Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. எல்லாப் பக்கம் இருந்தும்… ஒரே நச்சரிப்பு வரும் போது, நோபல் பரிசு ட்ரம்புக்கு கிடைக்கும் போல்தான் இருக்கு. போதாக் குறைக்கு… ட்ரம்பும், தனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று வாய் விட்டு கேட்ட பிறகு… நோபல் பரிசு கமிட்டிக்கு வேறை வழி இல்லை என நினைக்கின்றேன். 😂
  2. ஜந்து வயதை கடக்கவுமில்லை, ஆடையுமில்லை.. அப்படியொரு ஆனந்தம் புத்தரின் பிள்ளைகளுக்கு. Alex Aravinth
  3. போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் இவர்கள் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி ‘இந்த வழக்கில் முதல் எதிரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை’ எனவும் வாதாடினார். நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ‘நடிகர் கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தார். அதேசமயம் பொலிஸாரின் தரப்பில் ‘இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு கூறப்படும் என அறிவித்தார். இதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து உத்தரவிட்டது. அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் சொந்த பிணை மற்றும் அதே தொகைக்கு இருநபர்கள் பிணை அளிக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பாக இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். https://athavannews.com/2025/1438500
  4. வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கான விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார். வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 பெறுதியான மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம், வைத்தியர் அதிகாரப்பூர்வ வைத்தியசாலை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது. அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. பல நாட்களாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர் அறுவை சிகிச்சை செய்திருப்பதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைத்தியரும் அவரின் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு சகாக்களும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438441
  5. ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு. ”ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பாடசாலை வான் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், சாரதி மற்றும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருத்துத் தெரிவித்த கனிமொழி ” ‘கடலூரில் பாடசாலை வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இத்துயர்மிகு வேளையில், அக்குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளும் விரைந்து நலம்பெற விழைகிறேன். இந்த நாட்டில் மொத்தமுள்ள 68,584 கி.மீ தூரம் ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை” இவ்வாறு கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை தமிழக அரசு சார்பிலும் ரயில்வே சார்பிலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438465
  6. இந்த ஆண்டில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை! இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 1,204,046 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எடுத்துக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. SLTDA இன் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். அதன்படி, அந்த மொத்த எண்ணிக்கை 250,047 ஆகும். மேலும், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 112,732 ரஷ்ய நாட்டவர்களும், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 111,464 நபர்களும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1438467
  7. ஶ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை விஷேட வைத்தியர் மகேஷி விஜேரத்ன விளக்கமறியல் நீடிக்கப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லப்படும் இன்றைய காட்சி! இவர் தன்னை சார்ந்த தனியார் நிறுவனம் மூலம் ரூ. 50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு ரூ. 175,000 இற்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளார். நோயாளிகளுக்கு இதனால் ரூ. 300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இவர், பல நாட்களாக மூளைச் செயலிழப்பு என அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு மோசடி செய்தமையும் அண்மையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இவரது 21 வயது மகளும் கைது செய்யப்பட்டுள்ளமையும் மேலும் குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  8. இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவுள்ள நிலையில், குறித்த கணக்கெடுப்பானது முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், 2021ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடக்காமல் போனது. அதன்பின்னர் நீண்ட காலமாக இப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? ஏப்ரல் 2026 முதல் வீடுகளை கணக்கெடுக்கும் பணியும், பெப்ரவரி 2027 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பும், அதோடு சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பான இது முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 லட்சம் கணக்கெடுப்பு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் மத்திய அரசின் கணக்கெடுப்பு செயலியை பயன்படுத்தி நேரடியாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுக்க உள்ளனர். இவை மத்திய சர்வரில் (server) பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படும். ஆங்கிலம் மட்டுமல்லாது அனைத்து மாநில மொழிகளிலும் இந்த செயலி பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதில் பொதுமக்களே தங்கள் பெயர் விவரங்களையும் பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438391
  9. கனடாவுக்குப் போன அத்தானை தேடுது. 😂
  10. சம்பந்தனை... செத்த பிறகுதான் தமிழ்ச் சமூகம் மறந்தது... ஆனால், சுமந்திரன், சி.வி.கே. சிவஞானத்தை... உயிரோடு இருக்கும் போதே, தமிழ்ச் சமூகம் மறந்து விட்டது.
