Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. சீமான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.தமிழ்நாட்டில் யாரும் வாழலாம் ஆனால் ஆளும் உரிமை தமிழருக்கே வேண்டும் என்கிறார். கேரளாவிலோ>ஆந்திராவிலோ அல்லது தமிழர்கள் பெரும்பானமையாக வாழும்கர்நாடகாவிலோ ஒரு தமிழர் முதல்வராக முடியுமா?இவர்கள் மலையாளிகளாக>தெலுங்கர்களாக>கன்னடர்களாக தமது நிலத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும்பொழுது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்திராவிடர்களாக இருக்க வேண்டும். இது தமிழ்களை ஆள்வதற்காக உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டமிட்டு திராவிடர்கள் செய்த செயல்.தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமழைப்படிக்காதே அது ஒரு காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதுதான் முற்போக்குவாதமா? அல்லது பெண்கள் தங்கள் கருப்பையை அகற்ற வேண்டும் என்று சொன்னதுதான் முற்போக்குவாதமா?தமிழ்நாட்டின் தெருப்பெயர்களில் சாதிப்பெயர் இருக்கக்கூடாது என்று சட்டம் போட்ட மை காயமுன்னமே ஜிகே நாயுடு மேம்பாலம் என்று தங்கள் இனத்தவரின் சாதிப்பெயரை முன்னிபலப்படுத்துவது எந்தவகையான சமூகநீதி? எல்லோரும் இனத்தூய்மைவாதம் பேசும் போது சாதிகளை முன்னிறுத்தும் போது சீமான் மட்டும் இனத்தூய்மைவாதம் பேசுகிறார் என்று எப்படிக் கூறமுடியும்.பிஸேபின் B ரீம் திமுகவின் B ரீம் என்று ஒன்றுக்கொன்று முரணாகப் பேசுவதும் வாக்குக்குக்கு காசு கொடுக்காமல் அரசியல் கட்சி நடத்துபவர் காசுவாங்கி விட்டார் . திமுகவிடம் காசுவாங்கி விட்டார் பிஜேபியிடம் காசு வாங்கி விட்டார் என்று ஆதாரம் இல்லாமல் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? சீமான் ஏன் ஒழித்து காசு வாங்க வேண்டும் நேடியாக கூட்டணி பேரம் நடத்தினால் காசும் வரும் தேர்தல் செலவுகளையும் அவர்களே கவனிப்பார்கள்.சீமான் கட்சியினருக்கும் சட்டசபையில் பாராளுமன்றத்திற்குள் துழைவதற்கும் இலகுவாக இருக்கும்.
  2. நான் சீமானின் அனைத்துக்கருத்துக்களையும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில்லை. சீமான் மீது சில விடயங்களில் முரண்பாடு உண்டு.முன்ஆயத்தம் இன்றி தினமும் பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளும் போது சில பத்திரிகையாளர்களின் விசமத்தனமான கருத்துக்களுக்கு பதலளிக்கப் போய் சிக்கலில் மாட்டுப்படுவார். நான் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் மிகத்தெளிவானது தமிழ்த்தேசியத்தை நீர்த்துப் போகமால் அடுத்த சந்ததிக்கு கடத்துகிறார்.அதுவும் ஒரு வெகு ஜன அரசியல் இயக்கமாய் கட்டமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். சீமானுக்கு முதல் அரசியல் கட்சி தொடங்கியவர்கள் ஒருசிலரைத்தவிர எல்லோரும் தங்கள் கட்சியின் பெயரில் திராவிடத்தை சேரத்து விடுவார்கள். நாம்தமிழர்கட்சி உருவாகிய பின்பு யாரும் திராவிடத்தை தமது கட்சிப்பெயரில் சேர்ப்பது கிடையாது.அந்த அளவுக்கு தமிழத்தேசியத்தின் எழுச்சி அவர்களை அச்சுறுத்துகிறது.விஜய் கூட கட்சிப்பெயரில் திராவிடத்தைச் சேர்க்காமல் கொள்கையில் திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் சேர்த்திருக்கிறார். இது ஒரு முரண்நகையாக இருந்த போதிலும் அவருக்கு மலையாள கன்னட தெலுங்கு அரசிகர்கள் கணிசமான அளவு இப்பதால் அந்தவாக்குகளைத் தக்க வைக்கவே திராவிடத் தேசியததையும் தூக்கிப் பிடிக்கிறார்.