Everything posted by புலவர்
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
https://www.facebook.com/share/19qr18tmmk/?mibextid=wwXIfrZoho ஆப்பிற்கு தமிழ் பெயரா? நல்லாவே இல்லை மாத்துங்க.. ஸ்ரீதர் வேம்புவிற்கு வடஇந்தியர்கள் நெருக்கடி! #Arattai #Zoho #SridharVembu #Whatsapp #NewsUpdate #Oneindia #OITamil
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- ’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம்
முதலில் தமிழரசுக்கட்சி ஒற்றுமையாக இருக்கிறதா?தமிழரசுக்கட்சிக்கு தலைவர் ,செயலாளர் பதவிகள் ஏன் வெற்றிடமாக இருக்கின்றன என்றுதலைவர் ,செயலாளர் இல்லாத தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சிவஞானம்கூறவேண்டும்.- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
BBC News தமிழ்அரவிந்த் ஸ்ரீனிவாஸ்: பெர்ப்ளெக்சிட்டியை நிறுவிய சென்னை த...கூகுள் நிறுவனத்தின் குரோமை விலைக்கு கேட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பெர்ப்ளெக்சிட்டி நிறுவனர்களில் ஒருவரான இவர், தொழில்நுட்ப உலகில் சாதித்தது எனகூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்? மகாகவி பாரதியாரும் சங்கி என்று புறக்கணிப்பீர்களா?- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா....? நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில் மூலமாக சென்று அங்கிருந்து வேனில் பிரச்சாரத்திற்கு புறப்படுவார். எப்போதும் தனி விமானத்தில் பயணம் செய்வது என்பது சாதாரண பயணிகள் விமானத்திற்கு டிக்கெட் வாங்குவது போல் எளிமையான விஷயம் இல்லை. ஒரு விஐபி தனி விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் எனில், அவர் 3 நிலைகளை கிளியர் செய்ய வேண்டும். ஒன்று, வான்வெளி பயண விதிகளை பின்பற்ற வேண்டும், இரண்டாவது, பாதுகாப்பு புரோட்டோக்கால்களை பின்பற்ற வேண்டும், மூன்றாவது, ஒன்றிய அரசிடம் clearance வாங்க வேண்டும். இவை மூன்றும் கட்டாயம். இவை தவிர்த்து, தனியார் நிறுவனத்தின் விமானம் கிடைத்த உடன், எந்த நேரத்தில் புறப்படுகிறது? எந்த நேரத்தில் தரையிறங்கிறது? என்கிற flight plan-ஐ தயாரித்து 'Directorate General of Civil Aviation (DGCA)-க்கு கொடுத்து அப்ரூவல் வாங்க வேண்டும். அனுமதி கிடைத்த உடன் ஏர்போர்ட்டில் இந்த தனி விமானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். வேறொரு இடத்தில் இறங்குவதற்கும் முன்கூட்டிய இடம் ஒதுக்க வேண்டும். பின்னர், விமானம் புறப்படுவதற்கு முன் Airport Traffic Control (ATC) அதிகாரி எல்லா பாதுகாப்புகளையும், ஓடுதளங்களையும் சரி பார்த்துவிட்டு பின்னர் தான் அனுமதி கொடுப்பார். இதற்கு பின்னர் தான் அந்த தனி விமானம் take off ஆகும். இப்ப கரூர் சம்பவத்துக்கு வருவோம். சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட நடிகர் விஜய், இந்த அனுமதிகளை எல்லாம் முன்கூட்டியே பெற்றிருப்பார். ஆனால், கரூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு திருச்சிக்கு வந்து அங்கிருந்து சுமார் 11 மணியளவில் புறப்படுவோம். எனவே, அந்த நேரத்திற்கு take off அனுமதியை முன்கூட்டியே வாங்கியிருக்கலாம். (12.45 மணிக்கு வர வேண்டிய இவர்கள் எதற்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும்....? ஏனெனில், பிரச்சாரம் இரவு வரை நீடிக்கும் என முன்கூட்டியே இவர்களுக்கு தெரிந்துள்ளது) இப்படியான ஒரு சூழலில் கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் எல்லா திட்டமும் மாறின. 6 to 7 மணிக்குள் கூட்டத்தை விட்டு அவசரமாக புறப்பட்ட விஜய் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து தனி விமானம் எடுத்துக் கொண்டு உடனே சென்னை வந்து விட்டார். இவருக்கு எப்படி உடனடியாக take off மற்றும் landing ஆகியவற்றிக்கு விரைவாக அனுமதி கிடைத்தது...? கிட்டத்தட்ட 3 - 4 மணி நேரத்திற்கு முன்கூட்டியே திட்டமிடாமல் வந்த விஜய்க்கு ATC அதிகாரி எப்படி உடனடியாக அனுமதி கொடுத்தார்...? ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் தனி விமானங்களில் புறப்பட்டால், இவர்களுக்கு மட்டும் தான் விதிவிலக்குகள் மாற்றி அமைக்கப்பட்டு அவசர அனுமதியை தருவார்கள். ஆனால், அரசியல் அதிகாரம் இல்லாத விஜய்க்கு எப்படி உடனடி அனுமதி கிடைத்தது...? வான்வெளி பயணத்தில் மட்டும் அதிகாரிகள் அவசரப்பட மாட்டார்கள்/சமரசம் செய்ய மாட்டார்கள். மிகவும் கண்டிப்புடன் செயல்படுவார்கள். ஆனால், விஜய் விவகாரத்தில் அப்படி இல்லையே...!!! ஒருவேளை, விஜய் ஒரு நாள் முழுக்க whole day அனுமதி வாங்கியிருக்கலாம்...? சரி தான். இதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், முழு நாள் பயணத்திற்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்தாலும் கூட பயண திட்டத்திற்கு எதிராக ATC அதிகாரி எப்படி அனுமதி வழங்கினார். விஜய் திருச்சி வந்ததும் விமானத்தில் ஏறி 'டிரைவர்....ஓ சாரி...பைலட் வண்டியை எடுப்பா'னு சொன்னவுடனே அவர் பறந்து வந்து விட்டாரா...? விஜய்க்கு எப்படி விதிமுறைகள் relax செய்யப்பட்டது...? உடனடி take off அனுமதி கிடைத்தது...? நேற்றுக் கூட ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் முன் அறிவிப்பின்றி அவசரமாக டில்லி புறப்பட்டது உங்களுக்கு தெரியும். இவர்கள் என்ன அந்த தனி விமானத்தை தேர்தல் வரை மொத்தமாக பேசி வாங்கி விட்டார்களா என்ன? விமானப்போக்குவரத்து துறை ஒன்றிய அரசிடமே உள்ளது. ஒன்றிய பாஜக அரசை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய்க்கு அவர்கள் எப்படி இவ்வளவு சலுகைகளை இறங்கி வந்து செய்கிறார்கள்...? உங்களுக்கு உண்மை விளங்கும் என நம்புகிறேன்!!- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
"என்ன மாதிரியான கட்சி இது.. கரூரில் இருந்து தவெக நிர்வாகிகள் ஓடியது ஏன்.." சென்னை ஐகோர்ட் காட்டம் By Vigneshkumar Updated: Friday, October 3, 2025, 17:28 [IST] 3Subscribe to Oneindia Tamil சென்னை: அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரித் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கரூர் துயரத்தைக் குறிப்பிட்டு காட்டமான கருத்துகளைக் கூறினர். அதை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு எனக் குறிப்பிட்ட நீதிபதி, தவெக என்ன மாதிரியான கட்சி என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது.. அங்குக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பாகப் பல வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி பி.எச்.தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மிகக் காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார். முதலில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு நீதிபதி செந்தில் குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் வழக்கு விசாரணையின் போது, விஜய் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து விழுந்ததைப் பார்த்தீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். ஏன் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் ஏதேனும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். Also Read இனி சாலையோர பிரச்சாரத்திற்கு.. எந்த கட்சிக்கும் அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தெளிவாக சொன்ன தமிழக அரசு வேதனை நீதிபதி மேலும் கூறுகையில், "அங்கு நடந்த சம்பவத்தின் வீடியோவை பார்க்கும்போதே மிகுந்த வேதனையாக இருக்கிறது. இந்த சம்பவத்தில் இதுவரை இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இவ்வளவு நடந்த பிறகும் காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளனர்.. பாதிக்கப்பட்டோரை நேரில் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு நடந்த பின் குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். எல்லாக் கட்சிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள். தலைமைப் பண்பே இல்லை உலகமே இந்தச் சம்பவத்தைப் பார்த்திருக்கிறது.