Everything posted by புலவர்
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம் https://www.vikatan.com/கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாட...https://x.com/im_inba1/status/1972704039591878854?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
https://www.facebook.com/share/p/1GxMJAgg8r/?mibextid=wwXIfr• #தமிழ்நாட்டின் இளைய தலைமுறை சினிமா நடிகர்கள் மீதான மோகத்தில், எப்படி தலைகீழாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது என்பற்கான உதாரணம்தான் கரூர் நிகழ்விற்கு பின்னரான நிகழ்வுகள். சரி. திமுக சதி வேலைகள் செய்தது. சரி. உயிரிழப்புகளை திமுகதான் திட்டமிட்டு நடத்தியது. சரி. பெரும் அநீதி சதி திட்டத்தின் ஊடாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. (இது தவெக அதனது பெரும் தவறை மறைப்பதற்காக உருவாக்கும் narrative என்பது எனது பார்வை) • #அப்படியானால் என்ன செய்யவேண்டும்? தவெகவின் தலைவர் தெருவிற்கு இறங்கி நீதி கேட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் தவெக ஆதரவாளர்கள் சொல்லும் சகல காரணங்களையும் விஜய் அவரது சொந்த வாயால் சொல்லிருக்கவேண்டும். சம்பவம் நடந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். இந்த புள்ளியில் இவர் எப்படி கூமுட்டை ஆனார் என்பதை தனியாக விவரிக்கிறேன். மூன்று நாட்களாக வெளியே வரவில்லை. பெரும் அசம்பாவிதம் நடந்த பிறகு தாழ்ப்பாளை போட்டு உள்ளுக்குள் ஒருவர் இருக்கிறார். இதற்கு ரைட் அப்புகள். “தலைவர் சோகத்தில் 3 நாட்களாக தண்ணீர் மட்டுமே குடித்தார்.” “தலைவா எழுந்து வா! “ • #டேய்! தலைவன் என்பவன் தலைமை தாங்குபவன். அவன் களத்தில் இருக்க வேண்டும். தலைவன் என்பவன் முடிவுகளை தொலைநோக்கு பார்வையில் துரிதமாக எடுப்பவன். மன உறுதியில் மற்றவரை விட கல்லாய் இருப்பவன். தமிழ்நாட்டில் உட்டாலக்கடியாய் நடக்கிறது. எட்டு கோடி மக்களை ஆள கெஞ்சி வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறார்கள். இதை சொல்வது யார்? படிக்காத பாமரனோ, கிராமத்தானோ அல்ல. சிலிக்கான் பள்ளத்தாக்கில் வேலை எடுக்கும் திறனுள்ள இளைய தலைமுறை. அந்தளவிற்கு நடிகர்கள் மீதான போதை தலைகீழாய் சிந்திக்கும் திறனை தந்திருக்கிறது. அநீதி தானே. அதை நீதானே தட்டிக்கேட்க வேண்டும். இன்னும் சில நாள் கழித்து அழும் முகத்துடன் பாவமாக உரையாற்றுவார். நெஞ்சை பிழிய வைக்கும் கதையுடன் வீட்டில் தாழ்ப்பாளை போட்டு இருந்ததற்கான காரணத்தை சொல்வார். அப்போதும் இந்த தலைமுறை “தலைவா! உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரலாமா” என இரண்டு ரைட்அப் எழுதும். இதுவரை சொன்னது திமுக சதி வேலை செய்திருந்தால். • #இனிமேல் சொல்வது“விஜய்தான் இதில் பெரும் குற்றவாளி” என்ற எனது பார்வையில். இந்த சனிக்கிழமை கூட்டம் என்பது விஜய் அவரது செல்வாக்கை காட்டுவதற்காக, அணு அணுவாக வடிவமைக்கப்பட்டது. இதில் Health and Safety Regulations என்பதை முற்றிலும் இரண்டாம் பட்சமாகவே அணுகியிருக்கிறார்கள். சில நாடுகளில் Public Order and Safety Protocols என அழைப்பார்கள். இவர்கள் கூட்டத்தை அதிகமாக்கி காட்ட பயன்படுத்திய உத்திகளை நான் விவரிக்க கூட தேவையில்லை. “எப்படி அதிகமாக கூட்டத்தை சேர்ப்பது, எப்படி அதனை அதிக நேரம் தக்கவைத்திருப்பது” என்பதுதான் அவர்களது “பிரதான நோக்கமாக” ஆரம்பத்திலிருந்து இருந்திருக்கிறது. சகல