இதற்கு முதல் ஆதித்தனார் மாபொசி போன்றவர்கள் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து அதில் வெற்றி காணமுடியாமல் திராவிடத்துக்குள் கரைந்து போனார்கள். வெற்றி என்பது சட்டசபை உறுப்பினர்களையோ பாரளுமன்ற உறுப்பினர்களையோ பெற்று விடுவது மட்டுமல்ல ஒரு பெரிய சனத்திரளை ஒரு சித்தாந்தத்தை நோக்கி அணிதிரள வைப்பது. அதில் சீமான்தனித்துவமாகச் செயற்படுகிறார்.மற்றவர்களின் சித்ததாந்ததில் தனித்தும் இல்லாத கூட்டுக்கலவையாக இருக்கிறது. ஒருகாலத்தில் இந்தியாவின் எதிர்க்கட்சியாக இருந்த கம்னியூஸட்டுகள் அப்போது சித்தாந்ததில் உறுதியாக இருந்தார்கள். இப்போது எல்லாவற்றையும் கைவிட்டு கூட்டுக்கலவையாகி திமுகவுக்கும் காங்கரசுக்கும் முரட்டு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.முன்பு ஜனதா தளம் பல கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரசுக்கு எதிராக கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது. பலதரப்பட்டமக்களின் பிரதிநிதிகள் அந்த ஆட்சியில் பங்கு பெற வசதியாக இருந்தது.இப்போது அந்த இடத்தை பாஜக பிடித்து விட்டது.
  3. பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்.காங்கிரஸ் ஆட்சியில அதுவும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் ஆட்சியிலதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. திமுக பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்து மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்ததது. கடந்த பொதுத்தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆதரவு கொடுத்தும் பெரும்பான்மை போதாவிட்டால் திமுக காங்கிரசைக் கழட்டி விட்டு பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆட்சிக்கு முண்டு கொடுத்திருக்கும்.ஒரு ஈழத்தமிழனாக காங்கிரசும் திமுகவும் சேர்ந்து எம்மினத்தைக் கருவறுத்த தார்மீகக் கோபம் எனக்கு இருப்பதில் தார்மீக நியாயம் இருக்கிறது.அந்த அளவுக்கு பாஜகவோ அதிமுகவோ ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எம்ஜியார் புலிகளுக்கு பெருந்தொகைப் பணம் கொடுத்து போராட்டத்துக்கு உதவினார்.ஜெயலலிதா ஆரம்பத்தில் புலிகளுக்கு எதிராக பேசியிருந்தாலும் கடைசிகாலங்களில் தமிழக சட்டசபையில் தமிழ்ஈழத்துக்கான சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீரம்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.ஆறரைக்கோடி தமிழ்மக்களின் சார்பான முக்கிய தீர்மானம் அது.அந்தவகையில் அதுமட்டுமன்றி அதிமுகவில் எப்போதும் புதிய முகங்கள் அமைச்சர்களாவும் சட்டசபை உறுப்பினர்களகாவும் ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒப்பீட்டு அளவில் அதி கூடிய எண்ணிக்கையில் தமிழர்களளுக்கு அந்த வாயப்பளிக்கப்பட்டது. சாதராண கிளைக்கழக செயலாளராக இருந்த தமிழரான எடப்பாடி முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.திமுகவில் இது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு விடயம் இதுஇதலைமப்பதவி கருணநிதி குடும்பத்திடம் இருக்க அமைச்சர்களாக ஒரே முகங்கள் மீண்டும் மீண்டும் இருப்பார்கள் அவர்களிடமிருந்து அவர்களின் வாரிசுகளுக்கு அந்தப்பதவிகள் தொடரும். பெரும்பாலானவர்கள் தெலுங்கு வம்சாவழியினராக இருப்பார்கள்.சிறுபான்மை வாக்குகளைக் கவர்வதற்காக ஆ இராசா >திருமாவளவன்போன்றவர்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பார்கள். திருமாவுக்கு பிளாஸ்ரிக் கதிரை கொடுக்குமளவுக்குத்தான் அவர்களின் சமூகநீதி இருக்கிறது.ஜெயலலிதா அதிமுக உறுப்பினர்கள் சிலர் ப. தனபால்அவர்களைக்கெளரவக் குறைவாக நடத்தியதைக் கேள்விப்பட்டு அவரை சபாநாயகராக்கி அவர் வரும்போது முதல்வர உட்hட அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் பெறுப்பைக் கொடுத்தார்.