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், தலைவர் எல்லாரும் தொண்டர்களை, ரசிகர்களை, மக்களைக் கைவிட்டுப் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர்.. இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார்" என்றார். மேலும், அவருக்குத் தலைமைப் பண்பே இல்லை என்றும் நீதிபதி கூறினார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அரசு அமைதியாக இருக்கக் கூடாது என்றும் கூறிய நீதிபதி, கரூரில் நடந்த சம்பவத்தை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) என்று குறிப்பிட்டார். Recommended For You 6 வழக்கறிஞர்களை களமிறக்கிய தவெக! 30 நிமிடங்கள் தொடர்ந்து வாதம்! ஒரே பாயிண்டில் ஆஃப் செய்த தமிழக அரசு தவெக என்ன மாதிரியான கட்சி கரூர் பிரச்சாரத்திற்குப் பல்வேறு விதிமுறைகள் கொடுக்கப்பட்டதாகவும் அதில் இரு நிபந்தனைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டன என்றும் மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன என்றும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, "என்ன மாதிரியான கட்சி இது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது?" என்று மிக காட்டமான கேள்விகளை எழுப்பினார். Read more at: https://tamil.oneindia.com/news/chennai/what-kind-of-party-is-tvk-chennai-high-court-slams-vijay-over-karur-stampede-as-leader-fled-the-spot-740355.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=Deep-Links-DMP&ref_content=740361-p2- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான்நலமாக இருக்கிறேன். உடம்பில் கவனம் எடுக்கவும். சுவர் இருந்தால்தான் சித்திரம்வரையலாம்.விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். VAT 69 என்று அந்தக்காலத்தில் பிரபலமான குடிவகை இருந்தது.வெறியில் தலைகீழாகப்பார்த்தாலும்69 என்றுதான் தெரியுமாம்.நானும் சுவைத்திருக்கிறேன்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு 🟢 அரட்டை (Arattai) மெசஞ்சர் அப்டேட் 🟢 இது எங்கள் நிதானமான பொறியியல் முயற்சியின் இன்னொரு சிறந்த உதாரணம். நாங்கள் நேரம் எடுத்துக்கொண்டது காரணம்: • குறைந்த விலை போன்களில் கூட செயல்பட வேண்டும் • குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் (8 kbps வரை சோதித்து வருகிறோம்) நன்றாக இயங்க வேண்டும் • மிகச்சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும் • அதே நேரத்தில் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் ✅ ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து அப்டேட் செய்கிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் (features) இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும். அதோடு, அதிகமான பயனர்களை தாங்கும் சர்வர் அடிப்படை (infrastructure) வளர்ச்சியில் முதலீடு செய்து வருகிறோம். நான் தினசரி நேரடியாக எங்கள் எஞ்சினீயர்களுடன் இதைப் பற்றி கலந்துரையாடி வருகிறேன். 📢 இது முடிந்தவுடன், ஒரு பெரிய மார்க்கெட்டிங் பிரச்சாரம் (big marketing campaign) நடத்த இருக்கிறோம். அது உங்களுக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை. 🌍 எங்கள் அரட்டை மெசஞ்சர் உலகின் சிறந்த மெசேஜிங் அனுபவத்தை (best messaging experience) வழங்கும் என்ற எங்கள் உறுதி தொடர்கிறது. 👉 மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்! --Sridhar Vembu CEO ZOHO Download link:- https://chat.arattai.in/app/download- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையனை மீண்டும் களத்தில் கணடது மகிழ்ச்சி.பையா எங்கே போயிருந்தீர்கள். இவ்வளவு நாளும்.- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
