Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

theeya

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by theeya

  1. மிக்க நன்றி - ஆம் பட்டவனுக்குத்தான் நோவு தெரியும்
  2. மிக்க நன்றி ஆம், அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து வந்து போகிறேன். மிக்க நன்றி 🙏
  3. முடி திருத்தகம் ஒன்றில் இன்று நான் அவளைச் சந்தித்தேன் அவள் அமெரிக்க நாட்டின் ஆப்கான் அகதி பல்கலை ஒன்றில் பட்டம் பயிலும் அவள் பகுதி நேரம் அங்கே பணி புரிகிறாளாம் இப் புனித மாதத்தில் தன் ஊரில் இல்லாமை பற்றி அதிவருத்தம் கொண்டாள் முன்னொரு நாளின் ரமலான் நோன்பில் தன் சுற்றம் கூடி உண்டது பற்றி அதிகம் அளவளாவினாள் அரை மணி நேரம் தான் முடி வெட்டி மீள்கையில் கூலிக்கும் மேல் ஒரு சிறு தொகை கொடுத்தேன் ஆம்… ஒரு ஈழ அகதியின் பெயரால் அவளின் இன்றைய நோன்பு துறக்கப்படட்டும் தியா - காண்டீபன்
  4. நீங்கள் எப்போதாவது பசித்திருந்திருக்கிறீர்களா ஆம் பசித்திருத்தலின் கொடுமையை நான் அனுபவித்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது வெறுங் காலுடன் நடந்துள்ளீர்களா ஆம் பாதணிகள் இன்றி நான் பல நாட்கள் நடந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உடுத்த உடையின்றித் தவித்திருக்கிறீர்களா ஆம் நான் மாற்றுத் துணியின்றிப் பல நாட்கள் இருந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உங்கள் வீடு பிரிந்ததுண்டா ஆம் அகதியாகிப் பலமுறை நான் அலைந்திருக்கிறேன் ஆம் வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல பல நேரம் சுமையாகிறது சில நேரம் சுகமாகிறது தியா - காண்டீபன்
  5. IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com தியா - காண்டீபன்
  6. என்னுடைய கடவுள் விற்பனைக்கு கவிதையை இங்கு உள்வாங்க முடியுமா?
  7. மகிழ்ச்சி, பரிந்துரைக்கு நன்றி... ஆம், முடிந்தால் யாராவது யாழ் அகவை 26 க்கு மாற்றி விடுங்கள்
  8. அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள் போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள் அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது 'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள் கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார் அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர் தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  9. சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள்
  10. நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம். இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.
  11. இன்று நாம் பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது தியா - காண்டீபன்
  12. உண்மை... ஆனால் இப்போதைக்கு அவர்கள் தொழிற் சங்கங்கள் மூலம் அல்லது அரசாங்கம் மூலம் 3-6 மாதங்களுக்கு வருவாய் பெற வாய்ப்புள்ளது. உண்மையான இழப்பு அரசுக்குத்தான். மறு பக்கம் இதனைப் புனரமைத்து மீண்டும் உருவாக்கம் செய்யும் பலருக்கு வேலைவாய்ப்பை இது வழங்கும்🙃 இப்போதுதான் பார்த்தேன் கவிதைக் களம் பகுதியில் இணைக்க வேண்டியதை மாறி இங்கே இணைத்து விட்டேன்