வழிகளிலும் அவர்களது பிரதான நோக்கத்தை அடைய பாடுபட்டிருக்கிறார்கள். கள தகவல்களை எடுத்து பார்த்தாலே தெரியும். திமுக சதி வேலை செய்தது என சொல்பவர்கூட இதனை மறுக்கமுடியாது. விஜய் இந்த “பிரதான நோக்கத்தை” அடைய எல்லாவகையான உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறார். திமுக சதி செய்திருந்தாலும் கூட, தவெக முறையான Public Order and Safety Protocols பின்பற்றியிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது என்பதுதான் இதிலுள்ள bottom line. உண்மையில் மேற்குலகில் ஒருவர் இதே உத்திகளை பயன்படுத்தி, 40 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்திருந்தால் குறைந்தது 20 வருட சிறை தண்டனை கிடைத்திருக்கும். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பிறந்ததால், விஜய் தப்பித்திருக்கிறார். விஜய் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனால் கூட, திமுக சட்டத்தை பாய்ச்சாது. அது திமுகவிற்கு எதிராக திரும்பிவிடும் என்பதை அது அறியும். முழு அனுதாபத்தையும் விஜய் அறுவடை செய்துவிடுவார். க.ஜெயகாந்த்
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
அதெப்படி செந்தில்பாலாஜி சரியான நேரத்துக்கு வந்தாரு... அதெப்படி விஜயபாஸ்கர் அங்க வந்தாரு, அதெப்படி முதலமைச்சர் இதுக்கு மட்டும் உடனே நேரடியா கிளம்பிட்டாரு, அதெப்படி அன்பில் மகேஷ், MLA ங்க எல்லாம் அங்க வந்தாங்க, இப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்க சரி... அவங்க வந்து தான் ஆகணும் அதுக்கு தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சி இருக்கு, அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகள் அங்க இருந்து தான் ஆகணும் அது அவங்க கடமை, அது தெரியாம background sound போட்டு எடிட்டிங் கட் போட்டு, பேசுற நீ களத்துக்கு வந்தியா... முதலமைச்சர் ஆகணும்ன்னு திரியுற விஜய்கிட்ட போய் சொல்லுங்க அண்ணா இப்படி ஒரு அசம்பாவிதம் ஆகி போச்சு நம்ம கூட்டத்துக்கு வந்து தான் இது எதிர்க்கட்சி சதியா கூட இருக்கலாம் நீங்க இங்கேயே இருங்க திருச்சில தங்குங்க, மக்களை போய் நம்ம நிர்வாகிகளை பாக்க்க் சொல்லுங்க, மாவட்ட செயலாளர்கள் கிட்ட போய் கலநிலவரம் என்னென்ன்னு தெறிஞ்சி கிட்டு நேரடியா போக வேண்டாம் atleast video call மூலமாவது ஆறுதல் சொல்லுங்க, நான் அங்க வந்தா இன்னும் பெரிய நெருக்கடி ஆகும் ஆனா உங்க கூட தான் நான் இருக்கேன், பயப்படாதீங்க எல்லாரும் சேர்த்து இந்த துயரத்தில இருந்து வெளியே வந்துரலாம்ன்னு பேச சொல்லி சொல்லி இருக்கலாம்ல..... Atleast புறமுதுகு காட்டி ஓடி போகும் போதாச்சும் செய்தியாளர்களை பார்த்து ஒரு வருத்தத துயரத்த சொல்ல கூட தயாரா இல்லாத ஒரு தலைவன் 🤦♀️🤦♀️
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
https://www.facebook.com/reel/813512611061830 ~ படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டிங்களா ? * என்ன கேட்டிங்களா ? ~ நீங்க அழாதீங்க, மாட்டிப்போம்னு சொன்னேன் கேட்டிங்களா சோசியல் மீடியா PEAK ல இருக்க இந்த காலத்திலயே இவனுங்க இந்த அளவுக்கு அட்டூழியம் பண்றானுங்க! அந்த காலத்துல எம்.ஜி.ஆர், என்னவெல்லாம் பண்ணிருப்பானுங்க ! அப்போ திமுகவை சரிக்கு சமமா களத்துல எதிர்த்து அவங்களை முடக்கி போட்ட துணிச்சலான ஒரே கட்சி அதிமுக தான்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
