Everything posted by புலவர்
-
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
அவன் பிரபல கொலைகாரன் அல்ல, பிரபலமாக இருப்பதால் கொலைகாரன்; அவனுக்குக் கூட்டம் பிடிக்காது; அதுவும் தன்னைப் பார்க்க எதற்கு இத்தனைக் கூட்டம் என ஆச்சரியம் அவனுக்கு; தன்னை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என பார்க்க டெஸ்ட் மேல் டெஸ்ட் வைப்பான்; கடும்வெயிலில் காக்க விட்டான், கள்ளிச்செடிபோல் மணிக்கணக்கில் அப்படியே நின்றார்கள்; தூக்கித் தூர எறிந்தான், பந்துபோல் அவனிடமே திரும்பி வந்தார்கள்; நீரின்றி நா வரளவிட்டான், அவனைப் பார்த்தவுடன் நாவாலேயே வாலாட்டினார்கள்! அவனுக்கு ஒரே மகிழ்ச்சி; தன் ஊர்வலங்களில் அவ்வப்போது ஓரிருவரைக் கொன்று பழகினான்; யாரும் கணக்கு பார்க்கவில்லை, கண்டும்கொள்ளவில்லை! கொலைகாரன் குதூகலமானான், விளையாட்டு அடுத்த கட்டம் நகர்ந்தது! மதியம் 12க்கு வருகிறேன் என சொன்னவனைப் பார்க்க, இரவு 12ல் இருந்தே ரோட்டில் தூங்கினார்கள்! அவனோ பகலிலும் தூங்கிவிட்டு இரவு 7.30க்கு 'சாவ'காசமாக வந்தான்! சாவு வண்டியில் சனியன் போல் கூட்டம் புகுந்தான்! முகத்தை மூடியும் காட்டியும் குழந்தைகளிடம் நாம் விளையாடுவதைபோல, தன் அடிமைகளிடம் விளையாடினான்; அவர்களைக் கதறவைத்துச் சிரித்தான்; தன்னைப் பார்ப்பதற்காக அவர்கள் தவிப்பதைக்கண்டு ரசித்தான்! உலகில் முதல்முறையாக, கொலையாகப் போகிறவர்கள் கொலைகாரனைப் பார்க்க ஆசை ஆசையாய் வந்திருந்தார்கள்! காத்திருந்தார்கள்! அவனைப் பார்த்தாலே பாக்கியம் என வந்தவர்களில், அவன் கையால் சாகும் பாக்கியம் 40 பேருக்கு மட்டுமே வாய்த்தது; முகத்தில் வாயில் வயிற்றில் மிதிபட்டார்கள்; உடல் பிய்ந்து, மணிக் கணக்காக அடக்கி வைத்திருந்த மலமும் சிறுநீரும் தெருவில் பாய்ந்தது! குழந்தைகள் சீக்கிரம் போய்ச் சேர்ந்தார்கள்! பெரியவர்களுக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது! வீடு போய்ச்சேர்ந்த அடிமைகளில் சிலர், அடுத்த கூட்டத்திலாவது போய்ச்சேர நமக்கு லக் அடிக்கிறதா பார்ப்போம் என முனகினார்கள்! வேன் மோதி திருப்பதி சென்ற பக்தர்கள் 4 பேர் பலி என செய்திகளில் வருமே, அந்த பக்தர்களை ஏழுமலையான் அம்போ என விட்டுவிடுவார்; ஆனால் கொலைகாரன் அப்படி அல்ல; நான்காவது நாள் வீடியோவில் காட்சி தந்தான்; நாற்பதாவது நாள் அக்கவுண்டில் காசு தந்தான்; குழந்தைகளை இழந்தவர்கள் சிரித்தபடியே பேசினார்கள்! மகன்களை இழந்தவர்கள் மனதார வாழ்த்தினார்கள்! மனமுடைந்த ஒரு தாய் அய்யோ தூக்கிக் கொடுக்க இன்னொரு புள்ள இல்லாம போச்சே என மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் போல வருந்தினார்! ஒரு அண்ணன், தம்பி செத்தா என்னங்க எங்க அண்ணன் கூட்டத்துல சாகுறது வைகுண்ட ஏகாதசி சாவு மாதிரி நேரா சொர்கம்தான் என்றார். யாரையும் பலிகொடுக்காத ஒருவர் தன் துரதிருஷ்டத்தை நொந்து கொண்டார்! எப்படிடா தப்பிச்சு வந்த என தன் பையனை அடித்தார்! தவளைகள் பாம்பின்மேல் முழுமையாய் காதல் கொண்டிருந்தன! பட்டாம்பூச்சிகள் பல்லியைப் பார்த்துப் பல்லிளித்தன! ஏதோ ஒரு ஊரின் ஏதோ ஒரு கோடியில், கொலைகாரனின் அடுத்த பேட்ச் தயாராகிக் கொண்டிருந்தது! கொலைசெய்யும் நேரம்போக மீதி நேரம் வீட்டிலும் ஆஃபீசிலும் மட்டுமே இருக்கும் கொலைகாரன், தன் ரத்தம் தோய்ந்த பற்கள் தெரிய சொன்னான் "ஐயாம் வெயிட்டிங்...." -டான் அசோக் 19 அக்டோபர் 2025
-
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் யூரியூப்பர்களாக மாறிக் கொண்டு வருகிறார்கள்.
