Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நேற்றிரவு ஈரானை தாக்கிய B-2 விமானம் பற்றி உலகமே பேசுகின்றது, முழுமையாக தெரிந்துகொள்வோம்! அமெரிக்காவின் மிக நவீன மற்றும் மிக ரகசியமான போர் விமானங்களில் ஒன்றான B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நார்த்ரப் கிரம்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் 1989 ஜூலை 17-ல் முதல் முறையாக பறந்தது. குளிர் போர் காலத்தில் சோவியத் யூனியனின் ரேடார் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி செல்லும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், அதன் முக்கோண வடிவமும் சிறப்பு பூச்சுகளும் காரணமாக ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத தன்மையைக் கொண்டுள்ளது. B-2 ஸ்பிரிட் விமானத்தின் தொழில்நுட்ப விவரங்கள் அசாதாரணமானவை. இது 40,000 அடி உயரத்தில் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். விமானத்தின் நீளம் 21 மீட்டர், அகலம் 52 மீட்டர், உயரம் 5.18 மீட்டர் ஆகும். இதன் எடை 1,52,000 கிலோகிராம் வரை இருக்கும். மிக முக்கியமாக, இந்த விமானம் 18,000 கிலோகிராம் வரை குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டது. இது மறு எரிபொருள் நிரப்பாமல் 11,100 கிலோமீட்டர் தூரம் பறக்க முடியும். B-2 விமானத்தின் சிறப்பம்சம் அது சுமக்கும் அழிவுகரமான ஆயுதங்கள். ஈரானின் அணு தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் மிகப்பெரிய பங்கர் பஸ்டர் குண்டுகளை இதனால் சுமக்க முடியும். இந்த குண்டுகள் 30,000 பவுண்ட் (13,600 கிலோகிராம்) எடையுள்ளவை மற்றும் 200 அடி ஆழம் வரை நிலத்தின் அடியில் உள்ள பங்கர்களை அழிக்கும் திறன் கொண்டவை (ஒவ்வொரு குண்டும் 2 மில்லியன் டொலர்கள்). மேலும் B83 அணுகுண்டுகள், JDAM குண்டுகள், மற்றும் பல்வேறு வகையான துல்லியமான தாக்குதல் ஆயுதங்களையும் இதனால் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. B-2 விமானத்தின் இயக்க செலவு மிக அதிகம். ஒரு மணி நேர பறப்பிற்கு சுமார் $1,35,000 செலவாகிறது. இதில் எரிபொருள், பராமரிப்பு, மற்றும் பணியாளர் செலவுகள் அடங்கும். ஒரு தாக்குதலுக்கு சராசரியாக $2.2 மில்லியன் டொலர்கள் செலவாகும். B-2 விமானங்கள் பல முக்கிய போர்களில் இதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொசோவோ போரில் 1999-ல் முதல் முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் போரில் 2001-ல், ஈராக் போரில் 2003-ல், லிபியா தாக்குதலில் 2011-ல், மற்றும் சிரியாவில் ISIS-க்கு எதிரான தாக்குதல்களில் 2017-ல் சொற்ப அளவிலும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. B-2 விமானம் ஒன்று இரண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளையே சுமந்து செல்ல முடியும், ஆறு குண்டுகள் ஈரான் மீது வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதால், இந்த தாக்குதலுக்கு 3 B-2 விமானங்கள் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டுள்ளப்பட்டுள்ளதாக கருதலாம். மொத்தம் 21, B-2 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக தகவல். ஆரம்பத்தில் 132 விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அதிக செலவு காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்தின் விலை $2.1 பில்லியன் டொலர்கள் என்பது இதை உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானமாக ஆக்குகிறது. அமெரிக்காவின் பலமாக பார்க்கப்படும் இந்த போர் விமானம், மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது, ரஷ்யாவிடம் T-60 விமானம் உள்ளது, இருப்பினும் அமெரிக்காவின் B-2 விமானமானது பலம்பொருந்தியதாக கருதப்படுகிறது. மேலும் சீனா H-20 என்கிற பலம்பொருந்திய ஸ்டீல் பம்பர் விமானத்தை தயாரித்து வருகிறது, இதன் கட்டமைப்பு 2030 அளவிலே முடிவடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, உலகின் பலம்பொருந்திய போர் விமானமாக B-2 தற்போதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - ஸ ©️Vaanam.lk
  2. இந்தியா கட்டிய இந்த கலாச்சார மண்டபத்திற்கும், இசை நிகழ்ச்சிகளிற்கும் பொருத்தம் இல்லைப் போல் தெரிகின்றது. முன்பு இடுப்பழகி தமன்னா வந்த போதும்... அவரின் இடுப்பு ஆட்டம் பார்க்க பனைமரத்தில் மக்கள் ஏறியதால்... கூட்டம் பாதியில் குழம்பியது. இதனால்.... ரம்பாவையும் பார்க்க முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
  3. சன் தொலைக்காட்சியின் ஆரம்பகால திருவிளையாடல்களை… விரிவான கட்டுரை மூலம் தந்த இணைப்பிற்கு நன்றி.