  4. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் கொள்கை எதிரியை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்படும்.காரித்துப்பினால் துடைச்சுக் கிட்டு அரசியலில் இதெல்லாம் சாதரணம்ப்பா என்று அள்ளி விட்டுப் போகவேண்டியதுதான்எல்லோரும் போலி தவெகதான் அசல்.
  5. https://www.facebook.com/share/p/1ZR8ABCqth/?mibextid=wwXIfrமிஸ்டர் வேம்பு, சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனம் உங்களிடம் இருக்கிறது. உலகம் முழுவதும் 180 நாடுகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருக்கு நீங்கள் நேரடியாக வேலை வாய்ப்பு கொடுத்து வருகிறீர்கள். இவ்வளவு வலிமையும் வெற்றியும் படைத்த நீங்கள் சிலிக்கான் வேலியின் உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் அமர்ந்து உலகத்தை ஆட்சி செய்திருக்கலாம், அல்லது சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பல் அடுக்கு கட்டிடங்களின் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து உங்களது நிறுவனங்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் விட்டு, ஏன் தென்காசி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான மத்தளம்பாறையில் ஏ.சி கூட இல்லாத அறையில் அமர்ந்திருக்கிறீர்கள்? அதற்கு மிஸ்டர் வேம்பு சிரித்தபடி சொன்னார்: “இந்தியாவின் கிராமங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான படித்த, திறமை வாய்ந்த இளைஞர்கள் பசியோடு, வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தான் நாட்டின் உண்மையான அறிவாற்றல். அந்தச் சிந்தனை சக்தியை, அந்த பயன்படுத்தப்படாத பிரஸ் மூளையை, அந்த நுண்ணறிவை, நகரங்களின் குரல் சத்தத்துக்குள் புதைத்து விடாமல், மண்ணின் வாசனையோடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அந்த வயல்களின் நடுவே, அந்த மலைகளின் நிழலில் அமர்ந்திருக்கிறேன், அங்கிருந்துதான் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கையில்.” I believe that Sanatana Dharma and Brahminical culture are the main reasons for his humble nature.
  6. இந்தக் கூட்டணி அமைந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்பலாம். இந்தக் கூட்டணியை நான் வரவேற்கிறேன்.திமுகவினதும் குடும்ப ஆட்சி துடைத்தழிக்கப்பட வேண்டும்.விஜைக்கும் இப்போது இருக்கும் நெருக்கடியில் இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.(அப்போதும் நாம் தமிழர்கட்சிதான் எனது தெரிவாக இருக்கும். தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப் போகாமல் வைத்திருப்பதற்கு அந்தக்கட்சி ஒன்று மட்டும்தான் தமிழ்நாட்டில் செயற்பாட்டில் இருக்கிறது.)
  7. சரியான கேள்வி?பொன்சேகாவைப் புனிதப்படுத்தியவர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர்தான்.
  8. சென்னையில் கடந்த 2017-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்குள்ளான தஷ்வந்த்தை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. நான் எங்கே அப்படி எழுதியிருக்கிறேன்.வழக்கை ரத்துச்செய்யும்படி வழக்குப் போட்டார்
  9. யாழ்கள திராவிடியா ஊடாக செய்தியாளர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கோர்ட் உத்ததரவுப்படி இது சம்பந்தமாக திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் வாய்ப்ப்பூட்டுப்பட்டுள்ளதால் அவர்களின் ஆதரவாளர்கள் இப்படியான தளங்களில் எழுதுவதை பொருட்படுத்தத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் இந்தத் உத்தரவு சீமானுக்கு வெற்றி. திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் தோல்வி.
  10. திராவிடியா ஊடகங்களுக்கு ஊடக அறம் கிடையாது. அவர்கள் விரும்பும் செய்தி கிடைக்காவிடில் அவர்கள் விரும்பியவாறு செய்திக்கு தலைப்பிடுவார்கள். தற்போதைய ஊடகங்களின் தலைப்பை வைத்து செய்தியைக்கணிப்பிட முடியாது.