https://x.com/news18tamilnadu/status/1973688182236475601?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
- சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம்
எங்கே ஐயா ஸ்டாலினின் இரும்புக்கரம்?திராவிட மாடல் ஆட்சி சிற்ப்பாக நடக்கிறது.- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
பிராமணரான ஸ்ரீதர் வேம்பு தனது தகவல் பரிமாற்ற செயலிக்கு 'அரட்டை' என்று தமிழில் பெயர் வைக்கிறார். தமிழைப் பேசிப் பிழைத்த திராவிடவாதியான கருணாநிதி குடும்பம் தங்களின் தொலைக்காட்சிக்கு சன் டிவி என்று பெயர் வைத்தது. சங்க காலத்திலிருந்து தமிழ் வளர்க்கும் பிராமணர்களை தமிழர்கள் அல்லாதவர்கள் என்று போலியாகக் கட்டமைக்கும் ஆரிய திராவிட இனவாத அரசியல் ஒழிக்கப்படவேண்டும்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
கரூர் சம்பவத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அனுப்பியிருப்பது சில செய்திகளை சொல்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு திமுக காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லார் மனதிலும் இருக்கிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பரிடம் இந்த செய்தியை சொன்னபோது அவரது முதல் ரியாக்ஷன் திமுகவை பற்றி தான் இருந்தது. ஏரியா மளிகை கடை அண்ணாச்சி திமுகவை வறுத்தெடுத்து விட்டார். மக்கள் செண்டிமெண்ட் விஜய் பக்கம் தான் இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. விஜய் பக்கம் தவறு இருக்கிறது என்றாலும் அதை மன்னிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். திமுகவின் வேகமான நடவடிக்கைகளே அவர்களுக்கு வில்லனாகி போனது. கரூர் அரசு மருத்துவமனையின் முதல் விஷுவல் காட்சிகளை மக்கள் பார்க்கும் பொழுது அங்கெ செந்தில்பாலாஜி இருந்தது, அடுத்த ஒரு மணி நேரத்தில் அன்பில் மகேஷ் அங்கெ வந்தது, சென்னையில் முதல்வர் தலைமை செயலகம் சென்றது, சம்பவம் நடந்து முழுமையாக இறப்பு எண்ணிக்கை கூட வெளிவருவதற்கு முன்னதாக 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. அதையடுத்து உடனடியாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது, இரவோடு இரவாக ஸ்டாலின் கரூர் வந்தது, துபாயிலிருந்து உதயநிதி வந்து சென்றது என திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் ஜெட் வேகத்தில் துல்லியமாக இருந்தது. அந்த அதீத துல்லியமே சந்தேகப்பட வைத்தது. இதே திமுக ஆட்சியில் நடக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுங்கள் என்று பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொண்டை தண்ணீர் வத்த கத்திய போதும் கண்டுகொள்ளாத ஸ்டாலின் அரசு, இந்த சம்பவத்தில் யாருமே எதையுமே கேட்கும் முன்னர், எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டது. திமுக இவ்வளவு விரைவாக செயல்படுவதிலேயே சந்தேகம் பலமானது. தனது துரித செயல்பாடுகள் மூலம் ஒட்டுமொத்தமாக விஜயின் மீது பழி போட்டுவிடலாம் என்கிற திமுகவின் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் மண்ணை வாரி போட்டன. எடப்பாடி, சீமான் இருவருமே அடக்கி வாசித்தனர். உச்சமாக அண்ணாமலையின் பிரஸ்மீட் மக்களின் பார்வையை ஒட்டுமொத்தமாக திமுக பக்கம் திருப்பியது. அரசு, மக்கள், விஜய் என்று அனைவர் மீதும் குறை சொன்னவர், அரசின் நிர்வாக தோல்வியை தெளிவாக சுட்டிக்காட்டியதை கட்சி பாகுபாடின்றி மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அந்த பக்கம் திமுகவும் தன் பங்குக்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை இறக்கி விட்டது. அரசின் மீது எந்த தவறும் இல்லை, விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மீது தான் மொத்த