  4. இன்று மாலை துருக்கியில் வைத்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்து பேசினார்! Vaanam.lk
  5. ஜேவிபி செம்மணிக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன். இம்மாத இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும் பொழுது செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அதை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள செயற்பாட்டு அமைப்புக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றன. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வரப் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் கடந்த மாதம் 22 ஆம் திகதி சுமார் 35 தமிழ் குடிமக்கள் அமைப்புகள் இணைந்து ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதின.அதன் விளைவாக ஐநா அலுவலர்களுக்கும் தமிழ் குடிமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்ட்து.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்குள் வரக்கூடாது என்று குடிமக்கள் அமைப்புக்கள் கேட்டிருக்கின்றன. ஏனென்றால், இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐநாவின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.உள்நாட்டு விசாரணையைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறி வருகிறது. ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் “சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான கட்டமைப்போடு” இந்த அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. அக்கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில், ஐநா தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளாத, ஐநா மனித உரிமை அலுவலர்களை நாட்டுக்குள் வர அனுமதிக்காத ஒரு நாட்டுக்கு, மனித உரிமைகள் ஆணையாளர் வருவது அந்த அரசாங்கத்துக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரமாகக் கருதப்படும் என்று அந்தக் குடிமக்கள் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.ஆனால் ஐநா மனித உரிமைகள் பேரவையோடு ஒத்துழைக்க மறுக்கும் ஓர் அரசாங்கத்தை அப்படியே வெளியில் விட முடியாது என்றும், அதை நெருங்கிச் சென்றுதான் அதன் தீர்மானங்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும், ஐநாவின் கண்காணிப்பு வளையத்துக்குள் அதை கொண்டு வரலாம் என்றும், ஒர் அபிப்பிராயம் ஐநா மட்டத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இது இனப்பிரச்சினை தொடர்பில் இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைப்பதற்கான ஒரு முயற்சியாக வெளியில் தோன்றினாலும்,இதற்குப்பின் பிராந்திய மற்றும் உலகளாவிய ராஜதந்திர உள்ளோட்டங்கள் உண்டு. இப்போது ஆட்சியில் இருப்பது சீன இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த ஜேவிபியை அடித்தளமாக கொண்ட ஒரு கட்சியாகும். இக்கட்டுரை எழுதப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜேவிபியின் முடிவெடுக்கும் தலைவராகிய ரில்வின் சில்வா சீனாவில் காணப்பட்டார். எனவே சீனாவின் செல்வாக்குக்குள் விழக்கூடிய ஓர் அரசாங்கத்தை இயன்ற அளவுக்கு மேற்கின் செல்வாக்கு வளையத்துக்குள் பேணுவதுதான் மேற்கு நாடுகளின் தீர்மானமாக காணப்படுகிறது. இந்த அரசாங்கத்தை சீனாவை நோக்கித் தள்ளுவதற்குப் பதிலாக தாங்கள் அரவணைக்க வேண்டும் என்று இந்தியாவும் மேற்கு நாடுகளும் சிந்திக்கின்றன என்பதனைத்தான், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த அரசாங்கத்தோடு மேற்கும் இந்தியாவும் எவ்வாறு இடையூடாடி வருகின்றன என்பதை தொகுத்து அறியக்கூடியதாக உள்ளது. எனவே இந்த ராஜதந்திர இலக்கின் அடிப்படையில்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்குள் வருகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் ஐநா குடிமக்கள் சமூகங்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை.எனினும், அவ்வாறு மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்குள் வருவாராக இருந்தால், அவர் இங்கு செம்மணிப் புதை குழியைப் பார்க்க வேண்டும் என்று குடிமக்கள் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஐநா ஏற்றுக் கொண்டுள்ளது.