https://www.facebook.com/share/p/1FbGnQj4xg/?mibextid=wwXIfrகரூர் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நெரிசல் படுகொலைகள் வெளிப்படுத்திய தமிழக அரசு மருத்துவத் துறையின் அவலட்சணம் தமிழ்நாடு மருத்துவத் துறையின் அவலட்சணத்தை மனம் நொந்து எழுதியிருக்கும் இலங்கை மருத்துவர். ***** கரூர் கூட்டநெரிசல் இறப்பும் மருத்துவராகச் சில ஏமாற்றங்களும் இலங்கை மருத்துவர் என்னும் வகையில் காணொளிக் காட்சிகள் வாயிலாக நடந்த சம்பவங்களைப் பார்த்தபோது, தமிழ்நாட்டு அரச மருத்துவமனைகளின் தராதரம் குறித்து ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. 1) அம்புலன்ஸ்களின் உள்ளே காணொளிகள் எடுப்பது நோயாளியின் உரிமை மீறலாகும். இலங்கையில் இதுவரை காலமும் அம்புலன்ஸ்சுக்குள் இருந்து அம்புலன்ஸ் ஊழியர்களே காணொளி எடுத்து வெளியிட்ட வரலாறு இல்லை. அப்படி நடந்தால், உடனடியாக அந்த உரிமமே இரத்துசெய்யும் பொறிமுறை இலங்கையில் உண்டு. ஆனால்,நோயாளிகளின் உரிமை குறித்து நோயாளிகளுக்குச் சேவை செய்யும் பொறிமுறையில் உள்ளவர்களுக்கே எந்தவிதமான அடிப்ப்டைப் பயிற்சியும் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகின்றது. 2) இலங்கையில் அம்புலன்ஸ்களில் எந்தவிதமாக கட்சிக்கொடிகளோ, கட்சி பனர்களோ, கட்சி போஸ்டர்களோ ஒட்ட முடியாது. எந்தவிதமாக விளம்பரமும் செய்யமுடியாது. ஆனால், தமிழ்நாட்டில் அம்புலன்ஸ்கள் கட்சிக்கொடிகளுடனும் போஸ்டர்களுடனும் பனர்களுடனும் காவற்றுறைக்கு முன்னாலே நிற்க முடிகின்றது. மருத்துவப்பணியில் உலகமகா கேடு இதுவாகவேயிருக்கும். 3) ஒரு மனித உடல் எந்தவித மூச்சும் பேச்சும் அசைவும் இல்லாமல் இருந்தாலும், ஒரு மருத்துவர் அந்த உடலைப் பரிசோதனை செய்து, அந்த உடலில் உயிர் இல்லை என்பதனை உறுதிசெய்யும் வரை, அந்த மனித உடல் இறந்த உடலாகக் கொள்ளப்படமுடியாது. அங்ஙனம் கொள்ளப்படுவதும் சட்டவிரோதம். எனவே, அப்படிப்பட்ட உடலை, உயிருள்ள உடலாகவே கொள்ளப்படும். எனவே, அதனை UNRESPONSIVE STATE என்பர். உடலுக்கு முதலுதவிகள் செய்யவேண்டியது துறைசார் ஊழியர்களின் கடமையாகும். இங்கு துறைசார் ஊழியர்கள் என்போர் காவலர்,இராணுவத்தார்,தீயணைப்புப் படையினர் என்று அரச பாதுகாப்புத் துறையினரும் மருத்துவ சிற்றூழியர் முதலாயின ஊழியர் அனைவரும் அடக்கம். அதுவும், அம்புலன்ஸ்சில் வரும் உதவியாளருக்கு இப்பயிற்சி இருத்தல் அவசியம்.குறைந்தபட்சம் ஒரு FACEMASK மூலம் ஒக்சிஜன் கொடுப்பதேனும் அவசியம். 4) அம்புலன்ஸ் என்பது வெறுமனே நோயாளியைக் காவிக்கொண்டோடும் ஊர்தியல்ல! அதில் குறைந்தபட்சம் ஒரு ஒக்சிஜன் சிலிண்டர் ஏனும் இருத்தல் வேண்டும்.ஆனால், இந்தச் சம்பவத்தில், ஒரு குழந்தை அம்புலன்ஸ்சுக்குள் அம்புலன்ஸ் கட்டிலில் கிடத்திவிடப்பட்டுள்ளது. முன்னுக்கு ஓட்டுநருக்கு அருகில் ஒரு காவற்றுறை அதிகாரி உள்ளார். ஒரு அம்புலன்ஸ்சு ஊழியர் குழந்தையின் அருகில் இருந்து ''குழந்தை குழந்தை'' என்று கத்திக்கொண்டு இருக்கின்றார். யாரோவொருவர் காணொளி எடுக்கின்றார். யாரும் அந்தக் குழந்தைக்கு CPR/ சிபிஆர் (CARDIOPULMONARY RESUSCITATION) எனப்படும் நெஞ்சினை அழுத்தும் செயல்முறையினையோ, அல்லது குறைந்தபட்சம் ஒரு ஒக்சிஜனையோ கொடுக்கவில்லை. இதயமே செயலிழந்திருந்தாலும், நெஞ்சு அழுத்தும் செயன்முறையையும் ஒக்சிஜனையும் கொடுத்துக் கொண்டிருந்தால் மருத்துவர்களால் அக்குழந்தையைக் காப்பாற்றக் கூடியதாகவிருக்கும். ஆனால், இங்கு