Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. இந்த உலகில் ''இறையாண்மை'' என்று ஒன்று உள்ளதா? அப்படியிருப்பதாக இருந்தால் ஆக்கிரமிப்பும் குடியேற்றவாதமும் நிறைவடைந்த 50க்குப் பிற்பட்ட உலக சூழலில் இனங்களின்(தனித்துவம்) சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். தமிழீழம் முதல் காசா வரையான அழிவுகளும், ஈராக், உக்ரேன் முதல் வெனிசுவேலா வரையான ஆக்கிரமிப்புகள் நடைபெற்றிருக்குமா? பாபர் மசூதி இடிப்பு, காஸ்மீரின் தனித்துவ உரிமைகள் மறுப்பு மற்றும் சட்டநீக்கம் எனப் பல்தேசிய இனங்களின் உரிமை மறுப்பு, காலிஸ்தான் உரிமைப்போராட்ட அழிப்புப் போன்றனவும் தொடர்கின்றன. யூகோஸ்லாவியாக்காவைக் கையாண்டது ஒரு விதம். இலங்கையை மற்றும் இஸ்ரேலைக் கையாள்தல் ஒருவிதம் எனத் தத்தமது தேவைகளும், கொள்ளையிடத் தேவையான வளங்களுமே சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் தீர்மானிக்கின்றன. மேற்கோ கிழக்கோ வளச்சுரண்டலுக்கான போட்டியில் ஒருவரை ஒருவர் மிஞ்சியோரல்ல. ஆனால், அழிவது என்னவோ அப்பாவி மக்களே. சனநாயகமென்ற போர்வையுள் நின்று ஆக்கிரமிப்பையும், அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளையும் புரிவோர் இறுதிவரை அரச சுகபோகங்களை அனுபவித்து அரவசவாழ்க்கையை வாழ்ந்து அரசமரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டுவிடுகின்றனர். அதற்கும் மக்களின் வரிப்பணமே செலவாகிறது. சீ** இந்த வெட்கம் கெட்ட வாழ்வுக்கு எத்தனை பந்தா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. ஈராக் முதல் வெனிசுவேலா வரை இந்த ஒரே ஒப்பாரியை வைத்துவிட்டு ஓய்ந்துவிடுவதே வழமை. பிறகென்ன. பேசாமல் ஐ.நாவைக் கலைத்தவிட்டு அமெரிக்கச்சபையாக்கிவிடலாம்.
  3. மக்கள் விடுதலை முன்னணி(JVP) என்ற தேசிய மக்கள் சக்தி(NPP) அரசொன்றும் தாமும் இனவாதத்தில் சளைத்தோரல்ல என்பதைப் பதிவுசெய்தே வருகிறார்கள். முன்பு அரசாண்ட கட்சிகளை நீலமும் பச்சையும் மோதகமும் கொழுக்கட்டையுமெனச் சுட்டும் ஒரு சொற்றொடருண்டு. மக்கள் விடுதலை முன்னணி(JVP) என்ற தேசிய மக்கள் சக்தி(NPP)யைப் பொறுத்தவரை முந்தியவை இரண்டும் அவித்ததென்றால், இது பொரித்த மோதகம் அல்லது கொழுக்கட்டை போன்றது. வெளியே போர்வையாக உள்ள மாவென்னவோ பொரிப்பதால் சுவை வேறுபட்டாலும் உள்ளுடன் ஒன்றுதான். மகாவம்சமும் பௌத்தமதமும் சிங்களத்தின் நிலையான தூண்கள். அவற்றைச் சாய்த்துவிட்டுத் தமிழினத்தை அரவணைத்து ஏற்ற தீர்வைத் துணிவோடு இவர்கள் முன்வைப்பார்கள் எனத் தமிழினம் 2026இலும் சிந்திப்பதானது பட்டறிவைச் சீர்தூக்கிப்பாராமையின் நிலையே. என்ன இது அநியாயம்? இவர்கள் மதம் சார்ந்த வேலையைப் பார்ப்பதைவிட்டு எதற்காக இந்த அரசியல் செயற்பாடுகள் மீது அறிக்கையிடுகிறார்கள். இலங்கையரைப் பொறுத்தவரை அபத்தமல்லவா? இலங்கை நேசர்கள் பிக்குகள் மட்டுமே அரசியல், இராணுவ மற்றும் சட்டவாக்கம் போன்றவற்றில் தலையிடும் உரமையுள்ளோரெனக் கூறுகிறார்கள்.! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. https://www.google.com/search?q=ipkf+operation+gurunagar&oq=IPKF+&gs_lcrp=EgZjaHJvbWUqBggBECMYJzIGCAAQRRg5MgYIARAjGCcyFAgCECMYExgnGIAEGIoFGPAFGJ4GMgYIAxBFGDsyBggEEEUYQDIJCAUQABgTGIAEMgkIBhAAGBMYgAQyCQgHEAAYExiABNIBCzUwODQ4M2owajE1qAIIsAIB8QXbeXB0ATCm7PEF23lwdAEwpuw&sourceid=chrome&ie=UTF-8
  5. புடுங்கவேண்டிய ஆணிகளைவிட்டுப் புதிய ஆணிகளைத் தாமாகத் தேடிப்பித்து தமது தலையிலேயே அடித்துக்கொள்வதில் எங்கள் அரசியல்வியாதிகளை மிஞ்சிவிட இந்த உலகில் யாருமிலர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்! சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி தொடர்பாக அதிலே பங்குபற்றித் தாக்குதலுக்குள்ளானவரால் பேசப்படும் கருத்துகளுக்காக இணைத்தள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி (லங்காசிறியின் தலைப்பு காணொளியோடு ஒத்துப்போகவில்லை என்பது வேறு)
