Everything posted by புலவர்
-
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
நேற்றுவரை பாஜகவுடன் கூட்டணிவைத்திருந்த தேதிமுகவுக்கு கடந்த தேர்தலில் அதுவும் அமமுகவுடன் கூட்டணிவைத்து 0.43 வீத வாக்குகள்தான் அதற்கு 10+1 ராஜ்ய சபா கொடுத்த திமுகவினர்.பாஜக கூட்டணியில் சேரமாட்டாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இரு கம்னியூஸ்ட்டுகள்>விசிக>மநீம> தவாகவுக்கு குநறந்த இடங்களைக் கொடுத்திருப்பது. தெலுங்கு பாசத்தைத்தவிர வேறு எதைச் சொல்வது. 2.8 வீத வாக்குகளை கொண்ட மநீமய்யத்துக்கு உதய~ரியனில் நிற்க வற்புறுத்தியதால் மனமுடைந்து தேர்தலில் நிற்பதையே புறக்கணித்து விட்டார். தமிழர்களைப்புறக்கணித்து தெலுங்கர்களை அரவணைத்திருக்கிறது திமுக.
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
இந்தச் சபையின் தலைவர் ஒரு அதிகாரமில்லாத தலைவர். இந்தச் சபையால் ஒரு பிரயோசனமும் இல்லை.எந்தப் போரையும் இவர்களால் நிறுத்த முடியாது.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை. அதனால்தான் வெளியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழர்களை ஆட்சி செய்கிறார்கள். இந்த நிலையை மாற்றி மற்றைய மாநிலங்களைப் போல தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பது மட்டமான சிந்தனையாகும்.இது தொடக்கம்தான் காலப் போக்கில் இது நடந்துதான் தீரும்.அதனைக் குழப்ப காலத்திற்குக்காலம் நடிக்க கோமாளிகளை இறக்கி விட்டு திராவிடம் சூழ்ச்சி செய்வது தொடர்கதையானாலும். அந்த அரிதார வேடம் வெகு சீக்கிரமாகவே கலைந்து வெளிச்சத்துக்கு வருவதை கண்கூடாகவே பார்த்து வருகிறோம்.
-
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
பள்ளிக்கூடத்தில் ரீச்சர் இவன் நுள்ளிப் போட்டான் என்று முறையிடுகிற மாதிரி இருக்கிறது. நடைபெறுவது போர். அதுவும் போரைத் தொடங்கியது இஸ்ரேலும் அமெரிக்காவும். எடுத்த எடுப்பிலேயே ஈரானில் பாடசாலையில் குண்டுகள் விழுந்து 150 பள்ளிக் குழந்தைகள் அநியாயமாக இறந்து போனார்கள். குண்டுகளுக்கு குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என்று வேறுபடுத்திப்பார்க்கத் தெரியாது.காசாவில், பாலஸ்தீனத்தில், லெபனாலில் எத்தனை குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதல்களில் இறந்து போயிருக்கிறார்கள்.அதற்கெல்லாம் யாரிடம் முறையிடுவது. போர் நடக்கின்றது. போரைத் தெடங்கியவர்கள்தான் போரை நிறுத்த வேண்டும். தோல்வியை ஒப்புக் கொண்டு போரை நிறுத்தினால் இருபக்கமும் அழிவுகளைத்தடுக்கலாம்.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
உங்கள் கண்களுக்கு சீமான் பேசுவது இனவெறுப்பாகத் தெரிகிறது.சீமான் தமிழர்நிலத்தை தமிழர் ஆளவேண்டும் என்று சொல்கிறார்.இங்கு யாரும் வாழலாம்ஆனால் ஆள்வது மண்ணின் மைந்தனாக வாழவேண்டும் என்பதில் என்ன தவறு?கேரளாவிலோ.கர்நாடகவிலோ.ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டைத்தவிர வேறு எந்த மாநிலத்திலோ அந்த மண்ணின் மைந்தர்களைத் தவிர வேறு யாராவது முதலமைச்சராக இருந்துள்ளார்களா? அல்லது இனி வரமுடியுமா?மற்றைய மாநிலங்கள் அந்ததந்த மொழிவழி மாநிலங்களாக இருக்கும் பொழுது தமிழ்நாடு மட்டும் திராவிட நாடு என்ற போர்வையைப் போர்த்தியது யார்?என்ன காரணத்திற்காக திராவிடக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள் . திராவிடப் போர்வையில் தமிழர்களை ஆள்வதற்குத்தானே.தேசியக்கட்சியான காங்கிரசின் கொள்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு அந்ததந்த மாநில நன்மை கருதும் காங்கிரசை எப்படி தேசியக்கட்சி என்று சொல்ல முடியும்.கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வருவதை கர்நாடக காங்கிரஸ் தரமறுக்கிறது கேரள காங்கிரசும் அவ்வாறே கேரளமக்களின் நலன்களைப் பேசுகிறது.தமிழக காங்கிரஸ் மட்டும் ஏன் தேசியம் பேச வேண்டும்.ஏனைய மாநிலத்தவர்கள் இனத்தூய்மைவாதம் பேசும்போது அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை சீமான் தமிழர்களைத் தமிழரே ஆளவேண்டும் என்னும் பொழுது இனவாதம் என்று சொல்லி மடை மாற்றுகிறீர்கள். சீமான் தமிழின உரிமை பற்றி மட்டும் பேசவில்லை அனைத்து உயிர்களுக்குமான அரசியலைப் பேசுகிறார். சூழலியல் பேசுகிறார். பொருளாதாரத்தைப்பற்றிப் பேசுகிறார். வேறு எந்க்கட்சி பேசுகிறது. அதுவெல்லாம் உங்கள் கண்களுக்குத் ஏன் தெரியவில்லை?
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
அது உண்மைதான் ஆனால் அழுத்தமும் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மத்திய அரசுக்கு கொடுப்பதில்லையே. தங்கள் குடும்பத்தினருக்கு பதவிகளைப் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.இந்திய மத்திய அரசு இந்த விடயத்தில் அக்கறை அற்று இருந்தாலும் தமிழக அரசு அதற்கான அழுத்தம் கொடுத்திருக்கலாம். அல்லவா. இலங்கை அரசு இந்தியமக்களுக்கு குடியுரிமை கொடுத்தது போல இந்திய அரசு குடியுரிமை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கல்வி வேலை வாய்ப்பிலாவது அவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவவில்லையே என்பதே எனது ஆதங்கம்
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
வாழ்த்துக்கள் ஆதித்யா!தமிழர்தாயகத்தில்ஏற்பட்ட யுத்தம் காரணமாக அகதிகளாகச் சென்றவர்கள் மேற்கு நாடுகளில் அரசியலில் பங்கெடுக்க முடிகிறது. அதே வேளையில் தாய்த்தமிழகத்திற்கு அகதியாகச் சென்றவர்களுக்கு குடியுரிமையும் இல்லை. தாயகத்திற்கு திரும்பவும் கடவுச்சீட்டு இல்லை.முகாம்களில் அடைக்கப்பட்டு உயர்கல்வி வாய்ப்புகள் .வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு துன்பத்தில்வாடுகிறார்கள்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அங்கிகரிக்கப்பட்ட கட்சியான விசிகவுக்கு 8 அதே சமயத்தில்0 .4 வீத வாக்குகளைப் பெற்று நேற்று வரை திமுகவை திட்டி பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த தேதிமுகவுக்கு 10+1ராஜ்ய சபா இடங்களைக் கொடுத்த திமுகவின் தெலுங்கு மணவாடு பாசம்.யாரெல்லாம் பாஜகவை கடுமையாக எதிர் க்கிறார்களோ அந்தக்கட்சியோடு கூட்டணி நம்பகமாக வைக்கமட்டார்களோ ,திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இருந்து திமுக ஆட்சியின் தவறுகளை கண்டுகொள்ளாமல் முரட்டு முட்டு கொடுத்தார்களோ அவர்களைப் (விசிக,கம்மனியூஸ்ட்டுகள்) புறக்கணித்திருக்கிறது திமுக அவர்களின் ஒரே தேர்தல் கோஷம் பாஜக உள்ளே வந்திரும்.நாளை தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டசபையாக வந்தால் அண்ணியார் என்ன ஆட்டம் போடுவார் என்பதை நினைத்துப்பார்க்க முடியாது.(ஓரிரு இடங்களை வென்றிருந்தால்)இந்த இலட்சணத்தில் தனித்துப் போட்டுயிடும் நாதகவைபாஜகவின் B ரீம் என்று தங்கள் ஊடகங்களை வைத்து பிரச்சாரம் பண்ணுகிறார்கள் .அதை நம்பி யாழ்களத்திலும் சிலர் அதனை மேற்கோள் காட்டி எழுதுகிறார்கள்.உண்மையில் திமுகதான் பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறது.எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவது ஆளும்கட்சியாக வந்தவுடன் வெள்ளைக்குடை பிடிப்பது இதுதான் திமுக.