தவறும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த வாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் அண்ணாமலை சொன்னது போல் மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டரை சஸ்பெண்ட் செய்திருந்தால் கூட ஓரளவு திமுக பக்கம் நியாயம் இருந்திருக்கும். நேற்று வரை விஜய்க்கு தனது பூரண ஆதரவை வழங்கிய மீடியா அப்படியே யூடர்ன் போட்டது. கரூர் பிரச்சார காட்சிகளை வைத்து தவறு எங்கே நடந்தது என்று விசாரணை ஆரம்பித்தார்கள், விஜய் ரசிகர்களின் அடாவடிகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பினார்கள். இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பி வந்தார்கள். திமுகவின் தொடர் நடவடிக்கைகளை போல் பாஜகவும் தொடர்ச்சியாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக பாஜக தலைவர்கள் அனைவருமே கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மத்திய நிதியமைச்சர் நேரில் கரூர் விரைந்தார். இதற்கு அடுத்த கட்டமாக தான் உண்மை கண்டறியும் குழு. இத்தனை அரசியல் நிகழ்வுகளையும் சேர்த்து பார்த்தால் இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் நமக்கு புரிகிறது.. ஏனெனில் அரசியல் கட்சிகள் ஒரு பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள் என்றால் அதன் மூலம் சில ஆதாயங்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம். நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை காட்சிகளை பார்த்த பொழுதே அவர்களது அறிக்கை எப்படி இருக்கும் என தெளிவாக தெரிகிறது. அதே போல் உண்மை கண்டறியும் குழுவிடம் மக்கள் சொன்ன விஷயங்கள், மற்றும் அவர்களது கேள்விகளை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஆளும்கட்சிக்கு எதிராக தான் அறிக்கை கொடுப்பார்கள் என்பது வெளிப்படை. ஆக இந்த சம்பவத்தில் திமுகவுக்கு நேர் எதிர் நிலைப்பாடு எடுக்கிறது பாஜக. அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்பதற்காக இதை செய்கிறது என்று கடிவாளம் கட்டியது போல் ஒற்றை பார்வையில் இந்த நிகழ்வுகளை பார்க்கக்கூடாது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணிகள் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்பதை விடவும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் கூட அது பாஜகவுக்கு வெற்றி தான். ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருக்கிறார் என்ற செய்தியை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ராகுல் + விஜய் பேச்சு செய்தி பரவக்கூடாது என்பதற்காக தான் விஜய் + குருமூர்த்தி சந்திப்பு என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்பது இப்போது புரியும். கரூர் துயரத்துக்கு பின்னால் திமுக இருக்கிறது, செந்தில்பாலாஜி இருக்கிறார் என்ற சந்தேகங்களை இன்னும் மக்கள் மனதில் ஆழமாக விதைத்தால் கூட அது தேர்தல் அரசியலுக்கு பயன்படும். 2026 தேர்தலில் செந்தில்பாலாஜியை பெரிதும் நம்பியிருக்கிறது திமுக. அந்த இடத்தில கொஞ்சம் டேமேஜ் செய்ய முடியும். நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் செண்டிமெண்ட் ஒத்துழைத்தால் செந்தில்பாலாஜியை தள்ளி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது செந்தில்பாலாஜியால் திமுகவுக்கு பயனில்லாத ஒரு நிலையை உருவாக்கலாம். அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு நேர் எதிரான ஒரு அறிக்கையை பாஜக முன்வைக்கும் போது, திமுகவுக்கு எதிராக இருப்பவர்கள் அதை ஆதரித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இங்கே பாஜகவுக்கு எதிராக ஒரு பொதுக்கருத்தை முன்வைத்து அதை எப்படி அனைத்து கட்சிகளையும் திமுக ஏற்றுக்கொள்ள வைத்ததோ, அதே அரசியலை இன்று திமுகவுக்கு எதிராக செய்யப்போகிறது பாஜக. கரூர் சம்பவத்தில் மக்கள், ஒன்று திமுகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும், அல்லது பாஜகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். விஜயும் பாஜக வெளியிடும் அறிக்கையை ஆதரித்தே ஆக வேண்டும். இது போன்ற செக்மேட் அரசியலை திமுக தான் எப்போதும் செய்யும், இன்று பாஜக அதை திறம்பட செய்கிறது. அரசுத்தரப்பின் தோல்விகளை நீதிமன்றம் கேள்வி கேட்கும் பொழுது திமுகவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும். திமுக எப்போதும் கேள்விகளுக்குள் சிக்கிக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் தற்போது விஜய் தரப்பு மற்றும் பாஜக தரப்பு இணைந்து கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதனால் தான் விஜய் பாஜக பக்கம் போகிறார், விஜயை ஆர் எஸ் எஸ் தான் இயக்குகிறது என்ற நேரெட்டிவை நேற்றே கையில் எடுத்திருக்கிறது திமுக. ராகுல் + விஜய் பேச்சு அவர்கள் தொடர்பில் இருப்பதை காட்டுகிறது. விஜயுடன் ராகுல் பேசியிருக்கிறார் என்று தெரிந்து தான், ஸ்டாலினை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார் ராகுல் என்று செய்தி வெளியே வந்ததோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஸ்டாலினை தொடர்பு கொண்டது பற்றி ராகுல் ட்வீட் போடவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். கரூர் துயர சம்பவம் தமிழக அரசியலில் சில திருப்பங்களை ஏற்படுத்த போகிறது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. பின்குறிப்பு : இந்த பதிவு விஜயை நியாயப்படுத்துவதோ, திமுகவை நியாயப்படுத்துவதோ, அல்லது பாஜகவை நியாயப்படுத்துவதோ அல்ல. நடக்கின்ற சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியலை சுட்டிக்காட்டுவதற்கான பதிவு. இவையனைத்துமே என்னுடைய அனுமானங்கள் மட்டுமே. இந்த சம்பவத்தை பொறுத்தவரை விஜய், அரசு, மக்கள் என்ற வரிசையில் அனைவரின் மீதும் தவறு இருக்கிறது என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது ஒரு பாஜக ஆதரவாளரின் கருத்து என்றாலும் சிலவிடயங்களில் கேள்விகளில் நியாயமிருக்கிறது. தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்தவர்களைக் கண்டு பிடிக்காமல் இருக்கும் திமுக அரசு இரவோடு இரவாக இவ்வளவு வேகமாக ஏன் செயல்படுகிறது? என்னய்யா இது?விஜய் தரப்பு வாதம் உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது.பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் சண்டை பிடித்து ஆசிரியரிடம் முறையிடுவது போன்று குழைந்தனமாக இருக்கின்றது.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
https://www.facebook.com/share/p/1CgNcrNBrr/?mibextid=wwXIfrவிஜயின் முதல் பிரச்சாரக்கூட்டம் பற்றி எழுதும் போதே கூட்டத்தை பார்த்து பயமாக இருக்கிறது, ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என்று எழுதியிருந்தேன். விஜய்க்கு கூடுகிற கூட்டம், மற்றும் கட்டுப்பாடற்ற அவரது ரசிகர்கள் செய்யும் காரியங்களை பார்த்த பலரும், இது போன்ற அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்கள். அதே போலவே கரூர் சம்பவம் மனதை உலுக்கி விட்டது. வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு சம்பவமாக பதிந்து விட்டது. விஜய்க்கு கூடும் கூட்டம் தான் அவருடைய அரசியல் முதலீடு. கட்டுப்பாடில்லாத கூட்டம் கூடுவதை விஜயும் விரும்புகிறார். அதனால் தான் எந்த இடத்திலும் தன் ரசிகர்களை கட்டுப்படுத்த அவர் விரும்புவதில்லை. ரசிகர்கள், தொண்டர்கள் துன்பப்படுவதையோ, பொதுமக்கள் துன்பப்படுவதையோ பற்றி விஜய் கவலைப்படுவதே இல்லை. இந்த விமர்சனங்கள் எல்லாம் விஜய்க்கு தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்சியில் எந்த இரண்டாம் கட்ட தலைவர்களும் இல்லை என்ற நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அருஜுனா, ஜான் சொல்வதை தான் அவர் நம்ப போகிறார். அப்படியே தெரிந்தாலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த, ரசிகர்களை ஒழுங்குபடுத்த