Everything posted by தமிழ் சிறி
-
ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!
விஞ்ஞானி புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்களே... உங்களால் தமிழ் இனம் பெருமை கொள்கின்றது. வாழ்த்துக்கள்.
-
உலகின் முதல் சால்மன் மீன் வளர்ப்புக் கப்பலை அறிமுகப்படுத்தும் சீனா!
உலகின் முதல் சால்மன் மீன் வளர்ப்புக் கப்பலை அறிமுகப்படுத்தும் சீனா! உலகிலேயே முதன்முறையாக, கடலில் சால்மன் மீன்களை வளர்க்கக்கூடிய மாபெரும் வளர்ப்பு கப்பலை( Salmon-farming ship) உருவாக்கி, சீனா புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. பாரம்பரிய நில அடிப்படையிலான மீன்பண்ணை முறைகளை விட்டு விலகி, கடலின் நடுப்பகுதியில் மீன் வளர்ப்பை முன்னெடுக்கும் சீனாவின் இந்த புதிய முயற்சி, உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இக் கப்பல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு, சுத்தமான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய சூழலில் சால்மன் மீன்களை வளர்க்கும் திறன் பெற்றதாகும். அத்துடன் இயற்கை மாசுபாடுகள் மற்றும் நோய்கள் போன்றவையை கட்டுப்படுத்தி, உயர்தர மீன் உற்பத்தியை உறுதி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுச்சூழல் நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் முன்னிலைப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமையப்பட்டுள்ளது. நிலப்பரப்பை உபயோகப்படுத்தாமலேயே கடல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் இந்த முயற்சி, மீன்பிடித் துறையில் ஒரு புதிய தொழில்நுட்ப யுக்தி என்றே பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியின் கடலின் நடுப்பகுதியில் அதிக அளவில் சால்மன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட முடியும் எனவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உணவுப் பாதுகாப்பையும் இது மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இக் கப்பல் சோதனை (sea trial) கட்டத்தில் உள்ளது எனவும், விரைவில் இது முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன்வளத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை முன்வைக்கும் சீனாவின் இப் புதிய முயற்சி உலகளாவிய மீன்பிடி மற்றும் அக்வாடெக் (Aqua-tech) துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433198
-
அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு
மோட்டு சிங்களவன், உண்மையிலேயே... "பிகினி" ஆடைக்கு தடை விதித்துப் போட்டானோ என்று பயந்து விட்டேன். 😂
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் பிறந்த 5 குழந்தைகள்..!
ஐந்து பிள்ளைகளை பெற்ற அம்மாவிற்கு வாழ்த்துக்கள். எல்லா குழந்தைகளையும் பிரச்சினை இல்லாமல், பிரசவம் பார்த்த.... வைத்தியர்களுக்கும், தாதியர்களுக்கும் நன்றிகள்.
-
உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்
யாழ். கள உறுப்பினர்கள் சிலருக்கு தெரிந்தது... இப்ப அமெரிக்க அதிபர் ரம்புக்கு தெரிந்திருக்கு. ஆனால்... இழவு விழுந்த ஐரோப்பிய யூனியனுக்கு தெரியவில்லையே. உக்ரேனிய மக்கள், ஒரு கோமாளியின் வாயால்... படுகிற பாடு எக்கச் சக்கம். உக்ரைன் மக்களை... கடவுள்தான் காப்பாற்ற வேணும்.
-
கருத்து படங்கள்
- பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!
- ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை!
- தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
- தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை!
தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை! உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்த திகதிக்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433137- உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப்
உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்: புடின் மற்றும் செலன்ஸ்கியை விமர்சித்த ட்ரம்ப். உக்ரேன் மீது ரஷ்யப் படையினர் நடத்திய வான் தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் புடின் ‘முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உக்ரேன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்றைய தினம் தெரிவித்தனா். கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரேன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னாத் தெரிவித்தாா். இந்நிலையில் இது குறித்து ஊடகஙரம்ப்” புடினின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றன எனவும், புடினுக்கும் தனக்கு நல்ல உறவு காணப்பட்டது எனவும், ஆனால் அவருக்கு தற்போது ஏதோ நடந்துள்ளது எனவும் அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் எனவும்” விமர்சித்துள்ளார். அத்துடன் புடின் தேவையில்லாமல் பலரைக் கொன்று வருகின்றார் எனவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனில் உள்ள பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். அதேசமயம்”உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியையும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப கருத்துத் தெரிவிக்கையில் ”செலென்ஸ்கியின் பேச்சு அவருடைய நாட்டுக்கு நன்மை செய்யவில்லை எனவும், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது எனவும், இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் இவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1433169- சிரிக்கலாம் வாங்க
- ரப் பாடகர் வேடன்
யாழ்ப்பாண மண்ணை பூர்வீக தாய்நிலமாக கொண்ட கிரண் தாஸ் முரளி எனும் வேடன், கேரளத்தில் அவன் பள்ளியில் படிக்கும் போது அவனது கரு நிறத்தை வைத்து அவனுக்கு வேடன் என்று பட்டப்பெயர் சூட்டினர். ஆதிக்ககாரர்களின் இழி சொல்லுக்கு ஆளானான் வேடன் ♥️ எது அவனை ஒதுக்கியதோ அதனை அடக்க அவன் கையில் எடுத்ததோ கலை. சிறு வயதிலிருந்தே எழுதுவதும் பாடுவதும் அவனுக்கு நன்கு வசப்பட்டது. இப்போது வேடனின் பாடல்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றுள்ளன. வேடனை இப்போது உலகமே கொண்டாடுகிறது. தற்போது கேரளாவின் பேரன்பில் பெரும் புயலாகி விட்டான் வேடன். ஓரிரவில் சமூக ஊடகங்களின் (Trending) பேசு பொருளாகி விட்டான். ஒடுக்கப்பட்டவன் மேல் எழுந்தால் அவனை அடக்க முடியாது என்பதற்கு வேடனே நல்ல உதாரணம் ❤️ 100% பொழுது போக்கு ·- ”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
அடுத்த நிமிடம்... கைவிலங்கு போட்டு ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைக்கப் படுவார். 🤣- கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
- காணி நிலம் வேண்டும்! நிலாந்தன்.
காணி நிலம் வேண்டும்! நிலாந்தன். காணி நிலம் வேண்டும்! நிலாந்தன். காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் நாலாம் பிரிவின் கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது இலங்கைத் தீவின் இன முரண்பாடுகள் தொடர்பில் ஆகப் பிந்திய தலைப்புச் செய்தியாக மாறியிருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5.940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத் துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத் தப்படும் என மேற்படி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலுமான நீண்ட பிரதேசத்துக்குள் காணப்படும் காணிகளைக் குறித்த மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளில் கிட்டத்தட்ட அரைவாசிக்கும் குறையாதவை அடர் காடுகள், திறந்த வெளிச் சதுப்பு நிலங்கள், குளங்கள், ஆறுகள்,நீர்த் துளைகள்,வண்டில் பாதைகள்…என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆறுகள், குளங்கள், அடர் காடுகள்,சிறுகாடுகள் சதுப்பு நிலங்கள், வண்டில்பாதைகள் போன்றவற்றுக்கு யார் யார் உரிமை கோருவார்கள்? மூன்று தசாப்தங்களுக்கு மேலான யுத்தம் ஈழத் தமிழர்களை ஆவணம் காவிகளாக மாற்றியது.ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும்,ஏன் புலப்பெயர்ச்சியின் போதும் கூட, ஈழத் தமிழர்கள் ஆவணங்களைக் காவுகின்றார்கள்.இறுதிக் கட்டப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்தவர்களுக்கு ஐநா முதலில் வழங்கிய பொருட்களில் ஒன்று ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான பிளாஸ்டிக் ஃபைல் பைகள் ஆகும். எனினும் இடப்பெயர்வின் அகோரம் காரணமாக ஈழத் தமிழர்கள் எல்லா ஆவணங்களையும் காவ முடிந்ததில்லை. இறுதிக் கட்டப் போரில் வன்னியில் வாழ்ந்தவர்கள் பலரிடம் அவர்களுடைய வீட்டில் நடந்த நல்லவைகள் கெட்டவைகள் தொடர்பான ஒளிப்பட ஆல்பங்கள் அனேகமாக இல்லை. ஒரு பகுதியினரிடம் தமது தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இல்லை. தொடர்ச்சியான இடப்பெயர்களின் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவதா அல்லது ஆவணப் பையைக் காவுதா என்று கேள்வி வரும் பொழுது, ஆவணங்கள் கைவிடப்படுகின்றன. இவ்வாறு கைவிடப்பட்ட ஆவணங்களில் காணி உறுதிகளும் உட்பட காணி தொடர்பான ஆவணங்கள் பல அடங்கும். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெயர்வுக்கு உள்ளான ஒரு மக்களிடம் காணி தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமது உரித்தை நிரூபிக்குமாறு மேற்சொன்ன வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டது போல கோவகணத்தோடு வந்த மக்களிடம் காணி உறுதி உண்டா என்று கேட்கும் வர்த்தமானி அது. ஒருபுறம் இடப்பெயர்ச்சி, புலப்பெயர்ச்சி காரணமாக தமிழ்க் கிராமங்களும் வாழிடங்களும் இடம் மாறியுள்ளன. ஒரு பகுதி தமிழர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். இது மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி வரும். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் பலருடைய காணிகளை அவர்கள் பராமரிப்பது இல்லை. நாட்டில் உள்ள உறவினர்கள் சிலர் பராமரிக்கிறார்கள். ஆனால் அதுவும் இப்பொழுது பல இடங்களில் சிக்கலாகி நீதிமன்றம் வரை வந்துவிட்டது. காணிகளைப் பராமரிக்கும் இரத்த உரித்துச் சொந்தங்களே அந்த காணிகளை அபகரிக்க முற்பட்டு அதனால் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொந்தச் சகோதரர்களின் காணிகளை அபகரிக்க முற்படும் வழக்குகளும் இதில் அடங்கும். புலம்பெயர்ந்த நாட்டில் செற்றில் ஆகிவிட்ட தமது உறவினர்கள் திரும்ப வரப்போவதில்லை, திரும்பி வந்து காணிகளையும் வீடுகளையும் ஆண்டு அனுபவிக்கப் போவதில்லை என்பதனால் அவற்றை நாங்கள் திருடினால் என்ன அபகரித்தால் என்ன என்று இங்குள்ள ஒரு பகுதி சொந்தங்கள் சிந்திக்கின்றன. இது தமிழ்ச் சமூகத்தின் சீரழிந்த பகுதிகளில் ஒன்று. இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மேற்சொன்ன அரச வர்த்தமானியானது 5940 காணிகளை மூன்று மாத கால அவகாசத்துக்குள் உரிய ஆவணங்களோடு வந்து உரிமை கோருமாறு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பலாலியில் ஒரு காணி விடுவிப்பு நிகழ்வின் போது ஒரு படைத்தளபதி பேசிய விடயத்தை ஒரு சமயப் பெரியார் எனக்குச் சுட்டிக் காட்டினார். அந்தத் தளபதி கூறினாராம், தமிழர்கள் காணிகளை விடுவிக்குமாறு போராடுகிறார்கள். ஆனால் விடுவித்த காணிகளில் வந்து குடியமர்வது குறைவு என்று. ஆனால் பலாலி என்ற கிராமமே இப்பொழுது வரைபடத்தில் மட்டும் தான் உண்டு,அது நடைமுறையில் இல்லை என்று பலாலியில் பிறந்தவர்களும் பலாலியில் வாழ்ந்தவர்களும் கூறுகிறார்கள். ஏனென்றால் அது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஒரு படைத்தளத்தின் பகுதியாக மாற்றப்பட்டு விட்டது. வடக்கு கிழக்கில் உள்ள கணிசமான படைத்தளங்கள் தனியார் காணிகளையும் சுவீகரித்துக் கட்டி எழுப்பப்பட்டவைதான். ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் முக்கிய ஐந்து அம்சங்களில் ஒன்று தாயகம்.பாரம்பரிய தாயகம். அதாவது நிலம். அந்த நிலத்தின் மீதான ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் ஒரு மக்கள் கூட்டம் தேசமாகவே இருக்க முடியாது.நிலம் இல்லையென்றால் கடல் இல்லை. நிலமும் கடலும் இல்லையென்றால் சனமும் இல்லை. எனவே நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவது;பேணுவது என்பது அரசியல் அதிகாரத்தின் பிரதான பகுதி. இலங்கை அரசாங்கம் காணிகளை, அளந்தாலோ அல்லது காணிகள் தொடர்பான விவரங்களை ஒரு மையத்தில் சேகரிக்க முற்பட்டாலோ தமிழ் மக்கள் அதைக் கண்டு அச்சப்படுகிறார்கள். ஏனென்றால் உரித்தாளர் இல்லாத காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கலாம் என்ற பயம். தமது மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி புலம்பெயர்ந்திருக்கும் ஒரு பின்னணியில்,ஈழத் தமிழர்களிடம் அப்படிப்பட்ட அச்சம் எழுவது இயல்பானதே. ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ் மாகாணங்களுக்குள்ள வரையறுக்கப்பட்ட காணி அதிகாரத்தின் கீழ்,நிலப் பறிப்புக்கு எதிராகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் நியாயமான பயம் அது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக அமெரிக்காவின் மில்லீனியம் உதவித் திட்டம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்த உதவி திட்டத்தின்படி பெருமளவு நிதியை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கப் தயாராக இருந்தது. அது கடன் அல்ல, தானம். ஆனால் அதற்காக அமெரிக்கா நாட்டின் கேந்திரமான பகுதிகள் சிலவற்றின் நிலம் தொடர்பான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஆவணங்களைத் தருமாறு கேட்டது. அவ்வாறு ஒர் உதவித் திட்டத்துக்காக உதவியைப் பெறும் நாட்டின் நிலம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களைக் கேட்பது சரியா? என்று ஒர் ஊடகவியலாளர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரைக் கேட்டபொழுது, அவர் சொன்னாராம், ஏன், அதில் என்ன தவறு? என்று. பின்னர் அந்தத் திட்டத்தை கோத்தாபய அரசாங்கம் நிராகரித்துவிட்டது. பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணம் என்று ரணிலின் ஆதரவாளர்கள் முன்பு கூறி வந்தார்கள். அதாவது ஓர் உலகப் பேரரசு, சிறிய நாடு ஒன்றுக்கு உதவி செய்யும் பொழுது அந்த நாட்டின் நிலம் தொடர்பான ஆவணங்களை தன் கையில் வைத்திருக்க விரும்புகிறது என்றால், அந்த உதவிக்கு பதிலாக நிலத்தை தன் கண்காணிப்புக்குள் வைத்திருக்க விரும்புகிறது என்று பொருள். 