Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாழ் ஆஸ்பத்திரிக்கு நியமிக்கப் பட்ட 268 தாதியரில்.... 200 பேர் சிங்களவர், 60 பேர் மட்டுமே தமிழர். தமிழர் செறிந்து வாழும் மாவட்டத்தில் 80% சிங்கள தாதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், மீதம் 20% மட்டுமே தமிழ் தாதிகள்.
  2. விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது! கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான தென்னாப்பிரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 49 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்த விமானத்தில் சந்தேக நபர் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானப் பணிப்பெண் உடனடியாக விமானிக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் சந்தேக நபரான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த பயணி நீர்கொழும்பு தடயவியல் மருத்துவப் பரிசோதகரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1433743
  3. உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா பச்சைக் கொடி! உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் மீது அண்மையில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலேயே உக்ரேனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆம் திகதி உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். குறித்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீது கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். குறிப்பாக புடினின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றன எனவும், புடினுக்கும் தனக்கு நல்ல உறவு காணப்பட்டது எனவும், ஆனால் அவருக்கு தற்போது ஏதோ நடந்துள்ளது எனவும் அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் எனவும்” ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அத்துடன் புடின் தேவையில்லாமல் பலரைக் கொன்று வருகின்றார் எனவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனில் உள்ள பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் விமர்சனத்தைத் தொடர்ந்து புடினின் முக்கிய ஆலோசகர் மற்றும் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் வ்லாடிமிர் மெடின்ஸ்கி(Vladimir Medinsky), உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரஸ்டென் உமெரோவுடன் Rusten Umerov தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார் எனவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் திங்கட் கிழமை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433710
  4. துமிந்த திஸாநாயக்கவுக்கு ஜூன் 5 வரை விளக்கமறியல்! முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தையில், ஹேவ்லொக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடந்த மே 23 அன்று கைது செய்யப்பட்ட துமிந்த திஸாநாயக்க கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதிவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தார். ஹேவ்லொக் டவுனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1433736
  5. முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை! 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வர்த்தகர் நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தியிருந்தது. அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2025/1433718
  6. தெற்குக் கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான விபரம் வெளியானது! தெற்குகடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளில்778கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது. இதன்போது படகில் இருந்து 11 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் இதேவேளை கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களுடன் இரண்டு படகுகள் இன்று காலை திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தெற்குகடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளில்778கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது அவற்றில் 275 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 503 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புபிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1433635
  7. தென் மாகாணத்தில் விசேட மோட்டார் சைக்கிள் படை! சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடும் சந்தேக நபர்களை, குறிப்பாக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான நடவடிக்கைகளை இந்தப் பிரிவு நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர்மட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல சந்தேக நபர்கள் தலைமறைவாக இருந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 8 மோட்டார் சைக்கிள்கள், தங்காலை காவல் பிரிவு மற்றும் மாத்தறை காவல் பிரிவுகளில் இருந்து 15 நெடுஞ்சாலை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சுமார் 46 அதிகாரிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரிகளுக்கான அதிகாரப்பூர்வ விளக்கமளிப்பு விழா மே 26, அன்று மாத்தறை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. https://athavannews.com/2025/1433660
  8. யாழில். பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் உயிரிழப்பு யாழில், பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் என்ற 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் மிதி பலகையில் நின்றவாறு பயணித்துள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக கரந்தாய் பகுதியில் வைத்து அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2025/1433702
  9. தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி! ”தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூரை மீன் பிடி துறைமுக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 1,383 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை மீட்குமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை தான் எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1433623