-
Bond Master(பொண்ட் மாஸ்ரர்.
பொண்ட் இன்ஸ்ரியூட் என்று யாழ் பெரியஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்தது. கொட்டடியிலும் இருந்ததாகக் கேள்வி.நான் அவரிடம் படிக்கவில்லை. ஆனால் அவருடைய ரியூட்டரியில் படித்தேன் யாழில் உள்ள பிரபலமான ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்துவார். அவர்O/L இற்குத்தான் பாடம் எடுத்திருக்கிறார்.என்று நினைக்கிறேன்.A/L இற்கு அவருடைய ரியூட்டரியில் இரசாயனவியலுக்கு சிறிபதி>கனக்ஸ் கருணாகரன் போன்றவர்கள்படிப்பித்தார்கள். இந்தச்சிறிபதி ஒரு சிகரெட்பத்தி முடியும் நேரத்தில்அடுத்த சிகரெட்டை அந்த நெருப்பிலேயே பற்ற வைத்து இருமிக்கொண்டும் புகைத்துக் கொண்டும் பாடம் நடத்துவார். நல்ல ஆசிரியர்.கருணாகரன் இளைஞராக இருந்தபடியால் பாடம் முழுவதும் ஒரே பகிடியாகவும் சிரிப்பாகவும் போகும்அடிக்கடி புது புதுச்சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொண்டு ஸ்டைலாக ஸ்கூட்டரில் போவதைப்பார்த்து உள்pளுக்குள் பொருமியிருக்கிறோம். நல்ல மனிதர். நல்ல நிர்வாகத்திறமை உடையவர். அந்தக்காலத்தில் 4 பாடங்களுக்கு காசு கட்டினால் அனைத்து வகுப்புகளுக்கும் அனுமதி இருக்கும்.பணமும் எற்க் கொள்ளக்கூடிய அளவு தொகைதான். அதிகம் வாங்குவதில்லை.இரசாயனவியலில் பொண்ட்களைப்பற்றி நன்றாக பாடமெடுப்பதால் அந்தப் பெயர்வந்ததாக பேசிக்கொள்வார்கள்.
-
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
நல்ல கேள்வி முதல்மாகாணசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைகட கூட்டணி போட்டியிடவில்லை.அது போகட்டும் கிழக்குமாகாண சபைத் ரே;தலையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. அதன்காரணமாக பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். அடடா வடை போச்சே! என்று அடுத்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அந்தக்காரணம் ஏற்புடையதாகவில்லை. வாரிசு அரசியல் என்று சொல்வதை ஒரளவு ஏற்றுக் கொண்டாலும். ஜீஜீ செய்த மாதிரி கனவான் அரசியலை கஜேந்திரகுமார் செய்யவில்லை. போராட்டக்களங்களில் நிற்கிறார்.பலமுறை தோற்றும் சோரம் போகாத அரசியலைச் செய்கிறார். எவரும் நல்ல அரசியல்வாதியாக இல்லாதிருப்பதால்தான் என்பிபியும் அர்ச்சுனாவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.வாரிசு அரசியல்மாதிரியே அனைத்து தமிழ்கட்சிளிலும்ஒரே ஆட்களே தொடர்ந்து போட்டியிடுகிறார்கள். இது என்னமாதிரியான அரசியல்
-
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
அவராவது தன்னுடைய கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகப் போட்டியிடுவோம் என்று சொல்கிறார்.அதில் பிழையில்லை.ஆனால் சுரேஸ் சுமத்திரன் போன்ற மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மாகாணசபைத் தேர்தலிலாவது ஏதாவது பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக போட்டியிடுகிறார்கள். முன்ளணி போட்டியிட்டால் தங்கள் வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் அஞ்சுவதாலேயே இப்படிப் புலம்புகிறார்கள்.13 இல் அதிகாரம் இல்லை என்று சம்பந்தரே திருவாய் மலர்திருக்கிறார். ஆனால் தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிட்டது.