  11. தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக 729 புதிய வீடுகள்! தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07) திறந்து வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில், தமிழக மாநில செயலகத்திலிருந்து காணொளி மூலமாக இந்த திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. 38.76 கோடி இந்திய ரூபா செலவில் கட்டப்பட்ட இந்த வீடுகள் விழுப்புரம், திருப்பூர், சேலம், தர்மபுரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் அமைந்துள்ளன. இந்த வீடுகள், மாநிலம் முழுவதும் பரவியுள்ள இலங்கைத் தமிழ் முகாம்களில் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2021 ஆகஸ்ட் மாதம் மாநில சட்டமன்றத்தில் விதி 110 இன் கீழ் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் பரந்த மறுவாழ்வு முயற்சியின் ஒரு பகுதியாகும். அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தின்படி, 35 மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் 180.34 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் 3,510 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில், 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் 2,781 வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த முகாம்களில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதில் புதிய உள் வீதிகள், மேம்படுத்தப்பட்ட மின்சார இணைப்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் விநியோக வசதிகள் ஆகியவை அடங்கும். தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில் உள்ள 67 அரசு முகாம்களில் பல தசாப்தங்களாகத் தங்கள் தாயகத்தில் இன மோதலில் இருந்து தப்பி ஓடிய இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதற்கான திமுக அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த மறுவாழ்வுத் திட்டம் இருப்பதாக அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1438462
  12. சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்! சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் (Xi Jinping) தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) அண்மைக்காலமாக பொது வெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றார். சீனாவில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு. இதனால் அவர் விரைவில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய ஜனாதிபதியாக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவரே சீனாவின் ஜனாதிபதி ஆவார். மேலும் சீன ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். அந்தவகையில் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் 2012, 2018, 2023 என தொடர்ச்சியாக 3 தடவைகள் ஜனாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். அவரது பதவிக்காலம் 2028 ம் ஆண்டு வரை உள்ளது. எவ்வாறு இருப்பினும் கடந்த மே மாதம் இறுதி முதல் 2 வாரம் வரை ஸி ஜின்பிங் திடீரென்று மாயமானார். இதனால் தற்போது சீனாவில் ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவிக்கு முடிவுரை எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒருவேளை ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அந்த பதவிக்கு 2 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. அதில் முதல் இடத்தில் இருப்பவர் தான் மத்திய ராணுவ கமிஷன் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்ஸியா. இவர் ஜி ஜின்பிங்கின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஜி ஜின்பிங் முதல் முதலாக ஜனாதிபதியாக இவர் பெரும் பங்கு வகித்தார். இதனால் தான் ஜாங் யூக்ஸியாவிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார். மேலும் ஜி ஜின்பிங் நாட்டில் இல்லாதபோது ஜாங் யூக்ஸியா கட்டுப்பாட்டில் தான் சீனா செயல்படும். தற்போதும் அவர் கட்டுப்பாட்டில் தான் சீனா இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவர் தொழில்நுட்ப வல்லுநர் வாங் யாங். இவர் ஜி ஜின்பிங்கின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படுகிறது. வாங் யாங்கை ஜனாதிபதி பதவியில் வைத்து கொண்டு மறைமுக ஜனாதிபதி செயல்பட ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் அவர் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பித்தக்கது. இந்நிலையில் சீன அரசியல் விவகாரம் தற்போது உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது. https://athavannews.com/2025/1438407
  13. அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் ! அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இதேவேளை வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தையும் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கினார். ‘நோபல் பரிசுக் குழுவிற்கு தான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன் எனவும் அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது எனவும் கூறி அந்த கடிதத்தை அவரிடம் வழங்கியுள்ளார். https://athavannews.com/2025/1438413
  14. இந்தச் செய்தி இன்னும் @goshan_che கண்ணில் படவில்லை என்பது பெரிய நிம்மதி. 😂
  15. 50,000 ரூபாய் கட்டினால், வீட்டில் சிங்கம் போன்ற காட்டு விலங்குகளை வளர்க்க அனுமதி கிடைக்குமாம். என்ன நாடு, என்ன சட்டம். பைத்தியக்காரத்தனமான செயல்.