அம்புலன்ஸ் உதவியாளருக்கே இதுபற்றிய அறிவு இல்லை. காவற்றுறை அதிகாரிக்கு இல்லை. இலங்கையில் காவற்றுறை அதிகாரிகள் இராணுவத்தார் தீயணைப்புப் படையினர் என்று பாதுபாப்பு உத்தியோகத்தர்களுக்கு இவை பற்றிய பயிற்சிகளை இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் கொடுத்துக் கொண்டிருப்பதுடன், பாடசாலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் செயற்றிட்டத்தையும் இப்போது இலங்கை அரசாங்கம் சுகாதாரத் திணைக்களத்தினூடாக முன்னெடுத்து வருகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தக் கரூர் அனர்த்தத்தில் வெளிப்படையாகத் தெரிவது, தமிழ்நாட்டு அரச மருத்துவத்துறை இலங்கை அரசாங்க மருத்துவத்துறையோடு ஒப்பிட்டால் ''வெறும் கோது'' என்பதேயாகும்! 5) மருத்துவமனையில் வைத்து ஒரு காவற்றுறை அதிகாரி(பெண்மணி) பிள்ளையொன்றுக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுப்பதும் கைகளைப் பிடித்துத் தேய்ப்பதுமாகவே இருந்தார். இதனைப் பலரும் பகிர்ந்து பாராட்டினர். ஆனால், ஒரு மருத்துவராக இக்காட்சியைக் கண்டதும் கவலையே ஏற்பட்டது.தமிழ்நாட்டுச் சினிமாத்துறை போதித்த அவசர சிகிச்சை இதுவேயாகும். தமிழ்நாட்டு அரசும் தமிழ்சினிமாத்துறையைக் கொண்டாடுவதும் அச்சினிமாக்களில் காட்டுவதே முதலுதவிப் பயிற்சி என்றும் பேக்காட்டும் அரசாகும். நெஞ்சினை அழுத்தும் சிபிஆர்/CPR செயன்முறை இல்லாது வெறுமனே நுரையீலுரக்குக் (Lungs) காற்றுக்கொடுப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதோடு, பிரயோசனமேயில்லாத இச்செயன்முறையால் குறித்த காவற்றுறை அதிகாரிக்கே தேவையில்லாத வாய்மூலம் பரவும் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறான செயல் மருத்துவ விரோதமாகும்.முறையான ஒக்சிஜன் கொடுக்கும் வசதி ஏற்படுத்தும் வரை நெஞ்சினை அழுத்தும் சிபிஆர் செயன்முறையைச் செய்துகொண்டிருந்தாலே போதும் என்பதுதான் மருத்துவ சட்டவிதி. மருத்துவ விஞ்ஞானரீதியான் ஆய்வுகளாலும் ஏற்படுத்தப்பட்ட முடிவும் அதுவேயாகும். எனவே, குறித்த அனர்த்தத்தில் UNRESPONSIVE STATE (பேச்சு மூச்சு இல்லாத நிலைக்கு)ப் போனவர்களில் பலர் ஒழுங்கான அனர்த்த முகாமைத்துவ மருத்துவப் பயிற்சி அரச மருத்துவத்துறையில் இல்லாமையினால் இறந்திருக்கக்கூடிய வாய்ப்பும் காணொளிகளால் உறுதியாகின்றது. அரச மருத்துவத்துறையின் தராதரமும் இறப்புவீதத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது என்பதனை காணொளிகளின் ஊடாகவே ஊகிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் அரச இயந்திரம் உருப்படியான அனர்த்த முகாமைத்துவப் பயிற்சிகளைக் காவற்றுறை அதிகாரிகளுக்கும் அம்புலன்ஸ் உதவியாளர்களுக்கும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் கொடுக்கவில்லை என்பது காணொளிகள் தெளிவாகவே தெரிகின்றது. 6) காணொளிகளின்படி, அம்புலன்ஸ்சில் இருந்து கொண்டுவரும் உடல்களை அப்படியே கொண்டுவந்து மருத்துவமனைக் கட்டில்களில் கிடத்துகின்றனர். எந்தவொரு கட்டிலிலும் மொனிட்டர்கள்(MONITORS) இல்லை. உடலில் உள்ள ஒக்கிஜனின் அளவு ( Oxygen saturation), இதயத்துடிப்பு (Heart rate and rhythm ) ,நாடித்துடிப்பு (Pulse rate) என்பவற்றை ஒருசில வயர்களை உடலில் வெறுமனே இணைப்பதனாலேயே ஒருசில கணப்பொழுதில் அறியக்கூடிய டிவி போன்ற கருவியாகும். பொதுவாக அவசரசிகிச்சைப் பிரிவில் 10 கட்டில்களே இருந்தால் 10 மொனிட்டர்கள் இருக்கும். திடிரென