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
- எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
ஒரு தொட்டியில்சிறிய கல்லுகள் மணல் போன்றவற்றை மாறி 2 3 அடுக்குகளாக போட்டு வ டி கட்டி எடுத்த மழைநீரை அருந்தலாம் என்று நினைக்கிறேன். முதல் மழைநீரைச் சேகரிக்கக் கூடாது. இது வழிமண்டலத்தில் இருக்கும் ஆழுக்குகள் தூசிகள் புகைகள் போன்றவற்றைக் கொண்டு வரும். அதனால்தான் நீண்டகாலத்திற்கு பிறகு பெய்யும் முதல் மழையில் நனையக் கூடாது வருதம் வரும் சட்டையில் கரம்பேன் பிடிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள் மழை நல்லா அடிச்சு ஊத்தி விட்ட பின்னர் அடிக்கும் வெய்யில் கடுமையாகச் சுடுவதும் வானம் தெளிவாக இருப்பதும் வளிமண்டலத்தில் உள்ள மாசுக்கள் கழுவப்படுவதால்தான். ஆகவே தொடர்சியாக மழை பெய்யும் பொழுது 2வது 3வது அல்லது அதற்குப் பிந்திய மழைநீரைச் சேகரித்து வடிகட்டி எடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். இது எனது சொந்த விளக்கம்.எதற்கும் துறை சார்ந்தவர்களிடம் அறிவுரை கேட்டு சேமிப்பது நல்லது.- யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்
இவர்கள் திருந்தப்போவதில்லை.இந்தியாவின் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மைகள். இந்தியா மாகாணசபை முதல்வராக ஒரு பொம்மை முதலமைச்சரைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வத்தை விட்டு விட:டு 13ஆம் திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் அதற்கு இந்தியாவுக்கு கடப்பாடு உள்ளது.சமுன்னணியைக் கூப்பிட வேண்டாம் என்று இந்தியா சொல்லி விட்டதோ?அது சரி வரதராஜப்பெருமாள் பிரகடனப்படுத்திய தமிழீழப் பிரகடனம் என்னாச்சு?- சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நீங்களே எழுதி சுய இன்பம் காண்பதற்கு யாரும் தடையில்லை.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எட்டாத உயரத்தில் இருக்கும் முதல்வர் அகஸ்தியனுக்கு வாழ்த்துகள்.- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
பொய்யை நான் சொல்லவில்லை சீமானும்சொல்லவில்லை.- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
கஸ்ரப்பட்டு ஓவர்ரைம் அடித்து உழைத்த காசே நிலைக்குதில்லை.மோசடி செய்த காசு எப்படி நிலைக்கும். கொஞ்சகாலம் .ஆடாத ஆட்டம் ஆடுவார்கள். ஒருநாள் அடங்கிவிடுவார்கள்.பெரிய பெரியகார் எடுத்து பகட்டாக ஓடித்திரிவார்கள். ஆனால் வங்கியில் மாதம் மாதம் பெரிய தொகை சம்பளத்தில் இருந்து போகும். புதுக்கார் கொஞ்சம் உரஞ்சுப்பட்டாலே அவ்வளவுதான் அதன் மதிப்பு குறைந்து விடும். அதை விட சில வேளைகளில் விபத்து நடந்து காரைக்கைவிடும்நிலை வந்தால் கொம்பனிக்கு முழுக்காசும்கட்டத்தான் வேண்டும்.காப்புறுதி செய்தாலும் அதுக்குக்கட்டும்காசும் அதிகம் அதைவி ஓரளவு பழைய காரை குறைந்த விலையில் முழுப்பணத்தையும் செலுத்தி வாங்கினால் சின்ன உராய்வுகள் வந்தாலும் வைச்சு ஓடலாம் கவலையும்படத்தேவையில்லை.போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
புலம்பெயர்தேசங்களில் இப்படியான பல கலப்புத்திருமணங்களை காணக்கூடியதாக இருக்கிறது. இது புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினரின் திருமணங்களே இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.3 ஆம் தலைமுறையினரில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும்.ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் தமக்குப் பிடித்த துணையைத் தேடிக்கொள்வதை தாயகத்தைப் போல்கட்டுப்பாடுகள் விதித்து தடுக்க முடியாது என்ற உண்மை போகப் போக பழகிவிடும்.- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