  16. யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்.com
  17. தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது குறித்து வௌியான சுற்றறிக்கை! தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்று அதன் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீட்டித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுகாதார அமைச்சு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன்படி, குறித்த வழக்கு முடியும் வரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மார்ச் 6 ஆம் திகதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 60 வயதை நிறைவு செய்த அனைத்து தாதியர் அதிகாரிகளும் ஓய்வு பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் செயலாளரால் கடந்த 4 ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438389
  18. IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்! 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பரந்த வருவாய் திரட்டல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, வரி சமத்துவத்தை அதிகரிக்கும் மற்றும் பொதுத்துறை நிதியுதவியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து வரிவிதிப்புக்கு ஆதரவளிக்க தேவையான தரவு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான விரிவான வரைபடத்தை IMF அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சியின் மையமானது சொத்து மதிப்பீடுகளின் விரிவான மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதாகும். இது சொத்து மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் வரி பொறுப்புகளைக் கணக்கிடுவதற்கும் முதுகெலும்பாக செயல்படும். 2027 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் அரசாங்கம் 56 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், 2028 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் 122 பில்லியன் ரூபாவாக இருக்கும். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார். அந்தக் கடிதம், அரசாங்கம் தொடர்ந்தும் திட்ட நோக்கங்களுக்கு உறுதியுடன் இருப்பதாகக் எடுத்துரைக்கிறது. https://athavannews.com/2025/1438377
  19. இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு! இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் வணிகங்களுக்கு இக் கொள்முதல்களின் கீழ் தேவையற்ற நன்மைகள் வழங்கப்படும் என்ற ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மீதமுள்ள அனைத்து கொள்முதல்களும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதுவரை செய்யப்பட்டுள்ளபடி அதிக வெளிப்படைத்தன்மை, சரியான தரநிலைகள் மற்றும் செலவு-செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438357
  20. 14 நாடுகளுக்கு ட்ரம்பின் புதிய இறக்குமதி வரிகள்! அமெரிக்க இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிப்பதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதப்படுத்தியுள்ளார். அதேநேரத்தில் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் வரிகளை விவரிக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார். இந்த வாரம் மிகவும் அதிகமான இறக்குமதி வரிகளில் சிலவற்றின் மீது வெள்ளை மாளிகை விதித்த 90 நாள் இடைநிறுத்தம் காலாவதியாகவிருந்த நிலையில், ட்ரம்பின் உலகளாவிய வர்த்தகம் குறித்த அண்மைய முன்னேற்றம் வந்துள்ளது. திங்களன்று, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து நாட்டிற்குள் நுழையும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்ற தனது அச்சுறுத்தலை ஜனாதிபதி புதுப்பித்தார். மேலும், ஆகஸ்ட் 1 முதல் வரிகள் குறித்து எச்சரிக்கும் உலகத் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களின் பட்யடிலையும் பகிர்ந்து கொண்டார். ட்ரம்ப் கோடிட்டுக் காட்டிய பெரும்பாலான கட்டண விகிதங்கள், ஏப்ரல் மாதத்தில் அவர் தனது “விடுதலை நாள்” அறிவிப்பை வெளியிட்டபோது கோடிட்டுக் காட்டியதைப் போலவே இருந்தன. வரிகளை அறிமுகப்படுத்துவது அமெரிக்க வணிகங்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்கும் என்றும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைகளை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆனால், இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவில் விலைகளை உயர்த்தும் மற்றும் வர்த்தகத்தைக் குறைக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ட்ரம்பின் வரி அறிவிப்புடன் அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்கு குறியீடுகள் திங்களன்று சரிந்தன. குறிப்பாக டொயோட்டாவின் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட பங்குகள் 4% சரிந்தன. அமெரிக்க வர்த்தக தரவுகளின்படி, ஜப்பான் கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு $148 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை அனுப்பியது. இது அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய இறக்குமதி விநியோகஸ்தராக மாறியது. தென் கொரியா மற்றும் ஜப்பானுடன், மியான்மர் மற்றும் லாவோஸிலிருந்து வரும் பொருட்களுக்கு 40%, தாய்லாந்து மற்றும் கம்போடியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 36%, செர்பியா மற்றும் பங்களாதேஷிலிருந்து வரும் பொருட்களுக்கு 35%, இந்தோனேசியாவிற்கு 32%, தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு 30% மற்றும் மலேசியா மற்றும் துனிசியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் திட்டங்களை ட்ரம்ப் திங்களன்று வகுத்தார். https://athavannews.com/2025/1438383

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.