ஏற்படும் பெரும் அனர்த்தங்களின்போது, மருத்துவமனையிலுள்ள ஏனைய விடுதிகளில்(wardக்களில்) பயன்பாட்டில் இல்லாத அல்லது அத்தியாவசியத்தேவையில்லாத மொனிட்டர்களை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இடமாற்றஞ் செய்துகொள்வர். இதுவெல்லாம் அனர்த்த முகாமைத்துவ (DISASTER MANAGEMENT) பயிற்சிகளினூடாகவும் மருத்துவமனைகளுக்குரிய உள்ளக சுற்றறிக்கைகள் (GUIDELINES) ஊடாகவும் ஊழியர் யாவருக்கும் காலத்திற்குக் காலம் மருத்துவ நிர்வாகம் புரிதலை ஏற்படுத்தி வைத்திருக்கும். ஆனால், அரச மருத்துவமனைகளில் கொண்டுவந்து கையளிக்கும்போது கட்டில்களில் வெறுமனே கிடத்துகின்றார்களேயொழிய, மருத்துவர் உடனடியாக வந்து பரிசோதனை செய்வதாகவோ- மொனிட்டர்கள் இருப்பதாகவோ- CPR/ சிபிஆர் (cardiorespiratory resuscitation) என்னும் நெஞ்சழுத்தும் செயன்முறையை தாதியரும் மருத்துவர்களும் செய்வதாகவோ காணமுடியவில்லை. 7) இலங்கையில் கொழும்பில் தேவாலய தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது, தேசிய மருத்துவமனைக்கு எந்தவொரு அரச மருத்துவரும் வந்து அவசர சிகிச்சைக்கு உதவலாம் என்று குறுஞ்செய்தி மருத்துவச் சங்கங்களினூடாகக் கொழும்பு வலயத்தினுள் உடனடியாகப் பரப்பப்பட்டது. உடனே, வெறும் அரை மணித்தியாலத்தில் தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும் அவசர சிகிச்சைப் பிரிவும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையிலும் மிதம்மிஞ்சி மருத்துவர் கூடி நிற்கும் இடமாக மாறியது. வரும் நோயாளிகளை (Triage method) தரம்பிரிக்கும் வேலையையே மருத்துவர்களில் ஒருகுழு நின்று செய்து கொண்டிருந்தது. உடல்கள் ஒக்சிஜனோடும் சிபிஆர் செய்தவாறுமே கொண்டுவந்து கையளித்தனர்.குறைந்தபட்சம் ஒக்சிஜனோடேனும் கொண்டுவருவதனை உறுதிசெய்திருந்தனர். இராணுவமும் காவற்றுறையும் இதில் தங்கள் அனர்த்த முகாமைத்துவப் புலமையை நன்கு வெளிப்படுத்தியிருந்தனர். மொனிட்டர் தட்டுப்பாடு, மருத்துவர் தட்டுப்பாடு, தாதியர் தட்டுப்பாடு என்று எதுவும் தென்படவில்லை.இலங்கை அவசர அனர்த்த முகாமைத்துவத்தில் ஆளணிப் பயிற்சியில் வெற்றிபெற்றிருந்தது.பொருளாதாரத்தில் நலிந்த நாடாயினும் இனவாதங்களால் சீரழிந்த நாடாயினும் இலங்கையில் அரச கல்வித்துறையும் அரச மருத்துவத்துறையும் தமிழ்நாட்டைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது என்பதனை இரண்டையும் அனுபவித்தவர்களுக்கு நன்றே விளங்கும். தமிழ்நாட்டில் ஏழைகளுக்குரியதாகவே அரச மருத்துவத்துறையும் கல்வித்துறையும் உள்ளது. இலங்கையில் பணக்காரர்களும் நாடும் இடமாகவே இலங்கை அரச மருத்துவத்துறையும் கல்வித்துறையும் உள்ளது.இலங்கையின் மருத்துவத்துறையில் குறைகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால், அடிப்படை மருத்துவ சேவை பல்லாயிரம் மடங்கு பாராட்டுக்குரியதாகவுள்ளது. திராவிட ஆட்சி என்றும் திராவிட மாடல் என்றும் தமிழ்நாட்டாரினைக் கிணற்றுத்தவளைபோல் ஆக்கி,கேவலமான இழிநிலையில் இருக்கும் அரச மருத்துவத்துறையையே அங்குள்ள ஏழைகள் ‘’இதுவேனும் கிடைந்துள்ளது'' என்று ஏற்றுக்கொள்ளும் அடிமை மனப்பான்மைக்குள் தள்ளி, ஏமாற்றுவைத்திருப்பதும் கண்கூடு. தமிழ்நாட்டை ஊழல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றித் தமிழரின் கைகளில் கொடுத்தால் மட்டுமே, தமிழ்நாடு கொஞ்சமாயினும் வளர்ச்சி அடையும். தமிழ்நாட்டை பீகாருடன் ஒப்பிடாமல், பக்கத்தில் உள்ள இலங்கையோடு ஒப்பிட்டால், திராவிட மாடல் ஆட்சியின் கேடு விளங்கும்! இங்ஙனம், இலங்கை அரச மருத்துவன்