விஜய் விரும்பவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. ரசிகர்களும் நாம் இப்படி நடந்து கொள்வதை தான் விஜயும் விரும்புகிறார் என்று நினைத்து மேலும் மேலும் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் கலெக்ஷன் ரிப்போர்ட் சொல்வதை போல், களத்தில் என்ன நடந்தாலும் மாஸ் காட்டிட்டோம் என்பது மட்டும் தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களின் பிரச்சாரமாக இருக்கிறது. விஜய் எந்த ஊருக்கு சென்றாலும் அவரை பார்ப்பதற்காக வரும் ரசிகர்களை தன்னுடைய அரசியலுக்கு கிடைக்கும் ஆதரவாக காட்டிக்கொள்வதற்கு தான் விஜய் முயற்சி செய்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் பேச வேண்டிய இடத்தில மட்டும் வேனில் இருந்து வெளியே வருகிறார். உதாரணமாக கரூரையே எடுத்துக் கொண்டால் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசவேண்டிய இடத்திற்கு வர வேண்டும். பைபாஸிலேயே மிகப்பெரிய கூட்டம் நிற்கிறது. அங்கேயே அவர் வேனில் இருந்து வெளியே வந்து கை காட்டியிருந்தால் விஜயை பார்த்த சந்தோஷத்தில் பாதி கூட்டம் கலந்திருக்கும். ஆனால் விஜய் அதை செய்வதில்லை. திருச்சியிலும் அதுதான் நடந்தது. வேனிற்குள்ளேயே அமர்ந்து கொள்வதால் பொது மக்களால், ரசிகர்களால் அவரை பார்க்க முடிவதில்லை. இவ்வளவு தூரம் வந்துட்டோம், அவர் பேசற இடத்துல அவரை பார்த்துட்டு போயிடுவோம் என்று மொத்த கூட்டமும் அவர் வாகனத்தின் பின்னாலேயே வருகிறது . நாமக்கல்லில் இருந்து அவர் பின்னால் வந்த கூட்டம், பைபாஸ் சாலையில் நின்றிருந்த கூட்டம், அவர் பேசும் இடத்தில ஏற்கனவே காத்திருக்கும் பெருங்கூட்டம் என அனைத்தும் சேர்ந்து யாராலும் கட்டுப்படுத்த முடியாத கூட்டமாக மாறுகிறது. எல்லா கூட்டமும் ஒரே இடத்தில கூடிய பிறகு விஜய் வெளியே வருகிறார். இதைத்தான் விஜய் விரும்புகிறார். குறைந்த பட்சம் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசும் இடம் வரை வேனில் நின்று கொண்டு கையசைத்து வந்திருந்தால் கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்காது. ஆனால் அதை செய்ய விஜய்க்கு மனமில்லை. விஜயுடைய ஒரே டார்கெட் கூட்டம். அதனால் தான் தாமதமாக வருகிறார். காவல்துறை என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலை தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இருக்கிறது. அதனால் தான் திருச்சியில் தடையை மீறி ரோட் ஷோ நடத்தினார். சாலையில் இறங்கிய பிறகு யாராலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது விஜய்க்கும் தெரியும். ஒருவேளை காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் அதையும் விஜய் தன்னுடைய அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வார். அந்தளவு சுயநலமாக சிந்திக்கிறார். அதே போல் தன் ரசிகர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் விஜய் தயாராக இல்லை. ஏனென்றால் அவரது ரசிகர்கள் செய்யும் முட்டாள்தனங்கள் கூட அவருக்கு விளம்பரமாக மாறும் காலமிது. இப்படிப்பட்ட ஒரு கூட்ட த்தை கையில் வைத்திருக்கிறோம் என்பதை விஜய் பெருமையாக நினைக்கிறார். சமூக வலைத்தளங்களில் நான் பார்த்த வரையில் ஒரு விஜய் ரசிகர் கூட இறந்து போன 40 உயிர்களுக்காக கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலை எல்லாம் விஜய்க்கு கெட்ட பெயர் வந்து விடுமா? கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடுமா? விஜயுடைய அரசியலுக்கு சிக்கல் வந்துவிடுமா என்பது மட்டும் தான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பது போல் சுயநலமான தலைவனுக்கு சுயநலமான தொண்டர்கள். இதோடு அரசியலை விட்டு ஒதுக்கினால் தமிழ்நாடு தப்பிக்கும்.ஏனென்றால் விஜயால் ஒருபோதும் மக்களுக்கான அரசியலை செய்ய முடியாது. https://www.facebook.com/share/v/17CgqSJ4mm/?mibextid=wwXIfr- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.