இதற்குள் கமல்என்ற கோமாளி உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொன்னதற்காக தேர்தலில் தங்கள் கட்சி மோட்டியிடாதாம்.ஆனால் திருட்டுத்திமுகவுக்கு முரட்டு ஆதரவும்.இப்பொழுது அடுத்த கோமாளி தயாராகிக் கொண்டிருக்கிறார்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசன் அவர்களும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்' கொண்ட அண்ணன் கமல்ஹாசன் அவர்களை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்" என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் படிந்தது பேரம் 08. புதுவையில் விசிக தனித்துப் போட்டியாம்.
-
இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்! - ஈரான் தூதுவர்
ஈரான் தூதுவருக்கு நன்றி!இந்தச் செய்தியை அமெரிக்கா மற்றும் மேற்குலகத்துக்கும் கொடுக்கப்பட்ட செய்தியாக அந்த நாடுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
https://tamil.oneindia.com/news/chennai/nda-seat-pact-sealed-27-seats-to-bjp-18-to-pmk-11-to-ammk-in-aiadmk-alliance-783769.htmlபாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! By Vignesh Selvaraj Updated: Monday, March 23, 2026, 15:43 [IST] 3Subscribe to Oneindia Tamil சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாமகவுக்கு என்.டி.ஏ கூட்டணியில் 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. AD தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வருகை தந்தார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்களோடு வந்தார் பியூஷ் கோயல். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வருகை தந்தனர். இதையடுத்து, என்.டி.ஏ கூட்டணியில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாஜகவுக்கு - 27 தொகுதிகள், அமமுகவுக்கு -11 தொகுதிகள், பாமகவுக்கு -18 தொகுதிகள், ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். AD கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/nda-seat-pact-sealed-27-seats-to-bjp-18-to-pmk-11-to-ammk-in-aiadmk-alliance-783769.htmlஎடப்பாடி கூலாக பாஜகவை டீல் செய்துள்ளார்.தொகுதிப்பங்கீடு விடயத்தில் எடப்பாடியின் கையே மேலோங்கி இருந்தது.காங்கிரசின் விஜை கூட்டணி நாடகத்துக்கு பயந்து .4 வீத தேதிமுகவுக்கு அளவுக்கு மீறிய விட்டுக்கொடுப்புக்களைச் செய்து இவ்வளவு காலமும் விசுவாசமாக இருந்த கூட்டணிக்கட்சிகளுக்கு அல்வா கொடுத்த திமுக இப்பொழுது முழிக்கிறது. திருமா இரட்டை இலக்கத்துக்கு குறைவாக ஒத்துக்கொள்ளக்கூடாது என்று கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருமாவுக்கு சிக்கல்.அதிக கட்சிகளின் கூட்டணிகளைக் கொண்ட திமுகவின்பலமே அதன்பலவீனமாகவும் இருக்கிறது.
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
அமெரிக்காவின் ஜனாதிபதி பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.அது தான் ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு வேண்டியது. ஆனால் தம்பர் வாய்க்கு வந்தபடி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவருகிறார்.அமெரிக்காவின் பலவீனத்தை தம்பர் போட்டு உடைத்து விட்டார்.இது அவரைத் தெரிவு செய்த மக்களுக்குத் தேவை.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல . ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போரடிக் கொண்டிருந்த போது தேவையில்லாமல் அமெரிக்கா இஸ்ரேல் போரில் இறங்கி ஈரானியர்களை ஒற்றுமையாக்கி விட்டது.
