Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5736
  • Joined

  • Last visited

  • Days Won

    7

nochchi last won the day on May 12

nochchi had the most liked content!

Profile Information

  • Gender
    Male
  • Location
    Germany
  • Interests
    புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)

Recent Profile Visitors

11716 profile views

nochchi's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Dedicated Rare
  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

1.5k

Reputation

  1. டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்
      • 1
      • Like
  2. அநுரவும் தேர்தல் ஆணையாளரும் எடுக்கவேண்டிய முடிவென்றல்லவா நான் நினைத்தேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. தமிழ்சிறியவர்களது கருத்தே இதற்கான பதிலாகப் பொருந்திப்போகிறது. உலகவல்லாதிக்க சக்திகள் தமது இருப்பிற்காக மக்களைக்கொன்றொழித்து, வளங்களை சுரண்டிப்பெருத்துவருகின்றன. அணுஆயுதம் வைத்திருப்பதாகக் கூறி ஈராக்கினுள் புகுந்து எதைச்செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். குர்துகளைக் கொன்றதாக சதாமைத் தூக்கில்போட்ட இவர்களால், மகிந்தவையோ மற்றும் நெத்ன்யாகுவையோ அப்படிச் செய்ய முடியுமா? சீனாவில் சிறுபான்மைகள் நசுக்கப்படுவதாகக் கூப்பாடு. ஏன் காஸா அழிவைத் தடுக்காது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல தொடர்கள் உள்ளன. இதுவரை ஆதிக்கசக்திகளுக்குப் பயங்கரவாதிகளாகத் தெரிந்தோரை வைத்து மற்றொரு ஆதிக்கசக்தியை வீழ்த்தியுள்ளனர். இதிலே நாடு எப்படியாக வேண்டும் என்பது மக்களின் முடிவு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. தமிழர்களது பலத்தை அணுஅணுவாகச் சிதைக்காது ஓயாரென்று சொல்கிறீர்கள் என்று எடுக்கலாமா?
  5. உலக வல்லாதிக்கங்கள் தாம் நினைத்தவாறு நீண்டகாலம் ஆடமுடியாதென்றும் கூறலாம் அல்லவா?
  6. தமிழ்த்திறன் மாநிலப் போட்டி- 2024 Posted on December 7, 2024 by சமர்வீரன் 32 0 https://www.kuriyeedu.com/?p=640869
  7. இதனை எதிர்கொள்ளக்கூடியவாறு தமிழ்த்தலைமைகள் இல்லாதது பெருந்துயரம். நாடாளுமன்றக் கொள்கைவிளக்க உரையில் அநுர தமிழரது பிரச்சினைகுறித்துத் தொட்டுக்கூடப்பார்க்கவில்லை. க.பொ.வைத்தவிர அனைவரும் சபையில் பாராட்டுத்தெரிவித்துவிட்டு வந்துள்ளார்கள். அங்கே வைத்து எமது பிரச்சினைகளை விவாதித்தால் சிங்கள மக்களையும் சென்றடையும் என்றுகூட யோசிக்கவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. உண்மையான நிலை இதுதான். ஆனால், சிங்களமக்கள் எதிர்காவிடினும் ரில்வின் மற்றும் பிக்குகளை வைத்துச் சிங்களக் கடும்போக்குவாதிகளையும், சிங்களவரையும் இணைத்துப் போராட வைத்து ஏதோ பெரிதாக அதிகாரப்பகிர்வு தமிழருக்குக் கொடுப்பதாக உலகுக்குக்காட்டித் தமிழருக்கு நாமம் போடும் இலக்கை அடையக்கூடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. குமாரசாமி ஐயா நல்லது, நாம் கடந்த 100 ஆண்டுகளாகச் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் இருந்துவருகின்றோம். ஈழத்தீவிலே சீனர்களது வருகை நீண்டது. ஆனால், 1960இன் பின் சிறிமாவோ அவர்களது ஆட்சிக்காலத்திலேதான் அரசியல் மட்டத்தில் நெருங்கினார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், இந்தியா வல்லரசு என்று கூவ வெளிக்கிடவும், பொருண்மியத்தில் வளர்நிலையில் இருந்த சீனா முதலில் சந்தைப்பொருண்மியத்தில் தொடங்கி இன்று பொருண்மிய ஆதிக்கமாக வளர்ந்துள்ளதைக் காண்கின்றோம். இங்கே இந்தியா மிகமிக அருகில்; தமிழனத்தின் சுயநிர்ணயஉரிமைக்கு மிகப்பெரும் தடைக்கல்லாகவும் இருக்கிறது. திபெத்தை ஆதரிக்கும் இந்தியா எம் அரசியல் உரித்தை எதிர்க்கிறது. அதற்காகத் தமிழீழத்தைச் சீனா ஏற்றதாகக்கூறவில்லை. எப்படிக் கருணாநிதியைச் சோனியா சத்தம்போடாமற் தமிழகத்தை வெச்சிருக்க வைத்து இனஅழிப்புக்கு துணைபோனாவோளூ அதேபோல் 13ஐத் தூக்கேக்க நீங்களும் சத்தம்போடக்கூடாது என்று அரசியல்மொழியிலை சொல்லப்போறார். சீனா ஓர் நேர்மையான எதிர்நிலையென்றால், இந்தியா சூழ்ச்சித்தனமான ஆதரவுநிலை. சிங்களத்தின் கொண்டையைப் பிடிக்க தமிழரைக் கொக்கியாகப் பார்க்கிறது. ஆனால், அதனைக் கடப்பதே ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) இன்றைய நிலைப்பாடு என்றே எண்ணுகின்றேன். அதன்பின்; யாழுறவுகள் சுட்டுவதுபோல் எல்லோரும் இலங்கையர் என்று தமிழரைச் சிங்களத்துள் கரைத்துவிடுதல். தமிழினம் தமது நட்புச்சக்திகளை இனங்காண்பது அல்லது நட்புச்சக்திகளை கண்டடைவது என்ற அரசியல் தொலைநோக்குச் செயற்பாடுகள் மிகமிக அவசியமானது. ஆனால், புலம்பெயர் தேசத்திலும்(கனடா தவிர்த்து)ஈழத்திலும் அதற்கான அறிகுறிகளையே காணவில்லை என்பது பெரும் பலவீனமாகும். சிலவேளை கடன்கொடுத்த சக்திகளான இந்தியா, சீனா மற்றும் மேற்குலகக் கூட்டு ஈழத்தீவை மூன்றாகப் பிரித்தெடுத்தாலும், எடுக்கலாம். ஆனால் அவர்கள் இப்படிப் பிரித்தால் நல்லது. யாழ்ப்பாண அரசு, கண்டியரசு மற்றும் கோட்டையரசு என்றால் சிறப்பு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. செல்வம் மற்றும் சுரேஸ் இவர்கள் இருவரையும் இயக்குவது இந்தியாவின் RAW என்று அழைக்கப்படும் வெளியகப் புலனாய்வு அமைப்பாகும். எனவே இங்கு நடைபெறும் அனைத்து உரையாடல்களும் அப்படியே கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். எனவே கூடியவரை வெளிப்படைத்தன்மையோடு நடந்து ஊடகங்கள்வரை சென்றடைவது ஒன்றுபட முனையும் தமிழ்த் தரபு;புகளுக்குச் சாதகாமாக அமையும். இவர்கள் நாளை இந்தியாவின் சொல்கேட்டு குழப்பிவிடக்குகூடிய சூழலையும் கருத்திலே எடுக்க வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) அரசியல் நிகழ் நிரலில் அவர்கள் முதலில் கையிலெடுப்பது 13ஆவது நீக்கமாகவே இருக்கும்.(இது ஏலவே கள உறவுகளால் யாழில் குறிப்பிடப்பட்டது) அவர்கள் அதனை ரில்வின் சில்வாவூடாக நூல்விட்டுப்பார்க்க, எங்கள் இந்திய முகவர்களான தமிழ்த்தலைமைகள் உட்படத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் வாய்விட்டு கொக்கரித்து நிற்கின்றார்கள். 13கிடையாது என்பதை இந்தியப் பயணத்தின் பின்னர் அனுர அரசு உறுதியாகக் கூறும். அதற்குப்பதிலாக நேரடியாக இந்தியாவோடு பொருண்மிய மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழரது அரசியலை ஒடுக்கிவிடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. குருதியாற்றில் மிதந்தமிழ்ந்துபோய் அவலத்துள் வாடும் தமிழீழத்தவரே இன்னும் தமது அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்டு கடந்த 15 ஆண்டுகளில் கையிலெடுத்தாளவில்லை. இந்தநிலையில், சுயமாகச் சிந்திக்காது திரைக்கவர்ச்சியில் அள்ளுண்டு வாழும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தமிழக அரசியலைத் தமிழீழத்தவர் நம்பிப் போராடப் புறப்படவில்லையென்றே நினைக்கின்றேன். தமிழகம் மொழி,கலை மற்றும் பண்பாட்டால் எமது தார்மீகப் பின்தளமாகவும், ஒருகூட்டுணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் தூணாகவும் நின்று காக்கவேண்டிய கடமையை நேர்மையோடு எந்தவொரு தமிழக அரசியல் தலைமைகளும் அணுகவில்லை. ஜோ.