  10. நடிகர் ராஜேஷ் காலமானார்! 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பன்முக நடிப்புத்திறனுக்காக அறியப்பட்ட மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் சென்னையில் இன்று (29) காலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75. குறைந்த இரத்த அழுத்தம் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் கே. பாலசந்தரின் பாராட்டப்பட்ட படமான அவள் ஒரு தொடர் கதை மூலம் ராஜேஷ் திரைப்படத் துறையில் அறிமுகமானார். பின்னர் கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் முதல் கதாநாயகனாக நடித்தார். பல ஆண்டுகளாக, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பல்துறைத்திறமைக்குப் பெயர் பெற்ற ராஜேஷ், வெள்ளித்திரை நடிகராக மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரது மறக்கமுடியாத நடிப்பில் அந்த ஏழு நாட்கள், பயணங்கள் முடிவதில்லை, சத்யா, விருமாண்டி மற்றும் மகாநதி ஆகிய படங்களில் நடித்தார். திரையில் அவர் கடைசியாகத் தோன்றிய படம் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப் நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ். சினிமாவுக்கு ராஜேஷ் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், சமூக ஊடகங்களில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்பதற்காகவும் அவர் அறியப்பட்டார். திரைப்படத் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் ராஜேஷுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரை ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர், ஒரு உன்னதமான நபர் மற்றும் ஒரு ஊக்கமளிக்கும் ஆளுமை என்று நினைவு கூர்ந்து வருகின்றனர். https://athavannews.com/2025/1433711
  11. ட்ரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறும் எலோன் மஸ்க்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தொழில்நுட்ப கோடீஸ்வரர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். அங்கு அவர் மத்திய அரசாங்கத்தில் செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு மாத கால திட்டத்தை வழிநடத்தினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைகிறது. வீணான செலவினங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பிற்காக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் – என்றார். அமெரிக்க மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 1 டிரில்லியன் டொலர்களை குறைப்பதாக வாக்குறுதி அளித்து மஸ்க் ஜனவரி மாதம் ட்ரம்ப் நிர்வாகத்தில் இணைந்தார். எனினும், அரசாங்கத் திறன் துறை (DOGE) வலைத்தளம் எலோன் மஸ்க்கின் இலக்கில் சுமார் $175 பில்லியன் சேமிப்பை மட்டுமே அடைந்துள்ளதாகக் காட்டுகிறது. DOGE விளைவாக, 2.3 மில்லியன் பலம் வாய்ந்த கூட்டாட்சி சிவில் பணியாளர்களில் 260,000 பேர் வேலைகள் குறைக்கப்பட்டன அல்லது பணிநீக்க ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். பல வழக்குகளில், கூட்டாட்சி நீதிபதிகள் பெருமளவிலான பணிநீக்கங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளனர். எவ்வாறெனினும், எலோன் மஸ்க் பதவி விலகுவதற்கான துல்லியமான சூழ்நிலைகள் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ட்ரம்பின் மார்க்யூ வரி சட்டமூலத்தை விமர்சித்த ஒரு நாளுக்குப் பின்னர் அவர் வெளியேறுகிறார். https://athavannews.com/2025/1433669
  12. ட்ரம்பின் கடும் வரி விதிப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளுக்கு அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகளின் முக்கிய பகுதிக்கு பெரும் அடியாகும். வெள்ளை மாளிகையால் செயல்படுத்தப்பட்ட அவசரச் சட்டம், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிற்கும் வரிகளை விதிக்க ஜனாதிபதிக்கு ஒருதலைப்பட்ச அதிகாரத்தை வழங்கவில்லை என்று சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. மன்ஹாட்டனை தளமாகக் கொண்ட நீதிமன்றம், அமெரிக்க அரசியலமைப்பு மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு காங்கிரசுக்கு பிரத்யேக அதிகாரங்களை வழங்குகிறது என்றும், பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தால் இது மீறப்படவில்லை என்றும் கூறியது. அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத குடியேறிகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நுழைந்ததாகக் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்ப் நிர்வாகம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதித்த தனித்தனி வரிகளையும் நீதிமன்றம் தடுத்தது. தீர்ப்பில், மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA), வரிகளை நியாயப்படுத்த ட்ரம்ப் மேற்கோள் காட்டிய 1977 சட்டம், அவற்றை முழுமையாக விதிக்க அவருக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று கூறியது. இந்த வழக்கு, ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிரான ஏழு சட்ட சவால்களில் ஒன்றாகும். மேலும் 13 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் சிறு வணிகங்களின் பிற குழுக்களிடமிருந்தும் சவால்களுக்கு உள்ளாகியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அமெரிக்க பங்கு எதிர்காலங்களும் உயர்ந்தன. வியாழக்கிழமை (28) காலை ஆசியாவில் பங்குச் சந்தைகள் உயர்ந்தன, ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு சுமார் 1.5% உயர்ந்தது மற்றும் அவுஸ்திரேலியாவில் ASX 200 சற்று உயர்ந்தது. ஜப்பானிய யென் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட பாதுகாப்பான புகலிட சகாக்களுக்கு எதிராகவும் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டியது. எவ்வாறெனினும், தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ட்ரம்ப் நிர்வாகம் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்தது. கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி ட்ரம்ப் கடுமையான வரிகளை அறிவித்ததிலிருந்து, வெள்ளை மாளிகை வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் சில நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்டன அல்லது குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433664
  13. விரைவில் அதனை… திராவிடமும், ஆரியமும் செய்யும். 😎
  14. “ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு! இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், கடந்த மார்ச் 18ம் தேதி காசா மீது தாக்குதல்களை தொடங்கியது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காசாவில் பதுங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். கடந்த மே 13ம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்ததை தற்போது உறுதிபடுத்தியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவில் நடத்திய தாக்குதலில், முன்னாள் ஹமாஸ் தலைவரும், முகமது சின்வாரின் சகோதரருமான யஹா சின்வார் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://news7tamil.live/hamas-leader-mohammed-sinwar-has-been-killed-israeli-prime-minister-netanyahu-announces.html