சீமான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.தமிழ்நாட்டில் யாரும் வாழலாம் ஆனால் ஆளும் உரிமை தமிழருக்கே வேண்டும் என்கிறார். கேரளாவிலோ>ஆந்திராவிலோ அல்லது தமிழர்கள் பெரும்பானமையாக வாழும்கர்நாடகாவிலோ ஒரு தமிழர் முதல்வராக முடியுமா?இவர்கள் மலையாளிகளாக>தெலுங்கர்களாக>கன்னடர்களாக தமது நிலத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும்பொழுது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்திராவிடர்களாக இருக்க வேண்டும். இது தமிழ்களை ஆள்வதற்காக உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டமிட்டு திராவிடர்கள் செய்த செயல்.தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமழைப்படிக்காதே அது ஒரு காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதுதான் முற்போக்குவாதமா? அல்லது பெண்கள் தங்கள் கருப்பையை அகற்ற வேண்டும் என்று சொன்னதுதான் முற்போக்குவாதமா?தமிழ்நாட்டின் தெருப்பெயர்களில் சாதிப்பெயர் இருக்கக்கூடாது என்று சட்டம் போட்ட மை காயமுன்னமே ஜிகே நாயுடு மேம்பாலம் என்று தங்கள் இனத்தவரின் சாதிப்பெயரை முன்னிபலப்படுத்துவது எந்தவகையான சமூகநீதி? எல்லோரும் இனத்தூய்மைவாதம் பேசும் போது சாதிகளை முன்னிறுத்தும் போது சீமான் மட்டும் இனத்தூய்மைவாதம் பேசுகிறார் என்று எப்படிக் கூறமுடியும்.பிஸேபின் B ரீம் திமுகவின் B ரீம் என்று ஒன்றுக்கொன்று முரணாகப் பேசுவதும் வாக்குக்குக்கு காசு கொடுக்காமல் அரசியல் கட்சி நடத்துபவர் காசுவாங்கி விட்டார் . திமுகவிடம் காசுவாங்கி விட்டார் பிஜேபியிடம் காசு வாங்கி விட்டார் என்று ஆதாரம் இல்லாமல் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? சீமான் ஏன் ஒழித்து காசு வாங்க வேண்டும் நேடியாக கூட்டணி பேரம் நடத்தினால் காசும் வரும் தேர்தல் செலவுகளையும் அவர்களே கவனிப்பார்கள்.சீமான் கட்சியினருக்கும் சட்டசபையில் பாராளுமன்றத்திற்குள் துழைவதற்கும் இலகுவாக இருக்கும்.- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
நான் சீமானின் அனைத்துக்கருத்துக்களையும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில்லை. சீமான் மீது சில விடயங்களில் முரண்பாடு உண்டு.முன்ஆயத்தம் இன்றி தினமும் பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளும் போது சில பத்திரிகையாளர்களின் விசமத்தனமான கருத்துக்களுக்கு பதலளிக்கப் போய் சிக்கலில் மாட்டுப்படுவார். நான் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் மிகத்தெளிவானது தமிழ்த்தேசியத்தை நீர்த்துப் போகமால் அடுத்த சந்ததிக்கு கடத்துகிறார்.அதுவும் ஒரு வெகு ஜன அரசியல் இயக்கமாய் கட்டமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். சீமானுக்கு முதல் அரசியல் கட்சி தொடங்கியவர்கள் ஒருசிலரைத்தவிர எல்லோரும் தங்கள் கட்சியின் பெயரில் திராவிடத்தை சேரத்து விடுவார்கள். நாம்தமிழர்கட்சி உருவாகிய பின்பு யாரும் திராவிடத்தை தமது கட்சிப்பெயரில் சேர்ப்பது கிடையாது.அந்த அளவுக்கு தமிழத்தேசியத்தின் எழுச்சி அவர்களை அச்சுறுத்துகிறது.விஜய் கூட கட்சிப்பெயரில் திராவிடத்தைச் சேர்க்காமல் கொள்கையில் திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் சேர்த்திருக்கிறார். இது ஒரு முரண்நகையாக இருந்த போதிலும் அவருக்கு மலையாள கன்னட தெலுங்கு அரசிகர்கள் கணிசமான அளவு இப்பதால் அந்தவாக்குகளைத் தக்க வைக்கவே திராவிடத் தேசியததையும் தூக்கிப் பிடிக்கிறார்.