  13. நன்றி ... பால்டிமோரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜ் நீரில் மூழ்கியதால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஒரு "பெரிய பேரழிவு" ஆகும். இது அமெரிக்காவின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் 30,000 வாகனங்களுக்கு மேல் பயணப்படும் இந்த பாலம் முக்கியமானது. அமெரிக்கர்களுக்கான உடனடி விளைவு... வெளிநாட்டிலிருந்து புதிய கார் வருவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரலாம். பால்டிமோர் துறைமுகம் அமெரிக்காவில் உள்ள கார்கள், இலகுரக டிரக்குகளுக்கான நாட்டின் முன்னணி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தளமாக உள்ளது. அத்துடன் பால்டிமோர் துறைமுகம் அமெரிக்காவில் வருடம்தோறும் 15,300க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குகிறது, மேலும் 140,000 வேலைகள் துறைமுகத்தின் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் விவரத்துக்கு ... நம்புங்கள் இதுவும் கவிதைதான் 😁
  14. ஆமாம்... பார்க்கவே மனம் கனக்கிறது. 140,000 வரையான மக்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளனர். இன்னும் மூன்று வருடத்தில் பொன்விழாக் காண இருந்த பாலம் சரிந்தது, இது வரும் காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பே. அக்கா, வரிகளில் இருந்த இடைவெளியை திருத்தி விட்டேன் - நன்றி
  15. செய்தி : அமெரிக்காவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் செய்த சிங்கப்பூர் கப்பல் அமெரிக்க தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் பிரான்சிஸ் ஸ்காட் கீ அவர்களின் பெயர் கொண்ட பாலத்தில் மோதியது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இன்று ஒரு கப்பலால் காணாமல் போனது ஒரு கப்பல் பாலத்தை இடித்தது ஒரு கப்பல் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது ஒரு கப்பல் அமெரிக்க தேசிய கீதம் பாடிய கவிஞன் பெயரை தண்ணீரில் வீழ்த்தியது ஒரு கப்பல் இலட்சம் பேரின் வேலையை கேள்விக்குறி ஆக்கியது இன்றைய குளிர் இரவில் அந்தப் பயங்கரம் நடந்தது இரும்புச் சட்டங்கள் காற்றில் பறந்தன பயணிகள் பலர் நீரில் மூழ்கினர் ஒரு நாட்டின் அடையாளம் நதியில் மூழ்கியது ஒரு கப்பலால் அதைச் செய்ய முடிந்தது அது இப்போது எஃகு நதி ஒரு தேசியக் கவிஞனின் பெயர் பொறித்த பாலம் தண்ணீருள் மூழ்கியது ஒரு கப்பலால் அதைச் செய்ய முடியுமென்றால் இப் பூவுலகில் பாலங்கள் பாதுகாப்பானவையா என்ன? தியா - காண்டீபன்
  16. ம்... அதையும் வாசித்ததால் தான் சொல்கிறேன் அண்மையில் "பான் கி மூனின் றுவாண்டா" வும் படித்தேன். அகரமுதல்வன் போன்ற சிலருக்கு நல்ல சொல்வளம் இருந்தென்ன பயன் எழுத்தில் குப்பைத்தனம் இல்லாமல் இருக்க வேண்டுமே... எழுத்தாளனின் பணி குறுக்கு வழிகளில் உயரம் தொடுவதல்ல... எழுத்தின் மூலம் சிகரம் தொடுவதாக இருக்க வேண்டும்
  17. இதுவரை இந்தக் கதையின் 19 அத்தியாயங்களை வாசித்து முடித்துள்ளேன். நிறையக் கருத்துக்களை அகரமுதல்வன் சொல்ல முற்பட்டாலும் யதார்த்தம் தாண்டிப் பல இடங்களில் கட்டுக் கதைகளைத் தாராளமாக அள்ளி வீசுகின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவரின் முன்னைய பல சிறுகதைகளையும் நான் வாசித்துள்ளேன் பல கதைகளில், தமிழகத்துக்கு குடிபெயர்ந்த ஈழப் பெண்கள் இழிவான பல சித்தரிப்புகளுடன் எழுதியுள்ளதைக் கண்டுள்ளேன். தமிழகத்துக்குக் குடிபெயர்ந்துள்ள பல ஈழத்து எழுத்தாளர்கள் பல கட்டுக் கதைகளை உண்மைபோல் எழுதித் தள்ளி ஜெ.மோ போன்ற புண்ணியவான்களிடம் பாராட்டைப் பெற முயல்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஒருவகையில் இலக்கியத் தற்கொலை, நமது ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றிய, நாம் கடந்து வந்த பாதை பற்றிய தவறான புரிதலை மற்றைய மக்களிடம் கொண்டு செல்லத் தூண்டுகிறது/துணை புரிகின்றது என்பது எனது தாழ்மையான கருத்து.