  11. திராவிடியா ஊடகங்களின் யாழ்கள நிருபர்கள் அந்த ஊடகங்களின் செய்தியை அப்படியே காவித்திரிவது வியப்புக்குரியது அல்ல.
  12. புதிய தலைமுறை..இல்லை+ புதிய தலைவலிக்கான பதிவு. சீமானுக்கானதல்ல…. ------------------------------ எங்களை மொடக்கி விட்டார்கள், முடக்கி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்த புதிய தலைமுறைக்கு ஆதரவாக, திமுக அரசுக்கு எதிராக முதல் குரல் சீமானிடம் இருந்துதான் வந்தது. சமூக வலைதளங்களில் அதிகம் எழுதியது தமிழ்த் தேசியர்கள்தான். அந்த புதிய தலைமுறை, திமுக அரசிடம் நல்ல பெயர் வாங்கி, அரசு கேபிளில் நீக்கப்பட்ட சேனலை பழையபடி கொண்டுவந்து விட ஏதாவது சமரசம் செய்வது நியாயமே. அதற்காக ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பையே திரித்து, அதை சீமானுக்கு எதிரான பொய் செய்தியாக்கி, அதன் மூலம் ஸ்டாலின் அவர்களை குஷி படுத்தி விடலாம் என்ற அரசியல் இருக்கே அதுதான் கேவலமான ஒன்று. நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இறுதியாக, ’சீமான் மன்னிப்பு கேட்டார். வழக்கு முடித்து வைக்கப்பட்டது’ என்றே செய்தி வெளியிட்டது புதிய தலைவலி. தவிர நடிகை நிவராரணத் தொகை கேட்பதாகவும் கூறியது. பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும். சீமான் பக்கம்தான் தவறு. இதோ மன்னிப்பு கேட்டுவிட்டு சரணடைந்து விட்டார். அதனால் அந்த நடிகை, வழக்கை திரும்பப் பெறுவதாக சொன்னார். அதனால் உச்ச நீதிமன்றம் இப்படியாக முடித்து வைத்து விட்டது என்றுதானே தோன்றும்?. ஆனால் உண்மை என்ன? நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது, நம்பிக்கை மோசடி செய்தார் என புகார் அளித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டு-தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான்தான் உயர் நீதிமன்றத்தை நாடினார். உயர்நீதிமன்றம் எட்டு வார காலத்தில் விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் சீமான். வழக்கு விசாரணையில் போது, ‘சீமானிடம் முன்னாள் நடிகை தான் நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்டால் ..சீமானும் அவர் பொதுவெளியில் பேசிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்க சொல்கிறோம் என்று பதிவு செய்திருந்தார்கள். அதை அடுத்துதான், இரண்டு தரப்பையுமே ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டால் முடித்து வைப்பதாக கூறியது உச்ச நீதிமன்றம்.(இந்த மன்னிப்பும் கூட ஒருவருக்கொருவர் அநாகரீகமாக பேசி-பேட்டி கொடுத்தற்காகதான்) தொடர்ந்து தன்னால் இந்த வழக்கை நடத்த முடியாது என நடிகை தரப்பிலும் கூறப்பட்டிருந்தது. அதையொட்டி இரண்டு தரப்பு ஒருவருக்கொருவர் மன்னிப்பு அபிடவிட்டில் கொடுத்திருந்தார்கள். அதை ஒட்டியே இந்த பிரதான குற்றச்சாட்டு வழக்கில் ’ போதிய முகாந்திரம் இல்லை’ என தள்ளுபடி செய்து முடித்து வைத்ததுள்ளது உச்ச நீதிமன்றம். இதில் கூடுதலாக எனக்கு பெற்றோர் இல்லை. உடல் நலிவுற்றிருக்கும் சகோதிரியை கவனித்து வருகிறேன். அதனால் நிவாரணத் தொகையை (கருணை அடிப்படையில்) பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் நடிகை. அவ்வளவுதான். அதையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால் இந்த திமுக ஆதரவு பெற வேண்டிய ஊடகங்கள், சீமானை மட்டுமே மன்னிப்பு கேட்கச் சொன்னதாக தொடர் செய்தியை போட்டு வருவது-எந்த வகையில் ஊடக தர்மம் ஆகும்? அதன் ஆசிரியர்கள் என்ன நீதிமன்ற உத்தரவுகளை படிக்கத் தொரியாதவர்களா என்ன? பிறகு ஏன் இப்படி செய்கிறார்கள்….என்றால்… அப்படித்தான். அவர்கள் அப்படித்தான். புதிய தலைமுறை-புதிய தலைவலியாகி மாறிக் கொண்டிருக்கின்றது…பாவம். பா.ஏகலைவன். 08.10.2025
  13. நடிகை தரப்பில் என்ன மாதிரியான மன்னிப்புக் கேட்கப்பட்டது?சுPமான் நடிகையை விபச்சாரி என்று பேசியத்காக மன்னிப்புக் கோரினார். ஆனால்பாதிக்கப்பட்டதாக வழக்கப்போட்டு வாபஸ்வாங்கி வழக்குப் போட்டு வாபஸ்வாங்கி விளையாடும் நடிகை எதற்காக மன்னிப்புக் கோரினார்.?தான் பொய்ப்புகார் அளித்ததாகவா?