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
தம்பர் விழுந்தும் மண்படவில்லை என்று எஸ்கேப் ஆகப்பார்க்கிறார்.
-
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
பாலஸ்தீனத்தை இஸ்ரேல் எப்படி சிதைத்ததோ அதே விளைவை இஸ்ரேல் அனுபவிக்கிறது. அயன்டோம் எங்கேப்பா?
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திமுக வை திருமா எங்கும் போகமாட்டார். திருமா முரண்டுக பிடித்தால் திமுக விசிகவை உடைக்கும்.குறைந்த தொகுதிகளைப் பெற்றால் புதியவர்களுக்கு வாய்ப்புக்கிடைக்காது அதிருப்தி அடைவார்கள்.பழையவர்களை மாற்றி புதியவர்களுக்கு இடம் கொடுத்தாலும் பழையவர்கள் திமுகவில் ஐக்கியமாகி விடுவார்கள்.டைசிவரை தீமுகவுக்கு கொத்தடிமையாக இருந்து 6சீற்றைப் பெற்றுக்கொண்டு இருக்க வேுண்டியதுதான். உண்மையில் திமுககூட்டணியில் திமுகவுக்கு அடுத்தபடியாக வாக்கு சதவீதம் உள்ள கட்சி விசிகதான். காங்கிரசுக்கு கூட சிசிகவை விட வாக்குச்சதவீதம் குறைவுதான்.கட4;த தேர்தலில் 0.4வீதம் எடுத்த தேதிமுகவுக்கு 1 ராஜ்யசபா +10 தொகுதிகள்வரை பகாடுக்கத்தயராக இருக்கும் திமுக சிசிக கம்னியூஸ்ட்டுகளை இடைக்கையால் டீல் பண்ணுகிறது. தெலுங்கர்களுக்கு கொடுக்கும்மரியாதையை தமிழர்களுக்கு கொடுக்கவில்லை.தவாக வேல்முருகன் .திருமா போன்றவர்களை விரும்பினால் இருங்கள் இல்லாவிட்டால் வெளியேறுங்கள் என்ற மாதிரி டீல்பண்ணுகிறார்கள். கமலுக்கும் அதே நிலை. ஏனென்றால் அவர்கள் பாஜக கூட்டணிக்குப் போகமாட்டார்கள் டஎன்று தெரியும். ஆனால் தேதிமுக நேற்றுவரை பாஜககூட்டணியில் இருந்து விட்டு ஒரு எம்பி பதவிக்கும் பணத்திற்குமாக திமுகவிடம் வந்துள்ளார்கள்.
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
Kjy; கலக்கட்டும். கலக்கட்டும்.சிறிலங்கா சீனாவின்பக்கம்தான் நிற்கும். பிராந்திய வல்லரசுக்கு தமிழர்தாயகத்தின் அருமை புரியட்டும். காலம் கடந்த ஞானம் எதற்கும் உதவாது.
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லதுதானே! இஸ்ரேல் போரைத் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது.முதல்நாளே தலைவனைப் போட்டுதள்ளியதுடன் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தால் ஈரான் அதற்குப் பிறகுதான் உக்கிரம் அடைந்துள்ளது. பொருளாதாரத்தில் கடும் பிண்ணடைவில் இருக்கும் ஈரான் இப்படி எதிர்வினையாற்றும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈரானின் சக்திவாய்ந்த தலைவர்களைப் போட்டுத்தளிளிபின்பும் ஈரான் பேராடுகிறது. ஈரானுக்கு இது வாழ்வா சாவா என்ற நிலை.மேலும் ஷியா முஸ்லிம் மதம் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் மதம்.அதனால் அதன்தலைவர்கள் பதுங்குழியில்பதுங்கியிராது தங்கள் பாதுகாப்பில் அக்கறை காட்டாது இருக்கிறார்கள். தலைவர்கள் விழ விழ மக்கள் எழுச்சி கூடுவது வித்தியாசமான போக்கு.க யாராலும் அழிக்க முடியாது என்ற அமெரிக்காவின் விமானத்துக்கு அடிவிழுந்தது.ட்ரபுக்கு அடிச்சது மாதிரி. இந்தியா பாகிஸ்தான் போரில் சீனாவின் மறை கரங்கள் ஈடுபட்டது போல இங்கேயும் ஏன் நடந்திருகக்கூடாது?சீனாவின் படைக்கல சோதனையாக ஏன்பார்க்கக்கூடாது.