இதற்கு முதல் ஆதித்தனார் மாபொசி போன்றவர்கள் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து அதில் வெற்றி காணமுடியாமல் திராவிடத்துக்குள் கரைந்து போனார்கள். வெற்றி என்பது சட்டசபை உறுப்பினர்களையோ பாரளுமன்ற உறுப்பினர்களையோ பெற்று விடுவது மட்டுமல்ல ஒரு பெரிய சனத்திரளை ஒரு சித்தாந்தத்தை நோக்கி அணிதிரள வைப்பது. அதில் சீமான்தனித்துவமாகச் செயற்படுகிறார்.மற்றவர்களின் சித்ததாந்ததில் தனித்தும் இல்லாத கூட்டுக்கலவையாக இருக்கிறது. ஒருகாலத்தில் இந்தியாவின் எதிர்க்கட்சியாக இருந்த கம்னியூஸட்டுகள் அப்போது சித்தாந்ததில் உறுதியாக இருந்தார்கள். இப்போது எல்லாவற்றையும் கைவிட்டு கூட்டுக்கலவையாகி திமுகவுக்கும் காங்கரசுக்கும் முரட்டு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.முன்பு ஜனதா தளம் பல கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரசுக்கு எதிராக கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது. பலதரப்பட்டமக்களின் பிரதிநிதிகள் அந்த ஆட்சியில் பங்கு பெற வசதியாக இருந்தது.இப்போது அந்த இடத்தை பாஜக பிடித்து விட்டது.- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்.காங்கிரஸ் ஆட்சியில அதுவும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் ஆட்சியிலதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. திமுக பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்து மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்ததது. கடந்த பொதுத்தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆதரவு கொடுத்தும் பெரும்பான்மை போதாவிட்டால் திமுக காங்கிரசைக் கழட்டி விட்டு பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆட்சிக்கு முண்டு கொடுத்திருக்கும்.ஒரு ஈழத்தமிழனாக காங்கிரசும் திமுகவும் சேர்ந்து எம்மினத்தைக் கருவறுத்த தார்மீகக் கோபம் எனக்கு இருப்பதில் தார்மீக நியாயம் இருக்கிறது.அந்த அளவுக்கு பாஜகவோ அதிமுகவோ ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எம்ஜியார் புலிகளுக்கு பெருந்தொகைப் பணம் கொடுத்து போராட்டத்துக்கு உதவினார்.ஜெயலலிதா ஆரம்பத்தில் புலிகளுக்கு எதிராக பேசியிருந்தாலும் கடைசிகாலங்களில் தமிழக சட்டசபையில் தமிழ்ஈழத்துக்கான சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீரம்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.ஆறரைக்கோடி தமிழ்மக்களின் சார்பான முக்கிய தீர்மானம் அது.அந்தவகையில் அதுமட்டுமன்றி அதிமுகவில் எப்போதும் புதிய முகங்கள் அமைச்சர்களாவும் சட்டசபை உறுப்பினர்களகாவும் ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒப்பீட்டு அளவில் அதி கூடிய எண்ணிக்கையில் தமிழர்களளுக்கு அந்த வாயப்பளிக்கப்பட்டது. சாதராண கிளைக்கழக செயலாளராக இருந்த தமிழரான எடப்பாடி முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.திமுகவில் இது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு விடயம் இதுஇதலைமப்பதவி கருணநிதி குடும்பத்திடம் இருக்க அமைச்சர்களாக ஒரே முகங்கள் மீண்டும் மீண்டும் இருப்பார்கள் அவர்களிடமிருந்து அவர்களின் வாரிசுகளுக்கு அந்தப்பதவிகள் தொடரும். பெரும்பாலானவர்கள் தெலுங்கு வம்சாவழியினராக இருப்பார்கள்.சிறுபான்மை வாக்குகளைக் கவர்வதற்காக ஆ இராசா >திருமாவளவன்போன்றவர்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பார்கள். திருமாவுக்கு பிளாஸ்ரிக் கதிரை கொடுக்குமளவுக்குத்தான் அவர்களின் சமூகநீதி இருக்கிறது.ஜெயலலிதா அதிமுக உறுப்பினர்கள் சிலர் ப. தனபால்அவர்களைக்கெளரவக் குறைவாக நடத்தியதைக் கேள்விப்பட்டு அவரை சபாநாயகராக்கி அவர் வரும்போது முதல்வர உட்hட அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் பெறுப்பைக் கொடுத்தார்.- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் கொள்கை எதிரியை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்படும்.காரித்துப்பினால் துடைச்சுக் கிட்டு அரசியலில் இதெல்லாம் சாதரணம்ப்பா என்று அள்ளி விட்டுப் போகவேண்டியதுதான்எல்லோரும் போலி தவெகதான் அசல்.- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