  14. வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்!!!முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
  15. சுமத்திரன் தானாக பதவிவிலக வேண்டும். தமிழரசுக்கட்சியில' இருந்து சுமத்தரனால் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெpரிவு செய்யப்பட வேண்டும். சுமத்திரன் விலக மறுத்தால் தமிழ்மக்கள் வெகுஜனப்புரட்சி செய்து சுமத்தரனை ஓட ஓட விரட்ட வேண்டும். கோத்தபாயவைப் போல் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று அரசியலை விட்டே அவர் ஒதுங்க வேண்டும்.
  16. முடிந்தளவு என்றால்யாழ்களத்தில் எழுதுவதற்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா?ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே!அப்படியா?ஒருகருத்தை எதிர்பதாயின் அந்தக்கருத்துக்களை செவிமடுக்க வேண்டும் அதன்பின் அதன்குறைநிறைகளை விமர்சிக்க வேண்டும்'.அதை விடுத்து பிராமனன் என்றால் இப்படித்தான் என்று சங்கி பட்டம் கட்டி விட்டு ஒதுக்கக் கூடாது. கமலும் பிராமணர்தான் ஆனால் கடவுள்நம்பிக்கை அற்றவர்.ஆனால் எடுக்கும் படங்கள் எல்லாவற்றிலும் கடவுள்பற்றிய காட்சிகளை வைத்து விடுவார்.இவர்பற்றி மவண்ணன் ஒரு உரை ஆற்றி இருக்கின்றார் கேட்டுப்பாருங்கள். https://www.youtube.com/watch?v=YkyXQ8tNzZw
  17. சுவி ஐயாவின் பெறாமகன் சீக்கிம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
  18. 14 வயது நல்லது கெட்டதைச்சீர்தூக்கிப் பார்க்கத் தெரியாத வயது.மேலும் குறித்த மாணவி கடந்த ஒருவருட காலம்தான் குறித்த பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படிக்கிறார்.இயல்பாக பழகுவதற்கு இந்தக் காலம் போதுமானதாக இல்லீமல் இருக்கலாம்.பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்து குறித்த மாணவி முதலிடம் பெற்றது நெடுங்காலம் ஒன்றாகப் பழகிய மாணவிகளிடத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையை தோற்றுவித்திருக்கலாம்.அதனால் அவர்கள் அந்த மாணவியை புறமொதுக்கி இருக்கலாம்.காலப்போக்கில் அவர்கள் சேர்ந்து நல்ல நணபர்களாக கூடிய வாய்ப்பு இருந்தது.தனிமைப்படுத்தப்பட்டதில் அந்த மாணவி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.காலம் காயங்களை ஆற்றியிருக்கும்.மாணவி அவரசரப்பட்டு விட்டார்.காரணம் வயது.யார்நம்மை புறக்கணித்தார்களோ அவர்கள் முன்னால் புறக்கணிக்க முடியாத சக்தியாக வளர்ச்சியடைந்து நிற்பதே தேவையானது.தேவையானது.உளவளக்கல்வி.விளையாட்டு உளவளத்தை சீராக்கும் என்பார்கள்.ஆனால் அந்த விளையாட்டே இங்கு வினையாகி இருக்கிறது.தோல்வி என்றும்நிலையானதல்ல என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.