-
டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
ஆனால் செய்திகள் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாகத்தான் சொல்கின்றன. இஸ்ரேலின் வேலையாகவும் இருக்கலாம். அல்லது ஈரானே ஏவிவிட்டு தான் ஏவவில்வை என்று மறுத்து சொல்வது தன்னிடம் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணை இருக்கறதா இல்லையா என்று எதிரிகளைக் குழப்பும் வேலையாகவும் இருக்கலாம்.பிரித்தானியா தனது தளங்களை அமெரிக்கா பாவிப்பதற்கு அனுமதியளிக்கப் போவதாகச் சொன்னதற்கு எதிர்வினையாகவும் இருக்கலாம்.
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
சீனாவின் ஆயுத உதவி ஈரானுக்கு மறைமுகமாக கிடைத்து விட்டது போலும்?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார் விஸைக்கு தாங்கள் கணித்த வாக்குசதவீதம் விஸை காங்கிரசுடன் கூட்டணிவைத்தால் என்று கருத்துக்கணிப்பை வைத்து விட்டு பிறகு விஜையின் வாக்கு சதவீதம் என்றுஅடிச்சு விட்டிருக்கிறார். ஒரு கருத்துக்கணிப்பையும் நம்ப முடியாது. எல்லாமே கருத்துத்திணிப்புதான்.இதுவரை வந்த கருத்துக்கணிப்புகளில் கட்சியே தொடங்காத ரஜனி அரசியலுக்கு வந்தால் யாருக்கு வாக்குப் போடுவீர்கள் என்றெல்லாம் கருத்துத்திணிப்பு நடத்தியிருக்கிறார்கள். அங்கே நாதக இருக்காது மற்றையவர்கள் என்று இருக்கும். இதை எல்லாம் மீறி தனித்து நின்று தேர்தல் ஆணையத்தால் கட்சி அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் கூட பல கருத்துத்திணிப்புகள் நாதகவை மற்றவர்கள் என்ற வகைக்குள்தான் வைத்திருக்கறார்கள். ஊடகங்களும் 3 முனைப்போட்டி என்றுதான் கருத்துத்திணிப்புகளைச் செய்கின்றன. மக்கள் முட்டாள்கள் அல்ல. இந்தக் கருத்திணிப்புகளைத் தடை செய்ய வேண்டும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
https://www.youtube.com/watch?v=WGLsM32b5gw&t=529s
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
மாணவர்களுக்கு எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. தேவையான சமய நுhல்களைத்தவிர எனைய பாடங்களுக்கான நுhல்களக் கொடுக்கலாமே. அது ஏன் வடமாகாணத்தின் அனைத்துப்பாடசாலைகளுக்கும் கொடுக்க வேண்டும்.அங்குள்ள மக்கள் மதவெறிபிடித்து சண்டை போடுகிறார்களா?இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு கொடுக்க முடியுமா?எனது கிராமத்தில் சைவசமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் நீண்ட காலமாக எந்தப் பிணக்குகளும் இல்லாமல் வாழுகிறார்கள்.சைவமக்கள் தங்கள் வீட்டுக்கருகில் கிறிஸ்தவப் பாடசாலைகள் இருந்தால் அங்குதான் சென்று கல்வி கற்கிறார்கள். அதே நேரம் கிறிஸ்தவ மக்கள் சைவப் பாடசாலைகளில் படிப்பது ஒப்பீட்டளவில் குறைவு. உயர்தரப்பாடசாலைகளில் இருசமயத்தவர்களும் படிக்கிறார்கள்.இல்லாத பிணக்கை ஏன் தேலையில்லாமல் உருவாக்குகிறார்கள்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் சின்னத்திற்கு சிக்கல் | EVM - ல் மாற்றப்பட்ட விவசாயி