அந்த அடிப்படையில் அவர் இந்த மாத இறுதியில் இலங்கை வருகையில்,யாழ்ப்பாணத்துக்கும் வந்து செம்மணிப் புதை குழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அவருடைய வருகையையொட்டி தமிழ் குடிமக்கள் சமூகங்களும் செயற்பாட்டு அமைப்புகளும் கவனயீர்ப்பு போராட்டங்களை ஒழுங்குபடுத்திவருகின்றன. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வருவதன்மூலம் அதுபோன்ற மனிதப் புதைகுழிகள் மீதான அனைத்துலக கவனக்குவிப்பு செறிவாக்கப்படும். ஆனால் அது இப்போதிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான அழுத்தமாக எப்பொழுது மாறும் ? ஏன் இப்படிக் கேட்க வேண்டியுள்ளது என்று சொன்னால், இப்போதிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது,நான் எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்பக் கூறுவது போல, ஒரு மிதவாத கட்டமைப்பில் இருந்து வந்தது அல்ல. மேட்டுக்குடி கட்டமைப்பும் அல்ல.அது ஒரு இயக்கம். இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு,இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டு, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட ஒரு இயக்கம். தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழுந்த ஒரியக்கம். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீரையும் துயரத்தையும் இதற்கு முன்பு இருந்த எந்த ஓர் அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் நன்கு விளங்கிக் கொள்ள முடியும். ஏனென்றால் ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களில் போதும் கொல்லப்பட்டவர்களின் தொகை ஆயிரக்கணக்கில் வரும். குறிப்பாக இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 12,000 என்று உத்தியோகபூர்வ குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் உத்தியோகப் பற்றற்ற குறிப்புகளின்படி அத்தொகை ஒன்றரை லட்சத்தைத் தாண்டும் என்று ஒரு குத்துமதிப்பான கணிப்பு உண்டு. இவ்வாறு தனது தோழர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,அது தொடர்பாக ஜேவிபி இதுவரை எடுத்த நடவடிக்கைகள் எவை ? இந்த கேள்விக்கு விடை கூறமுன்பு, கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் வவுனியாவில் நடந்த ஒரு கருத்தரங்கை இங்கே நினைவுபடுத்த வேண்டும். கருத்தரங்கு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு நடந்ததாக ஒரு ஞாபகம்.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு கருத்தரங்கு. அதில் நான் ஒரு பேச்சாளராகக் கலந்து கொண்டேன்.தென்னிலங்கையில் இருந்து மற்றொரு வளவாளர், பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கலாநிதி ஜயலத் கலந்து கொண்டார். தனது உரையில் அவர் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக் காட்டினார்.”தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை என்பது மறக்கப்பட்ட ஒரு கதை” என்று. அவர் கூறினார்.தென்னிலங்கையில் அது மறக்கப்பட்ட கதை என்றால் அதை யார் மறந்தது? யார் அதற்காக போராட வேண்டுமோ அவர்கள்,அதாவது ஜேவிபி அதை மறந்து விட்டது என்று தானே பொருள்? ஜேவிபி ஏன் தன் தோழர்கள் தோழியர்கள் காணாமல் ஆக்கப்பட்டதை மறக்க விரும்புகிறது? அல்லது அதற்காக ஏன் நீதி கேட்டுப் போராடத் தயாரில்லை ? விடை மிக எளிமையானது. மிகக்குரூரமானது. ஜேவிபி தனது தோழர்களுக்கு நீதி கேட்டுப் போராடத் தயாரில்லை.ஏனென்றால் அவ்வாறு நீதி கேட்டுப் போராடினால் அவர்கள் யாரை இப்பொழுது யுத்த வெற்றி நாயகர்களாக கொண்டாடுகிறார்களோ,அவர்களில் பலரை விசாரிக்க வேண்டிவரும். அவர்களில் பலர் குற்றவாளிகளாக தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். அதாவது இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், இறுதிக்கட்டப் போரில் யாருடைய வெற்றிக்காக ஜேவிபி தன்னை வருத்தி உழைத்ததோ, யாருடைய வெற்றிக்காக ஆட்களை சேர்த்துக் கொடுத்ததோ,யாருடைய வெற்றிக்காக பிரச்சாரம் செய்ததோ,அந்தத் தரப்பை,அதாவது ஸ்ரீலங்கா படைத்தரப்பைத்தான் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும். விசாரிக்க வேண்டியிருக்கும். தண்டிக்க வேண்டியிருக்கும். இதை அவர்கள் செய்வார்களா? இப்பொழுது நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் அதாவது முப்படைத் தளபதி யார் என்று பார்த்தால், ஒரு ஜேவிபி உறுப்பினர்தான். காணாமல் ஆக்கப்பட்ட தன் தோழர்களுக்காக அவர் ஒரு முப்படைத் தளபதி என்ற அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடுவாரா? இல்லை. செய்ய மாட்டார். ஏனென்றால் அவர்களே இறுதிக்கட்டப் போரில் அந்த யுத்தத்தின் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள்.