  15. 2021 உடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக உயர்வு! 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு இந்த நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவில் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பணவீக்கத்தால் மக்கள் தற்போது பயனடைந்து வந்தாலும், 2021 உடன் ஒப்பிடும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1433574
  16. ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்! 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ரந்திக லக்மல் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார். பன்னால பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மே 25 ஆம் திகதி மதுஷங்க போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். தற்போது 30 வயதாகும் மதுஷங்கா, முன்னதாக 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் பங்கெடுக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான தனது ஒருநாள் அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர். https://athavannews.com/2025/1433587
  17. அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; ஜூன் 2 ஆம் தண்டனை விவரம்! தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று சென்னை மகிளா (மகளிர்) நீதிமன்றம் இன்று (29) அறிவித்தது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சென்னை நீதிமன்றம் தனது உத்தரவில் இன்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது ஆண் நண்பரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் சம்பவத்தை வீடியோ எடுத்து இருவரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் சென்னை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டார். ஞானசேகரன் கைது செய்யப்பட்ட உடனேயே, அவர் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிர்வாகிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. இது ஒரு அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் திமுக இவருடனான எந்தத் தொடர்பையும் மறுத்தாலும், எதிர்க்கட்சிகள் அவர் கட்சியில் ஒரு பதவியில் இருப்பதாகக் கூறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஆதாரங்களையும் வெளியிட்டன. ஞானசேகரன் திமுக மாணவர் பிரிவு நிர்வாகி என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றம் சாட்டினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் திமுக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இந்தக் கூற்றுக்களை மறுத்து, ஞானசேகரன் கட்சி நிர்வாகி அல்ல என்று கூறினார். முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினும் சட்டமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் திமுக உறுப்பினர் இல்லை என்றாலும், அவர் உண்மையில் ஒரு ஆதரவாளர் என்று தெளிவுபடுத்தினார். ஞானசேகரன் முன்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார். அதேநேரம், தமிழ்நாடு காவல்துறை எதிர் மனு தாக்கல் செய்தது, இரு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன. சென்னை மேல் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. பின்னர் SIT மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தனது தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததைக் காரணம் காட்டி, தண்டனையில் கருணை காட்ட வேண்டும் என்று அவர் இப்போது கோரியுள்ளார். ஜூன் 2 ஆம் திகதி நீதிமன்றம் தண்டனை தொடர்பான விவரங்களை அறிவிக்கும். https://athavannews.com/2025/1433539
  18. ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய ஏவுகணையைச் சோதிக்கும் இந்தியா! இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாகும். அந்தவகையில் உலகின் வேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக இது அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மூத்த DRDO விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் சுதிர் குமார் மிஸ்ரா சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஹைப்பர்சோனிக் எஞ்சின் சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்றும், முழுமையான அமைப்பு தொடர்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433508
  19. அதிக தடவைகள் எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை படைத்த காமி ரீட்டா ஷெர்பா! நேபாளத்தை சேர்ந்த காமி ரீட்டா (Kami Rita) என்ற 55 வயதான நபர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக தடவைகள் ஏறியவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். மலையேற்ற வீரர்களின் வழிகாட்டியான அவர் நேற்றைய தினம் குறித்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் 31தடவைகள் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். காமி ரீட்டா உட்பட 27 நேபாள ஷெர்பாக்கள் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக சிகரத்தை அடைந்தனர். இப் பயணம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி தொடங்கி 45 நாட்களில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433568
  20. எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட் இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து! ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதத்தின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஊடாக விண்வெளி சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து நேற்றைய தினம் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ரொக்கெட்டானது விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் கசிவே இத்தோல்விக்கு முக்கிய காரணமாகும் என ஸ்பேஸ்எக்ஸ் செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார். இதேபோன்று, கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஏழாவது முயற்சி மற்றும் மார்ச் 6 ஆம் திகதி நடைபெற்ற எட்டாவது முயற்சிகளும் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான இத்தகைய தோல்விகள், ஸ்பேஸ்எக்ஸின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் விண்வெளி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433527

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.