  7. உண்மை, அனுர அரசுக்கும் முன்னைய அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பெயர்களும் நிறங்களுமே வேறு. சிலர் கோத்தாபோல் கடுமையாக இல்லை என்பர். மக்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டுமேயொழியக் கடுமையாக இருக்க வேண்டியதில்லை. நியாயமான சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் சமனாக வழங்கமுடியாதவராகவே இந்தத் தலைவரும் உள்ளார். திருகோணமலை புத்தர் சிலைவிவகாரத்தையே துணிவோடு கையாள முடியாத அரசு.அரசியலமைப்பென்று இதற்கும் விளத்தம் கொடுப்போரும் உளர். பெரும்பான்மையைக் கொண்ட அரசு ஏன் சரியானதொரு உலக நடைமுறைகளை உள்வாங்கி இன சமத்துவத்தைப் பேணக்கூடிய அரசியலமைப்பொன்றை முன்வைத்து நாட்டை சனநாயக நாடாக மாற்றலாமே. இவர்கள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார்கள். அப்படிச்செய்தால் இவர்களது கட்சியில் உள்ளோரும் நீதியின் முன் நிற்கவேண்டி வரலாம். இதைக் கூறியவரை எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இதைக் கூறியவரை (சு.பொன்னையாவை) எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. காலநிலை தொடர்பாக நடைபெறும் மாநாடுகள் வடையும் தேனீரும் அருந்தும் மாநாடுகள் போல் தோன்றுகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. இணைப்புக்கு நன்றி. எம்மவர்களே .இன்னும் முழுமையாக விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. வீழ்ந்ததால் எம்மவர்களது நக்கல் நளினம் முதல் தூற்றல் என்று தொடர்கையில் சர்வதேசம் விளங்கிக்கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிரல்ல. (சர்வதேசம் விளங்கிக்கொண்டு விளங்காததுபோல் நடிக்கிறார்கள் என்பது வேறுகதை) நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. இது அநியாயம். சிறிலங்கா அரசின் யாழ்க்காவலனும் அரசுகளுக்காகவும் தனது பழிதீர்ப்பாகவும் பலகொலைகளைச்செய்து சிறிலங்கா சிங்கள அரசுகளுக்கு உதவியவரை கைது செய்யலாமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. அண்மைய புயற்பேரழிவு மீட்சி மற்றும் சமகால அரசியல் தொடர்பான உரையாடற் காணொளியாதலால் இணைத்துள்ளேன் நன்றி - யுரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. புத்தன் அனைத்தையும் துறந்து பரிநிர்வாணம் அடைந்து போதித்தவற்றைக் குழிதோண்டிப் புதைத்த சிங்கள இனத்தில் இப்படியான நியாயக்குரல்கள் மிகஅரிதாகத் தோன்றி மறைவது தொடர்கதையானபோதும், அதனை சரியாகக் கையாளமுடியாத தரப்பாகப் பாதிக்கபபட்ட தமிழர் தரப்பு ஏமாந்தே நிற்கிறது.தேரருக்கு மாதந்தோறும் மக்கள் போராடுவதும் பிரச்சினையாக இருக்கிறது. அந்த மக்களின் போராட்டமே இவரைப் பேசவைத்திருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. யேர்மனியில் ஓய்வூதிய வயதெல்லையை 70ஆக்கினால் என்ன என்று அரச சிந்தனைக்குழாம் சிந்திப்பதாகத் தொழிலாளர்களிடையே உரையாடல் வந்துபோகிறது. இதிலே எப்படியாம் 60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது? பிறந்த ஆண்டின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள்: 1957: 65 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள். 1959: 66 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள். 1964: 67 ஆண்டுகள் (2031 இல் முழுமையடைகிறது) இந்தத் தரவுப்படி "70மேல் இளமையாக.. " என்றுதான் தலைப்பைப் போட வேண்டும் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. உண்மை, மருத்துவர் ஒரு நிறுவன மருந்தை எழுத, மருந்தகர் வேறொரு நிறுவன மருந்தைத் தருகிறார். கேட்டால் ஆ.ஓ.கAOK வைக் கேட்கச் சொல்கிறார்கள். மனிதத் தவறுகள் மருத்துவத்துறையில் நிகழ்வதானது உயிரோடு விளையாடுவதாகும். இன்றும் ஒருதகவலை அறிந்தேன். ஒரு இளம் மாணவிக்கான எலும்பு முறிவுச் சத்திர சிகிச்சையின்போது தவறு நடைபெற்றுள்ளது. ஆணிகளைக் கழற்றி எடுத்துவிட்டு மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் கூறியுள்ளார்கள். யேர்மனியில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மருத்துவத்துறையையும் பாதித்துவருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. மருந்துகள் ஒருபுறம் மருத்துவர்கள் மற்றும் தாதியரின் தவறுகள் மறுபுறமாக மனிதநலவாழ்வுக்கான மருத்துவத்துறை நிச்சயமற்றதாகி வருகிறது. சில தினங்களின் முன் கிளிநொச்சியில் ஒரு உயிரிழப்பு. அது தாதியரின் தவறால் என்று உரையாடல் இடம்பெற்றதாக இறந்தவரது உறவுகள் ஊடாக அறிந்தேன். எல்லாம் பணமயமாகிவிட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.