எனவே விசாரணை என்று தொடங்கினால் ஒரு கட்டத்தில் ஜேவிபியும் அந்த விசாரணைக்குள் வரும். இதுதான் பிரச்சனை. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை தென்னிலங்கையில் எங்கே மறைக்கப்பட்டது என்றால், அதற்காகப் போராட வேண்டிய ஜேவிபி போராட்டத் தயாரில்லை என்பதால்தான். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,தமிழ் மக்களுக்கு எதிரான ஜேவிபியின் இனவாத நிலைப்பாட்டின் காரணமாகத்தான் அவர்கள் இவ்வாறு முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. தமது தோழர்களுக்கான நீதியை விடவும் தமிழ் மக்களை வெற்றி கொள்வது முக்கியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களை வெற்றி கொண்ட படை வீரர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் கடைசியாக நடந்த ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பேசிய புதிய வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் ஐநாவின் பன்னாட்டு பொறிமுறையை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அனுர குமார அசோசியேட் நியூஸ் பிரஸ் இற்கு வழங்கிய ஒரு நேர்காணலில் என்ன சொன்னார் தெரியுமா?பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றுதான் கேட்கின்றார்களே தவிர,குற்றம் சாட்டப்படுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்று. யார் அவருக்கு அப்படி சொன்னது? அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளை தண்டிக்க விரும்பவில்லை என்று யார் அவர்களுக்குச் சொன்னது? தமிழ்ப் பகுதிகளில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் எந்த ஒரு தாயாவது அவ்வாறு கூறியிருக்கிறாரா? இல்லை.தமிழ்மக்கள் மத்தியில் உள்ள எந்த ஒரு கட்சியாவது அவ்வாறு கூறியிருக்கிறதா? இல்லை.ஆனால் ஜனாதிபதி அவ்வாறு கூறினார். அவர் அப்பொழுது ஜனாதிபதி அல்ல. வேட்பாளராக இருந்தார். மேலும் உண்மையை ஏன் கண்டறிய வேண்டும்? நிலை மாறு கால நீதியின் கீழ் உண்மையை கண்டறிவது என்பது குற்றவாளிகளை கண்டறிவது. குற்றம் நடந்த சூழலை, குற்றத்தின் பின்னணியை,குற்றத்துக்கான உளவியல் நோக்கத்தைக் கண்டறிவது.அந்த அடிப்படையில் குற்றவாளிகளை விசாரிப்பது.தண்டிப்பது.அதன்மூலம்,குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பது. குற்றம் புரிந்தாலும் தண்டனையிலிருந்து தப்பலாம் என்ற கொடூரமான பண்பாட்டை மாற்றி, குற்றம் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பது. எனவே உண்மைகளைக் கண்டடைவது என்பது பொறுப்புக் கூறுவதற்காகத்தான்.ஆனால் அனுர கூறினார்,பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்று. அதே நிலைப்பாட்டோடுதான் அவர் இப்பொழுதும் காணப்படுகிறாரா? இப்பொழுது விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது அல்லவா? இப்பொழுதுள்ள அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.ஏனென்றால் அதுவே தனது தோழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு நீதியைக் கேட்டுப் போராடவில்லை.தனது காணாமல் ஆக்கப்பட்ட தோழர்களை மறப்பதற்குத் தயாரான ஒரு இயக்கம்,தமிழ் மக்களின் விடயத்தில் நீதியைப் பெற்றுத்தரும் என்று எப்படி எதிர்பார்ப்பது? ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வருவதால் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று எப்படி எதிர்பார்ப்பது? https://athavannews.com/2025/1436592
  6. அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை; ஈரான் விளக்கம்! இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை எனவும் அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை எனவும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. https://athavannews.com/2025/1436584
  7. அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.-
  8. டிரம்புக்கு.... நோபல் பரிசு வேணுமாம். கொடுத்தாலும் கொடுப்பானுகள்...
  9. செய்யிறது முழுக்க ஊத்தைவாளி வேலை. அதுக்குள்ளை, டிரம்புக்கு.... நோபல் பரிசு வேணுமாம்.
  10. ட்ரம்ப் என்ற இந்த யோக்கியர்தான் நேற்று எல்லாம் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு குடுக்காதது பற்றி பேசிக்கிட்டு இருந்தார்.