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
விஜை அவரை நல்ல அரசியல் தலைவருக்குரிய ஆளுமையைக்காட்டவில்லை.தன்னைப்பார்க்க தன்கூட்டத்தில்தன்பேச்சைக்கேட்க வந்தவர்கள் 40 பேர்வரையில் இறந்து விட்டார்கள்.இதற்கு விஜய் எந்த பிரதிபலிப்பையும் காட்டாது வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்.இது ஆளும் திமுக வின் சதி என்று ஊடக சந்திப்பை நடத்தி இறந்த மக்களுக்காக அவரது வருத்ததைத் தெரிவித்து அரசியலில் புயலைக்கிளப்பி இருக்க வேண்டும்.விஜை சொல்லும்பொழுது அது ஊடக வெளிச்சம் பெறும்.மாறாக அடைக்கோழியைப்போல் கோழைத்தனமாக வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்.அடுத்த வாரமாவது வெளியே வருவாரா?அல்லது கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் இதுதான் சமயம் என்று முடங்கி விடுவாரா?
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'அரட்டை ' எனும் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் பலவும் சொந்தக் காலில் நிற்பது பற்றி அதிகம் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சேவையான WhatsApp இற்குப் பதிலாக அரட்டை எனும் செயலியினைப் ( Arattai App) பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். WhatsApp, Snapchat போன்ற செயலிகளைப் போன்றே அரட்டையும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சோகோ நிறுவனத்தால் ( Zoho corporation) உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது. இச் செயலியின் பெயர் தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன், 'அ' என்ற எழுத்தினை அடையாளமாகவும்கொண்டுள்ளது. நாமும் பயன்படுத்துவோமே! இச் செயலி வெற்றி பெற்றால் , அது ஒரு வகையில் தமிழின் வெற்றியாகவும் அமையும்.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
மாநில அரசு பத்து இலட்சம்.. விஜய் இருப்பது இலட்சம்... காங்கிரஸ் இரண்டு இலட்சம் மத்திய அரசு இரண்டு இலட்சம் ஏறத்தாழ உயிரிழந்த ஒருவருக்கு தலா முப்பத்தைந்து இலட்சம்... உசுரக் கொடுத்து பயிரை விளைவிக்கும் விவசாயி. பாம்பு கடிச்சு செத்தா இரண்டு இலட்சம்.. கரண்ட்ல மாட்டி செத்தா மூணு இலட்சம்... வனவிலங்க தாக்கி செத்தா ஐந்து இலட்சம்... வெளஞ்ச வெள்ளாமை வெள்ளத்தில் போனா ஏக்கருக்கு ஐயாயிரம் ரூபா.. இப்போ சொல்லுங்க நான் விவசாயம் செஞ்சு சாகவா?? இல்லை கள்ளச்சாராயம் குடித்து சாகவா??? இல்லை விஜயைப் பார்க்க போய் சாகவா? -✍️ #ஈஷ் படித்ததில் பிடித்தது.அப்பாவி விவசாயிகளும் மீனவர்களும் சாகும் பொழுது வேடிக்கை பார்க்கும் கட்சிகள் கொழுப்பில் புதிய அரசியல் நடிகனைப் பார்க்கப் போய் இறந்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.இது தேர்தல் நேரம் என்று பிண அரசியல் செய்கிறார்கள். https://x.com/tholarbalan/status/1972595305842614478?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A சமூக நீதிக்காவலர்கள் கிளம்பிவிட்டார்கள்.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
