ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண
கண் ஆயிரம் வேண்டாமோ (இரண்டு முறை)
நாடித்துதிப்பவர் பண்பில் உறைபவர் (இரண்டு முறை)
நம்பித் திருச் செம்பொன் அம்பலவாணர் ஆடி
ஆரநவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட (இரண்டு முறை)
சீரணிக் கொன்றைமலர்த்தொடை ஆட
சிதம்பர்த் தேராட பேரணி வேதியர்
தில்லை மூவாயிரம் பேரும் பூஜித்துக் கொண்டு நின்றாட
காரணகாளி எதிர்த்து நின்றாட கனகசபைதனிலே… (ஆடிக்கொண்டார்)