  11. 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் முன்னெடுப்பு! வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்றும்(21) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது, ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர். இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர் காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்தபோராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1436516
  12. ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்! ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பின்னரும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதுமே எங்கள் நோக்கமாகும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால் எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார். https://athavannews.com/2025/1436549
  13. காணொளி. 👉 https://www.facebook.com/100005046279476/videos/1786181235600193 👈 பாகிஸ்தானிடம் உதவி கேட்கும் இஸ்ரேல் மக்கள். 😂 அவனைத் தொடுவான் ஏன்... அவதிப் படுவான் ஏன். 🤣
  14. யாழில் நடைபெற்ற பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு! பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு இன்றையதினம் (21) ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன், இந்திய தூதரக உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1436530
  15. இந்த விடுவிப்புகளுக்கு அனுமதி அளித்தவர்கள் யார் என்பதையும், விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரின் அடையாளங்களையும் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடைபெற்று வருவதாக CID உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  16. இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு! இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்கள் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாவை வைத்திருப்பது கட்டாயமாகும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டதால் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள் தூதரகத்திலிருந்து தொடர்புடைய ஆவணங்களைப் பெற்ற பிறகு எகிப்திய எல்லை வழியாக வௌியேறலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் முன்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இருப்பினும், நேற்று எகிப்திய எல்லையைக் கடந்து கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்ட நான்கு இலங்கையர்களில் ஒருவருக்கு இஸ்ரேலிய விசா இல்லாத காரணத்தினால், எகிப்திய அதிகாரிகளால் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர், இது தொடர்பில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவருக்குத் தகவல் தெரிவித்த பிறகு, எகிப்திய எல்லை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார். அவசரநிலையில் கூட, செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசா இல்லாத அல்லது காலாவதியான விசா ஊடாக வெளிநாட்டினர் எகிப்துக்குள் நுழைய முடியாது என்றும், இவ்வாறு பயணிக்க முயற்சிப்பது நீண்ட விசாரணைகளுக்கும், கைதுக்கும் கூட வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, இஸ்ரேலிய விசாக்கள் இல்லாத அல்லது விசாக்கள் காலாவதியான இலங்கையர்கள் எகிப்து வழியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட மாட்டார்கள், மேலும் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்கள் இல்லாதவர்கள் இலங்கைக்கு புறப்பட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையம் திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இலங்கை திரும்புவதற்காக மேலும் இரு இலங்கையர்கள் நேற்று (20) ஆவணங்களைப் பெறுவதற்காக தூதரகத்திற்கு வந்ததாக தூதுவர் தெரிவித்தார். இஸ்ரேலின் பல முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் நேற்று இரவும் இன்று அதிகாலையும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1436518
  17. //யாழ். பல்கலையில் போதைப் பாவனை இல்லை; போதை ஒழிப்பு RTI இல் வெளிவந்த உண்மை// இது உண்மையான செய்தியாக இருந்தால்... மகிழ்ச்சியான செய்தியே. ஆனால்... இதனை, அப்படியே என்னால் நம்ப முடியாமல் உள்ளது.
  18. சில மாதங்களுக்கு முன்பு யாழ். களத்தில் வந்த செய்தியில்... உப அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் மகன், நிறை போதையில் தந்தையின் அரச வாகனத்தை செலுத்தி, கந்தர்மடத்தில் பெரிய விபத்து ஒன்றை ஏற்படுத்தியதாக வாசித்த நினைவு உள்ளது. அந்த வாகனத்தில்... மகனின் நண்பரும் இருந்து பெரும் காயம் அடைந்ததாக செய்தி வந்திருந்தது. அதனைப் பற்றிய செய்தி இணைப்பை தேடினேன் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. யாராவது கண்டால்... இணைத்து விடவும். மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்... அரச செல்வாக்கு, மகன் செய்த குற்றங்களை மறைத்தது மட்டுமல்ல பாதுகாத்து பதவி உயர்வும் பெற்றுக் கொடுத்துள்ளது. தேசிய மக்கள் சக்தியும்.... மற்றைய சிங்கள கட்சிகளைப் போல்தான். மாற்றம் வரும் என்று நம்பியவர்களுக்கு.. "அல்வா" கொடுக்கின்றது.
  19. சிங்கள சம்பந்திகளுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு என்ன? என்பதை... பத்திரிகைகள் ஏன் வெளியிடவில்லை. இதில்... சுத்துமாத்துத்தனம் செய்வதற்காக அதை இரகசியமாக வைத்துள்ளார்களோ. விக்கியரின்... மாகாணசபைத்தலைவர் பதவிவிக்கு ஆப்பு வைத்த சுமந்திரன், இதிலும் விக்கியரின் காலை வருவார் என எதிர்பார்க்கலாம்.. சிலருக்கு... பட்டும், புத்தி வரமாட்டுது என்றால்.. ஒன்றும் செய்ய முடியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.