பெர்னாண்டஸ் போன்றோ, தமிழக முதல்வராயிருந்த ம.கோ.இராமச்சந்திரன் போன்றோ தற்துணிவோடு எவரும் அணுகவில்லை. இன்று இருப்பதைத் தக்கவைக்கவே தமிழினம் போராடவேண்டிய புறநிலையைத் தமிழகத்திலுள்ள, தமிழீழத்தவர்மீது உண்மையான அக்கறையுள்ள தலைவர்கள் தமது கட்சியரசியலைக்கடந்து சிந்திப்பதாகவும் இல்லை. இந்தநிலை தமிழகத்தில் மாறப்போவதில்லை. தமிழீழ ஆதரவு அமைப்பென்று மு.கருணாநிதி தலைமையில் தமது சுயநல அரசியலுக்காக 1985இல் தொடங்கப்பட்ட அமைப்பினது செயற்பாடுகளைத் திரும்பிப்பார்த்தாலே புரிந்தககொள்ளமுடியும். தமிழீழ மக்கள் முதலில் தம்மைத் தாம் நம்பவேண்டும். தற்போதுள்ள சூழலை எப்படி எதிர்கொள்வதென்பதை சிந்திக்க வேண்டும். தாயகக்கட்சிகள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் ஒருங்கிணைய (அண்மைய சிறீதரன் மற்றும் கயேந்திரகுமார் சந்திப்பு) தமிழ் உறவுகள் அழுத்தம் கொடுத்து ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான புறநிலையாக அண்மைய தேர்தலைத் தமிழ்த் தலைமைகள் நோக்குவதோடு, சுயபுராணப் பந்தாக்களைக்களைந்து ஆரோக்கியமான அரசியலை நோக்கிச்செல்ல முனையாவிடின் தமிழர் தாயகத்தில் மாற்றுச் சக்திகள் பலம்பெறுவது தவிர்க்கமுடியாததாகும். தமிழினத்தின் அழிவையும் தடுக்க முடியாது போகும். தமிழின விடுதலைக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ள தமிழக அரசியலுள் எம்மால் ஏதாவது செய்ய முடியுமா? இல்லைத்தானே. ஆதரவு தருவோரை அரவணைத்தவாறு நாம் அதனைக் கடந்துசெல்வதே சரியானது. தமிழர் தயாகத்தில் இனி இரத்த ஆறு ஓடாது. ஒரே பிரித்தோதும் சத்தமே கேட்கும் நிலையாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. தமிழினத்தின் ஒரு பகுதி வீசிய வாக்குச்சாட்டையடியின் பின்னாவது சிந்திக்காவிடின் இவர்கள் தமிழருக்கான அரசியல்வாதிகளல்ல என்பதை உறுதிப்படுத்தும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. வடமாணத்தில் 3ஆசனங்களைப் பெற்றதன் வாயிலாகச் சிங்களம் பெரும் திருப்தியோடு நகர்கின்ற அதேவேளை, சிங்களத்தின் கடைசி இலக்காக உள்ள புலம்பெயர்ஸ்(சிலர் இங்கு குறிப்பிடுவதுபோல்)ஸை நோக்கிச் சுட்டுவிரலைப் பிக்கு தெளிவாகக் காட்டுகிறார். தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தமிழரது தொண்டுகளைத் திரிபுபடுத்தி, அதற்கு இப்படியொரு முத்திரையைக் குத்துவதன் ஊடாகத் தமிழரை தொடர்ந்து சிங்களத்திடம் கையேந்துவோராக வைத்திருக்க முனைகிறார்கள். கையேந்துவோராக இருந்தால்தான் பிக்குகள் என்ற பெயரில் மாறுவேடத்தில் உலவும் நவீன நிலப்பறிப்பாளர்களான சிங்களவர்கள் எல்லைகளில் உள்ள கிராமங்களில் நுளைந்து மதமாற்றம் மற்றும் நிலப்பறிப்பு என்பவற்றைச் செய்யமுடியும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. இது சிலவேளை சிலபேருக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் எதிர்பார்த்தேன். அதேவேளை 18.11.2024 அன்று'வடக்கு பறிபோனது கிழக்கு பலமடைந்தது' எழுதிய கருத்தில் 13க்கு என்ன நடக்கும் என்பதைச் சுட்டியிருந்தேன். அநுரவின் இனவாதமுகம் இவளவு விரைவாக வெளித்தெரியவரும் என்று எண்ணவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.