https://www.facebook.com/share/p/1CTeuhWX9i/?mibextid=wwXIfrஎல்லா மீட்டிங்க்கும் சொன்ன டைம்க்கு வராம, அவரோட ரசிகர்களை மணிக்கூர் கணக்குல காக்க வைப்பது, அந்த ஏரியா முழுக்க பொது மக்களுக்கு அசௌகரியம் கொடுப்பது, போலீஸையும் காத்திருக்க வைப்பது, விஜய்யோட பெரிய தப்பு. ஒவ்வொரு மீட்டிங்க்லயும் இத அவர் செய்வது வேணும்ன்னே செய்றார்னா அவர் சரி செய்ய வேண்டிய பெரிய குற்றம் இது. அவர் நேத்திக்கு சென்னைக்குப் புறப்பட்டது சரியான முடிவு. நிச்சயம் போலீஸ் அத insist பண்ணி இருப்பாங்க. அவரால அந்த சிச்சுவேஷன்ல எதுவுமே செஞ்சிருக்க முடியாது. சினிமா ஹீரோ மாதிரி வேன்ல இருந்து குதிச்சு கீழ வந்திருந்தா பிரச்னை இன்னும் பெருசாகி இருக்கும். அந்த எடத்துல இருந்து போனது சரியான முடிவு. இந்த mob mentality விஷயத்துல உலகம் முழுக்கவே இப்படித்தான். அவர் ஆஸ்பத்திரிக்குப் போறேன்னு கெளம்பி இருந்தாலும், இதே பிரச்னை தான் நடந்திருக்கும். அவரோட presence நடந்துட்டு இருந்த வேலைகளுக்கு இடையூறா இருந்திருக்கும். அவர் கரூரைச் சுத்தி எங்க தங்கி இருந்தாலும், கூட்டம் கூடி இருக்கும், மீடியாக்காரன் கூட்டமா வந்திருப்பான். அதுக்குன்னு தனி பாதுகாப்பு கொடுக்க வேண்டியதிருக்கும். அவருக்கு அந்த சூழ்நிலைல பாதுக்காப்பான எடம் அவரோட சென்னை வீடு மட்டும் தான். அவர் அங்க போனது தான் சரி. இந்த மாதிரி ஒரு சம்பவம் யாரையும் பாதிக்கும். விஜய்யை நிச்சயம் பாதிச்சிருக்கும். அதுவும் 30+ங்கறது பெரிய கணக்கு. அதுவுமில்லாம, அவர் பொதுவாவே கொஞ்சம் எமோஷனல் ஆளு தான். ஜல்லிக்கட்டு, அனிதா மரணத்தப்ப, தனியா அவர் சில விஷயங்கள் செஞ்சிருப்பார். அவருக்கு நிச்சயம் வருத்தம் இருந்திருக்கும். அதனாலயே, ஃப்ளைட் ஏறதுக்கு முன்னாடி ஒரு அறிக்கை விட்டிருக்கனும். கட்சி நிர்வாகிகள் என்ன செஞ்சிருக்கனும்ன்னு ஒரு நோட் கொடுத்திருக்கனும். பப்ளிக்ல. சொல்லப்போனா, இப்படி ஒரு சம்பவம் எப்ப வேணும்ன்னாலும் வரலாம்ன்னு முன்கூட்டியே அவர் இதுக்கெல்லாம் prepare ஆயிருக்கனும். அதுவும் ஒரு கட்சியோட planningல இருக்க வேண்டிய விஷயம். இந்த மாதிரி சிச்சுவேஷன் வந்தா யார் என்ன செய்யனும்ன்னு ஒரு ப்ளான் இருந்திருக்கனும். இந்த மாதிரி மரணங்களே நடந்தாலும் அத எப்படி ஹேண்டில் பண்றதுன்னு, both politically and socially, அவரோட டீம்க்குத் தெரிஞ்சிருக்கனும். Risk, Safety, DRன்னு என்ன வேணும்ன்னாலும் அதுக்கு பேர் வச்சிருக்கலாம். விஜய் இருக்காட்டியும், அவரோட டீம் அந்த எடத்துலயும், ஆஸ்பத்திரிலயும் இருந்திருக்கனும். காணோம்ன்னு தான் சொல்றாங்க. விஜய் ரசிகர்களுக்குள்ள ஒரு குரூரத்தை உருவாக்கினதுல பெரும்பங்கு புஸ்ஸி ஆனந்த்க்கு உண்டு. மேடைலயே அவரோட நடவடிக்கைகள்ல அது தெரியும். பப்ளிக்லயே இப்படின்னா மத்த எடங்கள்ல அவர் எப்படி இருந்திருப்பார்ன்னு சொல்ல வேண்டியதில்ல. அவர்ட்ட இருப்பது ஒரு ஹிட்லர் மனநிலை. சத்தம் போட்டு, அடக்கி எல்லாத்தயும் சாதிக்க முடியும்ன்னு ஒரு மனநிலை. ஆனா விஜய் அவருக்கு நேரெதிர் சாஃப்ட். ஆனந்த் is not fit for politics. விஜய் எப்பவோ இவரை அனுப்பி இருக்கனும். இனிமேலும் வச்சிருந்தா அவரோட ரசிகர்களும், அவரோட ரசிகர்களால விஜய்யும் தான் பாவம்.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
