போய்விட்டது “என்று சுமந்திரன் சொன்னார். அவர் இதைச் சொன்னது வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில். அந்த சந்திப்பு முக்கியமானது. 2021 ஆம் ஆண்டு மன்னாரைச் சேர்ந்த சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது. ஜெனிவாக கூட்டத் தொடரை முன்னிட்டு ஐநாவுக்குக் கொடுக்க கடிதம் ஒன்றை ஏழுதுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பு அது. சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். அந்த சந்திப்பில்தான் சுமந்திரன் மேற்கண்டவாறு சொன்னார்.அந்த சந்திப்பின் பின் நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்,சென் திரேசாள் மண்டபத்தில் இடம் பெற்றது.அதில்தான் ஒரு கூட்டுக் கடிதம் இறுதி செய்யப்பட்டது. வவுனியாவில் சுமந்திரன் சொன்னதை இன்னொரு விதமாகச் சொன்னால் இலங்கை தீவில் நிலை மாறுகால நீதியை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் அதாவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா தோற்றுப் போய்விட்டது என்றும் சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்காளிகள்.ஆட்சி மாதத்தைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் கூடாது தொடர் செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட ரணில் மைத்திரி அரசாங்கமானது ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியதுதான் நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானம் ஆகும். அதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட எல்லா தீர்மானங்களிலும் அப்போது இருந்த இலங்கை அரசாங்கங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசாங்கம் ஐநா தீர்மானங்களுக்கு எதிராக விவாக்களித்தது.ஏன் அதிகம் போவான்? புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விகித ஹேரத் கடந்த ஐநா கூட்டத்தொடரில் பேசும் பொழுது ஐநா தீர்மானங்களுக்கு எதிராகவும் அனைத்துலக பொதுமுறைக்கு எதிராகவுமே பேசியிருக்கிறார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஏற்கனவே ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும் ஆகப்பிந்திய அனுபவங்களின் பின்னணியில்,ஒரு புதிய அரசாங்கம் கொழும்பில் ஆட்சி செய்யும் ஒரு பின்னணியில்,கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது. அக்கட்சியானது சிவில் சமூகத்தோடு இணைந்து ஒரு கடிதத்தைத் தயாரித்து அந்த வரைபை தமிழரசுக் கட்சிக்கும் அனுப்பியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடியது. முடிவில் கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று சுமந்திரன் அறிவித்திருக்கிறார். எனினும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் நிகழ்வு ஒன்றில் சுமந்திரன் கஜேந்திரகுமார் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில் சுமந்திரனுக்கும் கஜனுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தகவல்.கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் முடிவை சுமந்திரன் அறிவித்திருக்கும் ஒரு பின்னணியில் அந்தச் சந்திப்பு இனி நடக்குமா இல்லையா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பதில் தலைவர், பொதுச் செயலாளருக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று சிவஞானமும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களிடமிருந்து கழட்டி எடுத்து கடிதத்தில் அவர்களுடைய கையெழுத்தை வாங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதற்குள் மறைந்திருக்கிறது. இந்தக் கூட்டுக் கடித விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் உண்டு.கடிதத்தின் பிரதிகள் தனித்தனியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டமையை மேற்சொன்ன சந்தேகத்துக்கு ஊடாகத்தான் தமிழரசுக் கட்சி பார்க்கின்றது என்று தெரிகிறது. எனவே ஐநாவுக்கு அனுப்பப்படப் போகும் கூட்டுக் கடிதம் மெய்யான பொருளில் ஒரு பலமான கடிதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இனிமேல்தான் உருவாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அக்கடிதத்தில் தமிழ்த் தேசியப் பேரவைச் சேர்ந்த கட்சிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மட்டும்தான் கையெழுத்திடுவார்கள் போல் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று சொன்னால் அந்த கூட்டுக் கடிதத்துக்கு அங்கீகாரம் குறைவாகவே இருக்கும். இந்த விடயத்தில் கூட்டுக் கடிதத்தின் அங்கீகாரத்தைக் கூட்டுவதா? அல்லது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதா? என்ற இரண்டு தெரிவுகளில் எதனை தமிழ்த் தேசிய பேரவை எடுக்கப் போகிறது ? https://athavannews.com/2025/1441586
-
கருத்து படங்கள்
- நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !
நல்லூரானை தரிசித்தார் பிரதமர் ! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441570- செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(02) மேலும் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 126 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரையில் 117 மனித எலும்புக்கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 28 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் கடந்த 13 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 52 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1441565- ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!
ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு! ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில், டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 12 நாட்களாக குறைத்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதேவேளை, தமது நிபந்தனையை மீறினால் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் மற்றும் 100 சதவீத வரியும் விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமித்ரி மெட்வதேவ் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு தனது எக்ஸ் தளத்தில், பதில் கருத்தினை வெளியிட்டிருந்தார். ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல என்றும் ரஷ்யா மீதான மிரட்டல்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கே அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டார். அத்துடன் அமெரிக்காவின் பனிப்போர் காரணமாக, தன்னிச்சையாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷ்யாவை நோக்கி அணு ஆயுதம் தாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொனால் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1441578- குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.- நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு.
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாருடன், அவரது மகனும் தற்போதைய பதினோராவது நிர்வாக அதிகாரியுமான குமரேஷ் சயந்தன மாப்பாண முதலியார் படத்தில் காணப்படுகின்றார்கள். பட இணைப்பிற்கு நன்றி சுவியர்.- பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
முதல்வர் ஸ்ராலினை சந்தித்த பன்னீர்செல்வம். அந்தச் சந்திப்பில்... சின்னவர் உதயநிதியும், பன்னீர்செல்வத்தின் மகனும் கலந்து கொண்டார்கள்.- பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
ஆஸ்பத்திரி பிள்ளைப் பெறு பகுதியில் பார்த்தால்... துருக்கி, சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று முஸ்லீம் பெண்களால் நிரம்பி வழியும். அங்கு ஜேர்மன்காரிகளை காண்பது அரிது. இந்த முஸ்லீம் ஆண்களுக்கு... ஆணுறை என்று ஒன்று, கடையில் விற்பது தெரியாது போலுள்ளது. 😂- நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு. ❤️ 1917 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் முருகப்பெருமானுக்கான தீர்த்தக்கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் பலனால் 1922 – 1923 ஆம் ஆண்டுப் பகுதியில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்தக்கேணி சற்சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் அமைக்கப்பட்டது. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கேணித் தீர்த்தத் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்ளதுடன்,சண்முக தீர்த்தக்கேணி பிரதிஷ்டா கும்பாபிஷேகம் கார்த்திகை உற்சவ தினத்தன்று (15.08.2017 செவ்வாய்கிழமை) நடைபெற்றது. நல்லூர்க் கந்தசுவாமி பெருங்கோயிலுக்கான ஷண்முக தீர்த்தகேணியை உருவாக்கும் எண்ணம் 4 ஆவது இரகுநாத மாப்பாண முதலியாருக்கு 1917 ஆம் ஆண்டு ஏற்பட்டதுடன், தற்போது அச் சிந்தனையின் நூறாவது (100 ஆவது) வருடத்தில் புதிய திருக்கேணித் திருப்பணி நிறைவு பெற்று தீர்த்த பிரதிஷ்டை இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்துக்கே உரித்தானது. இவ்வருடத் திருவிழாவானது (2022ஆம் ஆண்டு) மாப்பாண முதலியார் குடும்பத்தினரின் 288ஆவது நிர்வாக வருடமாகும். தற்போது மாப்பாண முதலியார் குடும்பத்தின் பரம்பரையில் வந்த குமரேஷ் சயந்தன மாப்பாண முதலியார் கோயில் 11ஆவது அதிகாரியாக நல்லூர் கந்தனுக்கு தன் சேவைகளை செய்து வருகிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்பவர்களுடைய