https://www.facebook.com/share/p/1ZR8ABCqth/?mibextid=wwXIfrமிஸ்டர் வேம்பு, சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனம் உங்களிடம் இருக்கிறது. உலகம் முழுவதும் 180 நாடுகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருக்கு நீங்கள் நேரடியாக வேலை வாய்ப்பு கொடுத்து வருகிறீர்கள். இவ்வளவு வலிமையும் வெற்றியும் படைத்த நீங்கள் சிலிக்கான் வேலியின் உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் அமர்ந்து உலகத்தை ஆட்சி செய்திருக்கலாம், அல்லது சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பல் அடுக்கு கட்டிடங்களின் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து உங்களது நிறுவனங்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால், இதையெல்லாம் விட்டு, ஏன் தென்காசி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான மத்தளம்பாறையில் ஏ.சி கூட இல்லாத அறையில் அமர்ந்திருக்கிறீர்கள்? அதற்கு மிஸ்டர் வேம்பு சிரித்தபடி சொன்னார்: “இந்தியாவின் கிராமங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான படித்த, திறமை வாய்ந்த இளைஞர்கள் பசியோடு, வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தான் நாட்டின் உண்மையான அறிவாற்றல். அந்தச் சிந்தனை சக்தியை, அந்த பயன்படுத்தப்படாத பிரஸ் மூளையை, அந்த நுண்ணறிவை, நகரங்களின் குரல் சத்தத்துக்குள் புதைத்து விடாமல், மண்ணின் வாசனையோடு வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அந்த வயல்களின் நடுவே, அந்த மலைகளின் நிழலில் அமர்ந்திருக்கிறேன், அங்கிருந்துதான் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கையில்.” I believe that Sanatana Dharma and Brahminical culture are the main reasons for his humble nature.- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
இந்தக் கூட்டணி அமைந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்பலாம். இந்தக் கூட்டணியை நான் வரவேற்கிறேன்.திமுகவினதும் குடும்ப ஆட்சி துடைத்தழிக்கப்பட வேண்டும்.விஜைக்கும் இப்போது இருக்கும் நெருக்கடியில் இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.(அப்போதும் நாம் தமிழர்கட்சிதான் எனது தெரிவாக இருக்கும். தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப் போகாமல் வைத்திருப்பதற்கு அந்தக்கட்சி ஒன்று மட்டும்தான் தமிழ்நாட்டில் செயற்பாட்டில் இருக்கிறது.)- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
- பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி
சரியான கேள்வி?பொன்சேகாவைப் புனிதப்படுத்தியவர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர்தான்.- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
சென்னையில் கடந்த 2017-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்குள்ளான தஷ்வந்த்தை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. நான் எங்கே அப்படி எழுதியிருக்கிறேன்.வழக்கை ரத்துச்செய்யும்படி வழக்குப் போட்டார் - எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.