1998 இல் அப்போதிருந்த இலங்கை அரசாங்கம் ‘பிம்சவிய’ என்ற பெயரில் காணி உரித்து பதிவுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. நாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தமது காணி உரித்துக்களை உறுதிப்படுத்தி புதிய, ஒரே ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்ட ஆவணத்தைப் பெற வேண்டும் என்று பிம்சவிய திட்டம் அறிவுறுத்தியது. இப்படிப்பட்டதோர் உலகளாவிய மட்டும் உள்ளூர் அரசியல் பின்னணியில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு தேவையான ஆகப் பிந்திய பிடியைக் கொடுத்திருக்கின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில், குறிப்பாக ஏப்ரல் மாதக் கடைசியிலும் மே மாதத்தின் தொடக்கத்திலும் இந்த விடயம் சூடான பேசுபொருளாக மாறியது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் திகதி மார்ச் 28. ஆனால் அது தமிழ் அரசியலில் சூடான பேசு பொருளாக மாறியது ஏப்ரல் கடைசியில். அதை தலைப்புச் செய்தியாக மாற்றியவர் சர்ச்சைக்குரிய விடையங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் ஊடகவியலாளர்களில் ஒருவர்.முன்பு யாழ் மாநகர சபையின் உறுப்பினராக இருந்தவர்.கெட்டிக்காரர்.அவர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்று ஒர் அபிப்பிராயம் பரவலாக உண்டு. அது உண்மையோ பொய்யோ, அந்த வர்த்தமானியை வைத்து சுமந்திரன் தன்னை தமிழ் அரசியலிலும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் பலப்படுத்தி வருகிறார். அந்த வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெறுவதற்கு இம்மாதம் 28ஆம் திகதி வரையிலும் அவர் கால அவகாசம் வழங்கியுள்ளார். இந்த விடயத்தை அரசுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டமாக மாற்றப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.இந்த விடயத்தில், நிலப் பறிப்பு தொடர்பில் சுமந்திரனின் நடவடிக்கைகள் தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்துபவை. தேசிய மக்கள் சக்திக்கு எதிரான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை மேற் சொன்ன வர்த்தமானி ஒன்றாக்கியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் அதை ஒரு பேசு பொருளாக மாற்றினார்கள்.அதன் விளைவாக அரசாங்கம் தன் நிலைப்பாட்டில் இருந்து ஓரளவுக்குக் கீழிறங்கி வந்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி இது சம்பந்தமாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார். சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய காணிகளை சுவிகரிக்கும் உள்நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்று கூறியுள்ளார்.எனினும் குறிப்பிட்ட வர்த்தமானி இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் மீளப் பெறப்படவில்லை. அடுத்த அமைச்சரவைக்கு கூட்டத்தில் அது தொடர்பில் பேசி முடிவெடுக்கப் போவதாக ஹரிணி கூறியுள்ளார். https://athavannews.com/2025/1433124- கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து பொலிஸாரினால் T-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, நீதிமன்ற உத்தரவின்படி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(24) அவர் கல்கிஸ்ஸை பதில் நீதவான் சாந்த குமாரகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டிருந்தபோது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள், துமிந்த திசாநாயக்கவை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திப் பெற்றுக்கொண்ட மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால், அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். https://athavannews.com/2025/1433104- பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டுவரப்பட்ட மறைந்த மாலினி பொன்சேகாவின் உடல்! இலங்கை சினிமாவின் ராணியான மறைந்த மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (25) சற்றுமுன்னர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (25) முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் உடல் வைக்கப்படுவதுடன், நாளை சுதந்திர சதுக்கத்திலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக நோய் நிலையால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை மாலினி பொன்சேகா, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(24) அதிகாலை காலமானார். இந்நிலையில் , மலானி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு நாளை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433118- கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து!
கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து! இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருவனந்தபுரம் – விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த கப்பல் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையினால் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய நேரப்படி நேற்று இரவு 10.00 மணிக்கு கப்பல் கொச்சி துறைமுகத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1433111- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சுமந்திரன்... தனது பெயரை, "ரிப்பேர்" பண்ண முடியாத அளவுக்கு கெடுத்து வைத்திருப்பதால்... அரசியலில் அவர் ஒரு செல்லாக் காசு. வேலன் சுவாமி ஜீ யைப் போல்... தொகுதிக்கு ஒருவர் இருந்தால்... இந்த சுத்துமாத்து அரசியல்வாதிகளே, தமிழருக்கு தேவை இல்லை. 🙂- கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
ஸ்ரீலங்காவின்... வாய்க் கொழுப்பை அடக்க, ரொறொன்றோவிலும், மொன்ரீயலிலும் பிரமாண்ட நினைவுத் தூபிகள் கட்டப்பட வேண்டும். அதனைப் பார்த்து... ஸ்ரீலங்கா கதற வேண்டும்.- கருத்து படங்கள்
- பாடசாலை மாணவர்களை தாக்கிய பாடசாலை முதல்வருக்கு பிணை!
பாடசாலை மாணவர்களை தாக்கிய பாடசாலை முதல்வருக்கு பிணை! 11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அம்பாறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை நகர பாடசாலை ஒன்றில் கடந்த மே 16 ஆந் திகதி மாலை தரம் 5 மாணவர்கள் 11 பேரின் பெற்றோர்கள் பாடசாலை அதிபரான பௌத்த துறவி தமது பிள்ளைகளை கொடூரமாகத் தாக்கியதாக குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர். இதற்கமைய அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் குறித்த மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டதுடன் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதான வைத்திய அறிக்கைகள் பெறப்பட்ட நிலையில் நேற்று (23) 11 மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய சந்தேக நபரான வணக்கத்திற்குரிய சுஹதகம சிலாரத்தன தேரர் அம்பாறை மகளிர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அம்பாறை நீதிமன்ற நீதவான் நவோமி விக்ரமரத்ன முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டதுடன் மறு விசாரணை எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://athavannews.com/2025/1433064- ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி!
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி! எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இதேவேளை, டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலலிக்காத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433062- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சுமந்திரன்... தனது கார் சாரதியின் தம்பி, கஞ்சா வழக்கில் பிடிபட்ட போது, அந்த கஞ்சா வியாபாரிக்காக வாதாடியது மட்டுமல்லாது, ரணில் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி, அந்தப் போதை வியாபாரியை... சுதந்திரமாக விடுவித்த (அ)யோக்கியன்தான் சுமந்திரன். எப்போதும் சுமந்திரனின் குடும்பி ரணிலின் கையில் என்ற படியால்தான்... சுமந்திரன் ரணிலை கண்டவுடன் பம்மிக் கொண்டு திரியும் ரகசியம். வேலன் சுவாமி ஜீ´க்காக, சுமந்திரன் வழக்கு வாதாடினால்.... நல்லூர் மக்களும், சைவ தமிழ் மக்களும்.... வரும் தேர்தலில் தனக்கு வாக்களிப்பார்கள் என ஆபிரஹாம் சுமந்திரன் நினைத்தால்... அந்த ஆசையை இப்பவே மூட்டை கட்டி வைத்து விடுவது நல்லது. 😂 வழக்குக்கு தேவையான சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடி விட வேண்டும். சுமந்திரன் இதை சாட்டாக வைத்து... தனது இழந்த செல்வாக்கை தமிழ் மக்களிடம் மீண்டும் கட்டி எழுப்பலாம் என்று மண்கோட்டை கட்டி மனப்பால் குடிக்க வேண்டாம். 🤣 - பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.