வழிகாட்டலின் கீழ் அடுத்த சந்ததியைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவது வழமையாகும். தந்தை, மகன் மற்றும் பேரன் என வழி வழியாக முருகனுக்கான சேவையை வழங்கும் பொருட்டு, அவர்கள் சிறுவயது முதலே பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சிறு வயது முதல் கிடைத்த தந்தையின் வழிகாட்டலில் வளர்ந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், வெளியாட்களுடனான தொடர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காது தெய்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனக்கும் முருகனுக்கும் இடையிலான உறவை பிரபலப்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர். முருகனுக்குக் கிடைக்கும் ஒரு சதமேனும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, முருகன் குடியிருக்கும் கோயில் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவரது காலத்தில் நல்லூர்க் கோயில் பிரமாண்ட வளர்ச்சி பெற்றதுடன், மாப்பாணர் கட்டடப்பாணி என்னும் பெயர் நல்லூருக்குக் கிடைக்கக் காரணமாக விளங்கியவர். அதுமாத்திரமல்லாமல் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரி எனக் குறிப்பிடும் வகையில் கிட்டத்தட்ட ஜம்பது வருடங்களுக்கு மேலாக முருகனுக்குத் தொண்டாற்றி வந்தவர். தற்போதைய கோயில் அதிகாரியான குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற குமாரதாஸ் மாப்பாண முதலியார், மிகவும் குறுகிய காலப்பகுதியில் அதாவது 6 – 7 மாதத்தில் பழைய வசந்த மண்டபத்தின் வாசலைப் பெரிதாக்கினார். ஒவ்வொரு வருடமும் கொடியேற்றத்திற்கு முன்னர் ஏதாவது ஒரு கோயில் திருப்பணி மேற்கொள்ளும் நடைமுறை அக்காலப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன்,அந்தப் பாரம்பரியம் இன்றும் நல்லூர்க் கோயிலில் தொடர்வது முருகனின் அருளே. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகள் வெள்ளைக்கல் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கு மாத்திரமே நிறைவு செய்யப்பட்டன. தந்தையார் ஆரம்பித்திருந்த வெள்ளைக்கல் கோபுரத்திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் பூர்த்தி செய்தார். அத்துடன் முருகனின் மனைவியரான வள்ளி தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியையும் நிறைவு செய்தார். தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை 1966 ஆம் ஆண்டு குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவு செய்தார். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கோயில் அமைப்பு ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்பட்டாலும், மூலஸ்தானத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தாமல், அதைச்சுற்றியுள்ள பழைய மண்டபங்கள் அனைத்தும் புதிதாக்கப்பட்டன. ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு திருப்பணியை ஆரம்பித்து, அதை அடுத்த திருவிழாவிற்கு முன்னர் நிறைவேற்றும் வழக்கம் உருவானது. இவ்வளர்ச்சிப் படிமுறைகளில் மகா மண்டபம், ருத்திர மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. சண்முகப் பெருமானுக்கு சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜரைப் போன்று, ஒரு சபை அமைக்கப்பட்டது. ருத்திர மண்டபத் திருப்பணியின் போது, சிறிய கோயிலில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமிக்கு, விமானத்துடன் கூடிய கோயில் அமைத்துத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. அதாவது வெளி மண்டபத்தை சொக்கட்டான் பந்தல் முறையில் அமைத்து கோயில் அழகுபடுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு திருப்பணிகளும் முருகன் அருளால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுற்றன. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு கோயிலுக்கான தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. ஈடுஇணையற்ற முறையில் அமைக்கப்பட்ட, அழகுப் பொக்கிஷமான தேரில் கந்தசுவாமியார் காலங்காலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுக்கப் போகிறார் என எண்ணிய காரணத்தால், குறித்த தேரை நீண்ட காலம் பாதுகாக்கும் பொருட்டு தேர்முட்டியை குமாரதாஸ் மாப்பாண முதலியார் அமைத்தார். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தேரும் மஞ்சமும் இலங்கையின் இருபெரும் கலைப்பொக்கிஷங்கள் ஆகும். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டபத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. குறித்த தேர் மண்டபத்தின் கட்டடக்கலை அமைப்பானது, நல்லூர்க் கோயில் அமைப்பிற்கும் சொக்கட்டான் பந்தல் அமைப்பிற்கும் பொருந்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது. நல்லூரில் மேற்கொள்ளப்படும் எந்தத் திருப்பணியையும் மூடிக்கட்டும் வழக்கம் கிடையாது. அனைத்து வேலைகளையும் கோயில் அதிகாரிகள் மேற்பார்வை செய்யும் அதேவேளை, அவற்றை பக்தர்களும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நல்லூரில் பின்பற்றப்படுகின்றது. கட்டடக்கலை வரைபடங்களுக்கு அப்பால் சென்று, கோயில் வளாகத்திலும் முருகன் முன்னிலையிலும் திருப்பணிகளுக்கான முக்கிய முடிவுகளை கோயில் அதிகாரிகள் எடுக்கும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கம் உலகில் உள்ள எந்தக் கோயிலிலும் இல்லாத வழக்கம் என்பதுடன், முக்கிய முடிவுகளை முருகனே எடுப்பார் என்பது ஜதீகமாகும். கோயில் திருப்பணிகளைக் கோயில் வளாகத்தில் வைத்து நிறைவேற்றுவதை எப்பொழுதும் கோயில் நிர்வாகத்தினர் ஊக்கப்படுத்துபவர்கள். திருப்பணியின் போது பணியாட்கள் பணத்தை மாத்திரம் இலக்கு வைக்காமல், பக்தியை முதன்மைப்படுத்தும் பொருட்டும், கோயில் வளர்ச்சியின் பொருட்டும் வேலைக் கட்டுப்பாடு மற்றும் உடைக்கட்டுப்பாடு என்பவற்றில் சில விதிமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்கள். ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் திருப்பணியின் பொருட்டு முருகனை பக்தியுடன் நினைந்துருகிக் கொடுக்கும் பணத்துக்கும் பொருட்களுக்கும், அடுத்த கணம் முருகப் பெருமான் அதிபதியாகிறான். தனக்குத் தேவைப்படுகின்ற திருப்பணிகளை வருடா வருடம் நிறைவேற்றும் சர்வ வல்லமை நிரம்பியவன் நல்லூர்க் கந்தன். அதனால்தான் அவன் ஆலயத்திற்கு பெருங்கோயில் என்னும் சிறப்புக் கிடைக்கின்றது. பக்தர்கள் பக்தியால் உருகி, முருகனுக்கு நேர்த்தி வைத்துக் கொடுக்கும் ஒரு பொட்டுத் தங்கமும் ஒன்று சேர்க்கப்பட்டு, முருகப் பெருமானுக்கான புதியதோர் நகையாக மாற்றம் பெற்று, அழகனை அலங்கரிக்கும் சிறப்பு நல்லூருக்கு மாத்திரம் உரித்தானது. வருடா வருடம் நடைபெறும் மகோற்சவ காலங்களில் புதிய அழகான நகையுடன் அலங்காரக் கந்தனாக தேருக்கு எழுந்தருளும் அவன் அழகைக் காணும் போது, கொடுத்தவனுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் கண்கள் பனித்து, உள்ளம் உருகும். வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், தையல்காரர், கொல்லாசாரியார் என அனைவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தயாராகத் தொடங்குவார்கள். நல்லூரில் உற்சவங்கள் அனைத்தும் கண்ணைக் கவரும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றாலும், திருவிழாக்களுக்கும் அபிடேகங்களுக்கும் குறைந்த அளவான கட்டணமே உபயகாரர்களிடம் இருந்து பெறப்படுகிறது. ஆயினும் அனைத்துத் திருவிழாக்களும் எவ்வித வேறுபாடுமின்றி நடைபெறுவது நல்லூரின் அழகு. கோடீஸ்வரர் செய்யும் திருவிழாக்களுக்கும் ஏழை செய்யும் திருவிழாக்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை. பாரம்பரியமும் பழைமையும் மாறாமல் உபயகாரர்களுக்கு திருவிழாக்கள் வழங்கப்பட்டாலும், அவற்றை முற்றுமுழுதாக கோயிலே பொறுப்பேற்று நடத்துவது நல்லூருக்கு மட்டும் உரித்தான சிறப்பு. நல்லூர் கோயில் நடைமுறைகளை மிகவும் உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு விடயம் மிகவும் தெளிவாகப் புரியும். நல்லூரில் கோடி கோடியாகப் பணம் குவிவது இல்லை. கோயிலில் திருப்பணி உண்டியல் மற்றும் வெளிமண்டப உண்டியல் என இரண்டு உண்டியல்கள் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளமையும் இங்குள்ள இன்னுமொரு சிறப்பாகும். ஆகவே ஒரு ரூபா அர்ச்சனையில் இத்தனை பிரமாண்டமான திருப்பணிகளும், வண்ணமயமான திருவிழாக்களும் நடைபெறுவதற்கு இன்றைய காலகட்டத்தில் சாத்தியமாகுமா? என்ற கேள்விக்கு முருகன் மட்டுமே பதில் அறிவான். நல்லூரானை மனதால் நெருங்குவதற்கு ஒரு செங்கல்லோ அல்லது ஒரு ரூபா அர்ச்சனையோ போதுமானது. கோயில் வளாகத்தில் அமைந்திருந்த வணிக நிலையங்ளையும் வியாபார நிறுவனங்களையும் 1980 களில் அகற்றி, நல்லூரைச் சுற்றி மிகவும் பிரமாண்ட மணற்பரப்பு வெளி உருவாக்கப்பட்டது. பின்னர் வந்த காலப்பகுதியில் கோயில் உள்வீதி சிறிது சிறிதாகப் பெருப்பிக்கப்பட்டது. அத்திருப்பணிகளின் போது உள்வீதியின் அமைப்பானது, கோயிலின் ஏனைய கட்டடங்களுக்கும் மண்டபங்களுக்கும் ஒத்துப்போகும் வகையில் உருவாக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் இருந்து நேரெதிரில் வெளிவீதியை நோக்கியதாக கோயிலுக்கான வாசல் ஒன்று அமைக்கப்பட்டது. யுத்த காலத்தில் ஏற்பட்ட சீமெந்துத் தட்டுப்பாட்டின்போதும் திருப்பணிகள் நடந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 1984 ஆம் ஆண்டு அரசு வீதியின் காணிக்குப் பதிலாக கேணித்திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாறியது. 