சுப உதயகுமார் இறந்துவிட்டாரா?ஆம்ஆத்மி கட்சியில் தேர்தலில்நின்றதாக கேள்வி,சீமான் விலைபோய் விட்டார் என்று ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதன்மூலம் பொய்யை உண்மையாக்க நினைக்க வேண்டாம்.சீமான் பாஜகவிடம் விலை போனதாக சொன்னீர்கள் இப்பொழுது திமுகவிடம் விலைபோனதாகச்சொல்கிறீர்கள்.அவரோ தனித்து நிற்பதில் உறுதியாக இருக்கிறார்.என்னுடைய ஊகம் அதிமுக தவெக கூட்டணி அமையும் சாத்தியம் முன்பே இருந்தது.நேற்றைய சம்பவம் அதற்கான அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.அப்படி அமைவதை நான்வரவேற்கிறேன்.கொள்கை எதிரி கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று சொல்லி சமாளிக்க ஏண்டியதுதான்.விஜை உறுதியான துணிந்த தலைவராகத் தெரியவில்லை.திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜையின் அரசியல் முடிந்து விடும் சினிமாவுக்கு திரும்பினாலும் முன்னைய மதிப்பு இருக்காது.அல்லது கமல் போல் திமுகவில் ஐக்கியமாகவேண்டும்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
இதுவரைக்கும் விஜை வெளியில் வரவில்லை.கோழைத்தனமாக வீட்டில் இருந்து மனதிற்குள் வேதனைப்பட்டு அரசியலைத த்தொடர்வதா இல்லையா என்று குழம்பக்கூடாது.தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.அடுத்தது கூட்டத்தில் அவர்சுயமாகப்பேசம் பொழுது தெளிவாகப்பேசுகிறார்.ஆனால்தரவுகள் அவரிடம் இல்லை.சில விடயங்களுக்கு குறிப்புக்களைப்பார்த்துப்பேசம்போது சிறுபிள்ளைகள் போல எழுத்துக்கூட்டிப் படிக்கிறார்.அப்படிப்படிக்கும்பொழுதும் பிழைகளுடன் பேசுகிறார்.சிலவேளை எழுதியவர் தவறு விட்டிருந்தாலும் அதைச் சரிசெய்யும் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
எம்ஜியாருக்கு கூடாத கூட்டமா?அவர்கூட்டத்தில் இப்படி அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.அவருடைய இரசிகர்கள் அவருடைய படங்களில்பாடல்களில்உள்ள நல்ல புரட்சிகரகருத்துக்களால் உள்வாங்கப்பட்ட இரசிகர்கள்.அவருடைய வெற்றிப்படமான உலகம்சுற்றும் வாலிபனை திரையிட விடாது தடுப்பதற்கு எத்தனை முயற்சிகள் எடுத்தார்கள்.அப்படிப்பட்ட திமுகவின் சதிகளை முறியடித்து தான் இறக்கும்வரை திமுகவை கூப்பில் இருத்திய எம்ஜியார் உண்மையில் சாணக்கியன்தான்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
https://x.com/sahay_victory/status/1972263856354529408?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A டிஸ்கி செந்தில்பாலாஜி ஊரிலேயே போய் கூட்டம் போட்டா விடுவாரா? இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள். என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார். இந்தத்த் தவறான எதிர்வுகூறலை தவிர்த்திருக்கலாமே,செய்தியையும் போட்டு விட்டு சீமான் மீது சேறடிப்பது மிகவும் வன்மமான செயல்.இப்படித்தான் அவர்பெட்டி வாங்கி விட்டார்என்று ஆதாரம் இல்லாமல் எழுதும் பொழுதும் ஒன்றுக்குப் பலமுறையோசிக்க வேண்டும்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
இது ஒரு திட்டமிட்ட சதியாகவும் இருக்க வாய்ப்பிருக்கிது.கரூரில் செய்தில்பாலாஜியின் தொகுதிக்குள் செந்தில் பாலாஜி எந்த எல்லைக்கும் போகக் கூடிய அரசியல்வாதி.கடந்த தேர்தலில் மக்களை அடைத்து வைத்து உதயநிதி படத்தைப்போட்டு மாற்றுக்கட்சிகளின் பிரச்சாரக்கூட்டத துக்கு போகவிடாது தடுத்தவர்.தலைமைக்கு நெருக்கமானவர்.விஅஅஜை வெளியில் வந்து பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இந்தத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்காவிட்டால் விஜையின் அரசியல் இருப்பு மட்டுமல்ல சினிமா இருப்பும்கேள்விக்குள்ளாக்கப்படும்.ஆகவே விஜை தனித்துப்போட்டி என்பதை விடுத்து திமுக வைத் தோற்கக்கூடிய சக்திகளுடன் கூட்டணி சேரவேண்டும்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.