  18. முள்ளிக்குளம்தான் சரி. நான் மதவாச்சி/ வவுனியா - மன்னார் பாதையில் இருக்கும் குளங்களை எல்லாம் மூளையைக் கசக்கியும், கூகிள் மாப்பைப் பார்த்தும் முள்ளிக்குளம் நினைவுக்கு வரவில்லை! முள்ளிக்குளம்... மூன்று முறிப்பூடாக மடு செல்லும் பாதையில் உள்ளது. 1995 களில் நான் சைக்கிளில் திரிந்த இடங்கள் இவை. இதில் நான் சொன்ன மூன்று குறிப்புக்கு ஒரு சிறப்புண்டு. இந்தக் கிராமம் வவுனியா-மன்னார்-முல்லைத்தீவு மாவட்டங்களை இணைக்கும் மையப் புள்ளியில் இருப்பதாகும்
  19. எனது நீ கொன்ற எதிரி நான் தான் தோழா கவிதைப் புத்தகத்துக்காக, என்னை IBC தமிழ் நிறுவனத்தினர் நேர்காணல் செய்திருந்தனர். சர்மிளா வினோதினி அவர்களின் மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன். நன்றி தியா - காண்டீபன் நன்றி தியா - காண்டீபன்
  20. உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன்’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள புளோரிடா மாநிலத்தில் வசிக்கிறார். “வனநாயகன் என்றால் என்ன?” என்று இப்போது நீங்கள் உங்கள் தலைக்குள் கேட்பது எனக்குப் புரிகிறது. மலேசியாவில் அதிகமாக இருக்கும் ‘உராங் குட்டான்’ என்ற குரங்கினத்தைத்தான் ‘வனநாயகன்’ என்று சொல்வார்கள் என இந்தக் கேள்விக்கான பதிலை இந்த நாவலின் இரண்டாவது அத்தியாயத்திலேயே எழுத்தாளர் அவர்கள் சொல்லிவிடுகிறார். “சரி அதற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்மந்தம்?” “திரும்பவும் கேள்வியா…? “சொல்லுங்க பாஸ்…” “ம்ஹூம்… என்கிட்டேயா? சொல்லமாட்டேனே… முதலில் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.” எல்லாக் கதைகளின் தலைப்பும் கதைகளுடன் ஒத்துப்போக வேண்டுமென்றில்லை. ஆனாலும், இந்தக் கதையில் ஏதோ ஒரு மையப் புள்ளி எங்கோ ஒரு இடத்தில் கதையின் தலைப்புடன் ஒத்துப் போகிறது. “கண்ணாமூச்சி ரே ரே… கண்டுபிடி பார்ப்போம்…” https://www.panippookkal.com/ithazh/archives/26724 -தியா காண்டீபன்-
  21. இச் சிறிய பறவை இப்போது, நீல வானத்தைப் பார்க்கிறது. முன்போல் அதனால் வானத்தை இன்னும், முழுமையாகச் சொந்தம் கொண்டாட முடியவில்லை. இப்பறவையை இப்போது யாரும் பார்க்க மாட்டார்கள். இப்போது இதனால் அரிதாகவே பறக்க முடிகிறது. அதன் உடைந்த சிறகுகளை சரிசெய்ய, அங்கு யாரும் வரமாட்டார்கள். ஒரு காலத்தின் சுதந்திர பறவை இது! காற்றின் மிதப்பில், வானத்தை உரிமை கொண்டாடியபடி, மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி மிதந்தது. -தியா-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.