2008 ஆம் ஆண்டு சுற்றுக் கோயில்களுக்கு தனித் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டதுடன், சபைகள் அமைக்கப்பட்டு, கோயில்கள் உலோகத் தகட்டால் வேய்ந்து திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 2008 ஆம் ஆண்டு சண்முகருக்கான இராஜகோபுரத் திருப்பணி நவதானியம் இடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2011 ஆம் ஆண்டு இந்திய பேரரசர்கள் கட்டிய பெருந்திருப்பணிக்கு ஒப்பான நல்லூர் இராஜகோபுரக் குடமுழுக்கு இடம்பெற்றது. முருகன் பார்வை நல்லவற்றில் முடிய வேண்டும் என்பதற்காக சண்முகருக்கு எதிரில் அமைந்திருந்த கோயில் பூந்தோட்டத்தில் அருணகிரிநாதர் ஸ்தாபிக்கப்பட்டார். தெற்கில் அமைக்கப்பட்ட கோபுரத்தை சமநிலைப்படுத்தும் பொருட்டு வடக்கில் ஒரு கோபுரம் கட்டப்பட்டு, திருப்பணி நிறைவேற்றப்பட்டது. உமாச்சந்திரா பிரகாஷ்., Babu Babugi- கருத்து படங்கள்
- செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த குழுவினர் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441507- இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்! தீர்வினை பெற்றுத்தர ஸ்ரீதரன் நடவடிக்கை!
இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்! தீர்வினை பெற்றுத்தர ஸ்ரீதரன் நடவடிக்கை! யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்றைய தினம் (01) சென்றிருந்தார். அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 140க்கும் அதிகமான படகுகள் மயிலிட்டி கடற்பரப்பினுள் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும் , தொழிலுக்கு மீனவர்கள் செல்வதற்கும் இடர்களை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்றையதினம் மைலிட்டி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்நிலையில், மயிலிட்டி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை, இந்திய மீனவர்களின் 140க்கும் மேற்பட்ட படகுகள் குறித்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இதன் போது அவர் கண்காணிப்பு விடயத்தில் ஆராய்ந்தார். குறிப்பாக உள்ளூர் மீனவர்கள் தங்களுடைய படகுகளை கரையில் கட்டி வைக்க முடியாத நிலை காணப்படுவதுடன் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக இதன்போது மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிக்காட்டினர். மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் என்பது இலங்கை துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகம். 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த துறைமுகத்தில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் தேசிய பொருளாதார மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கினை வகித்தது. ஆனால் தற்பொழுது இந்த துறைமுகம் இந்திய மீனவர்களின் படகுகளை கட்டி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு இடமாகவே காணப்படுகின்றது. இதற்கு ஒரு மாற்றுத் தீர்வினை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றவுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1441521- செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை மக்கள் அடையாளம் காண நடவடிக்கை! யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அதன்படி, எதிர்வரும் 05ஆம் திகதி மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. இதேவேளை, செம்மணி புதைகுழிகளில் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உள்ளிட்ட 54 பொருட்கள் அடங்குவதுடன் இவை தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இப்பொருட்களை அடையாளம் காணக்கூடியவர்கள், நீதிமன்றத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, சான்றுப் பொருட்களைப் பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் இன்று (02) அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1441532- இந்தியாவின் ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு குறித்து அமெரிக்கா கோபத்தில்!
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு குறித்து அமெரிக்கா கோபத்தில்! உக்ரேனில் மொஸ்கோவின் போர் முயற்சிகளைத் தக்கவைக்க இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது உதவுவதாகவும், வொஷிங்டனுடனான புது டெல்லியின் உறவில் இது பாதிப்பினை ஏற்படுத்து விடயமாக அமைந்துள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ வியாழக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தார். ஃபாக்ஸ் ரேடியோவுக்கு அளித்த செவ்வியில் அவர், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் முயற்சிக்கு நிதியளிக்க உதவும் வகையில் இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை தொடர்கிறது என்பதில் அமெரிக்க ஜனாதிபதி விரக்தியடைந்துள்ளார். இந்தியாவிற்கு மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன, அதில் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு மற்றும் ஒவ்வொரு நாட்டையும் போலவே அதன் பொருளாதாரத்தை ஆற்றுவதற்குத் தேவையான பொருட்களை வாங்கும் திறன் அடங்கும். மேலும் ரஷ்ய எண்ணெய் அனுமதிக்கப்பட்டதாகவும் மலிவாகவும் இருப்பதால் இந்தியா ரஷ்யாவிலிருந்து அதை வாங்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் இந்த நடவடிக்கை உக்ரேன் மீதான ரஷ்ய போர் முயற்சியைத் தக்கவைக்க உதவுகிறது. எனவே இது இந்தியாவுடனான எங்கள் உறவில் நிச்சயமாக எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு புள்ளியாகும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1441427- பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!
பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! பிரித்தானியாவின் பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அமைதி விருத்திசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த மாற்றங்கள் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டு குடிமக்களுக்கு சவாலாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மிகவும் கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுவதாகவும்,மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இச் சட்டங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441497- நான் ரசித்த விளம்பரம் .
சாப்பாட்டு விளம்பரத்துக்கு இப்படியா பெயர் வைப்பது. 😂- 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
முன்னாள் முக்கிய அரசியல்வாதிகளை நெருங்க இவர்கள் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. பிள்ளையான், இனியபாரதி என்று… தமிழர்களை வைத்தே எத்தனை நாள் படம் காட்டிக் கொண்டு இருக்கப் போகின்றார்கள். செம்மணி விடயத்துடன்…. டக்ளசையும் விசாரனை வளைத்துக்குள் கொண்டு வரவேண்டும். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை.- 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
ஓம், மிக முக்கியமானவர்கள் இந்த அரசியல்வாதிகள். அவர்களை பாதுகாப்பதும் அரசியல்வாதிகள் தான். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோனை பாதுகாக்க…. மகிந்த, கோத்தா, ரணில்… என்று மூன்று ஜனாதிபதிகள் குத்தி முறிந்தார்கள். கடைசியில் அனுரா அரசில் கைது செய்யப் பட்ட போது… அவரின் வீட்டில் 385 உயர்தர மது பண போத்தல்கள் இருந்தனவாம். இவை எல்லாம் ஏதோ ஒரு குற்றச் செயலை மறைக்க கொடுக்கப் பட்ட லஞ்சமாக இருக்கவே சாத்தியம் உள்ளது. இதனை விட… கோடிக்கணக்கில் பணமும் புழங்கி இருக்கும்.- பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
பன்னீர்செல்வம் நேற்று முதல்வர் ஸ்ராலினை போய் சந்தித்து இருக்கின்றார். தி. மு.க. வில் போய் சேரப்போகின்றார் போலுள்ளது.- ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையை சொன்ன கதைக்கு பாராட்டுக்கள். 🙂- சிரிக்கலாம் வாங்க
- பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
வடை போட்ட செய்தித்தாளில் "தமிழக அரசியலில் அநாதையான பன்னீர்செல்வம்" என்று உள்ளது. 😂 @தனிக்காட்டு ராஜா , @புரட்சிகர தமிழ்தேசியன்- 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
ஸ்ரீலங்கா காவல் துறையிலோ, இராணுவத்திலோ, கடற்படையிலோ... குற்றம் செய்யாத யோக்கியன் யாராவது இருக்கிறார்களா. உயர் அதிகாரியிலிருந்து சிப்பாய் வரை....அத்தனையும் பயங்கர கிரிமினல் கள்ளர்.- கருத்து படங்கள்
- நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.